தேவனுடைய தோற்றமும் கிரியையும்

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை

தொகுதி 1, தேவனுடைய தோற்றமும் கிரியையும்

தம்முடைய கிரியையைச் செய்ய தோன்றிய சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர், மனிதகுலத்தைச் சுத்திகரித்து இரட்சிக்கும் அனைத்து சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறார். அவை அனைத்தும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற உரையில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வேதாகமத்தில் எழுதப்பட்டதை நிறைவேற்றியுள்ளது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது(யோவான் 1:1). மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதைப் பொறுத்தவரையில், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தேவன் எல்லா மனிதர்களிடமும் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும். இந்த வார்த்தைகள் மனிதர்களிடையே தேவன் வெளிப்படுத்திய முதல் உரையை உருவாக்குகின்றன. அதில் அவர் ஜனங்களை அம்பலப்படுத்தி, வழிநடத்துகிறார், அவர்களுக்கு நியாயத்தீர்ப்பளிக்கிறார், அவர்களுடைய மனதுடன் நெருக்கமாகப் பேசுகிறார். ஆகவே, தேவனுடைய அடிச்சுவடுகள், தேவன் இருக்கும் இடம், தேவனுடைய மனநிலை, தேவன் மற்றும் தேவனிடம் இருப்பது, தேவனுடைய எண்ணங்கள் மற்றும் மனிதகுலத்தின் மீதான அவருடைய அக்கறை என இவற்றை அறிந்துகொள்ள ஜனங்களுக்கு தேவன் தரும் அனுமதியின் முதல் வார்த்தைகள் இவை. சிருஷ்டிப்புக்குப் பின்னர் மூன்றாவது வானத்திலிருந்து தேவன் மனிதர்களிடம் பேசிய முதல் வார்த்தைகள் இவை என்றும், தேவன் தமது வார்த்தைகளின் மூலம் மனிதகுலத்திற்கு தமது இருதயத்தின் குரலை வெளிப்படுத்துவதற்கு தமது உள்ளார்ந்த அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.
சர்வவல்லமையுள்ள தேவனாகிய கடைசி நாட்களின் கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை (வார்த்தை என்று சுருக்கப்பட்டுள்ளது), தற்போது ஆறு தொகுதிகளைக் கொண்டுள்ளது: தொகுதி 1, தேவனுடைய தோற்றமும் கிரியையும்; தொகுதி 2, தேவனை அறிதல் பற்றி; தொகுதி 3, கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள்; தொகுதி 4, அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல்; தொகுதி 5, தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்; மற்றும் தொகுதி 6, சத்தியத்தைப் பின்தொடர்தல் பற்றி.

கடைசிக்கால கிறிஸ்துவின் உரைகள்