அத்தியாயம் 28

ஜனங்களின் நிலை என்னவென்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி எவ்வளவு குறைவாகப் புரிந்துகொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய தற்போதைய கிரியை செய்யும் வழிமுறைகளில் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால், இது தேவனுடைய கிரியையில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை; அவருடைய வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது, ஜனங்களின் இருதயங்கள் இயல்பாகவே மாறும். ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைகளின் மீது கவனம் வைக்கிறார்கள், மேலும் அவர்கள் அவருடைய வார்த்தைகளுக்காக ஏக்கங்கொள்ளவும் தொடங்குகிறார்கள், மேலும் தேவனுடைய தொடர்ச்சியான வெளிப்பாட்டின் காரணமாக, அவர்கள் தங்களைத் தாங்களே வெறுக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் தேவன் பின்வரும் வகையான வார்த்தைகளில் அநேகக் காரியங்களையும் உரைத்திருக்கிறார்: “என் எல்லா வார்த்தைகளையும் அவன் முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது, மனுஷனின் வளர்ச்சி என் விருப்பங்களுக்கேற்ப இருக்கிறது, அவனுடைய வேண்டுகோள்கள் வீண் போகாமல் அல்லது பயனற்றுப் போகாமல் பலனளிக்கின்றன; நேர்மையான, பாசாங்கு செய்யாத மனுஷகுலத்தின் வேண்டுகோளை நான் ஆசீர்வதிக்கிறேன்.” உண்மையில், ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள், அவர்களால் மேலோட்டமாக மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. பின்தொடர்வதற்கான ஒரு குறிக்கோளை அவர்களுக்குக் கொடுக்கவும், தேவன் விஷயங்களை இலகுவாகச் செய்வதில்லை, மாறாக தமது கிரியையில் தீவிரமாக இருக்கிறார் என்று அவர்களை உணரச் செய்வதற்காக மட்டுமே தேவன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; அப்போதுதான் பின்தொடர்வதற்கான விசுவாசத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள். எல்லா ஜனங்களும் தேவனுடைய சித்தத்திற்காக அல்ல, தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமே மன்றாடுகிறார்கள், ஆனால் தேவன் ஒரு சமயம் ஒரு வகையிலும் மற்றொரு சமயம் வேறு வகையிலும் செயல்படுவதில்லை என்பதால், அவருடைய வார்த்தைகள் எப்போதும் மனுஷனின் இயல்பை நோக்கியே உள்ளன. இன்று பெரும்பாலான ஜனங்கள் மன்றாடினாலும், அவர்கள் நேர்மையானவர்கள் அல்ல—அது வெறும் பாசாங்குத்தனமாகத்தான் இருக்கிறது. அனைத்து ஜனங்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது, “என் வாயை ஓர் அட்சயபாத்திரம் என்று கருதுகிறார்கள். எல்லா ஜனங்களும் என் வாயிலிருந்து எதையாவது பெற விரும்புகிறார்கள். அது அரசின் இரகசியங்களாக இருந்தாலும் சரி, அல்லது பரலோகத்தின் மறைபொருட்களாக இருந்தாலும் சரி, அல்லது ஆவிக்குரிய உலகின் வல்லமைகளாக இருந்தாலும் சரி, அல்லது மனுஷகுலத்தின் இலக்காக இருந்தாலும் சரி” ஜனங்கள் அனைவரும் தங்கள் ஆர்வத்தின் காரணமாக, இவற்றைத் தேடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள், மேலும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து வாழ்க்கைக்கான தேவை எதையும் பெற விரும்புவதில்லை. எனவேதான் தேவன் இவ்வாறு கூறுகிறார், “மனுஷனுக்குள் அதிகப்படியான குறைபாடுகள் உள்ளன: அவனுக்கு ‘ஊட்டச்சத்து மருந்துகள்’ மட்டுமல்ல, அதற்கும் மேலாக, அவனுக்கு ‘மனநல ஆதரவு’ மற்றும் ‘ஆவிக்குரிய ஆகாரம்’ போன்றவையும் தேவைப்படுகிறது.” ஜனங்களின் எண்ணங்களே இன்றைய எதிர்மறைக்கு வழிவகுத்திருக்கிறது, மற்றும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் என்ன செய்கிறார்கள் என்பதைக் குறித்த எந்தத் தெளிவும் இல்லாத அளவுக்கு அவர்களின் மாம்சீகக் கண்கள் மிகவும் “பழமையானது” என்பதாலும், மேலும் அவர்கள் எல்லாவற்றிலும் செயலற்றவர்களாகவும், அக்கறையின்றியும் இருக்கிறார்கள். இவைகளே ஜனங்களின் நிலைமைகள் அல்லவா? அவர்கள் அப்படியே இதைத் தொடர்வதை விட்டு, ஜனங்கள் விரைந்து இதைச் சரி செய்ய வேண்டாமா? எதிர்காலத்தை அறிவதில் மனுஷனுக்கு என்ன பலன் இருக்கிறது? ஏன் தேவனுடைய சில வார்த்தைகளைப் படித்த பிறகு ஜனங்கள் எதிர்வினையாற்றுகிறார்கள், ஆனால் அவருடைய வார்த்தைகளில் எஞ்சியிருப்பவைகளுக்கு எந்தப் பலனும் இல்லை? உதாரணமாக, “மனுஷனின் நோய்க்கு ஒரு சிகிச்சையை நான் அளிக்கிறேன், இதன்மூலம் சிறந்த விளைவுகளை அடையலாம், இதன்மூலம் அனைத்துமே ஆரோக்கியத்திற்கு மீட்டெடுக்கப்படலாம், இதனால், என் குணப்படுத்துதலின் காரணமாக, அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும்” என்று தேவன் கூறும்போது, எப்படி இந்த வார்த்தைகள் ஜனங்களுக்கு எந்தப் பலனையும் ஏற்படுத்தாமல் இருக்கும்? தேவனால் செய்யப்படும் அனைத்தும் மனுஷன் அடைய வேண்டியவை அல்லவா? தேவனுக்குச் செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது—ஜனங்களுக்கு நடக்க ஏன் வழி இல்லாமல் போகிறது? இது தேவனுக்கு எதிராகச் செல்வது அல்லவா? உண்மையில் ஜனங்கள் செய்ய வேண்டிய கிரியைகள் ஏராளம் உள்ளன—உதாரணமாக, “சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை நீங்கள் உண்மையிலேயே வெறுக்கிறீர்களா?” என்ற வார்த்தையிலுள்ள “சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை” எவ்வளவாய் அவர்கள் அறிவார்கள்? “நான் ஏன் உங்களிடம் பல முறை கேட்கிறேன்?” என்று தேவன் சொல்வது, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தன்மையை ஜனங்கள் இன்னும் அறியாதிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் இன்னும் ஆழமாகச் செல்ல இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இது மனுஷன் செய்ய வேண்டிய வேலை அல்லவா? மனுஷனுக்கு வேலை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்படியானால், தேவனுடைய மனுவுருவாகுதலுக்கான முக்கியத்துவம் என்னவாக இருக்கும்? தேவன் மனம் போன போக்கில் செல்லும்படியாக, அக்கறை இல்லாமலும் கடமைக்காகவும் செயல்படுகிறாரா? சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இவ்வாறு தோற்கடிக்கப்பட முடியுமா?

“நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் எனது சிட்சிக்கும் கிரியையின் முதல் கட்டத்தைத் தொடங்குவேன்” என்று தேவன் கூறுகிறார். இந்த வார்த்தைகள் தெய்வீகத்தன்மையில் செய்யப்படும் கிரியையைக் குறிக்கின்றன; இன்றைய ஜனங்கள் முன்கூட்டியே தண்டனைக்குள் பிரவேசித்துவிட்டனர், எனவே தேவன் இது அவருடைய கிரியையின் முதல் படி என்று கூறுகிறார். அவர் ஜனங்களை பேரழிவுகளின் தண்டனையை அனுபவிக்கச் செய்யவில்லை, மாறாக வார்த்தைகளின் தண்டனையை அனுபவிக்கச் செய்கிறார். ஏனென்றால், தேவனுடைய வார்த்தைகளின் தொனி மாறும்போது, ஜனங்கள் முற்றிலும் அறியாதவர்களாகிவிடுகிறார்கள், அதன் பிறகு அவர்கள் அனைவரும் தண்டனைக்குள் பிரவேசிக்கிறார்கள். தண்டனைக்கு உள்ளாகி, “நீங்கள் உங்கள் கடமையை முறையாகச் செய்வீர்கள், மேலும் தேசங்கள் முழுவதிலும், என்றென்றும் எப்போதும் என்னைத் துதிப்பீர்கள்!” இவை தேவனுடைய கிரியையில் உள்ள படிகளாகும்—இவையே அவருடைய திட்டமுமாகும். மேலும், தேவனுடைய இந்த ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது தண்டிக்கப்படும் முறைகளை தனிப்பட்ட முறையில் பார்ப்பார்கள், எனவே பேரழிவு அதிகாரப்பூர்வமாக அவர்களுக்கு வெளியேயும், அவர்களைச் சுற்றியுள்ள உலகிலும் தொடங்குகிறது. தேவன் ஜனங்களைக் இரட்சிக்கும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளாக அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், வெளிப்புறமாக பேரழிவு ஊற்றப்படுகிறது—அதாவது, தேவனுடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே, ஜனங்கள் பேரழிவினால் தண்டனையை அனுபவிக்கத் தெரிந்துகொள்கிறார்கள், மேலும் அதனால்தான் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். ஒருபுறம், இது தேவனுடைய கிரியை வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது; மறுபுறம், ஜனங்கள் அனைவரும் தேவனுடைய மனநிலையை அறிய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. எனவே, “சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சிட்சிக்கப்படும்போதுதான் என் ஜனங்கள் என்னை அனுபவிக்கும் நேரமாக இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஜனங்களை எழுச்சி பெற வைத்து, அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வைப்பதே எனது திட்டம், மேலும் இதுவே நான் எனது ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் முறை ஆகும், எனது ஜனங்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கிறது” என்று தேவன் கூறுகிறார். தேவன் ஏன் இந்த வார்த்தைகளைப் பேசுகிறார், ஆனாலும் அவைகள் ஜனங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை?

நாடுகள் பெரும் குழப்பத்தில் உள்ளன, ஏனென்றால் தேவனுடைய கோல் பூமியின் மீது அதன் பங்கை ஆற்றத் தொடங்கியிருக்கிறது. தேவனுடைய கிரியையை பூமியின் நிலையில் காணலாம். “தண்ணீர்கள் கர்ஜிக்கும், மலைகள் கவிழும், பெரிய ஆறுகள் சிதறும்” என்று தேவன் கூறும்போது, “பூமியிலுள்ள எல்லா வீடுகளும் அழிந்துபோகும், பூமியிலுள்ள எல்லாத் தேசங்களும் சிதறுண்டு போகும்; கணவனும் மனைவியும் ஒன்றிணையும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, தாயும் மகனும் இனியும் சந்திக்கப்போவதில்லை, மீண்டும் ஒருபோதும் தந்தையும் மகளும் ஒன்றுசேரப் போவதில்லை. பூமியில் இருப்பவை அனைத்தும் என்னால் அடித்து நொறுக்கப்படும்” என்பதன் விளைவாக ஏற்படுகிறதாகிய இது பூமியில் கோலின் ஆரம்பக் கிரியையாகும். பூமியிலுள்ள குடும்பங்களின் பொதுவான நிலை இப்படித்தான் இருக்கும். இயற்கையாகவே, இது அவர்கள் அனைவரின் நிலையாக இருக்க முடியாது, ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும். மறுபுறம், இது எதிர்காலத்தில் இந்தப் பாதையின் வழியாக ஜனங்கள் அனுபவிக்கும் சூழ்நிலைகளைக் குறிக்கிறது. அவர்கள் வார்த்தைகளின் தண்டனைக்கு உள்ளாகி, அவிசுவாசிகள் பேரழிவிற்கு உள்ளானவுடன், பூமியில் உள்ள ஜனங்களிடையே குடும்ப உறவுகள் இருக்காது என்று அது முன்னறிவிக்கிறது; அவர்கள் அனைவரும் சீனிமின் ஜனங்களாக இருப்பார்கள், மேலும் அனைவரும் தேவன் தம்முடைய ராஜ்யத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இதனால், கணவனும் மனைவியும் ஒன்றிணையும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, தாயும் மகனும் இனியும் சந்திக்கப்போவதில்லை, மீண்டும் ஒருபோதும் தந்தையும் மகளும் ஒன்றுசேரப் போவதில்லை. அதனால், பூமியில் உள்ள ஜனங்களின் குடும்பங்கள் உடைந்து, துண்டு துண்டாகிவிடும், மனுஷனில் தேவன் செய்யும் இறுதி கிரியையாக இது இருக்கும். தேவன் இந்தக் கிரியையை பிரபஞ்சம் முழுவதும் பரவச் செய்வார் என்பதால், அவர் ஜனங்களுக்கு “உணர்ச்சி” என்ற வார்த்தையைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துகிறார், இதனால் எல்லா ஜனங்களின் குடும்பங்களையும் பிரித்து மனுஷர்களிடையேயான “குடும்பச் சண்டைகள்” எல்லாவற்றையும் சரிசெய்ய தேவன் தண்டனையைப் பயன்படுத்துகிறார் என்பதைக் காட்டுவதே தேவனுடைய சித்தம் என்பதை அவர்கள் பார்க்கும்படி அனுமதிக்கிறார். இல்லையென்றால், பூமியில் தேவனுடைய கிரியையின் இறுதிப் பகுதியை முடிவுக்குக் கொண்டுவர எந்த வழியும் இருக்காது. தேவனுடைய வார்த்தைகளின் இறுதிப் பகுதி மனிதகுலத்தின் மிகப் பெரிய பலவீனத்தை வெளிப்படுத்துகிறது—அவர்கள் அனைவரும் உணர்ச்சியில் வாழ்கிறார்கள்—ஆகவே தேவன் அவர்களில் ஒருவரையும் விலக்கிவைக்காமல், முழு மனிதகுலத்தின் இருதயங்களிலும் மறைந்திருக்கும் இரகசியங்களை அம்பலப்படுத்துகிறார். ஜனங்கள் உணர்ச்சியிலிருந்து தங்களைப் பிரித்து வைப்பது ஏன் மிகவும் கடினமாய் இருக்கிறது? அவ்வாறு செய்வது மனச்சாட்சியின் தன்மையை மீறுவதாகுமா? மனசாட்சியால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா? துன்பத்தின் போது உணர்ச்சியால் ஜனங்களுக்கு உதவ முடியுமா? தேவனுடைய பார்வையில், உணர்ச்சியே அவருடைய எதிரி—இது தேவனுடைய வார்த்தைகளில் தெளிவாகக் கூறப்படவில்லையா?

முந்தைய: அத்தியாயம் 27

அடுத்த: அத்தியாயம் 29

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக