அத்தியாயம் 42

புதிய கிரியை தொடங்கிய உடனேயே, எல்லா ஜனங்களுக்கும் ஒரு புதிய பிரவேசம் உள்ளது, மேலும் அவர்கள் என்னுடன் கைகோர்த்து முன்னேறுகிறார்கள். ராஜ்யத்துக்குச் செல்லும் பெரிய சாலையில் நாங்கள் ஒன்றாக நடக்கிறோம், மனுஷருக்கும் எனக்கும் இடையே அவ்வளவு நெருக்கமான நெருக்கம் இருக்கிறது. மனுஷனிடம் எனது உணர்வுகளைக் காட்டவும், எனது மனப்பான்மையை வெளிப்படுத்தவும், நான் எப்போதும் மனுஷனிடம் பேசியிருக்கிறேன். இருப்பினும், இந்த வார்த்தைகளில் சில ஜனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கலாம் என்றாலும் அவை அவர்களைக் காயப்படுத்தவும் செய்யலாம், ஆகவே என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை மிக அடிக்கடி கேட்கும்படி ஜனங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். எனது பேச்சு குறிப்பாக இனிய நடையில் இருக்காது, ஆனால் அவை அனைத்தும் என் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள். ஏனெனில் மனிதன் என் நண்பன் ஆவான், மனுஷர்கள் மத்தியில் எனது கிரியையைத் தொடர்ந்து செய்து வருகிறேன், மற்றும் மனுஷரும் கூட என்னுடைய கிரியையில் தலையிட மிகவும் பயந்து என்னுடன் ஒத்துழைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இந்த நேரத்தில், என் இருதயம் மிகுந்த மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது, ஏனென்றால் நான் ஜனங்களில் ஒரு பகுதியினரை ஆதாயப்படுத்தியிருக்கிறேன், ஆகவே எனது “தொழில்” பின்னடைந்த நிலையில் இல்லை; அதில் இனி வெற்று வார்த்தைகள் இருக்காது, மேலும் எனது “சிறப்பு தயாரிப்புச் சந்தை” இனிமேலும் மந்தமாக செயல்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஜனங்கள் விவேகமானவர்கள்—என் நாமத்துக்காகவும் என் மகிமைக்காகவும், அவர்கள் அனைவரும் “தங்களை அர்ப்பணிக்க” தயாராக உள்ளனர், இந்த வழியில் மட்டுமே என் “சிறப்பு அங்காடி” சில புதிய “பொருட்களை” தயாரிக்கிறது, அதனால் ஆவியானவரின் உலகில் பல “வாடிக்கையாளர்கள்” எனது “பொருட்களை” வாங்க வருகிறார்கள். இந்தக் கணத்திலிருந்து மட்டுமே நான் மகிமை அடைகிறேன்; அப்போதுதான் என் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் வெறுமையாக இருக்காது. நான் வெற்றி பெற்று, வெற்றியுடன் திரும்பியிருக்கிறேன், ஜனங்கள் அனைவரும் என்னைக் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில், என் மீதுள்ள தன் அபிமானத்தைக் காட்டவும், என் காலடியில் அது விழுந்திருப்பதைக் காட்டவும், சிவப்பான பெரிய வலுசர்ப்பமும் “கொண்டாட” வருகிறது, அதனை நான் மகிமையாகப் பார்க்கிறேன். சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரை, நான் பல வெற்றிகரமான யுத்தங்களில் சண்டையிட்டிருக்கிறேன், மேலும் வியக்கத்தக்க பலவற்றை செய்துள்ளேன். ஒருமுறை பலர் என்னைக் கொண்டாடினார்கள், எனக்கு துதியைச் செலுத்தினார்கள், எனக்காக நடனமாடினார்கள். இவை கிளர்ச்சியூட்டும் மற்றும் மறக்க முடியாத காட்சிகள் என்றாலும், நான் என் புன்னகையை ஒருபோதும் காட்டவில்லை, ஏனென்றால் நான் இன்னும் மனுஷனை ஜெயங்கொள்ளவில்லை, மேலும் சிருஷ்டிப்பைப் போன்ற கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். இன்றைய நாள் கடந்த காலத்தைப் போல இல்லை. நான் சிங்காசனத்திலிருந்து புன்னகை புரிகிறேன், நான் மனுஷனை ஜெயங்கொண்டிருக்கிறேன், ஜனங்கள் அனைவரும் என் முன் குனிந்து வணங்குகிறார்கள். இன்றைய ஜனங்கள் கடந்த காலத்தில் இருந்த ஜனங்கள் அல்ல. நிகழ்காலத்தைத் தவிர வேறு எதற்காகவும் எனது கிரியை இருக்க முடிவது எங்ஙனம்? என்னுடைய மகிமையைத் தவிர வேறு எதற்கும் அது இருக்க முடிவது எங்ஙனம்? ஒரு பிரகாசமான நாளைய தினத்துக்காக, மனுஷனிடம் நான் செய்யும் எனது எல்லாக் கிரியைகளையும் பலமுறை தெளிவுபடுத்துவேன், அதனால் என் மகிமை அனைத்தும் சிருஷ்டிக்கபட்ட மனுஷனிடம் “இளைப்பாறும்”. நான் இதனை எனது கிரியையின் கோட்பாடாக எடுத்துக்கொள்வேன். என்னுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, எழுந்து கடினமாக உழைப்பேன், இதனால் என் மகிமை மேன்மேலும் ஆகாயத்தை நிரப்பும். மாபெரும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நேரம் இது. என் அன்பின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் திறமைகளை இங்கே என்னுடன் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது, மேலும் எனது கிரியைக்காக எல்லாவற்றையும் “சுழலும்படி” நான் செய்வேன். வானத்தில் பறக்கும் பறவைகள் வானத்தில் உள்ள என் மகிமையாகும், பூமியில் உள்ள கடல்கள் பூமியின் மீதுள்ள என் செயல்கள் ஆகும், எல்லா விஷயங்களுக்கு மத்தியிலான எனது வெளிப்பாடு எல்லா விஷயங்களின் எஜமானாக இருக்கிறது, பூமியில் உள்ள அனைத்தையும் என் நிர்வாகத்திற்காக நான் மூலதனமாகப் பயன்படுத்துகிறேன், இதன் மூலம் எல்லாவற்றையும் பெருக்கி, செழித்து, ஜீவனுடன் பிரகாசிக்கச் செய்கிறேன்.

சிருஷ்டிப்பின் போது, பூமியில் எனது கிரியை இறுதி காலத்தில் முழுமையாக முடிவடையும் என்று நான் ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். எனது கிரியை முடிவடையும் நேரம், எனது காரியங்கள் அனைத்தும் ஆகாயத்தில் வெளிப்படும் நேரமாக இருக்கும். பூமியிலுள்ள ஜனங்கள் என் காரியங்களை அங்கீகரிக்கும்படி செய்வேன், மேலும் என் காரியங்கள் “நியாயசனத்தின்” முன் நிரூபிக்கப்படும், இதனால் அவை பூமியெங்கும் உள்ள ஜனங்கள் மத்தியில் ஒப்புக் கொள்ளப்படும், அவர்கள் அனைவரும் ஒப்புக்கொடுப்பார்கள். இப்படியாக, இதற்குப் பிறகு, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியில் நான் இறங்குவேன். இன்று முதல், நான் எனது செயல்களைப் படிப்படியாக தெளிவாக்குவேன், இதனால் எனது ஞானம், எனது அதிசயத்தன்மை மற்றும் ஆராய முடியாத தன்மை ஆகியவை சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் அங்கீகரிக்கப்பட்டு நிரூபிக்கப்படும். குறிப்பாக, பூமியில் உள்ள அனைத்து ஆளும் கட்சிகளும் என் காரியங்களை அங்கீகரிக்கும்படி செய்யப்படுவார்கள், இதனால் எனது காரியங்கள் “நீதிபதிகளால்” தீர்மானிக்கப்படும், மேலும் “வழக்கறிஞர்களால்” “எதிர்வழக்காடப்படும்”, இதனால் எனது காரியங்கள் ஒப்புக்கொள்ளப்படும், இது ஜனங்கள் அனைவரையும் தலைகுனிந்து பணிந்து போகச் செய்யும். இந்த நேரத்திலிருந்து, எனது செயல்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையினராலும் அங்கீகரிக்கப்படும், மேலும் இது பூமியில் நான் எல்லா மகிமையையும் பெறும் தருணமாக இருக்கும். அந்த நேரத்தில், நான் மனுஷனுக்குக் காட்சியளிப்பேன், இதற்கு மேல் மறைவாக இருக்கமாட்டேன். தற்போது, எனது காரியங்கள் இன்னும் உச்சக்கட்டத்தை எட்டவில்லை. எனது கிரியை தொடர்ந்து முன்னேறி வருகிறது, அது அதன் உச்சத்தை அடையும் போது, அது முடிவடைந்திருக்கும். நான் எல்லாத் தேசங்களின் ஜனங்களையும் முழுவதுமாக ஜெயங்கொள்வேன், கொடூரமான மிருகங்களை எனக்கு முன்பாக ஆட்டுக்குட்டிகளைப் போல அடக்குவேன், பூமியில் உள்ள ஜனங்களைப் போலச் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை என் முன் அடிபணியச் செய்வேன். நான் வானத்தில் இருக்கும் என் எதிரிகள் அனைவரையும் தோற்கடிப்பேன், பூமியிலுள்ள என் எதிரிகள் அனைவரையும் ஜெயங்கொள்ளுவேன். இதுவே எனது திட்டம், இதுவே எனது காரியங்களின் அற்புதத்தன்மை. என் வழிகாட்டுதலின் கீழ் இயற்கையின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதே மனுஷன் செய்யக்கூடியது—அவனால் தன் சொந்த முடிவுகளை எடுக்க முடியாது! என் கையிலிருந்து யாரால் தப்பிக்க முடியும்? நான் அனைத்து இயற்கையையும் பல்வேறு வகைகளாகப் பிரித்து, அது விதிமுறைகளுக்குள்ளேயே இருக்கும்படி செய்தேன், அதனால்தான் பூமியில் வசந்த காலத்தில் வெப்பம் மற்றும் இலையுதிர்காலத்தில் குளிர்ச்சி போன்ற விதிமுறைகள் உள்ளன. பூமியில் உள்ள பூக்கள் குளிர்காலத்தில் வாடி கோடையில் மலரக் காரணம் என் கையின் அற்புதத் தண்மைதான்; குளிர்காலத்தில் வாத்துக்கள் தெற்கே பறக்க காரணமானது நான் வெப்பநிலையை மாற்றியமைத்ததுதான்; கடல்கள் ஆரவாரிப்பதன் காரணம், நான் நீரின் மேற்பரப்பில் உள்ள பொருட்களை மூழ்கடிக்க விரும்புகிறேன் என்பதுதான். எது என்னால் ஏற்பாடு செய்யப்படாமல் இருக்கிறது? இந்தத் தருணத்திலிருந்து, மனுஷனின் “இயற்கையின் பொருளாதாரம்” என் வார்த்தைகளால் முற்றிலும் அழிக்கப்படுகிறது, மேலும் “இயற்கை விதிகள்” இருப்பதன் காரணமாக ஜனங்கள் இனிமேல் என் பிரசன்னத்தை அழிக்க மாட்டார்கள். எல்லா விஷயங்களுக்குமான ஆட்சியாளர் இருப்பதை யாராவது மீண்டும் மறுப்பார்களா? பரலோகத்தில், நானே தலைவர்; எல்லாவற்றிற்கும் மத்தியில், நானே கர்த்தர்; எல்லா ஜனங்களுக்கும் மத்தியில் நானே முதன்மையானவன். இதனைப் “பெயிண்ட்” மூலம் பூசி மறைக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது? பொய்கள் சத்தியத்தின் இருப்பைச் சீர்குலைக்க முடியுமா? இந்த அருமையான வாய்ப்பில், நான் மீண்டும் என் கைகளில் உள்ள கிரியையைத் தொடங்குகிறேன், இனிமேல் மனுஷனின் குறுக்கீட்டினால் கஷ்டப்படமாட்டேன், மேலும் இயந்திரங்களின் “திருப்புதலைத்” தொடர்கிறேன்.

நான் எனது வார்த்தைகளுக்குப் பல்வேறு “தாளிப்புக்களைச்” சேர்த்துள்ளேன், இதனால் நான் மனுக்குலத்தின் நட்சத்திர சமையல்காரர்களில் ஒருவராக இருப்பது போல் தோன்றும். ஜனங்களுக்குத் தங்கள் உணவை எப்படித் தாளிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றாலும், அவர்கள் அதன் சுவையை அனுபவிக்கிறார்கள்; “தட்டை” ஏந்தியபடி, அவர்கள் அனைவரும் நான் தயாரித்த “உணவுகளை” சுவைக்கிறார்கள். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் தனிப்பட்ட முறையில் தயாரிக்கும் உணவுகளை ஜனங்கள் எப்போதும் அதிகமாகச் சாப்பிட விரும்புகிறார்கள். அவர்கள் என்னை மிகவும் உயர்வாக பார்ப்பது போலவும், எல்லாத் தாளிதப் பொருட்களிலும் என்னையே உயர்ந்ததாகப் பார்ப்பது போலவும், மற்றவர்களைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாதது போலவும் இருக்கிறார்கள். எனக்குச் சுயகௌரவம் அதிகமாக இருப்பதால், எனது சொந்தக் காரணங்களுக்காக மற்றவர்களின் “நிரந்தரமான சம்பாத்தியத்தைப்” பாழாக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். ஆகவே, “சமையலறையில்” இருந்து பின்வாங்குவதற்கான வாய்ப்பை நான் எடுத்துக்கொள்கிறேன் மற்றும் மற்றவர்கள் தங்களைத் தாங்களே வேறுபடுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறேன். இந்த வழியில் மட்டுமே என் இருதயம் உறுதியாக இருக்கிறது; ஜனங்கள் என்னைப் பிரமிப்புடன் பார்க்கவும் மற்றவர்களை இழிவாக பார்க்கவும் நான் விரும்பவில்லை; அது சரியாக இருக்காது. ஜனங்கள் இருதயங்களில் அந்தஸ்து வைத்திருப்பதன் மதிப்பு என்ன? நான் உண்மையில் மிகவும் கரடுமுரடானவனா, மேலும் நியாயமற்றவனா? நான் உண்மையிலேயே அந்தஸ்து கோர விரும்புகிறேனா? அப்படியானால், நான் ஏன் இப்படிப்பட்ட ஒரு பெரிய தொழில் முயற்சியில் இறங்குகிறேன்? நான் மற்றவர்களுக்கு எதிராகப் புகழ் மற்றும் நல்வாய்ப்புக்காகப் போராட விரும்பவில்லை, மேலும் பூமிக்குரிய புகழையும் நல்வாய்ப்பையும் நான் வெறுக்கிறேன்; நான் பின்பற்றுவது இதனை அல்ல. நான் மனுஷனை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கவில்லை, நான் சண்டையிடுவதோ அல்லது பறிப்பதோ இல்லை, ஆனால் எனது “கைவினையை” நம்பி வாழ்க்கையை நடத்துகிறேன், நான் மனச்சாட்சியற்ற செயல்களைச் செய்வதில்லை. ஆகவே, நான் பூமியைச் சுற்றி நடக்கும்போது, நான் முதலில் செயல்படுகிறேன், பின்னர் “என் கைவினைக்கான ஊதியம்” கேட்கிறேன்—இது மட்டுமே மனுஷன் பேசும் நேர்மையும் நியாயமுமாக இருக்கிறது. இதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை, மேலும் இது கொஞ்சம்கூட குறைவாக சொல்லப்படவில்லை; உண்மைகளின் உண்மையான அர்த்தத்தின்படி நான் பேசுகிறேன். நான் மனுஷர் மத்தியில் முன்னும் பின்னுமாக சென்று, நேர்மையான மற்றும் நியாயமானவர்களைத் தேடுகிறேன், இருந்தாலும் இது எந்தப் பலனையும் தரவில்லை. மேலும் ஜனங்கள் பேரம் பேச விரும்புவதால், விலை மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கிறது, அதனால் “செய்யவேண்டும் என்று என்மீது சுமத்தப்பட்ட” என் கையில் இருக்கும் கிரியையை நான் இன்னும் செய்து வருகிறேன். இன்று, மனுஷன் தன் கடமையை அதன்படி ஏன் செய்யவில்லை, அவனுடைய வளர்ச்சி எவ்வளவு பெரியது என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை என்று இன்னும்கூட எனக்கு தெரியவில்லை. அவர்களின் வளர்ச்சி பல கிராம் அல்லது பல லியாங்[அ] எடையுள்ளதா என்பது கூட ஜனங்களுக்குத் தெரியவில்லை. இப்படியாக அவர்கள் என்னிடம் இச்சகம் பேசுகிறார்கள். எனது கிரியைகள் அனைத்தும் வீணானது போலவும், என் வார்த்தைகள் மிகப்பரந்த மலைகளில் எதிரொலிப்பதைப் போலவும், என் வார்த்தைகள் மற்றும் பேச்சுக்களின் வேர்களை யாரும் உணரவில்லை என்றும் தோன்றுகிறது. ஆகவே மூன்றாவது முதுமொழியை சுருக்கமாகக் கூறுவதற்கு நான் இதை அடித்தளமாகப் பயன்படுத்துகிறேன்: “ஜனங்களுக்கு என்னைத் தெரியவில்லை, ஏனென்றால் அவர்கள் என்னைப் பார்ப்பதில்லை.” என் வார்த்தைகளைப் புசித்துவிட்டு, ஜனங்கள் செரிமானத்திற்கு உதவும் மருந்துகளைக் குடிப்பது போலவும், மருந்தின் பக்க விளைவுகள் மிகவும் வலுவாக இருப்பதால், அவர்கள் நினைவாற்றலை இழக்கிறார்கள், அதனால் என் வார்த்தைகள் மனுகுலத்தால் மறக்கப்பட்டவையாக மாறுகின்றன, நான் இருக்கும் இடம் அவர்கள் மறக்கும் மூலையாகிவிடுகிறது. இதனால், நான் பெருமூச்சு விடுகிறேன். நான் இவ்வளவு கிரியை செய்துள்ளேன், இருந்தும் ஜனங்களிடம் அதற்கான ஆதாரம் ஏன் இல்லை? நான் போதுமான முயற்சியை எடுக்கவில்லையா? அல்லது மனுஷருக்கு என்ன தேவை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லையா? இந்த விஷயத்தில் என்னால் ஏற்கனவே எதுவும் செய்ய முடியவில்லை, மேலும் எனது நிர்வாக ஆணைகளைப் பயன்படுத்தி அனைத்து ஜனங்களையும் ஜெயங்கொள்வதே எனது ஒரே வழி. நான் இனி ஓர் அன்பான தாயாக இருக்க மாட்டேன், ஆனால் முழு மனுகுக்லத்தையும் ஒரு கடுமையான தந்தையாக நடத்துவேன்!

மே 15, 1992

அடிக்குறிப்பு:

அ. “லியாங்” என்பது ஒரு சீன எடை அளவீடு ஆகும்; ஒரு லியாங் என்பது 50 கிராம்.

முந்தைய: அத்தியாயம் 41

அடுத்த: அத்தியாயம் 43

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக