அத்தியாயம் 106

என் வார்த்தைகளை அறியாதவர்களும், என் சாதாரண மனிதத்தன்மையை அறியாதவர்களும் என் தெய்வீகத் தன்மையை எதிர்க்கிறவர்களும் ஒன்றுமில்லாமல் அழிக்கப்படுவார்கள். இதில் இருந்து யாருக்கும் விதிவிலக்கில்லை. எல்லோரும் இந்த அம்சத்தில் திருப்தி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது என் ஆட்சிமுறை ஆணையாகும். மேலும் இதுவே மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும். நான் தெளிவாகச் சுட்டிக் காட்டிய விஷயங்களைக் கேட்டும் இன்னும் அவற்றைப் பற்றிய அறிவில்லாதவர்களே என்னுடைய வார்த்தைகளை அறியாதவர்கள்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் (ஆவிக்குரிய விஷயங்களுக்குப் பொருந்தும் ஒரு மனிதத் திறனை நான் சிருஷ்டிக்கவில்லையாதலால், அவர்களிடம் இருந்து நான் அதிகம் கோருவதில்லை; என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைபிடிப்பது மட்டுமே எனக்கு வேண்டியதாகும்). அவர்கள் என் வீட்டின் ஜனங்கள் அல்ல. அவர்கள் என்னைப் போன்ற வகையினரும் இல்லை; அவர்கள் சாத்தானின் தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால், ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாத இந்த ஜனங்களில் ஒருவர் கூட எனக்கு வேண்டாம். முன்னர், நான் அதிக தூரம் சென்று விட்டதாக நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். தேவனோடு மிருகங்கள் எவ்வாறு உரையாட முடியும்? அது அபத்தமாக இருக்காதா? நான் மனிதத் தன்மையில் செய்பவற்றை அளக்கத் தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துபவர்களே என்னுடைய சாதாரண மனிதத் தன்மையை அறியாதவர்கள். கீழ்ப்படிவதற்கு மாறாக அவர்கள் தங்கள் மாம்சக் கண்களோடு என்னிடம் குற்றம் கண்டுபிடிக்க வருகிறார்கள். ஒருவேளை நான் பேசியிருக்கும் வார்த்தைகள் வீணாகிப் போய்விட்டதோ? என் சாதாரண மனிதத்தன்மையே பரிபூரணமான தேவனாகிய என்னுடைய தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்றும், என் சாதாரண மனிதத்தன்மையும் பரிபூரணமான தெய்வீகத் தன்மையும் ஒன்றோடு ஒன்றிணைந்து கிரியை செய்யும் தகுந்த வழி என்றும் நான் கூறியிருக்கிறேன்: என் சாதாரண மனிதத்தன்மை மூலம் நான் செய்யும் கிரியைகள் மனித எண்ணங்களோடு பொருந்தாத போது, என்னை எதிர்க்கிறவர்களும் என்னுடன் இணங்காதவர்களும் வெளிப்படுத்தப்படுகிறார்கள். அதன் பிறகு, மனிதத்தன்மை மூலம் என் பரிபூரண தெய்வீகத் தன்மை பேசுகிறது, மேலும் இவ்விதமாக, சிலரை நான் கையாண்டிருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை என்றாலும் கூட கீழ்ப்படிந்தாயானால், என்னால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாத வகையான நபராய் நீ இருக்கிறாய்; நான் இப்படிப்பட்ட ஜனங்களைப் பிரகாசிப்பிக்கிறேன். இப்படிப்பட்டவர்களை நான் நேசிக்கிறேன். உன்னுடைய கீழ்ப்படிதலின் காரணமாக நான் உன்னைப் பிரகாசிப்பிக்கிறேன். என்னுடைய வார்த்தைகளை அறியாதவர்களும், என்னுடைய சாதாரண மனிதத்தன்மையோடு இணக்கமாக இல்லாதவர்களும், தெய்வீகத்தன்மையில் நான் செய்வதை அங்கீகரிக்க மறுக்கிறவர்களுமே என் தெய்வீகத்தன்மையை எதிர்ப்பவர்களில் அடங்குவார்கள் (உதாரணமாக, நான் கோபப்படுதல் அல்லது சபையைக் கட்டுதல், போன்றவை). என் தெய்வீகத் தன்மைக்கு இவை எல்லாம் எதிர்ப்பை வெளிப்படுத்துபவை. இருந்தாலும், நான் வலியுறுத்த வேண்டிய ஒன்று உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும்: இன்று நான் இருக்கும் என் ஆள்தத்துவத்தோடு இணக்கம் இல்லாதவர்களே என் தெய்வீகத்தன்மையை எதிர்க்கிறார்கள். நான் ஏன் தொடர்ந்து நான் இருக்கும் என் ஆள்தத்துவமே பரிபூரணமான தேவன் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்? நான் இருக்கும் என் ஆள்தத்துவத்தின் மனநிலை தெய்வீக மனநிலையின் முழுமையைக் கொண்டிருக்கிறது; என்னை அளக்க மனிதக் கருத்துக்களைப் பயன்படுத்தாதீர்கள். இப்போது கூட, நான் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறேன் என்றும் நான் செய்யும் எல்லா விஷயங்களும் சரியாக இருக்கத் தேவையில்லை என்றும் பலர் சொல்லுகின்றனர். ஜனங்கள் இப்படி இருக்கும் போது, நீ மரணத்தைக் கேட்கவில்லையா? நான் சொல்லுவதில் ஒரு வார்த்தையைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் நிச்சயமாக குருடர் சந்ததிகளாகவும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வித்துக்களுமாகவும் இருக்கிறார்கள்! இன்னும் ஒரு தடவை நான் ஒவ்வொருவருக்கும் கூறுவேன் (அதற்குப் பின்னர் இதை மீண்டும் கூற மாட்டேன், மற்றும் இந்தக் குற்றத்தைச் செய்பவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சபிக்கப்படுவார்கள்): என் வார்த்தைகள், என் சிரிப்பு, நான் உண்ணுவது, நான் வாழ்வது, மற்றும் என் நடத்தை எல்லாமே என்னால் செய்யப்படுகிறது—தேவன் தாமே செய்கிறார்—அதில் சிறிதளவு கூட மனிதன் சம்பந்தப்படவில்லை. ஒன்றுமில்லை! ஒன்றுமே இல்லை! ஜனங்கள் எல்லாம் மன விளையாட்டுகளை ஆடுவதை நிறுத்த வேண்டும். தங்கள் அற்பக் கணக்குகளை விட்டொழிக்க வேண்டும். அதிகமான ஜனங்கள் இவற்றைத் தொடர்ந்தால், அவர்களின் அழிவும் அதிகமாக இருக்கும். என்னுடைய அறிவுரையைக் கேளுங்கள்.

நான் எப்போதும் ஒவ்வொருவருடைய உள்ளான இருதயத்தையும் ஆராய்கிறேன். ஒவ்வொரு தனி நபரின் வார்த்தையையும் செயலையும் ஆராய்கிறேன். நான் யாரை விரும்புகிறேன், யாரை வெறுக்கிறேன் என்பதை ஒருவர் பின் ஒருவராக தெளிவாகப் பார்க்கிறேன். இது மக்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. மேலும், அவர்களால் நிறைவேற்ற முடியாத ஒன்று. நான் நிறையச் சொல்லியிருக்கிறேன். நான் பல விஷயங்களைச் செய்திருக்கிறேன்; என்னுடைய வார்த்தைகளின் நோக்கம் என்ன, மேலும் நான் என்ன செய்கிறேன் என்பதை யாரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? யாராலும் முடியாது. இனிமேல், இன்னும் அதிகமான வார்த்தைகளைப் பேசுவேன்; ஒருபுறம் நான் வெறுக்கும் எல்லா ஜனங்களையும் இது புறம்பாக்கும், அதே நேரத்தில் இன்னொரு புறம், இந்த விஷயத்தில் இது உங்களைத் துன்பத்துக்குட்படுத்தும், அதனால் மீண்டும் ஒருமுறை இன்னும் அதிகக் கடுமையுடன் நீங்கள் உயிர்த்தெழுதலின் சுவையை அனுபவிப்பீர்கள். இதை மக்களால் தீர்மானிக்க முடியாது. இதை நிகழாமல் யாராலும் தடுக்கவும் முடியாது. இதைப் பற்றி உங்களுக்கு இப்போது தெரிந்தாலும், இந்த வகையான துன்பத்தின் நேரம் வரும் போது உங்களால் தவிர்க்கவும் முடியாது, ஏனெனில் இதுவே நான் கிரியையாற்றும் முறையாகும். என் இலக்கை அடைய நான் இப்படித் தான் கிரியை செய்ய வேண்டும். இதனால் என் சித்தம் உங்கள் மேல் நிறைவேறும். அதனால் தான் இது “நீங்கள் சகிக்க வேண்டிய கடைசிப் பாடு” என்று அழைக்கப்படுகிறது. பின்னர், உங்கள் மாம்சம் ஒருபோதும் துன்பத்தை அனுபவிக்காது, ஏனெனில் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் என்னால் அழிக்கப்படும். அது மீண்டும் கலவரம் செய்யத் துணியாது. சரீரத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னால் இதுவே கடைசிப் படிநிலை; இதுவே மாறும் கட்டமாகும். ஆனால் பயப்பட வேண்டாம்—கஷ்டத்தின் மேல் கஷ்டத்தின் ஊடாக நான் நிச்சயமாக உங்களை வழிநடத்துவேன். நான் தான் நீதியுள்ள தேவன் என்பதை விசுவாசியுங்கள். நான் என்ன சொல்லுகிறேனோ அது நிச்சயமாக நடைபெறும். நான் தான் நம்பகமான தேவனானவர். எல்லாத் தேசங்களும், எல்லாச் சபைப் பிரிவுகளும் என்னிடம் திரும்பி வருகின்றன, என் சிங்காசனத்தை நோக்கி திரண்டு வருகின்றன. இதுவே என் மாபெரும் வல்லமை. நான் கலகத்தின் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் நியாயந்தீர்ப்பேன். விதிவிலக்கில்லாமல் அவர்களை அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளுவேன். எல்லோரும் திரும்பி வர வேண்டும். என்னுடைய நிர்வாகத் திட்டத்தின் கடைசிப் படிநிலை இதுதான். ஒரு முறை அது நிறைவடைந்து விட்டால், நான் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பேன், ஏனெனில் எல்லாம் செய்து முடிக்கப்பட்டிருக்கும், என் நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

என் கிரியையின் வேகம் அதிகரித்திருப்பதால் (நான் பதட்டத்தை உணரவில்லை என்றாலும்) நான் ஒவ்வொரு நாளும் என் வார்த்தைகளை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன், ஒவ்வொரு நாளும் உங்களுக்காக வைத்திருக்கிற இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன். இதனால் உங்களால் என் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற முடியும். (இது என் ஞானம்; நான் என் வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களைப் பரிபூரணப்படுத்துகிறேன். ஆனால் ஜனங்களை அடித்து வீழ்த்தவும் செய்கிறேன். எல்லோரும் என் வார்த்தைகளை வாசிக்கிறார்கள். அவர்களால் என் வார்த்தைகளில் இருக்கும் என் சித்தத்துக்கு இணங்க செயல்படவும் முடிகிறது. எதிர்மறையாக இருப்பவர்கள் எதிர்மறையாகவே இருப்பார்கள். யாரை வெளிப்படுத்த வேண்டுமோ அவர்கள் தங்கள் உண்மை சுபாவத்தைக் காட்டுவார்கள்; அடங்காதவர்கள் எதிர்ப்பார்கள். என்னை உண்மையாக நேசிப்பவர்கள் இன்னும் அதிக உண்மையுள்ளவர்கள் ஆவார்கள். இப்படி, எல்லாராலும் என் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியும். நான் விவரித்திருக்கிற எல்லாச் சூழ்நிலைகளும் நான் கிரியை செய்யும் முறைகளும், நான் அடைய விரும்பும் இலக்குகளும் ஆகும்.) கடந்த காலத்தில், நான் இந்த வகையான விஷயத்தைக் கூறினேன்: நான் எப்படி உங்களை வழிநடத்துகிறேனோ நீங்கள் அந்த வழியையே பின்தொடர வேண்டும்; நான் என்ன சொன்னாலும், நீங்கள் கேட்க வேண்டும். இதனால் நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உங்களுக்குத் தெரியுமா? என் வார்த்தையின் நோக்கமும் முக்கியத்துவமும் எவை? உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? எத்தனை பேரால் இதை முழுமையாக வெளிப்படுத்த முடியும்? “நான் எப்படி உங்களை வழிநடத்துகிறேனோ நீங்கள் அந்த வழியையே பின்தொடர வேண்டும்,” நான் வெறுமனே நான் இருக்கும் ஆள்தத்துவம் வழங்கும் வழிகாட்டுதலை மட்டுமே குறிப்பிடவில்லை; நான் அதற்கு மேல் நான் பேசும் வார்த்தைகளையும் நான் செல்லும் பாதையையும் குறிப்பிடுகிறேன். இன்று, இந்த வார்த்தைகள் உண்மையிலேயே நிறைவேறிவிட்டன. என்னுடைய வார்த்தைகளைப் பேசி முடித்ததும், என்னுடைய பிரசன்னத்தின் வெளிச்சத்தில் எல்லா வகையான பிசாசுகளின் வல்லமையும் நீங்கள் அவற்றை எல்லாம் தெளிவாகப் பார்க்கும் வண்ணம் வெளியரங்கப் படுத்தப்படுகின்றன. என்னுடைய இந்த வார்த்தைகள் சாத்தனுக்கு ஓர் அறிவிப்பு மட்டுமல்ல, ஆனால் உங்களுக்கு எல்லாம் ஓர் ஒப்படைப்பும் ஆகும். இவை உங்களுக்கான ஓர் ஒப்படைப்பாக நம்பி உங்களில் பெரும்பாலானோர் இந்த வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறீர்கள்; அவை நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் மற்றும் அதிகாரத்தைத் தாங்கிய வார்த்தைகள் என்பதை நீங்கள் அறிவதில்லை. எனக்குச் சரியாக ஊழியம் செய்யவும் முற்றிலுமாக எனக்குக் கீழ்ப்படியவும் சாத்தனுக்குக் கட்டளை இடுவதே என் வார்த்தைகளின் நோக்கம். கடந்த காலத்தில் நான் வெளிப்படுத்திய இரகசியங்களில், நீங்கள் புரிந்து கொள்ளாதவை இன்னும் பல இருக்கின்றன. அது இப்படியிருக்க, எதிர்காலத்தில் நான் உங்களுக்கு இன்னும் வெளிப்படுத்துவேன். இதனால் நீங்கள் இன்னும் தெளிவான, இன்னும் முழுமையானப் புரிதலை அடையலாம்.

பேரழிவுகள் வரும்போது எல்லோரும் அச்சமடைகிறார்கள். சோகத்தால் ஜனங்கள் எல்லோரும் அழுகிறார்கள். கடந்த காலத்தில் தாங்கள் செய்த பொல்லாத செய்கைகளை எண்ணி கசப்படைகிறார்கள். ஆனால் இப்போது தாமதமாகி விட்டது. ஏனெனில் இது தான் உக்கிரத்தின் காலம். இது மக்களை இரட்சித்து கிருபை அளிக்கும் காலம் அல்ல. ஊழியம் செய்வோர் அனைவரையும் அகற்றும் நேரம். எனக்காக ஆளுகை செய்ய என் குமாரர்களை அனுமதிக்கும் நேரம். கடந்த காலத்தின் நேரங்களை விட இது உண்மையில் வித்தியாசமானது; உலகம் சிருஷ்டிக்கப்பட்டதில் இருந்து முன்னெப்போதும் நடந்திராதது. ஒரு காலத்தில் நான் உலகத்தைச் சிருஷ்டித்ததால், ஒரு முறை நான் அதை அழிப்பேன். என்னால் முன்குறிக்கப்பட்டது எதையும் யாராலும் மாற்ற முடியாது. “கிறிஸ்தவ மனிதர்களின் குழுமம்” மற்றும் “உலகளாவிய புதிய மனிதர்களின் குழுமம்” ஆகிய இரு சொற்களும் முன்னரே அடிக்கடி குறிப்பிடப்பட்டன. அவற்றை எவ்வாறு விளக்குவது? “கிறிஸ்தவ மனிதர்களின் குழுமம்” என்பது முதற்பேறான குமாரர்களையும் குறிக்குமா? இல்லை; ஜனங்கள் இந்தச் சொற்றொடர்களைச் சரியாக விளக்கவில்லை. இந்த அளவுக்குத் தான் மனிதக் கருத்துக்கள் விஷயங்களைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவ முடியும் என்பதால், இங்கு இப்போதே நான் உங்களுக்கு அவற்றைத் தெளிவாக்குவேன். கிறிஸ்தவ மனிதர்களின் குழுமமும், உலகளாவிய புதிய மனிதர்களின் குழுமமும் ஒன்றல்ல; அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறானவை. இந்த இரு சொற்றொடர்களின் வார்த்தைகளும் மிகவும் ஒன்று போல் இருந்தாலும், அவை ஒரே விஷயம் போல் தோன்றினாலும், உண்மைச் சூழ்நிலை முற்றிலும் எதிர்ப்பதமானது. “கிறிஸ்தவ மனிதர்களின் குழுமம்” சரியாக யாரைக் குறிப்பிடுகிறது? அல்லது அது எதைக் குறிக்கிறது? கிறிஸ்தவ மனிதர்களைப் பற்றிப் பேசும் போது எல்லோரும் என்னைப் பற்றி ஒருசேர நினைப்பார்கள். அவ்வாறு நினைப்பதில் தவறேதும் இல்லை. மேலும், மனிதக் கருத்துகளில், “மனிதன்” என்ற பதம் நிச்சயமாக மனித இனத்தையே குறிக்கும்; ஒருவர் கூட அதை வேறெதனுடனும் இணைக்க மாட்டார்கள். “குழுமம்” என்ற சொல்லைப் பற்றிப் பேசும்போது, அது பலர் ஒன்று கூடி வரும் ஒரே பிரிவு என்றும், அதனால் அது “குழுமம்” என்று அழைக்கப்பட்டது என்றும் ஜனங்கள் நினைப்பார்கள். மனித மனங்கள் மிக மிக எளிமையானது; அவற்றால் என் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது. இப்போது, நான் அதிகாரபூர்வமாக கிறிஸ்தவ மனிதக் குழுமம் என்றால் என்ன என்பது பற்றி ஐக்கியப்படுகிறேன் (ஆனால் ஜனங்கள் தங்கள் சொத்தக் கருத்துக்களை ஒதுக்கி வைக்க வேண்டும்; இல்லையென்றால், அவர்களில் ஒருவராலும் புரிந்து கொள்ள இயலாது. நான் அந்தச் சொல்லைப் பற்றி விளக்கினாலும் அவர்கள் நம்பவும் மாட்டார்கள், அதைப் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்): என் வார்த்தைகள் பேசப்பட்டதும், என் முதற்பேறான குமாரர்கள் என் சித்தப்படி செயல்பட்டு என்னுடைய சித்தத்தை வெளிப்படுத்த ஒரே இதயமும் ஒரே வாயும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாத் தேசங்களையும் எல்ல ஜனங்களையும் நியாயந்தீர்க்கும் போது என் நீதியை நிலை நாட்டி என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் எனது வெளிப்படுத்துதலும் என்னுடைய வெளிப்பாடுமாக இருக்கிறார்கள். இவ்வாறு, என் ஆட்சிமுறை ஆணைகளை நடைமுறைப்படுத்தும் முதற்பேறான குமாரர்களின் உண்மை தான் கிறிஸ்தவ மனிதர்களின் குழுமம் என்று கூறலாம்; அவை முதற்பேறான குமாரர்களின் கையில் இருக்கும் அதிகாரம். இவை எல்லாம் கிறிஸ்துவுடன் தொடர்புடையவை—ஆகவே “கிறிஸ்தவ மனிதர்” என்ற சொல். மேலும், எல்லா முதற்பேறான குமாரர்களும் என் சித்தப்படி செயல்படலாம். இந்தக் காரணத்தினால் தான் நான் “குழுமம்” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறேன். “உலகளாவிய புதிய மனிதர் குழுமம்” என்றால் என் நாமத்தில் இருக்கும் எல்லா ஜனங்களையும் குறிக்கிறது; வேறு வார்த்தைகளில் கூறினால், என் முதற்பேறான குமாரர்கள், என் குமாரார்கள் மற்றும் என் ஜனங்கள் ஆகியோரைக் குறிக்கிறது. “புதிய” என்ற சொல் என் நாமத்தைக் குறிக்கிறது. அவர்கள் என் நாமத்தில் இருப்பதனால் (என் நாமம் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் அது நித்தியமாய்ப் புதியது, ஒருபோதும் பழையது அல்ல; அது மனிதனால் மாற்ற முடியாதது), அவர்கள் எதிர்காலத்தில் என்றென்றைக்கும் ஜீவித்திருப்பார்கள், அவர்கள் தான் உலகளாவிய புதிய மனிதர்கள். இங்கு “குழுமம்” என்னும் சொல் ஜனங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இது முந்தியதைப் போன்றது அல்ல. என் வார்த்தை பேசப்படும்போது, எல்லோரும் அதை விசுவாசிக்க வேண்டும். சந்தேகப்படக் கூடாது. உங்கள் மனிதக் கருத்துக்களையும் மானிடச் சிந்தனைகளையும் அகற்றுங்கள். இரகசியங்களை வெளிப்படுத்தும் என் தற்போதைய செயல்முறையானது சரியாகச் சொல்லப் போனால் மனிதக் கருத்துக்களையும் சிந்தனைகளையும் அகற்றும் செயல்முறை தான் (என்னையும் நான் சொல்வதையும் அளக்க ஜனங்கள் தங்கள் சொந்த கருத்துக்களைப் பயன்படுத்துவதால், நான் என் சொந்த வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களைப் பயனப்டுத்தி மனுஷ கருத்துக்களையும் சிந்தனைகளையும் அகற்றுகிறேன்). இந்தக் கிரியை விரைவில் முடிவடையும். ஓர் அளவுக்கு என் இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னர், என் வார்த்தைகளைப் பற்றிய சிந்தனை செயல்முறை ஜனங்களுக்கு ஏறக்குறைய இருக்காது. அவர்கள் தங்களுடைய மனுஷக் கருத்துக்களைக் கொண்டு என்னை அளப்பதை நிறுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் சிந்திப்பதை வெளிப்படுத்தி நான் திருப்பி அடிப்பேன். ஒரு கட்டத்தில், ஜனங்கள் இனிமேலும் சிந்திக்க மாட்டார்கள்; அவர்கள் மூளை எந்த ஒரு சிந்தனையும் இன்றி வெறுமையாக இருக்கும். அவர்கள் முற்றிலுமாக என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். அது தான் நீங்கள் ஆவிக்குரிய பகுதிக்குள் நுழையும் நேரமாக இருக்கும். நீங்கள் ஆவிக்குரிய பகுதிக்குள் நுழைவதற்கு நான் அனுமதிக்கும் முன் வரும் என்னுடைய கிரியையின் ஒரு படிநிலை இது. நீங்கள் பரிசுத்தமாகவும் குற்றமில்லாமலும் ஆவிக்குரிய பகுதிக்குள் பிரவேசிக்கும் முன்னர் உங்களுடைய எல்லா மனித கருத்துக்களையும் விட்டு விட வேண்டும். “நான் ஒரு பரிசுத்தமான ஆவிக்குரிய சரீரம்” என்பதன் அர்த்தம் இது தான். இருந்தாலும் நீங்கள் என்னுடைய படிநிலைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும், மேலும் அதை நீங்கள் அறிந்து கொள்ளும் முன்னர் என்னுடைய நேரம் வரும்.

முந்தைய: அத்தியாயம் 105

அடுத்த: அத்தியாயம் 107

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக