ராஜ்ய கீதம்

திரளான ஜனங்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள், திரளான ஜனங்கள் என்னைப் போற்றுகிறார்கள்; சகல வாய்களும் ஒரே மெய்யான தேவன் என்று அழைக்கிறார்கள், சகல ஜனங்களும் என் கிரியைகளைக் காணக் கண்களை உயர்த்துகிறார்கள். ராஜ்யமானது மனுஷரின் உலகில் இறங்குகிறது, என்னவர் பணக்காரராகவும், ஏராளமானவற்றைக் கொண்டவராகவும் இருக்கிறார். இதைப் பார்த்து யார்தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்? மகிழ்ச்சியின் காரணமாக யார்தான் நடனமாட மாட்டார்கள்? ஓ, சீயோனே! என்னைக் கொண்டாட உன் வெற்றிக் கொடியை உயர்த்து! என் பரிசுத்த நாமத்தைப் பரப்ப உன் ஜெயங்கொண்ட வெற்றிப் பாடலைப் பாடு! பூமியின் முனைகள் வரை இருக்கும் சகல சிருஷ்டிப்புகளே! நீங்கள் உங்களை எனக்கு ஒப்புக்கொடுக்க உங்களை நீங்களே சுத்திகரித்துக் கொள்ளுங்கள்! வானத்தின் நட்சத்திரக் கூட்டங்களே! என் வல்லமைமிக்க சக்தியை வானத்தில் காட்ட உங்கள் இடங்களுக்கு விரைந்து செல்லுங்கள்! பூமியில் தங்கள் எல்லையற்ற அன்பையும் பயபக்தியையும் பாடலாக ஊற்றும் ஜனங்களின் குரல்களுக்கு நான் செவிசாய்க்கிறேன்! இந்த நாளில், எல்லா சிருஷ்டிப்புகளும் ஜீவனுக்குத் திரும்பும்போது, நான் மனுஷரின் உலகத்திற்கு வருகிறேன். இந்த தருணத்தில், இதே சந்தர்ப்பத்தில், பூக்கள் அனைத்தும் கட்டுக்கடங்காமல் பூக்கின்றன, சகல பறவைகளும் ஒரே குரலில் பாடுகின்றன, சகலமும் மகிழ்ச்சியுடன் துள்ளுகின்றன! ராஜ்யத்தின் வணக்கத்தின் சத்தத்தில், சாத்தானின் ராஜ்யம் கவிழ்ந்துபோகிறது, மீண்டும் ஒருபோதும் எழாதபடிக்கு ராஜ்ய கீதத்தின் இடி முழக்கத்தால் அழிக்கப்படுகிறது!

பூமியில் யார் எழுந்து எதிர்க்கத் துணிகிறார்கள்? நான் பூமிக்கு இறங்கும்போது, நான் நெருப்பைக் கொண்டுவருகிறேன், கோபத்தைக் கொண்டுவருகிறேன், எல்லா வகையான பேரழிவுகளையும் கொண்டு வருகிறேன். பூமிக்குரிய ராஜ்யங்கள் இப்போது என் ராஜ்யம்! வானத்தின் மேலே, மேகங்கள் கவிழ்ந்து நீர்த்திரை ஆகின்றன; வானத்தின் கீழ், ஏரிகளும் ஆறுகளும் துள்ளியெழுந்து மகிழ்ச்சியுடன் ஒரு கலவையான இன்னிசையை வெளிப்படுத்துகின்றன. ஓய்வெடுக்கும் மிருகங்கள் அவற்றின் குகைகளிலிருந்து வெளிப்படுகின்றன, சகல ஜனங்களும் என்னால் தங்கள் நித்திரையிலிருந்து எழுப்பப்படுகிறார்கள். பன்முக ஜனங்கள் எதிர்பார்த்த நாள் ஒருவழியாக வந்துவிட்டது! அவர்கள் மிக அழகான பாடல்களை எனக்கு ஏறெடுக்கிறார்கள்!

இந்த அழகான தருணத்தில், இந்தக் களிப்பூட்டும் நேரத்தில்,

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், சகல இடங்களிலும் புகழ் ஒலிக்கிறது. இதில் யார்தான் உற்சாகமாக இருக்க மாட்டார்கள்?

யாருடைய இதயம் ஒளிராது? இந்தக் காட்சியில் யார்தான் அழ மாட்டார்கள்?

வானம் பழைய வானம் அல்ல, இப்போது அது ராஜ்யத்தின் வானம்.

பூமி, முன்பிருந்த பூமி அல்ல, இப்போது அது பரிசுத்த நிலம்.

ஒரு கனமழைக்குப் பிறகு, இழிவான பழைய உலகம் முழுவதுமாக புதிதாக மாறுகிறது.

மலைகள் மாறுகின்றன… நீர்நிலைகள் மாறுகின்றன…

ஜனங்களும் மாறுகிறார்கள்… சகலமும் மாறுகின்றன….

ஓ, அமைதியான மலைகளே! எனக்காக எழுந்து நடனமாடுங்கள்!

ஓ, ஓடாமல் நிற்கும் நீர்நிலைகளே! சுதந்திரமாகப் பொங்கி வழிந்தோடுங்கள்!

சொப்பனங்காணும் மனுஷரே! நீங்களாகவே எழுந்து ஓடுங்கள்!

நான் வந்திருக்கிறேன்… நான் தான் ராஜா….

சகல மனுஷரும் தங்கள் கண்களால் என் முகத்தைக் காண்பார்கள், தங்கள் காதுகளால் என் குரலைக் கேட்பார்கள்,

ராஜ்யத்தின் ஜீவனை அவர்கள் ஜீவிப்பார்கள்….

எவ்வளவு இனிமையாக இருக்கிறது… எவ்வளவு அழகாக இருக்கிறது….

மறக்க முடியாதது… மறக்க இயலாதது….


கொழுந்துவிட்டெரியும் என் கோபத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் போராடுகிறது;

என் மகத்தான நியாயத்தீர்ப்பில், பிசாசுகள் அவற்றின் உண்மையான வடிவங்களைக் காட்டுகின்றன;

என் கடுமையான வார்த்தைகளில், ஜனங்கள் அனைவரும் ஆழ்ந்த அவமானத்தை உணர்கிறார்கள், தங்களை மறைத்துக்கொள்ள இடமேதும் இல்லை.

அவர்கள் கடந்த காலத்தையும், எப்படி என்னை கேலி செய்து தூற்றினார்கள் என்பதையும் நினைவுகூருகிறார்கள்.

அவர்கள் தங்களை வெளிக்காட்டாத ஒரு காலமும், என்னை மீறாத ஒரு காலமும் இருந்ததில்லை.

இன்று, யார் தான் அழுவதில்லை? யார் தான் வருத்தப்படுவதில்லை?

பிரபஞ்ச உலகம் முழுவதும் அழுகையால் நிறைந்திருக்கிறது…

சந்தோஷ ஒலிகளால் நிறைந்திருக்கிறது… சிரிக்கும் குரல்களால் நிறைந்திருக்கிறது….

ஒப்பிடமுடியாத மகிழ்ச்சி… ஒப்பீடு இல்லாத மகிழ்ச்சி….


ஒரு சிறிய மழை பெய்கின்றது… சிறகடிக்கும் கனமான வெண்பனிச் சிம்புகளுடன்….

ஜனங்களுக்குள்ளே, துக்கமும் மகிழ்ச்சியும் மாறிமாறி வருகின்றன… சிலர் சிரிக்கிறார்கள்…

சிலர் அழுகிறார்கள்… சிலர் ஆரவாரம் செய்கிறார்கள்….

எல்லோரும் மறந்துவிட்டதைப் போல… இது மழை மற்றும் மேகங்களால் நிறைந்த வசந்த காலம் என்று,

மலர்கள் விரிந்து மலரும் கோடைக்காலம் என்று, வளமான அறுவடைகளின் இலையுதிர் காலம் என்று,

அல்லது உறைபனியும் பனிக்கட்டிகளும் இருக்கும் குளிர்காலம் என்று, யாருக்கும் தெரியாது….

வானத்தில் மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன, பூமியில் சமுத்திரங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன.

புத்திரர்கள் தங்கள் கைகளை அசைக்கிறார்கள்… ஜனங்கள் நடனமாடுகையில் தங்கள் கால்களை நகர்த்துகிறார்கள்….

தேவதூதர்கள் கிரியை செய்கிறார்கள்… தேவதூதர்கள் மேய்க்கிறார்கள்….

பூமியிலுள்ள ஜனங்கள் அனைவரும் சந்தடி செய்கிறார்கள், பூமியில் உள்ள அனைத்தும் பலுகிப் பெருகுகின்றன.

முந்தைய: அத்தியாயம் 10

அடுத்த: அத்தியாயம் 11

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக