நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து

நான் உங்கள் மத்தியில் அநேகக் கிரியைகளைச் செய்திருக்கிறேன் மேலும், நிச்சயமாகவே பல கூற்றுக்களையும் கூறியிருக்கின்றேன். இருந்தும் என் வார்த்தைகளும், என் கிரியைகளும் இந்தக் கடைசி நாட்களில் என் கிரியைகளுக்கான நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றவில்லை என்கிற உணர்வு ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. இந்தக் கடைசி நாட்களில் என் கிரியைகள் ஒரு குறிப்பிட்ட நபருக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்காகவோ மாத்திரம் அல்ல, மாறாக என் உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்தவே செய்யப்படுகின்றன. இருந்தும் எண்ணற்ற காரணங்களுக்காகவும், அதாவது, நேரமின்மை அல்லது தொடர்ந்த வேலை திட்டங்களாலும் என்னிடமிருந்து என் மனநிலையைப் பற்றி எந்த அறிவையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் நான் என் புதிய திட்டத்தையும் என் இறுதி கிரியையும் தொடங்கி, எனது கிரியையில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்கிறேன், இதனால் என்னைக் காண்பவர்கள் எல்லோரும் நான் ஜீவிப்பதன் நிமித்தம் தங்கள் மார்புகளில் அடித்துக்கொண்டு முடிவின்றி அழுது புலம்புவார்கள். இது ஏனென்றால் நான் இந்த உலகில் மனிதகுலத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்திருக்கிறேன், மேலும் இந்த நேரத்திலிருந்து என் மனநிலையையும் முழு மனிதகுலத்திற்கும் முன்பாக வைப்பேன், அப்பொழுது என்னை அறிந்தவர்கள் மற்றும் அறியாதவர்கள் அனைவரின் கண்களுக்கும் நான் விருந்தாவேன். நான் மெய்யாகவே இந்த மனு உலகத்திற்கும் எல்லாம் பலுகிப்பெருகுகிறதான நிலத்திற்கும் வந்திருக்கிறேன் என்றும் எல்லாக் கண்களும் காணும். இதுவே என் திட்டமும் நான் மனிதகுலத்தைப் படைத்ததுமுதல் எனது ஒரே “அறிக்கையாகவும்” இருக்கின்றது. என்னுடைய கோல் மீண்டும் ஒருமுறை மனிதகுலத்திற்கும், எனக்கு விரோதமாக இருக்கும் அனைவருக்கும் சமீபமாக வைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் உங்கள் சிதறாத கவனத்தைத் தரலாம்.

வானாதி வானங்களோடும் கூட இணைந்து, நான் செய்யவேண்டிய காரியத்தைத் தொடங்கினேன். எனவே நான் திரளான ஜனங்களிடத்திற்குள்ளாக உட்புகுந்து, யாரும் என் அசைவுகளை உணராதபடியும் அல்லது என் வார்த்தைகளைக் கவனியாதபடியும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே அசைவாடுகிறேன். எனவே, என் திட்டம் சீராக முன்னேறி வருகின்றது. உங்களுடைய புலன்கள் மிகவும் உணர்வு இல்லாமல் போய்விட்டதால், என் கிரியையின் படிநிலைகளை நீங்கள் அறியவில்லை. ஆனால் நிச்சயமாகவே ஒரு நாள் வரும் அப்போது என் உள்ளார்ந்த நோக்கத்தை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். இன்று நான் உங்களுடனே வாழ்ந்து, உங்களுடனே பாடு அனுபவிக்கின்றேன், மேலும் மனுக்குலம் என்னைக் குறித்துக் கொண்டிருக்கும் மனநிலையையும் நான் வெகுகாலமாய்ப் புரிந்துவைத்துக் கொண்டிருக்கின்றேன். நான் இதைக் குறித்து இன்னும் அதிகமாகப் பேச விரும்பவில்லை. நான் இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை, இந்த வலிமிகுந்த பாடத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகளைத் தந்து உங்களுக்கு இலச்சையைக் கொண்டுவரவும் விரும்பவில்லை. நீங்கள் செய்தவற்றை எல்லாம் உங்கள் இருதயத்தில் நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்வீர்கள் என்று மாத்திரம் நான் நம்புகிறேன், இதனால் நாம் மீண்டும் சந்திக்கும்போது நம் கணக்குகளைச் சரிசெய்துகொள்ளலாம். நான் எப்போதும் நீதியோடும், நியாயத்தோடும் மற்றும் மரியாதையுடனும் நடந்துகொள்வதால், உங்களில் ஒருவரையும் தவறாகக் குற்றம்சாட்ட விரும்புவதில்லை. நீங்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றும், உங்கள் மனசாட்சியின்படி விண்ணகத்திற்கும், மண்ணகத்திற்கும் விரோதமாகச் செல்லக்கூடிய எதையும் நீங்கள் செய்திராதபடி இருக்க வேண்டும் என்றும் நம்புகின்றேன். நான் உங்களிடம் கேட்கும் ஒரே காரியம் இதுதான். கொடூரமான பாவங்களைச் செய்ததினால் பலர் இளைப்பாறுதலின்றி எளிதில் புண்படுபவர்களாக உணருகிறார்கள், ஒரு நற்கிரியையும் செய்யாததினால் பலர் தங்களைக்குறித்தே வெட்கமடைந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்படுவதை விடுத்து என் மனநிலையைச் சோதிக்கும்படி இன்னும் வெளியரங்கமாகாத தங்கள் அருவருப்பான அம்சங்களை மறைக்கிறதான முகமூடிகளை முற்றிலுமாகக் களைந்துவிட்டு மோசத்திலிருந்து அதிக மோசத்திற்குக் கடந்து செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மனிதனின் செயல்பாடுகளைக் குறித்து நான் அக்கறை கொள்வதோ அல்லது அதில் கவனம் செலுத்துவதோ இல்லை. மாறாக, தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தாலும், அல்லது இந்தப் பூமியில் பயணிப்பதாக இருந்தாலும் அல்லது என் ஆர்வத்திற்குட்பட்டு ஏதாவது செய்வதாக இருந்தாலும் நான் செய்ய வேண்டிய கிரியையை மாத்திரமே செய்கிறேன். முக்கியமான நேரங்களில், நான் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி மனிதரின் மத்தியில் ஒரு நொடி தாமதமாகவோ அல்லது விரைவாகவோ இல்லாமல் இயல்பாகவும், சீராகவும் என் கிரியைகளைத் தொடருகிறேன். ஆனாலும், என் கிரியையின் ஒவ்வொரு படியிலும் நான் அவர்களது முகஸ்துதியையும், பொய்யான தாழ்ச்சியையும் வெறுப்பதினால் சிலர் புறந்தள்ளப்படுகின்றனர். வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ என்னால் வெறுக்கப்படுகிறவர்கள் எல்லாம் நிச்சயமாகவே கைவிடப்படுவார்கள். சுருக்கமாகக் கூறினால், என்னால் வெறுக்கப்படுகிறவர்கள் என்னைவிட்டு அகன்று போகும்படியாகும். என் வீட்டில் வசிக்கும் துன்மார்க்கரை நான் விட்டுவைப்பதில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் மனிதனின் தண்டனைக்குரிய காலம் சமீபமாயிருக்கிறது, எனக்கென்று என் சொந்தத் திட்டங்கள் இருப்பதால் என்னால் வெறுக்கத் தக்க ஆத்துமாக்களைப் புறம்பே தள்ள நான் அவசரப்படுவதில்லை.

ஒவ்வொரு மனிதனின் முடிவையும் நான் தீர்மானிக்கும் நேரமாக இருக்கிறது. இது நான் மனிதனிடத்தில் கிரியையைத் தொடங்கும் காலம் இல்லை. நான் என் பதிவுப் புத்தகத்தில் ஒவ்வொரு நபருடைய வார்த்தைகளையும், செயல்களையும் என்னைப் பின் தொடர்ந்து வந்தப் பாதைகளையும், அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களையும், அவர்கள் எப்படி முடிவில் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள் என்பதையும் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்விதமாக அவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், ஒருவரும் என் கையிலிருந்து தப்புவதில்லை, அனைவரும் நான் ஒதுக்கும் தங்கள் வகையுடன் சேர்க்கப்படுவார்கள். நான் ஒவ்வொருவருடைய சேருமிடத்தையும் தீர்மானிக்க அவர்களுடைய வயது, அனுபவம், அவர்கள் பட்ட பாடுகளின் அளவு மற்றும் இவை எல்லாவற்றிலும் குறைவாக அவர்கள் பெற்றுக்கொண்ட இரக்கத்தின் அளவு போன்றவற்றை நான் அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்கள் சத்தியத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களா என்பதை அடிப்படையாகக் கொள்கிறேன். இது தவிர நீங்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. தேவனுடைய சித்தத்தின் வழி நடக்காதவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது மாற்றப்படமுடியாத உண்மை. எனவே, தண்டிக்கப்படுகிறவர்கள் எல்லாம் தேவனுடைய நீதியின் நிமித்தமும் மற்றும் தங்கள் பொல்லாத கிரியைகளின் தகுந்த பிரதிபலனாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். எனது திட்டத்தை அதன் ஆரம்பத்திலிருந்து நான் ஒரு மாற்றம்கூட செய்யவில்லை. எளிமையாகக் கூறப்போனால், மனிதனைப் பொறுத்தவரை, நான் உண்மையாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் குறைந்துவிட்டது போல என் வார்த்தைகளை நான் கற்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆனாலும், என் திட்டம் ஒருபோதும் மாறாதபடிக்கு அதைப் பேணிக்காப்பேன். மாறாக மனிதனுடைய அன்பும், விசுவாசமும் எப்பொழுதும் மாறிக்கொண்டும், எப்பொழுதும் தேய்ந்துகொண்டும்வருகிறது, எந்த அளவுக்கென்றால் வெளிவேஷத்திலிருந்து குளிர்ந்தநிலைக்குச் சென்று முற்றிலுமாக என்னை புறந்தள்ளும் நிலைக்கும் கூடச் சென்றுவிடுகிறது. நான் வெறுப்பையும், அருவருப்பையும் உணர்ந்து முடிவாகத் தண்டனையை அனுப்பும்வரை உங்களைக் குறித்த என் மனப்பான்மை அனலும், குளிரும் அற்றதாக இருக்கும். எனினும் உங்கள் தண்டனையின் நாளில் நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன், ஆனால் உங்களால் என்னைக் காண முடியாது. உங்கள் மத்தியில் வாழ்வது எனக்கு ஏற்கனவே நீண்டதும், மந்தமானதுமாக மாறிவிட்டதால், உங்கள் தீமையான வார்த்தைகளைத் தவிர்க்கும்படியாகவும், தாங்கமுடியாத அளவு நீசமான உங்கள் நடத்தைகளிலிருந்து தெளிவை நோக்கியும், நீங்கள் இனிமேலும் என்னை முட்டாளாக்காதபடிக்கு அல்லது சிரத்தையற்ற முறையில் நடத்தாதபடிக்கு நான் வசிப்பதற்கு வேறு சூழலைத் தெரிந்துகொண்டேன். உங்களை விட்டு விலகும் முன் சத்தியத்திற்கு ஒவ்வாத உங்கள் நடத்தைகளைத் தவிர்க்கும்படி உங்களுக்குக் கட்டாயமாக இன்னும் அதிகமாய்ப் புத்தி சொல்லுவேன். மாறாக, எல்லோருக்கும் பிரியமானது எதுவோ, எல்லோருக்கும் பலன் தருவது எதுவோ, உங்களுடைய சொந்த இலக்கிற்குப் பிரயோஜனமானது எதுவோ அதையே செய்ய வேண்டும். இல்லையெனில் பேரழிவின் மத்தியில் பாடுபடப்போவது வேறு யாருமல்ல நீங்கள் மாத்திரமே.

தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்குத் துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்குத் தந்திடாத மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!

என்னுடைய இறுதிக் கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் அல்ல, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனுக்குலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனுக்குலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனுக்குலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனுக்குலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனுக்குலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்தக் கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு அலுவலாக இருந்தது பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காக, போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய்க் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. உபத்திரவத்தின் காலத்திலே உங்களுடைய அன்பும், விசுவாசமும் ஆழம் இல்லாமல் இருந்ததினால், அப்போது உங்களுடைய செயல்கள் முற்றிலும் பொருத்தமானது என்று கருத முடியாது, ஒன்று நீங்கள் உங்களைக் கோழையாகவோ அல்லது கடுமையாகவோ காட்டியிருப்பீர்கள். அதைப் பொறுத்தவரை நன்மையா அல்லது தீமையா என்று மாத்திரமே நான் ஒரு நியாயத்தீர்ப்பு வழங்குவேன். என் அக்கறை எல்லாம் நீங்கள் எந்த வழியில் நடக்கிறீர்கள் என்பதிலும், எப்படி உங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதிலுமே தொடர்கிறது, அதன் அடிப்படையிலேயே உங்களுடைய முடிவை நான் தீர்மானிப்பேன். எனினும், என் இரக்கம் அதுவரையே நீட்டிக்கப் பட்டிருப்பதால், உபத்திரவத்தின் காலத்திலே சிறிதளவாயினும் விசுவாசத்தைக் காட்டாதவர்களுக்கு நான் நிச்சயமாக அதற்குமேல் இரங்குவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். என்னை காட்டிக்கொடுத்த அல்லது துரோகம் செய்த யார்மீதும் நான் அதற்குமேல் என் விருப்பத்தை வைப்பதில்லை. தன் நண்பர்களின் நன்மையை விற்றுப் போடுபவர்களிடமும் நான் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. யார் அந்த நபராக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. என் இருதயத்தை உடைப்பவர்கள் யாராயினும் என்னிடமிருந்து இரண்டாம் முறை கருணையைப் பெற முடியாது என்பதை நான் உங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும். மேலும் எனக்கு உண்மையாக இருப்பவர்களோ என் இருதயத்தில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

முந்தைய: கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்

அடுத்த: நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக