அத்தியாயம் 24

காலம் சமீபமாயிருக்கிறது. விழித்திருங்கள்! சகல பரிசுத்தவான்களே! நான் உங்களிடம் பேசுவேன், மேலும், கேட்கிற அனைவரும் விழித்துக் கொள்வார்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் விசுவசித்த தேவன் நானே. இன்று, நான் மாம்சமாகி உங்களின் கண் முன் வந்திருக்கிறேன், இவ்வாறு யார் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், எனக்காக எந்தவொரு விலைக்கிரயத்தையும் கொடுக்க யார் தயாராக இருக்கிறார்கள், யார் என் வார்த்தைகளை உண்மையாகக் கேட்கிறார்கள், மற்றும் யார் சத்தியத்தைக் கடைபிடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தப்படுகிறது. நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதால்—அந்தகாரத்தில் மறைந்திருக்கும் மனிதனின் இரகசியங்கள் அனைத்தையும் என்னால் பார்க்க முடியும், யார் உண்மையில் என்னை விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், யார் என்னை எதிர்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அனைத்தையும் கவனிக்கிறேன்.

இப்போது, கூடிய விரைவில், என் இருதயத்தைப் பின்தொடரும் ஒரு ஜனக்கூட்டத்தை உருவாக்க நான் விரும்புகிறேன், அவர்கள் என் பாரங்களைக் கருத்தில் கொள்ளக் கூடிய ஜனக்கூட்டம் ஆவார்கள். இருப்பினும், என் திருச்சபையைச் சுத்திகரிப்பது மற்றும் தூய்மையாக்குவதிலிருந்து என்னால் விலகி இருக்க முடியாது; திருச்சபை தான் என் இருதயம். என் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதிலிருந்து உங்களைத் தடுக்கும் பொல்லாப்பான ஜனங்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன். ஏனெனில், என்னை உண்மையாகவே விரும்பாத வேறு சில ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் வஞ்சகம் நிறைந்தவர்கள், அவர்களின் உண்மையான இருதயத்துடன் அவர்கள் என்னை நெருங்க மாட்டார்கள்; அவர்கள் பொல்லாப்பு மிக்கவர்கள், மேலும், அவர்கள் என் சித்தத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கும் ஜனங்கள்; அவர்கள் சத்தியத்தைக் கடைபிடிக்கும் ஜனங்கள் அல்ல. இந்த ஜனங்கள் சுய நீதி மற்றும் அகந்தையால் நிறைந்துள்ளனர், அவர்கள் பெருமளவில் லட்சியம் கொண்டவர்கள், அவர்கள் பேசும் வார்த்தைகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், இரகசியமாக அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றுவதில்லை. இந்தப் பொல்லாப்புமிக்க ஜனங்கள் துண்டிக்கப்பட்டு, முழுமையாக அழிக்கப்படுவர்; அவர்கள் பேரழிவின் மத்தியில் வாடுவார்கள். என் இருதயத்திற்கு ஏற்ற பாதையில் உங்களின் கால்களை வைக்க உங்களுக்கு நினைவூட்டவும், எச்சரிக்கவும் இந்த வார்த்தைகள் உள்ளன. எப்போதும் உங்களின் ஆவிக்குத் திரும்புங்கள், ஏனெனில், முழு மனதுடன் என்னை நேசிப்பவர்களை நானும் நேசிக்கிறேன். நீங்கள் என்னை நெருங்கி வருகிறீர்கள் என்பதால், நான் உங்களைப் பாதுகாத்து, அந்தப் பொல்லாப்பு மிக்கவர்களிடமிருந்து உங்களை விலக்கி வைப்பேன்; நான் என் வீட்டில் உங்களை உறுதியாக நிற்கும்படி செய்து, இறுதி வரை உங்களைப் பாதுகாப்பேன்.

முந்தைய: அத்தியாயம் 23

அடுத்த: அத்தியாயம் 25

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக