அத்தியாயம் 40

நீங்கள் ஏன் இவ்வளவு மந்த புத்தியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் மிகவும் உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறீர்கள்? பல நினைவூட்டல்கள் உங்களை விழிக்கச் செய்யவில்லை, மேலும் இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. என் குமாரர்களை இப்படிப் பார்க்க எனக்கு உண்மையில் மனம் இல்லை. இதை என் இருதயம் எப்படித் தாங்கிக் கொள்ளும்? ஆ! நான் என் சொந்த கரத்தால் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். என் வேகம் தொடர்ந்து அதிகரிக்கிறது. எனது குமாரர்களே! சீக்கிரம் எழுந்து என்னுடன் ஒத்துழையுங்கள். இப்போது எனக்காகத் தங்களைத் தாங்களே உண்மையாக அர்ப்பணிப்பவன் யார்? குறை சொல்லும் வார்த்தையின்றி தங்களை முழுமையாக அர்ப்பணிக்க யாரால் கூடும்? நீங்கள் எப்போதும் உணர்ச்சியற்றவர்களாகவும் மந்த புத்தியுள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள்! எத்தனை பேரால் என் உணர்வுகளின் மீது அக்கறைகொள்ள முடிகிறது, மேலும் என் வார்த்தைகளில் உள்ள ஆவியை யாரால் உண்மையில் புரிந்து கொள்ள முடியும்? என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஆவலுடன் காத்திருப்பதும் நம்பிக்கையுடன் இருப்பதும் மட்டுமே; உங்களது ஒவ்வொரு அசைவும் என் மனதைத் திருப்திப்படுத்த முடியாது என்பதைக் கண்ட பின்பு, என்னால் என்ன சொல்ல முடியும்? எனது குமாரர்களே! இன்று உங்கள் பிதாவானவர் செய்யும் அனைத்தும் தம்முடைய குமாரர்களுக்காகத்தான் ஆகும். ஏன் என் குமாரர்களால் என் இருதயத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை, ஏன் என் குமாரர்கள், தங்கள் பிதாவானவராய் இருக்கிற என்னை எப்போதும் கவலையடையச் செய்கிறார்கள்? என் குமாரர்கள் எப்போது வளர்ந்து, என்னைக் கவலையடையச் செய்யாமல், அவர்களைப் பற்றி நான் நிம்மதியாக இருக்க அனுமதிப்பார்கள்? என் குமாரர்கள் எப்போது சுதந்திரமாக வாழவும், எழுந்து நிற்கவும், தங்கள் பிதாவின் தோள்களில் உள்ள பாரத்தை இலகுவாக்கவும் கூடியவர்களாவார்கள்? நான் என் குமாரர்களுக்காக அமைதியாகக் கண்ணீர் சிந்தினேன், மற்றும் எனக்குப் பிரியமானவர்களாகிய என் குமாரர்களை இரட்சிக்கவும் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முழுமையடையச் செய்யும் எல்லாவற்றையும் செய்தேன். எனக்கு வேறு வழியில்லை.

என்னுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறி, உங்கள் கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. என் இருதயத்தின் மீது உங்களால் ஏன் அக்கறை கொள்ள முடியவில்லை? ஏன்? ஏன்? இதுவரைக்கும், என் இருதயத்தைத் திருப்திபடுத்துகிற எத்தனை விஷயங்களை நீ செய்திருக்கிறாய், திருச்சபைக்கு ஊட்டமளிக்கும் மற்றும் போஷாக்கு அளிக்கும் எத்தனை விஷயங்களை நீ செய்திருக்கிறாய்? இவற்றை நீ எண்ணிப் பார்த்திருக்கிறாயா? இதைக் கவனமாக சிந்தி; கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சத்தியத்தின் ஒரு துளியைக் கூட விட்டு விடாதே. சாராம்சத்தை அலட்சியப்படுத்திவிட்டு, தோற்றங்களில் மட்டும் உன்னால் கவனம் செலுத்த முடியாது. எல்லா நேரங்களிலும், உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் செயலும், மற்றும் உங்கள் ஒவ்வொரு அசைவும் கிறிஸ்துவின் இருக்கைக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறதா என்பதையும், நீ ஒரு புதிய நபரின் சாயலாக—பிரதிபலிப்பதில் அல்ல, மாறாக வாழ்வின் வெளிப்பாட்டுடன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிற சாயலாக மறுரூபமடைந்திருக்கிறாயா என்பதையும் நீ சோதித்து அறிய வேண்டும். உன்னுடைய வாழ்க்கையைத் தாமதப்படுத்தாதே, இதனால் நீ இழப்புகளைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம். இந்தச் சூழ்நிலையை விரைந்து சரிசெய்து, என் இருதயத்தைத் திருப்திப்படுத்தி, நடத்தையைக் குறித்த கொள்கைகளை மனதில் வைத்துக் கொள்: நீதியுடனும் நேர்மையுடனும் காரியங்களைச் செய்து, என் இருதயத்தைத் திருப்திப்படுத்து. அலட்சியமாக இருக்காதே. உன்னால் இதை நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா?

முந்தைய: அத்தியாயம் 39

அடுத்த: அத்தியாயம் 41

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக