அத்தியாயம் 83

நானே சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை, எல்லா நிகழ்வுகளும் விஷயங்களும் எனது கட்டுப்பாட்டில் இருப்பதையும் நீங்கள் அறியவில்லை! எல்லாம் என்னாலேயே ஸ்தாபிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதன் அர்த்தம் என்ன? ஒவ்வொருவரின் ஆசீர்வாதங்களோ அல்லது துரதிர்ஷ்டங்களோ எனது நிறைவேற்றத்தையும் எனது செயல்களையும் பொறுத்தது. மனிதன் என்ன செய்ய முடியும்? மனிதன் சிந்திப்பதன் மூலம் என்ன செய்து முடிக்க முடியும்? இந்தக் கடைசி காலத்தில், இந்த ஒழுக்கக்கேடான காலத்தில், சாத்தான் குறிப்பிட்ட அளவு கெடுத்து விட்ட இந்த அந்தகார உலகில், எனது சித்தத்திற்கு ஏற்ப ஒரு சிலரே இருப்பது என்ன? இன்றோ, நேற்றோ, வருங்காலமோ எதுவாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்க்கையும் என்னால் தீர்மானிக்கப்படுகின்றன. இவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றாலும் அல்லது துரதிர்ஷ்டங்களை அனுபவித்தாலும், இவர்கள் என்னால் நேசிக்கப்பட்டாலும் அல்லது வெறுக்கப்பட்டாலும், எல்லாவற்றையும் சரியாக நான் ஒரே வீச்சில் தீர்மானித்தேன். உன்னுடைய அடிகள் சுயமாகத் தீர்மானிக்கப்பட்டவை என்றும், உன்னுடைய விதி உன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் உறுதியுடன் சொல்ல உங்களில் துணிபவன் யார்? அப்படிச் சொல்லத் துணிச்சல் உள்ளவன் யார்? அப்படி எதிர்க்கத் துணிச்சல் உள்ளவன் யார்? எனக்குப் பயப்படாதவன் யார்? இருதயத்தில் எனக்குக் கீழ்ப்படியாதவன் யார்? அவர்கள் விருப்பம் போல் செயல்படத் துணிபவர் யார்? நான் அவர்களை அந்த இடத்திலேயே சிட்சிப்பேன், மேலும் மனுக்குலத்தின் மீது நிச்சயமாக இரக்கம் காட்டவோ அல்லது மேற்கொண்டு எந்த இரட்சிப்பை வழங்கவோ மாட்டேன். இந்த முறை—அதாவது, நீங்கள் எனது நாமத்தை ஏற்றுக்கொண்ட தருணம்தான்—நான் மனுக்குலத்தின் மீது தயவு செய்யும் கடைசி முறையாகும். அதாவது, இவர்களின் ஆசீர்வாதங்கள் நித்தியமானதாக இல்லாவிட்டாலும், எனது கிருபையை மிகுந்த அளவில் அனுபவித்த மனுக்குலத்தின் ஒரு பகுதியை நான் தெரிந்தெடுத்துள்ளேன்; எனவே, நீ நித்தியமாக ஆசீர்வதிக்கப்படுவாய் என்று முன்குறிக்கப்படாவிட்டாலும், நீ தவறாக நடத்தப்படுவதை இது விளைவிக்காது, மேலும் நேரடியாகத் துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பவர்களை விட நீ மிகவும் மேலானவன்.

உண்மையாகவே, எனது நியாயத்தீர்ப்பு ஏற்கனவே ஓர் உச்சத்தை அடைந்துள்ளது, மேலும் புதுமையான எல்லைக்குள் நுழைகிறது. எனது நியாயத்தீர்ப்பு ஒவ்வொருவரின் மீதும் உள்ளது, இப்போது அது ஒரு கோபமுள்ள நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. கடந்த காலத்தில் அது ஒரு மகத்துவமுள்ள நியாயத்தீர்ப்பு, ஆனால் இப்போதோ அது மிகவும் வித்தியாசமானது. கடந்த காலத்தில், எனது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுவதை எதிர்கொள்ளும் வரை ஜனங்கள் கொஞ்சமும் பயப்படவில்லை; இருந்தும், இப்போது, அவர்கள் ஒரே ஒரு வார்த்தையைக் கேட்டவுடன், அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். நான் வாயைத் திறக்கும்போது தான் சிலர் பயப்படுவார்கள். எனது குரல் வெளிப்படும்போதே, நான் பேசத் தொடங்கும் போதே, என்ன செய்வது என்று தெரியாத அளவுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள், அப்பொழுது அவர்கள் நிலத்தில் உள்ள ஒரு குழிக்குள் தங்களை ஒளித்துக் கொள்ள அல்லது இருண்ட மூலைகளில் மறைந்துக் கொள்ள விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொல்லாத ஆவிகளால் பீடிக்கப்பட்டிருப்பதால் அவர்களை இரட்சிக்க முடியாது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தையும் ஆதிகால சர்ப்பத்தையும் நான் நியாயந்தீர்க்கும்போது, அவர்கள் கோழையாகவும், மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்று கூடப் பயப்படுகிறார்கள்; உண்மையில், அவர்கள் அந்தகாரத்தில் பிறந்த சாத்தானின் சந்ததியினர்.

நான் அடிக்கடி “முன்குறித்தல் மற்றும் தெரிந்தெடுத்தல்” என்ற வார்த்தைகளை உச்சரிப்பேன். அவை சரியாக எதைக் குறிக்கின்றன? நான் எவ்வாறு முன்குறித்து தெரிந்து கொள்வது? முன்குறிக்கப்பட்ட மற்றும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவராக ஏன் ஒருவர் இருக்கக் கூடாது? இதை உங்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? இந்த விஷயங்களுக்கு என்னிடமிருந்து சில தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது, மேலும் அவற்றுக்கு நான் உங்களிடம் நேரடியாகப் பேசுவதும் தேவைப்படுகிறது. இந்த விஷயங்களை நான் உங்களுக்குள் வெளிப்படுத்தினால், பின்னர் அது சாத்தானால் கொடுக்கப்பட்ட சிந்தனை என்று மதியீனர்கள் தவறாக நம்புவார்கள்! நான் அநியாயமாக நிந்திக்கப்படுவேன்! இப்போது நான் எதையும் அடக்கி வைக்காமல் அப்பட்டமாகப் பேசப் போகிறேன்: நான் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, முதன்முதலாக மனுக்குலத்திற்குத் தேவையான பொருட்களைச் (பூக்கள், புல், மரங்கள், மரம், மலைகள், ஆறுகள், ஏரிகள், நிலம் மற்றும் பெருங்கடல், அனைத்து வகையான பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள்; சிலது மனிதர்கள் சாப்பிடுவதற்கும், சிலது மனிதர்கள் பார்த்து ரசிப்பதற்காகவும்) சிருஷ்டித்தேன். பல்வேறு பகுதிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான தானியங்கள் மனித இனத்திற்காகச் சிருஷ்டிக்கப்பட்டன; இவை அனைத்தையும் உருவாக்கிய பிறகு தான் நான் மனிதர்களை உருவாக்கத் தொடங்கினேன். இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர்: முதலாவது நான் தெரிந்துகொண்டு முன்குறித்தவர்கள்; இரண்டாவது சாத்தானின் குணாதிசயங்களைக் கொண்டவர்கள், மேலும் இந்த வகையானவர்கள் நான் உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு முன்பே உண்டாக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் சாத்தானால் முழுவதுமாக சீர்கெடுக்கப்பட்டுவிட்டதால், நான் அவர்களைக் கைவிட்டுவிட்டேன். நான் பின்னர் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் முன்குறிக்கப்பட்ட ஒரு வகையினரை உருவாக்கினேன், அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவுகளில் எனது பண்புகளைக் கொண்டுள்ளனர்; எனவே, இன்று என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் எனது பண்புகளை வெவ்வேறு அளவுகளில் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இன்னும் எனக்குச் சொந்தமானவர்களே; ஒவ்வொரு படியும் எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நேர்மையானவன் ராஜ்யத்தில் ஆட்சி செய்வான், ஏனென்றால் இது என்னால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகும். மாறுபாடுள்ளவர்களும், வஞ்சகமுள்ளவர்களும் ஒருபோதும் நேர்மையுள்ளவர்களாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் சாத்தானின் இனங்கள் மற்றும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்; அவர்கள் அதனுடைய சேவகர்கள் மற்றும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அதனுடைய கட்டளையின் கீழ் இருக்கிறார்கள். இருப்பினும், இவை அனைத்தின் நோக்கமும் எனது சித்தத்தை நிறைவேற்றுவதாகும். உங்கள் யூகத்தைத் தவிர்க்கும் வகையில் நான் அதைத் தெளிவாக்கி இருக்கிறேன். யாரை நான் பரிபூரணமாக்குகிறேனோ, அவர்களை நான் பராமரித்துப் பாதுகாப்பேன்; நான் யாரை வெறுத்து ஒதுக்குகிறேனோ, அவர்களுடைய ஊழியம் முடிந்ததும், அவர்கள் எனது இடத்தை விட்டு வெளியேறுவார்கள். இவர்களைப் பற்றிப் பேசப்படுகையில், நான் கோபமடைகிறேன்; அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையிலேயே, நான் அவர்களை உடனே ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஆயினும், நான் எனது செய்கைகளைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன்; எனது செய்கைகளிலும் பேச்சிலும் நான் அளவிடப்படுகிறேன். நான் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி உலகத்தை ஒடுக்க முடியும், ஆனால் நான் முன்குறித்தவர்கள் விதிவிலக்கு; அமைதியான பிறகு, நான் உலகத்தை எனது உள்ளங்கையில் ஏந்த முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறேன். ஜனங்களால் தாங்க முடியாத அளவுக்கு உலகம் சீர்கெட்டு இருப்பதை நான் பார்க்கும்போது, நான் அதை உடனடியாக அழித்து விடுவேன். வெறுமனே ஒரு வார்த்தையில் என்னால் அதைச் செய்ய முடியாதா?

நானே நடைமுறைத் தேவன்; நான் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையோ அற்புதங்களையோ செய்வதில்லை—ஆனால் என்னுடைய அற்புதமான கிரியைகள் எங்கும் உள்ளன. முன்னோக்கி இருக்கும் பாதை ஒப்பிடமுடியாத அளவிற்குப் பிரகாசமாக மாறும். நான் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அடியும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்டும் பாதையாகவும் எனது நிர்வாகத் திட்டமாகவும் இருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில், இந்த வெளிப்பாடுகள் இன்னும் அதிக அளவாகும் மற்றும் பெரிய அளவில் தெளிவாகும். ஆயிர வருட அரசாட்சியிலும்—அதிசீக்கிரத்திலும்—நீங்கள் என்னுடைய வெளிப்பாடுகளின்படியும் எனது படிகளைப் பின்பற்றியும் முன்னேற வேண்டும். அனைத்தும் ஸ்தாபிக்கப்பட்டும் அனைத்தும் ஆயத்தமாக்கப்பட்டும் உள்ளன; ஆசீர்வதிக்கப்பட்டவர்களிடையே நித்திய ஆசீர்வாதங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன, அதே சமயம் தொல்லை ஏற்படுத்துபவர்களுக்கு நித்திய சிட்சை காத்திருக்கிறது. எனது இரகசியங்கள் உங்களுக்கு மிக அதிகமானவை; எனக்கு எளிமையான வார்த்தைகளாக இருப்பது உங்களுக்கு மிகவும் கடினமானவையாக இருக்கின்றன. எனவே, நீங்கள் மிகவும் குறைவாகப் புரிந்து கொள்வதால், மேலும் நான் ஒவ்வொரு வார்த்தையையும் விளக்க வேண்டியிருப்பதால் நான் மீண்டும் மீண்டும் பேசுகிறேன். இருப்பினும், அதிகம் கவலைப்பட வேண்டாம்; எனது கிரியைக்கு ஏற்ப நான் உங்களிடம் பேசுவேன்.

முந்தைய: அத்தியாயம் 82

அடுத்த: அத்தியாயம் 84

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக