அத்தியாயம் 44

நான் நீதியுள்ளவர், நான் நம்பத்தக்கவர், நான் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆராய்ந்து அறியும் தேவன்! யார் உண்மையானவர் யார் பொய்யானவர் என்பதை நான் உடனே வெளிப்படுத்துவேன். கவலைப்பட வேண்டாம்; எல்லாக் காரியங்களும் என் நேரத்திற்கு ஏற்பச் செயல்படுகின்றன. யார் என்னை உண்மையாக விரும்புகிறார்கள், யார் விரும்பவில்லை என்பதை நான் ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்வேன். நீங்கள் என் சமூகத்தில் வரும்போது, போஜனம் பண்ணவும், பானம் பண்ணவும் மற்றும் என்னிடம் நெருங்கி வரவும் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், நானே என் கிரியையைச் செய்வேன். துரிதமான முடிவுகளுக்காக மிகவும் கவலைப்பட வேண்டாம்; எனது கிரியை எல்லாம் உடனடியாக நிறைவேற்றக் கூடிய ஒன்றல்ல. அதற்குள்ளாக என் படிகளும் என் ஞானமும் உள்ளன, அதனால்தான் என் ஞானம் வெளிப்படுத்தக்கூடியதாய் உள்ளது. தீமைக்கான தண்டனையும் நன்மைக்கான பலனும் என் கரங்களால் செய்யப்படுவதை நீங்கள் பார்க்க நான் அனுமதிப்பேன். நான் நிச்சயமாக யாருக்கும் பாரபட்சம் காண்பிக்க மாட்டேன். என்னை உண்மையாக நேசிப்பவனே, நான் உன்னை உண்மையாக நேசிப்பேன்: என்னை உண்மையாக நேசிக்காதவர்களைப் பொறுத்தவரை, என் கோபம் எப்போதும் அவர்களுடன் இருக்கும், அதனால் அவர்கள் நான் உண்மையான தேவன் என்பதையும், மனிதனுடைய உள்ளான இருதயத்தை ஆராய்கிற தேவன் என்பதையும் அவர்கள் நித்திய காலத்திற்கும் நினைவில் கொள்வார்கள். மற்றவர்களின் முகங்களுக்கு முன்பாக ஒரு விதமாகவும், அவர்களின் முதுகுக்குப் பின்பாக வேறொரு விதமாகவும் நடந்து கொள்ளாதே; நீ செய்யும் அனைத்தையும் நான் தெளிவாகப் பார்க்கிறேன், நீ மற்றவர்களை முட்டாளாக்கினாலும், உன்னால் என்னை முட்டாளாக்க முடியாது, நான் அதை எல்லாம் தெளிவாகப் பார்க்கிறேன், உன்னால் எதையும் மறைக்க முடியாது; எல்லாம் என்னுடைய கரங்களுக்குள் உள்ளன. உன்னுடைய சின்னச்சின்ன கணக்கீடுகள் உனக்கு நன்மைகளை அளிப்பதால், நீயே உன்னை மிகவும் புத்திசாலி என்று நினைக்க வேண்டாம். நான் உனக்குச் சொல்லுகிறேன்: மனிதன் பல திட்டங்களைப் போட்டாலும், அவை ஆயிரக்கணக்கில் அல்லது பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், முடிவில் அவர்களால் என் உள்ளங்கையிலிருந்து தப்பிக்க முடியாது. எல்லாக் காரியங்களும் எல்லாப் பொருட்களும் என் கரங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஒரு தனி நபரை ஒருபோதும் பொருட்படுத்தாதே! என்னிலிருந்து விலகி இருக்கவோ, மறைந்து கொள்ளவோ முயற்சிக்காதே, இனிமையான வார்த்தைகளால் ஏமாற்றவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்காதே. என் மகிமை பொருந்திய முகமும், என் கோபமும், என் நியாயத்தீர்ப்பும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நீ இன்னும் காணவில்லையா? யாரெல்லாம் என்னை உண்மையாக விரும்பவில்லையோ, அவர்களை நான் இரக்கமின்றி உடனடியாக நியாயந்தீர்ப்பேன். என் இரக்கம் முடிவுக்கு வந்துவிட்டது; இனி எதுவும் மிச்சமில்லை. இனி ஒருபோதும் மாயக்காரனாக இருக்காதே, உன்னுடைய காட்டுத்தனமான, பொறுப்பற்ற வழிகளை நிறுத்திவிடு.

என் மகனே, கவனமாயிரு; என் சமூகத்தில் அதிக நேரம் செலவிடு, நான் உன்னைப் பொறுப்பெடுத்துக் கொள்ளுவேன். பயப்படாதே, என்னுடைய கூர்மையான, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைக் கொண்டு வந்து, என் சித்தத்தின்படி, கடைசிவரை சாத்தானுடன் யுத்தம் செய். நான் உன்னைப் பாதுகாப்பேன், எதற்கும் கவலைப்படாதே. மறைக்கப்பட்ட எல்லாக் காரியங்களும் திறக்கப்பட்டு, வெளிப்படுத்தப்படும். நான் இரக்கமின்றி எல்லா இருளையும் ஒளியூட்டும் வெளிச்சம் தரும் சூரியன். என் நியாயத்தீர்ப்பு முழுவதுமாக வந்துவிட்டது; திருச்சபை ஒரு போர்க்களம். நீங்கள் அனைவரும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு, உங்கள் முழுமையையும் இறுதியான, தீர்க்கமான யுத்தத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்; எனக்கான நல்ல, வெற்றிகரமான போராட்டத்தை நீ போராடும்படி நான் உன்னை நிச்சயமாகப் பாதுகாப்பேன்.

கவனமாக இருங்கள், இப்போதெல்லாம் ஜனங்களுடைய இருதயங்கள் வஞ்சகமாகவும், கணிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன, மற்றவர்களின் நம்பிக்கையை வெல்ல அவர்களிடம் எந்த வழியும் இல்லை. நான் மட்டுமே முற்றிலும் உங்களுக்காக இருக்கிறேன். என்னிடத்தில் எந்த வஞ்சகமும் இல்லை; என் மீது அப்படியே சாய்ந்து கொள்ளுங்கள்! முடிவான, தீர்க்கமான யுத்தத்தில் என் குமாரர்கள் நிச்சயமாக வெற்றியடைவார்கள், மேலும் அதிக நிச்சயமாக சாத்தான் மரணப் போராட்டத்திற்காக வெளியே வருவான். பயப்பட வேண்டாம்! நானே உன்னுடைய வல்லமை, நானே உனக்கு எல்லாம் ஆனவர். காரியங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டாம், உன்னால் பல எண்ணங்களைச் சமாளிக்க முடியாது. நான் முன்பே சொல்லியிருக்கிறேன், நான் இனி உங்களை இடையில் வற்புறுத்த மாட்டேன், ஏனென்றால், நேரம் மிகவும் அவசரமாக உள்ளது. உங்கள் காதுகளைப் பிடித்து, உங்களை ஒவ்வொரு திருப்பத்திலும் எச்சரிக்க எனக்கு இனி நேரமில்லை, அது சாத்தியமில்லை! யுத்தத்திற்கான உங்கள் ஆயத்தங்களை நீங்கள் முடித்துக் கொள்ளுங்கள். உனக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்; எல்லாமே என் கரங்களுக்குள் இருக்கின்றன. இது மரணத்திற்கான ஒரு யுத்தம், இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ அழிவு உறுதி. ஆனால் நீ இதில் தெளிவாக இருக்க வேண்டும்: நான் என்றென்றும் ஜெயமுள்ளவராகவும், தோற்கடிக்கப்படாதவராகவும் இருக்கிறேன், சாத்தான் நிச்சயமாக அழிந்து போவான். இதுவே எனது அணுகுமுறை, எனது கிரியை, எனது சித்தம் மற்றும் எனது திட்டமாகும்!

முடிந்தது! எல்லாம் முடிந்தது! சோர்வான இருதயத்துடனோ பயப்படவோ வேண்டாம். நான் உன்னுடன், நீ என்னுடன் என்றென்றும் ராஜாக்களாக இருப்போம்! எனது வார்த்தைகள், ஒருமுறை பேசப்பட்டவுடன், ஒருபோதும் மாறாது, நிகழ்வுகள் விரைவாக உங்கள் மீது வரும். கவனமாக இருங்கள்! ஒவ்வொரு வரியையும் நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும்; என் வார்த்தைகளைக் குறித்து இனி ஒருபோதும் தெளிவற்று இருக்க வேண்டாம். நீங்கள் அவற்றைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்! நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்—உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என் சமூகத்தில் செலவிடுங்கள்.

முந்தைய: அத்தியாயம் 43

அடுத்த: அத்தியாயம் 45

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக