அத்தியாயம் 42

இன்றைய பேச்சுக்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று ஜனங்கள் கவனித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. சிலபேர் கொஞ்சம் பார்த்திருக்கலாம், ஆனால் உறுதியாக சொல்லத் துணிய மாட்டார்கள். ஒருவேளை மற்றவர்கள் எதையும் உணராது இருக்கலாம். மாதத்தின் பன்னிரண்டாம் தேதிக்கும் பதினைந்தாம் தேதிக்கும் இடையில் தேவனின் பேச்சுக்களில் ஏன் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது? இதை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் பார்வை என்ன? தேவனின் எல்லாப் பேச்சுக்களிலிருந்தும் நீங்கள் எதையாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா? ஏப்ரல் இரண்டாம் தேதிக்கும் மே பதினைந்தாம் தேதிக்கும் இடையே செய்யப்பட்ட முக்கிய கிரியை என்ன? இன்று ஜனங்கள் ஏன் துப்பு துலங்காமல், தலையில் கட்டையால் அடித்ததை போல் நிலைதடுமாறியிருக்கிறார்கள்? இன்று, “இராஜ்யத்தின் ஜனங்களின் ஊழல்கள்” என்ற தலைப்பில் செய்திப் பத்திகள் ஏன் இல்லை? ஏப்ரல் இரண்டாவது மற்றும் நான்காம் தேதிகளில், தேவன் மனுஷரின் நிலையைச் சுட்டிக்காட்டவில்லை; அதேபோல், இன்றைக்குப் பிறகு பல நாட்களில் அவர் மனுஷரின் நிலையைச் சுட்டிக் காட்டவில்லை—இது ஏன்? இங்கே தீர்க்கப்படாத சில புதிர்கள் நிச்சயமாக உள்ளன—அதில் ஏன் 180 டிகிரி திருப்பம் ஏற்பட்டது? தேவன் ஏன் இவ்வாறு பேசினார் என்பதை முதலில் கொஞ்சம் பேசுவோம். தேவனுடைய முதல் வார்த்தைகளைப் பார்ப்போம், அதில் அவர் “புதிய கிரியை தொடங்கிய உடனேயே” என்று சொல்லி நேரத்தை வீணடிக்கவில்லை. இந்த வாக்கியம் உனக்கு முதலில் தேவனின் கிரியை ஒரு புதிய தொடக்கத்தில் நுழைந்துள்ளது என்பதையும், அவர் மீண்டும் ஒருமுறை புதிய கிரியையைத் தொடங்கியுள்ளார் என்பதையும் உணர்த்துகிறது. இது சிட்சிப்பு முடிவுக்கு வருவதைக் காட்டுகிறது; சிட்சிப்பின் உச்சக்கட்டம் ஏற்கனவே வந்துவிட்டது என்று கூறலாம் எனவே நீங்கள் சிட்சிப்பு காலத்தின் கிரியையைச் சரியாக அனுபவிக்க பெருவாரியான உங்கள் நேரத்தைப் பயன்படுத்த வேண்டும், அதனால் நீங்கள் பின்தங்கிவிட மாட்டீர்கள் மற்றும் கைவிடப்பட மாட்டீர்கள். இவை அனைத்தும் மனுஷரின் காரியமாகும், மேலும் ஒத்துழைக்க மனுஷன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். சிட்சை முழுவதுமாக வெளியில் அனுப்பப்படும் போது, தேவன் தமது கிரியையின் அடுத்த பகுதியைத் தொடங்க ஆரம்பிக்கிறார், ஏனென்றால் தேவன் கூறுகிறார், “… அதனால் மனுஷர்கள் மத்தியில் எனது கிரியையைத் தொடர்ந்து செய்து வருகிறேன்…. இந்த நேரத்தில், என் இருதயம் மிகுந்த மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது, ஏனென்றால் நான் ஜனங்களில் ஒரு பகுதியினரை ஆதாயப்படுத்தியிருக்கிறேன், ஆகவே எனது ‘தொழில்’ பின்னடைந்த நிலையில் இல்லை; அதில் இனி வெற்று வார்த்தைகள் இருக்காது”. கடந்த காலங்களில், தேவனின் அழுத்தமான சித்தத்தை ஜனங்கள் அவருடைய வார்த்தைகளில் பார்த்தார்கள்—இதில் பொய்மை இல்லை—இன்று தேவன் தமது கிரியையை அதிக வேகத்துடன் செய்கிறார். மனுஷனைப் பொறுத்தவரை, இது தேவனின் தேவைகளுக்கு முற்றிலும் இணங்குவதாகத் தெரியவில்லை—ஆனால் தேவனைப் பொறுத்தவரை, அவருடைய கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது. ஜனங்களின் எண்ணங்கள் மிகவும் சுருங்கியிருப்பதால், விஷயங்களைப் பற்றிய அவர்களின் பார்வை பெரும்பாலும் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. ஜனங்கள் மிக அதிகமாக கோரிக்கைகளை வைக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள், ஆனால் தேவன் மனுஷனிடம் இவ்வளவு அதிகமான கோரிக்கைகளை வைப்பதில்லை, இதன் காரணமாக, தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான வேறுபாடு எவ்வளவு பெரியது என்பதைக் காணலாம். தேவன் செய்யும் எல்லாவற்றிலும் ஜனங்களின் எண்ணங்கள் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. தேவன் ஜனங்களிடம் அதிகமாக கோரிக்கைகளை வைக்கிறார் மற்றும் ஜனங்கள் அவற்றை நிறைவேற்ற இயலவில்லை என்பதாக இல்லை, ஆனால் ஜனங்கள் தேவனிடம் அதிகமான கோரிக்கைகளை வைக்கிறார்கள் மற்றும் தேவனால் அவற்றை நிறைவேற்ற இயலவில்லை என்பதாக இருக்கிறது. ஏனெனில், சிகிச்சையைத் தொடர்ந்து, பல ஆயிரம் ஆண்டுகளாக சாத்தானால் சீர்கேடு அடைந்த மனுக்குலத்திற்குப் பின்விளைவுகள் உள்ளன, ஆகவே ஜனங்கள் எப்போதும் தேவனிடம் இவ்வளவு அதிகமான கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள், மேலும் தேவன் மகிழ்ச்சியடையவில்லை என்ற ஆழ்ந்த பயத்தில் கொஞ்சமும் இரக்கப்படுவதில்லை. இப்படி, ஜனங்கள் பல விஷயங்களில் தங்கள் வேலையைச் செய்ய இயலாமல் இருக்கிறார்கள் என்பது அவர்கள் சுய-சிட்சைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளும் ஒரு வழியாகும்; அவர்கள் தங்கள் சொந்தச் செயல்களின் விளைவுகளைச் சுமக்கிறார்கள்—இது முற்றிலும் துன்பமாகும். ஜனங்கள் படும் கஷ்டங்களில், 99% க்கும் அதிகமானவை தேவனால் வெறுக்கப்படுகின்றன. அப்பட்டமாகச் சொல்வதானால், தேவனுக்காக யாரும் உண்மையிலேயே துன்பப்படவில்லை. ஜனங்கள் அனைவரும் தங்கள் சொந்தச் செயல்களின் விளைவுகளை சுமக்கிறார்கள்—மேலும் இந்தச் சிட்சையின் கட்டமானது, நிச்சயமாக, விதிவிலக்கல்ல; அது மனுஷனால் காய்ச்சப்பட்ட ஒரு கோப்பை கசப்பான திரவம், அதை அவனே தன் வாயில் எடுத்துக் குடிக்கிறான். ஏனெனில் தேவன் அவரது சிட்சையின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை, ஒரு பகுதி சபிக்கப்பட்டவர்கள் இருந்தாலும், இது சிட்சையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஜனங்களில் ஒரு பகுதியினர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. மனுஷனைப் பொறுத்தவரை, தேவனாகியவர் தாம் சொன்னதைக் காப்பாற்றாத தேவன் என்று தோன்றுகிறது. கவலைப்படவேண்டாம். இந்த வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம், ஆனால் எதிர்மறையாக இருக்க வேண்டாம். நான் பேசுவது மனுஷரின் துன்பத்துடன் கொஞ்சம் தொடர்பு கொண்டுள்ளது, இருப்பினும் நீங்கள் தேவனுடன் ஒரு நல்ல உறவை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவருக்கு அதிகப் “பரிசுகளைக்” கொடுக்க வேண்டும்—அது நிச்சயமாக அவரை மகிழ்ச்சியடையச் செய்யும். தேவன் தமக்குப் “பரிசுகளைக்” கொடுப்பவர்களை நேசிக்கிறார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த வார்த்தைகள் சரியா?

இப்போதைக்கு, உங்கள் எதிர்கால வாய்ப்புகளில் எவ்வளவை நீங்கள் ஒருபுறமாக ஒதுக்கி வைத்துள்ளீர்கள்? தேவனின் கிரியை விரைவில் முடிவடையும், எனவே ஏறக்குறைய உங்கள் எதிர்கால வாய்ப்புகள் அனைத்தையும் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும், சரிதானே? உங்களை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்: நீங்கள் எப்போதும் உயர்ந்து நிற்க விரும்புகிறீர்கள், உங்களை உயர்த்தி மற்றும் உங்களையே காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்—இது என்ன? இன்று, இன்னும்கூட ஜனங்களின் எதிர்கால வாய்ப்புகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்கள் உண்மையிலேயே துன்பக் கடலால் சூழப்பட்டு அதில் வாழ்ந்தால், அவர்கள் சிரமங்களின் புடமிடுதலுக்கு மத்தியில் அல்லது பல்வேறு சித்திரவதைக் கருவிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்தால், அல்லது எல்லா ஜனங்களாலும் நிராகரிக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் வாழும்போது, வானத்தை அண்ணாந்து பார்த்து ஆழமாக பெருமூச்சு விடும்போது, அத்தகைய நேரங்களில் அவர்கள் தங்கள் எண்ணங்களில், அவர்கள் ஒருவேளை, தங்கள் எதிர்கால வாய்ப்புகளை ஒருபுறம் ஒதுக்கி வைக்கலாம். இது ஏனென்றால், ஜனங்கள் நம்பிக்கையின்மைக்கு மத்தியில் மற்றொரு உலகக் கற்பனாவாதத்தைத் தேடுகிறார்கள், மேலும் வசதியான சூழ்நிலைகளில் யாரும் தங்கள் சொந்த அழகான கனவுகளைக் தேடுவதைக் கைவிடுவதில்லை. இது யதார்த்தமற்றதாக இருக்கலாம், ஆனால் இது ஜனங்களின் இருதயங்களில் இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வாழும்போது எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று இன்னும் விரும்புகிறீர்களா? நீங்கள் இன்னும் மாம்சத்தில் உங்கள் வடிவத்தை மாற்ற விரும்புகிறீர்களா? நீங்கள் அதே கருத்தில் இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது யதார்த்தமற்றது என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்—அத்தகைய எண்ணங்கள் வரம்பை விட அதிகமானதாகத் தோன்றுகின்றன. “உங்கள் வருங்கால வாய்ப்புகளை ஒரு புறமாக ஒதுக்கி வையுங்கள், மிகவும் யதார்த்தமாக இருங்கள்” என இதுபோன்ற விஷயங்களை ஜனங்கள் சொல்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணங்களை ஜனங்கள் கைவிட வேண்டும் என்று நீ கேட்கிறாய்—ஆனால் நீ எப்படி இருக்கிறாய்? நீயே ஆசீர்வாதங்களைத் தேடும்போது, ஜனங்களின் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணங்களை நீ மறுக்கிறாயா? மற்றவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதை நீ அனுமதிக்காமல், அதே நேரத்தில் ரகசியமாக நீ உனக்குள்ளே அவற்றைப் பற்றி நினைக்கிறாய்—உன்னை அப்படிச் செய்ய வைப்பது எது? ஒரு மோசடியா! நீ இப்படிச் செயல்படும்போது, உன் மனச்சாட்சி குற்றம் சாட்டப்படவில்லையா? உன் இருதயத்தில், நீ கடன்பட்டதாக உணரவில்லையா? நீ மோசடிக்காரன் இல்லையா? நீ மற்றவர்களின் இருதயங்களில் உள்ள வார்த்தைகளைத் தோண்டி எடுக்கிறாய், ஆனால் உனக்குச் சொந்தமாக உள்ளவர்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லை—நீ எப்படிப்பட்ட பிரயோஜனமில்லாத குப்பை! நீங்கள் பேசும்போது உங்கள் இருதயங்களில் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது—நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நிந்தனை செய்யப்பட மாட்டீர்களா? இது உங்கள் கண்ணியத்தைச் சீர்குலைக்கவில்லையா? உங்களுக்கு எது நல்லது என்று உண்மையில் உங்களுக்குத் தெரியவில்லை! நீங்கள் அனைவரும் எப்பொழுதும் மிஸ்டர் நாங்குவோ போல ஏமாற்றுக்காரர்களாக இருந்திருக்கிறீர்கள். “ஜனங்கள் அனைவரும் ‘தங்களை அர்ப்பணிக்க’ தயாராக உள்ளனர்” என்பதில் தேவன் “தங்களை அர்ப்பணிக்க” என்பதைச் சுற்றி மேற்கோள் குறிகளை வைத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. மனுஷரின் ஏமாற்றுத்தனம் எவ்வளவு தந்திரமானதாக இருந்தாலும்—அவன் முகத்தில் எதனையும் வெளிப்படுத்தாவிட்டாலும், அவன் முகம் சிவக்காவிட்டாலும், அவனது இருதயம் வேகமாக துடிக்காவிட்டாலும் தமது புறங்கையை அறிவதுபோல தேவன் மனுஷனை அறிவார்—தேவனின் கண்கள் பிரகாசமானவை, மனுஷன் தேவனின் பார்வையிலிருந்து தப்புவதற்கு எப்போதும் சிரமப்படுகிறான். தேவனுக்கு எக்ஸ்ரே பார்வை இருப்பது போலவும், மனுஷனின் உள்ளுறுப்புகளைப் பார்க்க முடிவது போலவும், பரிசோதனையின்றி மனுஷர்களைப் பார்த்து அவர்களின் ரத்த வகையைத் தீர்மானிக்க முடியும் என்பது போலவும் இது இருக்கிறது. தேவனின் ஞானம் இத்தகையது, அதை மனுஷனால் பாவனை செய்ய முடியாது. தேவன் கூறுவதுபோல, “நான் இவ்வளவு கிரியை செய்துள்ளேன், இருந்தும் ஜனங்களிடம் அதற்கான ஆதாரம் ஏன் இல்லை? நான் போதுமான முயற்சியை எடுக்கவில்லையா?” தேவனுடனான மனுஷனின் ஒத்துழைப்பு மிகவும் போதாதது, மேலும் மனுஷனுக்குள் எதிர்மறையானவை அதிகமாக உள்ளன என்று கூறலாம், மேலும் அரிதாகவே ஜனங்களிடம் எந்தவொரு நேர்மறைத் தன்மை உள்ளது. எப்போதாவது மட்டுமே அவர்கள் கொஞ்சம் நேர்மறைத் தன்மையுடன் இருக்கிறார்கள், ஆனால் அது மிகவும் கறைபடிந்துள்ளது. ஜனங்கள் தேவனை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது; அவர்களின் இருதயங்களில் பத்துக் கோடியில் ஒரே ஒரு பகுதி மட்டுமே தேவன் மீதான அன்பு இருப்பது போல் உள்ளது, அதிலும் 50% இன்னும் கறைபடிந்துள்ளது. அதனால்தான் தேவன், மனுஷரில் எந்த நிரூபணத்தையும் அவர் பெறவில்லை என்று கூறுகிறார். துல்லியமாக, மனுஷரின் கீழ்ப்படியாமையின் காரணமாகவே, தேவனின் கூற்றுகளின் தொனி மிகவும் இருதயமற்றதாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருக்கிறது. தேவன் மனுஷருடன் கடந்த காலங்களைப் பற்றிப் பேசாவிட்டாலும், தேவனுக்கு முன்பாக தாங்களைக் காட்டுவதற்காக ஜனங்கள் எப்போதும் நினைவுகூர விரும்புகிறார்கள், அவர்கள் எப்போதும் கடந்த காலங்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள்—இருப்பினும் தேவன் மனுஷனின் நேற்றைய தினத்தை இன்று போல் ஒருபோதும் நடத்துவதில்லை; மாறாக, அவர் இன்றைய ஜனங்களை இன்றைய நிலையில் அணுகுகிறார். இதுதான் தேவனின் அணுகுமுறை, மேலும் இதில், தேவன் மிகவும் நியாயமற்றவர் என்று எதிர்காலத்தில் ஜனங்கள் சொல்வதைத் தடுக்க தேவன் இந்த வார்த்தைகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். ஏனெனில், தேவன் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்வதில்லை, ஆனால் உண்மையான விஷயங்களை ஜனங்களுக்குச் சொல்கிறார் இல்லையென்றால் ஜனங்கள் உறுதியாக நிற்க இயலாது—ஏனென்றால், என்னவாயிருந்தாலும் மனுஷன் பலவீனமானவன். இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்: நீங்கள் கேட்கவும் ஒப்புக் கொடுக்கவும் தயாராக இருக்கிறீர்களா, மேலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

மேலே உள்ளது சம்பந்தம் இல்லாதது; பேசப்படுகிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. நீங்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் தேவன் வார்த்தைகளின் கிரியையைச் செய்ய வருகிறார், மேலும் அவர் சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் பற்றி பேச விரும்புகிறார். ஆயினும்கூட, நீங்கள் அவற்றைப் படிப்பீர்கள், இந்த வார்த்தைகளை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் அதைச் செய்வீர்களா? இன்றைய வார்த்தைகளில் தேவன் புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார் என்று சரியாகவே கூறப்பட்டது: தேவன் கிரியை செய்யும் முறை மாறப்போகிறது. அப்படி இருக்கும்போது, இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கவனம் செலுத்துவது நல்லது. இன்றைய பேச்சுக்கள் அனைத்தும் எதிர்கால விஷயங்களை முன்னறிவிப்பதாகக் கூறலாம்; இந்தப் பேச்சுக்கள் தேவன் தமது கிரியையின் அடுத்த கட்டத்துக்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்கிறார் என்பது பற்றியதாகும். திருச்சபையின் ஜனங்கள் மத்தியில் தேவன் தம்முடைய கிரியையை ஏறக்குறைய முடித்துவிட்டார், அதன் பின்னர் அவர் எல்லா ஜனங்களின் முன்னிலையிலும் கடுஞ்சினத்துடன் தோன்றுவார். தேவன் கூறுவது போல, “பூமியிலுள்ள ஜனங்கள் என் காரியங்களை அங்கீகரிக்கும்படி செய்வேன், மேலும் என் காரியங்கள் ‘நியாயசனத்தின்’ முன் நிரூபிக்கப்படும், இதனால் அவை பூமியெங்கும் உள்ள ஜனங்கள் மத்தியில் ஒப்புக் கொள்ளப்படும், அவர்கள் அனைவரும் ஒப்புக்கொடுப்பார்கள்.” இந்த வார்த்தைகளில் நீங்கள் எதையாவது பார்த்தீர்களா? தேவனுடைய கிரியையின் அடுத்த பகுதியின் சுருக்கம் இதில்தான் உள்ளது. முதலாவதாக, அரசியல் அதிகாரம் செலுத்துகின்ற அனைத்துக் காவல் நாய்களையும் தேவன் உண்மையாக நம்ப வைப்பார், மேலும் அவர் இனி ஒருபோதும் அந்தஸ்துக்காகப் போராட வேண்டியது இல்லாதபடி, இனி ஒருபோதும் சதித்திட்டங்கள் மற்றும் சூழ்ச்சிகளில் ஈடுபடாதபடி, அவர்களின் சொந்த விருப்பப்படி வரலாற்றின் கட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்வார். பூமியில் பல்வேறு பேரழிவுகளை எழுப்புவதன் மூலம் இந்தக் கிரியை தேவனின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இது தேவன் தோன்றுவார் என்பது போன்றது கிடையவே கிடையாது. இந்த நேரத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசம் இன்னும் அழுக்கு நிறைந்த நிலமாக இருக்கும், எனவே தேவன் தோன்ற மாட்டார், ஆனால் சிட்சையின் மூலம் மட்டுமே வெளிப்படுவார். தேவனின் நீதியுள்ள மனநிலை இப்படிப்பட்டதுதான், இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இந்த நேரத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பேரழிவை அனுபவிப்பார்கள், மேலும் இயற்கையாகவே, இதில் பூமியிலுள்ள ராஜ்யமும் (திருச்சபை) அடங்கும். இந்த நேரத்தில்தான் உண்மைகள் வெளிவருகின்றன, எனவே இது எல்லா ஜனங்களாலும் அனுபவிக்கப்படுகிறது, மேலும் யாரும் தப்பிக்க முடியாது. இது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது துல்லியமாக இந்தக் கிரியையின் கட்டத்தின் காரணமாகும், அதனால் தேவன் கூறுகிறார், “மாபெரும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நேரம் இது.” ஏனென்றால், எதிர்காலத்தில், பூமியில் திருச்சபை எதுவும் இருக்காது, மேலும் பேரழிவின் வருகையால், ஜனங்கள் தங்களுக்கு முன்னால் இருப்பதை பற்றி மட்டுமே சிந்திக்க முடியும், மற்ற அனைத்தையும் புறக்கணிப்பார்கள். மேலும் பேரழிவின் மத்தியில் தேவனை அனுபவிப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கும். இப்படியாக, இந்த அற்புதமான நேரத்தில் தேவனை முழு மனதுடன் நேசிக்கும்படி ஜனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இதனால் அவர்கள் வாய்ப்பை இழக்க மாட்டார்கள். இந்த உண்மை கடந்து செல்லும் போது, தேவன் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முற்றிலுமாக தோற்கடிப்பார், இதனால் தேவனுடைய ஜனங்களின் சாட்சியின் பணி முடிவுக்கு வந்திருக்கும்; அதற்குப் பிறகு, தேவன் அடுத்த கட்ட கிரியையைத் தொடங்குவார், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தை வீணாகச் செய்வார், இறுதியில் பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஜனங்களைச் சிலுவையில் தலைகீழாக ஆணியில் அறைவார், அதன் பிறகு அவர் முழு மனுகுலத்தையும் அழிப்பார்—இவைதான் தேவனின் எதிர்காலக் கிரியையின் கட்டங்கள். எனவே, இந்த அமைதியான சூழலில் நீங்கள் தேவனை நேசிக்க உங்களால் முடிந்ததைச் செய்ய முயல வேண்டும். எதிர்காலத்தில் தேவனை நேசிக்க உங்களுக்கு வாய்ப்புகள் இருக்காது, ஏனென்றால் ஜனங்களுக்கு மாம்சத்தில் தேவனை மட்டுமே நேசிக்க வாய்ப்பு உள்ளது; அவர்கள் வேறொரு உலகில் வாழும்போது, தேவனை நேசிப்பதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். இது சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களின் பொறுப்பு அல்லவா? ஆகவே, உங்கள் வாழ்நாளில் நீங்கள் எவ்வாறு தேவனை நேசிக்க வேண்டும்? இதைப் பற்றி நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா? தேவனை நேசிக்க நீ இறக்கும் வரை காத்திருக்கிறாயா? இது வெற்றுப் பேச்சு அல்லவா? இன்று, நீ ஏன் தேவனை நேசிப்பதைத் தொடரவில்லை? பணி மிகுதியில் இருக்கும்போது தேவனை நேசிப்பது தேவனின் மீது உண்மையான அன்பாக இருக்க முடியுமா? தேவனின் கிரியையின் இந்தக் கட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு ஏற்கனவே சாட்சியம் உள்ளது. இப்படியாக, மனுஷருக்கு எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; மனுஷன் தான் உயிருடன் இருக்கும் காலத்தில் தேவனை நேசிப்பதை தொடர வேண்டும் என்று கேட்கப்படுகிறான்—இதுவே முக்கியமானது. தேவனின் தேவைப்பாடுகள் அதிகமாக இல்லாததால், மேலும், அவரது இருதயத்தில் எரியும் பதற்றம் இருப்பதால், இந்தக் கிரியை முடிவதற்கு முன்பு அடுத்த கட்டக் கிரியையின் சுருக்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார், இது எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது; தேவன் தமது இருதயத்தில் பதற்றத்துடன் இல்லை என்றால், அவர் இந்த வார்த்தைகளை இவ்வளவு முன்கூட்டியே பேசுவாரா? நேரம் குறைவாக இருப்பதால்தான் தேவன் இவ்வாறு கிரியை செய்கிறார். உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் நேசிப்பது போல, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு மனதோடும், உங்கள் முழு பலத்தோடும் தேவனை நேசிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இது மிகவும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை அல்லவா? வாழ்க்கையின் அர்த்தத்தை வேறு எங்கு காண முடியும்? நீங்கள் மிகவும் கண்மூடித்தனமாக இருக்கிறீர்கள் இல்லையா? நீ தேவனை நேசிக்க விரும்புகிறாயா? தேவன் மனுஷரின் அன்புக்குத் தகுதியானவரா? ஜனங்கள் மனுஷரின் போற்றுதலுக்குத் தகுதியானவர்களா? எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீ முழுமையாக தைரியமாக தேவனை நேசி, தேவன் உனக்கு என்ன செய்வார் என்று பார். அவர் உன்னைக் கொல்வாரா என்று பார். மொத்தத்தில், தேவனுக்காக விஷயங்களை நகலெடுத்து எழுதுவதை விட தேவனை நேசிக்கும் காரியம் முக்கியமானது. நீ மிக முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும், இதனால் உனது வாழ்க்கையில் இன்னும் அதிகமாக மதிப்பு இருக்கும், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும், பின்னர் உனக்கான தேவனின் “வாக்கியத்திற்காக” நீ காத்திருக்க வேண்டும். உனது திட்டத்தில் தேவனை நேசிப்பது உள்ளதா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒவ்வொருவருடைய திட்டங்களும் தேவனால் நிறைவேற்றப்பட்டவையாக மாறவும், அவை அனைத்தும் யதார்த்தமாகவும் வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

முந்தைய: அத்தியாயம் 41

அடுத்த: அத்தியாயம் 44 மற்றும் 45

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக