அத்தியாயம் 19

பரிசுத்த ஆவியானவரின் கிரியை தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதனால், பரிசுத்த ஆவியானவர் கிரியைகளைச் செய்யும் ஒரு புது வழியினுள் தேவன் நம்மை மீண்டும் வழிநடத்தியுள்ளார், அதன் விளைவாக, சில ஜனங்கள் தவிர்க்க முடியாத வகையில் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு என்னிடம் புகாரளித்தனர். சிலர் என்னைத் தடுத்தார்கள் மற்றும் எதிர்த்தார்கள், மேலும், என்னை ஆராய்ந்தார்கள். இருப்பினும், நீங்கள் மனந்திரும்பி உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதற்காக நான் இன்னும் இரக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், தேவன் தாமே வெளிப்படையாகத் தோன்றியிருக்கிறார் என்பதாகும். எனது வார்த்தை மாறாது! நான் இரட்சிப்பது உன்னை என்பதால், நான் உன்னைப் பாதியிலேயே கைவிட விரும்பவில்லை. நீங்கள் சந்தேகங்களைச் சுமந்து கொண்டு வெறுங்கையுடன் திரும்ப விரும்புகிறீர்கள். உங்களில் சிலர் முன்னேறிச் செல்வதை நிறுத்தி விட்டீர்கள், அதே நேரத்தில் மற்றவர்கள் காத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மற்றவர்கள் நிலைமையைச் செயலற்ற முறையில் கையாள்கின்றனர், அதே நேரத்தில் சிலர் நடித்தலில் ஈடுபடுகின்றனர். நீ உண்மையாகவே உன் இருதயத்தைக் கடினப்படுத்தியிருக்கிறாய்! நான் உங்களிடம் கூறியதை நீ எடுத்துக் கொண்டு, அதை நீ பெருமைப்படும் ஒன்றாக அல்லது நீ தற்பெருமை பேசும் ஒன்றாக மாற்றிவிட்டாய். இதை மேலும் சிந்தித்துப் பார்: இது உன் மீது இறங்கும் இரக்கம் மற்றும் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளைத் தவிர வேறில்லை. பரிசுத்த ஆவியானவர், நீங்கள் உண்மையிலேயே கலகக்காரராக இருப்பதைக் கண்டு, நேரடியாகப் பேசவும், ஆராய்ந்து பார்க்கவும் செய்கிறார். நீங்கள் அஞ்ச வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயல்பட வேண்டாம் அல்லது எதையும் அவசரகதியில் செய்ய வேண்டாம், மேலும், வீணானவராக, அகந்தையுள்ளவராக அல்லது கொள்கைப் பிடிவாதம் கொண்டவராக இருக்க வேண்டாம்! எனது வார்த்தைகளைக் கடைபிடிப்பதிலேயே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், மேலும், அவை உன்னை உள்ளிருந்து உண்மையாகவே மாற்றும் வகையில் எங்கு சென்றாலும் அவற்றைப் பின்பற்று, இதன் மூலம் என் மனநிலையை நீ பெறுவாய். இது போன்ற முடிவுகள் மட்டும் தான் உண்மையானவை.

திருச்சபையைக் கட்டியெழுப்புவதற்கு, நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து, முழு மனதுடனும் இடைவிடாமலும் தேட வேண்டும். மேலும், ஒரு மறுரூபமாக்கப்பட்ட நபராக மாற பரிசுத்த ஆவியானவரின் புடமிடுதல் மற்றும் சுத்திகரித்தலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளின் கீழ் மட்டும் தான் திருச்சபையைக் கட்டியெழுப்ப முடியும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இப்போது திருச்சபையைக் கட்டியெழுப்புவதற்கு உங்களை வழிநடத்துகிறது. கடந்த காலத்தில் நீங்கள் செய்தது போலவே அதே குழப்பமான, மந்தமான வழியில் நீங்கள் தொடர்ந்து நடந்து கொண்டால், உங்கள் மீது எந்தவொரு நம்பிக்கையும் இருக்காது. நீங்கள் சத்தியம் அனைத்தையும் கொண்டு உங்களைத் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், நீங்கள் ஆவிக்குரிய பகுத்தறிவைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் எனது ஞானத்திற்கு இணங்கச் சரியான வழியில் நீங்கள் நடக்க வேண்டும். திருச்சபையைக் கட்டி எழுப்புவதற்கு, நீங்கள் ஜீவனுள்ள ஆவியினுள் இருக்க வேண்டுமே தவிர, வெறுமனே மேலோட்டமாக மட்டும் பின்பற்றக் கூடாது. உங்களின் வாழ்வில் உள்ள வளர்ச்சியின் செயல்முறையாது நீங்கள் கட்டமைக்கப்பட்ட அதே செயல்முறையாகும். இருப்பினும், வரங்களைச் சார்ந்திருப்பவர்கள் அல்லது ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லது யதார்த்தம் இல்லாதவர்களைக் கட்டமைக்க முடியாது, அல்லது என்னுடன் எப்போதும் நெருங்கி இருந்து, என்னுடன் தொடர்புகொள்ள முடியாதவர்களைக் கட்டமைக்க முடியாது. தங்கள் மனதில் முன்கூட்டியே கருத்துகளைக் கொண்டவர்கள் அல்லது கோட்பாடுகளின் படி வாழ்கிறவர்களைக் கட்டமைக்க முடியாது, அல்லது தங்கள் உணர்ச்சிகளால் வழிநடத்தப்படுபவர்களைக் கட்டமைக்க முடியாது. தேவன் உன்னை எப்படி நடத்தினாலும், நீ அவருக்கு முற்றிலுமாக அடங்கியிருக்க வேண்டும்; இல்லையெனில், உன்னைக் கட்டமைக்க முடியாது. தங்களின் சொந்த சுய முக்கியத்துவம், சுய நீதி, பெருமை, மற்றும் மனநிறைவில் மூழ்கியவர்கள், மற்றும் இணங்குவதற்கும், தங்களை உயர்வாகக் காட்டுவதற்கும் விரும்புபவர்களைக் கட்டமைக்க முடியாது. மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து ஊழியம் செய்ய முடியாதவர்களைக் கட்டமைக்க முடியாது, மற்றும் ஆவிக்குரிய பகுத்தறிவு இல்லாமல் தங்களை வழிநடத்துபவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஜனங்களுக்கு இது பொருந்தும். அதே போல், எனது நோக்கங்களைப் புரிந்து கொள்ளத் தவறுபவர்கள் மற்றும் காலங்கடந்த சூழ்நிலையில் வாழ்க்கையை வாழ்பவர்களைக் கட்டமைக்க முடியாது, அல்லது புதிய ஒளியைப் புரிந்து கொள்வதில் மிகவும் மெதுவாக இருப்பவர்கள் மற்றும் தங்களின் அஸ்திபாரமாக எந்தத் தரிசனத்தையும் கொண்டிருக்காதவர்களைக் கட்டமைக்க முடியாது.

திருச்சபையானது தாமதிக்கப்படாமல் கட்டியெழுப்பப்பட வேண்டும்; இது எனக்கு அழுத்தமான கவலைக்குரிய விஷயமாகும். நீங்கள் நேர்மறையான எண்ணத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடங்க வேண்டும், மற்றும் உங்களின் எல்லாப் பலத்துடனும் உங்களை நீங்களே வழங்குவதன் மூலம் கட்டுமானத்தின் பிரவாகத்தில் இணைய வேண்டும். இல்லையெனில், நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். கைவிடப்பட வேண்டியவற்றை நீங்கள் முழுமையாகக் கைவிட வேண்டும், மற்றும் புசித்துப் பானம்பண்ண வேண்டியவற்றைச் சரியாகப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். நீங்கள் என் வார்த்தையின் யதார்த்தத்தின்படி வாழ வேண்டும், மேலும், மேலோட்டமான மற்றும் பொருத்தமற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். நீ உன்னிடம் இதைக் கேள்: என் வார்த்தையை நீ எந்த அளவு எடுத்துக் கொண்டாய்? எந்த அளவு நீ அதன்படி வாழ்கிறாய்? நீ மனதைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும் மற்றும் எதையும் அவசரத்தில் செய்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும்; இல்லையெனில், அத்தகைய நடத்தையானது உன் வாழ்வில் வளர்ச்சியை அடைவதற்கு உதவாது. நீ சத்தியத்தைப் புரிந்து கொண்டு, அதை எப்படிக் கடைபிடிப்பது என்று அறிந்து, என் வார்த்தையை உண்மையிலேயே உன் வாழ்க்கையாக மாற அனுமதிக்கவும் வேண்டும். இது தான் விஷயத்தின் மையக்கரு!

திருச்சபையைக் கட்டியெழுப்புவது ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளதால், சாத்தான் அதைத் தகர்க்கத் திட்டங்களை வகுத்துத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். நீங்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது, ஆனால் எச்சரிக்கையுடன் தொடர்ந்து, ஆவிக்குரிய பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பகுத்தறிவு இல்லாமல், நீங்கள் பெரும் இழப்பைச் சந்திப்பீர்கள். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல; இதை மிகவும் முக்கியமான பிரச்சனையாக நீங்கள் கருத வேண்டும். சாத்தானும் கூட, பொய்யான தோற்றங்களை உருவாக்கிப் போலிகளை வியாபாரம் செய்ய வல்லவன் ஆனால் இந்த விஷயங்களின் உள்ளார்ந்த தரம் வேறுபட்டதாகும். ஜனங்கள் முட்டாள்களாகவும், கவனக் குறைவாகவும் இருக்கின்றனர், மேலும், அவர்களால் வேறுபாட்டைக் காண முடிவதில்லை. அவர்களால் எப்போதும் தெளிவான மனது மற்றும் அமைதியைப் பராமரிக்க முடிவதில்லை என்பதையும் இது காட்டுகிறது. உங்களின் இருதயங்கள் எங்கும் காணவில்லை. ஊழியம் என்பது ஒருபுறம், ஒரு கௌரவம் ஆகும், அதே மற்றொரு புறம், அது ஒரு இழப்பாகவும் இருக்கலாம். அது ஆசீர்வாதங்கள் அல்லது துரதிஷ்டத்திற்கு வழிவகுக்கக் கூடும். எனது பிரசன்னத்தில் அமைதியாக இருந்து, எனது வார்த்தைகளின் படி வாழவும், மேலும், ஆவிக்குரிய ரீதியில், நீங்கள் உண்மையில் விழிப்புடன் இருந்து, பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்கள். சாத்தான் வரும்போது, அதற்கு எதிராக உங்களால் உடனடியாகக் காவல் செய்து அதன் வருகையை உணர முடியும்; உங்களின் ஆவியில் உண்மையான அமைதியின்மையை நீங்கள் உணர்வீர்கள். போக்குகள் மாறும்போது சாத்தானின் தற்போதைய கிரியையும் சரிகட்டப்படுகிறது. ஜனங்கள் குழப்பமான விதத்தில் நடந்துகொண்டு, விழிப்புடன் இல்லாத போது, அவர்கள் அடிமைத்தனத்தில் தொடர்வார்கள். நீ எப்போதும் விழிப்புடன் இருந்து, உன் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். உங்களின் சொந்த ஆதாயங்கள் மற்றும் இழப்புகள் குறித்து வாதம் செய்ய வேண்டாம் அல்லது உங்களின் சொந்தப் பலனுக்காகக் கணக்கிட வேண்டாம்; மாறாக, என் சித்தத்தைச் செய்து முடிக்க முயற்சி செய்.

பொருட்கள் ஒரே மாதிரியாகத் தோன்றலாம், ஆனால் அவை தரத்தில் வேறுபடக் கூடும். இந்தக் காரணத்திற்காக, நீங்கள் தனி நபர்களையும் ஆவிகளையும் அடையாளம் காண வேண்டும். நீங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆவிக்குரிய தெளிவான மனதைப் பராமரிக்க வேண்டும். சாத்தானின் விஷம் தோன்றும் போது, உங்களால் அதை உடனடியாக அடையாளம் காண முடியும்; அது தேவனின் நியாயத்தீர்ப்பின் ஒளியிலிருந்து தப்ப முடியாது. உங்களின் ஆவியில் பரிசுத்த ஆவியானவரின் குரலை உன்னிப்பாகக் கேட்பதற்காக நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்; மற்றவர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டாம் அல்லது தவறான ஒன்றை உண்மை என்று தவறாக எண்ண வேண்டாம். நீ பெரும் இழப்புகளைச் சந்திக்காமல் இருக்க, யார் வழிநடத்தினாலும் வெறுமனே அவர்களைப் பின்பற்ற வேண்டாம். அது உங்களை எப்படி உணரச் செய்கிறது? நீங்கள் விளைவுகளை உணர்ந்திருக்கிறீர்களா? ஊழியத்தில் சீரற்ற முறையில் நீங்கள் தலையிடக் கூடாது அல்லது அதனுள் உங்களின் கருத்துகளைத் திணிக்கக் கூடாது, இல்லையெனில் நான் உன்னை அடிப்பேன். இன்னும் மோசமானது என்னவென்றால், நீங்கள் அடங்கியிருக்க மறுத்து, தொடர்ந்து உங்களின் விருப்பம் போல் கூறவும், செய்யவும் செய்தால், நான் உன்னைத் துண்டிப்பேன்! திருச்சபையானது எந்த ஜனங்களையும் ஒன்று சேர்க்கத் தேவையில்லை; தேவனை உண்மையாக நேசித்து, உண்மையில் எனது வார்த்தைக்கு இணங்க வாழ்பவர்கள் மட்டும் தான் இதற்குத் தேவை. உங்களின் சொந்த உண்மையான சூழ்நிலையைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஏழை தன்னைச் செல்வந்தனாகக் கருதும்போது, அது சுயத்தை ஏமாற்றுதல் அல்லவா? திருச்சபைக் கட்டி எழுப்பப்படுவதற்கு, நீங்கள் ஆவியானவரைப் பின்பற்ற வேண்டும்; தொடர்ந்து கண்மூடித்தனமாகச் செயல்பட வேண்டாம். மாறாக, உங்களின் இடங்களில் இருந்து, உங்களின் சொந்தச் செயல்பாடுகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் உங்களின் பணிகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம்; நீங்கள் செய்யக்கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் நிறைவேற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், அப்போது தான் என் இருதயம் திருப்தியடையும். இது நீங்கள் அனைவரும் ஒரே செயல்பாட்டைச் செய்வீர்கள் என்பதல்ல. மாறாக, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்தப் பணியைச் செய்ய வேண்டும், மற்றும் திருச்சபையில் உள்ள மற்றவர்களுடன் ஒன்றிணைந்து உங்களின் ஊழியத்தை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். எந்தத் திசையிலும் உங்களின் ஊழியம் விலகிச் செல்லக் கூடாது.

முந்தைய: அத்தியாயம் 18

அடுத்த: அத்தியாயம் 20

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக