அத்தியாயம் 25

நேரம் கடக்கிறது, கண் இமைக்கும் நேரத்தில், இன்றைய நாள் வந்துவிட்டது. என் ஆவியின் வழிகாட்டுதலின் கீழ், எல்லா ஜனங்களும் என் வெளிச்சத்தின் மத்தியில் ஜீவிக்கிறார்கள், இனி யாரும் கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை அல்லது நேற்றைய தினம் மீது கவனம் செலுத்தவில்லை. இன்றைய தினத்தில் வாழாதவரும் ஜீவிக்காதவரும் யார்? அற்புதமான நாட்களையும் மாதங்களையும் ராஜ்யத்தில் கழிக்காதவர் யார்? சூரியனின் பிரகாசத்தின் கீழ் வாழாதவர் யார்? ராஜ்யம் மனுஷர்களிடையே இறங்கியிருந்தாலும், அதன் அரவணைப்பை யாரும் உண்மையாக அனுபவித்ததில்லை; மனுஷன் அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல் அதை வெளியில் இருந்து மட்டுமே பார்க்கிறான். என் ராஜ்யம் உருவான காலத்தில், அதன் காரணமாக யார் மகிழ்ச்சியடையவில்லை? பூமியில் உள்ள நாடுகள் உண்மையில் தப்பிக்க முடியுமா? சிவப்பான பெரிய வலுசர்ப்பம் உண்மையில் அதன் தந்திரப் புத்தியின் காரணமாகத் தப்பிக்க முடியுமா? எனது நிர்வாக ஆணைகள் பிரபஞ்சம் முழுவதும் அறிவிக்கப்படுகின்றன, அவை எல்லா ஜனங்களிடையேயும் எனது அதிகாரத்தை நிலைநிறுத்துகின்றன, மேலும் அவை பிரபஞ்சம் முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன; ஆயினும்கூட, மனுஷன் இதை உண்மையாக அறிந்ததில்லை. எனது நிர்வாக ஆணைகள் பிரபஞ்சத்திற்கு வெளிப்படும்போது, அதுவே பூமியில் எனது கிரியை முடிவடையவிருக்கும் நேரமாக இருக்கும். எல்லா மனுஷர்களிடம் நான் ஆட்சி செய்து அதிகாரம் செலுத்தும்போதும், ஒரே தேவனாக நான் அங்கீகரிக்கப்படும்போதும், என் ராஜ்யம் பூமிக்கு முழுமையாக இறங்குகிறது. இன்று, எல்லா ஜனங்களும் ஒரு புதிய பாதையில் ஒரு புதிய தொடக்கத்தைக் தொடங்கியுள்ளனர். அவர்கள் ஒரு புதிய ஜீவிதத்தைத் தொடங்கியுள்ளனர், ஆனால் பூமியில் பரலோகத்திற்கு ஒத்த ஒரு ஜீவிதத்தை யாரும் உண்மையிலேயே அனுபவித்ததில்லை. நீங்கள் உண்மையிலேயே என் வெளிச்சத்தின் மத்தியில் ஜீவிக்கிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே என் வார்த்தைகளுக்கு மத்தியில் ஜீவிக்கிறீர்களா? தங்கள் சொந்த வாய்ப்புகள் பற்றி யார் சிந்திக்கவில்லை? தங்கள் சொந்த விதியின் காரணமாகத் துன்பப்படாதவர்கள் யார்? துன்பக் கடலுக்கு மத்தியில் போராடாதவர் யார்? தங்களை விடுவித்துக்கொள்ள விரும்பாதவர்கள் யார்? பூமியில் மனுஷனின் கடின உழைப்புக்கு ஈடாக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் வழங்கப்படுகின்றனவா? மனுஷனின் ஆசைகள் அனைத்தும் அவன் விரும்பியபடியே நிறைவேறுமா? நான் ஒரு முறை ராஜ்யத்தின் அழகிய காட்சியை மனுஷனுக்கு முன்வைத்தேன், ஆனாலும் அவன் அதைப் பேராசைக் கண்களால் வெறித்துப் பார்த்தான், உண்மையிலேயே அதில் நுழைய விரும்பியவர்கள் யாரும் இல்லை. பூமியிலுள்ள உண்மையான நிலைமையை நான் ஒருமுறை மனுஷனுக்கு “அறிக்கை” செய்தேன், ஆனால் அவன் கேட்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை, என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை அவன் அவனுடைய இருதயத்தால் எதிர்கொள்ளவில்லை; நான் ஒருமுறை பரலோக சூழ்நிலைகளைப் பற்றி மனுஷனிடம் சொன்னேன், ஆனாலும் அவன் என் வார்த்தைகளை அற்புதமான கதைகளாகக் கருதினான், என் வாய் விவரித்ததை உண்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று, ராஜ்யத்தின் காட்சிகள் மனுஷர்களிடையே ஒளிர்கிறது, ஆனால் அதைத் தேடி யாராவது “சிகரங்களையும் பள்ளங்களையும்” தாண்டியதுண்டா? என் வற்புறுத்தல் இல்லையெனில், மனுஷன் இன்னும் தன் கனவுகளிலிருந்து விழித்திருக்க மாட்டான். அவன் தனது பூமிக்குரிய ஜீவிதத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டானா? உண்மையில் அவனது இருதயத்தில் உயர் தரங்கள் இல்லையா?

என் ஜனங்களாக நான் முன்னரே தீர்மானித்தவர்களால் தங்களை என்னிடம் நியமித்து என்னுடன் இணக்கமாக வாழ முடிகிறது. அவர்கள் என் பார்வையில் விலைமதிப்பற்றவர்கள், அவர்கள் என் ராஜ்யத்தில் என்னை நேசிக்கிறார்கள். இன்றைய ஜனங்களுக்கு மத்தியில், இத்தகைய நிபந்தனைகளை யார் நிறைவேற்றுகிறார்கள்? எனது தேவைகளுக்கு ஏற்ற தரத்திற்கு யார் உயர முடியும்? எனது தேவைகள் உண்மையில் மனுஷனுக்குச் சிரமங்களை ஏற்படுத்துமா? நான் வேண்டுமென்றே அவனைத் தவறிழைக்கச் செய்கிறேனா? நான் எல்லா ஜனங்களிடமும் மென்மையாக இருக்கிறேன், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். இருப்பினும், இது சீனாவில் உள்ள எனது ஜனங்களுக்கு மட்டுமே. நான் உங்களைக் குறைத்து மதிப்பிடவோ, சந்தேகத்தோடு பார்க்கவோ இல்லை, ஆனால் நான் உங்களிடம் நடைமுறைக்கு ஏற்றவாறு யதார்த்தமாக இருக்கிறேன். தங்கள் குடும்பத்தையோ அல்லது பரந்த உலகத்தையோ பொறுத்தவரையில், ஜனங்கள் தவிர்க்க முடியாமல் தங்கள் ஜீவிதத்தில் பின்னடைவுகளை எதிர்கொள்கின்றனர். ஆயினும்கூட யாருடைய கஷ்டங்கள் அவர்களது கைகளாலேயே ஏற்பாடு செய்யப்பட்டவை? மனுஷனால் என்னை அறிய இயலாது. என் வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி அவனுக்குக் கொஞ்சம் புரிதல் இருக்கிறது, ஆனாலும் அவன் என் பொருளைப் பற்றி அறியாதவன்; அவன் உண்ணும் உணவின் மூலப்பொருட்கள் பற்றி அவனுக்குத் தெரியாது. என் இருதயத்தை யாரால் கவனமாக உணர முடியும்? என் சமுகத்தில் என் விருப்பத்தை உண்மையாக புரிந்து கொள்ளக்கூடியவர் யார்? நான் பூமிக்கு வரும்போது, அதை இருள் மூடியிருக்கிறது, மனுஷன் “அயர்ந்த நித்திரைக்கொள்ளுகிறான்.” நான் எல்லா இடங்களுக்கிடையிலும் நடக்கிறேன், நான் பார்ப்பது எல்லாம் கிழிந்து, சிதைந்து, பார்க்க முடியாததாக இருக்கிறது. மனுஷன் அனுபவிக்க மட்டுமே விரும்புகிறான், “வெளி உலகத்திலிருந்து வரும் காரியங்களைக்” கவனிக்க விரும்புவதில்லை. எல்லா ஜனங்களுக்கும் தெரியாமல், நான் முழு பூமியையும் கணக்கெடுக்கிறேன், ஆனாலும் ஜீவன் நிறைந்த ஓர் இடத்தையும் நான் காண்பதில்லை. உடனடியாக, நான் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வெளிப்படுத்துகிறேன், மூன்றாவது வானத்திலிருந்து பூமியைப் பார்க்கிறேன். நிலத்தின் மீது வெளிச்சம் பட்டு வெப்பம் அதன் மீது பரவினாலும், வெளிச்சமும் வெப்பமும் மட்டுமே மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது; அவை இன்பத்தில் திளைக்கும் மனுஷனுக்குள் எதையும் எழுப்புவதில்லை. இதைப் பார்த்த நான் உடனடியாக நான் தயாரித்த “தடியை” மனுஷனிடையே தருகிறேன். தடி விழும்போது, வெளிச்சமும் வெப்பமும் படிப்படியாகச் சிதறடிக்கப்பட்டு பூமி உடனடியாகப் பாழடைந்து இருட்டாகிறது—இருள் காரணமாக, மனுஷன் தன்னை மகிழ்வித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறான். என் தடியின் வருகையைப் பற்றி மனுஷனுக்குச் சிறிதளவே விழிப்புணர்வு உள்ளது, ஆனால் அவன் எதுவும் செய்யாமல் தன் “பூமிக்குரிய ஆசீர்வாதங்களை” அனுபவிக்கிறான். அடுத்து, என் வாய் எல்லா மனுஷர்களின் தண்டனையையும் பறைசாற்றுகிறது, மேலும் பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஜனங்கள் சிலுவையில் தலைகீழாக அறையப்படு கிறார்கள். என் தண்டனை வரும்போது, மலைகள் கவிழ்ந்து, பூமி கிழியும் சத்தத்தால் மனுஷன் நடுங்குகிறான், அதன் பிறகு அவன் விழிக்கிறான். அதிர்ச்சியும் பயமும் அடைந்த அவன் ஓட விரும்புகிறான், ஆனால் அது மிகவும் தாமதம். என் தண்டனை விழும்போது, என் ராஜ்யம் பூமியில் இறங்குகிறது, எல்லா நாடுகளும் துண்டு துண்டாக நொறுக்கப்பட்டு, தடயமின்றி மறைந்து காணாமல் போகின்றன.

ஒவ்வொரு நாளும் நான் பிரபஞ்சத்தின் முகத்தைப் பார்க்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் மனுஷர்களிடையே எனது புதிய கிரியையைச் செய்கிறேன். ஆனாலும் ஜனங்கள் அனைவரும் தங்கள் சொந்த கிரியையில் மூழ்கியிருப்பதால், என் கிரியையின் இயக்கவியல் குறித்து யாரும் கவனம் செலுத்துவதில்லை அல்லது தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களின் நிலையைக் கவனிப்பதில்லை. இது ஜனங்கள் தங்கள் சொந்த உருவாக்கத்தில் ஒரு புதிய வானத்திலும், புதிய பூமியிலும் ஜீவிப்பது போலும், வேறு யாரும் தலையிட விரும்பாதது போலும் இருக்கிறது. அவர்கள் அனைவரும் தங்களது “உடற்ப் பயிற்சிகளைச்” செய்வதுபோல தங்களைப் போற்றிக் கொண்டு தங்களை மகிழ்விக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். மனுஷனின் இருதயத்தில் எனக்கு உண்மையில் இடமில்லையா? மனுஷ இருதயத்தை ஆளுகிறவராக இருக்க நான் உண்மையில் இயலாதவனா? மனுஷனின் ஆவி உண்மையில் அவனை விட்டுச் சென்றுவிட்டதா? என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை யார் கவனமாக யோசிக்கிறார்கள்? என் இருதயத்தின் விருப்பத்தை யார் உணர்கிறார்கள்? மனுஷனின் இருதயம் உண்மையில் வேறு ஏதேனும் ஒரு விஷயத்தால் கைப்பற்றப்பட்டதா? நான் மனுஷனிடம் பலமுறை கூக்குரலிடுகிறேன், ஆனாலும் யாராவது இரக்கத்தை உணர்கிறார்களா? யாராவது மனுஷராக இருக்கும் தன்மையுடன் ஜீவித்திருக்கிறார்களா? மனுஷன் மாம்சத்தில் வாழலாம், ஆனால் அவன் மனுஷனாக இருக்கும் தன்மை இல்லாமல் இருக்கிறான். அவன் மிருக ராஜ்யத்தில் பிறந்தானா? அல்லது அவன் பரலோகத்தில் பிறந்து, தெய்வீகத்தன்மையினால் ஆட்கொள்ளப்பட்டானா? மனுஷனுக்கான எனது தேவைகளை நான் செய்கிறேன், ஆனால் நான் ஏதோ அணுக முடியாத ஓர் அரக்கன் போல், அவனுக்கு அந்நியமானவன் போல் இருப்பதால் அவன் என் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதது போல் இருக்கிறது. பல முறை நான் மனுஷனால் ஏமாற்றமடைந்தேன், அவனது மோசமான செய்கையால் நான் பல முறை கோபமடைந்தேன், அவனது பலவீனத்தால் பல முறை நான் வேதனைப்பட்டேன். மனுஷனின் இருதயத்தில் உள்ள ஆவிக்கான உணர்வை என்னால் ஏன் தூண்ட முடியவில்லை? மனுஷனின் இருதயத்தில் அன்பை என்னால் ஏன் தூண்ட முடியவில்லை? மனுஷன் என்னைத் தன் கண்ணின் மணியைப் போலக் கருத ஏன் விரும்பவில்லை? மனுஷனின் இருதயம் அவனுடையதில்லையா? வேறு ஏதேனும் ஒரு விஷயம் அவனது ஆவிக்குரியதாக இருக்கிறதா? மனுஷன் ஏன் இடைவிடாமல் அழுகிறான்? அவன் ஏன் பரிதாபமாக இருக்கிறான்? ஏன், அவன் துக்கப்படுகையில் என் இருப்பைப் புறக்கணிக்கிறான்? நான் அவனை முட்டாளாக்கியிருப்பதாக இருக்குமா? நான் வேண்டுமென்றே அவனைக் கைவிட்டதாக இருக்குமா?

என் பார்வையில், மனுஷனே எல்லாவற்றிற்கும் அதிபதி. நான் அவனுக்குச் சிறிய அளவிலான அதிகாரத்தை வழங்கவில்லை, பூமியிலுள்ள எல்லாவற்றையும் நிர்வகிக்க அனுமதிக்கிறேன்—மலைகள் மீதுள்ள புல், காடுகளில் இருக்கும் மிருகங்கள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன்கள் என எல்லாவற்றையும். ஆயினும்கூட இதன் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பதிலாக, மனுஷன் பதற்றத்தில் மூழ்குகிறான். அவனது முழு ஜீவிதமும் வேதனையாகவும் அவசரமாகவும், வெறுமையுடன் இணைந்த வேடிக்கையாகவும் இருக்கிறது; அவனது முழு ஜீவிதத்திலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் எதுவும் இல்லை. இந்த வெற்று ஜீவிதத்திலிருந்து யாராலும் தங்களைத் தாங்களே பிரித்துக் கொள்ள முடியாது, அர்த்தமுள்ள ஜீவிதத்தை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை, உண்மையான ஜீவிதத்தை யாரும் அனுபவித்ததில்லை. இன்றைய ஜனங்கள் அனைவரும் என் பிரகாசிக்கும் வெளிச்சத்தில் ஜீவிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்குப் பரலோக ஜீவிதம் பற்றி எதுவும் தெரியவில்லை. நான் மனுஷனிடம் இரக்கமில்லாமல் நடந்து, மனுஷகுலத்தைக் காப்பாற்றாவிட்டால், எல்லா ஜனங்களும் வந்தது வீணாகும், பூமியில் அவர்களின் ஜீவிதம் அர்த்தமற்றதாகும், அவர்கள் பெருமைப்பட ஒன்றுமில்லாமல் வீணாகப் புறப்படுவார்கள். ஒவ்வொரு மதத்தின் ஜனங்களும், சமூகத்தின் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு பிரிவினரும் பூமியில் உள்ள வெறுமையை அறிவார்கள், அவர்கள் அனைவரும் என்னைத் தேடுகிறார்கள், என் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்—ஆனாலும் நான் வரும்போது என்னை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர் யார்? எல்லாவற்றையும் உருவாக்கியது நான், மனுஷகுலத்தைச் சிருஷ்டித்தது நான், இன்று நான் மனுஷர்களிடையே இறங்குகிறேன். இருப்பினும், மனுஷன் என்னைப் பழிவாங்குகிறான். மனுஷன் மீது நான் செய்யும் கிரியையால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லையா? மனுஷனைத் திருப்திப்படுத்த நான் உண்மையில் தகுதியற்றவனா? மனுஷன் என்னை ஏன் நிராகரிக்கிறான்? மனுஷன் ஏன் என்னிடம் அன்பு காட்டாமலும், அலட்சியமாகவும் இருக்கிறான்? பூமி ஏன் சடலங்களால் மூடப்பட்டுள்ளது? இது உண்மையில் நான் மனுஷனுக்காக உருவாக்கிய உலகின் நிலைதானா? மனுஷன் பதிலுக்கு எனக்கு இரண்டு வெற்றுக் கைகளை அளிக்கும்போதும் நான் ஏன் மனுஷனுக்கு ஒப்பிடமுடியாத செல்வத்தைக் கொடுக்கிறேன்? மனுஷன் ஏன் என்னை உண்மையாக நேசிப்பதில்லை? அவன் ஏன் எனக்கு முன்பாக வருவதில்லை? என் வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் ஒன்றுக்கும் உதவாததா? என் வார்த்தைகள் தண்ணீரிலிருந்து வரும் வெப்பத்தைப் போல மறைந்துவிட்டனவா? என்னுடன் ஒத்துழைக்க மனுஷன் ஏன் விரும்பவில்லை? எனது நாளின் வருகை உண்மையில் மனுஷன் மரிப்பதின் தருணமா? என் ராஜ்யம் உருவாகும் நேரத்தில் என்னால் உண்மையில் மனுஷனை அழிக்க முடியுமா? எனது முழு மேலாண்மைத் திட்டத்தின் போது, எனது நோக்கங்களை யாரும் இதுவரைப் புரிந்து கொள்ளவில்லையா? ஏன், என் வாயிலிருந்து வரும் சொற்களைப் போற்றுவதற்குப் பதிலாக, மனுஷன் அவற்றை வெறுக்கிறான், நிராகரிக்கிறான்? நான் யாரையும் கண்டிக்கவில்லை, ஆனால் எல்லா ஜனங்களும் அமைதிக்குத் திரும்பி, சுயமாகப் பிரதிபலிக்கும் கிரியையைச் செய்ய வேண்டும்.

மார்ச் 27, 1992

முந்தைய: அத்தியாயம் 24

அடுத்த: சகல ஜனங்களே, களிப்படையுங்கள்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக