அத்தியாயம் 27
இன்று, தேவனுடைய வார்த்தைகள் அவைகளின் உச்சத்தை எட்டியிருக்கின்றன, அதாவது நியாயத்தீர்ப்பு காலத்தின் இரண்டாம் பகுதி அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும் இது மிக உயர்ந்த உச்சம் அல்ல. இந்த நேரத்தில், தேவனுடைய தொனி மாறியிருக்கிறது—அது கேலி செய்வதாகவும் இல்லை, நகைச்சுவையாகவும் இல்லை, அது சிட்சிப்பதாகவும் இல்லை, திட்டுவதாகவும் இல்லை; தேவன் தம்முடைய வார்த்தைகளின் தொனியைக் குறைத்திருக்கிறார். இப்போது, தேவன் மனுஷனுடன் “உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள” தொடங்குகிறார். தேவன் நியாயத்தீர்ப்பு காலத்தின் கிரியையைத் தொடர்ந்து செய்துகொண்டும், அதே நேரத்தில் அவரது கிரியையின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் வகையில், கிரியையின் அடுத்த பகுதிக்கான பாதையைத் திறக்கிறார். ஒருபுறம், அவர் மனுஷனுடைய “பிடிவாதம் மற்றும் மீண்டும் மீண்டும் குற்றம் புரியத் தலைப்படும் தன்மை” பற்றி பேசுகிறார், மறுபுறம், அவர் “மனிதனிடமிருந்து விலகிய பின்னர் மீண்டும் மனிதனுடன் ஒன்றிணைவதால் ஏற்படும் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள்” பற்றிப் பேசுகிறார்—இவை அனைத்தும், மிகவும் உணர்வற்றுப்போன மனுஷ இருதயங்களைக் கூட அசைத்து, ஜனங்களின் இருதயங்களில் ஓர் எதிர்வினையைத் தூண்டுகின்றன. இந்த வார்த்தைகளைச் சொல்வதற்கான தேவனுடைய நோக்கமானது, முதன்மையாக எல்லா ஜனங்களையும் தேவனுக்கு முன்பாக சத்தமில்லாமல், இறுதி வரை கீழே விழப் பண்ணுவதாகும், அதன் பிறகுதான் “நான் எனது கிரியைகளை வெளிப்படுத்துகிறேன், ஒவ்வொருவரும் தங்கள் தோல்வியின் மூலம் என்னை அறிந்துகொள்ளச் செய்கிறேன்.” இந்தக் காலகட்டத்தில், தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு முற்றிலும் மேலோட்டமானவையாகவே காணப்படுகிறது; அது உண்மையான அறிவு அல்ல. அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்தாலும், தேவனுடைய சித்தத்தை அவர்கள் நிறைவேற்ற இயலாதவர்களாய் இருக்கிறார்கள். இன்று, தேவனுடைய வார்த்தைகள் அவற்றின் உச்சநிலையை அடைந்திருக்கின்றன, ஆனால் ஜனங்கள் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள், இதனால், இங்கே இப்போது உள்ள வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்—தேவனும் மனுஷனும் எவ்வளவு வித்தியாசமாக இருக்க முடியுமோ அவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த ஒப்பீட்டின் அடிப்படையில், தேவனுடைய வார்த்தைகள் முடிவுக்கு வரும்போது, ஜனங்கள் தேவனுடைய மிகக் குறைந்த தரத்தை மட்டுமே அடையக் கூடியவர்களாக இருப்பார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் முற்றிலும் சீர்கெடுக்கப்பட்ட இந்த ஜனங்களுக்குள் தேவன் கிரியை செய்யும் வழிமுறை இதுதான், மேலும் உகந்த விளைவை அடைய, தேவன் இவ்வாறுதான் கிரியை செய்ய வேண்டும். திருச்சபையைச் சேர்ந்த ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தேவனை அவருடைய வார்த்தைகளில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கமாக இருக்கிறது—இதில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? இருப்பினும், விஷயங்கள் இருக்கும் நிலையில், தேவன் இனி மனுஷனுடைய பலவீனத்தைக் கவனத்தில் கொள்வதில்லை, மேலும் ஜனங்கள் அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். அவருடைய சித்தத்திற்கு இணங்க, அவருடைய வார்த்தைகள் முடிவடையும் போது, அதுவே பூமியில் அவருடைய கிரியை முடிவடையும் நேரமாக இருக்கும். ஆனால், இந்தக் காலத்தின் கிரியையானது கடந்த காலத்தைப் போல் இருப்பதில்லை. தேவனுடைய வார்த்தைகள் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது; தேவனுடைய கிரியை எப்போது முடிவடையும் என்று, யாருக்கும் தெரியாது; தேவனுடைய சாயல் எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் தேவனுடைய ஞானம். சாத்தானால் உண்டான எந்த குற்றச்சாட்டுகளையும் மற்றும் எதிரான வல்லமைகளின் எந்த குறுக்கீடுகளையும் தவிர்க்க, தேவன் யாருக்கும் தெரியாமல் கிரியை செய்கிறார், இந்த நேரத்தில் பூமியின் ஜனங்களிடையே எந்த எதிர்வினையும் இல்லை. தேவனுடைய மறுரூபமாதலின் அறிகுறிகள் ஒரு காலத்தில் பேசப்பட்டாலும், அதை யாரும் உணர்ந்துகொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள், ஏனென்றால், மனுஷன் மறந்துபோயிருக்கிறான், மேலும் அவன் அதில் கவனம் செலுத்துவதில்லை. உள்ளே இருந்து வருகிறதும் மற்றும் வெளியே இருந்து வருகிறதுமான தாக்குதல்களினாலும்—வெளி உலகின் பேரழிவுகள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் புடமிடுதல் மற்றும் சுத்திகரித்தலினாலும்—ஜனங்கள் இனி தேவனுக்காக உழைக்கத் தயாராக இல்லை, ஏனென்றால், அவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களில் மிகவும் அலுவலாக இருக்கிறார்கள். எல்லா ஜனங்களும் கடந்த காலத்தின் அறிவையும் நாட்டத்தையும் மறுக்கும் நிலையை அடைந்தால், மற்றும் எல்லா ஜனங்களும் தங்களைத் தெளிவாகக் கண்டிருந்தால், அப்போது, அவர்கள் தோல்வியடைவார்கள் மற்றும் அவர்களின் சுயம் அவர்களது இருதயங்களில் இனி இடம் பெற்றிருக்காது. அப்போதுதான், ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்காக உண்மையாக ஏங்குவார்கள், அப்போதுதான், தேவனுடைய வார்த்தைகள் அவர்களின் இருதயங்களில் உண்மையாகவே ஓர் இடத்தைப் பெற்றிருக்கும், அப்போதுதான் தேவனுடைய வார்த்தைகள் அவர்களது வாழ்விற்கான ஆதாரமாக மாறியிருக்கும்—இந்த நேரத்தில்தான், தேவனுடைய சித்தம் நிறைவேறும். ஆனால் இன்றைய ஜனங்கள் இந்த நிலையை அடைய வெகு தொலைவில் உள்ளனர். அவர்களில் சிலர் ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை, இதனால் தேவன் இதை “மீண்டும் மீண்டும் குற்றம் புரியத் தலைப்படும் தன்மை” என்று கூறுகிறார்.
தேவனுடைய எல்லா வார்த்தைகளும் பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கின்றன. தேவன் ஏன் இப்படிப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து கேட்கிறார்? “ஜனங்களால் ஏன் மனந்திரும்பி மறுபடியும் பிறக்க முடியாது? சேறு இல்லாத இடத்திற்குப் பதிலாகச் சகதியில் வாழ அவர்கள் ஏன் எப்போதும் விரும்புகிறார்கள்? …” கடந்த காலத்தில், தேவன் நேரடியாக விஷயங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் அல்லது நேரடியாக வெளிப்படுத்துவதன் மூலம் கிரியை செய்தார். ஆனால் ஜனங்கள் மிகுந்த வேதனையை அனுபவித்திருந்த பிறகு, தேவன் ஒருபோதும் நேரடியாக இவ்வாறு பேசவில்லை. இந்தக் கேள்விகளுக்குள், ஜனங்கள் தங்களது சொந்தக் குறைபாடுகளையும் காண்கிறார்கள் மற்றும் அவர்கள் நடக்க வேண்டிய பாதையையும் புரிந்துகொள்கிறார்கள். ஜனங்கள் அனைவரும் எளிதில் கிடைப்பதைப் புசிக்க விரும்புவதால், தேவன் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு பேசுகிறார், அவர்கள் தங்களைக் குறித்து சிந்திக்கும் வகையில், சிந்திக்க வேண்டிய தலைப்புகளை அவர்களுக்கு வழங்குகிறார். இது தேவனுடைய கேள்விகளின் முக்கியத்துவத்தின் ஒரு அம்சமாகும். இயற்கையாகவே, இது அவருடைய மற்ற சில கேள்விகளின் முக்கியத்துவமாக இல்லை, உதாரணமாக: நான் அவர்களைத் தவறாக நடத்தியிருக்கக் கூடுமோ? நான் அவர்களுக்குத் தவறான திசையில் வழிகாட்டியிருக்கக் கூடுமோ? நான் அவர்களை நரகத்திற்கு வழிநடத்தியிருக்கக் கூடுமோ? இது போன்ற கேள்விகள் ஜனங்களின் இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்கும் எண்ணங்களைக் காட்டுகின்றன. அவர்களின் வாய்கள் இந்தக் கருத்துக்களுக்குக் குரல் கொடுப்பதில்லை என்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்களின் இருதயங்களில் சந்தேகம் காணப்படுகிறது, மேலும் தேவனுடைய வார்த்தைகளானது, அவர்களை முற்றிலும் தகுதியற்றவர்களாக இருப்பதாகச் சித்தரிக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இயற்கையாகவே, அத்தகைய ஜனங்கள் தங்களை அறிய மாட்டார்கள், ஆனால் இறுதியில் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளால் தோல்வியை ஒப்புக்கொள்வார்கள்—இது தவிர்க்க முடியாததாகும். இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, “மனிதனின் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், நான் எல்லா தேசங்களையும் சில்லு சில்லாக அடித்து நொறுக்க விரும்புகிறேன்” என்றும் தேவன் கூறுகிறார். ஜனங்கள் தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அதன் விளைவாக அனைத்து தேசங்களும் நடுங்கும், ஜனங்கள் படிப்படியாக தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்வார்கள், மேலும் குடும்பங்களில் தந்தைக்கும் மகனுக்கும், தாய்க்கும் மகளுக்கும், மற்றும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான உறவுகள் இல்லாமல் போகும். மேலும், குடும்பங்களில் உள்ளவர்களுக்கிடையிலான உறவுகள் மென்மேலும் தொடர்பு இல்லாமல் ஆகிவிடும்; அவர்கள் பெரிய குடும்பத்தில் சேர்வார்கள், மற்றும் கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களின் வாழ்க்கையின் வழக்கமான மரபுகள் அழிந்துபோகும். இதன் காரணமாக, ஜனங்களின் இருதயங்களில் “குடும்பம்” என்ற கருத்து மிகப் பெரிய அளவில் தெளிவற்றதாகிவிடும்.
இன்றைய தேவனுடைய வார்த்தைகளில், ஜனங்களுடன் “உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதில்” ஏன் இவ்வளவு அர்ப்பணிப்பு செய்யப்பட்டிருக்கிறது? இயற்கையாகவே, இதுவும் ஒரு குறிப்பிட்ட விளைவை அடைவதற்காகவே ஆகும், இதிலிருந்து தேவனுடைய இருதயம் கவலையால் நிறைந்திருப்பதைக் காணலாம். “நான் சோகமாக இருக்கும்போது, யார் தங்கள் இதயங்களால் என்னை ஆறுதல்படுத்த முடியும்?” என்று தேவன் கூறுகிறார். அவரது இருதயம் துக்கத்தால் நிரம்பியிருக்கிறபடியால்தான், தேவன் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார். ஜனங்கள் தேவனுடைய சித்தத்திற்கு முழுவதுமாக கவனம் செலுத்த இயலாதவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் எப்போதும் மூர்கத்தனமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள், அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை, தாங்கள் விரும்பியபடி செய்கிறார்கள்; அவர்கள் மிகவும் கீழானவர்கள், அவர்கள் எப்போதும் தங்களைத் தாங்களே மன்னிக்கிறார்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், இன்று வரை, ஜனங்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள இயலாதவர்களாக இருப்பதால், தேவன் இவ்வாறு கூறுகிறார்: “அவர்கள் எப்படிப் பெரும்பசி கொண்ட ஓநாயின் தாடைகளிலிருந்து தப்பிக்க முடியும்? அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் சோதனைகளிலிருந்து அவர்கள் எவ்வாறு தங்களை விடுவிக்க முடியும்?” ஜனங்கள் மாம்சத்தில் வாழ்கிறார்கள், அது பசியுள்ள ஓநாயின் வாயில் வாழ்வதைப் போன்றதாகும். மேலும், ஜனங்கள் சுய விழிப்புணர்வு இல்லாததாலும், எப்போதும் தங்களைத் தாங்களே துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டு, அதிலேயே மூழ்கிக் கிடப்பதாலும், தேவனால் கவலைப்படாமல் இருக்க முடியாது. தேவன் எவ்வளவு அதிகமாக ஜனங்களுக்கு இவ்வாறு நினைவூட்டுகிறாரோ, அவ்வளவு சிறப்பாக அவர்கள் தங்கள் இருதயங்களில் உணர்கிறார்கள், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடன் செயல்படுவதற்குத் தயாராகிறார்கள். அப்போதுதான் மனுஷனும் தேவனும் எந்தப் பிரிவினையும் இடைவெளியும் இல்லாமல் ஒருவருக்கொருவர் இணக்கமாகப் பழகுவார்கள். இன்று, முழு மனிதகுலமும் தேவனுடைய நாளின் வருகைக்காகக் காத்திருக்கிறது, அதனால் மனிதகுலம் ஒருபோதும் முன்னேறியிருக்கவில்லை. இருப்பினும் தேவன்: “நீதியின் சூரியன் தோன்றும்போது, கிழக்கு வெளிச்சமடையும், பின்னர் அது முழு பிரபஞ்சத்தையும் வெளிச்சம் பெறச்செய்து, அனைவரையும் சென்றடையும்” என்று கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தமது ரூபத்தை மாற்றும்போது, கிழக்கு முதலில் வெளிச்சமடையும் மற்றும் கிழக்கத்திய தேசம் முதலில் மாற்றியமைக்கப்படும், அதன்பிறகு மீதமுள்ள நாடுகள் தெற்கிலிருந்து வடக்கு வரை புதுப்பிக்கப்படும். இதுதான் வரிசை, அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப இருக்கும். இந்தக் கட்டம் முடிந்திருக்கும்போது, எல்லா ஜனங்களும் காண்பார்கள். இந்த வரிசைப்படிதான் தேவன் கிரியை செய்கிறார். இந்நாளைக் காணும்போது ஜனங்கள் மகிழ்ச்சியில் திளைத்துப்போவார்கள். இந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தேவனுடைய அவசர நோக்கத்தில் இருந்து பார்க்க முடிகிறது.
இன்று, இங்கே பேசப்படும் வார்த்தைகளில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள் தேவனை நேசிக்கும் அனைவருக்கும் வேதனையின் கண்ணீரைத் தூண்டுகிறது. அவர்களின் இருதயங்கள் உடனடியாக நிழலில் மறைக்கப்படுகின்றன, மேலும் எல்லா ஜனங்களும் தேவனுடைய இருதயத்தின் நிமித்தமாக மிகுந்த துக்கத்தால் நிரப்பப்படுகிறார்கள். தேவன் பூமியில் தம்முடைய கிரியையை முடிக்கும்வரை அவர்கள் எந்த ஆறுதலையும் உணரமாட்டார்கள். இதுவே பொதுவான போக்காக இருக்கிறது. “துக்கம் நிறைந்த உணர்வுடன் சேர்ந்து, என் இருதயத்தில் கோபம் எழுகிறது. என் கண்கள் ஜனங்களின் செயல்களையும், அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அசுத்தமாக இருப்பதைப் பார்க்கும்போது, என் ஆத்திரம் பொங்கி எழும்புகிறது, மேலும் என் இருதயத்தில் மனித உலகின் அநியாயங்களைக் குறித்த அதிக உணர்வு காணப்படுகிறது, இது என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது; மனுஷனுடைய மாம்சத்தை உடனே அழிக்க ஆசைப்படுகிறேன். மனுஷன் ஏன் மாம்சத்தில் தன்னைச் சுத்திகரிக்க இயலாதவனாய் இருக்கிறான் என்பதும், மனுஷனால் ஏன் மாம்சத்தில் தன்னை நேசிக்க முடிவதில்லை என்பதும் எனக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் ‘செயல்பாடு’ அவ்வளவு பெரிதாக இருக்கக் கூடுமோ?” இன்றைய தேவனுடைய வார்த்தைகளில், தேவன் எதையும் மறைத்து வைக்காமல், தம்முடைய இருதயத்தில் உள்ள அனைத்து கவலைகளையும் மனுஷனுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்றாம் வானத்தில் உள்ள தேவதூதர்கள் அவருக்காக இசையை மீட்டும்போதும், தேவன் இன்னும் பூமியில் உள்ள ஜனங்களுக்காகவே ஏங்குகிறார், அதனால்தான், அவர் இவ்வாறு கூறுகிறார், “தேவதூதர்கள் என்னைத் துதித்து இசையை மீட்டும்போது, இது மனிதன் மீதான எனது அனுதாபத்தைத் தூண்டாமல் இருக்க முடியாது. என் இதயம் இக்கணமே சோகத்தால் நிரம்பியுள்ளது, இந்த வேதனையான உணர்ச்சியிலிருந்து என்னை விடுவிப்பது என்பது சாத்தியமில்லை.” இந்தக் காரணத்தினாலேயே தேவன் இவ்வாறு கூறுகிறார்: “மனித உலகின் அநீதிகளை நான் சரிசெய்வேன். சாத்தான் என் மக்களுக்கு மீண்டும் தீங்கு விளைவிப்பதையும் சத்துருக்கள் மீண்டும் அவர்கள் விரும்புவதைச் செய்வதையும் தடுத்து, உலகம் முழுவதிலும் என் சொந்தக் கைகளால் என் கிரியையைச் செய்வேன். நான் பூமியில் ராஜாவாகி, என் சிங்காசனத்தை அங்கே நகர்த்துவேன், என் சத்துருக்கள் அனைவரும் தரையில் விழுந்து, தங்கள் குற்றங்களை என் சமூகத்தின் முன்பாக ஒப்புக்கொள்வார்கள்.” தேவனுடைய சோகம் பிசாசுகள் மீதான அவரது வெறுப்பை அதிகரிக்கிறது, இதனால் அவர் பிசாசுகள் எவ்வாறு அழிந்துபோகும் என்பதை முன்கூட்டியே ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார். இது தேவனுடைய கிரியையாகும். எல்லா ஜனங்களுடனும் மீண்டும் ஒன்றிணைந்து பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர தேவன் எப்போதும் விரும்பியிருக்கிறார். பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜனங்களும் ஏவப்படத் தொடங்கியுள்ளனர்—அதாவது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜனங்களும் தேவனுடைய வழிகாட்டுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களின் எண்ணங்கள் தங்கள் பேரரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்யும்படி மாறுகிறது. கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே, உலக ஜனங்கள் குழப்பத்தில் அமிழ்ந்து போவார்கள், மற்றும் அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒவ்வொரு திசையிலும் தப்பி ஓடுவார்கள், இறுதியில் அவர்களது ஜனங்களாலேயே, தலையைத் துண்டிக்கும் இயந்திரத்தினிடத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள். இதுவே, பிசாசுகளுடைய ராஜாக்களின் இறுதி முடிவாகும்; இறுதியாக, அவர்களில் யாரும் தப்பிக்க முடியாது, அவர்கள் அனைவரும் அதைக் கடந்து செல்ல வேண்டும். இன்று “புத்திசாலிகள்” பின்வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். நிலைமை நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பதைக் கண்டு, அவர்கள் பின்வாங்கவும், பேரழிவின் கஷ்டங்களிலிருந்து தப்பிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நான் தெளிவாகச் சொல்கிறேன், கடைசி நாட்களில் தேவன் செய்யும் கிரியை முக்கியமாக மனுஷனைத் தண்டிப்பதுதான், எனவே, இந்த ஜனங்கள் எப்படித் தப்பிச்செல்ல வாய்ப்பைப் பெற முடியும்? இன்றுதான் முதல் படியாகும். ஒரு நாள், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் யுத்தத்தின் கொந்தளிப்பில் விழும்; பூமியில் உள்ள ஜனங்கள் இனி ஒருபோதும் தலைவர்களைப் பெற்றிருக்க மாட்டார்கள், முழு உலகமும் ஒருவராலும் ஆட்சி செய்யப்படாமல், ஒரு தளர்வான மணல் குவியல் போல இருக்கும், மேலும் ஜனங்கள் யாரைக் குறித்தும் அக்கறையில்லாமல், தங்கள் சொந்த வாழ்க்கையை மட்டுமே கவனிப்பார்கள், ஏனென்றால், அனைத்தும் தேவன் தம்முடைய கரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது—ஆகவேதான் தேவன், “எல்லா மனிதர்களும் என் சித்தத்திற்கு ஏற்ப எஞ்சிய தேசங்களை உடைக்கிறார்கள்” என்று கூறுகிறார். இப்போது தேவன் பேசுகிற வழியாகிய தேவதூதர்களுடைய எக்காளங்களின் சத்தமானது ஒரு அடையாளமாகக் காணப்படுகிறது—அவைகள் மனுஷனுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கின்றன, மேலும் எக்காளங்கள் மீண்டும் ஒலிக்கும்போது, உலகத்தின் கடைசி நாள் வந்திருக்கும். அந்த நேரத்தில், தேவனுடைய முழு தண்டனையும் முழுவதுமாக பூமிக்கு வரும்; இது இரக்கமற்ற நியாயத்தீர்ப்பாகவும், தண்டனைக் காலத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகவும் இருக்கும். இஸ்ரவேலர்கள் மத்தியில், வெவ்வேறு சூழல்களில் அவர்களை வழிநடத்த தேவனுடைய குரல் அடிக்கடி கேட்கப்படும், மேலும் தேவதூதர்களும் கூட அவர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இஸ்ரவேலர்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே முழுமையாக்கப்படுவார்கள், மேலும் அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் விஷத்திலிருந்து தங்களைத் தாங்களே அகற்றும் கட்டத்திற்குச் செல்ல வேண்டியிருக்காது என்பதால், பல்வேறு வகையான வழிகாட்டுதலின் கீழ் சரியான பாதையில் பிரவேசிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும். இஸ்ரவேலின் வளர்ச்சியிலிருந்து முழு பிரபஞ்சத்தின் நிலையையும் காணலாம், மேலும் இது தேவனுடைய கிரியையின் படிகள் எவ்வளவு விரைவானதாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. “அதற்கான நேரம் வந்துவிட்டது! நான் என் கிரியைகளைத் தொடங்குவேன், மனிதர்களிடையே ராஜாவாக ஆட்சி செய்வேன்!” கடந்த காலத்தில், தேவன் பரலோகத்தில் மட்டுமே ஆட்சி செய்தார். இன்று, அவர் பூமியின் மீது ஆட்சி செய்கிறார்; தேவன் தம்முடைய அதிகாரம் அனைத்தையும் திரும்பப் பெற்றிருக்கிறார், எனவேதான், எல்லா மனுஷர்களும் மீண்டும் ஒரு சாதாரண மனித வாழ்க்கையை வாழ மாட்டார்கள் என்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால், தேவன் வானத்தையும் பூமியையும் மறுசீரமைப்பார், மேலும் எந்த மனுஷனும் அதில் தலையிட அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, “அதற்கான நேரம் வந்துவிட்டது!” என்று தேவன் அடிக்கடி மனுஷனுக்கு நினைப்பூட்டுகிறார். இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குத் திரும்பியதும்—இஸ்ரவேல் தேசம் முழுவதுமாக மீட்கப்பட்டிருக்கும் நாளில்—தேவனுடைய மகத்தான கிரியை நிறைவடையும். யாரும் இதை அறியாதிருக்கையில், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் கலகம் செய்வார்கள், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள தேசங்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல விழும்; ஒரு நொடியில், அவைகள் நிலைகுலைந்து அழிந்து விழும். அவைகளைக் கையாண்ட பிறகு, தேவன் தம்முடைய இருதயத்திற்குப் பிரியமான ராஜ்யத்தைக் கட்டுவார்.