அத்தியாயம் 118

என் குமரனுக்குச் சாட்சி அளிக்க யார் எழும்பினாலும், நான் அவர்களுக்குக் கிருபை அளிப்பேன்; என் குமாரனுக்குச் சாட்சி அளிக்க யாரெல்லாம் எழாமல், அதற்குப் பதிலாக அவரை எதிர்த்துத் தங்கள் சொந்த மதிப்பீடுகளை மனுஷக் கருத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கினால், அவர்களை நான் அழிப்பேன். எல்லோரும் தெளிவாகப் பார்க்க வேண்டும்! என் குமாரனுக்கு சாட்சி அளிப்பது எனக்குக் காட்டும் ஒரு பயபக்தியான செயலாகும், மேலும் அது என் சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறது. குமாரனைக் கொடுமைப்படுத்தி ஒடுக்கி விட்டு, பிதாவுக்கு மட்டும் மரியாதை அளிக்காதே. இப்படிச் செய்கிறவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியாவார்கள். என் குமாரனுக்குச் சாட்சி அளிக்க எனக்கு இது போன்ற இழிந்தவர்கள் தேவை இல்லை; நான் அவர்களைப் பாதாளத்தில் அழிப்பேன், என் குமாரனுக்கு ஊழியம் செய்ய உண்மையான, நேர்மையான ஊழியம் செய்பவர்கள் எனக்குத் தேவை; மீதியுள்ளவர்களைப் பொறுத்த வரையில், எனக்கு அவர்கள் தேவை இல்லை. இதுவே நீதியான என் மனநிலை, மேலும் இது நானே பரிசுத்தமான பழுதற்ற தேவன் என்பதைக் காட்ட உதவுகிறது. என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை அவமதிக்கும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். என்னுடைய எந்த ஒரு பகுதியும் மாம்சமும் இரத்தமுமாய் இல்லாததால், கடந்த காலத்தில் குடும்பத்தில் அல்லது உலகத்தில் உனக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள், உன்னைத் துன்புறுத்தியவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஒவ்வொருவராக நான் சிட்சிப்பேன், ஒருவரையும் விடமாட்டேன். இன்று உனக்கு சாட்சி அளிப்பது அந்த ஊழியம் செய்பவர்கள் எனக்கு ஊழியம் செய்து முடித்துவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது, அதனால் எந்த ஒரு மன உளைச்சலோ அல்லது கவலைகளோ அறவே கொள்ள வேண்டாம். சொல்லப் போனால், அவர்கள் உன்னுடைய ஊழியக்காரர்கள், நீ பரலோகத்தைச் சார்ந்தவன் என்று எல்லாம் சொல்லப்பட்டு செய்யப்பட்டு முடிந்ததும், இறுதியில் நீ என்னுடைய சரீரத்துக்குத் திரும்புவாய், ஏனெனில் என் சரீரம் நீயின்றி இருக்க முடியாது. கடந்த காலத்தில் உன்னை எதிர்த்தவர்கள் மற்றும் உன்னோடு இணக்கமாய் இல்லாதவர்கள் (இது மற்றவர்களால் பார்க்க முடியாத ஒன்று; இதை உன் இருதயத்தில் உனக்கு மட்டுமேதெரியும்) தங்கள் அசல் வடிவங்களை இப்போது வெளிப்படுத்தி விழுந்து போய் விட்டார்கள், ஏனென்றால் நீ தேவன் தாமாகவே இருக்கிறாய் மேலும் யாரும் உன்னை எதிர்ப்பதையோ அல்லது அவமதிப்பதையோ சகிக்க மாட்டாய். வெளியில் இருந்து இதைப் பார்க்கவே முடியாவிட்டாலும், என்னுடைய ஆவி உன்னுள் இருக்கிறது; இது கேள்விக்கு அப்பாற்பட்டது. எல்லா ஜனங்களும் அதை நம்ப வேண்டும், அல்லது என்னுடைய இருப்புக் கோல் என்னை எதிர்த்து நிற்கும் எல்லோரையும் அழித்துப்போடும்! நான் உனக்குச் சாட்சி அளிப்பதால், நீ நிச்சயம் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ சொல்லும் எல்லாம் என்னுடையே சொல்லே, மேலும் நீ செய்வதெல்லாம் என்னுடைய வெளிப்பாடே, ஏனெனில் நீ எனக்கு அன்பானவன் மேலும் என் ஆள்தத்துவம் பகுதியாகிய நீ இல்லாமல் இருக்க முடியாது. ஆகவே, உன்னுடைய ஒவ்வொரு செயலும், நீ அணிவதுவும், நீ பயன்படுத்துவதும், நீ வாழும் இடமும்—அவை எல்லாம் நிச்சயமாக என் செயல்களே. ஒருவரும் உனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முயற்சி செய்யக் கூடாது, மேலும் ஒருவரும் உன்னிடம் குற்றம் குறை கண்டுபிடிக்கக் கூடாது. இப்படி யாராவது செய்தால், நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்.

நான் என்னுடைய வீட்டில் இருந்து எல்லா பொல்லாத ஊழியக்காரர்களையும் அகற்றுவேன், மேலும் என்னுடைய வீட்டுக்குள் எல்லா உண்மையான ஊழியக்காரர்களையும் என் முதற்பேறான குமாரர்களுக்குச் சாட்சி அளிக்கும்படி வைப்பேன்; இது என் திட்டம், மேலும் இதுவே நான் கிரியை செய்யும் வகையாகும். பொல்லாத ஊழியக்காரர்கள் என் குமாரனுக்குச் சாட்சி அளிக்கும் போது, செத்தவர்களின் துர்நாற்றம் வீசுகிறது, மேலும் இது எனக்கு அருவருப்பூட்டுகிறது. உண்மையுள்ள ஊழியக்காரர்கள் என் குமாரனுக்குச் சாட்சி அளிக்கும் போது, அது மனப்பூர்வமானதும் நேர்மையுமானதாக இருக்கிறது. அது எனக்கு ஏற்புடையதாகவும் உள்ளது. ஆகவே, என் குமாரனுக்குச் சாட்சி அளிக்க விருப்பமில்லாதவர்கள் யாராக இருந்தாலும், இப்போதே இங்கிருந்து வெளியேறி விடுங்கள்! நான் உங்களை அவ்வாறு செய்ய வலியுறுத்த மாட்டேன்—நான் உன்னை வெளியேறும்படி கேட்டால், நீ வெளியேறித் தான் ஆக வேண்டும்! உனக்கான விளைவுகள் என்ன என்பதையும் உனக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் பார்; ஊழியம் செய்பவர்கள் மற்றவர்களை விட இதை அதிகமாகப் புரிந்து கொள்வார்கள். என் நியாயத்தீர்ப்பு, என் உக்கிரம், என் சாபங்கள், என் எரிச்சல், மற்றும் என் பொங்கியெழும் கோபம் என்னை எதிர்த்து நிற்கும் யாரொருவர் மேலும் எப்போது வேண்டுமானாலும் மூளும். யாருக்கும் என் கரம் இரக்கம் காட்டாது; முன்னர் எவ்வளவு உண்மையாக ஒருவர் எனக்கு ஊழியம் செய்திருந்தாலும், இன்று என் குமாரனை எதிர்த்தால் நான் அவர்களை உடனடியாக அழிப்பேன், மேலும் அவர்களை என் முன்னால் இருக்க அனுமதிக்க மாட்டேன். இதில் இருந்து, ஒருவரால் என்னுடைய இரக்கமற்ற கரத்தைக் காணமுடியும். ஜனங்களுக்கு என்னைப் பற்றி தெரியாததால், மேலும் அவர்களுடைய சுபாவங்கள் என்னை எதிர்ப்பதால், எனக்கு உண்மையாய் இருப்பவர்கள் கூட தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகவே உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களை மோசமாய்ப் பாதிக்கும்படி ஏதாவது நிகழ்ந்து விட்டால், அவர்கள் இருதயம் உடனடியாக மாறி என் பக்கத்தில் இருந்து விலகிச் செல்ல விரும்புகிறார்கள். இது தான் சாத்தானின் சுபாவம். நீங்கள் உண்மையாக இருப்பதாக நம்பிக் கொண்டு, கொள்கைப் பிடிவாதமுள்ளவர்களாய் இருக்கக் கூடாது! அவர்களுக்கு அதில் எதுவும் இல்லாவிட்டால், இந்த விலங்குக் கூட்டத்தால் தெளிவாக எனக்கு உண்மையாக இருக்க இயலாது. நான் என் ஆட்சிமுறை ஆணைகளை அறிவிக்காவிட்டால், நீங்கள் வெகு நாட்களுக்கு முன்னரே பின்வாங்கிப் போயிருப்பீர்கள். எனக்கு ஊழியம் செய்யவும் விரும்பாமல், அதே சமயம் என் கரத்தால் அழிக்கப்படவும் விரும்பாமல், நீங்கள் எல்லாம் இப்போது வாணலிக்கும் நெருப்புக்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். என்னை எதிர்க்கும் எவர் மேலும் எந்த நேரத்திலும் பேரழிவுகள் ஏற்படும் என்பதை நான் அறிவிக்காவிட்டால், நீங்கள் வெகு காலத்திற்கு முன்னரே விலகிப் போயிருப்பீர்கள். ஜனங்கள் கைக்கொள்ளும் சூழ்ச்சிகள் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? பலரும் இப்போது சிறு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஆனால் அந்த நம்பிக்கை ஏமாற்றமாக மாறும்போது, அவர்கள் மேலும் செல்ல விருப்பம் இல்லாமல் மாறுகிறார்கள் மற்றும் திரும்பிச் செல்லக் கேட்கிறார்கள். நான் யாரையும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக இங்கே வைக்க மாட்டேன் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன், ஆனால் உனக்கு ஏற்படும் விளைவுகள் பற்றிச் சிந்திக்க கவனம் செலுத்து. இதன் மூலம் நான் உன்னை மிரட்டவில்லை; இது உண்மைகளைப் பற்றியது. மனிதனுடைய சுபாவத்தைப் பற்றி என்னைத் தவிர யாரும் புரிந்து கொள்ள முடியாது; எனக்கு உண்மையாய் இருப்பதாக ஜனங்கள் எல்லாம் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களது உண்மைப் பற்று அசுத்தமானது என்று அவர்களுக்குத் தெரியாது. இந்த அசுத்தங்கள் ஜனங்களைப் பாழக்கும், ஏனெனில் அவை சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஒரு திட்டமே. வெகுகாலத்திற்கு முன்னரே அது என்னால் வெட்டவெளிச்சமாக்கப்பட்டது; நான் சர்வவல்லமையுள்ள தேவன், ஆகவே இத்தனை சுலபமான ஒன்றை எவ்வாறு என்னால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்? உன் இரத்தத்தையும் உன் மாம்சத்தையும் ஊடுருவி உன் எண்ணங்களை என்னால் பார்க்க முடியும். மனுஷனின் சுபாவத்தை ஆழமாகப் பார்க்க என்னால் முடியும், ஆனால் ஜனங்கள் தங்களைப் புத்திசாலிகளாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களைத் தங்களைத் தவிர யாரும் அறிய முடியாது என்று எண்ணுகிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவன் வானங்களிலும் பூமியிலும் எல்லவற்றிற்குள்ளும் இருப்பதை அவர்கள் அறியவில்லையா?

நான் என் குமாரனை கடைசி வரை நேசிப்பேன், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தையும் சாத்தானையும் என்றென்றைக்கும் வெறுப்பேன். என்னை எதிர்க்கும் எல்லோரையும் நான் சிட்சிப்பேன், ஓர் எதிரி கூட தப்ப முடியாது. “நான் சீயோனில் ஒரு பெரிய கல்லை வைக்கிறேன். விசுவாசிகளுக்கு இந்தக் கல் அவர்கள் கட்டுவதற்கான மூலைக்கல். விசுவாசியாதவர்களுக்கு இது இடறுதலுக்கான கல். பேய்களின் குமாரர்களுக்கு, இது அவர்களை நசுக்கிக் கொன்று போடும் கல்” என்று நான் முன்னரே கூறியிருக்கிறேன். முன்னாலேயே நான் இந்த வார்த்தைகளைப் பேசியதோடு மட்டுமல்லாமல், பலராலும் அவை தீர்க்கதரிசனமாக கூறப்பட்டிருக்கின்றன, மேலும் பலர் இக்காலத்தில் இந்த வசனத்தைப் படித்தும் இருக்கிறார்கள். மேலும், சிலர் இந்த வார்த்தைகளை விளக்க முயன்றிருக்கிறார்கள், ஆனால் இதுவரை யாரும் இந்த இரகசியத்தை வெளிப்படுத்தவில்லை, ஏனெனில் இந்தக் கிரியை கடைசி நாட்களின் இந்தக் காலத்தில் தான் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, சிலர் இந்த வார்த்தைகளை விளக்க முயற்சி செய்திருந்தாலும், அவர்களின் விளக்கங்கள் அனைத்தும் தவறானவை. இன்று, நான் உங்களுக்கு முழு அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறேன், இதனால் நீங்கள் என் முதற்பேறான குமாரர்களுக்கு நான் சாட்சி கொடுப்பதன் தீவிரத்தன்மையையும், அவ்வாறு செய்வதில் எனக்கிருக்கும் நோக்கத்தையும் அறிந்து கொள்வீர்கள். நான் சீயோனில் ஒரு பெரிய கல்லை வைத்திருக்கிறேன், மேலும் இந்தக் கல் சாட்சியளிக்கப்படும் என் முதற்பேறான குமாரர்களைக் குறிக்கிறது. இதில் ஏராளமான ஊழியக்காரர்கள் பின்வாங்கிப் போவார்கள். இங்கே, “விசுவாசியாதவர்கள்” பின்வாங்குபவர்களைக் குறிக்கிறது, ஏனெனில் என் குமாரனுக்கு சாட்சி அளிக்கப்படுகிறது. ஆகவே, இந்த வகையான நபர்களுக்கு இது ஓர் இடறும் கல்லாக இருக்கிறது. அது ஒரு கல் என்று நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வகையான நபர் என் கரத்தால் அழிக்கப்படுவான், மேலும் “ஜனங்கள் இடறுவதற்கான கல்” என்பது விழுதல் அல்லது பலவீனமாதல் தொடர்பாகக் கூறப்படவில்லை, ஆனால் என் கரத்தால் அழிக்கப்படுவது தொடர்பாகவே கூறப்பட்டிருக்கிறது. “விசுவாசிகளுக்கு, இந்தக் கல் அவர்கள் கட்டுவதற்கான மூலைக்கல்” என்பதில் “விசுவாசிகள்” என்பது எனக்கு உண்மையான ஊழியம் செய்த பின்னர் அவர்கள் பெறும் கிருபையையும் ஆசீர்வாதங்களையும் குறிக்கிறது. இந்த முழு பழைய யுகமும் சீக்கிரத்தில் ஒழிந்து போகும் என்பதை முதற்பேறான குமாரர்கள் சாட்சி அளிக்கப்பட்டு வருவது குறிக்கிறது; அதாவது, அது சாத்தானின் ராஜ்யம் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது; ஆகவே, புறஜாதியார்களுக்கு, அது நசுக்கிக் கொன்று போடும் கல். அதனால், எல்லாத் தேசங்களையும் துண்டு துண்டாக நொறுக்குவது முழு உலகமும் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்படுவதைக் குறிக்கிறது; பழையன கழிந்து போகும், எல்லாம் புதிதாக ஸ்தாபிக்கப்படும்—இதுவே “நொறுக்கப்படும்” என்பதற்கான உண்மையான அர்த்தம். நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? இந்தச் சில வார்த்தைகளின் மூலம் இந்தக் கடைசி கட்டத்தில் நான் செய்யும் கிரியையைத் தொகுத்துரைக்கலாம். இது என் அற்புதமான செயல், மேலும் நீங்கள் என் வார்த்தைகளுக்குள் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 117

அடுத்த: அத்தியாயம் 119

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக