கிரியையும் பிரவேசித்தலும் (9)

வேரூன்றிய இன மரபுகள் மற்றும் மனப்பான்மை நீண்ட காலமாக மனுஷனின் தூய்மையான மற்றும் குழந்தை போன்ற யதார்த்தமான ஆவியின் மீது ஒரு நிழலை வீசியிருக்கின்றன, மேலும் அவை சற்றும் உணர்வோ அல்லது சுய அறிவோ இல்லாதது போல, மனுஷனின் ஆத்துமாவை சிறிதளவும் மனிதத்தன்மையின்றித் தாக்கியிருக்கின்றன. இந்தப் பிசாசுகளின் வழிமுறைகள் மிகவும் கொடூரமானவைகள், மேலும் “கல்வி” மற்றும் “வளர்ப்பு” ஆகியவை பிசாசுகளின் ராஜா மனுஷனைக் கொல்லும் பாரம்பரிய முறைகளாக மாறிவிட்டதைப் போலாகிவிட்டன. அதன் “ஆழ்ந்த போதனையைப்” பயன்படுத்தி தன் அசிங்கமான ஆத்துமாவை முழுவதுமாக மறைக்கிறது, அது மனுஷனின் நம்பிக்கையைப் பெற ஆட்டுத்தோலை உடுத்துகிறது, பின்னர் மனுஷன் சோர்வடைந்து உறங்கும் போது அவனை முழுவதுமாக விழுங்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறது. அப்பாவி மனித இனம்—தாங்கள் வளர்க்கப்பட்ட நிலம் பிசாசின் தேசம் என்றும், அவர்களை வளர்த்தவன் உண்மையில் அவர்களைத் துன்புறுத்தும் சத்துருதான் என்றும் அவர்களால் எப்படி அறிந்திருக்க முடியும். ஆனாலும் மனுஷன் விழித்துக்கொள்வதே இல்லை; பசியையும் தாகத்தையும் தீர்த்துக்கொண்டு, தன்னை வளர்த்ததற்கான அவனது “பெற்றோரின்” “அன்பைத்” திருப்பிச் செலுத்தத் தயாராகிறான். மனுஷன் அப்படிப்பட்டவன்தான். தன்னை வளர்த்த ராஜாதான் தனது சத்துரு என்பது இன்றும் அவனுக்குத் தெரியவில்லை. பூமியில் மரித்தவர்களின் எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன, பிசாசு இடைவிடாமல் வெறித்தனமாக மகிழ்கிறான், மேலும் “பாதாள உலகத்தில்” மனுஷனுடைய மாம்சத்தை விழுங்கி, மனுஷனுடைய எலும்புக்கூடுகளுடன் கல்லறையைப் பகிர்ந்துகொண்டு, மனுஷனுடைய கந்தலான சரீரத்தின் கடைசி மிச்சங்களை வீணாகப் பட்சிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். ஆயினும் மனுஷன் எப்பொழுதும் அறியாமையிலேயே இருக்கிறான், பிசாசை ஒருபோதும் தன் சத்துருவாகக் கருதவில்லை, மாறாக தன் முழு மனதுடன் அதற்குச் சேவை செய்கிறான். இப்படிப்பட்ட கேடுகெட்ட மனுஷர்கள் தேவனை அறிய இயலாதவர்களாய் இருக்கிறார்கள். தேவன் மாம்சமாகி அவர்களிடையே வந்து, அவருடைய இரட்சிப்பின் அனைத்து கிரியைகளையும் நிறைவேற்றுவது எளிதானதா? ஏற்கனவே பாதாளத்தில் மூழ்கியிருக்கும் மனுஷனால் எப்படி தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்? மனுக்குலத்தின் கிரியைக்காக தேவன் சகித்திருக்கிற உறக்கமற்ற இரவுகள் பல உள்ளன. உயரத்திலிருந்து மிகக் தாழ்வான ஆழத்திற்கு, மனுஷன் வாழ்கிறதான, வாழ்ந்துகொண்டிருக்கிற நரகத்தில் மனுஷனுடன் தன் நாட்களைக் கழிக்க அவர் இறங்கி வந்திருக்கிறார், மனுஷனிடையே உள்ள இழிநிலையைப் பற்றி அவர் ஒருபோதும் குறை கூறவுமில்லை, அவனது கீழ்ப்படியாமைக்காக மனுஷனை நிந்திக்கவுமில்லை, ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதால் மிகப்பெரிய அவமானத்தைத் தாங்குகிறார். தேவன் எப்படி நரகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியும்? அவர் தமது ஜீவனை எப்படி நரகத்தில் கழிக்க முடியும்? ஆனால், முழு மனிதகுலத்திற்காக, முழு மனிதகுலமும் விரைவில் இளைப்பாற வேண்டும் என்பதற்காக, அவர் பூமிக்குவரும்படி, அவர் அவமானங்களைத் தாங்கி, அநீதியைச் சகித்துக்கொண்டு, மனுஷனை இரட்சிக்க, தனிப்பட்ட முறையில் புலியின் குகைக்குள், “நகரம்” மற்றும் “பாதாளத்திற்குள்” பிரவேசித்தார். தேவனை எதிர்க்க மனுஷன் எப்படித் தகுதியுள்ளவனாகிறான்? அவன் தேவனைப் பற்றிக் குறைகூறக் காரணம் என்ன? தேவனை நோக்கிப் பார்க்க அவனால் எப்படி துணிச்சலைப் பெற்றிருக்க முடியும்? பரலோக தேவன் இந்த மிகவும் அசுத்தமான தேசத்திற்கு வந்துள்ளார், மேலும் ஒருபோதும் தனது மனவருத்தங்களை வெளிப்படுத்தியதில்லை, அல்லது மனுஷனைப் பற்றிக் குறைகூறியதில்லை, மாறாக மனுஷனின் நாசமாக்குதல்[1] மற்றும் ஒடுக்குமுறையை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார். மனுஷனின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அவர் ஒருபோதும் பதிலடி கொடுத்ததில்லை, மனுஷனிடம் அதிகப்படியான கோரிக்கைகளை வைத்ததில்லை, மனுஷனிடம் அநியாயமான கோரிக்கைகளை அவர் ஒருபோதும் வைத்ததுமில்லை; அவர் மனுஷனுக்குத் தேவையான அனைத்து கிரியைகளையும்: போதித்தல், பிரகாசிப்பித்தல், கடிந்துகொள்ளுதல், வார்த்தைகளைப் புடமிடுதல், நினைவூட்டுதல், அறிவுறுத்துதல், ஆறுதல்படுத்துதல், நியாயத்தீர்ப்பளித்தல் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றைக் குறைகூறாமல் செய்கிறார். அவருடைய படிகளில் எது மனுஷனுடைய வாழ்க்கைக்காக இருக்கவில்லை? மனுஷனின் வாய்ப்புகளையும் விதியையும் அவர் நீக்கிவிட்டாலும், தேவனால் செயல்படுத்தப்பட்ட எந்தப் படி மனுஷனின் தலைவிதிக்காக இல்லை? அவற்றில் எது மனுஷனின் பிழைப்புக்காக இருக்கவில்லை? இந்த துன்பத்திலிருந்தும், இரவைப் போல இருண்ட அந்தகார வல்லமைகளின் அடக்குமுறையிலிருந்தும் மனுஷனை விடுவிக்க அவைகளில் எது இருந்ததில்லை? அவற்றில் எது மனுஷனுக்காக இல்லை? ஒரு அன்பான தாயின் இருதயத்தைப் போல் இருக்கிற தேவனுடைய இருதயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய வாஞ்சையுள்ள இருதயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? தேவனுடைய உணர்ச்சிமிக்க இருதயம் மற்றும் தீவிர எதிர்பார்ப்புகள் உணர்வற்ற இருதயங்களுடனும், இரக்கமற்ற, அலட்சியமான கண்களுடனும், மனுஷனின் தொடர்ச்சியான நிந்தனைகள் மற்றும் அவமதிப்புகளாலும் திருப்பிச் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன; கடுமையான கருத்துக்கள், பழிச்சொல் மற்றும் சிறுமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் அவைகள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன; மனுஷனின் பரியாசத்துடனும், அவனுடைய நசுக்குதல் மற்றும் நிராகரிப்புடனும், அவனுடைய தவறான புரிதல்கள், புலம்பல், பிரிதல், தவிர்த்தல் மற்றும் வஞ்சகம், தாக்குதல்கள் மற்றும் கசப்புடன் மட்டுமே அல்லாமல் வேறொன்றினாலும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. தயையுள்ள வார்த்தைகள் கடுமையான புருவங்களையும், அசையும் ஆயிரம் விரல்களின் பலமான எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளன. தேவனால் தலையைத் தாழ்த்தி, விருப்பமுள்ள எருது போல் ஜனங்களுக்கு ஊழியம் செய்ய மட்டுமே முடியும்.[2] அநேக முறை சூரியன்களையும் சந்திரன்களையும், அநேக முறை நட்சத்திரங்களையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார், அநேக முறை விடியற்காலையில் புறப்பட்டுச் சென்று அந்தி சாயும் வேளையில் திரும்பியிருக்கிறார், அவர் தம்முடைய பிதாவை விட்டுப் பிரிந்த வேதனையைவிட ஆயிரம் மடங்கு அதிக வேதனையைச் சகித்துக் கொண்டு, மனுஷனின் தாக்குதல்களையும் முறிவடைதலையும், மற்றும் மனுஷனின் நடத்துதலையும் கிளைநறுக்குதலையும் சகித்துக்கொண்டு அலைந்து திரிந்தார். தேவனுடைய மனத்தாழ்மை மற்றும் மறைந்திருக்கும் தன்மை மனுஷனின் தவறான பாரபட்சத்துடனும்[3], மனுஷனுடைய நியாயமற்ற பார்வைகளுடனும் மற்றும் நியாயமற்ற நடத்துதலுடனும் திருப்பிச் செலுத்தப்படுகின்றன, மேலும் அமைதியான முறையில் தேவன் மறைவில் கிரியை செய்வது, அவரது பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை மனுஷனின் பேராசை கொண்ட பார்வையால் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கின்றன; மனுஷன் மனச்சாட்சியில் உறுத்தல் இல்லாமல், தேவனை மிதித்துக் கொல்ல முயற்சிக்கிறான், மேலும் தேவனைத் தரையில்போட்டு மிதிக்க முயற்சிக்கிறான். தேவனை நடத்துவதில் மனுஷனின் மனப்பான்மை “அரிய புத்திசாலித்தனம்” ஆகும், மேலும், மனுஷனால் கொடுமைப்படுத்தப்படும் மற்றும் அலட்சியப்படுத்தப்படும் தேவன், பல்லாயிரக்கணக்கான ஜனங்களுடைய கால்களுக்குக் கீழே நேரடியாக நசுக்கப்படுகிறார், அதே நேரத்தில், மலையின் ராஜாவாக இருக்கப்போவதைப் போல, முழுமையான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவும்[4], திரைக்குப் பின்னால் இருந்து நீதிமன்றத்தை நடத்தவும், அவரை எதிர்த்துப் போராடவோ அல்லது தொந்தரவு செய்யவோ அனுமதிக்கப்படாதவனாக, திரைக்குப் பின்னால் மனச்சாட்சி மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படும் இயக்குநராக தேவனை மாற்றவும் விரும்புவது போல மனுஷன் தான்மட்டுமே உயர்ந்து நிற்கிறான். தேவன் கடைசி பேரரசரின் பங்கை ஆற்ற வேண்டும், அவர் எல்லா சுதந்திரமும் அற்ற ஒரு பொம்மையாக[5] இருக்க வேண்டும், மனுஷனுடைய கிரியைகள் சொற்களால் வெளிப்படுத்த முடியாதவை, அப்படியானால், தேவனிடம் இதையும் அதையும் கோருவதற்கு அவன் எப்படித் தகுதியுள்ளவனாவான்? தேவனிடம் ஆலோசனைகளை முன்வைக்க அவன் எப்படித் தகுதியுள்வனாவான்? அவனுடைய பலவீனங்களுக்கு தேவன் அனுதாபம் காட்ட வேண்டும் என்று கோருவதற்கு அவன் எப்படித் தகுதியுள்ளவனாவான்? தேவனுடைய இரக்கத்தைப் பெற அவன் எவ்வாறு ஏற்புடையவனாவான்? தேவனுடைய பெருந்தன்மையை மீண்டும் மீண்டும் பெற அவன் எவ்வாறு ஏற்புடையவனாவான்? தேவனுடைய மன்னிப்பை மீண்டும் மீண்டும் பெற அவன் எவ்வாறு ஏற்புடையவனாவான்? அவன் மனச்சாட்சி எங்கே? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனுடைய இருதயத்தை உடைத்துவிட்டான், அவன் நீண்ட காலமாக தேவனுடைய இருதயத்தைத் துண்டு துண்டாக்கிவிட்டான். சிறிதளவு அரவணைப்புடன் மட்டுமே இருந்தாலும், மனுஷன் தன்னிடத்தில் கருணையுடன் இருப்பான் என்ற நம்பிக்கையில், தேவன் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் மனுஷர்களிடையே வந்தார். ஆயினும், தேவனுடைய இருதயம் மனுஷனால் ஆறுதல் பெறத் தாமதமாகிறது, அவர் பெற்றதெல்லாம் பனிப்பந்து[6] தாக்குதல்கள் மற்றும் வேதனைகள் மட்டுமே ஆகும். மனுஷனின் இருதயம் மிகவும் பேராசை கொண்டது, அவனது ஆசை மிகவும் அதிகமாக உள்ளது, அவனால் ஒருபோதும் திருப்தியடைய முடிவதில்லை, அவன் எப்போதும் தீங்கு விளைவிப்பவனாகவும், மூடத்தனமானவனாகவும் இருக்கிறான், அவன் எந்த சுதந்திரத்திற்கும் பேச்சுரிமைக்கும் தேவனை அனுமதிப்பதில்லை, மேலும், தேவன் அவமானத்திற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக விட்டுவிடுகிறான், மற்றும் மனுஷன் தன் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அவரைக் கையாள அவனை அனுமதிக்கிறான்.

சிருஷ்டிப்பு முதல் இன்று வரை, தேவன் அநேக வேதனைகளைச் சகித்தும், அநேகத் தாக்குதல்களைச் சந்தித்துமிருக்கிறார். ஆனாலும் கூட, இன்று, இன்னும் மனுஷன் தேவனிடம் வைக்கும் கோரிக்கைகளைத் தளர்த்துவதில்லை, இன்னும் அவன் தேவனை ஆராய்ந்துகொண்டே இருக்கிறான், அவரிடத்தில் இன்னும் அவனுக்குச் சகிப்புத்தன்மை இல்லை, தேவன் தவறான பாதையைத் தெரிந்துகொள்வார் என்பது போலவும் பூமியில் உள்ள தேவன் மிருகத்தனமானவராக மற்றும் பகுத்தறிவு இல்லாதவராகவும், அல்லது கலவரத்தைத் தூண்டுபவராகவும், அல்லது அவர் எதற்கும் உதவாதவராகவும் இருக்கிறார் என்று மிகவும் பயப்படுவதைப் போல அவருக்கு அறிவுரை கூறுவதையும், அவரைப் பரியாசம் செய்வதையும், திருத்துவதையும் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மனுஷன் எப்போதும் தேவனிடம் இத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்கிறான். அது எப்படி தேவனை வருத்தப்படுத்தாமல் இருக்கும்? மாம்சமாகுவதில், தேவன் மிகப்பெரிய வேதனையையும் அவமானத்தையும் சகித்திருக்கிறார்; அப்படியானால், மனுஷனின் போதனைகளை தேவனை ஏற்றுக்கொள்ள வைப்பது எவ்வளவு மோசமானது? மனுஷர்கள் மத்தியில் அவரது வருகையானது, அவர் பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டதைப் போன்ற அனைத்து சுதந்திரத்தையும் பறித்துவிட்டது, மேலும் மனுஷனால் துண்டாடப்படுவதை அவர் சற்றும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டார். இது அவமானகரமாக இல்லையா? ஒரு சாதாரண மனுஷனின் குடும்பத்தின் மத்தியில் வந்ததில், “இயேசு” மிகப்பெரிய அநீதிக்கு ஆளானார். இன்னும் அவமானகரமான விஷயம் என்னவென்றால், அவர் இந்த அழுக்கான உலகத்திற்கு வந்து, தம்மை மிகக் தாழ்ந்த ஆழத்திற்குத் தாழ்த்திக் கொண்டார், மேலும் உயர்ந்த சாதாரணத்தன்மையின் ஒரு மாம்சத்தை எடுத்துக் கொண்டார். ஓர்அற்ப மனுஷனாக மாறுவதில், உன்னதமான தேவன் கஷ்டங்களை அனுபவிக்கமாட்டாரா? மேலும் அவர் மனித குலத்திற்காக அவ்வாறு செய்யவில்லையா? அவர் தன்னைப் பற்றி நினைத்த நேரங்கள் உண்டா? அவர் யூதர்களால் நிராகரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகும், ஜனங்களால் ஏளனமும் பரியாசமும் பண்ணப்பட்ட பிறகும், அவர் ஒருபோதும் பரலோகத்தினிடத்தில் குறைகூறவில்லை அல்லது பூமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்று, யூதர்கள் போன்ற இந்த ஜனங்கள் மத்தியில், இந்த ஆயிரம் ஆண்டுகால சோகம் மீண்டும் தோன்றியுள்ளது. அவர்கள் அதே பாவங்களைச் செய்யவில்லையா? தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்கு மனுஷனை எது தகுதிப்படுத்துகிறது? அவன் தேவனை எதிர்த்து பின்னர் அவரது ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லையா? மனுஷன் ஏன் நீதியை எதிர்கொள்வதில்லை, அல்லது சத்தியத்தைத் தேடுவதில்லை? தேவன் செய்கிற கிரியையில் அவன் ஏன் ஒருபோதும் ஆர்வம் காட்டுவதில்லை? அவனுடைய நீதி எங்கே? அவனுடைய நியாயம் எங்கே? தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த அவனுக்குத் துணிச்சல் இருக்கிறதா? அவனுடைய நீதிக்கான உணர்வு எங்கே? மனுஷனுக்குப் பிரியமானவைகளில் எவ்வளவு தேவனுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன? மனுஷன் பாலாடைக்கட்டியிலிருந்து சுண்ணாம்பைக் கண்டுபிடிக்க முடியாது,[7] அவன் எப்போதும் கருப்பை வெள்ளையோடு குழப்புகிறான்[8], அவன் நீதியையும் உண்மையையும் அடக்குகிறான், மேலும் அநியாயத்தையும் அநீதியையும் உயரே காற்றில் பறக்கவிடுகிறான். அவன் ஒளியைத் துரத்திவிடுகிறான், இருளின் நடுவே சுழன்றுகொண்டிருக்கிறான். சத்தியத்தையும் நீதியையும் தேடுபவர்கள் ஒளியைத் துரத்திவிடுகிறார்கள், தேவனைத் தேடுபவர்கள் அவரைத் தங்கள் கால்களுக்குக் கீழே மிதித்து, வானபரியந்தம் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். மனுஷன் ஒரு கொள்ளைக்காரனிலிருந்து[9] வேறுபட்டவன் அல்ல. அவனுடைய பகுத்தறிவு எங்கே? சரி எது தவறு எது என்று யாரால் சொல்ல முடியும்? யார் நீதியை நிலைநாட்ட முடியும்? சத்தியத்திற்காகத் துன்பப்படுவதற்கு யார் ஆயத்தமாக இருக்கிறார்கள்? ஜனங்கள் தீயவர்கள் மற்றும் கொடூரமானவர்கள்! தேவனைச் சிலுவையில் அறைந்து, அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள், அவர்களின் மூர்க்கத்தனமான கூக்குரல் ஓயாமல் இருக்கிறது. அவர்கள் கோழிகள் மற்றும் நாய்களைப் போன்றவர்கள், அவர்கள் கூட்டுச் சேர்ந்து, சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த ராஜ்யத்தை நிறுவியுள்ளனர், அவர்களின் தலையீடு எந்த இடத்தையும் தொந்தரவு செய்யாமல் விட்டுவைக்கவில்லை, அவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டு வெறித்தனமாக அலறுகிறார்கள், அனைவரும் ஒன்றிணைந்தனர், மேலும் ஒரு சலசலப்பு மற்றும் கலகலப்புடன் கொந்தளிப்பான சூழல் பரவுகிறது, மற்றும் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் தங்களை இணைத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து வெளிவருகிறார்கள், அனைவரும் தங்கள் முற்பிதாக்களின் “புகழ்பெற்ற” பெயர்களை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இந்த நாய்கள் மற்றும் கோழிகள் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனைத் தங்கள் மனதில் பின்னோக்கித் தள்ளி, தேவனுடைய இருதயத்தின் நிலைக்கு ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. மனுஷன் ஒரு நாய் அல்லது கோழி போன்றவன் என்று தேவன் சொல்வதில் சிறிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குரைக்கும் நாய், மற்ற நூறு நாய்களை ஊளையிட வைக்கிறது; இந்த வழியில், தேவனுடைய கிரியை எப்படி இருக்கிறது, நீதி இருக்கிறதா, தேவனுக்குத் தம்முடைய கால்களை வைக்க ஓர் இடம் இருக்கிறதா, நாளைய தினம் எப்படிப்பட்டதாக இருக்கும், அவனது சொந்தத் தாழ்வுநிலை, மற்றும் அவனது சொந்த அசுத்தம் ஆகியவற்றைப் பற்றி கவனம் செலுத்தாமல், அவன் அதிகமான விளம்பரத்தின் மூலமாக தேவனுடைய கிரியையை இன்று வரை கொண்டுவந்துள்ளான். மனுஷன் ஒருபோதும் விஷயங்களைப் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை, அவன் நாளைய தினத்தைப் பற்றித் தன்னில் கவலைப்பட்டதே இல்லை, மேலும் நன்மை பயக்கும் மற்றும் விலையேறப்பெற்ற அனைத்தையும் தன் அரவணைப்பில் சேர்த்துக் கொண்டான், குப்பைகள் மற்றும் எஞ்சியவற்றைத்[10] தவிர வேறு எதையும் தேவனுக்கு விட்டுவைக்கவில்லை. மனிதகுலம் எவ்வளவு கொடூரமானது! அவர் தேவனுக்காக எந்த உணர்வுகளையும் விட்டுவைக்கவில்லை, மேலும் தேவனுடைய அனைத்தையும் ரகசியமாக விழுங்கிய பிறகு, அவன் தேவனுடைய இருப்புக்கு மேலும் கவனம் செலுத்தாமல், அவரைத் தனக்குப் பின்னால் தூரத்தில் தூக்கி எறிந்துவிடுகிறான். அவன் தேவனை அனுபவிக்கிறான், ஆனாலும் தேவனை எதிர்க்கிறான், மேலும் அவனுடைய வாய் தேவனுக்கு நன்றி செலுத்தித் துதித்துக்கொண்டிருக்கும்போதே, அவரைக் காலின் கீழ்போட்டு மிதிக்கிறான்; அவன் தேவனிடம் ஜெபம் செய்து, தேவனைச் சார்ந்து இருக்கிற அதே நேரத்தில் தேவனை ஏமாற்றவும் செய்கிறான்; அவன் தேவனுடைய நாமத்தை “உயர்த்துகிறான்”, மேலும் தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்க்கிறான், ஆனாலும் அவன் திமிராக வெட்கமின்றி தேவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்து தேவனுடைய “அநீதியை” நியாயந்தீர்க்கிறான்; அவன் தேவனுக்குக் கடமைப்பட்டவன் என்ற வார்த்தைகள் அவனுடைய வாயிலிருந்து வெளிவருகின்றன, மேலும் அவன் தேவனுடைய வார்த்தைகளைப் பார்க்கிறான், ஆனால் தன் இருதயத்தில் அவன் தேவனைத் திட்டுகிறான்; அவன் தேவனிடம் “சகிப்புத்தன்மை கொண்டவன்,” ஆனால் தேவனை ஒடுக்குகிறான், மேலும் அவனுடைய வாய், அது தேவனுடைய பொருட்டு என்று கூறுகிறது; தனது கைகளில் அவன் தேவனுடைய பொருட்களை வைத்திருக்கிறான், தன் வாயில் தேவன் கொடுத்த உணவை மென்று சாப்பிடுகிறான், ஆனாலும் அவனது கண்கள், ஏதோ அவருடைய அனைத்தையும் ஒரேடியாக விழுங்க விரும்புவதைப்போல, தேவன் மீது அக்கறையற்ற மற்றும் உணர்ச்சியற்ற பார்வையை வைக்கிறான். அவன் உண்மையைப் பார்க்கிறான், ஆனால் அது சாத்தானின் தந்திரம் என்று வலியுறுத்துகிறான்; அவன் நீதியைப் பார்க்கிறான், ஆனால் அது சுயமறுப்பாக மாறும்படி கட்டாயப்படுத்துகிறான்; அவன் மனுஷனின் கிரியைகளை நோக்கிப் பார்த்து, தேவனும் அவைகளைப் போலத்தான் இருக்கிறார் என்று வலியுறுத்துகிறான்; அவன் மனுஷனின் இயற்கையான வரங்களைப் பார்த்து, அவை உண்மை என்று வலியுறுத்துகிறான்; அவன் தேவனுடைய செயல்களைப் பார்த்து, அவை அகந்தை மற்றும் கர்வம், இறுமாப்பு மற்றும் சுயநீதி ஆகியவற்றை வலியுறுத்துகிறான்; மனுஷன் தேவனைப் பார்க்கும்போது, அவரை மனுஷனாக முத்திரை குத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறான், மேலும் சாத்தானுடன் இரகசியமாக ஒத்துழைக்கும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் இருக்கையில் அவரை வைக்கக் கடுமையாக முயற்சி செய்கிறான்; அவை தேவனுடைய வாக்கியங்கள் என்பதை அவன் நன்கு அறிவான், ஆனாலும் அவற்றை ஒரு மனுஷனின் எழுத்துக்களே தவிர வேறொன்றும் இல்லை என்று சொல்லுவான்; ஆவியானவர் மாம்சத்தில் உணரப்படுகிறார், தேவன் மாம்சமாகிவிட்டார் என்பதை அவன் நன்கு அறிவான், ஆனால் இந்த மாம்சமானது சாத்தானின் சந்ததி என்று மட்டுமே கூறுகிறான்; தேவன் தாழ்மையானவர், மறைந்திருப்பவர் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் சாத்தான் அவமானப்பட்டான், தேவன் ஜெயங்கொண்டிருக்கிறார் என்று மட்டுமே கூறுகிறான். எவ்வளவாய் ஒன்றுக்கும் உதவாதவன்! காவல் நாய்களாகப் பணிபுரியக்கூட மனுஷன் தகுதியற்றவன்! அவன் கருப்பு மற்றும் வெள்ளை என வேறுபடுத்துவதில்லை, மேலும் வேண்டுமென்றே கருப்பை வெள்ளையாக மாற்றுகிறான். மனுஷனின் வல்லமைகளும் மனுஷனின் முட்டுக்கட்டைகளும் தேவனுடைய விடுதலையின் நாளை தாங்கிக்கொள்ள முடியுமா? வேண்டுமென்றே தேவனை எதிர்த்த பிறகு, மனுஷனால் கொஞ்சம்கூட அக்கறைகொள்ள முடியவில்லை, அல்லது தேவனுக்குத் தன்னைக் காட்டிக்கொள்ள எந்த அனுமதியும் அளிக்காமல், அவரைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்கிறான். நீதி எங்கே? அன்பு எங்கே? அவன் தேவனுக்கு அருகில் அமர்ந்து, மன்னிப்புக்காகக் கெஞ்சுவதற்கும், அவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியச்செய்யவும், அவனுடைய சூழ்ச்சிகள் அனைத்திற்கும் இணங்கச்செய்வதற்கும் தேவனைத் தன் முழங்காலிடத்திற்குத் தள்ளுகிறான், மேலும் தேவன் செய்யும் எல்லாவற்றிலும் அவனது ஆலோசனையை அவர் எடுக்கும்படி செய்கிறான், இல்லையெனில் அவன் சீற்றமுள்ளவனாகவும்[11] ஆத்திரப்படுகிறவனாகவும் மாறுகிறான். கருப்பை வெள்ளையாகத் திரித்துவிடும் இப்டிப்பட்ட அந்தகார ஆதிக்கத்தின் கீழ் தேவனால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும்? அவர் எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்? தேவன் தமது சமீபத்திய கிரியையைத் தொடங்கியபோது, அது வானங்களையும் பூமியையும் உருவாக்கும் கிரியையைப் போல இருந்தது என்று ஏன் கூறப்படுகிறது? மனுஷனின் “ஓயாது பாயும் ஜீவத் தண்ணீரின் நீர் ஊற்று” தேவனுக்கு எதிராக மனவுறுத்தல் இல்லாமல்[12] போட்டியிடும்போது, மனுஷனின் கிரியைகள் மிகவும் “உயர்ந்தது,” “ஓயாது பாயும் ஜீவத் தண்ணீரின் நீர் ஊற்று” மனுஷனின் நிலமாகிய இருதயத்தை இடைவிடாமல் “நிரப்புகிறது”; இரண்டும் ஒப்புரவு செய்யமுடியாதவைகள், மேலும், மனுஷன் அதில் உள்ள ஆபத்துக்களைக் கருத்தில் கொள்ளாமல் ஒத்துழைக்கும்போது, இது சிறிதும் அக்கறையின்றி தேவனுக்குப் பதிலாக ஜனங்களுக்கு வழங்குகிறது. மேலும் அதன் விளைவு என்ன? அவர் அவர்களது கவனத்தை ஈர்த்துவிடுவார் என்று மிகவும் அஞ்சி, மேலும் தேவனுடைய ஜீவத் தண்ணீரின் நீரூற்று மனுஷனை கவர்ந்திழுத்து மனுஷனை ஆதாயப்படுத்திவிடும் என்று மிக அதிகமாகப் பயந்து அவன் கொஞ்சமும் பரிவற்றவனாய் தேவனை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு, ஜனங்கள் அவருக்குச் செவி கொடாதபடி, அவரை வெகு தொலைவில் வைக்கிறான். இவ்வாறு, பல வருட உலகக் கவலைகளை அனுபவித்த பிறகு, அவன் தேவனுக்கு எதிராக சதி செய்து, சூழ்ச்சி செய்கிறான், மேலும் தேவனைத் தனது தண்டனையின் இலக்காகவும் ஆக்குகிறான். தேவன் அவனது கண்ணில் ஒரு துரும்பைப் போல ஆகிவிட்டார் போலும், மேலும் தேவனைப் பிடித்து, அவரைப் புடமிடுவதற்கும் சுத்திகரிப்பதற்கும் அக்கினியில் போட வேண்டும் என்று தீராத ஆசைப்படுகிறான். தேவனுடைய அசௌகரியத்தைக் கண்டு மனுஷன் நெஞ்சில் அடித்துக்கொண்டு சிரிக்கிறான், இவை மட்டுமே பகுத்தறிவு மற்றும் விவேகம் போலவும், இவை மட்டுமே பரலோகத்தின் சரியான மற்றும் நியாயமான வழிமுறைகள் என்பது போலவும் மகிழ்ச்சியில் நடனமாடுகிறான், தேவனும் சுத்திகரிப்பில் மூழ்கிவிட்டார் என்று கூறுகிறான், மேலும் தேவனுடைய இழிவான அசுத்தங்களை அவன் எரித்து சுத்திகரித்துவிடுவதாகக் கூறுகிறான். மனுஷனின் இந்தக் கொடூர நடத்தை வேண்டுமென்றே செய்வதைப் போலவும் மற்றும் சுயநினைவின்றி செய்வதைப் போலவும் தெரிகிறது. மனுஷன் அவனது அசிங்கமான முகம் மற்றும் அவனது அருவருப்பு, மற்றும் அசுத்தமான ஆத்துமா மற்றும் ஒரு பிச்சைக்காரனின் பரிதாபமான தோற்றம் ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறான்; வெகுதூரம் அலைந்து திரிந்த பிறகு, அவன் ஒரு பரிதாபகரமான தோற்றத்தைப் பெற்றுக்கொண்டு, பரலோகத்தின் மன்னிப்புக்காகக் கெஞ்சுகிறான், இது மிகவும் பரிதாபகரமான நாய்க்குட்டி போன்றது. மனுஷன் எப்பொழுதும் விரும்பத்தகாத விதத்தில் செயல்படுகிறான், “அவன் மற்றவர்களைப் பயமுறுத்த, எப்போதும் புலியின் முதுகில் சவாரி செய்கிறான்,”[அ] அவன் எப்போதும் ஒரு பங்கை செயல்படுத்துகிறான், அவன் தேவனுடைய இருதயத்திற்கு சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை, தன்னுடைய சொந்த நிலைக்கு எந்த ஒரு புரிந்துகொள்ளுதலையும் ஏற்படுத்துவதில்லை. தேவன் அவனுக்குத் தீமை செய்துவிட்டார் என்பது போலவும் மற்றும் அவனை அப்படி நடத்தக்கூடாது என்பது போலவும், பரலோகம் கண்கள் இல்லாமல் இருப்பது போலவும், வேண்டுமென்றே விஷயங்களை அவனுக்குக் கடினமாக்குவது போலவும், அவன் வெறுமனே அமைதியாக தேவனை எதிர்க்கிறான். இப்படியே மனுஷன் எப்பொழுதும் இரகசியமாகத் தீய சதிகளைச் செயல்படுத்துகிறான், தேவனிடத்தில் வைக்கும் தன் கோரிக்கைகளைச் சிறிதும் தளர்த்தாமல், கொள்ளையடிக்கும் கண்களால் பார்த்து, தேவனுடைய ஒவ்வொரு அசைவையும் வெறித்தனமாகப் பார்த்து, தான் தேவனுக்குச் சத்துரு என்பதை ஒருபோதும் நினைக்காமல், தேவன் மூடுபனியைப் பிரித்து, விஷயங்களைத் தெளிவுபடுத்தி, “புலியின் வாயிலிருந்து” அவனைக் காப்பாற்றி, அவனுடைய குறைகளைத் தீர்க்கிறார் . காலங்காலமாக பலர் பங்காற்றி வந்த, தேவனை எதிர்க்கும் செயலை இன்றும் தாங்கள் ஆற்றிவருவதை ஜனங்கள் நினைப்பதில்லை; அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும், அவர்கள் நீண்ட காலமாக வழிதவறிச் சென்றுவிட்டார்கள் என்பதையும், அவர்கள் புரிந்துகொண்ட அனைத்தும் நீண்ட காலமாக கடல்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர்களால் எப்படி அறிந்துகொள்ள முடியும்.

எப்போதாவது சத்தியத்தை ஏற்றுக்கொண்டவன் யார்? எப்போதாவது தேவனை இருகரம் நீட்டி வரவேற்றவன் யார்? தேவனுடைய தோன்றுதலை மகிழ்ச்சியுடன் விரும்பியவன் யார்? மனுஷனின் நடத்தையானது நீண்ட காலமாக மோசமாகிவிட்டது, மேலும் அவனது அசுத்தம் நீண்ட காலமாக தேவனுடைய ஆலயத்தை அடையாளம் காண முடியாதபடி ஆக்கிவிட்டது. இதற்கிடையில், மனுஷன் இன்னும் தனது சொந்தக் கிரியையைச் செய்கிறான், எப்போதும் தேவனைத் துச்சமாகப் பார்க்கிறான். தேவனுக்கு எதிரான அவனது எதிர்ப்பு கடினமாக மாறியது போலவும், மாற்றப்படாதது போலவும் உள்ளது, இதன் விளைவாக, அவன் தனது வார்த்தைகள் மற்றும் செயல்களுக்காக இனி எவ்விதத்திலும் தவறாக நடத்தப்படுவதை விட அவன் சபிக்கப்படுவான். இத்தகைய ஜனங்களால் எப்படி தேவனை அறிய முடியும்? அவர்கள் தேவனிடத்தில் எப்படி இளைப்பாறுதலைக் கண்டடைய முடியும்? மேலும் அவர்கள் தேவனுக்கு முன்பாக வர எப்படித் தகுதியானவர்களாக இருக்க முடியும்? சந்தேகத்திற்கு இடமின்றி, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தில் தன்னை அர்ப்பணிப்பதில் எந்தத் தவறும் இல்லை—ஆனால் தன்னலமின்றி தங்கள் சொந்த இரத்தத்தையும் கண்ணீரையும் அர்ப்பணிக்கிற அதே நேரத்தில், ஜனங்கள் ஏன் எப்போதும் தேவனுடைய கிரியையையும் தேவனுடைய முழுமையையும் தங்கள் மனதின் பின்னுக்குத் தள்ளி விடுகிறார்கள்? தன்னலமற்ற பக்திக்கான ஜனங்களின் உற்சாகம், சந்தேகத்திற்கு இடமின்றி, விலையேறப்பெற்றதுதான்—ஆனால் அவர்கள் பின்னுகிற “பட்டு” தேவன் என்னவாக இருக்கிறார் என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்த முற்றிலும் இயலாததாக இருக்கிறது என்பதை அவர்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்? ஜனங்களுடைய நல்ல நோக்கங்கள், சந்தேகத்திற்கு இடமின்றி, விலையேறப்பெற்றவையாகவும் அரிதானவையாகவும் இருக்கின்றன—ஆனால் அவர்களால் எப்படி “விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை”[13] விழுங்க முடியும்? உங்களில் ஒவ்வொருவரும் உங்களது கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்: நீங்கள் இரக்கமற்ற சிட்சை மற்றும் சாபங்களிலிருந்து ஏன் பிரிந்து இருந்ததில்லை? மகத்துவமான வார்த்தைகளுடனும் நீதியான நியாயத்தீர்ப்புடனும் ஜனங்கள் ஏன் எப்போதும் இத்தகைய “நெருக்கமான சம்பந்தத்தில்” இருக்கிறார்கள்? தேவன் உண்மையிலேயே அவர்களைச் சோதித்துக்கொண்டிருக்கிறாரா? தேவன் வேண்டுமென்றே அவர்களைப் புடமிட்டுக்கொண்டிருக்கிறாரா? புடமிடுதலுக்கு மத்தியில் ஜனங்கள் எவ்வாறு பிரவேசிக்கிறார்கள்? அவர்கள் உண்மையிலேயே தேவனுடைய கிரியையை அறிந்திருக்கிறார்களா? தேவனுடைய கிரியை மற்றும் அவர்களின் சொந்த பிரவேசத்திலிருந்து ஜனங்கள் என்ன பாடங்களைக் கற்றிருக்கிறார்கள்? ஜனங்கள் தேவனுடைய அறிவுரையை மறந்துவிடாமல் இருப்பார்களாக, மேலும் அவர்கள் தேவனுடைய கிரியையைப் பற்றிய நுண்ணறிவைக் கொண்டிருப்பார்களாக, அதைத் தெளிவாக அடையாளம் கண்டு, தங்கள் சொந்த பிரவேசத்தைச் சரியாக நிர்வகிப்பார்களாக.

அடிக்குறிப்புகள்:

1. “நாசமாக்குதல்” என்பது மனிதகுலத்தின் கீழ்ப்படியாமையை அம்பலப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

2. “கடுமையான புருவங்களையும், அசையும் ஆயிரம் விரல்களின் பலமான எதிர்ப்பையும் எதிர்கொண்டு, தலையைத் தாழ்த்தி, விருப்பமுள்ள எருது போல் ஜனங்களுக்கு ஊழியம் செய்தல்” என்பது முதலில் ஒரே வாக்கியமாக இருந்தது, ஆனால் இங்கே, விஷயங்களைத் தெளிவாக்குவதற்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாக்கியத்தின் முதல் பகுதி மனுஷனின் செயல்களைக் குறிக்கிறது, அதேநேரத்தில் இரண்டாவது வாக்கியம் தேவன் அனுபவித்த துன்பங்களையும், தேவன் தாழ்மையானவர் மற்றும் மறைவாக இருக்கிறவர் என்பதையும் குறிக்கிறது.

3. “பாரபட்சத்துடனும்” என்பது ஜனங்களுடைய கீழ்ப்படியாத நடத்தையைக் குறிக்கிறது.

4. “முழுமையான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவும்” என்பது ஜனங்களுடைய கீழ்ப்படியாத நடத்தையைக் குறிக்கிறது. அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள், மற்றவர்களைக் கட்டிப்போடுகிறார்கள், தங்களைப் பின்பற்றச் செய்கிறார்கள், தங்களுக்காகத் துன்பப்பட வைக்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமான வல்லமைகள்.

5. “பொம்மை” என்பது தேவனை அறியாதவர்களை பரியாசம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

6. “பனிப்பந்து” என்பது ஜனங்களின் தாழ்ந்த நடத்தையை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்படுகிறது.

7. “பாலாடைக்கட்டியிலிருந்து சுண்ணாம்பைக் கண்டுபிடிக்க முடியாது” என்பது ஜனங்கள் தேவனுடைய சித்தத்தைச் சாத்தானுடையதாகத் திரித்துவிடுவதைக் குறிக்கிறது, எதில் ஜனங்கள் தேவனை நிராகரிக்கிறார்களோ, அந்த நடத்தையைப் பரவலாகக் குறிக்கிறது.

8. “கருப்பை வெள்ளையோடு குழப்புகிறான்” என்பது உண்மையை மாயைகளுடனும், நீதியைப் தீமையுடனும் கலந்துவிடுவதைக் குறிக்கிறது.

9. “கொள்ளைக்காரன்” என்பது ஜனங்கள் புத்தியில்லாதவர்கள் மற்றும் நுண்ணறிவு இல்லாதவர்கள் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

10. “குப்பைகள் மற்றும் எஞ்சியவை” என்பது ஜனங்கள் தேவனை ஒடுக்கும் நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

11. “சீற்றமுள்ளவனாகவும்” என்பது ஆத்திரமும் கடுப்பும் கொண்ட மனுஷனின் அசிங்கமான முகத்தைக் குறிக்கிறது.

12. “மனவுறுத்தல் இல்லாமல்” என்பது ஜனங்கள் பொறுப்பற்றவர்களாகவும், தேவனிடம் சிறிதும் பயபக்தி இல்லாதவர்களாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

13. “விலையேறப்பெற்ற பொக்கிஷம்” என்பது தேவனுடைய முழுமையைக் குறிக்கிறது.

அ. இது “hú jiǎ hǔ wēi,” என்ற மூல உரையின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது ஒரு சீன மரபு மொழிச்சொல். இது ஒரு கதையைக் குறிக்கிறது, இதில் ஒரு நரியானது ஒரு புலியின் தோழமையுடன் நடப்பதன் மூலம் மற்ற விலங்குகளைப் பயமுறுத்தித் துரத்துகிறது, இதனால் புலி கட்டளையிடும் பயத்தையும் கௌரவத்தையும் “கடன் வாங்குகிறது”. இது ஓர் உருவகம், மற்றவர்களைப் பயமுறுத்துவதற்கு அல்லது ஒடுக்குவதற்கு வேறொருவரின் கௌரவத்தைக் “கடன் வாங்கும்” ஜனங்களைக் குறிக்க இங்கே பயன்படுத்தப்படுகிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (8)

அடுத்த: கிரியையும் பிரவேசித்தலும் (10)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக