அத்தியாயம் 45

நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளை அது ஒன்றுமில்லை என்பது போல் பகிரங்கமாக நியாயந்தீர்க்கிறீர்கள். உண்மையில் நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிவதில்லை; உங்களுக்கு வெட்கம் தெரியாது! இந்த நடத்தை மிகவும் மோசமான துணிச்சலானதும் மற்றும் தன்னிச்சையானதுமாய் இருக்கிறது அல்லவா? உங்களில் ஒவ்வொரு தனி நபரும் குழப்பமடைந்து, இருதயத்தில் பாரமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்; நீ நிறைய பொதி மூட்டைகளை சுமந்து செல்கிறாய், மற்றும் உனக்குள் எனக்காக ஒரு இடமில்லை. குருடராகிய மனுஷர்களே! உங்கள் கொடுமை இவ்வளவு உச்சத்தை எட்டியிருக்கிறது—அது எப்போது முடிவடையும்?

நான் உங்களுடன் மீண்டும் மீண்டும் என் இருதயத்திலிருந்து பேசுகிறேன், மேலும் என்னிடம் உள்ள அனைத்தையும் உங்களுக்குத் தருகிறேன், ஆனால் நீங்கள் மிகவும் கஞ்சத்தனமாக இருக்கிறீர்கள் மற்றும் கொஞ்சமும் மனிதத்தன்மை இல்லாதவர்களாய் காணப்படுகிறீர்கள்; இது உண்மையில் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. நீங்கள் ஏன் உங்கள் சொந்தக் கருத்துக்களைப் பற்றிக் கொள்கிறீர்கள்? உனக்குள் சில இடங்களைக் கொண்டிருக்க ஏன் என்னை அனுமதிக்கக் கூடாது? நான் உங்களுக்கு எப்படித் தீங்கு செய்ய முடியும்? நீங்கள் இவ்வாறு தொடர்ந்து நடந்து கொள்ளக் கூடாது—இப்போதிலிருந்து, என்னுடைய நாள் உண்மையில் வெகு தொலைவில் இல்லை. கவனக்குறைவாகப் பேசாதீர்கள், அலட்சியமாக நடந்து கொள்ளாதீர்கள், அல்லது சண்டையிட்டுப் பிரச்சனையை ஏற்படுத்தாதீர்கள்; இது உங்கள் வாழ்க்கைக்கு என்ன நன்மையைக் கொண்டுவர முடியும்? நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன், என்னுடைய நாள் வரும்போது ஒரு நபர் கூட இரட்சிக்கப்படாதிருந்தாலும், நான் எனது திட்டத்தின்படியே விஷயங்களைக் கையாள்வேன். நான் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்! எந்தப் பொருளும், எந்த நபரும், எந்தக் காரியமும், முன்னோக்கிச் செல்லும் என் படிகளைத் தடுக்கத் துணிவதில்லை. நீங்கள் இல்லாமல் என் சித்தத்தை நிறைவேற்ற எனக்கு வழி இருப்பதில்லை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நீ உன்னுடைய சொந்த வாழ்க்கையை இந்த எதிர்மறையான முறையில் நடத்தினால், உன்னுடைய சொந்த வாழ்க்கையை நீயே அழித்துவிடுவாய் என்று என்னால் உனக்குச் சொல்ல முடியும்; இது என்னுடைய கவலையாக இருக்காது.

பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறது மற்றும் சாட்சி உச்சத்தை எட்டியிருக்கிறது. இது தான் அப்பட்டமான உண்மை. சீக்கிரம், உங்களுடைய மங்கலான கண்களைத் திறவுங்கள்; உங்களிடத்தில் செய்யப்பட்ட என் கடினமான முயற்சிகளை வீணாய்ப் போக அனுமதிக்காதீர்கள், மேலும் இனியும் நீங்கள் மனம்போன போக்கில் போகாதீர்கள். நீங்கள் எனக்கு முன்பாக நல்ல செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறீர்கள், ஆனால் நான் இல்லாதபோது, உங்கள் செயல்களும் நடத்தைகளும் நான் பார்க்கும்படிக்கு எனக்கு முன்பாக நிற்க முடியுமா? நன்மை தீமை உங்களுக்குத் தெரியாது! நீங்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை, நீங்கள் எனக்கு முன்னால் ஒரு காரியத்தைச் செய்கிறீர்கள், மற்றொன்றை என் முதுகுக்குப் பின்னால் செய்கிறீர்கள். நான் மனுஷனுடைய உள்ளத்தின் ஆழத்தைப் பார்க்கும் தேவனாக இருக்கிறேன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் மிகவும் அறிவில்லாதவர்கள்!

பிற்காலத்தில், முன்னோக்கிச் செல்லும் பாதையில், நீங்கள் யுக்தியை உருவாக்கவோ அல்லது வஞ்சகத்திலும் மாறுபாட்டிலும் ஈடுபடவோ கூடாது, இல்லையெனில், விளைவுகள் கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்! வஞ்சகம் மற்றும் மாறுபாடு என்றால் என்ன என்பதை நீங்கள் அனைவரும் இன்னும் புரிந்து கொள்ளாதிருக்கிறீர்கள். நீங்கள் என்னைப் பார்க்க அனுமதிக்காத எந்த செயல்களும் அல்லது நடத்தைகளும், நீங்கள் வெளிப்படையாகக் கொண்டு வர முடியாதவைகளுமே வஞ்சகமும் மாறுபாடும் ஆகும். இப்போது இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! நீங்கள் எதிர்காலத்தில் வஞ்சகத்திலும் மாறுபாட்டிலும் ஈடுபட்டால், புரிந்து கொள்ளாதது போல் பாசாங்கு செய்யாதீர்கள்—நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் தெரிந்தே தவறு செய்கிறீர்கள், மேலும் நீங்கள் இரட்டிப்பு குற்றவாளியாக இருக்கிறீர்கள். இது நீங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதற்கு மட்டுமே வழிவகுக்கும், அல்லது இன்னும் மோசமாக, உங்களை நாசமாக்கிவிடும். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இன்று நீங்கள் சந்தித்துக் கொண்டிருப்பது நேசத்தின் சிட்சையைத்தான்; இது நிச்சயமாக இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு அல்ல. நீங்கள் இதைப் பார்க்க முடியாவிட்டால், நீங்கள் மிகவும் பரிதாபகரமானவர்களாக இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் எல்லா நம்பிக்கைக்கும் மிகவும் தூரமானவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் நேசத்தின் சிட்சையை ஏற்கத் தயாராக இல்லை என்றால், உங்கள் மீது வருவதெல்லாம் இரக்கமற்ற நியாயத்தீர்ப்புதான். அது நடக்கும்போது, நான் உங்களுக்குச் சொல்லவில்லை என்று குறை சொல்லாதீர்கள். என் பொறுப்புகளைத் தட்டிக் கழித்திருப்பது நான் அல்ல, மாறாக என் வார்த்தைகளுக்கு செவிசாய்த்திருக்காதவர்களும், என் வார்த்தைகளை நிறைவேற்றியிருக்காதவர்களுமாகிய நீங்கள் தான். பிற்காலத்தில் ஜனங்கள் என்னைக் குறைகூறக் கூடாது என்பதற்காக இதை இப்போதே உங்களுக்குச் சொல்கிறேன்.

முந்தைய: அத்தியாயம் 44

அடுத்த: அத்தியாயம் 46

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக