அத்தியாயம் 25

சர்வவல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு, நமது தேவனே ராஜா! சர்வவல்லமையுள்ள தேவன் ஒலிவ மலையில் தனது பாதங்களை வைக்கிறார். அது எவ்வளவு அழகாக இருக்கிறது! கேளுங்கள்! ஜாமக்காரர்களாகிய நாங்கள் எங்கள் குரல்களை உயர்த்துகிறோம்; தேவன் சீயோனுக்குத் திரும்பியதால், எங்கள் குரல்களால் நாங்கள் ஒன்றாகப் பாடுகிறோம். எருசலேமின் பாழடைந்த தோற்றத்தை எங்கள் கண்களால் காண்கிறோம். நாங்கள் சந்தோஷமான சத்தத்திற்குள் நுழைந்து ஏகமாய் பாடுகிறோம், ஏனென்றால் தேவன் எங்களுக்கு ஆறுதல் அளித்து, எருசலேமை மீட்டுக்கொண்டார். தேவன் தம்முடைய பரிசுத்த கையை எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் வெளிப்படுத்துகிறார், உண்மையான தேவனுடையவர் தோன்றுகிறார்! பூமியின் எல்லா எல்லைகளில் உள்ளவர்களும் நம் தேவனின் இரட்சிப்பைக் காண்கிறார்கள்.

ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! உமது மறைபொருட்கள் அனைத்தையும் வெளிப்படுத்த ஏழு ஆவிகள் உமது சிங்காசனத்திலிருந்து ஒவ்வொரு திருச்சபைக்கும் அனுப்பப்படுகின்றன. உமது மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்து, உம்முடைய ராஜ்யத்தை நிர்வகித்து, அதை நேர்மையுடனும் நீதியுடனும் உறுதியாகவும், நிலையானதாகவும் ஆக்கியுள்ளீர்கள், எல்லா நாடுகளையும் உமக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினீர். ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! நீர் ராஜாக்களின் இடைக்கட்டுக்களை அவிழ்த்துவிட்டீர், நகரத்தின் வாசல்களை ஒருபோதும் மூடாதபடிக்கு உமக்கு முன்பாகத் திறந்துவிட்டிருக்கிறீர். உம்முடைய ஒளி வந்துவிட்டது, உம்முடைய மகிமை உயர்ந்து, அதன் பிரகாசத்தை வெளிப்படுத்துகிறது. இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடுகின்றன. ஓ, தேவனே! ஆயினும், நீர் தோன்றி, உமது ஒளியை எங்கள் மீது பிரகாசித்திருக்கிறீர், உம்முடைய மகிமை எங்கள்மீது காணப்படும்; எல்லா தேசங்களும் உம்முடைய வெளிச்சத்திற்கும், ராஜாக்கள் உம்முடைய பிரகாசத்திற்கும் வருவர். நீர் உமது கண்களை உயர்த்திச் சுற்றிப் பார்க்கிறீர்: உமது குமாரர்கள் உமக்கு முன்பாகக் கூடிவருகிறார்கள், அவர்கள் தூரத்திலிருந்து வருகிறார்கள்; உமது குமாரத்திகள் கைகளில் சுமக்கப்படுகிறார்கள். ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! உமது மிகுதியான அன்பு எங்களைப் பிடித்திருக்கிறது; உம்முடைய ராஜ்யத்திற்கான பாதையில் எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்வது நீர் தான், உம்முடைய பரிசுத்த வார்த்தைகளே எங்களுக்குள் ஊடுருவுகின்றன.

ஓ, சர்வவல்லமையுள்ள தேவனே! நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்! நாங்கள் உம்மைக் கண்டு, உமக்கு சாட்சிக் கூறி, உம்மை உயர்த்தி, நேர்மையான, அமைதியான, முழு இருதயத்தோடு உம்மைப் பாடுகிறோம். நாம் ஒருமனப்பட்டு, ஒன்றாகக் கட்டியெழுப்பப்பட்டிருப்போம், விரைவில் உமது இருதயத்தை பின்தொடர்பவர்களாகவும், நீர் பயன்படுத்தும்படிக்கும் எங்களை மாற்றுவீராக. அதன் மூலம் உமது சித்தம் பூமியில் தடையின்றி நிறைவேற்றப்படும்!

முந்தைய: அத்தியாயம் 24

அடுத்த: அத்தியாயம் 26

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக