அத்தியாயம் 19
ஜனங்களின் கற்பனையில், தேவன் மிகவும் உயர்ந்தவராகவும், புரிந்துகொள்ள முடியாதவராகவும் இருக்கிறார் என்று தெரிகிறது. தேவன் மனுஷர்கள் மத்தியில் வசிக்காதது போலவும், அவர் மிகவும் உயர்ந்தவர் என்பதால் அவர் ஜனங்களை வெறுக்கிறார் என்பது போலவும் தான் இது இருக்கிறது. எவ்வாறாயினும், தேவன் ஜனங்களின் கருத்துக்களை அடித்து நொறுக்கி, அவை அனைத்தையும் அகற்றி “கல்லறைகளில்” புதைத்து சாம்பலாக மாற்றுகிறார். மனுஷர்களின் கருத்துக்ள் குறித்த தேவனின் மனப்பபான்மையானது மரித்தவர்களைப் பற்றிய அவருடைய மனப்பான்மையைப் போன்றது. “கருத்துக்களுக்கு” எந்த எதிர்வினையும் இல்லை என்று தெரிகிறது; ஆகையால், உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்று வரை தேவன் இந்தக் கிரியையை செய்து வருகிறார், இதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. மாம்சத்தின் காரணமாக, மனுஷர்கள் சாத்தானால் சீர்கெட்டுப்போகிறார்கள், பூமியில் சாத்தானின் செயல்களால் மனுஷர்கள் தங்கள் அனுபவங்களின் போக்கில் அனைத்து விதமான கருத்துக்களையும் உருவாக்குகிறார்கள். இது “இயற்கையாக உருவாக்கப்படுதல்” என்று அழைக்கப்படுகிறது. இது பூமியில் தேவனது கிரியையின் கடைசி கட்டமாகும், எனவே அவருடைய கிரியை செய்யும் முறை உச்சத்தை எட்டியுள்ளது, மேலும் அவர் தனது இறுதிக் கிரியையில் தேவனின் சித்தத்தை முழுமையாக நிறைவேற்றும் விதத்தில் ஜனங்களுக்கு அவர் கொடுக்கும் பயிற்ச்சியைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு, மனுஷர்களிடையே பரிசுத்த ஆவியானவரின் ஞானமும் வெளிச்சமும் மட்டுமே இருந்தன, ஆனால் தேவனால் பேசப்பட்ட எந்த வார்த்தைகளும் இல்லை. தேவன் தனது சொந்தக் குரலில் பேசியபோது, அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், மேலும் இன்றைய வார்த்தைகள் இன்னும் குழப்பமானவையாக இருக்கின்றன. அவற்றின் அர்த்தத்தை புரிந்துகொள்வது இன்னும் கடினம், மேலும் மனுஷர்கள் குழப்பமடைவதாகத் தெரிகிறது, ஏனென்றால் அவருடைய ஐம்பது சதவிகித வார்த்தைகள் மேற்கோள் குறிகளுக்கு இடையில் வருகின்றன. “நான் பேசும்போது, ஜனங்கள் என் குரலை மிகுந்த கவனத்துடன் கேட்கிறார்கள்; நான் அமைதியாக இருக்கும்போது, அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ‘காரியங்களை’ ஆரம்பிக்கிறார்கள்.” இந்த பத்தியில் மேற்கோள் குறிகளில் ஒரு வார்த்தை உள்ளது. தேவன் இங்கே பேசுவதைப் போல எந்தளவுக்கு நகைச்சுவையுடன் பேசுகிறாரோ, அந்தளவுக்கு அந்தப் பேச்சு ஜனங்களை ஈர்க்கும். ஜனங்கள் தாங்கள் ஓய்வாக இருக்கும்போது தாங்கள் கையாளப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. முக்கியமாக, இது தேவனின் வார்த்தைகளை ஜனங்கள் புரிந்துகொள்ளாதபோது அவர்களது தன்னம்பிக்கை குறைவதைத் தடுப்பதற்காகும் அல்லது அவர்கள் ஏமாற்றமடைவதைத் தடுப்பதற்காகும். இது சாத்தானுக்கு எதிரான தேவனின் போரில் ஒரு தந்திரமாகும். இவ்விதமாக மட்டுமே ஜனங்கள் தேவனின் வார்த்தைகளில் ஆர்வமாக இருப்பார்கள், மேலும் தங்களின் நூலைப் பின்பற்ற முடியாதபோது கூட அந்த வார்த்தைகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள். இருப்பினும், மேற்கோள்களால் சூழப்படாத அவருடைய வார்த்தைகள் அனைத்திலும் மிகுந்த ஈர்ப்புள்ளவையாக இருக்கின்றன, எனவே அவை மிகவும் கவனிக்கத்தக்கவையாகவும், ஜனங்களை அவற்றை இன்னும் அதிகமாக நேசிக்க வைப்பவையாகவும், மேலும் அவருடைய வார்த்தைகளின் இனிமையை அவர்கள் தங்கள் இருதயங்களில் உணரச் செய்பவையாகவும் இருக்கின்றன. தேவனின் வார்த்தைகள் பலவகையான வடிவங்களில் வந்து, செழிப்பாகவும், வேறுபட்டவையாகவும் இருப்பதால், மேலும் தேவனின் பல வார்த்தைகளில் பெயர்ச்சொற்கள் மீண்டும் மீண்டும் தோன்றவில்லை என்பதால், தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்று ஜனங்கள் தங்கள் மூன்றாம் அறிவில் நம்புகிறார்கள். உதாரணமாக: “நான் ஜனங்களை ‘நுகர்வோர்களாக’ மட்டும் இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை; சாத்தானைத் தோற்கடிக்கும் ‘உற்பத்தியாளர்களாகவும்’ இருக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” இந்த வாக்கியத்தில் உள்ள “நுகர்வோர்” மற்றும் “உற்பத்தியாளர்கள்” என்ற சொற்கள் முந்தைய காலங்களில் பேசப்பட்ட சில சொற்களுக்கு ஒத்த அர்த்தங்களைக் கொண்டுள்ளன, ஆனால் தேவன் நெகிழ்வுத்தன்மை கொண்டவரல்ல; மாறாக, அவர் தனது புத்துணர்வைப் பற்றி ஜனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார், இதன் மூலம் தேவனின் அன்பைப் பொக்கிஷமாகக் கருதுகிறார். தேவனின் பேச்சில் உள்ள நகைச்சுவை அவருடைய நியாயத்தீர்ப்பையும் மனுஷரின் கோரிக்கைகளையும் கொண்டுள்ளது. தேவனின் வார்த்தைகள் அனைத்திற்கும் குறிக்கோள்கள் இருப்பதால், அவை அனைத்திற்கும் அர்த்தங்கள் இருப்பதால், அவருடைய நகைச்சுவை வெறுமனே வளிமண்டலத்தை ஒளிரச் செய்வதற்கோ அல்லது ஜனங்களை உரக்க சிரிக்கச் செய்வதற்கோ அல்ல, அல்லது அவர்களின் தசைகளைத் தளர்த்துவதற்காகவும் அல்ல. அதற்குப் பதிலாக, தேவனின் நகைச்சுவை மனுஷர்களை ஐந்தாயிரம் ஆண்டு அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மீண்டும் ஒருபோதும் அடிமைத்தனத்துக்கு தள்ளாது, இதனால் அவர்களால் தேவனின் வார்த்தைகளைச் சிறப்பாக ஏற்றுக்கொள்ள முடியும். தேவனின் செயல்முறை மருந்து உள்ளே செல்ல உதவ ஒரு கரண்டி சர்க்கரையைப் பயன்படுத்துவதாக இருக்கிறது; அவர் கசப்பான மருந்தை ஜனங்களின் தொண்டைக்குள் செலுத்த கட்டாயப்படுத்துவதில்லை. இனிப்புக்குள் கசப்பு இருக்கிறது, கசப்பிற்குள் இனிமையும் இருக்கிறது.
“கிழக்கில் ஒரு மங்கலான வெளிச்சம் தெரியத் தொடங்கும் போது, பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்து ஜனங்களும் அதில் சற்று அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். இனி தூக்கத்தில் மூழ்காமல், மனுஷர்கள் கிழக்கில் தோன்றும் இந்த வெளிச்சம் உருவாகும் இடத்தைக் கவனிக்க முன்வருகிறார்கள். தங்களது மட்டுப்படுத்தப்பட்ட திறன் காரணமாக, இந்த வெளிச்சம் எங்கிருந்து உருவாகிறது என்பதை இதுவரை யாராலும் பார்க்க முடியவில்லை.” இது தேவனுடைய புத்திரர்களிடமும் அவருடைய ஜனங்களிடையேயும் மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் நடக்கிறது. மத வட்டாரங்களில் உள்ளவர்கள் மற்றும் அவிசுவாசிகள் அனைவரிடமும் இந்த எதிர்வினை உள்ளது. தேவனின் வெளிச்சம் பிரகாசிக்கும் தருணத்தில், அவர்களின் இருதயங்கள் அனைத்தும் படிப்படியாக மாறுகின்றன, மேலும் அவர்கள் அறியாமலேயே தங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதையும், மனுஷ வாழ்க்கை மதிப்பு இல்லாதது என்பதையும் கண்டறியத் தொடங்குகிறார்கள். மனுஷர்கள் எதிர்காலத்தைத் தொடரவோ, நாளை என்பதை கருத்தில் கொள்ளவோ, நாளைய தினத்தைப் பற்றி கவலைப்படவோ இல்லை; மாறாக, தாங்கள் “இளமையாக” இருக்கும்போதே அதிகமாகச் சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும், கடைசி நாள் வரும்போது அவை அனைத்தும் மதிப்புக்குரியதாக இருக்கும் என்ற எண்ணத்தை அவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள். மனுஷர்களுக்கு உலகை ஆள எந்த விருப்பமும் இல்லை. உலகத்தின் மீதான மனுஷர்களின் அன்பின் வீரியம் “பிசாசால்” முற்றிலும் திருடப்பட்டது, ஆனால் அதன் வேர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவர்களால் செய்யக்கூடியது எல்லாம், தேவனின் நாள் இன்னும் வரவில்லை என்று முன்னும் பின்னும் ஓடி ஒருவருக்கொருவர் தெரிவிப்பது மட்டும் தான். ஒரு நாள், அனைவரும் புரிந்துகொள்ள முடியாத அனைத்து மர்மங்களுக்கும் பதில்களைக் காண்பார்கள். “மனுஷர்கள் தூக்கத்திலிருந்தும் கனவுகளிலிருந்தும் எழுந்துவிடுகிறார்கள், அப்போதுதான் என் நாள் படிப்படியாக வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.” என்று அவர் சொன்னபோது தேவன் சொன்னது இதுதான். அந்த நேரம் வரும்போது, தேவனுக்குச் சொந்தமான ஜனங்கள் அனைவரும் பச்சை இலைகளைப் போல, “நான் பூமியில் இருக்கும்போது எனக்காகத் தங்கள் பங்கை வகிக்கக் காத்திருக்கிறார்கள்.” சீனாவில் தேவனுடைய ஜனங்கள் மத்தியில் தேவன் தனது குரலால் பேசிய பின்பும் பலர் பின்வாங்குகிறார்கள், அதனால், “… ஆனாலும், உண்மைகளை மாற்றுவதற்கு சக்தியற்றவர்களாக, நான் தண்டனையை உச்சரிப்பதற்காக காத்திருப்பதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது,” என்கிறார். அவர்களில் புறம்பாக்கப்பட வேண்டிய சிலர் இன்னும் இருக்கிறார்கள்—அனைத்துமே மாறாமல் இருக்காது. மாறாக, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஜனங்கள் தராதரத்தைப் பூர்த்தி செய்ய முடியும், இதன் மூலம் அவர்களுக்கு “தரச் சான்றிதழ்கள்” வழங்கப்படுகின்றன; இல்லையெனில், அவர்கள் குப்பைக் குவியலில் குப்பையாகிப்போவர். மனுஷரின் உண்மையான நிலையை தேவன் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார், எனவே ஜனங்கள் தேவனின் மர்மத்தை அதிகளவில் உணர்கிறார்கள். “அவர் தேவன் இல்லையென்றால், நம்முடைய உண்மையான நிலையை அவர் எவ்வாறு நன்கு அறிந்து வைத்திருக்க முடியும்?” ஆயினும்கூட, ஜனங்களின் பலவீனத்தின் காரணத்தால், “மனுஷர்களின் இருதயங்களில், நான் உயர்ந்தவனுமல்ல, தாழ்ந்தவனுமல்ல. அவர்களைப் பொருத்தவரை, நான் இருக்கிறேனா இல்லையா என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை.” யதார்த்தத்துடன் பொருந்தக்கூடிய அனைத்து ஜனங்களின் நிலை துல்லியமாக இதுதான் இல்லையா? மனுஷர்களைப் பொருத்தவரை, அவர்கள் தேவனைத் தேடும்போது அவர் இருக்கிறார், அவர்கள் அவரைத் தேடாதபோது அவர் இருப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனுஷர்களுக்கு தேவனின் உதவி தேவைப்படும்போது, அவர் அவர்களின் இருதயங்களில் இருப்பார். ஆனால் அவர்களுக்கு தேவைப்படாதபோது அவர் இருக்க மாட்டார். இதுதான் ஜனங்களின் இருதயங்களுக்குள் இருக்கிறது. உண்மையில், பூமியில் உள்ள ஒவ்வொருவரும், “நாத்திகர்கள்” உட்பட, இவ்விதமாகத்தான் நினைக்கிறார்கள், மேலும் தேவனைப் பற்றிய அவர்களின் “அபிப்ராயமும்” தெளிவற்றதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது.
“ஆகையால், மலைகள் நிலத்தின் மீது தேசங்களுக்கிடையில் எல்லைகளாகின்றன; தண்ணீரானது வெவ்வேறு நாடுகளின் ஜனங்களைப் பிரித்து வைக்கும் தடையாக மாறுகிறது; காற்று, பூமிக்கு மேலே உள்ள இடங்களில் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்குப் பாய்கிறது.” உலகை உருவாக்கும் போது தேவன் செய்த கிரியை இது. இதை இங்கே குறிப்பிடுவது ஜனங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது: தேவன் வேறொரு உலகத்தை உருவாக்க விரும்புகிறாரா? இதைச் சொல்வதுதான் நியாயமானது: தேவன் பேசும் ஒவ்வொரு முறையும், அவருடைய வார்த்தைகளில் சிருஷ்டிப்பு, ஆளுகை மற்றும் உலக அழிவு ஆகியவை உள்ளன; சில நேரங்களில் அவை தெளிவாக இருக்கின்றன, சில சமயங்களில் அவை தெளிவற்றவையாக இருக்கின்றன. தேவனின் ஆளுகை அனைத்தும் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ளது; ஜனங்களால்தான் அவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. தேவன் மனுஷர்களுக்கு அளிக்கும் ஆசீர்வாதங்கள் அவர்களின் விசுவாசத்தை நூறு மடங்கு வளர வைக்கிறது. வெளியில் இருந்து பார்த்தால், தேவன் அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளிப்பதாகத் தெரிகிறது, ஆனால் இதன் சாராம்சத்தில் இது அவருடைய ராஜ்யத்தின் ஜனங்களிடம் தேவன் வைத்த கோரிக்கைகளின் அளவாகும். பயன்படுத்துவதற்குத் தகுதியானவர்கள் நிலைத்திருப்பார்கள், அதே சமயம் அந்தத் தகுதி இல்லாதவர்கள் பரலோகத்திலிருந்து விழும் பேரழிவில் விழுங்கப்படுவார்கள். “வானத்தில் குறுக்கே சுழன்றடிக்கும் இடி மனுஷர்களைத் தாக்கும்; உயர்ந்த பர்வதங்கள் கவிழும்போது அவர்களைப் புதைக்கும்; பசியால் காட்டு மிருகங்கள் அவர்களை விழுங்கும்; திடீரெனக் கொந்தளிக்கும் பெருங்கடல்கள், அவர்களை மூழ்கடிக்கும். மனுஷர்கள் முரண்பாடான மோதலில் ஈடுபடுவதால், எல்லா மனுஷர்களும் தங்களுக்குள் எழும் பேரழிவுகளிலேயே தங்கள் சொந்த அழிவை நாடுவார்கள்.” இந்தச் “சிறப்பு சிகிச்சை” தராதரம் இல்லாதவர்களுக்கும், பின்னர் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிப்பைப் பெறாதவர்களுக்கும் வழங்கப்படும். “நீங்கள் நிச்சயமாக, என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் கீழ் இருளினுடைய ஆதிக்கங்களின் கழுத்தை நெரிப்பீர்கள். இருளின் நடுவே, உங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சத்தை நீங்கள் நிச்சயமாக இழக்க மாட்டீர்கள்,” என்பது போல தேவன் எவ்வளவு அதிகமாக கூறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக ஜனங்கள் தங்கள் சொந்த மரியாதையை அறிந்துகொள்கிறார்கள்; எனவே, புதிய வாழ்வைத் தேடுவதில் அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. தேவன், மனுஷர்கள் கேட்கும்போது அவர்களுக்கு வழங்குகிறார். தேவன் அவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெளிப்படுத்தியவுடன், அவர் தனது பேச்சு முறையை மாற்றிக்கொண்டு, ஆசீர்வாதத்தின் தொனியைப் பயன்படுத்தி சிறந்த பலனைப் பெறுவார். மனுஷர்களுக்கான கோரிக்கைகளை இவ்விதமாக வைப்பது அதிகமான நடைமுறை முடிவுகளை அளிக்கிறது. ஏனென்றால், ஜனங்கள் அனைவரும் தங்கள் சகாக்களுடன் வேலையைப் பற்றி பேசத் தயாராக இருக்கிறார்கள்—அவர்கள் அனைவரும் வேலையில் வல்லுநர்கள்—இதைத்தான் தேவன் சொல்ல முற்படுகிறார். ஆகவே, “சீனீம்” என்றால் என்ன? இங்கே சாத்தானால் சீர்கேடடைந்த பூமியிலுள்ள ராஜ்யத்தை தேவன் குறிப்பிடவில்லை, மாறாக தேவனிடமிருந்து வந்த அனைத்து தேவதூதர்களின் கூட்டத்தையும் குறிப்பிடுகிறார். “உறுதியாகவும் அசையாமலும்” என்ற வார்த்தைகள் தேவதூதர்கள் சாத்தானின் எல்லா சக்திகளையும் உடைத்து, அதன் மூலம் முழு பிரபஞ்சத்திலும் சீனீமை நிலைநிறுத்துகின்றன என்பதைக் குறிக்கின்றன. இதனால், சீனீமின் உண்மையான அர்த்தம் பூமியிலுள்ள அனைத்து தேவதூதர்களின் ஒரு கூட்டம் என்பதாகும், இங்கே அது பூமியில் உள்ளவர்களைக் குறிக்கிறது. ஆகையால், பூமியில் இருக்கும் ராஜ்யம் “சீனீம்” என்று அழைக்கப்படும், “ராஜ்யம்” என்று அழைக்கப்படாது. பூமியில் உள்ள “ராஜ்யத்திற்கு” உண்மையான அர்த்தம் இல்லை; ஆனால் அதன் சாரம்சம், சீனீம் ஆக இருக்கும். ஆகவே, அவற்றைச் சீனீமின் வரையறையுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே, “நீங்கள் நிச்சயமாக என் மகிமையை முழு பிரபஞ்சத்திலும் பரப்புவீர்கள்” என்ற சொற்களின் உண்மையான அர்த்தத்தை அறிய முடியும். இது எதிர்காலத்தில் பூமியில் உள்ள அனைத்து ஜனங்களின் தரவரிசையையும் மெய்ப்பிக்கிறது. சீனீமின் ஜனங்கள் அனைவரும் தண்டனையை அனுபவித்தபின் பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் ஆட்சி செய்யும் அரசர்களாக இருப்பார்கள். சீனீம் ஜனங்களின் நிர்வாகத்தால் பூமியில் உள்ள அனைத்தும் சாதாரணமாக இயங்கும். இது நிலைமையின் ஒரு தோராயமான கண்ணோட்டமே தவிர வேறில்லை. எல்லா மனுஷர்களும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் இருப்பார்கள், அதாவது அவர்கள் சீனீமில் விடப்படுவார்கள். பூமியில் உள்ள மனுஷர்கள் தேவதூதர்களுடன் தொடர்புகொள்ள முடியும். இவ்வகையில், பரலோகமும் பூமியும் இணைக்கப்படும்; அல்லது, வேறுவிதமாகக் கூறினால், பூமியிலுள்ள எல்லா மனுஷர்ளும் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிந்து அன்பு செலுத்துவார்கள். அந்த நேரத்தில், தேவன் பூமியிலுள்ள அனைவருக்கும் வெளிப்படையாகத் தோன்றுவார், மேலும் அவரது உண்மையான முகத்தை அவர்களின் கண்களால் பார்க்க அனுமதிப்பார், மேலும் அவர் எந்த நேரத்திலும் தன்னை வெளிப்படுத்துவார்.