அத்தியாயம் 50

எல்லாத் திருச்சபைகளும் எல்லாப் பரிசுத்தவான்களும் கடந்த காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும், அதைப் போலவே, எதிர்காலத்தையும் நோக்கிப் பார்க்க வேண்டும்: உங்களது கடந்தகால செயல்களில் எத்தனை தகுதியானவையாக இருக்கின்றன, அவற்றில் எத்தனை ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதில் பங்கு பெற்றிருந்தன? நீ உன்னை புத்திசாலி என்று நினைக்காதே! உன் சொந்தக் குறைபாடுகளை நீ தெளிவாகக் காண வேண்டும், மேலும் உன் சொந்த நிலையை நீ புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் எந்த முயற்சியையும் செய்யவோ அல்லது எந்த நேரத்தையும் செலவிடவோ உங்களில் யாரும் ஆயத்தமாக இல்லை என்பதை நான் அறிகிறேன், எனவே, நீங்கள் எந்தச் சாதனைகளையும் பெற்றிருக்க முடியாது. நீங்கள் புசிப்பதிலும், குடிப்பதிலும் மற்றும் கேளிக்கை விளையாட்டிலுமே உங்கள் நேரம் முழுவதையும் வீணாகக் கழிக்கிறீர்கள். உங்களில் சிலர் ஒன்றுகூடி வரும்போது நீங்கள் இங்கும் அங்கும் ஓடி விளையாடுகிறீர்கள், வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களில் ஐக்கியங்கொள்வதிலோ அல்லது ஒருவருக்கொருவர் ஜீவனைக் கொடுப்பதிலோ கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் பேசும்போது சிரிப்பதையும் கேலி செய்வதையும் என்னால் பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை, ஆனால் இன்னும் நீங்கள் மிகவும் மூடத்தனமாக இருக்கிறீர்கள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், ஆனால் நான் சொல்வதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்—அது உங்கள் மூக்கின் நுனியில் இருப்பது போல, அவ்வளவு தெளிவாகத் தெரிகிற ஒன்றாக இருக்கிறதல்லவா? இதுபோன்ற விஷயங்களை நான் முன்பே கூறியிருக்கிறேன், ஆனாலும், நீங்கள் இன்னும் நம்பாமல் இருக்கிறீர்கள், நான் சொல்வதை நீங்கள் ஒப்புக் கொள்வதில்லை, நான் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டும், நான் சொல்வது உண்மையல்ல என்று நினைத்துக் கொண்டும் இருக்கிறீர்கள். அல்லது இது அப்படி இல்லாமல் இருக்குமோ?

நீ என்னுடன் இசைவாய்ச் செயல்பட்டால், நான் உன்னை ஒரு பக்கமாக நிறுத்துவேன். நீ மறுபடியும் நிர்விசாரமாக இருக்கத் துணிகிறாய்! நீ மறுபடியும் அக்கறையின்றியும் கவனக்குறைவாகவும் இருக்கத் துணிகிறாய்! என் வார்த்தைகள் செதுக்கும் கத்தியாக இருக்கின்றன; எனது சித்தத்திற்கு இணங்காத அனைத்தும் இந்தக் கத்தியால் வெட்டப்படும், மேலும் உன் சுயமரியாதைக்கு நீ அதிக அக்கறை கொண்டிருக்கத் தேவையில்லை. நான் உன்னைச் செதுக்குகிறேன், இதன் மூலம் நீ வடிவம் பெற்று என் சித்தத்திற்கு இணங்க முடியும். என் இருதயத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே; உன்னால் முடிந்தவரை என் இருதயத்தைக் குறித்து அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும். நீ சிறிதளவு அக்கறை காட்டினால் கூட, நான் உன்னை வெறுத்து விட்டு விலகிச் செல்ல மாட்டேன். அதை எப்பொழுதும் கவனக்குறைவாகப் புறக்கணித்துவிட வேண்டாம்; என் சித்தத்தை உன் மீது தொடர்ந்து நிறைவேற்ற அனுமதி.

திரளான பரிசுத்தவான்கள் அனைவரும் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றனர், அதைப் போலவே, உங்கள் அனைவருக்கும் வெவ்வேறு செயல்பாடுகள் உள்ளன. ஆனால் எனக்காக உங்களை உண்மையாக ஒப்புக்கொடுக்கும்படி, நீங்கள் உங்களில் உள்ள வல்லமையால் அனைத்தையும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் இதில் விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் மகிழ்ச்சியுடன் ஆயத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் உண்மையில் அரை மனதுடன் இருக்கக் கூடாது! இல்லையெனில், என் நியாயத்தீர்ப்பு எப்போதும் உங்கள் மீதுதான் இருக்கும்; உங்கள் மாம்சம், ஆவி மற்றும் ஆத்துமாவால் அதைத் தாங்க முடியாது, மேலும் உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

முந்தைய: அத்தியாயம் 49

அடுத்த: அத்தியாயம் 51

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக