அத்தியாயம் 3

நீங்கள் என் ஜனங்கள் என்று அழைக்கப்படுவதால், காரியங்கள் வழக்கமாக இருப்பதைப் போல இல்லை; நீங்கள் என் ஆவியானவரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் என் கிரியையை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும்; நீங்கள் என் ஆவியையும் என் மாம்சத்தையும் பிரிக்கலாகாது, ஏனென்றால், நாங்கள் இயல்பாகவே ஒன்றாகவும், இயற்கையால் பிரிக்கப்படாதவர்களாகவும் இருக்கிறோம். ஆவியையும் ஆள்தத்துவத்தையும் பிரித்து, ஆள்தத்துவத்தின் மீது மட்டுமே அல்லது ஆவியின் மீது மட்டும் கவனம் செலுத்துகிற எவரும் இழப்பைச் சந்திப்பார்கள், மேலும் எந்த மாற்று வழியும் இல்லாமல், தங்கள் சொந்தக் கசப்பான கோப்பையிலிருந்து மட்டுமே பானம் பண்ண முடியும். ஆவியையும் ஆள்தத்துவத்தையும் பிரிக்க முடியாத ஒரு முழுமையாகப் பார்க்க முடிந்தவர்கள் மட்டுமே என்னைப் பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்கிறார்கள்; அவர்களுக்குள் இருக்கும் ஜீவன் படிப்படியாக மாற்றத்திற்கு உட்படும். எனது கிரியையின் அடுத்த கட்டம் சுமூகமாகவும் தடையின்றியும் தொடர, என் வீட்டில் உள்ள அனைவரையும் சோதிக்க வார்த்தைகளின் புடமிடுதலைப் பயன்படுத்துகிறேன், என்னைப் பின்பற்றுபவர்களைச் சோதிக்கக் கிரியையின் விதங்களைப் பயன்படுத்துகிறேன். இந்தச் சூழ்நிலையின் கீழ், அவர்கள் அனைவரும் நம்பிக்கையை இழக்கிறார்கள் என்று கூறலாம்; முழு அண்டசராசரமும் மாறிவிட்டதைப் போல, ஜனங்களாக, அவர்களில் ஒருவரது நிலைமை கூட எதிர்மறையாகவோ செயலற்ற நிலையிலோ இல்லை. சிலர் வானத்திற்கும் பூமிக்கும் எதிராகச் செயல்படுகிறார்கள்; சிலர், தங்கள் விரக்தியில், தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, என் வார்த்தைகளின் சோதனையை ஏற்றுக்கொள்கிறார்கள்; சிலர் புதிதாகப் பிறந்த குழந்தையின் அகால மரணத்தால் கலங்கிப்போனது போல, கண்ணீரால் நிரம்பின கண்களுடன், வானத்தைப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சு விடுகிறார்கள்; சிலர் இவ்வாறு வாழ்வதை அவமானமாக உணர்கிறார்கள், மேலும் தேவன் அவர்களை விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறார்கள்; சிலர் மிகக் கடுமையாக வியாதிப்பட்டு, இன்னும் தங்கள் உணர்வுக்குத் திரும்பாதது போல, நாள் முழுவதையும் குழப்பத்தில் செலவிடுகிறார்கள்; சிலர், குறைகூறிய பின்பு, அமைதியாக வெளியேறுகிறார்கள்; இன்னும் சிலர் தாங்கள் ஓரளவு எதிர்மறையாகவே இருந்தாலும், தங்கள் சொந்த நிலையிலிருந்துகொண்டே என்னைத் துதிக்கிறார்கள். இன்று, அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்போது, நான் கடந்த காலத்தைப் பற்றி இனி பேச வேண்டிய தேவையில்லை; மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்றும் நான் உங்களுக்கு வழங்கும் பணியிடத்திலிருந்து நீங்கள் இன்னும் மிகுந்த விசுவாசமாக இருக்கத் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும், அதனால் நீங்கள் செய்யும் அனைத்தும் என் அங்கீகாரத்தைப் பெறவும், மேலும் நீங்கள் சொல்லும் அனைத்தும் என் அறிவொளி மற்றும் வெளிச்சத்தின் விளைவாக இருக்கவும், நீங்கள் வாழ்ந்து காட்டுவது இறுதியில் என் சாயலாகவும், முற்றிலும் என் வெளிப்பாடாகவும் இருக்க முடியும்.

எனது வார்த்தைகள் எந்த நேரத்திலும் அல்லது எந்த இடத்திலும் வெளியிடப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன, எனவே, நீங்கள் உங்களையே எனக்கு முன்பாக எப்பொழுதும் அறிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றைய தினமானது இதற்கு முன்பு வந்ததைப் போல அல்ல, மேலும் நீ விரும்புவதெல்லாவற்றையும் இனி நிறைவேற்றிவிட முடியாது. மாறாக, என் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ், நீங்கள் உங்கள் சரீரத்தை அடிபணியச் செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்; நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் முக்கிய ஆதாரமாக பயன்படுத்த வேண்டும், நீங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படலாகாது. திருச்சபைக்கான உண்மை நடைமுறைக்கான அனைத்து வழிகளையும் என் வார்த்தைகளில் காணலாம். என் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்படாதவர்கள் என் ஆவிக்கு நேரடியாகக் குற்றம் செய்கிறார்கள், மேலும் நான் அவர்களை அழித்துவிடுவேன். இன்றைய நாளில் இருப்பதைப்போல இத்தகைய சூழ்நிலைக்கு காரியங்கள் வந்துவிட்டதால், உங்கள் கடந்த காலக் கிரியைகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி நீங்கள் அதிக மனவேதனையையும் வருத்தத்தையும் உணரத் தேவையில்லை. என் மகத்துவம் கடல்கள் மற்றும் ஆகாயவிரிவைப் போல எல்லையற்றது—மனுஷனுடைய திறன்களும் என்னைக் குறித்த அறிவும் என் சொந்தக் கரத்தின் பின்புறத்தைப் போல எப்படி எனக்குப் பரிச்சயம் இல்லாதிருக்க முடியும்? மனுஷர்களில் யார் என் கையில் இல்லாதிருக்கிறார்கள்? உன் வளர்ச்சி எவ்வளவு பெரியது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும், இதைப் பற்றி நான் முற்றிலும் அறியாதிருக்கிறேன் என்றும் நீ நினைக்கிறாயா? அது சாத்தியமற்றது! இவ்வாறு, எல்லா ஜனங்களும் மிகவும் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கும்போது, அவர்கள் இனி காத்திருக்க முடியாமல், புதியதைத் தொடங்க விரும்பும்போது, என்ன நடக்கிறது என்று அவர்கள் என்னிடம் கேட்க விரும்பும் போது, சிலர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, சிலருக்குக் கலகம் செய்யும் சூழல் ஏற்படும் போது, சிலர் இன்னும் விசுவாச ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கும்போது, நியாயத்தீர்ப்பின் காலத்தின் இரண்டாவது பகுதியை நான் தொடங்குகிறேன்: அதாவது, என் ஜனங்களைச் சுத்திகரித்து நியாயந்தீர்க்கிறேன். இதை இன்னும் கூறவேண்டுமானால், உங்களை எனக்கு அழகிய சாட்சி பகரச் செய்வது மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக, என் ஜனங்களுடைய ஸ்தானத்திலிருந்தே, யுத்தத்தில் எனக்காக அழகிய ஜெயத்தைப் பெற அனுமதிப்பதன் மூலம் என் ஜனங்களுக்கு நான் அதிகாரப்பூர்வமாகப் பயிற்சி அளிக்கத் தொடங்குகிறேன்.

எல்லா நேரங்களிலும், சாத்தானின் தந்திரமான திட்டங்களுக்கு எதிராக என் ஜனங்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும், எனக்காக என் வீட்டின் வாயிலைக் காக்க வேண்டும்; சாத்தானின் கண்ணிக்குள் விழாமல் இருக்கும்படி, அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கக் கூடியவர்களாகவும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும், அல்லது, வருத்தப்படுவதற்கான அந்த நேரம் மிகவும் தாமதமாகிவிடும். நான் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவசரமாகப் பயிற்சி அளிக்கிறேன்? ஆவிக்குரிய உலகின் உண்மைகளை நான் ஏன் உங்களுக்குச் சொல்கிறேன்? நான் ஏன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டி அறிவுறுத்துகிறேன்? நீங்கள் எப்போதாவது இதைக் குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் சிந்தனை எப்போதாவது தெளிவைக் கொடுத்திருக்கிறதா? எனவே, கடந்த காலத்தின் அடித்தளத்தின் மீது கட்டி எழுப்பப்படுவதன் மூலம் உங்களை முதிர்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக, இன்றைய வார்த்தைகளுடைய வழிகாட்டுதலின் கீழ் உங்களுக்குள் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுவதற்கும், எனது வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உன் ஆவிக்குள் வேரூன்றி மலரச் செய்யவும், மேலும் முக்கியமாக, அதிகக் கனியைத் தரச் செய்யவும் அனுமதிக்கிறேன். ஏனென்றால் நான் பிரகாசமான, செழிப்பான பூக்களைக் கேட்கவில்லை, மாறாகத் தன் முதிர்ச்சியை இழக்காத அபரிமிதமான கனியைக் கேட்கிறேன். என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? ஒரு பசுமையான தோட்டத்தில் உள்ள பூக்கள் நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவையாக இருந்து, பாராட்டும் கூட்டம் அனைத்தையும் ஈர்த்தாலும், அவை வாடிப்போனவுடன், அவை சாத்தானின் வஞ்சகத் திட்டங்கள் சிதைந்து போவதைப் போல ஆகிவிடுகின்றன, அவைகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆயினும், காற்றினால் பாதிக்கப்பட்டு, எனக்கு சாட்சி பகருகிற சூரியனால் சுட்டெரிக்கப்பட்ட அனைத்தும், பூக்களின் அழகு இல்லாவிட்டாலும், பூக்கள் வாடியவுடன் பலன் தரும், ஏனென்றால் அவை அப்படி இருக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். நான் இந்த வார்த்தைகளைப் பேசும்போது, நீங்கள் எவ்வளவு புரிந்துகொள்கிறீர்கள்? பூக்கள் வாடி, கனி உண்டான பின்பு, இந்தக் கனிகள் அனைத்தும் என் மகிழ்ச்சிக்காக வழங்கப்பட முடியும்போது, நான் பூமியின் மீதான எனது எல்லாக் கிரியைகளையும் முடித்து, என் ஞானத்தின் படிகமயமாக்கலை அனுபவிக்கத் தொடங்குவேன்.

பிப்ரவரி 22, 1992

முந்தைய: அத்தியாயம் 2

அடுத்த: அத்தியாயம் 4

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக