தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்

இன்றைய நாட்களில் சபைக்குள் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் கிரியை செய்கிறார்? இந்தக் கேள்வியைக் குறித்து உனக்கு ஓர் உறுதியான புரிதல் உள்ளதா? உங்கள் சகோதர சகோதரிகளின் மிகப் பெரிய கஷ்டங்கள் எவை? அவர்களது பெரும் குறைபாடு என்ன? தற்போது, சோதனைகளுக்கு உட்படும்போது சில ஜனங்கள் எதிர்மறையானவர்களாக மாறிவிடுகிறார்கள், மேலும் சிலர் குறைகூறுகிறார்கள். தேவன் பேசுவதை நிறுத்திவிட்டதால் பிற ஜனங்கள் மேலும் முன்னேறிச் செல்வதில்லை. தேவனை விசுவாசிப்பதில் ஜனங்கள் சரியான பாதையில் செல்லவில்லை. அவர்களால் சுதந்திரமாக வாழமுடிவதில்லை மற்றும் அவர்களால் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பராமரிக்க முடிவதில்லை. சில ஜனங்கள் தொடர்ந்து சென்று உற்சாகத்துடன் பின்பற்றுகிறார்கள், மேலும் அவர்கள் தேவன் பேசும்போது கடைப்பிடிக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் தேவன் பேசாதபோது அவர்கள் முன்னேறிச் செல்வதில்லை. ஜனங்கள் இன்னும் தங்கள் இருதயங்களுக்குள் தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை மேலும் அவர்களுக்கு தேவனிடத்தில் தன்னெழுச்சியான அன்பு இல்லை; கடந்த காலத்தில் வற்புறுத்தப்பட்டதால் அவர்கள் தேவனைப் பின்பற்றினார்கள். தற்போது சில ஜனங்கள் தேவ கிரியைகளில் களைப்படைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இத்தகைய ஜனங்கள் ஆபத்தில் இல்லையா? சமாளித்துச் செல்லும் நிலையிலேயே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேவ வார்த்தைகளைப் புசித்துக் குடித்து அவரை நோக்கி ஜெபித்தாலும், அவர்கள் அதை அரைமனதோடே செய்கிறார்கள். முன்பிருந்த உத்வேகம் அவர்களிடத்தில் இப்போது இல்லை. பெரும்பாலான ஜனங்களுக்கு தேவனின் சுத்திகரிக்கும் மற்றும் பரிபூரணப்படுத்தும் கிரியைகளில் நாட்டம் இல்லை, மற்றும் உண்மையில் அவர்களுக்குத் தொடர்ந்து உள்ளார்ந்த தூண்டுதல் இல்லாதது போலவே காணப்படுகிறது. அவர்கள் மீறுதல்களால் மேற்கொள்ளப்படும்போது தேவனுக்குக் கடனாளிகளாய் இருப்பதை உணர்வதுமில்லை மனஸ்தாபப்படுவதற்கான விழிப்புணர்வும் அவர்களிடத்தில் இல்லை. அவர்கள் சத்தியத்தைத் தேடுவதுமில்லை, சபையை விட்டு விலகுவதுமில்லை, மற்றும் அதற்குப் பதிலாகத் தற்காலிக இன்பங்களையே நாடுகிறார்கள். இந்த ஜனங்கள் புத்தியில்லாதவர்கள், முற்றிலும் முட்டாள்கள்! காலம் வரும்போது அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மேலும் ஒருவர்கூட இரட்சிக்கப்படமாட்டார்கள்! ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர்கள் எப்போதுமே இரட்சிக்கப்பட்டவர்கள் என்று நீ நினைக்கிறாயா? இந்த நம்பிக்கை முற்றிலும் மாயையானதே! ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடாத அனைவரும் சிட்சிக்கப்படுவார்கள். பெரும்பாலான ஜனங்களுக்கு ஜீவனுக்குள், தரிசனங்களில் பிரவேசிப்பதில் அல்லது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் முற்றிலுமாக நாட்டம் இல்லை. அவர்கள் உள்ளே பிரவேசிக்க நாடுவதில்லை, மேலும் அவர்கள் இன்னும் ஆழமாக உட்பிரவேசிக்க நிச்சயமாக நாடுவதில்லை. அவர்கள் தங்களைத்தாங்களே பழாக்கிக்கொள்ளவில்லையா? தற்போது, ஒரு பகுதி ஜனங்கள் இருக்கிறார்கள், அவர்களது நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. பரிசுத்த ஆவியானவர் அதிகமாகக் கிரியை செய்யும்போது, அவர்கள் அதிக நம்பிக்கையை அடைகிறார்கள்; அதிக அனுபவத்தை அவர்கள் பெறும்போது, தேவ கிரியையின் கூடுதல் இரகசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளுகிறார்கள். ஆழமாக உட்பிரவேசிக்கும்போது அதிகமாகப் புரிந்துகொள்ளுகிறார்கள். அவர்கள் தேவனின் அன்பு மிகவும் பெரியது என்று உணர்கிறார்கள், மேலும் தங்களுக்குள் உறுதியாகவும் பிரகாசமாகவும் உணர்கிறார்கள். அவர்களுக்கு தேவனின் கிரியையைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது. இந்த ஜனங்களுக்குள்தான் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார். சில ஜனங்கள் சொல்லுகிறார்கள்: “தேவனிடத்தில் இருந்து புதிய வார்த்தைகள் இல்லையென்ற போதிலும், நான் சத்தியத்துக்குள் இன்னும் ஆழமாகச் செல்வதை நாடவேண்டும், எனது உண்மையான அனுபவத்தின் எல்லாவற்றையும் பற்றியும் நான் ஆர்வமாக இருக்க வேண்டும் மேலும் தேவ வார்த்தைகளின் உண்மைக்குள் பிரவேசிக்க வேண்டும்.” இத்தகைய ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறார்கள். தேவன் தமது முகத்தைக் காட்டாவிட்டாலும், மேலும் ஒவ்வொரு தனி நபர்களிடம் இருந்தும் மறைந்திருந்தாலும், மற்றும் அவர் ஒரு வார்த்தையையும் கூறாவிட்டாலும், ஜனங்கள் ஒருவகையான உள் சுத்திகரிப்பை அனுபவிக்கும் நேரங்கள் இருக்கின்றன, இன்னும் தேவன் ஜனங்களை முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை. ஒரு நபர் நிறைவேற்றவேண்டிய சத்தியத்தைத் தக்கவைக்க முடியவில்லை எனில் அவரிடம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருக்காது. சுத்திகரிப்பின் காலத்தில், தேவன் தம்மைத்தாமே வெளிப்படுத்தாதபோது, உனக்கு நம்பிக்கை இல்லையெனில் ஆனால் அதற்குப் பதிலாக விலகிச் சென்றால், நீ அவரது வார்த்தைகளை அனுபவிப்பதில் கவனம் செலுத்தாவிட்டால், நீ தேவனின் கிரியையில் இருந்து தப்பி ஓடுகிறாய் என்று அர்த்தம். பின்னர், புறம்பே தள்ளப்பட்டவர்களில் ஒருவனாய் இருப்பாய். தேவ வார்த்தைகளுக்குள் பிரவேசிப்பதை நாடாதவர்கள் அவருக்குச் சாட்சியாக நிற்க முடியாது. தேவனுக்குச் சாட்சியாக நின்று அவரது சித்தத்தைத் திருப்திப்படுத்தும் ஜனங்கள் யாவரும் தேவனின் வார்த்தைகளை நாடும் தங்கள் உந்துதலை முற்றிலும் சார்ந்திருப்பவர்கள் ஆகும். ஜனங்களில் தேவன் நடத்தும் கிரியை முதன்மையாக அவர்கள் சத்தியத்தை அடைவதை அனுமதிப்பதற்காகவே; நீ ஜீவனைத் தேடுவது உன்னைப் பரிபூரணப்படுத்திக்கொள்ளவே, மேலும் இது எல்லாம் தேவனுடைய உபயோகத்துக்காக உன்னை தகுதியுள்ளவனாக்கவே. இப்போது நீ நாடுவதெல்லாம், இரகசியங்களைக் கேட்பதும், தேவ வார்த்தைகளைக் கேட்பதும், கண்களுக்கு விருந்தளிப்பதும், சில புதுமைகள், போக்குகள் இருக்கிறதா என்று சுற்றிலும் பார்ப்பதும், மேலும் இதன் மூலம் உன் ஆர்வத்தைத் திருப்திப்படுத்துவதுமேயாகும். இதுதான் உன் இருதயத்தின் நோக்கம் என்றால், தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கு வகை ஏதும் இல்லை. சத்தியத்தை நாடாதவர்களால் கடைசிவரை பின்பற்ற முடியாது. இப்போது, தேவன் எதுவும் செய்யவில்லை என்பதல்ல, ஆனால் மாறாக ஜனங்கள் அவரோடு ஒத்துழைக்கவில்லை, ஏனெனில் அவர்கள் அவருடைய கிரியைகளில் களைப்படைந்துவிட்டார்கள். ஆசிர்வாதங்கள் அளிக்கும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கே அவர்கள் விருப்பம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள் மற்றும் அவரது நியாயத்திர்ப்பு மற்றும் சிட்சிப்பின் வார்த்தைகளைக் கேட்க அவர்கள் மனதாயில்லை. இதற்குக் காரணம் என்ன? இதற்குக் காரணம் என்னவென்றால், ஆசிர்வாதங்களை அடையும் விருப்பம் கொண்ட ஜனங்களுக்கு அவை கிடைக்கவில்லை என்பதால் எதிர்மறையாகவும் பலவீனமானவர்களாகவும் மாறிவிட்டனர். தேவன் வேண்டுமென்றே ஜனங்கள் தம்மைப் பின்பற்றுவதை அனுமதிக்காமல் இல்லை அல்லது அவர் வேண்டுமென்றே மனுக்குலத்தை அடிக்கவில்லை. ஜனங்களின் நோக்கம் முறையற்றதாக இருப்பதால் மட்டுமே அவர்கள் எதிர்மறையாகவும் பலவீனர்களாகவும் மாறுகின்றனர். தேவன் மனிதனுக்கு ஜீவனை அளிக்கும் தேவனாய் இருக்கிறார், மற்றும் அவர் மனிதனை மரணத்துக்குள் கொண்டுவர முடியாது. ஜனங்களின் எதிர்மறை உணர்வும், பலவீனமும் பின்வாங்கிப்போதல் ஆகிய யாவும் அவர்களுடைய சொந்த செயல்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன.

தேவனின் தற்போதைய கிரியை ஜனங்களுக்குச் சில சுத்திகரிப்பைக் கொண்டுவருகிறது, மேலும் சுத்திகரிக்கப்படும்போது உறுதியாக நிற்கக் கூடியவர்களாலேயே தேவனின் அங்கீகாரத்தைப் பெறமுடியும். பேசாமலோ அல்லது கிரியை செய்யாமலோ அவர் எவ்விதமாகத் தம்மை மறைத்துக்கொண்டாலும் நீ இன்னும் ஆற்றலோடு பின்பற்றலாம். உன்னைத் தள்ளிவிடுவேன் என்று தேவன் கூறினாலும், நீ இன்னும் அவரைப் பின்பற்றலாம். இது தேவனுக்கான நிலைநிற்கும் சாட்சியாகும். தேவன் தம்மை உன்னிடம் இருந்து மறைத்துக்கொள்ளும்போது நீ அவரைப் பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டால், அது தேவனுக்கான நிலைநிற்கும் சாட்சியாகுமா? ஜனங்கள் உண்மையிலேயே உட்பிரவேசிக்காவிட்டால், அவர்களுக்கு உண்மையான வளர்ச்சி இருக்காது, மேலும் அவர்கள் ஒரு பெரும் சோதனையை உண்மையில் எதிர்கொள்ளும்போது தடுமாறி விழுவார்கள். உன் எண்ணப்படி தேவன் பேசாவிட்டால் அல்லது செய்யாவிட்டால் நீ நிலைகுலைந்து போகிறாய். உன் சொந்த எண்ணங்களின்படி தேவன் தற்போது கிரியை புரிந்தால், அவர் உன் சித்தத்தை நிறைவேற்றினால், மற்றும் உன்னால் நிலைநின்று ஆற்றலோடு பின்பற்ற முடிந்தால், பின்னர் நீ எந்த அஸ்திபாரத்தின் மேல் வாழ்கிறாய்? முற்றிலும் மனித ஆர்வத்தை சார்ந்திருக்கும் பாதையில் வாழும் பல ஜனங்கள் இருக்கிறார்கள் என்று நான் சொல்லுகிறேன். அதைப் பின்பற்றுவதற்கு அதை அவர்கள் மெய்யாக இருதயத்தில் முற்றிலுமாக வைத்திருக்கவில்லை. சத்தியத்துக்குள் பிரவேசிப்பதை நாடாமல் தங்கள் வாழ்க்கையின் ஆர்வத்தை சார்ந்திருக்கும் அனைவரும் வெறுக்கத்தக்க ஜனங்கள், மேலும் அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்! தேவனால் நடத்தப்படும் பலவகையான கிரியைகள் யாவும் மனிதனைப் பரிபூரணப்படுத்தவே செய்யப்படுகின்றன. இருப்பினும், ஜனங்கள் எப்போதும் ஆவல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் வதந்திகளைப் பற்றி விசாரிக்க விரும்புகிறார்கள், அவர்கள் அயல் நாடுகளின் தற்போதைய செய்திகளைப் பற்றிய அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள்—உதாரணமாக, அவர்கள் இஸ்ரவேலில் என்ன நடக்கிறது, அல்லது எகிப்தில் பூகம்பம் ஏற்பட்டதா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள்—அவர்கள் எப்போதும் சில புதிய செய்திகளுக்காக, தங்கள் சுய விருப்பங்களைத் திருப்தி செய்யும் புதுமையான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் ஜீவனைத் தேடவில்லை, பரிபூரணப்படுத்தப்படுவதை நாடவும் இல்லை. தங்கள் அழகான கனவு நனவாவதற்காகவும், தங்கள் ஊதாரித்தனமான விருப்பங்கள் நிறைவேறுவதற்காகவும் தேவனுடைய நாள் வருவதை மட்டுமே அவர்கள் நாடுகிறார்கள். இத்தகைய நபர் நடைமுறைக்கு உகந்தவர் அல்ல—இவர்கள் முறையற்ற கண்ணோட்டம் உடையவர்கள். தேவனிடத்தில் மனுக்குலத்திற்கு இருக்கும் விசுவாசத்திற்கான அடிப்படை சத்தியத்தைப் பின்பற்றுவது மட்டுமே ஆகும், மேலும் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை ஜனங்கள் நாடாவிட்டால், அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்துவதை நாடாவிட்டால், பின்னர் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேவனின் கிரியையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்களே தண்டனைக்கு ஆளாகக்கூடியவர்கள்.

தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் அவருடன் ஜனங்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும். தேவன் தற்போது ஜனங்களைச் சோதித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வார்த்தையும் கூறாமல் இருக்கிறார், ஆனால் அவர் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார் மற்றும் ஜனங்களோடு நேரடியாக எந்தத் தொடர்பும் கொள்ளாமல் இருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும்போது அவர் எந்தக் கிரியையும் செய்யாததுபோல் தோன்றுகிறது, ஆனால் உண்மை என்னவென்றால் அவர் இன்னும் மனிதனுக்குள் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார். ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடும் யாரொருவருக்கும் அவர்களது வாழ்க்கையின் தேடலுக்கு ஒரு தரிசனம் இருக்கும், அவர்கள் முழுவதுமாக தேவனுடைய கிரியையை அறிந்துகொள்ளாவிட்டாலும் கூட சந்தேகங்கள் இருக்காது. சோதனைக்குள் பிரவேசிக்கும் போது தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்றும் என்ன கிரியையை அவர் நிறைவேற விரும்புகிறார் என்றும் உனக்குத் தெரியவில்லை என்றாலும், உனக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால் மனுக்குலத்திற்கான தேவனுடைய நோக்கங்கங்கள் எப்போதும் நன்மையானவையே. நீ அவரை உண்மையான இருதயத்தோடு பின்பற்றினால் அவர் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டார், மேலும் கடைசியில் அவர் உன்னைப் பரிபூரணப்படுத்துவார் மற்றும் ஜனங்களை ஒரு பொருத்தமான சேருமிடத்துக்குக் கொண்டுசேர்ப்பார். தற்போது தேவன் எவ்வாறு ஜனங்களைச் சோதித்தாலும், ஒரு நாள் வரும் அதில் அவர் ஜனங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான விளைவையும் பொருத்தமான பிரதிபலனையும் அளிப்பார். ஜனங்களை ஒரு குறிப்பிட்ட நிலை வரை வழிநடத்திச் சென்றுவிட்டு தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடவோ அல்லது புறக்கணிக்கவோ மாட்டார். இது ஏனென்றால் தேவன் நம்பத்தகுந்தவர். இந்தக் கட்டத்தில், பரிசுத்த ஆவியானவர் சுத்திகரிப்பின் கிரியையைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு தனி நபரையும் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறார். மரணச் சோதனை மற்றும் சிட்சிப்பின் சோதனை அடங்கிய கிரியையின் கட்டங்களில், வார்த்தையின் மூலம் சுத்திகரிப்பு நடத்தப்படுகிறது. தேவனுடைய கிரியையை ஜனங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் முதலில் அவருடைய தற்போதைய கிரியையையும் மனுக்குலம் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இது ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவன் எதைச் செய்தாலும், அது சுத்திகரிப்பாக இருந்தாலும் அல்லது அவர் பேசவில்லை என்றாலும் கூட, தேவனுடைய கிரியையின் ஓர் அடி கூட மனுக்குலத்தின் எண்ணங்களோடு ஒத்துப்போகாது. அவரது கிரியையின் ஒவ்வொரு அடியும் ஜனங்களின் எண்ணங்களை சிதறடிக்கிறது மற்றும் உடைத்துச் செல்கிறது. இதுவே அவருடைய கிரியை. ஆனால் நீ அதை விசுவாசிக்க வேண்டும், தேவனுடைய கிரியை ஒரு கட்டத்தை அடைந்துவிட்டதால், எதுவாக இருந்தாலும் அவர் மனுக்குலம் எல்லாவற்றையும் மரணத்துக்குட்படுத்த மாட்டார். அவர் மனுக்குலத்துக்கு வாக்குத்தத்தங்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் ஆகிய இரண்டையும் அளிக்கிறார், மேலும் அவரைப் பின்பற்றுகிற யாவரும் அவரது ஆசிர்வாதங்களை அடைய முடியும், ஆனால் பின்பற்றாதவர்கள் தேவனால் புறம்பே தள்ளப்படுவார்கள். இது நீ பின்பற்றுவதைச் சார்ந்திருக்கிறது. வேறு எது எப்படி இருந்தாலும், தேவனுடைய கிரியை முடிந்ததும், ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான சேருமிடம் அமையும் என்பதை நீ விசுவாசிக்க வேண்டும். மனுக்குலத்துக்கு தேவன் அழகான பேராவல்களை அளித்துள்ளார். ஆனால் தேடாமல் அவற்றை அடையமுடியாது. உன்னால் இதை இப்போது பார்க்க முடியவேண்டும்—தேவன் ஜனங்களை சுத்திகரிப்பதும் சிட்சிப்பதும்தான் அவரது கிரியை, ஆனால் ஜனங்கள் அவர்களது பங்குக்கு எப்போதும் மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தேட வேண்டும். உன்னுடைய நடைமுறை அனுபவத்தில் முதலில் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்து குடிப்பது எவ்வாறு என்று நீ அறிய வேண்டும்; அவரது வார்த்தைகளுக்குள் நீ எதற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதையும் உன்னுடைய குறைபாடுகளையும் கண்டறியவேண்டும், உன் நடைமுறை அனுபவத்தில் நீ பிரவேசிப்பதை நாட வேண்டும், மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவ வார்த்தைகளை எடுத்து அவ்வாறு செய்ய முயல வேண்டும். தேவனுடைய வார்தைகளைப் புசிப்பதும் குடிப்பதும் ஓர் அம்சம் ஆகும். இதனுடன், சபை வாழ்க்கையைப் பராமரிக்க வேண்டும், உங்களுக்கு ஓர் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை இருக்க வேண்டும், மேலும் உங்களது தற்போதைய நிலையை தேவனிடத்தில் உங்களால் ஒப்படைக்க முடிய வேண்டும். அவருடைய கிரியை எப்படி மாறினாலும், உனது ஆவிக்குரிய வாழ்க்கை இயல்பாக இருக்க வேண்டும். உனது இயல்பான பிரவேசத்தை ஓர் ஆன்மீக வாழ்க்கையால் பராமரிக்க முடியும். தேவன் எதைச் செய்தாலும், நீ இடையூறு இல்லாமல் உனது ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடர்ந்து உன்னுடைய கடமைகளைச் செய்ய வேண்டும். இதுவே ஜனங்கள் செய்ய வேண்டியது. இவை எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, ஆனால் இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு இது பரிபூரணப்படுத்துதல், அசாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு இது சோதனை. பரிசுத்த ஆவியானவரின் சுத்திகரிப்புக் கிரியையின் தற்போதைய கட்டத்தில், சில ஜனங்கள் தேவனுடைய கிரியை மகா பெரியது என்றும் ஜனங்களுக்கு சுத்திகரிப்பு முற்றிலும் தேவை என்றும், இல்லாவிட்டால் அவர்களது நிலை மிகக் குறைவாக இருக்கும் மேலும் அவர்களால் தேவ சித்தத்தை அடையும் வழி இல்லை என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், நல்ல நிலையில் இல்லாதவர்களுக்கு, அது தேவனைப் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணமாகவும், மற்றும் சபை கூடுகைக்குச் செல்லாமல் இருப்பதற்கும் தேவ வார்த்தைகளைப் புசிக்காமலும் குடிக்காமலும் இருப்பதற்கான ஒரு காரணமாகவும் ஆகிறது. தேவனுடைய கிரியையில், அவர் எதைச் செய்தாலும் அல்லது அவர் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தாலும், ஜனங்கள் ஓர் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான ஓர் அடிக்கோட்டைப் பராமரிக்கவேண்டும். ஒருவேளை நீ உன் ஆவிக்குரிய வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் தளர்ச்சி இல்லாமல் இருக்கலாம், ஆனால் இன்னும் நீ அதிகமாக அடைந்துவிடவில்லை, மேலும் ஒரு பெரும் விளைச்சலை அறுக்கவும் இல்லை. இந்த வகையான சூழ்நிலையில், நீ இன்னும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்; உன் வாழ்க்கையில் இழப்பைச் சந்திக்காமல் இருக்க நீ இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் இதன் மூலம் நீ தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறாய். உனது ஆவிக்குரிய வாழ்க்கை அசாதாரணமானதாக இருந்தால், உன்னால் தேவனின் தற்போதைய கிரியையைப் புரிந்துகொள்ள முடியாது, மேலும் அதற்குப் பதில் அது உன்னுடைய சொந்த எண்ணங்களுக்கு முற்றிலும் இணக்கமானதாக இல்லை என்று எப்போதும் உணர்கிறாய் மற்றும் அவரைப் பின்பற்ற நீ விருப்பத்தோடு இருந்தாலும், உனக்குள் உள்ளார்ந்த உந்துதல் இல்லாமல் போகிறது. ஆகவே, தேவன் தற்போது என்ன செய்துகொண்டு இருந்தாலும், ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஜனங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரால் தமது கிரியையைச் செய்ய முடியாது, மேலும் ஒத்துழைக்கும் ஓர் இருதயம் ஜனங்களிடம் இல்லையென்றால், அவர்களால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அடைய முடியாது. உனக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை வேண்டுமென்றால், மேலும் நீ தேவனுடைய அங்கீகரத்தை அடைய விரும்பினால், தேவனுக்கு முன்பாக உன்னிடம் ஆதியில் இருந்த பக்தியைப் பராமரிக்க வேண்டும். இப்போது, உனக்கு ஓர் ஆழமான புரிதலோ, ஓர் உயர்ந்த கொள்கையோ, அல்லது அத்தகையப் பிற விஷயங்களோ தேவையில்லை—தேவையானது எல்லாம் நீ தேவனுடைய வார்த்தையை மூல அஸ்திவாரத்தின் மேல் நிலைநிறுத்துவது ஒன்றுதான். ஜனங்கள் தேவனோடு ஒத்துழைக்கவில்லை என்றால் மற்றும் ஆழமான பிரவேசத்தை நாடாவிட்டால், பின் தேவன் ஆதியில் அவர்களுக்கானவைகளாக இருந்தவற்றை எல்லாம் எடுத்துப்போடுவார். உள்ளுக்குள் ஜனங்கள் எப்போதும் தொல்லையில்லாமல் இருப்பதற்குப் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள், மேலும் ஏற்கெனவே இருப்பவைகளையே அனுபவிப்பார்கள். எந்த விலையையும் கொடுக்காமல் அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடைய விரும்புகிறார்கள். இதுவே மனுக்குலம் வரவேற்கும் ஊதாரித்தனமான சிந்தனைகள். ஒரு விலையைக் கொடுக்காமல் ஜீவனையே அடைவது—ஆனால் ஏதாவது ஒன்று இத்தகைய சுலபமாக இருந்திருக்கிறதா? யாராவது ஒருவர் தேவனை விசுவாசித்து, ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடி தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தை நாடினால், அவர்கள் ஒரு விலையைக் கொடுக்கவேண்டும் மற்றும் தேவன் எதைச் செய்த போதிலும், அவர்கள் எப்போதும் தேவனைப் பின்பற்றும் ஒரு நிலையை அடையவேண்டும். இதுவே ஜனங்கள் செய்யவேண்டிய ஒன்று. நீ இவை எல்லாவற்றையும் ஒரு விதியாகப் பின்பற்றினாலும், நீ எப்போதும் அதை நிலைநிறுத்தவேண்டும், மற்றும் சோதனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், உனக்கு தேவனிடம் உள்ள இயல்பான உறவை விட்டுவிடக் கூடாது. உன்னால் ஜெபிக்கவும், சபை வாழ்க்கையைப் பராமரிக்கவும், மற்றும் உனது சகோதர சகோதரிகளை ஒரு போதும் விட்டுவிடாமல் இருக்கவும் முடிய வேணடும். தேவன் உன்னை சோதிக்கும்போது, நீ இன்னும் சத்தியத்தைத் தேடவேண்டும். இது ஆவிக்குரிய வாழ்க்கைக்கான குறைந்தபட்ச தேவை. எப்போதும் தேடுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருத்தல், மற்றும் ஒத்துழைக்க முயற்சி செய்தல், உனது முழு ஆற்றலையும் பயன்படுத்துதல்—இதைச் செய்ய முடியுமா? ஜனங்கள் இதை ஓர் அஸ்திவாரமாகக் கொண்டால் விவேகத்தை அடைந்து யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும். உன் நிலை இயல்பானதாக இருக்கும்போது தேவ வார்த்தைகளை ஏற்பது எளிதானது; இச்சூழலில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதைக் கடினமானதாக உணரமாட்டாய், மேலும் தேவனுடைய கிரியை சிறப்பானது என்று உணர்வாய். ஆனால் உன் நிலை மோசமாக இருக்கும்போது, தேவனுடைய கிரியை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், ஒருவர் எவ்வளவு அழகாக பேசினாலும், நீ மனதை அதில் செலுத்த மாட்டாய். ஒரு நபருடைய நிலை அசாதரணமாக இருக்கும்போது, தேவனால் அவர்களுக்குள் கிரியை செய்ய முடியாது, மற்றும் அவர்களால் தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைய முடியாது.

ஜனங்களுக்கு கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லை என்றால், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வது அவர்களுக்கு எளிதானது அல்ல. தேவனின் கிரியை சிறிதளவும் ஜனங்களின் எண்ணங்களோடும் கற்பனைகளோடும் இணங்காது என்பதை ஒவ்வொருவரும் இப்போது பார்க்கலாம். தேவன் மிக அதிகமான கிரியைகளைச் செய்திருக்கிறார் மற்றும் பல வார்த்தைகளைப் பேசியிருக்கிறார், மேலும் அவைதான் சத்தியம் என்று ஜனங்கள் ஒப்புக்கொண்டாலும், தேவனைப் பற்றிய கருத்துகள் அவர்களிடம் தோன்ற இன்னும் வாய்ப்புள்ளது. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதை அடைய விரும்பினால், அவர்கள் தாங்கள் ஏற்கெனவே பார்த்தவைகளிலும் தங்கள் அனுபவத்தின் மூலம் அடைந்தவைகளிலும் நிலைநிற்கும் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொண்டிருக்கவேண்டும். ஜனங்களிடத்தில் தேவன் எதைச் செய்தாலும், தங்களிடம் இருப்பவற்றை அவர்கள் நிலைநிறுத்த வேண்டும், தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும், மற்றும் கடைசிவரை அவரிடம் பக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதுவே மனுக்குலத்தின் கடமை. ஜனங்கள் தாங்கள் செய்யவேண்டியதை நிலைநிறுத்த வேண்டும். தேவனிடம் காட்டும் விசுவாசத்துக்கு அவருக்குக் கீழ்ப்படிதலும், அவரது கிரியையின் அனுபவமும் அவசியமாகும். தேவன் அதிகமான கிரியை செய்துள்ளார்—ஜனங்களுக்கு அவை எல்லாம்பரிபூரணப்படுத்துதல், சுத்திகரித்தல், மற்றும் இன்னும் அதிகமாகச் சிட்சை என்று கூறலாம். தேவனுடைய கிரியையின் ஓர் அடிகூட மனித எண்ணங்களுக்கு ஒத்ததாக இல்லை; ஜனங்கள் எதை அனுபவித்தார்கள் என்றால் தேவனின் கண்டிப்பான வார்த்தைகளே. தேவன் வரும்போது, ஜனங்கள் அவருடைய மாட்சிமையையும் அவரது கோபத்தையும் அனுபவிக்கவேண்டும். இருப்பினும், அவரது வார்த்தைகள் எவ்வளவு கண்டிப்பானவைகளாக இருந்தாலும், அவர் மனுக்குலத்தை இரட்சிக்கவும் பரிபூரணப்படுத்தவுமே வருகிறார். சிருஷ்டிகளாக, ஜனங்கள் தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும், மற்றும் சுத்திகரிப்பின் மத்தியில் தேவனுக்குச் சாட்சிகளாக நிற்க வேண்டும். ஒவ்வொரு சோதனையிலும் அவர்கள் அளிக்க வேண்டிய சாட்சியை நிலைநிறுத்த வேண்டும், மேலும் அதை முழுமையாக தேவனுக்காகச் செய்யவேண்டும். இதைச்செய்யும் ஒருவனே ஜெயங்கொள்ளுபவன். தேவன் உன்னை எப்படி சுத்திகரித்தாலும், நீ முழு தன்னம்பிக்கையோடு இருக்கிறாய் மேலும் ஒருபோதும் அவர் மேல் நம்பிக்கையை இழக்கமாட்டாய். மனிதன் என்ன செய்யவேண்டுமோ அதை நீயும் செய். இதுவே மனிதனிடத்தில் இருந்து தேவன் எதிர்பார்ப்பது மேலும் மனிதனின் இருதயம் அவரிடத்தில் முழுமையாகத் திரும்பக்கூடியதாக இருக்கவேண்டும், மேலும் கடந்து போகும் ஒவ்வொரு கணத்திலும் அவரை நோக்கித் திரும்ப வேண்டும். இவனே ஜெயங்கொள்ளும் ஒருவன். “ஜெயங்கொள்ளுகிறவர்கள்” என்று தேவன் குறிப்பிடுகிறவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போதும், சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும்போதும், அதாவது அவர்கள் தங்களைத் தாங்களே அந்தகாரத்தின் வல்லமைகளுக்கு மத்தியில் இருப்பதாக காணும்போது, அவர்களால் சாட்சியாக நிற்கவும், தேவன் மீதான தங்கள் நம்பிக்கையையும் பக்தியையும் பராமரிக்கவும் முடிகிறது. தேவனுக்கு முன்பாக உன்னால் இன்னும் ஒரு சுத்த இருதயத்தைக் கொண்டிருக்கவும், என்னவானாலும் தேவன்மீதுள்ள உன் மெய்யான அன்பை உன்னால் பராமரிக்கவும் முடியுமானால், நீ தேவனுக்கு முன்பாகச் சாட்சியாக நிற்கிறாய், இதைத்தான் தேவன் “ஜெயங்கொள்ளுகிறவனாக” இருப்பது என்று குறிப்பிடுகிறார். தேவன் உன்னை ஆசிர்வதிக்கும் போது உன் பின்தொடர்தல் சிறப்பாக இருக்கிறது, ஆனால் அவரது ஆசிர்வாதம் இல்லாதபோது நீ பின்வாங்குகிறாய் என்றால், இது பரிசுத்தமா? இந்த வழி சத்தியமானது என்பதில் நீ நிச்சயமாக இருப்பதால், நீ அதைக் கடைசிவரை பின்பற்ற வேண்டும். தேவனிடத்தில் உன் பக்தியைப் பராமரித்துவர வேண்டும். உன்னைப் பரிபூரணப்படுத்தவே தேவன் தாமே பூமிக்கு வந்ததை நீ பார்த்திருப்பதால், நீ உன் இருதயத்தை முழுமையாக அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் என்ன செய்தாலும், கடைசியாக உனக்காகச் சாதகமற்ற ஒரு பலாபலனை தீமானித்தாலும் கூட உன்னால் அவரைப் பின்பற்ற முடியுமானால் அதுவே தேவனுக்கு முன்பாக உன் பரிசுத்தத்தைப் பராமரிப்பது ஆகும். ஒரு பரிசுத்தமான ஆவிக்குரிய உடலை மற்றும் ஒரு தூய கன்னியை தேவனுக்கு அளித்தல் என்பதற்கு அர்த்தம் தேவனுக்கு முன்பாக ஓர் உண்மையுள்ள் இருதயத்தைக் கொண்டிருத்தல் என்பதாகும். மனுக்குலத்துக்கு உண்மையாக இருப்பதுதான் தூய்மை. தேவனுக்கு உண்மையாக இருக்கும் திறனே தூய்மையைப் பராமரித்தல். இதைத்தான் நீ கடைப்பிடிக்க வேண்டும். ஜெபிக்க வேண்டிய நேரத்தில் நீ ஜெபி; ஐக்கியத்தில் நீ கூடி வரவேண்டியபோது, அதைச் செய்; கீர்த்தனைகளைப் பாடவேண்டியபோது கீர்த்தனைகளைப் பாடு; மாம்சத்தைக் கைவிட வேண்டியபோது மாம்சத்தைக் கைவிடு; நீ உன் கடமையைச் செய்யும்போது அதில் குழப்பம் அடையாதே; நீ சோதனைகளை எதிர்கொள்ளும் போது உறுதியாக நில். இதுவே தேவனிடத்திலான பக்தி. ஜனங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை நீ நிலை நிறுத்தாவிட்டால், உன் அனைத்து முந்தைய துன்பமும் தீர்மானங்களும் வீணாகப் போய்விடும்.

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும் ஜனங்கள் ஒத்துழைக்கவேண்டிய ஒரு வழி இருக்கிறது. தேவன் ஜனங்களைச் சுத்திகரிப்பதனால் அவர்கள் சுத்திகரிப்படையும் போது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேவன் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதால் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது மற்றும் அவர்கள் விருப்பத்துடன் அவரது சுத்திகரிப்பையும் அவரால் கையாளப்படுவதையும் கிளைநறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஜனங்களுக்கு உள்ளொளியையும் பிரகாசத்தையும் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுக்குள் கிரியைபுரிந்து அவரோடு ஒத்துழைக்கவும் கடைப்பிடிக்கவும் வைக்கிறார். சுத்திகரிப்பின் போது தேவன் பேசுவதில்லை. அவர் தமது வார்த்தையைக் கூறுவதில்லை, ஆனால், ஜனங்கள் செய்யவேண்டிய கிரியை இன்னும் இருக்கிறது. நீ ஏற்கெனவே உன்னிடம் இருப்பதை நிலைநிறுத்த வேண்டும், உனக்கு இன்னும் தேவனிடத்தில் ஜெபிக்கவும், தேவனுக்கு நெருக்கமாக இருக்கவும் மற்றும் அவருக்கு முன்பாக சாட்சியாக நிற்கவும் இயலவேண்டும்; இந்த வகையில் நீ உன்னுடைய சொந்தக் கடமையைச் செய்வாய். தேவன் ஜனங்களின் நம்பிக்கை மற்றும் அன்பைச் சோதிக்கும்போது அவர்கள் தேவனை நோக்கி அதிகமாக ஜெபிப்பதும் அவருக்கு முன் தேவனுடைய வார்த்தைகளை ருசிப்பதும் தேவை என்பதை நீங்கள் அனைவரும் தேவனுடைய கிரியையில் இருந்து தெளிவாகப் பார்க்கவேண்டும். தேவன் உன்னைப் பிரகாசிப்பித்தாலும் அவரது சித்தத்தைப் புரியவைத்தாலும், நீ இவற்றில் ஒன்றையும் கடைப்பிடிக்காவிட்டால், உன்னால் ஒன்றையும் அடையமுடியாது. நீ தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கும்போது, உன்னால் இன்னும் அவரிடத்தில் ஜெபிக்க முடியும், மேலும் அவரது வார்த்தைகளை ருசிக்கும்போது, நீ அவருக்கு முன் வந்து தேடவேண்டும் மேலும் நம்பிக்கை இழப்பு மற்றும் உணர்வற்ற நிலை எதுவும் இல்லாமல் அவரிடம் முழுநம்பிக்கை உடையவனாக இருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் கூட்டங்களில் முழு ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள், ஆனால் வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் இருளுக்குள் வீழ்கின்றனர். ஒன்றாகக் கூடிவருதலைக்கூட விரும்பாத சிலர் இருக்கின்றனர். ஆகவே, ஜனங்கள் நிறைவேற்றவேண்டிய கடமை என்ன என்பதை நீ தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் தேவனுடைய சித்தம் என்ன என்பதை உன்னால் அறிய முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ உன் கடமைகளைச் செய்யலாம், ஜெபிக்க வேண்டிய நேரத்தில் நீ ஜெபிக்கலாம், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டியபோது கடைப்பிடிக்கலாம், மேலும் ஜனங்கள் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யலாம். நீ உன் ஆதி தரிசனத்தை நிலைநிறுத்தலாம். இந்த வகையில் தேவனுடைய கிரியையின் அடுத்த படியை ஏற்றுக்கொள்ளலாம். தேவன் ஒரு மறைமுகமான வழியில் கிரியைசெய்யும்போது, நீ பின்பற்றாவிட்டால் அது ஒரு பிரச்சினையாக இருக்கும். கூட்டங்களில் அவர் பேசும்போதும் பிரசங்கம் செய்யும்போதும், நீ உற்சாகத்தோடு கேட்கிறாய், ஆனால் அவர் பேசாதபோது உனக்கு உற்சாகம் குறைந்து பின்வாங்கிப்போகிறாய். எந்த வகையான நபர் இவ்வாறு செயல்படுவான்? மந்தைகள் செல்லும் இடம் எல்லாம் பின்பற்றி செல்லுகிற யாரோ ஒருவன் இவன். அவர்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை, சாட்சி இல்லை, தரிசனம் இல்லை! பெரும்பாலான ஜனங்கள் இப்படியே இருக்கிறார்கள். இந்த வழியிலேயே நீ தொடர்ந்து சென்றால், ஒருநாள் நீ ஒரு பெரும் சோதனைக்கு ஆட்படும்போது, தண்டனைக்குள்ளாவாய். ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் தேவனுடைய செயல்முறையில் ஒரு நிலைப்பாடு என்பது மிக முக்கியமானதாகும். தேவனுடைய கிரியையின் ஒரு படியைக்கூட நீ சந்தேகப்படவில்லை என்றால், மனிதனின் கடமையை நீ நிறைவேற்றினால், தேவன் உன்னைக் கடைப்பிடிக்க வைத்தவற்றை நீ உண்மையாக நிலைநிறுத்தினால், அதாவது, நீ தேவனுடைய புத்திமதிகளை நினைவுகூர்ந்து, தற்காலத்தில் அவர் என்ன செய்தாலும் நீ அவரது புத்திமதிகளை மறக்காமல் இருந்தால், அவரது கிரியையில் உனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் இருந்தால், உன் நிலைப்பாட்டைப் பராமரித்து, உன் சாட்சியை உயர்த்திப்பிடித்து, வழியில் ஒவ்வொரு படியிலும் ஜெயம்கொண்டாயானால், பின்னர் முடிவில் தேவனால் நீ பரிபூரணப்படுத்தப்படுவாய் மேலும் ஜெயங்கொண்ட ஒருவனாய் உருவாக்கப்படுவாய். தேவனின் சோதனைகளின் ஒவ்வொரு படியிலும் உன்னால் உறுதியாக நிற்க முடியுமானால், இறுதிபரியந்தம் உன்னால் நிலைத்து நிற்கமுடியுமானால், நீ ஜெயங்கொண்டவன், தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட ஒருவனாவாய். உன்னுடைய தற்போதைய சோதனைகளில் உறுதியாக நிற்காவிட்டால், பின் எதிர்காலத்தில் இன்னும் கடினமாகப் போய்விடும். நீ கொஞ்சப் பாடுகளை மட்டுமே அனுபவித்தால் மேலும் சத்தியத்தை நீ பின்பற்றாவிட்டால், முடிவில் நீ ஒன்றையும் அடையமாட்டாய். நீ வெறுங்கையோடு நிற்பாய். தேவன் பேசவில்லை என்று காணும்போது சில ஜனங்கள் தங்கள் தேடலை விட்டுவிடுகிறார்கள், மேலும் அவர்களது இருதயங்கள் நொறுங்கிப்போய்விடுகின்றன. இத்தகைய நபர் ஒரு முட்டாள் இல்லையா? இத்தகைய ஜனங்களிடம் உண்மை இல்லை. தேவன் பேசும்போது, அவர்கள் அங்குமிங்கும் ஓடுவார்கள், வெளிப்புறமாகச் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பதுபோல் காணப்படுவார்கள், ஆனால் இப்போது அவர் பேசாதபோது, அவர்கள் பின்தொடர்வதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய நபருக்கு வருங்காலம் இல்லை. சுத்திகரிப்பின்போது, நீ ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் இருந்து பிரவேசிக்கவேண்டும், மேலும் நீ படிக்க வேண்டிய பாடங்களைப் படிக்க வேண்டும்; நீ தேவனிடத்தில் ஜெபிக்கும்போதும் அவரது வார்த்தைகளை வாசிக்கும்போதும், நீ அவற்றுடன் உன் நிலையை வைத்துச் சீர்தூக்கிப்பார்த்து, உன்குறைபாடுகளைக் கண்டறிந்து, இன்னும் நீ பல பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதை அறியவேண்டும். சுத்திகரிப்புக்கு ஆட்படும்போது நீ அதிகமாகப் பின்பற்றினால் நீ அதிகமாகப் பற்றாக்குறையுடன் இருப்பதை அறிந்துகொள்வாய். நீ சுத்திகரிப்பை அனுபவிக்கும்போது எதிர்கொள்ளவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்; உன்னால் அவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாது, நீ குறைகூறுவாய், நீ உன் சொந்த மாம்சத்தை வெளிப்படுத்துவாய்—இவ்வகையில் மட்டுமே உனக்குள் நீ கொண்டிருக்கும் பல சீர்கெட்ட மனநிலைகளை உன்னால் கண்டறியமுடியும்.

ஜனங்கள் திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் தேவனின் அளவுகோல்களுக்கு மிகவும் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். வருங்காலத்தில் இந்தப் பாதையில் நடக்க அவர்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை தேவைப்படலாம். தேவனுடைய கிரியைகளுக்குக் கடைசி நாட்களில் மிக அதிக அளவில் நம்பிக்கை தேவைப்படுகிறது, யோபுவுக்கு இருந்ததைவிட அதிகமான நம்பிக்கை தேவைப்படுகிறது. நம்பிக்கை இல்லாமல், ஜனங்களால் தொடர்ந்து அனுபவத்தை அடைய முடியாது மற்றும் தேவனால் அவர்கள் பரிபூரணப்படுத்தப்படவும் முடியாது. பெரும் உபத்திரவங்களின் காலம் வரும்போது ஜனங்கள் சபைகளை விட்டு நீங்குவார்கள்—இங்கே சிலர், அங்கே சிலர். முந்திய காலங்களில் மிகவும் சிறப்பான முறையில் பின்பற்றியவர்கள் சிலர் இருப்பார்கள் மேலும் அவர்கள் இப்போது ஏன் விசுவாசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியாது. உன்னால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் நடக்கும், மேலும் தேவன் எந்த அடையாளங்களையும், அற்புதங்களையும், இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளையும் வெளிப்படுத்த மாட்டார். நீ உறுதியாக நிற்கிறாயா என்று பார்ப்பதற்குதான் இது—தேவன் ஜனங்களைச் சுத்திகரிக்க உண்மைகளை உபயோகிக்கிறார். நீ இன்னும் அதிகமாகப் பாடுகளை அனுபவிக்கவில்லை. வருங்காலத்தில் பெரும் சோதனைகள் வரும்வேளையில், சில இடங்களில் சபையில் இருக்கும் ஒவ்வொரு தனிநபரும் விட்டுவிலகுவார்கள், நீ நல்ல உறவு வைத்திருப்பவர்களும் விட்டுவிலகி தங்கள் விசுவாசத்தைத் துறப்பார்கள். அப்போது உன்னால் உறுதியாக நிற்க முடியுமா? இதுவரை நீ எதிர்கொண்ட சோதனைகள் சிறியவை, ஒருவேளை உன்னால் அவற்றைக் கஷ்டப்பட்டே சமாளிக்க முடிந்திருக்கும். இந்தப் படியில் வார்த்தைகள் மூலமான சுத்திகரிப்புகளும் பரிபூரணப்படுத்தல்களும் மட்டுமே அடங்கும். அடுத்த படியில், உன்னைச் சுத்திகரிக்க சத்தியங்கள் உன்மேல் வரும், மேலும் நீ அபாயங்களின் மத்தியில் இருப்பாய். அது உண்மையிலேயே கடுமையானதாக மாறும்போது, தேவன் உன்னைத் துரிதப்படுத்தி அகலுமாறு கூறுவார், மேலும் மதவாதிகள் அவர்களோடு வருவதற்கு உன்னை வசப்படுத்துவார்கள். இது உன்னால் பாதையில் தொடர்ந்து செல்ல முடியுமா என்பதைப் பார்க்கவே, மேலும் இந்த விஷயங்கள் எல்லாம் சோதனைகளே. தற்போதைய சோதனைகள் எல்லாம் சிறிய அளவினதே, ஒரு நாள் வரும் அப்போது சில வீடுகளில் பெற்றோர்கள் விசுவாசிக்க மாட்டார்கள், மேலும் சிலவற்றில் குழந்தைகள் விசுவாசிக்க மாட்டார்கள். உன்னால் தொடர்ந்துசெல்ல முடியுமா? நீ மேலும் தொடர்ந்து செல்லும்போது உன் சோதனைகள் இன்னும் அதிகமாகும். ஜனங்களின் தேவைகள் மற்றும் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே தேவன் தமது சுத்திகரிக்கும் கிரியையை நடத்துகிறார். மனுக்குலத்தை தேவன் பரிபூரணப்படுத்தும் கட்டத்தில், ஜனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளருவது சாத்தியமில்லை—அது சுருங்கவே செய்யும். இந்தச் சுத்திகரிப்பின் மூலமே ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியும். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சபிக்கப்பட்டு—இவற்றை எல்லாம் உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? குறிப்பாக ஒரு நல்ல நிலையில் நீ ஒரு சபையைக் காணும்போது, அங்கு சகோதரிகளும் சகோதரர்களும் மிகுந்த உற்சாகத்தோடு பின்பற்றும்போது, நீ ஊக்கப்படுத்தப்படுவதாக உணர்வாய். அவர்கள் அனைவரும் விட்டுவிலகிச் சென்றுவிட்ட நாள் வரும்போது, அவர்களில் சிலர் இனிமேலும் விசுவாசிக்கமாட்டார்கள், சிலர் வியாபாரத்துக்காகவும் திருமணம் செய்துகொள்ளவும் விட்டுவிலகிச் சென்றுள்ளார்கள், மற்றும் சிலர் மதத்தில் சேர்ந்துவிட்டிருக்கிறார்கள்; அப்போதும் உன்னால் உறுதியாக நிற்க முடியுமா? உள்ளுக்குள் பாதிப்படையாமல் உன்னால் இருக்கமுடியுமா? தேவன் மனிதனைப் பரிபூரணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! அவர் மனிதனை சுத்திகரிக்கப் பல விஷயங்களை உபயோகப்படுத்துகிறார். ஜனங்கள் இதை முறைகளாகக் காண்கிறார்கள், ஆனால் தேவனின் ஆதி நோக்கத்தில் இவைகள் எல்லாம் முறைகளே அல்ல, ஆனால் உண்மைகள். முடிவில், ஒரு கட்டத்துக்கு அவர் ஜனங்களைச் சுத்திகரித்த பின்னர் மேலும் அவர்களுக்கு எந்தக் குறைகளும் இல்லாதபோது, அவரது கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடையும். உன்னை பரிபூரணப்படுத்துவதே பரிசுத்த ஆவியானவரின் பெரும் கிரியை, மேலும் அவர் கிரியை செய்யாமல் தம்மை மறைத்துக்கொள்ளும்போது, அது இன்னும் உன்னைப் பரிபூரணப்படுத்தும் நோக்கத்துக்கானதே, மேலும் இந்த வகையில் ஜனங்களுக்கு தேவனிடத்தில் அன்பு இருக்கிறதா, அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கை இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது. தேவன் வெளிப்படையாகப் பேசும்போது, நீ தேட வேண்டிய அவசியமில்லை; அவர் மறைந்திருக்கும்போதே தேடி உணர்ந்து உன் வழியைக் கண்டடையும் தேவை ஏற்படுகிறது. ஒரு சிருஷ்டியின் கடமையை நீ நிறைவேற்றத் தக்கவனாய் இருக்க வேண்டும், உனது எதிர்கால விளைவும் உன் இலக்கும் எதுவாக இருந்தாலும் நீ உயிரோடு இருக்கும் நாளளவும் தேவனைப் பற்றிய அறிவையும் அன்பையும் நீ தேடக்கூடியவனாய் இருக்க வேண்டும், மேலும் தேவன் உன்னை எப்படி நடத்தினாலும், குறைகூறுவதைத் தவிர்க்கக்கூடியவனாய் இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் கிரியை செய்ய ஒரு நிபந்தனை இருக்கிறது. தேவனுடைய செயல்களைப் பற்றி அவர்கள் அரைமனதோடோ சந்தேகத்தோடோ அல்லாமல் தாகத்துடன் தேட வேண்டும், அவர்கள் தங்கள் கடமைகளை எப்போதும் ஆற்றக் கூடியவர்களாய் இருக்கவேண்டும்; இந்தவகையில் மட்டுமே அவர்களால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் பலனை அடையமுடியும். தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும், மனுக்குலத்துக்கு தேவையானது என்னவென்றால் மாபெரும் நம்பிக்கையும் பின்பற்றுவதற்காக தேவனுக்கு முன்பாக வருவதுமாகும்—தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் கிரியை புரிகிறார் என்பதையும் அனுபவத்தால் மட்டுமே ஜனங்களால் கண்டறிய முடியும். உனக்கு அனுபவம் இல்லை என்றால், நீ உணர்தல் மூலம் அதை அடையாவிட்டால், நீ தேடாவிட்டால், உனக்கு ஒன்றும் கிடைக்காது. நீ உன் அனுபவங்கள் வாயிலாக உணர்ந்து செல்ல வேண்டும், மேலும் உன் அனுபவங்கள் வாயிலாகவே தேவ செயல்களை நீ பார்க்க முடியும் மேலும் அவரது அதிசயத்தையும் புரிந்துகொள்ளமுடியாத தன்மையையும் அறிந்துகொள்ள முடியும்.

முந்தைய: சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

அடுத்த: ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக