அத்தியாயம் 46

எனக்காகத் தன்னைத்தானே உண்மையாக ஒப்புக்கொடுக்கிற மற்றும் அர்ப்பணிக்கிற யாராக இருந்தாலும், நான் உன்னை நிச்சயமாகவே இறுதிவரை பாதுகாப்பேன்; நீ எப்போதும் சமாதானமாகவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், ஒவ்வொரு நாளும் என்னுடைய வெளிச்சத்தையும் வெளிப்பாட்டையும் நீ பெற்றிருப்பதற்காகவும் என் கை நிச்சயமாக உன்னைப் பிடித்துக் கொள்ளும். என்னிடம் இருப்பதை நீ பெற்றிருக்கும்படியாகவும், நான் என்னவாக இருக்கிறேன் என்பதை உடைமையாக்கும்படியாகவும் நான் நிச்சயமாக உன் மீது எனது ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக்குவேன். உனக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது உன்னுடைய ஜீவனாக இருக்கின்றது, அதை உன்னிடமிருந்து யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது. உன் மீது பிரச்சனையை வருவித்துக் கொள்ளாதே அல்லது மனச்சோர்வுக்குள் தள்ளப்படாதே; எனக்குள் சமாதானமும் மகிழ்ச்சியும் மட்டுமே உள்ளன. உண்மையாக எனக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிகிற பிள்ளையாகிய உன்னை, நான் உண்மையாக நேசிக்கிறேன். நான் மிகவும் வெறுப்பவர்கள் மாயக்காரர்கள்; நான் நிச்சயமாக அவர்களை அழித்து விடுவேன். நான் என் வீட்டிலிருந்து உலகத்தின் எந்த ஒரு தடயத்தையும் அகற்றி விடுவேன், மேலும் என்னால் பார்ப்பதற்குச் சகித்துக் கொள்ள முடியாத அனைவரையும் அகற்றி விடுவேன்.

என் இருதயத்தில் யார் என்னை உண்மையாக விரும்புகிறான், யார் விரும்பவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். அவர்கள் நன்றாக மாறுவேடமிட்டு, பொருத்தமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உலகின் மிகச் சிறந்த நடிகர்கள் என்று சொன்னாலும் கூட, அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் வைத்திருப்பதை நான் தெளிவாகக் காண்கிறேன். உன் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது என்று நினைக்காதே; உண்மையில் என்னை விடத் தெளிவாகப் புரிந்து கொள்பவர்கள் யாரும் இல்லை. உன் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிவேன்; நீ தேவனுக்காக உன்னையே அர்ப்பணிக்கவும், தேவனுக்காக ஒப்புக்கொடுக்கவும் தயாராக இருக்கிறாய், மற்றவர்களை மகிழ்விக்க இனிமையான பேச்சைப் பயன்படுத்த மட்டும் நீ விரும்புவதில்லை. தெளிவாகப் பார்! இன்றைய ராஜ்யம் மனுஷனுடைய பலத்தால் கட்டப்படவில்லை, மாறாக, எனது பன்மடங்கு ஞானத்தையும் கடின முயற்சியையும் பயன்படுத்தி வெற்றிகரமாகக் கட்டப்படும். யாரெல்லாம் தங்களுக்குள் ஞானத்தையும், நான் என்னவாக இருக்கிறேன் என்பதையும் உடையவர்களாய் இருக்கிறார்களோ அவர்கள் ராஜ்யத்தைக் கட்டுவதில் பங்கு பெற்றிருப்பார்கள். ஒருபோதும் கவலைப்பட வேண்டாம்; உனக்குள் இருக்கிற எனது சித்தத்தின் வெளிப்பாடு அல்லது வெளிச்சத்தைப் பொருட்படுத்தாமல், நீ எப்போதும் மிகவும் கவலைப்படுகிறாய். இனி இப்படிச் செய்யாதே. காரியம் எதுவாக இருந்தாலும், அதைப் பற்றி என்னுடன் அதிகம் ஐக்கியம் கொள், இதனால் நீ உங்கள் சொந்த செயல்களால் துன்பப்படுவதைத் தவிர்க்கலாம்.

ஒருவேளை, மேலோட்டமாகப் பார்த்தால் நான் எல்லோரிடமும் அலட்சியமாக இருப்பது போல் தோன்றலாம், ஆனால் உள்ளத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? நான் எப்பொழுதும் தாழ்மையானவர்களை உயர்வாக உயர்த்திக் கொண்டிருக்கிறேன், சுய கர்வம் கொண்டவர்களையும், சுய முக்கியத்துவம் வாய்ந்தவர்களையும் எப்போதும் தாழ்த்திக் கொண்டிருக்கிறேன். என் சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் பெரும் இழப்பைச் சந்திப்பார்கள். நான் இப்படிப்பட்டவராக இருக்கிறேன் என்றும், இதுவே எனது மனப்பான்மை என்றும் நீ அறிந்திருக்க வேண்டும்—இதை யாராலும் மாற்ற முடியாது, மற்றும் யாராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. எனது வெளிப்பாட்டின் மூலம் மட்டுமே நீ புரிந்து கொள்ள முடியும், இல்லையெனில், நீ அதை முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டாய்; அகந்தை கொள்ளாதே. சிலர் நன்றாகப் பேசினாலும், அவர்களின் இருதயங்கள் ஒருபோதும் எனக்கு விசுவாசமாக இல்லை, மறைவில் எப்போதும் என்னிடத்தில் முரண்படுகின்றனர்; இத்தகைய நபரை நான் நியாயந்தீர்ப்பேன்.

மற்றவர்களிடமிருந்து குறிப்புகளை எடுத்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம், நீ என்னுடைய நிலை மற்றும் எனது நடத்தைக்குக் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மட்டுமே நீ படிப்படியாக என் சித்தத்தைப் புரிந்து கொள்வாய்; அப்போது உன்னுடைய செயல்கள் என் சித்தத்திற்கு இணங்கிச் செல்லும், மற்றும் நீ எந்தத் தவறுகளும் செய்ய மாட்டாய். அழாதே, துக்கப்படாதே; நீ செய்யும் அனைத்தையும், உன் எல்லா நடத்தைகளையும் மற்றும் உன் எல்லா நினைவுகளையும் நான் தெளிவாகக் காண்கிறேன், மேலும் உன்னுடைய உண்மையான ஆசைகள் மற்றும் விருப்பங்களை நான் அறிவேன்; நான் உன்னைப் பயன்படுத்துவேன். இப்போது ஒரு முக்கியமான நேரம்; உன்னைச் சோதிக்கும் நேரம் வந்துவிட்டது. நீ இன்னும் பார்க்கவில்லையா? நீ இன்னும் உணரவில்லையா? நான் ஏன் உன்னிடம் இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிக்கிறேன்? உனக்குத் தெரியுமா? நான் இந்த விஷயங்களை உனக்கு வெளிப்படுத்தியுள்ளேன், மேலும் நீ சிறிது நுண்ணறிவைப் பெற்றிருக்கிறாய். ஆனால் நிறுத்த வேண்டாம்—உன்னுடைய பிரவேசத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல், நான் உன்னைத் தொடர்ந்து பிரகாசிப்பிப்பேன். நீ எவ்வளவு அதிகமாக எனக்குக் கீழ்ப்படிகிறாயோ, மற்றும் எனக்குச் செவிசாய்க்கிறாயோ, அவ்வளவு அதிகமாக உனக்குள் நீ பிரகாசமாக இருக்கிறாய், மேலும் அதிக வெளிப்பாட்டை உனக்குள் பெற்றிருக்கிறாய் என்பதை நீ உணர்ந்திருக்கிறாயா? நீ எவ்வளவு அதிகமாக எனக்குக் கீழ்ப்படிந்து செவிசாய்க்கிறாயோ, அவ்வளவு அதிகமாக என்னைப் பற்றிய அறிவை நீ பெற்றிருக்கிறாய், அதிக அனுபவத்தையும் அடைகிறாய் என்பது உனக்குத் தெரியுமா? எப்பொழுதும் உன்னுடைய சொந்தக் கருத்துகளைப் பற்றிக் கொள்ளாதே; இப்படிச் செய்வது என் ஜீவத் தண்ணீரின் ஓட்டத்தை அடைத்து, என் சித்தத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கும். ஒரு நபரை முழுமையாக ஆதாயப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். சிக்கலான முறையில் சிந்திக்க வேண்டாம். வெறுமனே பின்பற்று, இதற்கு மேல் சிந்திக்க வேண்டாம்!

முந்தைய: அத்தியாயம் 45

அடுத்த: அத்தியாயம் 47

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக