அத்தியாயம் 105

என் வார்த்தைகளின் பின் இருக்கும் கொள்கைகளின் நிமித்தமாகவும், நான் கிரியை செய்யும் முறைகளின் நிமித்தமாகவும், ஜனங்கள் என்னை மறுக்கிறார்கள். அதிக நீளமாக நான் பேசிக் கொண்டிருப்பதற்குப் பின் இருக்கும் நோக்கம் இதுதான் (இது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியாரை நோக்கி இருக்கிறது). இதுவே என் கிரியையின் ஞானமுள்ள முறையாகும்; இதுவே சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கான என் நியாயத்தீர்ப்பாகும். இதுவே என் உத்தியாகும், எந்த ஒரு தனிப்பட்ட நபராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு திருப்பு முனையிலும்—அதாவது, என் நிர்வாகத் திட்டத்தின் ஒவ்வொரு மாற்றத்தின் கட்டத்திலும்—சில ஜனங்கள் புறம்பாக்கப்பட வேண்டும்; என் கிரியையின் தொடர்வரிசைக்கு ஏற்ப அவர்கள் புறம்பாக்கப்படுகிறார்கள். இது மற்றும் இது மட்டுமே, என் முழு நிர்வாகத்திட்டமும் செயல்படும் விதமாகும். நான் புறம்பாக்க விரும்பும் ஜனங்களை ஒருவர் பின் ஒருவராக நீக்கிய பின், என்னுடைய கிரியையின் அடுத்தப் படிநிலையை நான் தொடங்குகிறேன். இருந்தாலும், இதுதான் கடைசி புறம்பாக்கப்படுதலாகும் (சீனாவுக்குள் இருக்கும் சபைகளை இது குறிக்கிறது). இது மட்டுமல்லாமல், உலகச் சிருஷ்டிப்புக்குப் பின் மாறும் கட்டத்தில் அதிக அளவிலான ஜனங்கள் புறம்பாக்கப்படும் நேரமாகவும் இதுவே இருக்கும். வரலாறு முழுவதும், ஒவ்வொரு முறையும் ஜனங்கள் புறம்பாக்கப்படும்போது, பிந்தைய கிரியைக்கு ஊழியம் செய்வதற்காக ஒரு பகுதி விட்டுவைக்கப்படுகிறது. இருந்தாலும், இக்காலம் முந்திய காலங்கள் போல் இல்லை; இது முழுமையாகவும் திறனுடையதாகவும் இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் இது மிகவும் முக்கியமானதும் மிகவும் விரிவானதுமாக இருக்கிறது. பெரும்பாலான ஜனங்கள், என்னுடைய வார்த்தைகளைப் படித்த பின்னர், தங்கள் மனதுகளில் இருந்து சந்தேகங்களை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றாலும், இறுதியாக அவற்றை அவர்களால் ஜெயங்கொள்ள முடிவதில்லை. இறுதியில், தங்கள் போராட்டங்களில் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். இதை அவர்களால் முடிவு செய்ய முடியாது, ஏனெனில் என்னால் முன்குறிக்கப்பட்டவர்கள் தப்ப முடியாது மற்றும் என்னால் முன்குறிக்கப்படாதவர்களை என்னால் வெறுக்கத்தான் முடியும். நான் சாதகமாகப் பார்ப்பவர்களை மட்டுமே நான் நேசிக்கிறேன்; இல்லாவிட்டால், ஒரு நபர் கூடச் சுதந்திரமாக வெளியேறி என்னுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாது. இதுவே என் இருப்புக் கோல், இது மட்டுமே வல்லமையுள்ள சாட்சியும் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை நிறைவேற்றும் முழு வெளிப்படுத்தலும் ஆகும். வெறும் உற்சாகமாக இருப்பதில் நிச்சயமாக ஒரு விஷயமும் இல்லை. விழுதலுக்கு எதிராகச் சாத்தான் அதிகாரமற்றதாக இருக்கிறது என்று நான் ஏன் கூறியிருக்கிறேன்? முதலில் அதற்கு வல்லமை இருந்தது, ஆனால் அது என் கைகளில் இருக்கிறது; அதை நான் கீழே படுக்கச் சொன்னால், அது படுக்க வேண்டும், எழுந்து எனக்குச் சேவகம் செய்யச் சொன்னால், எழுந்து அது எனக்குச் சேவகம் செய்ய வேண்டும், மேலும் நன்றாகச் செய்ய வேண்டும். சாத்தான் இதை விருப்பத்தோடு செய்வதில்லை; என்னுடைய இருப்புக்கோல் சாத்தானை ஆளுகிறது, மேலும் இந்த வகையில் மட்டுமே அது இருதயத்திலும் வார்த்தையிலும் நம்புகிறது. என்னுடைய ஆட்சிமுறை ஆணைகள் அதை ஆளுகின்றன, மேலும் என்னிடம் என் வல்லமை இருக்கிறது, ஆகவே சாத்தானால் முற்றிலுமாக நம்புவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது; அது என் பாதபடியில் எதிர்ப்பின் தடமே இல்லாமல் மிதிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில், என்னுடைய குமாரர்களுக்கு சாத்தான் ஊழியம் செய்து கொண்டு இருந்த போது, அது மிகவும் துஷ்டத்தனம் உள்ளதாக இருந்தது. மற்றும் வேண்டுமென்றே அவர்களைக் கொடுமைப்படுத்தியது. இதனால் என்னை வெட்கப்படுத்தி நான் திறனற்றவர் என்று கூறியது. எவ்வளவு குருட்டுத்தனம்! நான் உன்னை மிதித்துக் கொன்று போடுவேன்! முன்னே செல்; இன்னும் ஒரு முறை காட்டுமிராண்டித்தனமாக நட என்று உனக்கு சவால் விடுகிறேன்! மீண்டும் என் குமாரர்களை இன்னும் துணிந்து அலட்சியப்படுத்து என்று சவால் விடுகிறேன்! ஜனங்கள் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்களோ, எவ்வளவுக்கு என் வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கீழ்ப்படிகிறார்களோ நீ அவ்வளவுக்கு அவர்களைக் கொடுமைப்படுத்தி தனிமைப்படுத்துகிறாய் (இங்கு நான் ஒரு பிரிவை உருவாக்க உன் கூட்டாளிகளை ஒன்று சேர்ப்பதைக் குறிப்பிடுகிறேன்). இப்போது உன்னுடைய காட்டுமிராண்டித்தன நாட்கள் முடிவுக்கு வந்துள்ளன, கொஞ்சம் கொஞ்சமாக, நான் உன் கணக்கை முடிக்கிறேன்; நீ என்ன செய்திருக்கிறாயோ அதில் ஒரு சிறு அளவைக் கூட உன்னைக் கொண்டு போகவிட மாட்டேன். இப்போது நீ அதிகாரத்தை எடுத்துக்கொண்ட சாத்தான் அல்ல; மாறாக, நான் அதிகாரத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டேன், மேலும் உன்னைக் கையாளும் நேரம் என் குமாரர்களுக்கு வந்திருக்கிறது. நீ கீழ்ப்படிந்து இருக்க வேண்டும், கொஞ்சம் கூட எதிர்க்கக் கூடாது. கடந்த காலத்தில் எனக்கு முன்பாக எவ்வளவு நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், அது இன்று உனக்கு உதவாது. நான் நேசிப்பவர்களில் ஒருவனாக நீ இல்லை என்றால், நீ எனக்குத் தேவை இல்லை. மிக அதிகம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; அது நான் முன்குறித்த எண்ணிக்கையாக இருக்க வேண்டும், அதை விட ஒன்று குறைந்தாலும் அது அதைவிட மோசம். சாத்தானே—இடையூறு செய்யாதே! என் இருதயத்துக்குள் நான் யாரை நேசிக்கிறேன், மற்றும் யாரை வெறுக்கிறேன் என்பதில் நான் தெளிவில்லாதவராக இருக்க முடியுமா? நீ எனக்கு ஞாபகப்படுத்த வேண்டுமா? சாத்தான் என் குமாரர்களைப் பெற்றெடுக்க முடியுமா? எல்லாம் அபத்தமானவர்கள்! எல்லாம் கீழானவர்கள்! நான் எல்லோரையும் ஒட்டு மொத்தமாகவும் முற்றிலுமாகவும் ஒதுக்கித் தள்ளுவேன். ஒருவர் கூட தேவை இல்லை; எல்லோரும் வெளியேற வேண்டும்! ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது, என்னுடைய கிரியை முடிந்தது, மற்றும் நான் இந்தக் கொடிய விலங்குகளின் கூட்டத்தை அகற்ற வேண்டும்!

என்னுடைய வார்த்தைகளை விசுவாசித்து அவற்றை நிறைவேற்றுகிறவர்களே என்னால் நேசிக்கப்படுபவர்கள்; அவர்களில் ஒருவரைக் கூட நான் கைவிட மாட்டேன், மேலும் அவர்களில் ஒருவரைக் கூட நான் போகவிட மாட்டேன். ஆகவே, முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் கவலைப்படத் தேவை இல்லை. அது என்னால் வழங்கப்பட்டபடியால், யாராலும் அதை எடுக்க முடியாது. என்னால் ஆசீர்வதிக்கப்படுபவர்கள் மேல் நான் அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். என்னால் அங்கீகரிக்கப்பட்டவர்களை (உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு முன்) நான் ஆசீர்வதிக்கிறேன் (இன்று). இந்த வகையில்தான் நான் கிரியை செய்கிறேன். மேலும் இது என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளின் ஒவ்வொரு பிரிவினுடைய முக்கியக் கொள்கையாகவும் இருக்கிறது. அதை ஒருவராலும் மாற்ற முடியாது; மேலும் ஒரு வார்த்தையைக் கூட, அல்லது ஒரு வாக்கியத்தைக் கூடச் சேர்க்க முடியாது, அல்லது ஒரு வார்த்தையையோ வாக்கியத்தையோ விட்டுவிட முடியாது. கடந்த காலத்தில் நான் என் ஆள்தத்துவம் உங்களுக்குத் தோற்றமளிக்கிறது என்று அடிக்கடி கூறினேன். அப்படியானால் என் “ஆள்தத்துவம்” என்றால் என்ன? அது எப்படித் தோன்றுகிறது? இது வெறுமனே நானாக இருக்கும் என் ஆள்தத்துவத்தைக் குறிக்கிறதா? அது நான் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறிக்கிறதா? இந்த இரு அம்சங்கள், தவிர்க்க முடியாத போதும், ஒரு சிறு பகுதியே ஆகும்; அதாவது, அவை என்னுடைய ஆள்தத்துவத்தின் ஒரு முழுமையான விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. என் ஆள்தத்துவத்தில் என் மாம்சமான சுயம், என் வார்த்தைகள், என் செய்கைகள் அடங்கியுள்ளன. ஆனால் மிகச் சரியான விளக்கம் என்னவெனில் என் முதற்பேறான குமாரார்களும் நானுமே என் ஆள்தத்துவம். அதாவது, ஆட்சி செய்து அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு குழுவான கிறிஸ்தவ மனிதர்களே என் ஆள்தத்துவம். ஆகவே, முதற்பேறான குமாரர்களும் என் ஆள்தத்துவத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி ஆவர். ஆகவே தான் ஜனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவும் இருக்க முடியாது (இவ்வாறு என் நாமத்துக்கு அவமானம் கொண்டுவரத் தக்கதாக) அல்லது இன்னும் முக்கியமாக, மிகக் குறைந்ததாகவும் (இவ்வாறு என்னை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல்) இருக்க முடியாது என்று நான் வலியுறுத்துகிறேன். அதுமட்டுமல்லாமல், முதற்பேறான குமாரர்கள் தாம் என்னுடைய மிக நேசமானவர்கள், என் பொக்கிஷமானவர்கள், மற்றும் என் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் விளைச்சல் ஆனவர்கள் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்; அவர்களால் மட்டுமே என் பரிபூரணமான முழு வெளிப்படுத்தலை உள்ளடக்க முடியும். நான் மட்டுமே என் ஆள்தத்துவத்தின் ஒரு முழு வெளிப்படுத்தலாக இருக்க முடியும்; முதற்பேறான குமாரர்களோடு சேர்ந்தே நான் ஒரு பரிபூரணமான முழு வெளிப்படுத்தல் என்று சொல்ல முடியும். இவ்வாறு, நான் என் முதற்பேறான குமாரர்களிடம் ஒரு பொருளையும் புறக்கணிக்காமல் கண்டிப்பான கோரிக்கைகளை வைக்கிறேன், மற்றும் மீண்டும் மீண்டும் என் முதற்பேறான குமாரர்களைத் தவிர எல்லோரையும் சங்கரித்துக் கொல்லுகிறேன்; நான் சொன்ன எல்லாவற்றிற்கும் வேர் இதுவே, மேலும் நான் சொன்ன எல்லாவற்றிற்கும் இறுதி இலக்கும் இதுவாகும். மேலும், திரும்பத் திரும்ப, நான் வலியுறுத்துவது என்னெவென்றால், உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதற்கொண்டு நானே தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்த என்னால் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக அவர்கள் இருக்க வேண்டும். அப்படியென்றால் “தோன்றுகிறது” என்ற சொல்லை எப்படி விளக்க முடியும்? ஒருவன் ஆவிக்குரிய உலகத்துக்குள் பிரவேசிக்கும் நேரத்தைப் பற்றியதா அது? அது என்னுடைய மாம்ச சுயம் அபிஷேகம் செய்யப்பட்ட நேரம் என்றும் அல்லது என் மாம்சமான சுயத்தை அவர்கள் பார்த்த நேரம் என்றும் பலர் விசுவாசிக்கின்றனர். ஆனால் இவை எல்லாம் தவறானவை; நெருங்கிக் கூட வரவில்லை. அதன் மூல அர்த்தத்தில் “தோன்றுகிறது” என்பதை புரிந்து கொள்ளுவது கடினமானதல்ல, ஆனால் அதை என் எண்ணத்தின்படி புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமானதாகும். அதை இப்படிச் சொல்ல முடியும்: நான் மனித இனத்தை உண்டாக்கிய போது, நான் என்னுடைய பண்பை என்னால் நேசிக்கப்பட்ட இந்த ஜனக்கூட்டத்தில் வைத்தேன். இந்தக் குழுவினரான ஜனங்களே என் ஆள்தத்துவம். இன்னொரு வகையில் கூறினால், என்னுடைய ஆள்தத்துவம் அப்போது ஏற்கெனவே தோன்றியது. இந்த நாமத்தைப் பெற்ற பின்னர் என் ஆள்தத்துவம் தோன்றவில்லை; மாறாக, இந்த ஜனக்கூட்டத்தை நான் முன்குறித்த பின்னர் அது தோன்றியது, ஏனெனில் அவர்கள் என் பண்பைக் கொண்டிருந்தனர் (அவர்கள் சுபாவம் மாறவில்லை, மேலும் அவர்கள் இன்னும் என்னுடைய ஆள்தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருந்தனர்). இவ்வாறு, என் ஆள்தத்துவம், உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் இந்நாள் வரை எப்போதும் தோன்றியிருக்கிறது. பெரும்பாலான ஜனங்கள் என் மாம்ச சுயமே என் ஆள்தத்துவம் என்று நம்புகின்றனர். நிச்சயமாக அது அப்படி இல்லை; அந்தக் கருத்து அவர்களுடைய சிந்தனைகளிலும் எண்ணங்களிலும் இருந்து மட்டுமே உருவாகிறது. என் மாம்ச சுயம் மட்டுமே என் ஆள்தத்துவம் என்றால், அது சாத்தானை வெட்கப்படுத்தப் போதுமானதாக இருக்காது, அதனால் என் நாமத்தை மகிமைப்படுத்த முடியாது. உண்மையில் அதனால் எதிர்மறையான விளைவு ஏற்படும். இவ்வாறு என் நாமத்துக்கு வெட்கத்தைக் கொண்டு வரும், மற்றும் காலங்கள் தோறும் சாத்தான் என் நாமத்தை வெட்கப்படுத்துவதற்கான ஓர் அடையாளமாக மாறும். நானே ஞானமுள்ள தேவன், நான் அப்படிப்பட்ட முட்டாள்தனமான விஷயங்களை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

என்னுடைய கிரியைக்குப் பலன் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், நான் முறைகளோடு வார்த்தைகளைப் பேச வேண்டும்; என் வார்த்தைகளும் பேச்சுக்களும் என் ஆவியோடு பேசப்படுகின்றன, என் ஆவி செய்யும் அனைத்திற்கும் ஏற்ப நான் பேசுகிறேன். ஆகையினால், எல்லோரும், என் வார்த்தைகளின் மூலம், என் ஆவியை உணர வேண்டும், என் ஆவி என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும்; நான் சரியாக என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும், நான் எந்த முறையில் கிரியை செய்கிறேன் என்பதை அவர்கள் என் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்க வேண்டும் மற்றும் என்னுடைய முழு நிர்வாகத் திட்டத்தின் கொள்கைகள் என்ன என்று பார்க்க வேண்டும். நான் பிரபஞ்சத்தின் முழுப் படத்தையும் பார்க்கிறேன்: ஓவ்வொரு நபரும், ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு இடமும் என்னுடைய ஆணையின் கீழ் வருகின்றன. என் திட்டத்தை மீறத் துணிபவர்கள் யாரும் இல்லை; நான் பரிந்துரைக்கிற ஒழுங்கின்படி எல்லாம் படிப்படியாக முன்னேறிச் செல்கின்றன. இதுவே என் வலிமை; இங்கு தான் என்னுடைய முழு திட்டத்தையும் நிர்வகிக்கும் ஞானம் இருக்கிறது. ஒருவராலும் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள அல்லது பேச முடியாது; எல்லாம் என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது மற்றும் என்னால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது.

முந்தைய: அத்தியாயம் 104

அடுத்த: அத்தியாயம் 106

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக