அத்தியாயம் 14

இதோ இப்போது காலம் நிஜமாகவே நெருங்கி விட்டது. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளே நம்மை வழிநடத்த பலவிதமான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார். நீ சகல சத்தியங்களினாலும் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும், பரிசுத்தமாய் இருக்க வேண்டும்; என்னுடன் உண்மையாகவே நெருக்கமாக இருக்க வேண்டும்; என்னுடன் தொடர்புடையவனாக இருக்க வேண்டும்; நீ உன் வசதிக்கு ஏற்றபடி எதையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட மாட்டாய். பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது உணர்வுக்கு ஆட்படாதது, மேலும் நீ எப்படிப்பட்ட மனிதன் என்பதைப் பற்றிய அக்கறையற்றது. எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் தேடவும், பின்பற்றவும் உனக்கு விருப்பம் இருக்கும் வரை—உன்னுடைய இலாப நஷ்டங்களின் அடிப்படையில் வாக்குவாதம் புரியாமல்—நீதியைப் பசி தாகத்தோடு நீ தேடும் வரை, நான் உன்னைப் பிரகாசிக்கச் செய்வேன். நீ எவ்வளவு முட்டாளாகவும், அறிவீனம் கொண்டவனாகவும் இருந்தாலும் பரவாயில்லை, இந்தக் காரியங்கள் மேல் நான் கவனம் செலுத்துவதில்லை. நேர்மறையான அம்சத்தில் எவ்வளவு கடினமாக நீ கிரியை செய்கிறாய் என்பதையே நான் கவனிக்கிறேன். இன்னும் நீ சுயத்தைப் பற்றிய கருத்தைப் பற்றிக்கொண்டு, உன்னுடைய சிறு உலகத்தில் உழன்று கொண்டிருப்பாயானால் நீ ஆபத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்…. எடுத்துக் கொள்ளப்படுதல் என்றால் என்ன? கைவிடப்படுதல் என்பது எதைக் குறிக்கிறது? நீ தேவனுக்கு முன்பாக இன்று எவ்வாறு ஜீவிக்க வேண்டும்? நீ என்னுடன் எவ்வாறு செயல்களில் ஒத்துழைக்க வேண்டும்? உன் சொந்தக் கருத்துக்களைப் புறந்தள்ளுவது, உன்னையே பகுத்தாய்வது, உன் முகமூடியைக் கழற்றி, உன்னுடைய நிஜக் குணாதிசயங்களைக் கண்டுணர்வது, உன்னையே வெறுப்பது, பசி தாகத்தோடு நீதியைத் தேடும் இருதயத்தைப் பெறுவது, நீ உண்மையிலேயே எந்தவித மதிப்பும் அற்றவன் என்று உன்னை நீயே நம்புது, உன்னையே கைவிட விரும்புவது, கிரியைகளை நடத்தும் உன்னுடைய அனைத்து வழிகளையும் உன்னால் நிறுத்தி கொள்ள முடிவது, என் முன்னே அமைதியாயிருப்பது, அதிக ஜெபங்கள் செய்வது, ஊக்கத்துடனே என் மீது சாய்ந்துகொண்டு, என்னை ஏறிட்டுப் பார்ப்பது, என் அருகாமையில் வருவதையும் என்னோடு தொடர்பு கொள்வதையும் ஒருபோதும் நிறுத்தாமலிருப்பது ஆகிய இந்த விஷயங்களுக்கான திறவுகோல் கிடைக்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளாகவே இருந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் தேவனுக்கு முன்பாக இருப்பதில்லை.

பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையானது நிஜமாகவே மக்களால் கற்பனை செய்யக் கடினமானது. சகலமும் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கிறது; அதைப்பற்றி உண்மையில் சிந்திக்காமல் இருக்க முடியாது. உன்னுடைய இருதயமும் மனமும் தவறான இடத்தில் இருந்தால், உனக்கு முன்னேற வழி இருக்காது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை, எல்லா சமயங்களிலும் நீ கவனத்தோடு இருக்க வேண்டும். அலட்சியத்துக்கு எதிரான எச்சரிக்கையோடு இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கவனத்தோடு காத்துக் கொண்டு இருப்பவர்களும், என் முன் அமைதியோடு இருப்பவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தங்கள் இருதயங்களில் எப்போதும் என்னை நோக்கியிருப்பவர்களும், எனது சத்தத்தை உன்னிப்பாகக் கவனிப்பதில் அக்கறை கொண்டிருப்பவர்களும், என்னுடைய செயல்களில் கவனம் செலுத்துபவர்களும், என்னுடைய வார்த்தைகளைக் கடைபிடிப்பவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! இனி எந்தத் தாமதத்தையும் காலத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. அனைத்து வகையான கொள்ளை நோய்களும் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்துத் தாக்கப் போகின்றன. அவை தங்களுடைய கொடூரமான, இரத்தம் தோய்ந்த வாய்களால் உங்களை ஒரு பெருவெள்ளம் போல விழுங்கும். என் குமாரர்களே! காலம் வந்துவிட்டது! இனி சிந்திக்க நேரம் இல்லை. என்னுடைய பாதுகாப்புக்குள் உன்னைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி என்னவென்றால் மீண்டும் எனக்கு முன்னால் வருவதுதான். ஓர் ஆண் குழந்தையின் குணாதிசயத்தின் பெலன் பொருந்தியவர்களாய் நீங்கள் இருக்க வேண்டும். பலவீனமானவர்களாகவோ, மனமுடைந்து போனவர்களாகவோ இருக்காதீர்கள். நீங்கள் என்னுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். புதிய வெளிச்சத்தைப் புறக்கணிக்காதீர்கள். என்னுடைய வார்த்தைகளை எவ்வாறு புசித்துப் பானம்பண்ணுவது என்பதை நான் சொல்லிக் கொடுத்தபடி, நீங்கள் கீழ்ப்படிந்து, முறையாக அவற்றைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். மனம் போன போக்கில் சண்டையிடவும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யவும் இன்னும் நேரம் இருக்கிறதா? வயிறு நிறைய புசிக்காமலும், சத்தியத்துடன் முழுமையான ஆயத்தமில்லாமலும் உங்களால் போரிட முடியுமா? நீங்கள் மதத்தினை ஜெயிக்க வேண்டுமானால், நீங்கள் சத்தியத்தால் முழுமையாக ஆயத்தப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய வார்த்தைகளை மிகுதியாகப் புசித்துப் பானம் பண்ணுங்கள். தொடர்ந்து அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் சுதந்திரமாக என்னுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். தேவனுக்குச் சமீபமாய் வருவதற்கு ஆரம்பியுங்கள். இது உனக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! நீ கவனமாக இருக்க வேண்டும்! புத்திசாலிகள் விரைவாக சத்தியத்துக்காக விழித்துக் கொள்ள வேண்டும்! கைவிட விருப்பம் இல்லாத அனைத்தையும் உதறித்தள்ளு. இது போன்றவை உன் வாழ்க்கைக்குக் கேடு விளைவிக்கும் என்பதையும் அவற்றால் எந்தவித நன்மையும் இல்லை என்பதையும் உனக்கு நான் மீண்டும் சொல்கிறேன்! உன்னுடைய செயல்களில் என்னைச் சார்ந்து இருப்பாய் என நான் நம்புகிறேன்; அப்படி இல்லையென்றால், உனக்கு முன்னால் இருக்கும் ஒரே வழி மரணத்துக்கான வழியாகும். அப்படி இருக்கும் போது ஜீவபாதையை நீ எங்கே தேடுவாய்? வெளிப்புற விஷயங்களில் ஈடுபட விரும்பும் உன் இருதயத்தை அவற்றில் இருந்து மீட்டெடு! மற்ற மக்களுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் உன் இருதயத்தை மீட்டெடு! உன்னுடைய வாழ்க்கை முதிர்ச்சி அடைய முடியாமல் இருந்தாலும், நீ கைவிடப்பட்டிருந்தாலும் உன்னை நீயே கீழே தள்ளிவிட்டவனாக ஆகமாட்டாயா? பரிசுத்த ஆவியானவரின் தற்போதையை கிரியையானது நீ கற்பனை செய்வது அல்ல. உன்னுடைய கருத்துக்களை உன்னால் கைவிட முடியவில்லை என்றால், உனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். கிரியையானது மனிதனுடைய கருத்துக்களை அடிப்படையைக் கொண்டிருந்தால், உன்னுடைய பழைய சுபாவமும் கருத்துக்களும் வெளிச்சத்துக்கு வரமுடியுமா? உன்னால் உன்னையே அறிந்து கொள்ள இயலுமா? உன்னுடைய கருத்துக்களில் இருந்து நீ விடுபட்டதாக இப்போதும் நினைக்கலாம். ஆனால் இந்தச் சமயம் உன்னுடைய எல்லா அருவருப்பான அம்சங்களும் தெளிவாக வெளிச்சத்துக்கு வரும். கவனமாக உன்னையே கேட்டுக்கொள்:

எனக்குக் கீழ்ப்படிகிற ஒருவனா நீ?

உன்னுடைய சுயத்தைக் கைவிட்டு விட்டு என்னைப் பின்பற்ற விரும்பி, அதற்குத் தயாராக இருக்கிறாயா?

சுத்தமான இருதயத்துடன் என் முகத்தைத் தேடுகிற ஒருவனா நீ?

எனக்கு அருகாமையில் எப்படி வருவது என்பதையும் என்னுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்பதையும் நீ அறிந்திருக்கிறாயா?

எனக்கு முன்பாக உன்னை நீயே அமைதிப்படுத்திக் கொண்டு என்னுடைய சித்தத்தைத் தேடுவாயா?

நான் உனக்கு வெளிப்படுத்தும் வார்த்தைகளை நடைமுறையில் கடைப்பிடிப்பாயா?

எனக்கு முன் ஒரு சாதாரணமான நிலையைக் கைக்கொள்வாயா?

சாத்தானின் தந்திரமான திட்டங்களை உன்னால் அறிந்து கொள்ள முடிகிறதா? அவற்றைப் பகிரங்கப்படுத்தும் துணிவு உனக்கு இருக்கிறதா?

தேவனின் பாரங்களைப் பற்றி எந்த அளவு அக்கறை கொள்கிறாய்?

தேவனின் பாரத்தின் மீது அக்கறை கொள்ளும் ஒருவனா நீ?

பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எப்படி நீ புரிந்து கொள்கிறாய்?

தேவனுடைய குடும்பத்தாருடன் எப்படி நீ ஒருங்கிணைந்து ஊழியம் செய்கிறாய்?

எனக்கான எவ்வாறு நீ வலுவான சாட்சி பகருகிறாய்?

சத்தியத்துக்கான நல்ல போராட்டத்தை எப்படிப் போராடுகிறாய்?

இந்தச் சத்தியங்களை முழுமையாகச் சிந்திக்க நீ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெகு சமீபத்தில் அந்த நாள் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க இந்த விஷயங்கள் போதுமானவையாக இருக்கின்றன. பேரழிவுகள் வருவதற்கு முன்னர் நீ முழுமையானவனாக்கப்பட வேண்டும். இது முக்கியமான ஒரு விஷயமாகும். தீர்த்து வைக்கப்பட வேண்டிய மிக அவசரமான விஷயமாகும்! நான் உங்களை முழுமையானவர்களாக மாற்ற முடிவு செய்திருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நீங்கள் அதற்கு ஆயத்தம் இல்லாதவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன். உங்களுக்குத் தைரியம் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதைச் சிறப்பாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. மேலும் மிக முக்கியமான விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை; அதற்கு மாறாக அற்பமான விஷயங்களையே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவற்றின் மீது கவனம் செலுத்துவதால் என்ன பயன்? இது காலவிரயம் அல்லவா? இந்த வகையில் உங்களுக்கு நான் தயவைக் காண்பிக்கிறேன். ஆனால் நீங்கள் அதைப் பாராட்டத் தவறுகிறீர்கள். நீங்கள் வெறுமனே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். இதனால் என்னுடைய அனைத்துக் கடினமான முயற்சிகளும் வீணாகவில்லையா? இதே போல நீங்கள் செயல்பட்டால், உங்களிடம் தன்மையாகப் பேச நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்! நீங்கள் சத்தியத்துக்கு விழித்துக் கொள்ளவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரின் கிரியை உங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்று உங்களிடம் கூறுகிறேன்! உங்களுக்கு உண்பதற்கு எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. உங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றுவதை நீங்கள் நம்பலாம். நான் என்னுடைய வார்த்தைகளை மிக விரிவாகப் பேசியிருக்கிறேன். அதைக் கவனிப்பதும் கவனிக்காததும் உங்களைப் பொறுத்தது. நீங்கள் குழப்பம் அடைந்திருக்கும் நேரத்திலும், முன்னே செல்ல எந்த வழியும் இல்லாத போதும், மெய்யான வெளிச்சத்தைப் பார்க்க முடியாத போதும் என்னைக் குறைகூறுவீர்களா? எவ்வளவு அறியாமை! உங்களை நீங்களே இறுகப் பற்றிக்கொண்டு, மேற்கொண்டு செல்ல அனுமதிக்காத போது என்ன விளைவுகள் ஏற்படும்? உங்களது கிரியை வெறுமனே பயனற்றதாகாதா? பேரழிவுகள் வரும்போது அவற்றை அலட்சியம் செய்வது எவ்வளவு பரிதாபத்துக்குரியது!

திருச்சபையைக் கட்டுவதற்கான முக்கியமான கட்டம் இது. முன்னெச்சரிக்கையாக என்னுடன் ஒத்துழைக்க உங்களால் முடியவில்லை என்றாலும், என்னிடம் உங்களை முழுமனதோடு ஒப்புக்கொடுக்க முடியவில்லை என்றாலும், எல்லாவற்றையும் கைவிட உங்களால் இயலவில்லை என்றாலும் நீங்கள் இழப்பை அனுபவிப்பீர்கள். வேறு எண்ணங்கள் உங்களுக்குள் இன்னும் குடிகொண்டுள்ளனனவா? இவ்விதமாக நான் உங்களிடம் இரக்கம் காண்பித்தேன். நீங்கள் மனந்திரும்பி, புதிதாகத் தொடங்குவதற்காகக் காத்திருந்தேன். ஆனாலும் காலம் உண்மையிலே இதை இனிமேலும் அனுமதிக்காது. மிகப் பெரிய ஒன்றில் நான் கவனம் செலுத்த வேண்டும். தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் நிமித்தமாக, எல்லாம் முன்நோக்கிச் செல்கின்றன. நாளுக்குநாள், மணிக்கு மணி, நிமிடத்துக்கு நிமிடம் என்னுடைய காலடிகளும் முன்னேறுகின்றன. அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் கைவிடப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் தெரிகிறது; ஒவ்வொரு நாளும் புதிய கிரியைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள் தோன்றுகின்றன. அந்த வெளிச்சத்தைப் பார்க்க இயலாதவர்கள் குருடர்கள்! பின்பற்றாதவர்கள் புறம்பாக்கப்படுவார்கள்….

முந்தைய: அத்தியாயம் 13

அடுத்த: அத்தியாயம் 15

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக