அத்தியாயம் 23

என் குரலைக் கேட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்: என் கடுமையான நியாயத்தீர்ப்பின் குரலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் மேலும் நீங்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்தீர்கள். இருப்பினும், என் கடுமையான குரலின் பின்னால் என் நோக்கங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்! நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காக நான் உங்களை ஒழுங்குபடுத்துகிறேன். என் பிரியமான குமாரர்களுக்காக, நான் உங்களை நிச்சயமாக ஒழுங்குபடுத்தி, கிளை நறுக்கி, விரைவில் உங்களை முழுமையாக்குவேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். என் இருதயம் மிகவும் ஆர்வமாக உள்ளது, ஆனால் நீங்கள் என் இருதயத்தைப் புரிந்து கொள்ளவும் என் வார்த்தையின்படி செயல்படவும் இல்லை. தேவன் ஒரு அன்பான தேவன் என்பதை நீங்கள் உண்மையிலேயே அங்கீகரிக்கவும், மேலும் உங்கள் அனைவரையும் தேவனுடைய உண்மையான அன்பை அனுபவிக்கச் செய்யவும் இன்று என் வார்த்தைகள் உங்கள் மீது வருகின்றன. இருப்பினும், ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் நடித்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்களின் துக்கத்தைப் பார்க்கும்போது, அவர்களைப் போலவே செய்து, தங்கள் கண்களைக் கூட கண்ணீரால் நிரப்புகிறார்கள். இன்னும் சிலர் வெளிப்புறத்தில் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதாக, வருத்தத்துடன் இருப்பதாகத் தோன்றுகிறார்கள், ஆனால் அவர்களுக்குள்ளோ, அவர்கள் உண்மையிலேயே தேவனைப் புரிந்து கொள்ளவில்லை, அவரைக் குறித்து உறுதியாகவும் இல்லை; மாறாக, அவர்கள் ஒரு முகப்பை மட்டுமே வழங்குகிறார்கள். நான் இந்த ஜனங்களை மிகவும் வெறுக்கிறேன்! சீக்கிரத்தில் இந்த ஜனங்கள் எனது நகரத்திலிருந்து துண்டிக்கப்படுவார்கள். எனது நோக்கம் இது தான்: என்னை ஆவலுடன் விரும்புகிறவர்களே எனக்குத் தேவை, உண்மையான இருதயத்துடன் என்னைப் பின்தொடர்பவர்கள் மட்டுமே என்னைப் பிரியப்படுத்த முடியும். இவர்கள் நிச்சயமாக என் சொந்தக் கரங்களால் ஆதரிக்கப்படுகிற ஜனங்களாவர், அவர்கள் எந்தப் பேரழிவுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்பதை நான் உறுதிப்படுத்துவேன். தேவனை உண்மையிலேயே விரும்பும் ஜனங்கள் தேவனுடைய இருதயத்தைக் கருத்தில் கொள்ள ஆவலாயிருந்து என் சித்தத்தைச் செய்யத் தயாராக இருப்பார்கள். எனவே நீங்கள் விரைவில் யதார்த்தத்திற்குள் நுழைந்து என் வார்த்தையை உங்கள் வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும், இதுவே எனது மிகப்பெரிய பாரமாகும். திருச்சபைகளும் பரிசுத்தவான்கள் அனைவரும் யதார்த்தத்திற்குள் நுழைந்து, அனைவரும் என்னுடன் நேரடியாக ஐக்கியம் கொள்ள, என்னை நேருக்கு நேர் சந்திக்கவும், சத்தியத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தவும் முடிந்தால், அப்போதுதான் அவர்கள் நான் மிகவும் திருப்தியடைகிற என் பிரியமான குமாரர்களாக இருப்பார்கள். இந்த ஜனங்கள் மீது, நான் எல்லா மேலான ஆசீர்வாதங்களையும் தருவேன்.

முந்தைய: அத்தியாயம் 22

அடுத்த: அத்தியாயம் 24

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக