அத்தியாயம் 53

நான் ஆதியும் அந்தமுமானவர். நான் உயிர்த்தெழுந்த உண்மையான தேவன். நான் என் வார்த்தைகளை உங்களுக்கு முன் பேசுகிறேன், நான் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நான் சொல்வதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது. இதை நினைவில் கொள்ளுங்கள்! இதை நினைவுகூருங்கள்! நான் பேசிய பின்பு, ஒருபோதும் ஒரு வார்த்தை கூட திரும்பப் பெறப்பட்டதில்லை, ஒவ்வொன்றும் நிறைவேறும். இப்போது காலம் வந்துவிட்டது, நீங்கள் விரைவாக யதார்த்தத்திற்குள் நுழைய வேண்டும். அதிக நேரம் இல்லை. நான் எனது குமாரர்களை மகிமையான ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்வேன், நீங்கள் பாடுபட்டு ஏங்கிய காரியங்கள் உணரப்படும். என் குமாரர்களே, சீக்கிரமாக எழுந்து என்னைப் பின்பற்றுங்கள்! இன்னும் யோசித்துக் கொண்டிருக்க உங்களுக்குப் போதுமான நேரம் இல்லை. இழந்த நேரம் ஒருபோதும் திரும்பக் கிடைக்காது; இருளுக்குப் பின் வெளிச்சம் இருக்கும், உங்கள் கண்களுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் கண்களைத் திறவுங்கள்! சீக்கிரமாக எழுந்திருங்கள்! உங்களுக்குள்ளே தொடர்பு கொள்கையில், வெறுமனே பேசிக் கொண்டிருக்கவும் அல்லது திருச்சபையின் வளர்ச்சிக்குப் பயனளிக்காத எதையும் சொல்லவும் உங்களுக்கு இப்போது அனுமதி இல்லை. முக்கியமானது என்னவென்றால், உங்கள் நடைமுறை அனுபவங்களையோ அல்லது தேவனுக்கு முன்பாக நீங்கள் எவ்வாறு ஒளியூட்டப்பட்டு, உங்களை நீங்களே அறிந்து கொண்டீர்கள் என்பதைப் பற்றிய விவரங்களையோ நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு அளிக்க வேண்டும். இவற்றைக் கொடுக்கக் கூடிய எவருக்கும் நன்மதிப்பு உண்டாகும்! இப்போதெல்லாம், உங்களில் சிலர் இன்னும் பயப்படுவதில்லை, நான் என்ன சொன்னாலும் அல்லது எவ்வளவு கவலைப்பட்டாலும், நீ பயமின்றி இருக்கிறாய்; உன்னுடைய பழைய சுயமானது அதனை சிறிதளவுகூட மாற்றுவதற்கு அனுமதிப்பதில்லை. சரி, அப்படியே தொடர்! யார் அழிக்கப்படுவார்கள் என்று காத்திருந்து பார்! நீ உலகைப் புரிந்து கொள்ள எப்போதும் நினைக்கிறாய், செல்வத்திற்காக ஏங்குகிறாய், உன்னுடைய மகன்கள், மகள்கள் மற்றும் கணவருடன் ஒரு உறுதியான உறவை உணர்கிறாய். சரி, நீ எப்போதும் இணைந்திருக்கும் உணர்வையே கொண்டிருக்கலாம்! ஏதோ என் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லப்படவில்லை என்பது போல அல்ல, நீங்கள் எப்படி விரும்பினாலும் அப்படித் தொடரலாம் என்பதல்ல! சீக்கிரத்தில் நீங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வீர்கள், ஆனால் அதற்குள் மிகவும் காலதாமதமாகியிருக்கும். உங்களுக்காகக் காத்திருப்பது நியாயத்தீர்ப்பு மட்டுமே.

முந்தைய: அத்தியாயம் 52

அடுத்த: அத்தியாயம் 54

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக