அத்தியாயம் 119
நீங்கள் எல்லோரும் என் நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் எல்லோரும் என்னுடைய மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும். சீயோனுக்குத் திரும்புவதற்குத் தயாராக வேண்டிய நேரம் இது. இதைத் தவிர வேறு எதையும் செய்ய எனக்கு மனதில்லை. விரைவில் ஒரு நாள் உங்களோடு மறுபடியும் இணைந்து, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடியும் சீயோனில் உங்களுடன் செலவிடுவேன் என்று நம்புகிறேன். உலகை நான் வெறுக்கிறேன், மாம்சத்தை நான் வெறுக்கிறேன், அதைவிட பூமியின் மேல் இருக்கும் ஒவ்வொரு மனுஷனையும் நான் அதிகமாக வெறுக்கிறேன். நான் அவர்களைப் பார்க்க விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் எல்லோரும் பிசாசுகளைப் போல், சிறிதளவு கூட மனுஷ சுபாவத்தின் தடயமே இல்லாமல் இருக்கிறார்கள். நான் உலகத்தில் ஜீவிக்க விரும்பவில்லை; நான் எல்லா சிருஷ்டிகளையும் வெறுக்கிறேன், மாம்சமும் இரத்தமுமாய் இருக்கும் எல்லாவற்றையும் வெறுக்கிறேன். முழு உலகத்திலும் பிணங்களின் துர்நாற்றம் வீசுகிறது; பூமியில் இருந்து எல்லாப் பிண நெடியையும் அகற்றி பூமியை எனக்கான துதியின் சத்தத்தால் நிரப்புவதற்காக நான் உடனடியாகச் சீயோனுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன். நான் சீயோனுக்குத் திரும்புவேன், நான் மாம்சத்தில் இருந்தும் இந்த உலகத்தில் இருந்தும் விடுபடுவேன், மேலும் யார் ஒருவரும் என் வழியில் குறுக்காக நிற்க முடியாது. மனுஷனைக் கொல்லும் என் கரத்துக்கு உணர்ச்சி கிடையாது! இப்போதில் இருந்து திருச்சபையைக் கட்டுவதைப் பற்றி ஒருவரும் பேச மாட்டார்கள். அப்படி யாராவது பேசினால், நான் அவர்களை மன்னிக்க மாட்டேன். (இது ஏனென்றால், என் முதற்பேறான குமாரர்களுக்கு சாட்சி அளிக்க இதுவே நேரம், மேலும் இதுதான் ராஜ்யத்தைக் கட்டுவதற்கான நேரம்; திருச்சபை கட்டுவதைப் பற்றி பேசுகிற யாரும் ராஜ்யத்தின் கட்டுமானத்தை இடித்துத் தள்ளி, மேலும் என் நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.) எல்லாம் தயாராக இருக்கிறது, எல்லாம் ஆயத்தப்படுத்தப்பட்டுவிட்டது; முதற்பேறான குமாரர்கள் உயர்த்தப்பட்டு சாட்சியளிக்கப்படுவது மட்டுமே மீதி இருக்கும் ஒரே விஷயம். அது நிகழும் போது, ஒரு கணம் கூட தாமதம் இல்லாமலும் வடிவத்தைப் பற்றிக் கருதாமலும், உடனடியாக நீங்கள் இரவும் பகலும் மனதில் வைத்திருக்கும் இடமான சீயோனுக்குத் திரும்புவேன். தற்போதைய உலகம் எவ்வாறு சிக்கலின்றியும் நிலையாகவும் தொடர்கிறது என்பதை மட்டுமே நோக்கிப் பார்க்க வேண்டாம். இந்தக் கிரியை எல்லாம் சீயோனுக்குத் திரும்பும் வேலையே, எனவே இந்த விஷயங்களில் இப்போது கவனம் செலுத்த வேண்டாம்; சீயோனுக்குத் திரும்பும் நாள் வரும்போது, அனைத்தும் முழுமையாகும். சீயோனுக்குச் சீக்கிரமாக வர விருப்பமில்லாமல் இருப்பது யார்? பிதாவும் குமாரர்களும் விரைவில் மறுபடியும் சேர வேண்டும் என்று விரும்பாதவர் யார்? உலகப்பூர்வமான இன்பங்கள் எவ்வளவு அனுபவிக்கத்தக்கதாக இருந்தாலும், அவை நம் மாம்சத்தைப் பிடித்து வைக்க இயலாது; நாம் நமது மாம்சத்தைக் கடந்து ஒன்றாகச் சீயோனுக்குத் திரும்புவோம். இதைத் தடுக்கத் துணிபவன் யார்? இதற்குத் தடை போடத் துணிகிறவன் யார்? நிச்சயமாக நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்! எல்லா தடைக்கற்களையும் துடைத்தெறிவேன். (இது தான் நேரடியாகச் சீயோனுக்குச் செல்ல முடியாது என்று நான் கூறுவதற்குக் காரணம். நான் இந்தச் சுத்தகரிப்பு வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன், கூடவே என் முதற்பேறான குமாரர்களுக்குச் சாட்சி அளிக்கிறேன்; இந்த இரண்டு கிரியைகளும் ஒரே நேரத்தில் முன்னேறுகின்றன. சுத்திகரிப்பு கிரியை முடிவடையும் நேரம்தான், நான் என் முதற்பேறான குமாரர்களை வெளிப்படுத்தும் நேரம். “இடறுதலுக்கான கற்கள்” அதிக எண்ணிக்கையிலான ஊழியம் செய்வோர், அதனால் தான் இந்த இரண்டு வேலைகளும் ஒரே நேரத்தில் செய்யப்படுவதாக நான் கூறுகிறேன்.) பிரபஞ்சம் முழுவதும் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும், மலைகளையும், நதிகளையும் மற்றும் எல்லாவற்றையும் கடந்தும் நான் என் முதற்பேறான குமாரர்களை என்னோடு நடக்க வைப்பேன்; இதைத் தடுக்கத் துணிபவன் யார்? யார் இதைத் தடைசெய்யத் துணிபவன்? எந்த ஒரு மனுஷனையும் என் கரம் எளிதில் போக விடாது; என் முதற்பேறான குமாரர்களைத் தவிர்த்து, எல்லார் மேலும் கோபம் கொண்டு எல்லோரையும் சபிக்கிறேன். எல்லாத் தேசங்களிலும், என் ஆசீர்வாதங்களைப் பெறும் ஒரு மனுஷனும் இல்லை; எல்லோரும் என் சாபங்களைச் சந்திக்கிறார்கள். உலகின் சிருஷ்டிப்பு முதல், நான் யாரையும் ஆசீர்வதிக்கவில்லை; நான் ஆசீர்வாதங்களை அளித்திருந்த போதும், அவை எல்லாம் வெறும் வார்த்தைகளே, ஒருபோதும் யதார்த்தமில்லை, ஏனெனில் நான் சாத்தானை முற்றிலுமாக வெறுக்கிறேன்; அதை நான் ஒருபோதும் ஆசீர்வதிக்க மாட்டேன், அதைத் தண்டிக்க மட்டுமே செய்வேன். முடிவில் தான், நான் முற்றிலுமாகச் சாத்தானை ஜெயங்கொண்டு முழு வெற்றியும் எனதானவுடன், நான் உண்மையான அனைத்து ஊழியம் செய்பவர்களுக்கும் பொருள் ஆசீர்வாதங்களை அளிப்பேன், மேலும் அவர்கள் என்னைத் துதிப்பதில் ஆனந்தம் கொள்ளட்டும், ஏனெனில் என்னுடைய கிரியைகள் எல்லாம் நிறைவேறியிருக்கும்.
உண்மையில், என்னுடைய நேரம் அதிகத் தூரத்தில் இல்லை. ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் உங்கள் கண்களுக்கு முன்னே நிறைவுக்கு வந்து கொண்டிருக்கிறது. (அது உண்மையில் உங்கள் கண்களுக்கு முன் இருக்கிறது; அது முன்கூட்டியே கற்பனை செய்யும் ஒன்றல்ல; என் மனநிலையில் இருந்து நீங்கள் இதைப் பார்க்கலாம்.) நான் உடனடியாக என் முதற்பேறான குமாரர்களை சீயோனின் வீட்டுக்குக் கொண்டு செல்வேன். சிலர் சொல்லுவார்கள், “இது முதற்பேறான குமாரர்களுக்கு மட்டுமே இருக்கும்போது, அது ஏன் ஆறாயிரம் ஆண்டுகள் ஆகின்றன: மேலும் ஏன் இத்தனை அதிகமாக ஜனங்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள்?” என்னுடையவை எல்லாம் விலையேறப்பட்டவை என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். என் முதற்பேறான குமாரர்கள் ஏன் அதை விட அதிகமாய் இருக்கமாட்டார்கள்? நான் எனக்கு ஊழியம் செய்ய எல்லோரையும் திரட்டுவேன், அதுமட்டுமல்லாமல், என் வல்லமையைக் காட்டுவேன், இதனால் முழு பிரபஞ்ச உலகத்திலும் எங்கள் கையில் ஒரு பொருளும் இல்லை, எங்கள் சேவையில் ஒரு நபரும் இல்லை, எங்கள் நிறைவேறுதலுக்காக ஒரு விஷயமும் இல்லை என்பதை ஒவ்வொரு மனுஷனும் அறிவான். நானே எல்லாவற்றையும் செய்து முடிப்பேன். என்னைப் பொறுத்த வரை, காலம் என்ற கருத்துரு இல்லை; திட்டத்தையும் என்னுடைய கிரியையும் ஆறாயிரம் ஆண்டுகளில் நான் முடிக்க நினைத்தாலும், எனக்கு எல்லாமே விடுவிக்கப்பட்டதும் சுதந்திரமானவையாகவுமே இருக்கின்றன. அது ஆறாயிரம் ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தாலும், என்னுடைய பார்வையில் அந்த நேரம் வந்திருக்கும் வரை, எதிராக யார் ஒரு வார்த்தையைக் கூட பேச முடியும்? விருப்பப்படி நின்று நியாயந்தீர்க்க யார் துணிவார்கள்? என் கிரியை நானே செய்வேன்; என்னுடைய நேரத்தை நானே ஒழுங்குபடுத்துவேன். எந்த நபரும், எந்த வஸ்துவும், எந்தப் பொருளும் தன்னிச்சையாகச் செய்யத் துணியாது; எல்லாவற்றைம் என்னைப் பின்தொடர வைப்பேன். எனக்கு, சரி அல்லது தவறு இல்லை; ஒன்றை நான் சரி என்றால், அது நிச்சயமாகச் சரியாக இருக்கும்; நான் ஒன்றைத் தவறு என்று சொன்னால், அதுவும் அப்படியே இருக்கும். நீ எப்போதும் மனுஷ எண்ணங்களைக் கொண்டு என்னை அளக்கக் கூடாது! நான் என் முதற்பேறான குமாரர்களும் நானும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறேன்—யார் கீழ்ப்படிய மறுக்கத் துணிவார்கள்? நான் உன்னை இருக்கும் இடத்திலேயே அழித்து விடுவேன்! நீ கீழ்ப்படிய மறுக்கிறாய்! நீ கலகக்காரன்! நான் எந்த மனுக்குலத்திடமும் இரக்கம் இல்லாதவனாக இருக்கிறேன், மேலும் என் வெறுப்பு ஏற்கனவே வரம்பை அடைந்து விட்டது; நான் இனிமேலும் பொறுமையுடன் இருக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில், இந்த முழு பிரபஞ்ச உலகமும் உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்—அப்போது தான் என்னுடைய மாபெரும் கிரியை நிறைவடையும்; அப்போது தான் என்னுடைய நிர்வாகத் திட்டம் நிறைவடையும்; அப்போது தான் என் இருதயத்தில் இருக்கும் வெறுப்பு நீங்கும். இப்போது, நான் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் சாட்சி அளிக்கப்படுவது பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்; நான் மற்ற விவகாரங்களை எல்லாம் ஒரு பக்கம் வைப்பேன்; நான் முக்கியமான விஷயங்களை முதலில் செய்வேன்; பின் இரண்டாம்பட்சமாக செய்ய வேண்டியவற்றைச் செய்வேன். இவையே என் கிரியையின் படிநிலைகள். இதை யாரும் மீறக் கூடாது. நான் சொல்லும்படியே எல்லோரும் செய்ய வேண்டும், அல்லது அவர்கள் என் சாபத்துக்கு ஆளாவார்கள்.
இப்போது என் கிரியை முடிவடைந்து விட்டதால், நான் ஓய்வெடுக்கலாம். இப்போதில் இருந்து, நான் கிரியை செய்ய மாட்டேன். ஆனால் நான் செய்ய வேண்டியதை எல்லாம் என் முதற்பேறான குமாரர்களிடம் செய்யக் கட்டளையிடுவேன், ஏனெனில் என் முதற்பேறான குமாரர்கள் நானே; என் முதற்பேறான குமாரர்களே என் ஆள்தத்துவம். இது சற்றும் தவறில்லை; நியாயந்தீர்க்கக் கருத்துக்களைப் பயன்படுத்தாதீர்கள். என் முதற்பேறான குமாரர்களைப் பார்ப்பது என்னைப் பார்ப்பது போல, ஏனெனில் நாங்கள் ஒன்றானவர்களே. எங்களைப் பிரிக்கும் எவரும் இவ்வாறு என்னை எதிர்க்கிறார்கள், மேலும் நான் அவர்களை மன்னிக்க மாட்டேன். என் வார்த்தைகளில், இரகசியங்கள் இருக்கின்றன. அவை மனுஷனுக்குப் புரிவதில்லை. என்னால் நேசிக்கப்படுபவர்களாலேயே என்னை வெளிப்படுத்த முடியுமே தவிர வேறு யாராலும் அல்ல; இது என்னால் தீர்மானிக்கப்பட்டது, மேலும் அதை யாராலும் மாற்ற முடியாது. என்னுடைய வார்த்தைகள் வளமானவை, விரிவானவை, புரிந்து கொள்ள முடியாதவை. எல்லோரும் என் வார்த்தைகளுக்கு பெரும் முயற்சியைச் செலவிட வேண்டும், அவற்றை அடிக்கடி சிந்திக்க முயற்சி செய்ய வேண்டும், ஒரு வார்த்தையையோ வாக்கியத்தையோ புறக்கணிக்கக் கூடாது—இல்லாவிட்டால், ஜனங்கள் பிழைகளின் கீழ் வருத்தப்படுவார்கள், என் வார்த்தைத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். என் மனநிலை குற்றங்களைச் சகிக்காது என்று சொல்லியிருக்கிறேன், இதற்கு அர்த்தம் என்னவென்றால் சாட்சி அளிக்கப்பட்ட என் முதற்பேறான குமாரர்களை எதிர்க்க முடியாது. என் மனநிலையின் ஒவ்வொரு அமசத்தையும் என் முதற்பேறான குமாரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆகவே பரிசுத்த எக்காளம் ஊதப்படும் நேரமே நான் என் என் முதற்பேறான குமாரர்களுக்கு சாட்சி கூறத் தொடங்கும் நேரமும் ஆகும். மேலும் இவ்வாறு, பரிசுத்த எக்காளமே இதுமுதற்கொண்டு ஜனக்கூட்டத்துக்கான என் மனநிலையின் படிப்படியான அறிவிப்பு ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், முதற்பேறான குமாரர்கள் வெளிப்படுத்தப்படும் போது, என் மனநிலையும் வெளிப்படுத்தப்படும். இதை யாரால் புரிந்து கொள்ள முடியும்? நான் வெளிப்படுத்திய இரகசியங்களுக்குள்ளும் கூட, ஜனங்களால் புரிந்து கொள்ள முடியாத இரகசியங்கள் மீதி இருக்கும் என்று சொல்லுகிறேன். இந்த வார்த்தைகளின் உண்மை அர்த்தத்தை உங்களில் உண்மையிலேயே புரிந்து கொள்ள முயன்றது யார்? நீங்கள் கற்பனை செய்தபடி என்னுடைய மனநிலை ஒரு நபரின் ஆளுமையா? அப்படிச் சிந்திப்பது ஒரு மோசமான தவறு! இன்று, என்னுடைய முதற்பேறான குமாரர்களைக் காண்பவர்கள் யாரோ அவர்கள் ஆசீர்வாதங்களின் பொருளாவார், மேலும் அவர்கள் என் மனநிலையைக் காண்பார்கள்—இது முற்றிலும் உண்மையாகும். என்னுடைய முதற்பேறான குமாரர்கள் என்னை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; சந்தேகம் எதுவுமில்லாமல் அவர்களே என் ஆள்தத்துவம். இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் தேவை இல்லை! கீழ்ப்படிகிறவர்கள் கிருபையால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், மற்றும் கலகக்காரர்கள் சபிக்கப்படுகிறார்கள். இதுவே நான் கட்டளையிடுவது, எவரும் இதை மாற்ற முடியாது!