அத்தியாயம் 15

தேவனுக்கும் மனுஷனுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தைகள் எப்போதும் எதையும் மறைக்காமல், நேராகக் காரியத்தின் மையத்திற்கே செல்கின்றன. ஆகவே, தேவனுடைய மனநிலையின் இந்த அம்சத்தை இன்றைய முதல் வாக்கியத்திலேயே காணலாம். அதே நேரத்தில், இது மனுஷனுடைய உண்மையான குணங்களை அம்பலப்படுத்துகிறது மற்றும் தேவனுடைய மனநிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது. இது தேவனுடைய வார்த்தைகளின் பலன்களை அடையும் திறனின் பல அம்சங்களுக்கான ஆதாரமாகக் காணப்படுகிறது. இருப்பினும், ஜனங்கள் இதைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்; அவர்கள் தேவனால் “பகுத்து ஆய்வு செய்யப்படுவதற்கு” உட்படாமல், எப்பொழுதும் தேவனுடைய வார்த்தைகள் மூலம் தங்களை அறிந்து கொள்ள மட்டுமே வருகிறார்கள். இது அவரைக் குற்றப்படுத்துவதனால் அவர்கள் பயந்திருப்பதைப் போலவும், அல்லது அவர்களின் “கவனமான தன்மையின்” நிமித்தம், அவர் அவர்களைக் கொன்றுவிடுவார் என்பதைப் போலவும் இருக்கிறது. உண்மையில், பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ணும்போது, அவர்கள் எதிர்மறையான கண்ணோட்டத்தில் செய்கிறார்கள், நேர்மறையான கண்ணோட்டத்தில் அல்ல. அவருடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் ஜனங்கள் இப்போது “மனத்தாழ்மை மற்றும் கீழ்ப்படிதல் மீது கவனம் செலுத்தத்” தொடங்கியுள்ளனர் என்று கூறலாம். இதிலிருந்து, ஜனங்கள் மற்றொரு கட்டத்திற்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது—அதாவது, அவருடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல், அவைகளுக்குத் தேவையற்றதில் கவனம் செலுத்துகின்றனர். எவ்வாறாயினும், ஒரு நபர் கூட உண்மையாகவே நேர்மறையான கண்ணோட்டத்தோடு பிரவேசித்திருக்கவில்லை அல்லது மனுஷர்கள் அவருடைய வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற தேவனுடைய இலக்கை யாரும் உண்மையாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை. இது திருச்சபையில் உள்ள அனைத்து ஜனங்களின் உண்மையான நிலைகளையும் துல்லியமாகவும் பிழையின்றியும் புரிந்துகொள்வதற்கு, அவர் தனிப்பட்ட முறையில் திருச்சபை வாழ்க்கையைத் தனிப்பட்ட முறையில் அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்று தேவன் சொல்வதிலிருந்து அறியப்படுகிறது. அவர்கள் ஒரு புதிய வழிமுறைக்குள்ளான பிரவேசத்தை இப்போதுதான் அடைந்திருப்பதால், ஜனங்கள் இன்னும் தங்கள் எதிர்மறையான காரியங்களிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்திருக்கவில்லை; திருச்சபை முழுவதும் பிணங்களின் துர்நாற்றம் இன்றும் வீசுகிறது. இப்போது ஜனங்கள் மருந்து சாப்பிட்டு மயக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்கள், அவர்களின் சுயநினைவு இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை. அவர்கள் இன்னும் மரணத்தால் அச்சுறுத்தப்படுவதைப் போல காணப்படுகிறார்கள், அதனால், இன்னும் பயங்கரத்தின் மத்தியில் இருக்கிறார்கள், அவர்களால் தங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. “மனிதர்கள் அனைவரும் சுய அறிவு இல்லாத ஜீவன்கள்”: இந்த வாக்கியம் கூறப்பட்ட விதமானது இன்னும் திருச்சபையைக் கட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. திருச்சபையில் உள்ள ஜனங்கள் அனைவரும் தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும், அவர்களுடைய சுபாவங்கள் ஆழமாக வேரூன்றியவைகளாகவும், பிரிக்க முடியாதவைகளாகவும் இருக்கின்றன. அதனால்தான், ஜனங்கள் தங்கள் பெருமையின் மத்தியில் அவருடைய வார்த்தைகளால் அடிக்கப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படிக்கு, தேவன் முந்தைய கட்டத்தில் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்காகப் பேசியதைப் போலவே பேசினார். ஜனங்கள் பாதாளத்தில் ஐந்து மாதங்கள் வரை புடமிடுதலுக்கு உட்பட்டாலும், அவர்களின் உண்மையான நிலை இன்னும் தேவனை அறியாத ஒன்றாகவே இருக்கிறது. அவர்கள் இன்னும் மூர்கத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் வெறுமனே தேவனால் ஓரளவு பாதுகாக்கப்பட்டவர்களாய் மாறி இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை அறியும் பாதையில் ஜனங்கள் எடுக்கும் சரியான முதல் படி இந்தப் படியாகும்; எனவே, தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, முந்தைய கிரியையின் பகுதி இன்றைய நிலைக்கு வழிவகுத்தது என்பதையும், இப்போதுதான் எல்லாம் இயல்பாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்ப்பது கடினமானதாக இல்லை. தனிப்பட்ட சுதந்திரத்தைப் பெறவும், தொடர்ந்து ஏற்படும் தடைகளைத் தவிர்ப்பதற்கும், தேவனுடைய ஆவியானவரை அவரது மாம்சீக சுயத்திலிருந்து பிரிக்கும் மனப்பான்மையே ஜனங்களின் அபாயகரமான பலவீனமாகும். மனுஷர்களை “மகிழ்ச்சியுடன் சிறகடிக்கும்” சிறு பறவைகள் என்று தேவன் விவரிக்க இதுவே காரணமாகும். இதுவே முழு மனிதகுலத்தின் உண்மையான நிலையாகும். இதுதான் எல்லா ஜனங்களுக்கும் விழுந்து போவதை எளிதாக்குகிறது, மேலும் அவர்கள் தங்கள் வழியை இழந்துபோவதற்கான மிகச் சரியான இடமும் இதுவாகும். மனுஷர்களிடையே சாத்தான் இந்தக் கிரியையை விட வேறொன்றும் அதிகமாக கிரியை செய்வதில்லை என்பது இதில் தெளிவாகத் தெரிகிறது. மனுஷர்களுக்குள் சாத்தான் எவ்வளவு அதிகமாகச் செய்கிறானோ, அவ்வளவு அதிகமாக தேவன் அவர்களிடத்தில் கோரிக்கைகளை வைக்கிறார். சாத்தான் அவர்களது கவனத்தைச் சிதறடிப்பதற்காக கடினமாக உழைக்கிற அதே நேரத்தில், அவருடைய வார்த்தைகளில் ஜனங்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் கோருகிறார். இருப்பினும், ஜனங்கள் எப்போதும் தமது வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேவன் கோருகிறார்; ஆவிக்குரிய உலகில் நடக்கும் யுத்தத்தின் உச்சக்கட்டம் இதுவே ஆகும். இதை இவ்வாறு கூறலாம்: தேவன் மனுஷனில் எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதையே துல்லியமாக, சாத்தான் அழிக்க விரும்புகிறான், மேலும் சாத்தான் அழிக்க விரும்புவது முற்றிலும் மறைக்கப்படாமல் மனுஷன் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. ஜனங்களிடத்தில் தேவன் என்ன செய்கிறார் என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டுகள் உள்ளன: அவர்களின் நிலைமைகள் மேன்மேலும் மேம்பட்டு வருகின்றன. மனிதகுலத்தில் சாத்தானுடைய அழிவின் தெளிவான பிரதிநிதித்துவங்களும் உள்ளன: அவர்கள் மெமேன்மேலும் சீரழிந்து வருகின்றனர், மேலும் அவர்களின் நிலைமைகள் ஒருபோதும் இல்லாத அளவிற்குத் தாழ்ந்து வருகின்றன. சூழ்நிலைகள் போதுமான அளவு மோசமாகிவிட்டால், அவர்கள் சாத்தானால் பிடிக்கப்படுவதற்கு ஏதுவாகிவிடுவார்கள். தேவனுடைய வார்த்தைகளில் சொல்லப்பட்டிருக்கிறபடி, இதுவே திருச்சபையின் உண்மையான நிலைமையாகும், மேலும், இதுவே ஆவிக்குரிய உலகின் உண்மையான சூழ்நிலையுமாக இருக்கிறது. இது ஆவிக்குரிய உலகத்திலுள்ள ஆற்றல்களின் பிரதிபலிப்பாகும். தேவனுடன் சேர்ந்து ஒத்துழைக்க ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர்கள் சாத்தானால் பிடிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இது ஓர் உண்மையாகும். தேவனால் ஆட்கொள்ளப்படும்படியாக ஜனங்களால் உண்மையிலேயே தங்கள் இருதயங்களை முழுமையாக அர்ப்பணிக்க முடிந்தால், அப்போது அது, “அவர்கள் எனக்கு முன்பாக, என் அரவணைப்பின் கனிவைச் சுவைப்பதுபோலத் தெரிகிறது” என்று தேவன் சொல்லியிருப்பதைப் போல் இருக்கிறது. மனிதகுலத்திடம் தேவன் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமானவை அல்ல என்பதை இது காட்டுகிறது; அவர்கள் எழுந்து அவருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மட்டுமே அவர் கோருகிறார். இது எளிதான மற்றும் மகிழ்ச்சியான விஷயம் அல்லவா? ஒவ்வொரு கதாநாயகனையும் பெரிய மனுஷனையும் குழப்பிய ஒரு விஷயம் இதுதானா? தளபதிகள் போர்க்களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கட்டப்பட்டவர்கள் போல் உள்ளனர்—இந்த “வீரர்கள்” கஷ்டத்தால் அசையாமல் இருக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மனிதகுலத்திடம் தேவன் வைக்கும் கோரிக்கைகளில் எந்த அம்சம் பெரியதாக இருக்கிறதோ, அதில்தான் மனிதகுலத்தின் மீதான சாத்தானின் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருக்கும், இதனால், அனைத்து ஜனங்களின் நிலைகளும் அதற்கேற்ப வெளிப்படுத்தப்படுகின்றன. “எனக்கு முன்பாக நிற்கும் உங்களில் யார் முற்றிலும் கால் பதிக்காத பனிபோலவும் களங்கமற்ற மாணிக்கமாகவும் இருப்பீர்கள்?” எல்லா ஜனங்களும் இன்னும் தேவனை முகஸ்துதி செய்து, அவரிடமிருந்து விஷயங்களை மறைக்கிறார்கள்; அவர்கள் இன்னும் தங்களது சொந்தச் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். தேவனைத் திருப்திப்படுத்தும்படி அவர்கள் தங்களது இருதயங்களை முற்றிலுமாக தேவன் தம்முடைய கரங்களில் வைக்கவில்லை, ஆனாலும் உற்சாகமாக இருப்பதன் மூலம் அவருடைய வெகுமதிகளைப் பெற விரும்புகிறார்கள். ஜனங்கள் ருசியான உணவை உண்ணும்போது, அவர்கள் தேவனை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, “கையாள்வதற்குக்” காத்திருக்கிறார்கள்; ஜனங்கள் அழகான ஆடைகளை அணிந்திருக்கும் போது, அவர்கள் கண்ணாடியின் முன்பாக நின்று, தங்கள் அழகை ரசிக்கிறார்கள், மேலும், தங்கள் உள்ளத்தின் ஆழத்தில், தேவனைத் திருப்திப்படுத்துவதில்லை. அவர்கள் உயர்ந்து நிற்கும் போது, அவர்கள் ஆடம்பரமான இன்பங்களை அனுபவிக்கும் போது, அவர்கள் தங்கள் அந்தஸ்தில் மேலோங்கி அமர்ந்து அதை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள், ஆனால் தேவன் தங்களை உயர்த்தியதன் பலனாகத் தங்களைத் தாழ்த்துவதில்லை. மாறாக, அவர்கள் தங்களது உயர்ந்த இடங்களில் நின்று, தங்களின் அதிகாரமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறார்கள், தேவனுடைய பிரசன்னத்தில் கவனம் செலுத்துவதும் இல்லை, அவருடைய விலையேறப்பெற்ற தன்மையை அறிய முற்படுவதும் இல்லை. ஜனங்கள் தங்கள் இருதயத்தில் ஒரு விக்கிரகத்தை வைத்திருந்தாலோ அல்லது அவர்களது இருதயங்கள் வேறொருவரால் ஆட்கொள்ளப்பட்டிருந்தாலோ, அவர்கள் ஏற்கனவே தேவனுடைய பிரசன்னத்தை மறுத்துவிட்டார்கள் என்றும், அவர்களது இருதயங்களில் அவர் ஒரு தலையாட்டுபவரைப் போல மட்டுமே இருக்கிறார் என்றும் அர்த்தமாகும். தங்கள் மீது வைத்திருக்கும் மற்றவர்களின் அன்பை தேவன் பறித்துவிடுவார் என்றும், அதன் பின்பு, தாங்கள் தனிமையை உணருவோம் என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். பூமியில் உள்ள எதுவும், ஜனங்கள் அவரைப் புறக்கணிக்கும்படி செய்துவிடக் கூடாது, மேலும் ஜனங்களிடையே அன்பு இருந்தாலும், தேவனை இந்த “அன்பிலிருந்து” துரத்திவிடக் கூடாது என்பதுதான் தேவனுடைய உண்மையான நோக்கமாக இருக்கிறது. பூமிக்குரிய அனைத்துப் பொருட்களும் வெறுமையாக உள்ளன—மனுஷர்களிடையே காணப்படுகிற உணர்வுகள் கூட பார்க்கவோ அல்லது தொடவோ முடியாதவைகளாக இருக்கின்றன. தேவன் இல்லாமல், அனைத்து ஜீவன்களும் ஒன்றுமில்லாமல் அழிந்து போய்விடும். பூமியில், எல்லா ஜனங்களுக்கும் தாங்கள் விரும்பும் விஷயங்கள் என்பவை உள்ளன, ஆனால் யாரும் தேவனுடைய வார்த்தைகளைத் தாங்கள் விரும்பும் விஷயமாக எடுத்துக்கொண்டதில்லை. அவருடைய வார்த்தைகளை ஜனங்கள் எந்த அளவிற்குப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை இதுவே தீர்மானிக்கிறது. அவருடைய வார்த்தைகள் கடுமையாய் இருந்தாலும், அவைகளால் யாரும் காயப்படுவதில்லை, இதனால்தான் ஜனங்கள் உண்மையாகவே அவற்றின் மீது கவனம் செலுத்துவதில்லை; மாறாக, அவர்கள் ஒரு பூவாக அவற்றைக் கருதுகிறார்கள். அவர்கள் தாங்கள் சுவைப்பதற்கான பழங்களைப் போல அவருடைய வார்த்தைகளை கருதுவதில்லை, எனவே தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சம் அவர்களுக்குத் தெரிவதில்லை. “என் பட்டயத்தின் கருக்கை மனிதர்களால் உண்மையாகக் காண முடிந்தால், அவர்கள் எலிகள் தங்கள் வளைகளுக்குள் ஒடுவதுபோல தலைதெறிக்க ஓடுவார்கள்.” தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகு, ஓர் இயல்பான மனுஷனின் நிலையில் உள்ள ஒருவன், வெட்கம் நிறைந்தவனாய்த் திகைத்துப்போய், மற்றவர்களை எதிர்கொள்ள முடியாமல் இருப்பான். இருப்பினும், இப்போதெல்லாம், ஜனங்கள் இதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள்—அவர்கள் மற்றவர்களைத் தாக்குவதற்கு தேவனுடைய வார்த்தைகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே அவமானத்தை அறியாதிருக்கிறார்கள்!

தேவனுடைய வார்த்தைகளால்தான், நாம் இருக்கிற இந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறோம்: “ராஜ்யத்திற்குள்ளேயே, என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவருவது மட்டுமல்லாமல், எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களுக்கும் என் கால்கள் சடங்கு முறைப்படி நடந்து செல்கின்றன.” தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் தேவன் ஒவ்வொரு அடியிலும் ஜெயம் பெறுகிறார். பிரபஞ்சம் முழுவதிலும் அவர் தமது கிரியையை பெரிய அளவில் விரிவுபடுத்துகிறார், மேலும் எல்லா இடங்களிலும் அவரது அடிச்சுவடுகள் மற்றும் அவரது ஜெயத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன என்று கூற முடியும். சாத்தான் தனது திட்டங்களைக் கொண்டு, நாடுகளை பிளவுபடுத்துவதன் மூலம், தேவனுடைய நிர்வாகத்தை அழிக்க நினைக்கிறான், ஆனால் தேவன் இந்தப் பிரபஞ்சத்தை அழிக்காமல் அதை முழுவதுமாக மறுசீரமைக்க இந்த பிளவுபடுத்துதலை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். தேவன் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்கிறார், ஆனால் ஜனங்களோ அதைக் கவனித்திருக்கவில்லை. அவர்கள் ஆவிக்குரிய உலகின் வல்லமைகளில் கவனம் செலுத்துவதில்லை, அதனால் தேவனுடைய புதிய கிரியையை அவர்களால் பார்க்க முடிவதில்லை. “அண்டவெளிக்குள், எல்லாம் என் மகிமையின் பிரகாசத்தில் புதியது போல் பிரகாசிக்கிறது, இது, இப்போது மனிதக் கற்பனையில் கருக்கொண்டதைப் போல, சாத்தானால் பங்கமாக்கப்படாத மற்றும் வெளிப்புற எதிரிகளின் தாக்குதல்களுக்கு உட்படாத, பரலோகத்திற்கு அப்பால் ஒரு பரலோகம் இருக்கிறது என்பதைப் போல, இது புலன்களை மிகவும் மகிழ்வித்து மற்றும் ஜனங்களின் ஆவிகளை உயர்த்துகிற, இருதயத்தை தொடும் ஓர் அம்சத்தை முன்வைக்கிறது.” பூமியின் மீது கிறிஸ்துவின் ராஜ்யத்தின் மகிழ்ச்சியான காட்சியை இது முன்னறிவிக்கிறது, மேலும் இது மூன்றாம் வானத்தின் சூழ்நிலையை மனுஷகுலத்திற்கு அறிமுகப்படுத்துகிறது: சாத்தானுடைய வல்லமைகளின் தாக்குதல்கள் எதுவும் இல்லாமல், தேவனுக்குச் சொந்தமான பரிசுத்தமான வஸ்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் முக்கியமானது என்னவென்றால், தேவன் தாமே பூமியின் மீது கிரியை செய்கிற சூழ்நிலைகளைக் காண ஜனங்களை அனுமதிப்பதாகும்: வானமானது புதிய வானமாக இருக்கிறது, அதைத் தொடர்ந்து, பூமியும் அதைப் போலவே புதிதாக்கப்பட்டிருக்கிறது. இது தேவனுடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் உள்ள வாழ்க்கை என்பதால், ஜனங்கள் அனைவரும் அளவிடமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த வரையில், சாத்தான் மனிதகுலத்தின் “கைதியாக” இருக்கிறான், மற்றும் அது இருப்பதனால் இனி அவர்கள் கூச்சமோ அல்லது பயமோ கொண்டவர்களாக இருப்பதில்லை. தெய்வீகத்தன்மையின் நேரடியான அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் காரணமாக, சாத்தானின் திட்டங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் போயிருக்கின்றன, மேலும் தேவனுடைய கிரியையால் அழிக்கப்பட்டிருக்கும் சாத்தான் இனி இருப்பதில்லை என்பதை நிரூபிக்க இதுவே போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் “பரலோகத்திற்கு அப்பால் ஒரு பரலோகம் இருக்கிறது” என்று கூறப்படுகிறது. “எந்தவொரு இடையூறும் இதுவரை எழுந்ததில்லை, பேரண்டம் இதுவரை பிரிக்கப்படவில்லை” என்று தேவன் சொன்னபோது, அவர் ஆவிக்குரிய உலகத்தின் நிலைமையைக் குறிப்பிட்டார். தேவன் சாத்தானுக்கு வெற்றியை அறிவிக்கிறார் என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது, மேலும் இது தேவனுடைய இறுதி ஜெயத்தின் அடையாளமாகும். தேவனுடைய மனதை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது, அதை யாராலும் அறியவும் முடியாது. ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, அவற்றைத் தீவிரமாக ஆராய்ந்தாலும், அவர்களால் அவற்றின் சாராம்சத்தை வெளிப்படுத்த முடியால் இருக்கிறார்கள். உதாரணமாக, தேவன் சொன்னார், “நான் நட்சத்திரங்களுக்கு மேலாகப் பறந்து பாய்வதைச் செயலாக்குகிறேன், சூரியன் அதன் கதிர்களை வீசும்போது, என் கைகளிலிருந்து கீழே இறங்கும் வாத்து இறகுகள் போன்ற பெரிய பனிப்பொழிவுகளை அனுப்பி அவற்றின் வெப்பத்தை நான் நிவர்த்தி செய்கிறேன். நான் என் மனதை மாற்றிக்கொள்ளும்போது, அந்தப் பனி அனைத்தும் ஒரு நதியாக உருகும், மற்றும் ஒரு நொடியில், வானத்தின் அடியில் எல்லா இடங்களிலும் வசந்தம் உருவாகிறது மற்றும் பூமியின் முழு நிலப்பரப்பையும் மரகதப் பச்சையாக மாற்றுகிறது.” ஜனங்களால் தங்கள் மனதில் இந்த வார்த்தைகளைக் கற்பனை செய்ய முடிந்தாலும், தேவனுடைய நோக்கம் அவ்வளவு எளிமையானது அல்ல. வானத்தின் கீழ் உள்ள அனைவரும் மயக்கத்தில் இருக்கும்போது, தேவன் இரட்சிப்பின் குரலை வெளிப்படுத்தி, அதன் மூலம் ஜனங்களின் இருதயங்களை எழுப்புகிறார். இருப்பினும், எல்லா வகையான பேரழிவுகளும் அவர்களுக்கு ஏற்படுவதால், அவர்கள் உலகின் அந்தகாரத்தை உணர்கிறார்கள், அதனால் அவர்கள் அனைவரும் மரணத்தைத் தேடி, குளிர்ந்த, பனிக்கட்டி குகைகளில் இருக்கிறார்கள். பூமியில் வெப்பம் இல்லாததால் உயிர்வாழவே முடியாத அளவுக்கு, பெரிய பனிப்புயல்களின் குளிர்ச்சியால் அவர்கள் உறைந்து போகின்றனர். ஜனங்களின் சீர்கேட்டினால்தான் அவர்கள் ஒருவரையொருவர் மேலும் மேலும் கொடூரமாகக் கொன்று வருகின்றனர். மேலும் திருச்சபையில் உள்ள பெரும்பான்மையான ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் ஒரேயடியாக விழுங்கப்படுவார்கள். எல்லா உபத்திரவங்களும் கடந்துபோன பிறகு, சாத்தானின் இடையூறுகள் அகற்றப்படும். முழு உலகமும், உருமாற்றத்திற்கு மத்தியில், இவ்வாறு வசந்த காலத்திற்குள் நுழைந்திருக்கும், வெப்பம் பூமியை மூடும், மேலும் உலகம் ஆற்றலால் நிறைந்திருக்கும். இவைகள் அனைத்தும் முழு நிர்வாகத் திட்டத்தின் படிகளாகும். தேவன் பேசிய “இரவு” என்பது சாத்தானின் பைத்தியக்காரத்தனம் அதன் உச்சத்தை அடையும் நேரத்தைக் குறிக்கிறது, அது இரவு நேரத்தில் நடக்கும். இப்போது நடந்துகொண்டிருப்பது அது அல்லவா? ஜனங்கள் அனைவரும் தேவனுடைய வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் கீழ் உயிர் வாழ்ந்தாலும், அவர்கள் இரவின் இருளினால் உண்டாகும் துயரத்தில் தள்ளப்படுகிறார்கள். அவர்களால் சாத்தானுடைய கட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாவிட்டால், அவர்கள் ஓர் இருண்ட இரவின் மத்தியில் நித்திய காலமாக வாழ்வார்கள். பூமியிலுள்ள நாடுகளைப் பாருங்கள்: தேவனுடைய கிரியையின் படிகளின் காரணமாக, பூமியிலுள்ள நாடுகள் “இங்கும் அங்கும் ஓடுகின்றன,” மேலும் ஒவ்வொன்றும் “தனக்கான சரியான இலக்கைத் தேடுகின்றன.” தேவனுடைய நாள் இன்னும் வராததால், பூமியிலுள்ள அனைவரும் சேற்றைப் போலக் குழப்பமடைந்த நிலையில் இருக்கின்றனர். அவர் பிரபஞ்சம் முழுவதிற்கும் பகிரங்கமாகத் தோன்றும்போது, அவருடைய மகிமை சீயோன் மலையை நிரப்பும், மேலும் அனைத்தும் அவருடைய கரங்களால் ஒழுங்கமைக்கப்படுவதால், அனைத்தும் நேர்த்தியாகவும் கிரமமாகவும் இருக்கும். தேவனுடைய வார்த்தைகள் இன்றைய நாளைக் குறித்து பேசுவது மட்டுமல்லாமல், நாளைய தினத்தையும் முன்னறிவிக்கின்றன. இன்றைய நாள்தான் நாளைய தினத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது, எனவே, இன்றைய நிலையில், தேவனுடைய கூற்றுகளை யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவருடைய வார்த்தைகள் முழுமையாக நிறைவேறிய பிறகுதான் மனுஷர்களால் அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

தேவனுடைய ஆவியானவர் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இடத்தையும் நிரப்புகிறார், இருப்பினும், அவர் எல்லா ஜனங்களுக்குள்ளும் கிரியை செய்கிறார். எனவே, ஜனங்களின் இருதயங்களில், தேவனுடைய உருவம் எல்லா இடங்களிலும் இருப்பதைப் போலவும், ஒவ்வொரு இடத்திலும் அவருடைய ஆவியானவரின் கிரியை உள்ளது போலவும் இருக்கிறது. உண்மையில், சாத்தானின் இந்த முன்மாதிரிகளை ஜெயங்கொள்வதும், இறுதியில் அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்வதுமே தேவன் மாம்சத்தில் தோன்றியதன் நோக்கமாகும். இருப்பினும், மாம்சத்தில் கிரியை செய்யும் போது, இந்த ஜனங்களை மறுரூபமாக்குவதற்கு ஆவியானவரும் மாம்சத்துடன் சேர்ந்து ஒத்துழைக்கிறார். தேவனுடைய செயல்கள் உலகம் முழுவதும் பரவி, அவருடைய ஆவியானவர் முழு பிரபஞ்சத்தையும் நிரப்புகிறார் என்று கூறலாம், ஆனால் அவருடைய கிரியையின் படிகள் காரணமாக, தீமை செய்பவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை, அதே சமயத்தில் நன்மை செய்பவர்கள் வெகுமதி பெற்றிருக்கவும் இல்லை. ஆகவே, அவருடைய செயல்கள் பூமியின் மீதுள்ள ஜனங்கள் அனைவராலும் போற்றப்படவில்லை. அவர் எல்லாவற்றிலும் மேலானவராகவும், எல்லாவற்றிற்குள்ளும் இருப்பவராகவும் காணப்படுகிறார்; மேலும், அவர் எல்லா ஜனங்கள் மத்தியிலும் இருக்கிறார். தேவன் உண்மையில் இருக்கிறார் என்பதைக் காட்ட இது போதுமானது. எல்லா மனுஷர்களுக்கும் அவர் வெளிப்படையாகத் தோன்றாததால், “மனிதர்களைப் பொறுத்தவரை, நான் உண்மையில் இருப்பதாகத் தெரிகிறது, ஆனாலும் நானும் இல்லை என்று தெரிகிறது” என்பதைப் போன்ற தவறான நம்பிக்கைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்போதும் தேவனை விசுவாசிக்கும் அனைவரிலும், தேவன் உண்மையிலேயே இருக்கிறார் என்பதில் யாரும் முற்றிலுமாக, நூறு சதவீதம் உறுதியாக இல்லை; அவர்கள் அனைவரும் மூன்று பகுதி சந்தேகத்தையும் இரண்டு பகுதி விசுவாசத்தையும் கொண்டிருக்கிறார்கள். இப்போது இருக்கும் மனிதகுலம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நாட்களில் ஜனங்கள் அனைவரும் பின்வரும் சூழ்நிலையில் உள்ளனர்: அவர்கள் தேவன் இருப்பதாக விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அவரைக் கண்டிருக்கவில்லை; அல்லது, அவர்கள் தேவன் இருப்பதாக விசுவாசிப்பதில்லை, ஆனால் மனிதகுலத்தால் சரிசெய்ய முடியாத பல சிரமங்களைப் பெற்றிருக்கின்றனர். எப்பொழுதும் ஏதோ ஒன்று அவர்களைச் சிக்க வைப்பதைப் போலவும், அதில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்பதைப் போலவும் காணப்படுகிறது. அவர்கள் தேவனை விசுவாசித்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு துளியளவு தெளிவற்ற தன்மையை உணர்வதைப்போல இருக்கிறது. இருப்பினும், அவர்கள் விசுவாசிக்கவில்லை என்றால், ஒருவேளை அவர் இருப்பாரேயானால், அவர்கள் தோற்றுப்போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். இதுதான் அவர்களது இருமனமுள்ள போக்காகும்.

“என் நாமத்திற்காகவும், என் ஆவியானவர் நிமித்தமாகவும், எனது முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவர்களுடைய எல்லா பலத்தையும் யார் காணிக்கையாக அளிக்க முடியும்?” மேலும் தேவன், “மனித உலகில் ராஜ்யம் இருக்கும் இன்றைய நாள்தான், நான் மனிதர்கள் மத்தியில் நேரில் வந்த காலம். எந்தவிதமான நடுக்கமும் இல்லாமல் என் சார்பாகப் போர்க்களத்தில் இறங்கக்கூடிய எவரும் இருக்கிறார்களா?” என்று கூறினார். தேவனுடைய வார்த்தைகளின் குறிக்கோள் இதுதான்: மாம்சத்தில் உள்ள தேவன் தமது தெய்வீகக் கிரியையை நேரடியாகச் செய்யாமல் இருந்தாலோ, அல்லது அவர் மனுவுருவானவராக இல்லாமல், மாறாக ஊழியர்கள் மூலமாகக் கிரியை செய்தாலோ, அப்போது தேவனால் ஒருபோதும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை ஜெயங்கொள்ளவும் முடியாது, அவரால் மனுஷர்கள் மத்தியில் ராஜாவாக ஆளுகை செய்யவும் முடியாது. மனுஷர்கள் உண்மையில் தேவனை அறிய இயலாதவர்களாய் இருக்கிறார்கள், எனவே இது இன்னும் சாத்தானின் ஆளுகையாகவே இருக்கும். எனவே, இந்தக் கிரியையின் கட்டமானது தேவனால் தனிப்பட்ட முறையில், மனுவுருவான மாம்சமானவரின் மூலம் செய்யப்பட வேண்டும். மாம்சமானவர் மாற்றப்பட்டால், திட்டத்தின் இந்தக் கட்டத்தை ஒருபோதும் முடிக்க முடிந்திருக்காது, ஏனென்றால் வெவ்வேறு மாம்சங்களின் முக்கியத்துவமும் சாராம்சமும் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தை மட்டுமே ஜனங்களால் புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால், தேவன் அடிவேரைப் புரிந்துகொள்கிறார். “இருந்தபோதிலும், எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இது ஆவியானவர் செயலா அல்லது மாம்சத்தின் செயல்பாடா என்பதைப் புரிந்து கொள்பவர் எவரும் இல்லை. இந்த ஒரு விஷயத்தை விரிவாக அனுபவித்து உணர ஜனங்களுக்கு முழு வாழ்நாளும் எடுத்துக்கொள்ளும்” என்று தேவன் கூறினார். ஜனங்கள் பல ஆண்டுகளாகச் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள், மேலும், அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய தங்கள் உணர்வை இழந்துவிட்டனர். இந்தக் காரணத்தினால்தான், தேவனுடைய வார்த்தைகளின் ஒரு வாக்கியமானது ஜனங்களின் கண்களுக்கு ஒரு விருந்து போல இருக்கிறது. ஆவியானவருக்கும் ஆவிகளுக்கும் இடையே உள்ள தூரத்தின் காரணமாக, தேவனை விசுவாசிப்பவர்கள் அனைவரும் அவருக்காக ஏங்குவதை உணர்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் அவருக்கு அருகில் நெருங்கி வருவதற்கும் தங்கள் இருதயங்களை ஊற்றுவதற்கும் தயாராக இருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் அவருடன் தொடர்பு கொள்ளத் துணிவதில்லை, அதற்குப் பதிலாக பிரமிப்பிலேயே இருந்துவிடுகிறார்கள். இதுவே ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிற ஈர்க்கும் வல்லமையாகும். தேவன் ஜனங்களை நேசிக்கும் தேவனாக இருப்பதாலும், அவர்கள் நேசிப்பதற்கான எண்ணிலடங்கா காரியங்கள் அவரில் இருப்பதாலும், அனைவரும் அவரை நேசிக்கிறார்கள், மேலும் அனைவரும் அவரிடம் நம்பிக்கை வைக்க விரும்புகிறார்கள். உண்மையில், ஒவ்வொருவரும் தங்கள் இருதயத்தில் தேவன்மீது அன்பைக் கொண்டிருக்கிறார்கள்—சாத்தானின் இடையூறுகள்தான் உணர்வற்ற, மந்த புத்தியுள்ள, பரிதாபமான ஜனங்கள் தேவனை அறிவதைத் தடுத்துவிட்டது. அதனால்தான், மனுஷர்கள் தம்மீது கொண்டிருக்கும் உண்மையான உணர்வுகளைப் பற்றி தேவன் பேசினார்: “மனிதர்கள் ஒருபோதும் என்னைத் தங்கள் இருதயங்களின் உள்ளார்ந்த ஆழத்தில் இகழ்ந்ததில்லை; மாறாக, அவர்கள் தங்கள் ஆவிகளின் ஆழத்தில் என்னைப் பற்றிக்கொள்கிறார்கள். … எனது யதார்த்தம் மனிதர்களை இழப்பிலும், வாயடைத்துப் போகும்படியும், குழப்பத்திலும் ஆழ்த்துகிறது, ஆனாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள்.” தேவனை விசுவாசிப்பவர்களின் இருதயத்தில் ஆழமாக இருக்கும் உண்மையான நிலை இதுதான். ஜனங்கள் உண்மையிலேயே தேவனை அறியும்பொழுது, அவர் மீதான அவர்களின் அணுகுமுறை இயற்கையாகவே மாறுகிறது, மேலும் தங்களது ஆவிகளின் செயல்பாட்டின் நிமித்தமாக, அவர்களால் தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதிக்க முடியும். எல்லா ஜனங்களுடைய ஆவிகளின் ஆழத்திற்குள்ளும் தேவன் இருக்கிறார், ஆனால் சாத்தானுடைய சீர்கேட்டின் காரணமாக, ஜனங்கள் தேவனை சாத்தானுடன் இணைத்துக் குழம்பிப்போய்விட்டனர். தேவனுடைய இன்றைய கிரியையானது இந்த பிரச்சனையிலிருந்துதான் தொடங்குகிறது, மேலும் ஆவிக்குரிய உலகில், இது ஆரம்பம் முதல் இறுதி வரை யுத்தத்தின் மையமாக இருந்து வருகிறது.

முந்தைய: அத்தியாயம் 14

அடுத்த: அத்தியாயம் 16

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக