அத்தியாயம் 68

என் வார்த்தையானது ஒவ்வொரு நாட்டிலும், இடத்திலும், தேசத்திலும், பிரிவிலும் செயல்படுத்தப்படுகிறது, மற்றும் எந்தவொரு கொடுக்கப்பட்டுள்ள நேரத்திலும் ஒவ்வொரு மூலையிலும் அது நிறைவேற்றப்படுகிறது. எல்லா இடங்களிலும் நிகழும் பேரழிவுகள் மக்களுக்கு இடையிலான யுத்தங்கள் அல்ல, அல்லது அவை ஆயுதங்களைக் கொண்டு சண்டையிடுவதும் அல்ல. அதன் பின்னர், எந்தவொரு யுத்தங்களும் இருக்காது. அனைத்தும் என் பிடியில் உள்ளன. அனைவரும் என் நியாயத்தீர்ப்பை எதிர்கொண்டு, பேரழிவின் மத்தியில் வாடுவர். என்னை எதிர்ப்பவர்கள், அத்துடன் என்னுடன் ஒத்துழைக்க முயற்சி செய்யாதவர்கள், பல்வேறு பேரழிவுகளின் வேதனையை அனுபவிக்கட்டும்; அவர்கள் அழுது, தங்கள் பற்களை நித்தியத்திற்கும் கடித்துக் கொண்டு, என்றென்றைக்கும் அந்தகாரத்தில் இருக்கட்டும். அவர்கள் உயிர் பிழைக்க மாட்டார்கள். நான் நேர்மையுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுகிறேன், மேலும், கடந்த காலத்தில் நீ எனக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தாய் என்பதை நான் கருத்தில் கொள்ளமாட்டேன்; நீ என்னை எதிர்க்கும் வரை, என் நியாயத்தீர்ப்பின் கரமானது ஒரு நொடி கூடத் தாமதிக்காமலும், சிறிதளவும் இரக்கமின்றியும் உன் மீது விரைவான கடுங்கோபத்தைக் கட்டவிழ்த்து விடும். நானே வார்த்தை தவறாத தேவன் என்று நான் காலா காலமாகக் கூறி வருகிறேன். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற்றப்படும், மற்றும் நீங்கள் அவை ஒவ்வொன்றையும் காணும்படி நான் செய்வேன். உண்மையில் அனைத்திலும் மெய்த்தன்மையில் நுழைவதென்பது இது தான்.

என் அன்பிற்குரியவர்களான என் குமாரர்களுக்கு பெரும் பேரழிவுகள் நிச்சயமாக ஏற்படாது; ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் என் குமாரர்களை நான் பேணுவேன். அத்தகைய வேதனையையும் துன்பத்தையும் நீங்கள் நிச்சயமாகத் தாங்க வேண்டியதில்லை. மாறாக, என் குமாரர்களைப் பரிபூரணப்படுத்துவதும், அவர்களில் என் வார்த்தைகளை நிறைவேற்றுவதும் தான் இதன் நோக்கமாகும். அதன் விளைவாக, நீங்கள் என் சர்வவல்லமையை அடையாளம் கண்டு, வாழ்வில் மேலும் வளர்ந்து, விரைவில் எனக்காக பாரங்களைச் சுமந்து, என் நிர்வாகத் திட்டம் நிறைவடைவதற்காக உங்களை முழுவதுமாக அர்ப்பணிப்பீர்கள். இதன் காரணமாக மகிழ்ச்சியுடனும் இன்பத்துடனும் நீங்கள் களிப்படைய வேண்டும். நான் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து, நீங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறேன்; நான் அதை உங்களின் கைகளில் வைப்பேன். ஒரு குமாரன் அவனது தந்தையின் சொத்து முழுவதையும் சுதந்தரிப்பது உண்மை என்றால், என் முதற்பேறானக் குமாரர்கள் உங்களுக்கு இது எந்த அளவிற்கு உண்மையானதாக இருக்கும்? நீங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பெரும் பேரழிவுகளால் துன்பப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் நித்தியமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். என்ன ஒரு மகிமை! என்ன ஒரு மகிமை!

உங்களின் வேகத்தை அதிகரித்து, எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் என் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; பின்னடைய வேண்டாம். உங்களின் இருதயங்கள் என் இருதயத்தைப் பின்தொடரட்டும், மற்றும் உங்களின் மனங்கள் என் மனதைப் பின்தொடரட்டும். என்னுடன் ஒத்துழைத்து, ஒரே இருதயமாகவும் ஒரே மனமாகவும் இருங்கள். என்னுடன் உண்ணவும், என்னுடன் வாழவும், மற்றும் என்னுடன் மகிழவும் செய்யுங்கள். அனுபவிக்கவும், எடுத்துக் கொள்ளவும் அற்புதமான ஆசீர்வாதங்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒப்பற்ற பெரும் வளம் எனக்குள் இருக்கின்றது. அதில் சிறிதளவு கூட வேறு யாருக்காகவும் ஆயத்தமாக்கப்படவில்லை; நான் இதை முழுவதுமாக என் குமாரர்களுக்காகச் செய்கிறேன்.

தற்போது, என் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே நிறைவேற்றப்படும். உங்களிடம் நான் பேசி முடித்த உடனேயே, அந்த விஷயங்கள் ஏற்கனவே நிறைவுற்றிருக்கும். கிரியை உண்மையில் அவ்வளவு விரைவாக முன்னேறுகிறது, மேலும், அது ஒவ்வொரு கணமும் மாறுகிறது. உங்களின் கவனம் ஒரு நொடி அலைபாய்ந்தால் கூட, ஒரு “மையவிலக்கு” நிகழ்வு ஏற்படும், மேலும் நீங்கள் வெகு தொலைவுக்கு வீசியெறியப்படுவீர்கள், இவ்வாறு இந்தத் தொடரியக்கத்திலிருந்து விலகுவீர்கள். நீங்கள் ஊக்கத்துடன் தேடவில்லை என்றால், என்னுடைய கடின முயற்சிகளை நீங்கள் வீணாக்குவீர்கள். எதிர்காலத்தில், பல்வேறு தேசங்களிலிருந்து ஜனங்கள் எந்த நேரத்திலும் கூட்டமாகக் கூடுவர்: உங்களின் தற்போதைய மட்டத்தில், உங்களால் அவர்களை வழிநடத்த முடியுமா? என் ஒப்புவிப்பை நிறைவேற்றுவதற்காக இந்தக் குறுகிய காலத்திற்குள் நல்ல போர் வீரர்களாக நான் உங்களை முழுமையாகப் பயிற்றுவிப்பேன். நீங்கள் அனைத்து வகையிலும் என் பெயரை மகிமைப்படுத்தி, எனக்காக அற்புதமான சாட்சியங்களைக் கூற வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்களால் இகழப்பட்டவர்கள் அவர்களை வழிநடத்தி ஆட்சி செய்வதற்காக இன்று அவர்களுக்கு மேல் நிற்கட்டும். நீங்கள் என் நோக்கங்களைப் புரிந்து கொண்டீர்களா? நான் எடுத்தக் கடினமான முயற்சிகளை நீங்கள் உணர்ந்தீர்களா? இவை அனைத்தையும் நான் உங்களுக்காகத் தான் செய்கிறேன். இது, உங்களால் என் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியுமா இல்லையா என்பதைச் சார்ந்தது.

மனிதனின் மனம் மற்றும் இருதயத்தை ஆராயும் தேவனாகிய நான், பூமியின் எல்லைகளுக்குப் பயணிக்கிறேன். எனக்கு ஊழியம் செய்யாமல் இருக்க யார் துணிவர்? தேசங்கள் அனைத்தின் மத்தியிலும் பதற்றங்கள் அதிகரித்து, அவர்கள் கடுமையாகப் போராடுவார்கள்; எனினும், இறுதியில், அவர்கள் என் பிடியிலிருந்து தப்ப மாட்டார்கள். நிச்சயமாக நான் அவர்களை எளிதில் விட மாட்டேன். நான் அவர்களை அவர்களின் செயல்கள், பூமி சார்ந்த அந்தஸ்துகள், மற்றும் பூமி சார்ந்த இன்பங்களின் அடிப்படையில் ஒவ்வொருவராக நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவேன். நான் யாரையும் விடமாட்டேன். எனது கடுங்கோபம் வெளிப்படத் தொடங்கியுள்ளது, மற்றும் அவை அனைத்தும் அவர்கள் மீது பேரளவில் பொழியும். அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவர்களில் நிறைவேற்றப்படும், மற்றும் இவை அனைத்தையும் அவர்களே தங்கள் மீது கொண்டு வந்துள்ளனர். கடந்த காலத்தில் என்னை அறியத் தவறிய அல்லது என்னை இகழ்ந்த ஜனங்கள் இப்போது என் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்வார்கள். என் குமாரர்களைத் துன்புறுத்தியவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கடந்த கால வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு ஏற்ப நான் குறிப்பாக அவர்களைச் சிட்சை செய்வேன். நான் குழந்தைகளைக் கூட விட மாட்டேன்; இந்த ஜனங்கள் அனைவரும் சாத்தானின் அதே குணத்தைக் கொண்டவர்கள். அவர்கள் எதையும் சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை என்றாலும், மனதின் ஆழத்தில், அவர்கள் என் குமாரர்கள் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர், அவர்களில் ஒருவரைக் கூட நான் விட மாட்டேன். இந்த ஜனக்குழுவாகிய நாங்கள்—இன்று ஆட்சி செய்து அதிகாரத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அனைவரும் காணும்படி நான் செய்வேன்; இது நிச்சயமாக அவர்களல்ல. இந்தக் காரணத்திற்காக, நீங்கள் உங்களுடைய முழு ஆற்றலையும் அர்ப்பணித்து எனக்காக நேர்மையாக உங்களை நீங்களே ஒப்புக் கொடுப்பது இன்னும் முக்கியமானதாகும், அதனால், ஒவ்வொரு இடத்திலும், மூலையிலும், மதத்திலும், மற்றும் பிரிவிலும், நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தி, அதற்குச் சாட்சி கூறலாம் மற்றும் முழுப் பிரபஞ்சத்திற்கும், பூமியின் முனைகளுக்கும் இதைப் பரப்பலாம்!

முந்தைய: அத்தியாயம் 67

அடுத்த: அத்தியாயம் 69

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக