அத்தியாயம் 1
என் வார்த்தைகளைப் பார்த்தவர்கள் உண்மையாகவே அவைகளை ஏற்றுக்கொள்கிறார்களா? உங்களுக்கு உண்மையாகவே என்னைத் தெரியுமா? நீங்கள் உண்மையாகவே கீழ்ப்படியக் கற்றிருக்கிறீர்களா? நீங்கள் உண்மையாகவே உங்களை எனக்காக ஒப்புக்கொடுக்கிறீர்களா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராக நீங்கள் உண்மையிலேயே எனக்கு பலமான மற்றும் அசைக்க முடியாத சாட்சி பகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் பக்தி உண்மையில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை அவமானப்படுத்துகிறதா? என் வார்த்தைகளின் உபத்திரவத்தின் மூலமாக மட்டுமே நான் திருச்சபையைச் சுத்திகரித்தல் மற்றும் என்னை உண்மையாக நேசிப்பவர்களைத் தெரிந்தெடுத்தல் என்னும் என் இலக்கை அடைய முடியும். நான் இவ்வாறு கிரியை செய்யவில்லை என்றால், யாராவது என்னை அறிய முடியுமா? என் வார்த்தைகள் மூலமாக என் மகத்துவத்தையும், என் உக்கிர கோபத்தையும், என் ஞானத்தையும் யாரால் அறிந்துகொள்ள முடியும்? எனது கிரியையைத் தொடங்கிவிட்டால், நான் அதை நிச்சயமாக முடிப்பேன், ஆனாலும் மனுஷர்களுடைய இருதயங்களை அவைகளுடைய ஆழம் வரைக்கும் ஆராய்ந்து அறிகிறவர் நானே. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனுஷர்கள் மத்தியில் என்னை முழுமையாக அறிந்துகொண்டவன் ஒருவனும் இல்லை, எனவே எல்லா மனுஷர்களுக்கும் வழிகாட்டவும், ஒரு புதிய காலத்திற்குள் அவர்களை வழிநடத்திச் செல்லவும் நான் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். இறுதியில் என் எல்லாக் கிரியைகளையும் நிறைவேற்ற நான் வார்த்தைகளைப் பயன்படுத்துவேன், என்னை உண்மையாக நேசிக்கும் அனைவரையும் என் ராஜ்யத்திற்குக் கீழ்ப்படிதலுக்குள் திரும்பிவரச் செய்து, என் சிங்காசனத்திற்கு முன்பாக வாழ வைப்பேன். இப்போது சூழ்நிலை முன்னொரு காலத்தில் இருந்ததைப் போல அல்ல, என் கிரியை ஒரு புதிய தொடக்க நிலையில் பிரவேசித்திருக்கிறது. அப்படி இருப்பதால், ஒரு புதிய அணுகுமுறை இருக்கும்: என் வார்த்தையைப் பார்த்து அதைத் தங்கள் வாழ்க்கையாகவே ஏற்றுக்கொள்ளும் அனைவரும் என் ராஜ்யத்தில் இருக்கும் ஜனங்களாவர், மேலும் என் ராஜ்யத்தில் இருப்பதால், அவர்கள் என் ராஜ்யத்தின் ஜனங்களாவர். அவர்கள் என் வார்த்தைகளின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதால், அவர்கள் என் ஜனங்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், இந்தத் தலைப்பானது என் “குமாரர்கள்” என்று அழைக்கப்படுவதற்கு எந்த வகையிலும் இரண்டாம் நிலை அல்ல. தேவனுடைய ஜனங்களாக ஆக்கப்பட்டதால், அனைவரும் என் ராஜ்யத்தில் மிகுந்த பக்தியுடன் ஊழியம் செய்ய வேண்டும் மற்றும் என் ராஜ்யத்தில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். என் நிர்வாக ஆணைகளுக்கு எதிராக யார் குற்றம் செய்தாலும் என் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது அனைவருக்குமான எனது அறிவுரையாகும்.
ஒரு புதிய அணுகுமுறை இப்போது பிரவேசித்திருக்கிறது, மேலும் கடந்த காலத்தை மீண்டும் குறிப்பிடப்படத் தேவையில்லை. இருப்பினும், நான் முன்பு கூறியிருப்தைப் போல்: நான் சொன்னபடி செயல்படுத்துகிறேன், நான் செயல்படுத்துவதை எப்போதும் நிறைவேற்றுகிறேன், இதை யாராலும் மாற்ற முடியாது—இதுவே முழுமையானது. அவை நான் கடந்த காலத்தில் கூறிய வார்த்தைகளாக இருந்தாலும் சரி அல்லது எதிர்காலத்தில் நான் சொல்லப்போகும் வார்த்தைகளாக இருந்தாலும் சரி, அவை அனைத்தையும் நான் ஒவ்வொன்றாக மெய்யாக்குவேன், மேலும் அவை அனைத்தும் மெய்யாக இருப்பதைக் காண மனுஷகுலம் முழுவதையும் அனுமதிப்பேன். இதுவே எனது வார்த்தைகளுக்கும் கிரியைக்கும் பின்னால் உள்ள கொள்கை ஆகும். திருச்சபையின் கட்டுமானம் ஏற்கனவே முடிக்கப்பட்டிருப்பதால், இப்போது திருச்சபைக் கட்டிடத்தின் காலமாக இனி இருப்பதில்லை, ஆனால் அதற்கு மாறாக ராஜ்யம் வெற்றிகரமாகக் கட்டப்பட்டிருக்கிற காலமாகும். இருப்பினும், நீங்கள் இன்னும் பூமியில் இருப்பதால், பூமியின் மீதுள்ள மனுஷர்களின் கூட்டங்கள் “திருச்சபை” என்று அறியப்படும். ஆயினும்கூட, திருச்சபையின் சாராம்சம் முன் ஒரு காலத்தில் இருந்ததைப் போல அல்ல—அது வெற்றிகரமாகக் கட்டப்பட்டிருக்கிற ஒரு திருச்சபையாகும். ஆகையால், என்னுடைய ராஜ்யம் ஏற்கனவே பூமிக்கு இறங்கிவிட்டது என்று நான் சொல்கிறேன். என் வார்த்தைகளின் மூலத்தை யாரும் புரிந்துகொள்ளவும் முடியாது, அல்லது அவர்கள் பேசுவதில் என் நோக்கத்தையும் அவர்கள் அறியார்கள். இன்று நான் பேசும் விதத்திலிருந்து, நீங்கள் வெளிப்பட்டை உணருவீர்கள். சிலர் சத்தமிட்டு வெளிப்படையாகவும் மனங்கசந்து அழுவார்கள்; சிலர் நான் பேசும் விதம் இதுவே என்று பயப்படலாம்; எனது ஒவ்வொரு அசைவையும் பார்க்கும்போது சிலர் தங்கள் பழமைவாதக் கருத்துக்களைச் சார்ந்துகொள்ளலாம்; சிலர் தங்கள் குறைகள் வெளிப்படுத்தப்பட்டதற்காக அல்லது அந்த நேரத்தில் என்னை எதிர்த்ததற்காக வருத்தப்படலாம்; சிலர் என் நாமத்தை விட்டு ஒருபோதும் விலகாமல், தாங்கள் எழுப்புதல் அடைந்ததால் இரகசியமாகக் களிகூரலாம். குற்றுயிராகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் மனந்தளர்ந்துபோனவர்களாகவும் மாறும் வரைக்கும், நீண்ட காலத்திற்கு முன்பே என் வார்த்தைகளால் “வேதனையடைந்தவர்களும்”, நான் என் வெளிப்பாட்டு முறையை மாற்றியிருந்தாலும், நான் பேசும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க மனம் இல்லாதவர்களும் சிலர் இருக்கலாம்; அல்லது ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை என்னைப் பக்தியுடன் சேவித்து, ஒருபோதும் குறைகூறாத, ஒருபோதும் சந்தேகிக்காத, மற்றவர்கள் இன்று தங்கள் இருதயங்களில் விடுதலையைப் பெறவும், எனக்கான வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியறிதலை உணரவும் போதிய அதிர்ஷ்டசாலிகளாய் இருக்கிறார்கள். மேலே உள்ள எல்லாச் சூழ்நிலைகளும் ஒவ்வொரு மனுஷனுக்கும் வெவ்வேறு அளவுகளில் பொருந்தும். ஆனால் கடந்த காலம் கடந்த காலமாகவும், மற்றும் நிகழ்காலம் ஏற்கனவே இங்கே இருப்பதாலும், இனி நேற்றைய தினத்துக்காக வருத்தத்துடன் ஏங்கவோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவோ வேண்டிய அவசியமில்லை. மனுஷனாக இருப்பதால், யாரெல்லாம் யதார்த்தத்திற்கு எதிராகச் செல்கிறார்களோ மற்றும் என் வழிகாட்டுதலின்படி காரியங்களைச் செய்வதில்லையோ அவர்கள் ஒரு நல்ல முடிவை அடையமாட்டார்கள், மாறாக அவர்கள் தங்கள் மீது பிரச்சனையை மட்டுமே வரவழைத்துக்கொள்வார்கள். பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றிலும், என்னிடம் இல்லாத இறுதிச் சொல் என்று எதுவும் இல்லை. என் கையில் இல்லாதது என்று ஏதேனும் இருக்கிறதா? நான் என்ன சொன்னாலும் அது நடத்திக்காட்டப்படுகிறது, மனுஷரிடையே யாரால் என் மனதை மாற்ற முடியும்? நான் பூமியில் செய்த உடன்படிக்கையால் என் மனதை மாற்ற முடியுமா? எனது திட்டம் முன்னோக்கிச் செல்வதை எதுவாலும் தடுக்க முடியாது; எனது கிரியையிலும் எனது ஆளுகைத் திட்டத்திலும் நான் எப்போதும் நிலையாக இருக்கிறேன். மனுஷரில் யாரால் இதில் மூக்கை நுழைக்க முடியும்? இந்த ஏற்பாடுகளை நான் அல்லவா தனிப்பட்ட முறையில் செய்திருக்கிறேன்? இன்று இந்த ராஜ்யத்தில் நுழைவது என்பது எனது திட்டத்திற்கு வெளியேயோ அல்லது நான் முன்னறிவித்ததையோ தவறாக வழிநடத்தவில்லை; இது எல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பே என்னால் தீர்மானிக்கப்பட்டது. எனது திட்டத்தின் இந்தப் படியை உங்களில் யாரால் புரிந்துகொள்ள முடியும்? என் ஜனங்கள் நிச்சயமாக என் குரலைக் கேட்பார்கள், என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக என் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்பிவருவார்கள்.
பிப்ரவரி 20, 1992