அத்தியாயம் 98

எல்லா விஷயங்களும் உங்கள் ஒவ்வொருவர் மீதும் வரும், மேலும் என்னைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும், என்னைப் பற்றி இன்னும் அதிக நிச்சயத்துடன் இருக்கவும் அவை உங்களை அனுமதிக்கும். ஒரே தேவனாகிய என்னை அறியவும், சர்வவல்லமையுள்ளவராகிய என்னை அறியவும், மனுவுருவான தேவனாகிய என்னை அறியவும் அவை உங்களை அனுமதிக்கும். அதன்பிறகு, நான் மாம்சத்திலிருந்து வெளியே வந்து, என் வசிப்பிடமாகவும் எனது இலக்காகவும் இருக்கிற, நான் எல்லாவற்றையும் சிருஷ்டித்த அடித்தளமாகவும் இருக்கிற கானானின் நல்ல நிலமாகிய சீயோனுக்குத் திரும்புவேன். இப்போது, நான் சொல்லிக் கொண்டிருக்கிற வார்த்தைகளின் அர்த்தம் உங்களில் யாருக்கும் புரியவில்லை; இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நபரும் இல்லை. அனைத்தும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும் போது தான், நான் ஏன் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். நான் உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல, நான் பிரபஞ்சத்தைச் சேர்ந்தவரும் அல்ல, ஏனென்றால் நான் ஒரே தேவனாக இருக்கிறேன். பிரபஞ்ச உலகம் முழுவதையும் நான் என் கரத்தில் வைத்திருக்கிறேன், நானே அதற்குப் பொறுப்பாளியாக இருக்கிறேன், மேலும் ஜனங்களால் என் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியவும், என் பரிசுத்த நாமத்தைப் பேசவும், என்னை நேசிக்கவும், என்னைத் துதிக்கவும் மட்டுமே முடியும். எல்லாம் படிப்படியாக உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். எதுவும் மறைக்கப்படவில்லை என்றாலும், நான் பேசும் விதத்தையோ அல்லது என் வார்த்தைகளின் தொனியையோ உங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது நிர்வாகத் திட்டம் முழுவதும் என்னவென்று உங்களுக்கு இன்னும் புரியவில்லை. எனவே, நான் சொன்னதில் உங்களுக்குப் புரியாத விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்குப் பிறகு சொல்கிறேன், ஏனென்றால், என்னைப் பொறுத்த வரை, எல்லாமே எளிமையானது மற்றும் தெளிவானது, அதேநேரத்தில் உங்களுக்கோ, இது மிகவும் கடினமானதாய் இருக்கிறது, மற்றும் நீங்கள் வெறுமனே அதைப் புரிந்து கொள்வதே இல்லை. இதன் விளைவாக, நான் பேசும் முறையை மாற்றுவேன், மேலும் நான் பேசும்போது விஷயங்களை ஒன்றாக இணைக்க மாட்டேன், ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தெளிவுபடுத்துவேன்.

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் என்றால் என்ன? மாம்சத்தில் மரித்து, அதன் பின்னர், மரணத்திற்குப் பின்பு சரீரத்துக்குத் திரும்புவது என்று அர்த்தமா? மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவது என்பது இதுதானா? இது அவ்வளவு எளிமையானதா? நான் சர்வவல்லமையுள்ள தேவனாக இருக்கிறேன்; இதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? இதை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய்? எனது முதல் மனுவுருவாதலின் போது நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை உண்மையிலேயே நேரடி அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள முடியுமா? உண்மையிலேயே, செயல்முறையானது அந்தப் புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடியே இருந்ததா? நான் வெளிப்படையாகப் பேசாவிட்டால், ஜனங்களுக்குத் தெளிவாகச் சொல்லாவிட்டால், என் வார்த்தைகளின் அர்த்தத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று நான் ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் அப்படிப்பட்டது என்று நினைக்காத ஒருவர்கூட காலங்காலமாக இருந்ததில்லை. உலகம் சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இதன் உண்மையான அர்த்தத்தை யாரும் புரிந்து கொண்டிருக்கவில்லை. நான் உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டேனா? மேலும், மரணத்திற்குப் பின்னர், நான் கல்லறையிலிருந்து வெளியே வந்தேனா? உண்மையிலேயே இப்படி நடந்ததா? இது உண்மையிலேயே மெய்யாக இருக்க முடியுமா? காலங்காலமாக யாரும் இதில் எந்த முயற்சியும் செய்திருக்கவில்லை, இதிலிருந்து யாரும் என்னை அறிந்திருக்கவில்லை, இதை விசுவாசிக்காதவர்கள் ஒருவரும் இல்லை; எல்லோரும் அதை உண்மை என்று நினைக்கிறார்கள். என்னுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு உள்ளான அர்த்தம் உண்டு என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அப்படியானால், மிகச் சரியாக மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் என்றால் என்ன? (கொஞ்ச காலத்திலேயே, நீங்கள் இதை அனுபவிப்பீர்கள், எனவே இதைப் பற்றி நான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்கிறேன்.) எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் மரிப்பதற்குத் தயாராக இல்லை; அவர்கள் அனைவரும் வாழ விரும்புகிறார்கள். எனது பார்வையில், மாம்சத்தின் மரணமானது உண்மையான மரணம் அல்ல. ஒருவரிடமிருந்து எனது ஆவி எடுத்துக் கொள்ளப்படும் போது, அந்த நபர் மரித்துவிடுகிறார். எனவே, சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைத்து பிசாசுகளையும் (விசுவாசம் இல்லாதவர்கள், அனைத்து அவிசுவாசிகள்) மரித்தவர்கள் என்று அழைக்கிறேன். உலகம் உண்டான காலம் முதற்கொண்டு, நான் தெரிந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் என் ஆவியை அளித்திருக்கிறேன். இருப்பினும், சிருஷ்டிப்பின் காலத்தைத் தொடர்ந்து வந்த ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, ஜனங்கள் கொஞ்ச காலத்திற்குச் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டனர். அதனால் நான் சென்றுவிட்டேன், ஜனங்கள் துன்பத்தை (சொல்லப்பட்டபடியே, நான் மனுவுருவாகி சிலுவையில் அறையப்பட்டபோது நான் அனுபவித்த துன்பத்தை) அனுபவிக்கத் தொடங்கினர். இருப்பினும், என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் (ஜனங்களை நான் கைவிடுவது முடிவடைந்த நேரம்), நான் முன்னரே முன்குறித்திருந்த ஜனங்களை நான் மீட்டெடுத்துக் கொண்டேன், மற்றும் நான் மீண்டும் ஒருமுறை என் ஆவியை உங்களுக்குள் வைத்தேன், அதனால் நீங்கள் மீண்டும் ஜீவனைப் பெற்றீர்கள். இதுவே “மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல்” என்று அழைக்கப்படுகிறது. இப்போது, உண்மையில் என் ஆவியில் வாழ்பவர்கள் அனைவரும், ஏற்கனவே வரம்பு கடந்து நிற்பவர்களாவர், அவர்கள் அனைவரும் சரீரத்தில் வாழ்கிறார்கள். இருப்பினும், நீண்ட காலம் செல்லும் முன்பே, நீங்கள் அனைவரும் உங்கள் சிந்தனை, உங்கள் எண்ணங்கள் மற்றும் அனைத்து பூமிக்குரிய தொடர்புகளையும் தூக்கி எறிந்து விடுவீர்கள். ஆனால், ஜனங்கள் கற்பனை செய்வது போல், துன்பத்திற்குப் பிறகு மரித்தோரிலிருந்து எழும்புவது அல்ல. நீங்கள் இப்போது வாழ்கிறீர்கள் என்பது சரீரத்தில் வாழ்வதற்கான முன்நிபந்தனையாகும்; ஆவிக்குரிய உலகில் பிரவேசிப்பதற்கு இது அவசியமான பாதையாக இருக்கிறது. நான் பேசும் இயல்பான மனிதத்தன்மையின் வரம்பு கடந்து நிற்றல் என்பது குடும்பம் இல்லாமல், மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல், மனுஷனுடைய தேவைகள் இல்லாமல் இருப்பது என்று அர்த்தமாகும். என் சாயலை வாழ்ந்து காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவது, எனக்குள் பிரவேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது மற்றும் எனக்கு வெளியே உள்ள மற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதாகும்; நீங்கள் போகிற இடமெல்லாம் உங்கள் வீடுதான். இது இயல்பான மனிதத் தன்மையைக் கடந்து நிற்பதாகும். என்னுடைய இந்த வார்த்தைகளை நீங்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்; உங்களது புரிதல் மிகவும் மேலோட்டமானதாக இருக்கிறது. நான் எல்லா தேசங்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் எப்படி மிகச்சரியாகத் தோன்றுவேன்? இன்று மாம்சத்திலா? இல்லை! காலம் வரும்போது, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தேசத்திலும் நான் என் சரீரத்தில் தோன்றுவேன். அந்நிய தேசத்தினர்களை நீங்கள் மேய்க்க வேண்டிய காலம் இன்னும் வரவில்லை. அந்தச் சமயத்தில் நீங்கள் அவர்களை மேய்ப்பதற்காக மாம்சத்திலிருந்து வெளியே வந்து சரீரத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். இதுதான் சத்தியம், ஆனால் ஜனங்கள் கற்பனை செய்வது போல் “மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவது” இது அல்ல. குறித்த காலத்தில், நீங்கள் உங்களை அறியாமலேயே மாம்சத்தை விட்டு வெளியே வந்து ஆவிக்குரிய உலகில் பிரவேசித்து என்னுடன் அனைத்து தேசங்களையும் ஆளுகை செய்வீர்கள். காலம் இன்னும் வரவில்லை. நீங்கள் மாம்சத்தில் இருக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும்போது, நீங்கள் மாம்சத்தில் இருப்பீர்கள் (என் கிரியையின் தேவைகளுக்கு ஏற்றபடி, இப்போது நீங்கள் சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும், இன்னும் மாம்சத்தில் வாழ வேண்டும், எனவே நீங்கள் மாம்சத்தில் செய்ய வேண்டிய காரியங்களை என்னுடைய படிகளின்படி இன்னும் செய்ய வேண்டும்; செயலற்ற நிலையில் காத்திருக்க வேண்டாம், ஏனெனில், இது தாமதத்தை ஏற்படுத்தும்). நீங்கள் சரீரத்தில் திருச்சபையின் மேய்ப்பர்களாகச் செயல்படும்படி, எனக்குத் தேவைப்படும் போது, நீங்கள் மாம்சத்திலிருந்து வெளியே வந்து, உங்கள் சிந்தனையைத் தூக்கி எறிந்துவிட்டு, என்னை முழுமையாக நம்பி வாழ வேண்டும். என் வல்லமையிலும் என் ஞானத்திலும் விசுவாசத்தைக் கொண்டிருங்கள். அனைத்தும் என்னால் தனிப்பட்ட முறையில் செய்து முடிக்கப்படும். நீங்கள் காத்திருந்து அனுபவிக்க மட்டுமே வேண்டும். எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும், மேலும் நீங்கள் ஒரு வற்றாத மற்றும் முடிவில்லாத வழங்கலைப் பெற்றிருப்பீர்கள். அந்த நாள் வரும்போது, நான் இதை எப்படிச் செய்கிறேன் என்ற கொள்கையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், என் அற்புதமான செயல்களை நீங்கள் அறிவீர்கள், மேலும் நான் எப்படி என் முதற்பேறான குமாரர்களை மீண்டும் சீயோனுக்குக் கொண்டு வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உண்மையிலேயே, இது நீங்கள் கற்பனை செய்வது போல் சிக்கலானது அல்ல, ஆனால் நீங்கள் நினைப்பது போல் இது எளிதானதும் அல்ல.

நான் இதைச் சொல்லும்போது, என் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாமல் மேலும் குழப்பமடைகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எதையும் புரிந்து கொள்ள முடியாதபடி நான் முன்பு சொல்லியிருப்பவற்றைக் கலந்து விடுவீர்கள், மேலும் வேறு வழியே இல்லை என்பதாகத் தோன்றும். இருப்பினும், கவலைப்பட வேண்டாம். நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன். நான் சொல்கிற எல்லாவற்றிற்கும் அர்த்தம் உள்ளது. நான் ஏற்கனவே உள்ள பொருட்களை மீண்டும் ஒன்றுமில்லாமல் போகச் செய்ய முடியும் மற்றும் ஒன்றுமில்லாமையிலிருந்து பொருட்களைப் பெருகச் செய்ய முடியும் என்று நான் சொல்லியிருக்கிறேன். மனுஷனுடைய கற்பனையில், மாம்சத்திலிருந்து சரீரத்திற்குள் பிரவேசிக்க, ஒருவன் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட வேண்டும். கடந்த காலத்தில், நான் இந்த முறையைப் பயன்படுத்தினேன் மற்றும் எனது மகத்தான அற்புதத்தை வெளிப்படுத்தினேன், ஆனால் இன்றைய நாளனது கடந்த காலத்தைப் போல இல்லை. நான் உங்களை மாம்சத்திலிருந்து நேரடியாகச் சரீரத்திற்குள் அழைத்துச் செல்வேன். இது இன்னும் மிகப் பெரிய அடையாளம் மற்றும் அற்புதம் இல்லையா? இது என்னுடைய சர்வவல்லமையின் மாபெரும் வெளிப்பாடல்லவா? நான் எனக்கான திட்டத்தை வைத்திருக்கிறேன், மேலும் நான் எனக்கான நோக்கங்களை வைத்திருக்கிறேன். என் கரத்தில் இல்லாதவன் யார்? நான் செய்யும் கிரியையை நான் அறிகிறேன். பொதுவாகவே, இன்று கிரியை செய்யும் எனது வழிமுறைகள் கடந்த காலத்திலிருந்து வேறுபட்டவைகளாகும். காலங்களின் மாற்றத்திற்கு ஏற்ப எனது கிரியை செய்யும் வழிமுறைகளை நான் மாற்றிக் கொள்கிறேன். நான் சிலுவையில் அறையப்பட்டபோது, அது கிருபையின் காலமாக இருந்தது, ஆனால் இப்போது, இது கடைசி காலமாக இருக்கிறது. என் கிரியையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இது கடந்த காலத்தில் இருந்த அதே வேகத்தில் செல்லாது, மேலும் இது கடந்த காலத்தை விட மெதுவாகவும் இருக்காது. மாறாக, கடந்த காலத்தில் இருந்ததை விட மிக வேகமாக முன்னேறிச் செல்கிறது. அதை வெறுமனே விவரிக்க எந்த வழியும் இல்லை, மேலும் பல சிக்கலான செயல்முறைகளுக்கான தேவையும் இல்லை. நான் எதையும் செய்ய சுதந்திரமாக இருக்கிறேன். என்னுடைய சித்தம் எப்படி நிறைவேற்றப்படும் மற்றும் நான் உங்களை எவ்வாறு பரிபூரணமாக்குவேன் என்பதைத் தீர்மானிக்க என்னிடமிருந்து அதிகாரமான ஒரு வார்த்தை மட்டுமே தேவைப்படுகிறது என்பது உண்மையல்லவா? நான் சொல்வதெல்லாம் நிச்சயம் நிறைவேறும். கடந்த காலத்தில், நான் பாடுபடுவேன் என்று அடிக்கடி சொன்னேன், நான் முன்பு அனுபவித்திருந்த பாடுகளைக் குறிப்பிட நான் ஜனங்களை அனுமதிக்கவில்லை; இதைக் குறிப்பிடுவது எனக்கு எதிராகத் தூஷணம் செய்வதாகும். நானே தேவன் என்பதால், எனக்கு எந்தப் பாடுகளும் இருப்பதில்லை என்பதால் தான் ஆகும்; இந்தப் பாடுகளை நீங்கள் குறிப்பிடும் போது நீங்கள் ஜனங்களை அழ வைக்கிறீர்கள். வருங்காலத்தில் பெருமூச்சும் இருக்காது, கண்ணீரும் இருக்காது என்று நான் சொல்லியிருக்கிறேன். இது இந்த அம்சத்திலிருந்து விளக்கப்பட வேண்டும், பின்னரே எனது வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். “மனுஷர்களால் இந்தப் பாடுகளை வெறுமனே தாங்க முடியாது” என்பதன் அர்த்தம் என்னவென்றால், என்னால் அனைத்து மனுஷீக எண்ணங்களிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் விடுபட்டு, மாம்சத்தின் உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு, உலகப் பிரகாரமாக இருப்பதற்கான அனைத்து தடயங்களிலிருந்தும் விடுபட்டு, மாம்சத்தை விட்டு வெளியேற‌ முடியும், மற்றும் எல்லோரும் என்னை மறுக்கும்போதும் கூட என்னால் நிலை நிற்க முடியும் என்பதாகும். நான் ஒரே தேவன் என்பதை நிரூபிக்க இது போதுமானது. “ஒவ்வொரு முதற்பேறான குமாரனும் மாம்சத்திலிருந்து ஆவிக்குரிய உலகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்; என்னுடன் ராஜாக்களாக ஆளுகை செய்ய அவர்கள் செல்ல வேண்டிய பாதை இதுவேயாகும்” என்று நான் சொல்லியிருக்கிறேன். இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்னவென்றால், கடந்த காலத்தில் நீங்கள் கற்பனை செய்த விஷயத்தை நீ சந்திக்கும் போது, நீங்கள் அதிகாரப்பூர்வமாக மாம்சத்திலிருந்து வெளியே வந்து, அதிகாரப்பூர்வமாக பிரபுக்களையும் ராஜாக்களையும் நியாயந்தீர்ப்பதற்கு சரீரத்திற்குள் பிரவேசிப்பீர்கள். இந்த நேரத்தில் நடக்கும் விஷயங்களின் அடிப்படையில் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இருப்பினும், நீங்கள் கற்பனை செய்வது போல் இது சிக்கலானது அல்ல—இது ஒரு நொடியில் செய்யப்படும். நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் பாடுபட வேண்டிய அவசியமும் இல்லை (ஏனெனில், பூமியில் உங்கள் பாடுகளும் கஷ்டங்களும் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டன, மேலும் நான் இனிமேல் என் முதற்பேறான குமாரர்களைக் கையாள மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்). நீங்கள் உங்களை அறியாமலேயே ஆவிக்குரிய உலகில் பிரவேசிப்பீர்கள் என்று சொல்லப்பட்ட உண்மையின்படியே, முதற்பேறான குமாரர்கள் தங்களது ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். இதுவே என் இரக்கம் மற்றும் கிருபை என்று ஏன் சொல்கிறேன்? ஒருவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின்னரே ஆவிக்குரிய உலகில் பிரவேசிக்க முடிந்தால், அது இரக்கமாகவும் கிருபையாகவும் இருப்பதிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகும். எனவே இதுவே எனது இரக்கம் மற்றும் கிருபையின் மிகத் தெளிவான வெளிப்பாடாகும், மேலும், இது எனது முன்னறிவிப்பையும், எனது ஜனங்களைத் தெரிந்தெடுப்பதையும் வெளிப்படுத்துகிறது. எனது ஆட்சிமுறை ஆணைகள் எவ்வளவு கடுமையானவைகளாக இருக்கின்றன என்பதைக் காட்ட இது போதுமானதாக உள்ளது. நான் யாரையெல்லாம் விரும்புகிறேனோ, அவர்களுக்குக் கிருபையுள்ளவராக இருப்பேன், நான் யாரையெல்லாம் விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கமுள்ளவராக இருப்பேன். யாரும் வாதிடவோ சண்டையிடவோ கூடாது. இவை அனைத்தையும் நானே தீர்மானிப்பேன்.

ஜனங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது, மேலும் அவர்கள் தங்களால் மூச்சுவிட முடியாத வரை தங்களைத் தாங்களே பாரப்படுத்திக் கொள்கிறார்கள், ஆனாலும், தங்களைத் தாங்களே கட்டி வைப்பவர்கள் அவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜனங்களின் சிந்தனை உண்மையில் வரம்புக்குட்பட்டதாய் இருக்கிறது, எனவே அவர்கள் மனுஷீகச் சிந்தனை மற்றும் கருத்துக்களை அகற்ற வேண்டும். எனவே, எல்லாவற்றையும் கட்டுப்படுத்த, எல்லாவற்றையும் நிர்வகிக்க நான் மாம்சத்திலிருந்து வெளியே வந்து ஆவிக்குரிய உலகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். எல்லா ஜனங்களையும் எல்லாத் தேசங்களையும் ஆளுகை செய்வதற்கும் என் சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் இதுதான் ஒரே வழியாகும். அது வெகு தொலைவில் இல்லை. உங்களுக்கு என் சர்வவல்லமையில் விசுவாசமில்லை, நான் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. நான் ஒரு மனுஷன் மட்டுமே என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மேலும் எனது தெய்வீகத் தன்மையை உங்களால் பார்க்கவே முடிவதில்லை. எப்பொழுதெல்லாம் நான் நிறைவேற்ற விரும்புகிறேனோ அப்போது காரியங்கள் நிறைவேறும். இவையனைத்திற்கும் என் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தை போதுமானதாகும். நான் சமீபத்தில் சொல்லியிருப்பதிலும், எனது ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் எனது மனிதத்தன்மையின் அம்சத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறீர்கள், ஆனால் எனது தெய்வீகத் தன்மையின் அம்சத்திற்கு நீங்கள் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அதாவது, எனக்கும் சிந்தனை மற்றும் கருத்துக்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எனது எண்ணங்களும், கருத்துக்களும் மற்றும் மனமும், எனது ஒவ்வொரு அசைவும், நான் செய்யும் அனைத்தும் மற்றும் நான் பேசும் அனைத்தும் தேவனுடைய முழுமையான வெளிப்பாடு என்பதை நான் சொல்லியிருக்கிறேன். இவை அனைத்தையும் நீங்கள் மறந்து போயிருக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் குழப்பத்திலுள்ள மனுஷர்கள்! என் வார்த்தைகளின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. நான் சொல்லியிருப்பதிலிருந்து என் இயல்பான மனிதத் தன்மையின் அம்சத்தைப் பார்க்க நான் உங்களை அனுமதித்திருக்கிறேன் (உண்மையில், என் அன்றாட வாழ்க்கையில் எனது இயல்பான மனிதத்தன்மையைப் பார்க்க நான் உங்களை அனுமதித்திருக்கிறேன், ஏனென்றால், இந்தக் காலக்கட்டத்தில் நான் கூறியவற்றிலிருந்து என்னுடைய இயல்பான மனிதத்தன்மையின் அம்சத்தை நீங்கள் இன்னும் புரிந்து கொள்வதில்லை), ஆனாலும் என் இயல்பான மனிதத்தன்மையை நீங்கள் புரிந்து கொள்வதில்லை, மேலும், நீங்கள் எனக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒன்றைப் பிடித்துக் கொள்ள முயற்சிக்கிறீர்கள், மேலும் நீங்கள் என் முன் கட்டுப்பாடற்றவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் குருடர்கள்! நீங்கள் அறிவில்லாதவர்கள்! நீங்கள் என்னை அறிவதில்லை! நான் இவ்வளவு நேரம் வீணாகப் பேசியிருக்கிறேன்! நீங்கள் என்னை ஒருபோதும் அறிவதில்லை, மேலும் எனது இயல்பான மனிதத் தன்மையை முழுமையான தேவனுடைய ஒரு பகுதியாக நீங்கள் கருதுவதில்லை! என்னால் எப்படிக் கோபப்படாமல் இருக்க முடியும்? என்னால் எப்படி மீண்டும் இரக்கமுள்ளவராக இருக்க முடியும்? கீழ்ப்படியாத இந்தப் பிள்ளைகளுக்கு என் கோபத்தால் மட்டுமே என்னால் பதிலளிக்க முடியும். நீங்கள் மிகவும் கர்வமுள்ளவர்கள், நீங்கள் என்னை ஒருபோதும் அறிவதில்லை! நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறீர்கள்! என்னால் தவறு செய்ய முடியுமா? மனுவுருவாவதற்கு நான் எந்த மாம்ச சரீரத்தையாவது கவனக் குறைவாகத் தேர்ந்தெடுப்பேனா? எனது மனிதத் தன்மையும் எனது தெய்வீகத் தன்மையும் முழுமையான தேவனை உருவாக்கும் இரண்டு பிரிக்க முடியாத பகுதிகளாய் இருக்கின்றன. இப்போது நீங்கள் இதைப் பற்றி முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும்! எனது வார்த்தைகள் ஏற்கனவே அவற்றின் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன, மேலும் எனது வார்த்தைகளுக்கு மிகவும் நீண்ட விளக்கமளிக்க முடியாது!

முந்தைய: அத்தியாயம் 97

அடுத்த: அத்தியாயம் 99

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக