பாதை … (5)
கடந்த காலத்தில், யாருக்கும் பரிசுத்த ஆவியானவரைத் தெரியாது, பரிசுத்த ஆவியானவர் நடந்துவந்த பாதையையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். அதனால்தான் ஜனங்கள் எப்போதும் தேவனுக்கு முன்பாகத் தங்களையே மூடர்களாக்கிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட தேவனை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் ஆவியானவரை அறிந்திருக்கவில்லை என்றும், அவர்களின் விசுவாசம் தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் இருக்கிறது என்றும் சொல்வது சரியானது. தெளிவாகக் கூற வேண்டுமானால், ஜனங்கள் தேவனைப் புரிந்து கொள்வதில்லை; மேலும் அவர்களின் வாய்கள் அவர்கள் அவரை நம்புவதாகச் சொன்னாலும், பொதுவாகத் தங்கள் நடத்தையின் அடிப்படையில், அவர்கள் தங்களைத்தானே நம்புகிறார்கள், தேவனை அல்ல. எனது சொந்த உண்மையான அனுபவங்களில், மனுவுருவான தேவனைக் குறித்து தேவன் சாட்சியளிக்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன், மேலும் வெளியில் இருந்து காணும்போது ஜனங்கள் தேவனுடைய சாட்சியை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது, தேவனுடைய ஆவியானவர் முற்றிலும் பிழை இல்லாதவராக இருக்கிறார் என அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்பதை அரிதாக மட்டுமே சொல்ல முடியும். எவ்வாறாயினும், ஜனங்கள் விசுவாசிப்பது இந்த ஆள்தத்துவத்தையும் அல்ல, தேவனுடைய ஆவியானவரையும் அல்ல, மாறாக, தங்களது சொந்த உணர்வுகளையே என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்களை மட்டும் நம்புவதில்லையா? நான் சொல்வது உண்மை. நான் ஜனங்களை முத்திரை குத்தவில்லை, ஆனால் நான் தெளிவுபடுத்த வேண்டிய ஒன்று உள்ளது: இந்நாள்வரை வழிநடத்தப்பட்டு இருக்கிற ஜனங்கள், தெளிவுள்ளவர்களாக இருந்தாலும் சரி குழப்பமடைந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்பட்டவர்களாக உள்ளனர். இது ஜனங்கள் ஏதோ ஒன்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக அல்ல. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய விசுவாசத்தைக் கட்டாயப்படுத்துவது பற்றி நான் முன்பு குறிப்பிட்டதற்கு இது ஓர் உதாரணம்; இதுவே பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் வழியாகும், மேலும் இதுவே பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாதையும் ஆகும். பொதுவாக, ஜனங்கள் யாரை விசுவாசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு ஒரு விதமான உணர்வை பலமாகத் தந்து, அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் தேவனை விசுவாசிக்கும்படி செய்கிறார். நீ விசுவாசிப்பது அப்படித்தான் அல்லவா? தேவன் மீதான உன் விசுவாசம் ஒரு விசித்திரமான விஷயம் என்பதை நீ உணர்வதில்லையா? இந்த போக்கிலிருந்து தப்பிக்க இயலாததாகிய, வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதாக இதை நீ நினைக்கவில்லையா? இதைப் பற்றி சிந்திக்க நீ எந்த முயற்சியும் எடுக்கவில்லையா? எல்லா அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் காட்டிலும் இது மிகப் பெரியதல்லவா? பல முறை தப்பிக்க வேண்டும் என்ற தூண்டுதல் உனக்கு இருந்தாலும்கூட, உன்னை ஈர்க்கும் மற்றும் உன்னை விலகிச் செல்லத் தயங்க வைக்கும் வல்லமையுள்ள ஜீவ பலம் எப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நீ இதுபோன்ற சூழ்நிலைகளில் இருப்பதைக் காணும்போது, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நீ நாள் முழுவதும் கண்ணீர்விட்டு அழவும் மற்றும் தேம்பி அழவும் ஆரம்பிப்பாய். உங்களில் சிலர் வெளியேற முயற்சி செய்கிறீர்கள், ஆனால் நீ செல்ல முயற்சிக்கும்போது, அது உன் இருதயத்தில் ஒரு கத்தி குத்துவதைப் போன்ற உணர்வாக இருக்கிறது, உன் ஆத்துமா ஏதோ சில பூமிக்குரிய பிசாசால் உன்னிடமிருந்து எடுக்கப்பட்டது போல் உணர்வை ஏற்படுத்தி, உன் இருதயத்தை அமைதியற்றதும் மற்றும் சமாதானம் இல்லாததுமாக ஆக்கிவிடுகிறது. அதன் பிறகு, நீ உதவியற்றவனாய், உன்னைப் பெலப்படுத்தி தேவனிடத்திற்குத் திரும்பாமல் இருக்க முடியாது. … நீ இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லையா? தங்கள் இருதயங்களைத் திறக்கக் கூடிய, இளைய சகோதர சகோதரிகள்: “ஆம்! அதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன், அதைப் பற்றி நினைக்கும் போது, அது என்னை வெட்கப்பட வைக்கிறது!” என்று கூறுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என் சொந்த அனுதின வாழ்க்கையில், என் இளைய சகோதர சகோதரிகளை எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதுவதில் நான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர்களுக்குள் மிகவும் அப்பாவித்தனம் இருக்கிறது—அவர்கள் மிகவும் தூய்மையானவர்களும் அழகானவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் என் சொந்தத் தோழர்கள் போன்றவர்களாவர். அதனால்தான் எங்கள் கருத்துக்கள் மற்றும் எங்கள் திட்டங்களைப் பற்றி பேசுவதற்காக எனது எல்லா நெருக்கமானவர்களையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நான் எப்போதும் தேடுகிறேன். தேவனுடைய சித்தம் எங்களில் நிறைவேற்றப்படுவதாக, அதனால் நாங்கள் அனைவரும், எங்களுக்கு இடையே எந்தத் தடையும் அல்லது இடைவெளியும் இல்லாமல் மாம்சமும் இரத்தமும் போல இருக்கிறோம். நாம் அனைவரும் தேவனிடத்தில் ஜெபம் செய்வோம்: “தேவனே! உமக்குச் சித்தமானால், எங்கள் இதயத்தில் உள்ள விருப்பங்களை நாங்கள் நிறைவேற்றும்படிக்கு, நீர் எங்களுக்குச் சரியான சூழலைத் தருமாறு நாங்கள் கெஞ்சுகிறோம். இளைஞர்களாகவும், பகுத்தறிவில் குறைந்தவர்களாகவும் இருக்கும் எங்கள் மீது நீர் இரக்கம் காட்டுவீராக, மேலும் எங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் பலத்தைப் பயன்படுத்த அனுமதிப்பீராக!” இது தேவனுடைய சித்தம் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் நீண்ட காலத்திற்கு முன்பு நான் தேவனிடத்தில் ஜெபித்துச் சொன்னேன்: “பிதாவே! உம்முடைய சித்தம் விரைவில் பூமியின் மீது செய்யப்பட வேண்டும் என்று விரும்பி, நாங்கள் இடைவிடாமல் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். நான் உமது சித்தத்தை நாடுகிறேன். நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்து, என்னில் உமது கட்டளையை விரைந்து நிறைவேற்றுவீராக. உமது சித்தம் விரைவில் நிறைவேறும் என்றால், எங்களிடையே ஒரு புதிய பாதையைத் திறக்க நான் தயாராகவும் இருக்கிறேன்! உமது கிரியை விரைவில் நிறைவேறுவதாக என்று மட்டுமே நான் கேட்கிறேன், எந்த விதிகளும் அதைத் தடுக்க முடியாது என்று நான் நம்புகிறேன்!” இன்று தேவனுடைய கிரியை இத்தகையதாய் இருக்கிறது; பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்கிற பாதையை நீ பார்ப்பதில்லையா? ஒவ்வொரு முறையும் நான் மூத்த சகோதர சகோதரிகளைச் சந்திக்கும் போது, எனக்கு இந்த விவரிக்க முடியாத அடக்குமுறை உணர்வு இருக்கிறது. நான் அவர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் சமுதாயத்தின் துர்நாற்றமாக இருப்பதைக் காண்கிறேன்; அவர்களது மதக் கருத்துக்கள், விஷயங்களைக் கையாளும் அவர்களது அனுபவம், அவர்கள் பேசும் விதம், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் பல—இவை அனைத்தும் பெரிதும் எரிச்சலூட்டுகின்றன. அவர்கள் “ஞானம்” நிறைந்தவர்கள் என்று கூறப்படுகிறது. நான் எப்போதும் என்னால் முடிந்தவரை அவர்களிடமிருந்து விலகி இருக்கிறேன், ஏனென்றால் தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, உலகில் வாழ்வதற்கான தத்துவங்களில் நான் பழகினவர் அல்ல. நான் இந்த ஜனங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் என்னை சோர்வடையச் செய்கிறார்கள், என் தலை வியர்வையால் மூடப்பட்டிருக்கிறது; சில நேரங்களில் நான் சுவாசிக்க முடியாமல் மிகவும் ஒடுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எனவே, இந்த ஆபத்தான தருணத்தில், தேவன் எனக்கு ஒரு மிகப்பெரிய வழியைக் கொடுக்கிறார். ஒருவேளை இது என்னுடைய தவறான எண்ணமாகக் கூட இருக்கலாம். தேவனுக்கு எது நன்மையானது என்பதை மட்டுமே நான் கவனிக்கிறேன்; தேவனுடைய சித்தத்தைச் செய்வதே மிகவும் முக்கியமானதாகும். நான் இந்த ஜனங்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன், ஆனால் நான் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று தேவன் கேட்கும் பட்சத்தில், நான் இன்னும் கீழ்ப்படிகிறேன். அவர்கள் வெறுக்கத்தக்கவர்கள் என்பதற்காக அல்ல, மாறாக அவர்களின் “ஞானம்,” கருத்துக்கள் மற்றும் உலகில் வாழ்வதற்கான தத்துவங்கள் ஆகியவை மிகவும் அருவருப்பானவை என்பதற்காகவே ஆகும். நான் தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற இருக்கிறேன், அவர்கள் எப்படி கிரியை செய்கிறார்கள் என்பதை அறிவதற்கு அல்ல. தேவன் ஒருமுறை என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, “பூமியில், உன் பிதாவின் சித்தத்தைச் செய்யவும் அவருடைய கட்டளையை நிறைவேற்றவும் மட்டுமே நாடு. வேறு எதுவும் கவலையுறச் செய்ய வேண்டாம்.” இதை நினைப்பது எனக்குக் கொஞ்சம் சமாதானம் தருகிறது. ஏனென்றால் மனித விவகாரங்கள் எப்போதும் எனக்கு மிகவும் சிக்கலானதாகத் தெரிகின்றன; அவைகளுக்காக நான் என் தலையை உருட்டிக்கொள்ள முடியாது, என்ன செய்வது என்றும் எனக்கு ஒருபோதும் தெரிவதில்லை. ஆகவே, அநேக முறை இதனால் நான் கலக்கமடைந்து மனிதகுலத்தை வெறுத்தேன்; ஜனங்கள் ஏன் மிகவும் சிக்கலானவர்களாக இருக்க வேண்டும்? அவர்களால் ஏன் எளிமையாக இருக்க முடியவில்லை? ஏன் மிகவும் புத்திசாலியாக இருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்? நான் ஜனங்களைச் சந்திக்கும் போது, அதன் பெரும்பகுதியானது எனக்கான தேவனுடைய கட்டளையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. அது அப்படி இல்லாத சில சமயங்கள் இருந்திருக்கலாம், ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில் என்ன மறைந்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
பல முறை நான் என்னுடன் கூட இருக்கிற சகோதர சகோதரிகளிடம் தங்கள் முழு இருதயத்தோடு தேவனை விசுவாசிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்த நலன்களைப் பார்க்காமல், தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். பல முறை நான் தேவனுக்கு முன்பாக வேதனையுடன் அழுதிருக்கிறேன்: ஜனங்கள் ஏன் தேவனுடைய சித்தத்தைக் குறித்து அக்கறையற்று இருக்கிறார்கள்? எந்தக் காரணத்திற்கான ஒரு தடயமும் இல்லாமல் தேவனுடைய கிரியை நிச்சயமாகவே மறைந்துவிட முடியாது? ஏன் என்பதும் எனக்குத் தெரியாது—இது கிட்டத்தட்ட என் மனதில் ஒரு புதிராகிவிட்டது—ஏன் ஜனங்கள் பரிசுத்த ஆவியானவர் நடந்துவந்த பாதையை ஒரு போதும் உணராமல், இன்னும் மற்றவர்களுடன் அவர்கள் கொண்டிருக்கும் அசாதாரண உறவுகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்? இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. பரிசுத்த ஆவியானவருடைய பாதையைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் மனுஷனுடைய கிரியைகளில் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் தேவன் திருப்தி அடைய முடியுமா? இதனால் நான் அடிக்கடி வருத்தப்படுகிறேன். இது ஏறக்குறைய என் பாரமாகிவிட்டது—மேலும் இது பரிசுத்த ஆவியானவரையும் தொந்தரவு செய்கிறது. உன் இருதயத்தில் நீ எந்த நிந்தையையும் உணரவில்லையா? தேவன் நம் ஆவியின் கண்களைத் திறக்கட்டும். தேவனுடைய கிரியைக்குள் பிரவேசிப்பதற்கு ஜனங்களை வழிநடத்துபவராகிய நான் அநேக முறை தேவனிடம் ஜெபித்தேன்: “ஓ பிதாவே! உமது சித்தம் மையமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் உமது சித்தத்தைத் தேடுவேன், நான் உமது கட்டளைக்கு உண்மையுள்ளவராக இருக்க விரும்புகிறேன், அதனால் நீர் இந்த ஜனக் கூட்டத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள இயலும். நீர் எங்களைச் சுதந்திர தேசத்திற்கு அழைத்துச் செல்வீராக, இதனால் நாங்கள் எங்கள் ஆவிகளால் உம்மைத் தொட முடியும், மேலும் எங்கள் இருதயங்களில் உள்ள ஆவிக்குரிய உணர்வுகளை நீர் எழுப்பிவிடுவீராக!” தேவனுடைய சித்தம் நிறைவேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிற பாதையில் நாம் நடக்கும்படிக்கு, அவருடைய ஆவியானவர் நம்மை பிரகாசிப்பிக்கும்படியாக நான் இடைவிடாமல் ஜெபிக்கிறேன்—ஏனென்றால் நான் செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவரின் பாதையாகும். எனக்குப் பதிலாக வேறு யார் இந்தப் பாதையில் நடக்க முடியும்? இதுதான் என் பாரத்தை இன்னும் அதிகமாக்குகிறது. நான் வீழ்ச்சியடைவது போல் உணர்கிறேன், ஆனால் தேவன் தமது கிரியையை ஒருபோதும் தாமதிக்க மாட்டார் என்ற விசுவாசத்தை நான் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அவருடைய கட்டளை நிறைவேறியவுடன் எங்கள் வழிகளைப் பிரித்துக் கொள்வோம். ஆகவே தேவ ஆவியானவருடைய பெலத்தினால்தான் நான் எப்போதும் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறேன். தேவன் செய்ய விரும்புகிற கிரியை ஏதோ இருப்பதைப் போல் உள்ளது, ஆனால் அது என்னவென்று என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் எனக்கு நெருக்கமானவர்களை விட பூமியில் யாரும் சிறந்தவர்கள் அல்ல என்று நான் நம்புகிறேன், அவர்கள் தேவனுக்கு முன்பாக எனக்காக ஜெபிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், அதற்காக நான் அளவற்ற நன்றியுள்ளவராக இருக்கிறேன். சகோதர சகோதரிகள் என்னுடன் சேர்ந்து இதைச் சொல்ல விரும்புகிறேன்: “தேவனே! உம்முடைய கடைசி காலத்தின் ஜனங்களாகிய எங்களுக்குள் உமது சித்தம் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதாக, அதன் மூலம் நாங்கள் ஆவிக்குரிய வாழ்வில் ஆசீர்வதிக்கப்படவும், மேலும் தேவ ஆவியானவருடைய கிரியைகளைப் பார்க்கவும், அவருடைய உண்மையான முகத்தை நோக்கிப் பார்க்கவும் இயலும்!” இந்தக் கட்டத்தை அடைந்தவுடன் நாம் உண்மையாகவே ஆவியானவருடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்வோம், அப்போதுதான் நம்மால் தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ஜனங்களால் அனைத்து சத்தியங்களின் உண்மையான அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும், மனுஷீக எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்துகொள்வதோ அல்லது விளங்கிக்கொள்வதோ அல்ல, மாறாக தேவ ஆவியானவருடைய சித்தத்தினாலாகிய வெளிச்சத்தின்படியே புரிந்துகொள்ள இயலும். இது முற்றிலும் தேவனுடைய கிரியையாகும், இதில் மனுஷீக கருத்துக்கள் எதுவும் இல்லை; இது பூமியில் அவர் தெளிவாகச் செய்ய விரும்பும் செயல்களுக்கான அவரது கிரியைத் திட்டமாகும், மேலும் இது பூமியில் அவரது கிரியையின் கடைசி பகுதியாகும். இந்தக் கிரியையில் நீ சேர விரும்புகிறாயா? நீ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறாயா? நீ பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படவும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பங்குபெறவும் விரும்புகிறாயா?
இன்றைக்கு முக்கியமானது என்னவென்றால், நமது உண்மையான அஸ்திபாரத்திலிருந்து ஆழமாகச் செல்வதுதான். சத்தியம், தரிசனங்கள் மற்றும் ஜீவனுக்குள் நாம் ஆழமாகச் செல்ல வேண்டும்—ஆனால் முதலில் இந்தக் கிரியையின் கட்டத்திற்குள் நுழைவதற்கு நீங்கள் இதற்கு முன்பான எண்ணங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நான் சகோதர சகோதரிகளுக்கு நினைவுபடுத்த வேண்டும். அதாவது, நீ வாழும் முறையை மாற்ற வேண்டும், புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும், ஒரு புதிய வழியைத் தொடங்க வேண்டும். கடந்த காலங்களில் உனக்கு விலையேறப்பெற்றதாய் இருந்ததை நீ இன்னும் பற்றிக்கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்ய முடியாது, மேலும் அவர் உன்னுடைய வாழ்க்கையைப் போஷிப்பது மிகக் கடினமானதாகிவிடும். பின்தொடராதவர்கள் அல்லது பிரவேசிக்காதவர்கள் அல்லது திட்டமிடாதவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் முற்றிலும் கைவிடப்படுவார்கள்—அதாவது அவர்கள் காலத்தால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து சகோதர சகோதரிகளும் என் இருதயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் “புதிய ஊழியர்கள்” தேவனுடன் ஒத்துழைக்கவும், எல்லோருமாக சேர்ந்து இந்தப் பணியை முடிக்கவும் உதவுவார்கள் என்று நம்புகிறேன். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். ஆகவேதான், தேவன் எனக்கு இன்னும் அநேக நெருக்கமானவர்களைக் கொடுப்பார் என்று நம்புகிறேன், அதன் மூலமாக, நான் பூமியின் ஒவ்வொரு மூலைக்கும் நடந்து செல்லவும் முடியும், மேலும் நமக்கு இடையே அதிக அன்பும் இருக்க முடியும். மேலும், நம்முடைய முயற்சிகளின் காரணமாக தேவன் தமது ராஜ்யத்தை விரிவுபடுத்துவார் என்று நான் நம்புகிறேன்; தேவன் அதிகமான வாலிபர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படியாக, நம்முடைய இந்த முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக ஜெபிக்க நாம் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் நாம் நம் வாழ்நாள் முழுவதையும் தேவனுக்கு முன்பாக செலவிடுகிறோம், மேலும் முடிந்த அளவுக்கு தேவனுக்கு நெருக்கமாக இருக்கிறோம். நமக்கிடையில் இனி ஒரு போதும் எதுவும் இருக்கலாகாது, நாம் அனைவரும் இந்தச் சத்தியத்தை தேவனுக்கு முன்பாக ஆணையிட்டுக் கொடுப்போமாக: ஒன்றாகச் சேர்ந்து கடினமாக உழைக்கவும்! முடிவுபரியந்தம் விசுவாசமாக இருக்கவும்! ஒருபோதும் பிரிந்து செல்லாமல், எப்போதும் ஒன்றாக இருக்கவும் வேண்டும்! சகோதர சகோதரிகள் அனைவரும் தேவனுக்கு முன்பாக இந்த வாக்குறுதியை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், இதனால் நம்முடைய இருதயங்கள் ஒருபோதும் மாறாது, மற்றும் நம்முடைய தீர்மானம் ஒருபோதும் அசையாது! தேவனுடைய சித்தத்திற்காக, நான் மீண்டும் சொல்கிறேன்: நாம் கடினமாக உழைப்போம்! நம் முழு பெலத்துடனும் பாடுபடுவோம்! தேவன் நிச்சயமாகவே நம்மை ஆசீர்வதிப்பார்!