அத்தியாயம் 85

எனது சித்தத்தை நிறைவேற்ற நான் பலதரப்பட்ட ஆட்களைப் பயன்படுத்துகிறேன்: நான் யாரை சிட்சிக்கிறானோ அவர்கள் மீது எனது சாபங்கள் பலிக்கும், அதே போல் நான் நேசிப்பவர்கள் மீது எனது ஆசீர்வாதங்கள் பலிக்கும். இப்போது, உங்களில் யார் என்னுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், யார் என்னுடைய சாபங்களை அனுபவிப்பார்கள் என்ற கேள்வி முழுமையாக என்னுடைய ஒரே வார்த்தையைச் சார்ந்துள்ளது; இவை அனைத்தும் எனது பேச்சுகளால் தீர்மானிக்கப்படுகிகின்றன. நான் இப்போது யாரிடம் நல்லவனாக இருக்கிறேனோ அவனுக்கு எப்போதும் எனது ஆசீர்வாதங்கள் வழங்கப்படும் என்பது உனக்குத் தெரியும் (அதாவது, படிப்படியாக என்னை அறிந்து கொள்வது மற்றும் என்னைப் பற்றி அதிகமதிகமாக உறுதியாவது, புதிய வெளிச்சம் மற்றும் வெளிப்பாடுகளைப் பெறுவது மற்றும் எனது கிரியையின் வேகத்துடன் தொடர முடிவது). நான் வெறுத்து ஒதுக்குகிறவர்கள் (இது எனக்குள் இருக்கும் ஒன்று வெளியில் இருந்து பார்க்க முடியாது) என்னுடைய சாபங்களை நிச்சயம் அனுபவிக்கும் மனிதர்கள், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினர்; அதனால், என்னுடைய சபித்தலில் அவர்களுக்கும் பங்குண்டு. யாருடைய தரம் குறைவாக இருக்கிறதைப் பார்ப்பதை என்னால் தாங்க முடியவில்லையோ, யாரை என்னால் பரிபூரணமாக்க அல்லது பயன்படுத்த முடியவில்லையோ, அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இன்னும் இரட்சிக்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் எனது குமாரர்களில் ஒருவராக இருப்பார்கள். யாரேனும் என்னுடைய பண்பு எதுவும் இல்லாமல், ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், என்னை அறியாமல் ஆனால் உற்சாகமுள்ள மனப்பான்மையுடன் இருந்தால், அவன் எனது ஜனங்களில் ஒருவனாக நியமிக்கப்படுவான். என்னுடைய சாபங்களில் பங்கெடுப்பவர்களை இரட்சிப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நான் கருதுகிறேன், அவர்கள் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அவர்களை வெளியேற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன். அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் பிறந்தவர்கள், மேலும் நான் மிகவும் வெறுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இது முதற்கொண்டு, அவர்கள் எனக்கு ஊழியம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி அவர்கள் எனக்குத் தேவையில்லை! அவர்களில் யாரும் எனக்குத் தேவையில்லை! அவர்கள் எனக்கு முன்பாக அழுவதும் பற்கடிப்பதும்கூட எந்தப் பலனையும் தராது; நான் அவர்களில் யாரையும் பார்ப்பதில்லை. நான் அவர்களைத் துரத்துவேன். நீ எந்த மாதிரியான விஷயங்கள்? நீ எனக்கு முன்பாக இருக்கத் தகுதியானவனா? நீ தகுதியானவனா? நீ இன்னும் நல்லவன் போல நடித்துக் கொண்டு பணிவுள்ளவன் போல பாசாங்கு கொண்டிருக்கிறாய்! எண்ணற்ற பொல்லாத கிரியைகளை நீ செய்த பிறகு, நான் உன்னை விட்டு விடுவேனா? அதன் பின்பு, நீ எனக்கு முன்பாக எழுந்தவுடனே, நீ மீண்டும் என்னை மறுக்க ஆரம்பிக்கிறாய். நீ எந்த நல்ல நோக்கத்தையும் எப்போதும் கொண்டிருப்பதில்லை; நீ என்னை ஏமாற்றவே விரும்புகிறாய்! நீ சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியாக இருக்கும் போது உன்னால் உண்மையிலேயே நல்லவனாக மாற முடியுமா? சாத்தியமில்லை! நீ ஏற்கனவே என்னால் சபிக்கப்பட்டிருக்கிறாய், மேலும் நான் உன்னை முழுமையாக நியாயந்தீர்ப்பேன்! எனக்காக முழு இருதயத்துடன், நேர்மையாக, ஒழுக்கமான முறையில் ஊழியம் செய், பின்னர் உன்னுடைய பாதாளக்குழிக்கு திரும்பிச் செல்! எனது ராஜ்ஜியத்தில் உனக்குப் பங்கு வேண்டுமா? நீ கனவு காண்கிறாய்! எவ்வளவு வெட்கங்கெட்டவன்! அருவருப்பான மற்றும் அசுத்தமான உடலுடன், நீ குறிப்பிட்ட அளவு சீர்கேடு அடைந்துவிட்டாய், எனினும் எனக்கு முன்பாக தைரியமாக நிற்கிறாய்! அகன்று செல்! நீ தொடர்ந்து தாமதித்தால், நான் உன்னைக் கடுமையாகத் தண்டிப்பேன்! எனக்கு முன்பாக வக்கிரத்திலும் வஞ்சகத்திலும் ஈடுபடுபவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட வேண்டும். நீ எங்கே ஒளிந்து கொள்ள முடியும்? உன்னை எங்கே மறைத்துக் கொள்ள முடியும்? நீ எவ்வளவு தப்பி ஓடினாலும் அல்லது மறைந்து கொண்டாலும், எனது கட்டுப்பாட்டில் இருந்து உண்மையில் உன்னால் தப்பிக்க முடியுமா? நீ எனக்குச் சரியாக ஊழியம் செய்யவில்லை என்றால், இன்னும் உன்னுடைய ஆயுள் குறுகும்; நீ உடனடியாக முடிக்கப்படுவாய்!

எனது முதற்பேறான குமாரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நான் உங்களுக்கு முழுத் தெளிவோடு சொல்கிறேன், மேலும் நான் உங்களுக்குத் துல்லியமான ஆதாரத்தையும் தருகிறேன். இல்லையெனில், உங்களுக்கான ச் சரியான இடங்களை உங்களால் எடுக்க முடியாது, அதற்குப் பதிலாக உங்கள் இடங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று நீங்களே கண்மூடித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். சிலர் மிகவும் தாழ்மையுள்ளவர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் கட்டுப்பாடற்றவர்களாக இருப்பார்கள்; மேலும் என்னுடைய பண்பு இல்லாதவர்கள், அல்லது தரம் மிகவும் குறைவாக இருப்பவர்கள், அனைவரும் என்னுடைய முதற்பேறான குமாரர்களாக இருக்க விரும்புவார்கள். என்னுடைய முதற்பேறான குமாரர்களால் என்ன வெளிப்படுத்தல்கள் செய்யப்படுகின்றன? முதலாவதாக, அவர்கள் எனது சித்தத்தைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அதைக் கருத்தில் கொள்கிறார்கள். மேலும், இவர்கள் அனைவர் மீதும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார். இரண்டாவதாக, இவர்கள் விடாமுயற்சியுடன் தங்கள் ஆவிக்குள் தேடுகிறார்கள், துன்மார்க்கத்திலிருந்து விலகி, எல்லா நேரங்களிலும் எனது எல்லைகளுக்குள் இருக்கிறார்கள்; இவர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மேலும், இப்படியாகச் செயல்படுவதில், அவர்கள் நடிக்கவில்லை. (அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் செயலை உணர்வதில் கவனம் செலுத்துவதாலும், அவர்கள் மீது உள்ள எனது அன்பை எண்ணிப் பார்ப்பதாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் ஜாக்கிரதையுடன் இருப்பார்கள், மேலும் என்னைக் காட்டிக் கொடுக்கும் அல்லது என்னை மறுதலிக்கும் மனநிலையில் விழுந்து விடுவோமோ என்ற உள்ளார்ந்த பயம் அவர்களுக்கு இருக்கிறது.) மூன்றாவதாக, அவர்கள் எனக்காக முழு இருதயத்துடன் செயல்படுகிறார்கள், தங்கள் முழுவதையும் அர்ப்பணிக்கக் கூடியவர்கள், மேலும் அவர்களின் சொந்த எதிர்கால வாய்ப்புகள், அவர்களின் வாழ்க்கை, அவர்கள் என்ன சாப்பிடுவது, உடுத்துவது, பயன்படுத்துவது, எங்கு வாழ்வது என்பதைப் பற்றிய எந்தவொரு யோசனையையும் ஏற்கனவே ஒழித்துவிட்டார்கள். நான்காவதாக, அவர்கள் தொடர்ந்து நீதியின் மேல் பசி மற்றும் தாகம் கொள்கிறார்கள், மேலும் அவர்கள் மிகவும் குறைபாடுள்ளவர்கள் என்றும், அவர்கள் மிகவும் முதிர்ச்சியடையாதவர்கள் என்றும் நம்புகிறார்கள். ஐந்தாவதாக, நான் முன்பு குறிப்பிட்டது போல், அவர்கள் உலகில் நல்ல பெயரைப் பெற்றிருந்தாலும், உலக மக்களால் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர். எதிர் பாலினத்துடனான அவர்களின் உறவுகளில், அவர்கள் தார்மீக நேர்மையைக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் ஆதாரம், ஆனால் இப்போது என்னால் அவற்றை முழுமையாக உங்களுக்கு வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் எனது கிரியை இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. முதற்பேறான குமாரர்களே, நினைவில் கொள்ளுங்கள்! உனக்குள் இருக்கும் வாழ்க்கை உணர்வுகள், என் மீதான உங்கள் பயபக்தி, எனக்கான உங்கள் அன்பு, என்னைக் குறித்ததான உங்கள் அறிவு, நீங்கள் என்னைத் தேடுவது, உங்கள் விசுவாசம்—இவை அனைத்தும் உங்கள் மீதான எனது அன்பிற்குச் சிறந்த எடுக்காட்டாயிருக்கின்றன. இவை அனைத்தும் நான் உங்களுக்குத் தரும் ஆதாரங்கள், இதனால் நீங்கள் உண்மையிலேயே எனது அன்புக்குரிய குமாரர்களாகி என்னைப் போலவே இருந்து, சாப்பிட்டு, வாழ்ந்து, என்னுடன் இணையற்ற மகிமையான ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.

என்னைத் துன்புறுத்தியவர்களிடமோ, என்னைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்களிடமோ (என் நாமம் சாட்சியாக இருந்ததற்கு முன்பையும் சேர்த்து), என்னை மனிதன் என்று நம்பியவர்களிடமோ அல்லது கடந்த காலத்தில் எனக்கு எதிராக தூஷித்தவர்களிடமோ மற்றும் என்னை அவதூறாகப் பேசியவர்களிடமோ என்னால் இரக்கம் காட்ட முடியாது. அவர்கள் இப்போது எனக்காக மிகவும் உறுதியான சாட்சி பகர வேண்டியிருந்தாலும், அது இன்னும் போதாது. கடந்த காலத்தில் என்னை துன்புறுத்துவது எனக்காக ஊழியம் செய்வதற்கான ஒரு வழியாக இருந்தது, இன்று எனக்காக சாட்சியாக இருந்தவர்கள் இன்னும் என்னுடைய கருவிகளாக இருப்பார்கள். நானே நீதியுள்ள தேவன் என்பதால், நான் மாம்சத்திலிருந்து வெளிப்பட்டு, உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளிலிருந்தும் என்னை வேறு பிரித்திருப்பதால், இன்று என்னால் உண்மையாக பரிபூரணமாக்கப்பட்டவர்கள் மட்டுமே என் உபயோகத்திற்கு ஏற்றவர்கள். நானே தேவன், என்னைச் சுற்றி இருந்த எல்லா மக்களும், விஷயங்களும், பொருட்களும் எனது கரங்களில் உள்ளன. நான் உணர்ச்சியற்றவராக இருக்கிறேன், எல்லாவற்றிலும் நான் நீதியை செயல்படுத்துகிறேன். நான் சிறிதளவு அசுத்தத்தாலும் கறைபடியாத நேர்மையுள்ளவராக இருக்கிறேன். எனது வார்த்தைகளின் அர்த்தம் புரிகிறதா? உங்களாலும் இதை அடைய முடியுமா? எனக்கும் சாதாரண மனிதத்தன்மை இருப்பதாகவும், குடும்பம் மற்றும் உணர்ச்சிகள் இருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள்—ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு என்று உங்களுக்குத் தெரியுமா? நானே தேவன்! நீங்கள் இதை மறந்து விட்டீர்களா? நீங்கள் குழப்பமாக இருக்கிறீர்களா? நீங்கள் இன்னும் என்னை அறியவில்லை!

என்னுடைய நீதி உங்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாதிரியான நபருடனும் நான் கையாளும் விதம் என்னுடைய நீதியையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. என்னோடுகூட கடுங்கோபத்தைக் கொண்டு வருகிற தேவன் நான் என்பதால், என்னைத் துன்புறுத்திய அல்லது நிந்தித்த ஒருவரைக் கூட தண்டிக்கமால் விடமாட்டேன். அத்தகைய கடுமையான தேவையின் கீழ், இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நான் தெரிந்துகொண்டு முன்குறித்தவர்கள் அரிய முத்துக்கள் அல்லது இரத்தினக் கல் போன்றவர்கள்; அவர்கள்அரிதானவர்கள். ஏனென்றால், என்னுடைய ஜனங்களாக இருப்பவர்களை விட, ராஜாக்களாக ஆளுகை செய்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள், இது என்னுடைய வல்லமையையும் என் அற்புதமான கிரியைகளையும் காட்டுகிறது. நான் உங்களுக்குப் பலன் அளிப்பேன் மற்றும் உங்களுக்குக் கிரீடங்களை வழங்குவேன் என்று நான் அடிக்கடி சொல்வேன், மேலும் என்னுடன் முடிவில்லாத மகிமை உள்ளது. பலன்கள், கிரீடங்கள் மற்றும் மகிமை என்று நான் எதைச் சொல்கிறேன்? பலன்கள் என்பது உணவு, உடை அல்லது பயன்படுத்தக்கூடிய பிற பொருட்கள் போன்ற பொருள் சார்ந்த விஷயங்கள் என்ற கருத்தில் ஜனங்கள் உள்ளனர், ஆனால் இது முற்றிலும் காலாவதியான சிந்தனை முறை; அந்தச் சொற்களால் நான் குறிப்பிடுவது இதுவல்ல, மாறாக இது ஒரு தவறான கருத்து. பலன்கள் என்பது இப்போது பெற்ற விஷயங்கள், அவை கிருபையின் ஒரு பகுதியாகும். இருப்பினும், சரீர இன்பங்களுடன் தொடர்புடைய சில பலன்களும் உள்ளன, மேலும் எனக்காக ஊழியம் செய்பவர்களும், ஆனால் நான் இரட்சிக்காதவர்களும் சில பொருளாதார நன்மைகளை அடைய முடியும் (இருப்பினும், அவை இன்னும் எனக்கு ஊழியம் செய்யும் பொருட்கள் மட்டுமே). கிரீடம் என்பது அலுவலகத்தின் சின்னம் அல்ல; அதாவது, அது நீங்கள் அதை அனுபவிக்க நான் உங்களுக்கு வழங்கும் ஒரு பொருள் அல்ல. மாறாக, இது நான் உங்களுக்கு வழங்கும் ஒரு புதிய நாமம், மேலும் உன்னுடைய புதிய நாமத்துக்கு ஏற்ப வாழக்கூடிய யாராக இருந்தாலும் கிரீடத்தைப் பெறுவார், அது என் ஆசீர்வாதங்களைப் பெறுவதாகும். பலன்கள் மற்றும் கிரீடங்கள் ஆசீர்வாதங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடும்போது, அவை வானத்தையும் பூமியையும் போல வேறுபட்டவை. மகிமையை வெறுமனே மனிதக் கருத்துகளால் கற்பனை செய்து பார்க்க முடியாது, ஏனென்றால் மகிமை என்பது ஒரு பொருள் சார்ந்த விஷயம் அல்ல. அவர்களைப் பொறுத்தவரை, இது மிகவும் புலனாகாத கருத்து. அப்படியானால், சரியாக மகிமை என்றால் என்ன? நீங்கள் என்னுடன் சேர்ந்து மகிமையில் இறங்குவீர்கள் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? எனது முழுமையும்—அதாவது நான் என்னவாக இருக்கிறேன், நான் என்ன கொண்டிருக்கிறேன், கிருபை மற்றும் அன்புள்ள தயவு (என் குமாரர்களுக்கு), மற்றும் நீதி, மகத்துவம், நியாயத்தீர்ப்பு, கடுங்கோபம், சபித்தல் மற்றும் எரித்தல் (எல்லா ஜனங்ளுக்கும்)—என்னுடையவரே மகிமை. முடிவில்லாத மகிமை என்னிடத்தில் இருக்கிறது என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனென்றால் என்னுடன் முடிவில்லாத ஞானமும், ஒப்பற்ற மிகுதியும் உள்ளது. எனவே, என்னுடன் மகிமையில் இறங்குவது என்றால், நீங்கள் ஏற்கனவே என்னால் பரிபூரணமாக்கப்பட்டுவிட்டீர்கள் என்றும், நான் என்னவாக இருக்கிறேன், நான் என்ன கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்னாலே முழுமையாக்கப்பட்டு விட்டீர்கள் என்றும், நீங்கள் என்னிடம் பயபக்தியுடன் இருக்கிறீர்கள், என்னை எதிர்க்க மாட்டீர்கள் என்றும் அர்த்தம். நிச்சயமாக இது இப்போது உங்களுக்குத் தெளிவாக புரிந்திருக்கும்!

பூமியில் உள்ள அனைத்து நாடுகளின் பதட்டமான சூழ்நிலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, மேலும் இவர்கள் அனைவரும் எனக்காக ஊழியம் செய்யவும், நான் அவர்களுக்காகக் கொண்டு வரும் எரித்துச் சாம்பலாக்குதலையும் ஏற்றுக் கொள்ளவும் சீராகத் தயாராகிறார்கள். எனது கடுங்கோபமும் எரிச்சலும் வரும்போது, எந்த முன்னறிவிப்பும் இருந்திருக்காது. இருப்பினும், நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், மேலும் அதைப் பற்றி நான் முற்றிலும் தெளிவாக இருக்கிறேன். நீங்கள் எனது வார்த்தைகளைக் குறித்து உறுதியாக இருக்க வேண்டும், மேலும் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்ய நீங்கள் விரைய வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை வழிகாட்டி ஆதரிக்கத் தயாராக இருங்கள். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! சீனா—அதாவது, சீனாவிவிற்குள் உள்ள ஒவ்வொரு நபரும் இடமும்—என் சாபங்களுக்கு உட்பட்டது. எனது வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?

முந்தைய: அத்தியாயம் 84

அடுத்த: அத்தியாயம் 86

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக