அத்தியாயம் 18

தேவனின் எல்லா வார்த்தைகளும் அவருடைய மனநிலையின் ஒரு பகுதியைக் கொண்டிருக்கின்றன. தேவனின் மனநிலையை வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது, அதுவே அவரிடம் எவ்வளவு வளமை உள்ளது என்பதைக் காட்ட போதுமானது. ஜனங்களால் பார்க்கக்கூடியதாகவும் தொடக்கூடியதாகவும் இருப்பது ஒரு குறிப்பிட்ட வரம்பு மட்டுமே, ஜனங்களின் திறனும் அதுவே. தேவனின் வார்த்தைகள் தெளிவாக இருந்தாலும், அவற்றை ஜனங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள்: “ஒரு மின்னலின் பிரகாசத்தில், ஒவ்வொரு மிருகமும் அதன் உண்மையான வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அவ்வாறே, என் வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்ட மனுஷன், முன்பு அவனிடமிருந்த புனிதத்தை மீண்டும் பெற்றிருக்கிறான். ஓ, சீர்கெட்ட பழைய உலகமே! கடைசியில், நீ அசுத்தமான தண்ணீரில் கவிழ்ந்து, நீரினுள் மூழ்கி, சேற்றோடு சேறாகக் கரைந்துவிட்டாய்!” தேவனின் எல்லா வார்த்தைகளும் அவருடைய இருப்பைக் கொண்டிருக்கின்றன, எல்லா ஜனங்களும் இந்த வார்த்தைகளை அறிந்திருந்தாலும், அவற்றின் அர்த்தத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. தேவனின் பார்வையில், அவரை எதிர்ப்பவர்கள் அனைவரும் அவருடைய எதிரிகளே, அதாவது அவர்கள் அசுத்த ஆவிகளைச் சேர்ந்த மிருகங்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து, சபையின் உண்மையான நிலையை ஒருவர் கைக்கொள்ள முடியும். எல்லா மனுஷர்களும் தேவனின் வார்த்தைகளால் ஒளிரூட்டப்படுகின்றனர். மேலும் இந்த வெளிச்சத்தில், அவர்கள் மற்றவர்களை விரிவுரை செய்வதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ அல்லது நேரடியாக வெளியேற்றப்படுவதற்கோ ஆட்படாமல், மற்ற மனுஷ காரியங்களைச் செய்வதற்கு ஆட்படாமல், மற்றவர்கள் காரியங்களைச் சுட்டிக்காட்டாமல் தங்களை ஆராய்கிறார்கள். “நுண்ணிய கண்ணோட்டத்தில்”, இருந்து காண்கையில் அவர்களுக்குள் உண்மையில் எவ்வளவு வியாதி இருக்கிறது என்பதை அவர்கள் மிகத் தெளிவாகக் காண்கிறார்கள். தேவனின் வார்த்தைகளில், ஒவ்வொரு வகையான ஆவியும் வகைப்படுத்தப்பட்டு அதன் அசல் வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது; தேவதூதர்களின் ஆவிகளை உடையவர்கள் மேலும் வெளிச்சமாகவும் ஒளியூட்டலிலும் வளர்கின்றனர், எனவே தேவனின் வார்த்தைகள் “அவை முன்பு கொண்டிருந்த புனிதத்தை மீண்டும் பெற்றிருக்கின்றன.” இந்த வார்த்தைகள் தேவன் அடைந்த இறுதி முடிவை அடிப்படையாகக் கொண்டவை. இப்போதைக்கு, இந்த முடிவை இன்னும் முழுமையாக அடைய முடியவில்லை—இது ஒரு முன்னனுபவம் மட்டுமே, இதன் மூலம் தேவனின் சித்தத்தைக் காணமுடியும். தேவனின் வார்த்தைகளுக்குள் ஏராளமான ஜனங்கள் நொறுங்கிவிடுவார்கள் என்பதையும், எல்லா ஜனங்களின் பரிசுத்தமாக்கலின் படிப்படியான செயல்பாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையும் காண்பிக்க இந்த வார்த்தைகள் போதுமானவை. இங்கே, “சேற்றோடு சேறாகக் கரைந்துவிட்டது” என்பது தேவன் உலகத்தை நெருப்பால் அழிக்கிறார் என்பதுடன் முரண்படவில்லை, மேலும் “மின்னல்” என்பது தேவனின் கோபத்தைக் குறிக்கிறது. தேவன் தனது பெரும் கோபத்தைத் தணிக்க அனுமதிக்கும்போது, உலகம் முழுவதும், எரிமலை வெடிப்பு போன்ற அனைத்து வகையான பேரழிவுகளையும் அனுபவிக்கும். வானத்தில் உயரமாக நின்றுகொண்டு காண்கையில், பூமியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பேரழிவு மனுஷர்கள் அனைவரையும் நெருங்கி வருவதைக் காணலாம். உயரத்திலிருந்து கீழே பார்க்கையில், பூமி அதிர்ச்சிக்கு முந்தைய காட்சிகளைப் போன்ற பல்வேறு காட்சிகளை பூமி முன்வைக்கிறது. திரவ நெருப்பு நிற்காமல் விரைகிறது, எரிமலைக் குழம்பு சுதந்திரமாகப் பாய்கிறது, மலைகள் இடம்மாறுகின்றன மற்றும் குளிர்ந்த ஒளி எல்லாவற்றிலும் மின்னுகிறது. பூமி முழுவதும் நெருப்பில் மூழ்கியுள்ளது. தேவன் தனது கோபத்தைக் கட்டவிழ்த்துவிடும் காட்சி இது, மேலும் இது அவருடைய தீர்ப்பின் நேரமாகும். மாம்சத்தாலும் இரத்தத்தாலும் ஆனவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது. இவ்வாறு, முழு பூமியையும் அழிக்க நாடுகளுக்கிடையேயான போர்களும், ஜனங்களுக்கு இடையிலான மோதல்களும் தேவையில்லை; அதற்குப் பதிலாக, தேவனின் தண்டனைத் தொட்டிலுக்குள் உலகம் “உணர்வுபூர்வமாகத் தன்னைத்தானே அனுபவிக்கும்”. யாராலும் தப்பிக்க முடியாது; ஒவ்வொவரும் இந்த சோதனையை ஒவ்வொருவராகக் கடந்து செல்ல வேண்டும், நிச்சயமாக. அதன் பிறகு, முழு பிரபஞ்சமும் மீண்டும் புனித கதிரொளியில் பிரகாசிக்கும், மேலும் மனுஷர்கள் அனைவரும் மீண்டும் ஒரு புதிய ஜீவிதத்தைத் தொடங்குவார்கள். தேவன் பிரபஞ்சத்திற்கு மேலே ஓய்வெடுப்பார், மேலும் ஒவ்வொரு நாளும் மனுஷர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். பரலோகம் தனிமையாக இருக்காது, ஆனால் பூமி படைக்கப்பட்டதில் இருந்து அது பெறாத உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கும், மேலும் தேவன் ஒரு புதிய ஜீவிதத்தைத் தொடங்கும்போது “ஆறாவது நாள்” வரும். தேவன் மற்றும் மனுஷர்கள் என இருசாரரும் ஓய்விற்குள் நுழைவார்கள், பிரபஞ்சம் இனி கொந்தளிப்பாகவோ அல்லது அசுத்தமாகவோ இருக்காது, ஆனால் புதுப்பிக்கப்படும். இதனால்தான் தேவன் சொன்னார்: “பூமி இனி மரண அசைவில்லாமலும் அமைதியாகவும் இருப்பதில்லை, வானம் இனி பாழடைந்ததாகவும் சோகமாகவும் இருப்பதில்லை.” பரலோக ராஜ்யத்தில், ஒருபோதும் அநீதியோ அல்லது மனுஷ உணர்ச்சிகளோ, அல்லது மனுஷர்களின் எந்தவொரு சீர்கெட்ட மனநிலையோ இருந்ததில்லை, ஏனென்றால் சாத்தானின் இடையூறு அங்கு இருப்பதில்லை. “ஜனங்கள்” அனைவராலும் தேவனின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் பரலோக வாழ்க்கை என்பது மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறது. பரலோகத்தில் உள்ள அனைவருக்கும் ஞானமும் தேவனின் கௌரவமும் உண்டு. பரலோகத்துக்கும் பூமிக்கும் உள்ள வேறுபாடுகள் காரணமாக, பரலோகக் குடிமக்கள் “ஜனங்கள்” என்று அழைக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் அவர்களை “ஆவிகள்” என்று அழைக்கிறார். இந்த இரண்டு சொற்களுக்கும் பிரத்தியேகமான வேறுபாடுகள் உள்ளன—இப்போது “ஜனங்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் சாத்தானால் சீர்கெட்டுள்ளனர், அதே நேரத்தில் “ஆவிகள்” அப்படியில்லை. முடிவில், தேவன் பூமியின் ஜனங்களை பரலோக ஆவிகளின் பண்புகள் கொண்ட மனுஷர்களாக மாற்றுவார், பின்னர் அவர்கள் இனி சாத்தானின் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள். “என் பரிசுத்தம் பிரபஞ்சம் முழுவதும் விரிவடைந்துள்ளது.” “பூமி அதன் ஆதிகால நிலையில் வானத்திற்குச் சொந்தமானது, வானம் பூமியுடன் ஒன்றிணைந்துள்ளது. மனுஷனே வானத்தையும் பூமியையும் ஒன்றிணைக்கும் நூல், மனுஷனின் புனிதத்தன்மை காரணமாக, மனுஷன் புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக, வானம் இனி பூமியிலிருந்து மறைக்கப்படுவதில்லை, பூமி இனி வானத்தை நோக்கி அமைதியாக இருப்பதில்லை.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுதான். இது தேவதூதர்களின் ஆவிகளைக் கொண்ட ஜனங்களைக் குறிக்கும் வகையில் கூறப்படுகிறது, மேலும் இந்தக் கட்டத்தில், “தேவதூதர்களால்” மீண்டும் சமாதானமாக ஒன்றிணைந்து தங்கள் அசல் நிலையை மீண்டும் பெற முடியும், இனி பரலோகம் மற்றும் பூமியின் ராஜ்யங்களுக்கு இடையில் மாம்சத்தால் பிரிக்கப்படமாட்டாது. பூமியிலுள்ள “தேவதூதர்கள்” பரலோகத்திலுள்ள தேவதூதர்களுடன் தொடர்பு கொள்ள முடியும், பூமியிலுள்ளவர்கள் பரலோகத்தின் மர்மங்களை அறிந்து கொள்வார்கள், பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் மனுஷ உலகின் ரகசியங்களை அறிந்து கொள்வார்கள். பரலோகமும் பூமியும் ஒன்றுபடும், அவற்றுக்கு இடையே எந்த தொலைவும் இருக்காது. இதுதான் ராஜ்யத்தை உணர்ந்து கொள்ளும் அழகு. இதைத்தான் தேவன் நிறைவு செய்வார், இது தான் எல்லா மனுஷர்களும் ஆவிகளும் ஏங்குகிற ஒன்று. ஆனால் தேவபக்தி நிறைந்த பூமியில் இருப்பவர்களுக்கு இது எதுவும் தெரியாது. இரட்சகராகிய இயேசு ஒரு வெள்ளை மேகத்தின் மீது வந்து, பூமி மீது “குப்பைகளை” பரப்பிவிட்டு தங்கள் ஆத்துமாக்களை எடுத்துச் செல்வதற்காக அவர்கள் வெறுமனே காத்திருக்கிறார்கள் (இங்கே “குப்பை” என்பது பிரேதங்களைக் குறிப்பிடுகிறது). இது எல்லா மனுஷர்களும் பகிர்ந்து கொள்ளும் ஒரு கருத்து அல்லவா? இதனால்தான் தேவன் சொன்னார்: “ஓ, மத உலகமே! பூமியில் இருக்கும் என் அதிகாரத்தால் அதை எவ்வாறு அழிக்க முடியாமல் போகும்?” பூமியில் தேவனின் ஜனங்கள் பரிபூரணமடைந்ததால், மத உலகம் கவிழ்க்கப்படும். தேவன் பேசிய “அதிகாரம்” என்பதன் உண்மையான பொருள் இதுதான். தேவன் கூறினார்: “என் நாளில், என் நாமத்தை இழிவுபடுத்தும் நபர் யாராவது இருக்கிறார்களா? எல்லா மனுஷர்களும் தங்கள் பயபக்தியான பார்வையை என்னை நோக்கிச் செலுத்துகிறார்கள், அவர்கள் இருதயங்களில் என்னிடம் இரகசியமாகக் கூக்குரலிடுகிறார்கள்.” மத உலகத்தின் அழிவின் விளைவுகள் குறித்து அவர் சொன்னது இதுதான். அவருடைய வார்த்தைகளின் காரணமாக அது தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக முழுமையாக அடங்கும், மேலும் இனி ஒரு வெள்ளை மேகம் இறங்கிவரும் என்றோ அல்லது வானத்தைப் பார்ப்பதற்கோ காத்திருக்காது, மாறாக தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக ஜெயங்கொள்ளும். அதனால்தான், “அவர்கள் இருதயங்களில் என்னிடம் இரகசியமாகக் கூக்குரலிடுகிறார்கள்” என்ற வார்த்தைகளை அவர் கூறினார்—இது தேவன் முழுவதுமாக ஜெயங்கொள்ளவிருக்கும் மத உலகத்திற்கான விளைவு ஆகும். தேவனின் சர்வவல்லமை என்பது, மனுஷர்களின் மிகவும் கலகக்காரர்களான அனைத்து மத ஜனங்களையும் நொறுக்குவதைக் குறிக்கிறது, இதனால் அவர்கள் தேவனை தாங்கள் அறிந்துகொண்டோம் என்ற தங்கள் கருத்துக்களுடன் மீண்டும் ஒருபோதும் ஒன்றமாட்டார்கள்.

தேவனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ராஜ்யத்தின் அழகை முன்னறிவித்திருந்தாலும், அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசியிருந்தாலும், வெவ்வேறு கோணங்களில் விவரித்திருந்தாலும், ராஜ்ய யுகத்தின் ஒவ்வொரு நிலையைப் பற்றியும் அந்த வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் ஜனங்களின் கைக்கொள்ளும் திறன் மிகவும் குறைவு. அவரது வாயிலிருந்து வெளிப்பட்ட அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டுள்ளன, ஆனால் ஜனங்கள் எக்ஸ்-ரேக்களான ஃப்ளோரோஸ்கோப் மூலம் அவற்றைப் பார்க்கவில்லை, இதனால் தெளிவு மற்றும் புரிதலை இழந்துவிட்டார்கள், திகைக்கவும் செய்கிறார்கள். இதுவே மாம்சத்தின் மிகப்பெரிய குறைபாடு. தங்கள் இருதயங்களில் ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினாலும், சாத்தானின் தொந்தரவு காரணமாக அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள், ஆகவே, ஜனங்களுக்குப் புத்துயிர் அளிக்க அவர்களது உணர்ச்சியற்ற மற்றும் மந்தமான இருதயங்களை தேவன் மீண்டும் மீண்டும் தொடுகிறார். சாத்தானின் அசிங்கத்தையே தேவன் அம்பலப்படுத்துகிறார், எனவே அவருடைய வார்த்தைகள் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறதோ, அந்தளவுக்கு சாத்தான் வெட்கப்பட்டுப்போவான், ஜனங்களின் இருதயங்களில் பாரம் குறைந்து, அவர்களது அன்பு தூண்டப்படலாம். தேவன் இப்படித்தான் செயல்படுகிறார். ஏனெனில் சாத்தான் அம்பலப்படுத்தப்பட்டதால் அவன் இனி ஜனங்களின் இருதயங்களை ஆக்கிரமிக்கத் துணிவதில்லை, இதனால் தேவதூதர்கள் இனி துன்புறுத்தப்படுவதில்லை. இந்த வழியில், அவர்கள் முழு இருதயத்தோடும் மனத்தோடும் தேவனை நேசிக்கிறார்கள். இந்த நேரத்தில் மட்டுமே, தேவதூதர்கள் தங்களுக்குள்ளேயே தேவனைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவரை நேசிக்கிறார்கள் என்பதையும் தெளிவாகக் காண முடிகிறது. இந்த பாதையால் மட்டுமே தேவனின் விருப்பத்தை அடைய முடியும். “எல்லா மனிதர்களுடைய இருதயங்களுக்குள்ளும் இருதயங்களுக்குள் இப்போது எனக்கு ஓர் இடம் இருக்கிறது. இனிமேல் நான் மனுஷர்களிடையே வெறுப்பையோ அல்லது நிராகரிப்பையோ சந்திக்க மாட்டேன், ஏனென்றால் என் பெரிய கிரியை ஏற்கனவே நிறைவேறிவிட்டது, இனி அது தடையாக இருக்கப்போவது இல்லை.” மேலே விவரிக்கப்பட்டவற்றின் பொருள் இதுதான். சாத்தானின் துன்புறுத்தலின் காரணமாக, தேவனை நேசிக்க ஜனங்களுக்கு நேரம் இல்லாமல் போகிறது, மேலும் எப்போதும் உலக காரியங்களில் சிக்கி, சாத்தானால் ஏமாற்றப்படுகிறார்கள், இதனால் அவர்கள் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். இதனால்தான் மனுஷர்கள் “வாழ்க்கையின் பல கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர், உலகின் பல அநீதிகளை, மனுஷ ராஜ்யத்தின் பல விசித்திரங்களை அனுபவித்துள்ளனர், ஆனால் இப்போது அவர்கள் என் வெளிச்சத்தில் வாழ்கிறார்கள். நேற்றைய அநீதிகளுக்கு யார் தான் அழவில்லை?” என்று தேவன் கூறியுள்ளார். ஜனங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், துயரத்தில் இருக்கும்போது தங்கள் பங்காளியாக தேவன் இருப்பதைப் போல உணர்கிறார்கள், அவர் தங்களுடன் உரையாடுவதாக உணர்கிறார்கள், மேலும் அந்த நேரத்தில், தங்கள் குறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் திடீரென்று மனுஷ உலகின் வலியை உணர்ந்து இவ்வாறு நினைக்கிறார்கள்: “அது மிகவும் உண்மை—நான் உலகில் எதையும் அனுபவித்ததில்லை. என் தாயின் கருப்பையில் இருந்து வெளியே வந்ததிலிருந்து, நான் மனுஷ வாழ்க்கையை அனுபவித்திருந்தாலும், நான் எதையுமே அடையவில்லை, ஆனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இது எல்லாம் வெறுமையாக உள்ளது! இப்போது நான் சாத்தானால் மிகவும் சீர்கெட்டுப்போயுள்ளேன்! ஓ! தேவனின் இரட்சிப்பிற்காக இல்லையென்றால், நான் மரிக்கும் நேரம் வரும்போது, நான் என் வாழ்நாள் முழுவதும் ஒன்றும் செய்யாமல் வாழ்ந்தவனாக இருப்பேன் அல்லவா? மனுஷ வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தும் வெறுமையாக இருப்பதாக தேவன் சொன்னதில் ஆச்சரியமில்லை. தேவன் இன்று என்னை பிரகாசிப்பிக்காமல் இருந்திருந்தால், நான் இன்னும் இருட்டிலே தான் இருந்திருப்பேன். எவ்வளவு நிர்ப்பாக்கியமான காரியம்!” இந்தக் கட்டத்தில், அவர்களின் இருதயத்தில் ஒரு தவறான எண்ணம் எழுகிறது: “தேவனின் வாக்குதத்தத்தை என்னால் அடைய முடியாவிட்டால், நான் ஜீவிதத்தை எவ்வாறு தொடர்ந்து அனுபவிக்க முடியும்?” இந்த வார்த்தைகளைப் படிக்கும் அனைவருக்கும் ஜெபிக்கும்போது கண்ணீர் வரும். இதுதான் மனுஷ ஆன்மா. யாராவது இதைப் படித்தபின்பும் அவர்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஏற்படவில்லை எனில், அவர்கள் மனரீதியாக சமநிலையற்றவர்களாக இருப்பர். ஒவ்வொரு நாளும், தேவன் எல்லா வகையான ஜனங்களின் நிலைகளையும் வெளிப்படுத்துகிறார். சில நேரங்களில், அவர் அவர்கள் சார்பாக குறைகளைத் தெரிவிக்கிறார். சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட சூழலைக் கடந்து வெற்றிகரமாகச் செல்ல அவர் ஜனங்களுக்கு உதவுகிறார். சில நேரங்களில், ஜனங்களுக்கான “மாற்றங்களை” அவர் சுட்டிக்காட்டுகிறார். இல்லையெனில், தங்கள் வாழ்க்கையில் தாங்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பது பற்றி ஜனங்களுக்குத் தெரியாது. சில நேரங்களில், தேவன் ஜனங்களின் உண்மையான அனுபவங்களைச் சுட்டிக்காட்டுகிறார், சில சமயங்களில், அவர்களின் குறைபாடுகளையும் போதாமைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சில நேரங்களில், அவர் அவர்களுக்கென புதிய தேவைகளைஉருவாக்குகிறார், சில சமயங்களில், அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளும் அளவையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், தேவன் இவ்வாறு கூறியிருக்கிறார்: “பலர் பேசும் இருதயப்பூர்வமான வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன், துன்பத்தின் மத்தியில் அவர்களின் வலி அனுபவங்களைப் பற்றி பலரிடமிருந்து கேட்டிருக்கிறேன்; நான் பலரைக் கண்டிருக்கிறேன், கடுமையான நெருக்கடிகளில் என்னிடம் தங்கள் விசுவாசத்தைத் தவறாமல் முன்வைக்கிறவர்களை; கரடுமுரடான பாதையில் நடந்து செல்வதனால், அதிலிருந்து வெளியேற ஒரு வழியைத் தேடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.” இது நேர்மறை கதாபாத்திரங்களின் விளக்கம். “மனுஷ வரலாற்றின் நாடகம்,” என்பதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நேர்மறையான கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, எதிர்மறையான கதாபாத்திரங்களும் உள்ளன. எனவே, இந்த எதிர்மறை கதாபாத்திரங்களின் அசிங்கத்தை தேவன் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். ஆகவே, “துரோகிகள்” உடனான அவர்களின் வேறுபாட்டின் மூலம்தான் “செம்மையான மனுஷர்களின்” கட்டுப்பாடற்ற விசுவாசமும் அச்சமற்ற தைரியமும் வெளிப்படுகிறது. எல்லா ஜனங்களின் வாழ்க்கையிலும், எதிர்மறையான காரணிகள் உள்ளன, விதிவிலக்கு இல்லாமல், நேர்மறையான காரணிகளும் உள்ளன. எல்லா மனுஷர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்த தேவன் இரண்டையும் பயன்படுத்துகிறார், இதன்மூலம் துரோகிகள் தலையைத் தாழ்த்தி தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வார்கள், இதனால், ஊக்கத்துடன், செம்மையான மனுஷர்கள் தொடர்ந்து விசுவாசமாக இருப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளின் தாக்கங்கள் மிகவும் ஆழமானவை. சில நேரங்களில், ஜனங்கள் அவற்றைப் படித்துச் சிரிப்பார்கள், மற்ற நேரங்களில், அவர்கள் தலையை மௌனமாகத் தொங்க விடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் பழைய காரியங்களை நினைவுகூறுவார்கள், சில சமயங்களில் அவர்கள் அழுதுகொண்டே தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள், சில சமயங்களில் அவர்கள் தடுமாறுகிறார்கள், சில சமயங்களில் அவர்கள் தேடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக, தேவன் பேசும் வெவ்வேறு சூழ்நிலைகளின் காரணமாக ஜனங்களின் எதிர்வினைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு நபர் தேவனின் வார்த்தைகளைப் படிக்கும்போது, சில நேரங்களில் உடனிருப்பவர்கள் அந்த நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தவறாக நினைக்கலாம். இந்த வார்த்தைகளைச் சிந்தித்துப்பாருங்கள்: “எனவே, பூமியில் சர்ச்சைக்குரிய மோதல்கள் இனி இருப்பதில்லை, என் வார்த்தைகள் வெளியானதைத் தொடர்ந்து, நவீன யுகத்தின் பல்வேறு ‘ஆயுதங்கள்’ திரும்பப் பெறப்படுகின்றன.” “ஆயுதங்கள்” என்ற வார்த்தை மட்டும் ஒரு நாள் முழுவதும் சிரிப்பைத் தூண்டக்கூடும், மேலும் தற்செயலாக யாராவது “ஆயுதங்கள்” என்ற வார்த்தையை நினைவுபடுத்தும் போதெல்லாம், அவர்கள் தங்களுக்குள் சிரிப்பார்கள். அப்படித்தானே? இதைப் பார்த்து நீ எப்படி சிரிக்காமல் இருக்க முடியும்?

நீ சிரிக்கும்போது, தேவன் மனுஷரிடத்தில் என்ன விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள மறந்துவிடாதே, மேலும் சபையின் உண்மையான நிலையைப் பார்க்கவும் மறந்துவிடாதே: “எல்லா மனுஷர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிட்டனர். புதிய சூழலில் வசிப்பவர்களை, நல்ல எண்ணிக்கையிலான மக்கள் முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்ததைப் போல சுற்றிப் பார்க்கிறார்கள், இதன் காரணமாக, அவர்களால் இப்போதே தற்போதையச் சூழலுடன் ஒத்துப்போகவோ அல்லது ஒரே நேரத்தில் சரியான பாதையில் நுழையவோ முடிவதில்லை.” இதுவே தற்போது சபையின் உண்மையான நிலையாக இருக்கிறது. எல்லா மனுஷரும் உடனடியாக சரியான பாதையில் நுழைய வேண்டும் என்று எண்ண வேண்டாம். பரிசுத்த ஆவியின் கிரியை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு முன்னேறியவுடன், ஜனங்கள் அனைவரும் அதை உணராமலேயே அதில் நுழைவார்கள். தேவனுடைய வார்த்தைகளின் சாரத்தை நீ புரிந்து கொள்ளும்போது, அவருடைய ஆவி எந்த விதத்தில் கிரியை செய்தது என்பதை நீ அறிவாய். தேவனின் விருப்பம் என்னவென்றால்: “மனிதனின் அநீதியைப் பொறுத்து, ‘கல்வியின்’ பொருத்தமான நடவடிக்கையாக மட்டுமே நான் அதை நிர்வகிக்கிறேன். அனைவரையும் சரியான பாதையில் செல்லச் செய்வது சிறந்தது.” இதுவே தேவனின் பேசும் மற்றும் கிரியை செய்யும் வழி, இது மனுஷரின் குறிப்பிட்ட பழக்கப் பாதையுமாகும். இதற்குப் பிறகு, மனுஷரை மற்றொரு விதமாகக் கூறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்: “என்னுள் இருக்கும் ஆனந்தத்தை மனுஷர்கள் அனுபவிக்க விரும்பவில்லை என்றால், நான் அவர்கள் தங்கள் இருதயத்தை அமைத்துக் கொண்ட வழியில் மட்டுமே சென்று, அவர்களைப் பாதாளத்திற்குள் அனுப்ப முடியும்.” தேவன் முழுமையாய்ப் பேசினார், குறைகூற ஒரு சிறிய வாய்ப்பையும் ஜனங்களுக்கு அவர் விட்டுவைக்கவில்லை. இதுவே தேவனுக்கும் மனுஷனுக்கும் உள்ள கச்சிதமான வித்தியாசம் ஆகும். தேவன் எப்போதும் மனுஷனிடம் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் பேசுகிறார். தேவன் கூறும் எல்லாவற்றிலும், அவரது நேர்மையான இருதயத்தைக் காணலாம், இது ஜனங்கள் தம்முடைய இருதயங்களை அவருக்கு எதிராக அளவிடச் செய்கிறது, மேலும் வானவில் நிறமாலையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அவர் காணும்படி, அவர்களுடைய இருதயங்களை அவரிடம் வெளிப்படுத்த உதவுகிறது. எந்தவொரு நபரின் நம்பிக்கையையும் அன்பையும் தேவன் ஒருபோதும் பாராட்டவில்லை, ஆனால் அவர் எப்போதும் ஜனங்களுக்கான தேவைகளைச் செய்து, அவர்களின் அசிங்கமான பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளார். சிறிய “சரீரவளர்ச்சி” கொண்ட ஜனங்களிடம் என்ன இருக்கிறது என்பதையும், அவர்களிடம் “தேகக்கட்டு” இல்லாமல் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. இந்த குறைபாடுகளை ஈடுசெய்ய அவர்களுக்கு இன்னும் “பயிற்சி” தேவைப்படுகிறது, அதனால்தான் தேவன் தொடர்ந்து ஜனங்கள் மீது “தனது கோபத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்”. ஒரு நாள், மனுஷர்களைப் பற்றிய முழு உண்மையையும் தேவன் வெளிப்படுத்தும்போது, ஜனங்கள் முழுமையடைவார்கள், தேவன் நிம்மதியாக இருப்பார். ஜனங்கள் இனி தேவனை இனிய சொற்களால் ஏமாற்ற மாட்டார்கள், அவர் இனி அவர்களுக்கு “கற்றுக்கொடுக்க” மாட்டார். அப்போதிருந்து, ஜனங்களால் “சொந்தமாக வாழ” முடியும், ஆனால் இப்போது அதற்கு நேரம் இல்லை. ஜனங்களிடையே “போலி” என்று அழைக்கப்படும் விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது, மேலும் பல சுற்று சோதனைகள் தேவைப்படுகின்றன, அவர்களின் “வரிகளை” சரியாக செலுத்த இன்னும் பல “சோதனைச் சாவடிகள்” தேவைப்படுகின்றன. போலி பொருட்கள் இன்னும் இருந்தால், அவை விற்கப்படாமல் பறிமுதல் செய்யப்படும், பின்னர் அந்தக் கடத்தப்பட்ட பொருட்களின் தொகுதி அழிக்கப்படும். காரியங்களைச் செய்ய இது ஒரு சிறந்த வழி அல்லவா?

முந்தைய: அத்தியாயம் 17

அடுத்த: அத்தியாயம் 19

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக