பயிற்சி (6)

இன்று பேதுரு கொண்டிருந்த உணர்வை அடைவதைக் குறித்து கவலைப்படாதீர்கள்—பவுல் கொண்டிருந்த உணர்வைக் கூட பலரால் அடைய முடிவதில்லை. பவுலின் சுயவிழிப்புணர்வு கூட அவர்களிடம் இல்லை. கர்த்தராகிய இயேசுவைத் துன்புறுத்தியதால், கர்த்தரால் கீழே தள்ளப்பட்டாலும், பிற்காலத்தில் கர்த்தருக்காகக் கிரியை செய்யவும் துன்பப்படவும் அவன் தீர்மானித்தான். இயேசு அவனுக்கு ஒரு நோயைக் கொடுத்தார், பின்னர், பவுல் கிரியை செய்யத் தொடங்கியதும் இந்த நோயினால் தொடர்ந்து பாடுபட்டான். அவன் மாம்சத்தில் ஒரு முள் இருப்பதாக ஏன் சொன்னான்? உண்மையில் அந்த முள் ஒரு நோய், அவனைப் பொறுத்தவரை அது ஒரு மரணத்திற்குரிய பலவீனம். அவன் எவ்வளவு கிரியை செய்தும் அல்லது துன்பத்தை அனுபவிக்க அவனுடைய தீர்மானம் எவ்வளவு பெரிதாய் இருந்தும், அவனால் அந்த முள்ளில் இருந்து விடுபட முடியவில்லை. ஆயினும் பவுல் இன்றைய ஜனங்களாகிய உங்களை விட மிகச் சிறந்த குணமுடையவன், உங்களைவிட அவனுக்குச் சுயவிழிப்புணர்வும், அதிக உணர்வும் கூட இருந்தது. பவுல் இயேசுவால் கீழே தள்ளப்பட்ட பிறகு, இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டு, இயேசுவுக்காகப் பிரசங்கிக்கவும், துன்பப்படவும் தொடங்கினான். துன்பத்தைத் தாங்க அவனைத் தூண்டியது எது? பவுல் பெரிய ஒளியைக் கண்டதால், கர்த்தராகிய இயேசுவுக்குச் சாட்சியளிக்க வேண்டும், இனி இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்தக்கூடாது, இனி தேவனுடைய கிரியையை எதிர்க்கக் கூடாது என்று நம்பினான். பவுல் மதத்தின் உயர்மட்ட நபர்களில் ஒருவன். அவன் மிகவும் அறிவுள்ளவன் மற்றும் திறமையானவன், சராசரி ஜனங்களை இழிவாகப் பார்த்தான், பெரும்பாலானவர்களை விட வலுவான ஆளுமை கொண்டிருந்தான். ஆனால் “பெரிய ஒளி” அவன்மீது பிரகாசித்தபின், அவனால் கர்த்தராகிய இயேசுவுக்காகக் கிரியை செய்யவும், தேவனுக்காகத் துன்பப்படுவதற்கான தனது தீர்மானத்தை அமைத்துக் கொள்வதற்கும், தன்னையே தேவனுக்கு ஒப்புக் கொடுப்பதற்கும் அவனால் முடிந்தது, அது அவன் உணர்வைக் கொண்டிருந்தான் என்பதை நிரூபித்தது. அவன் இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்தி, கைது செய்த அந்த நேரத்தில், இயேசு அவனுக்குத் தோன்றி, “பவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டார். பவுல் உடனே கீழே விழுந்து, “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். வானத்திலிருந்த ஒரு சத்தம்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று கூறினது. உடனே, பவுல் விழித்தெழுந்தான், அப்போதுதான் இயேசு, கிறிஸ்து என்றும், அவர் தேவன் என்றும் அவன் அறிந்தான். “நான் கீழ்ப்படிய வேண்டும். தேவன் எனக்கு இந்தக் கிருபையை அளித்துள்ளார், நான் அவரை இப்படித் துன்புறுத்தினேன், ஆனாலும் அவர் என்னைக் கீழே தள்ளவில்லை, என்னை சபிக்கவும் இல்லை. நான் அவருக்காகப் பாடுபடவேண்டும்.” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் துன்புறுத்தியதையும், இப்போது அவருடைய சீஷர்களைக் கொலை செய்துகொண்டிருப்பதையும் மற்றும் தேவன் அவனைச் சபிக்கவில்லை, ஆனால் ஒளியை அவன் மீது பிரகாசிக்கச் செய்தார் என்பதையும் பவுல் உணர்ந்தான். இது அவனைத் தூண்டியது, அவன்: “நான் அவருடைய முகத்தைப் பார்க்கவில்லை என்றாலும், அவருடைய குரலைக் கேட்டேன், அவருடைய பெரிய ஒளியைக் கண்டேன். தேவன் என்னை உண்மையாகவே நேசிக்கிறார் என்பதையும், உண்மையாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதன் மீது இரக்கத்தைக் கொண்டிருக்கிற தேவன் என்பதையும், நித்தியமாக மனிதனுடைய பாவங்களை மன்னிக்கிறார் என்பதையும் இப்போதுதான் நான் உண்மையாகப் பார்க்கிறேன். நான் ஒரு பாவி என்பதை நான் உண்மையிலேயே பார்க்கிறேன்” என்றான். பின்னர், தேவன் பவுலின் வரங்களைக் கிரியை செய்யப் பயன்படுத்தினாலும், இப்போதைக்கு இதை மறந்து விடுங்கள். அந்த நேரத்தில் அவனுடைய தீர்மானம், அவனது இயல்பான மனித உணர்வு, அவனது சுய விழிப்புணர்வு—உங்களால் இந்த விஷயங்களை அடைய இயலாது. இன்று நீங்கள் அதிக ஒளியைப் பெற்றுக் கொள்ளவில்லையா? தேவனுடைய மனநிலையானதுமகத்துவம், கடுங்கோபம், நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை ஆகிய இவற்றில் ஒன்று என்பதைப் பலரும் காணவில்லையா? சாபங்கள், உத்திரவங்கள், மற்றும் புடமிடுதல் ஆகியவை பலமுறை ஜனங்களுக்கு நேரிட்டன, அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள்? தண்டித்து திருத்துதலில் இருந்தும் கையாள்வதிலிருந்தும் நீ என்ன பெற்றுள்ளாய்? கடுமையான வார்த்தைகள், அடித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு உனக்கு பலமுறை நேரிட்டும் நீ அவைகளைக் கவனமாய் கவனிக்கவில்லை. பவுல் கொண்டிருந்த ஒரு சிறிய உணர்வு கூட உன்னிடம் இல்லை, நீ மிகவும் பின்தங்கியவன் அல்லவா? பவுலும் கூட அதிகமானதைத் தெளிவாகக் காணவில்லை. அவன்மீது ஒளி பிரகாசித்தது என்பதை மட்டுமே அவன் அறிந்திருந்தான், ஆனால் அவன் கீழே தள்ளப்பட்டான் என்பதை அறியவில்லை. அவன்மீது ஒளி பிரகாசித்த பின், அவன் தேவனுக்காகத் தன்னை உபயோகப்படுத்த வேண்டும், தேவனுக்காகத் துன்பப்பட வேண்டும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பாதையை ஆயத்தப்படுத்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மேலும் கர்த்தரால் மீட்கப்படும்படி அதிகப் பாவிகளை ஆதாயப்படுத்தவேண்டும் என்று அவன் தனிப்பட்ட முறையில் நம்பினான். இது அவனுடைய தீர்மானமும், அவனுடைய கிரியையின் ஒரே நோக்கமுமாக இருந்தது, ஆனால் அவன் கிரியை செய்தபோது, அவன் வியாதி அப்போதும் அவனை விட்டுப் போகவில்லை, அவன் சாகும் வரையிலும் விடவில்லை. பவுல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கிரியை செய்தான். அவன் மிகவும் துன்பப்பட்டான், பெரும் துன்புறுத்தல்களையும், பல உபத்திரவங்களையும் அனுபவித்தான், இருப்பினும், இவை பேதுருவின் சோதனைகளை விட மிகக் குறைவானதே. நீ பவுலின் உணர்வைக் கூட கொண்டிருக்கவில்லை என்றால் அது எவ்வளவு பரிதாபகரமானது? காரியம் இப்படியிருக்க, தேவன் உங்களிடத்தில் இன்னும் பெரிய கிரியையை எவ்வாறு தொடங்க முடியும்?

சுவிசேஷத்தைப் பரப்பிய போது, பவுல் மிகுந்த வேதனையை அனுபவித்தான். அவன் செய்த கிரியைகள், அவனுடைய தீர்மானம், விசுவாசம், உண்மைப்பற்று, அன்பு, பொறுமை, மற்றும் அந்த நேரத்தில் இருந்த பணிவு, அவன் வாழ்ந்த பல வெளிப்புற விஷயங்கள், இவை இன்றைய ஜனங்களாகிய உங்களைவிட உயர்ந்தவைகளாயிருந்தன. இன்னும் உறுதியாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்குள் இயல்பான உணர்வு இல்லை; நீங்கள் எந்த மனசாட்சியையும் மனிதத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை. உன்னிடத்தில் நிறைய குறையுண்டு! எனவே, பெரும்பாலான நேரம், நீங்கள் வாழ்கின்றவற்றில் இயல்பான உணர்வு எதுவும் இல்லை, சுயவிழிப்புணர்வுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த நேரத்தில் பவுல் சரீர நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவன் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே, தேடிக் கொண்டே இருந்தான்: “உண்மையில் இந்த நோய் என்ன? நான் கர்த்தருக்காக இந்தக் கிரியைகளை எல்லாம் செய்திருக்கிறேன், ஏன் இந்தத் துன்பம் என்னை விட்டு நீங்கவில்லை? ஒருவேளை கர்த்தராகிய இயேசு என்னைச் சோதிக்கிறாரா? அவர் என்னை அடித்தாரா? அவர் என்னை அடித்திருந்தால், நான் அப்போதே மரித்திருப்பேன், அவருக்காக இந்தக் கிரியையை நான் செய்ய முடியாமல் போயிருக்கும், என்னால் அவ்வளவு வெளிச்சத்தைப் பெற்றிருக்க முடிந்திருக்காது. அவர் என் மனவுறுதியையும் உணர்ந்தறிந்தார்.” இந்த நோய் மூலம் தேவன் தன்னைச் சோதிப்பதாக எப்போதும் பவுல் நினைத்தான், அது தன்னுடைய விசுவாசத்தையும் மன உறுதியையும் சோதிக்கிறதாகவே, பவுல் இதைப் பார்த்தான். உண்மையில் அவனுடைய நோயானது கர்த்தராகிய இயேசு அவனைக் கீழே தள்ளியதில் இருந்து எஞ்சிய ஒரு பின்விளைவாகும். அது அவனை உணர்ச்சி ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாக்கியது, மேலும் அவன் கலகத்தன்மையை கட்டுப்பாட்டில் வைத்தது. பவுலின் சூழ்நிலைகளில் நீங்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய மனவுறுதியும் துன்பப்படுவதற்கான திறனும் பவுலுடைய தன்மையுடன் ஒத்ததாயிருக்குமா? இன்று உங்கள் மீது ஏதேனும் நோய் சுமத்தப்பட்டால், அல்லது நீங்கள் ஒரு பெரிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நீங்கள் துன்பப்படுத்தப்பட்டால், நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும். நீங்கள் ஒரு பறவைக் கூண்டில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து தேவையானது வழங்கப்பட்டால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். இல்லையென்றால் நீங்கள் எந்த மனிதத்தன்மையும் இல்லாத ஓநாய்களைப் போலவே இருப்பீர்கள். ஆகவே நீங்கள் ஒரு சிறிய தடையோ அல்லது கஷ்டத்தையோ அனுபவிக்கும் போது அது உங்களுக்கு நல்லது; அதில் உங்களுக்குச் சுலபமான அனுபவம் வழங்கப்பட்டிருந்தால், நீங்கள் கெட்டுப் போயிருப்பீர்கள், பின்னர் நீங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுவீர்கள்? இன்று, நீங்கள் சிட்சிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்பட்டு, சபிக்கப்பட்டதால் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மிகவும் பாடுபட்டதால் பாதுகாக்கப்படுகிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே மோசமான நடத்தையில் விழுந்திருப்பீர்கள். இது வேண்டுமென்றே உங்களுக்குக் காரியங்களை கடினமாக்குவதற்காக அல்ல, மனிதனுடைய சுபாவம் மாற்றுவதற்கு கடினமாகையால், இப்படிச் செய்வது அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே. இன்று, பவுல் கொண்டிருந்த மனசாட்சியோ அல்லது உணர்வோ கூட நீங்கள் கொண்டிருக்கவில்லை, அவனுடைய சுய விழிப்புணர்வும் கூட உங்களிடம் இல்லை. உங்களுக்கு எப்போதும் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், உங்களுடைய ஆவிகளை எழுப்புவதற்கு, நீங்கள் எப்போதும் சிட்சிக்கப்பட்டும், நியாயத்தீர்ப்பளிக்கப்பட்டும் இருக்க வேண்டும். சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உங்கள் வாழ்க்கைக்குச் சிறந்தவையாகும். மற்றும் தேவைப்படும்போது, உங்கள் மீது உண்மைகளின் சிட்சையும் கடந்து வரவேண்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையாக அர்ப்பணிப்பீர்கள். உங்கள் சுபாவங்கள் எப்படியென்றால், ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் சாபம் இல்லாமல், உங்கள் தலைகளை வணங்க நீங்கள் விரும்புவதில்லை, கீழ்ப்படிய விரும்புவதில்லை. உங்கள் கண்கள் முன்னே உண்மைகள் இல்லாமல், எந்தப் பலனும் இருக்காது. நீங்கள் பண்பில் மிகவும் தாழ்ந்தவர்கள் மற்றும் மதிப்பற்றவர்கள்! சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் உங்களை ஜெயங்கொள்ளுவது கடினம், உங்களின் அநீதியையும் கீழ்ப்படியாமையையும் மேற்கொள்வது கடினம். உங்களின் பழைய சுபாவம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. நீங்கள் சிங்காசனத்தில் வைக்கப்பட்டிருந்தால், உங்களுக்குப் பரலோகத்தின் உயரமும், பூமியின் ஆழமும் பற்றி ஒன்றும் தெரியாது, நீங்கள் சென்றிருக்கும் இடம் என்னவென்று தெரியாது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கூட தெரியாது, எனவே சிருஷ்டிப்பின் கர்த்தரை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இன்றைய சமயத்திற்கேற்ற ஆக்கினைத்தீர்ப்பும் சாபங்களும் இல்லாமல், உங்களின் இறுதி நாள் நீண்ட காலத்திற்கு முன்பே வந்திருக்கும். அதாவது உங்கள் விதியைப் பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை, அது இன்னும் உடனடி ஆபத்தில் இருக்குமல்லவா? இந்த சமயத்திற்கேற்ற சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், நீங்கள் எவ்வளவு திமிர்பிடித்தவர்களாக மாறுவீர்கள் அல்லது எவ்வளவு மோசமானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்று யாருக்குத் தெரியும்? இந்த சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உங்களை இன்றைய தினத்திற்குக் கொண்டு வந்துள்ளன, மேலும் அவை உங்கள் இருப்பைப் பாதுகாத்துள்ளன. உங்கள் “தந்தையின்” அதே முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் இன்னும் “படித்தவர்களாக” இருந்திருந்தால் நீங்கள் எந்த ராஜ்யத்தினுள் நுழைவீர்கள் என்பது யாருக்குத் தெரியும்! உங்களை நீங்களே கட்டுப்படுத்தவும் பிரதிபலிக்கவும் உங்களிடத்தில் நிச்சயமாக எந்தத் திறனும் இல்லை. உங்களைப் போன்றவர்களுக்கு, நீங்கள் எந்தவிதமான குறுக்கீடுகளும் இடையூறுகளும் ஏற்படுத்தாமல், பின்பற்றி கீழ்ப்படிய மட்டும் செய்தாலே, என்னுடைய நோக்கங்கள் அடையப்படும். இன்றைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொள்வதில் நீங்கள் இன்னும் முன்னேற்றமடைய வேண்டாமா? உங்களுக்கு வேறு என்ன தெரிவுகள் உள்ளன? கர்த்தராகிய இயேசு பேசுவதையும், கிரியை செய்வதையும் பவுல் கண்டபோது அவன் அப்போதும் நம்பவில்லை. பின்னர் கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த பின்னர், அவன் இந்த உண்மையை அறிந்தான், அப்போதும் அவன் தொடர்ந்து துன்புறுத்தவும் எதிர்க்கவும் செய்தான். வேண்டுமென்றே பாவம் செய்வதன் அர்த்தம் இதுதான், அதனால் அவன் கீழே தள்ளப்பட்டான். ஆரம்பத்தில், யூதர்களிடையே இயேசு என்று அழைக்கப்படும் ஒரு ராஜா இருப்பதை அவன் அறிந்திருந்தான், அவன் இதைக் கேள்விப்பட்டிருந்தான். பிற்காலத்தில், அவன் தேவாலயத்தில் பிரசங்கம் செய்து, தேசமெங்கும் பிரசங்கித்த போது, அவன் இயேசுவுக்கு எதிராகச் சென்று, இறுமாப்புடன் எந்த மனிதனுக்கும் கீழ்ப்படிய மறுத்துவிட்டான். இந்தக் காரியங்கள் அந்த நேரத்தில் கிரியைக்கு மிகப்பெரியத் தடையாக மாறியது. இயேசு கிரியை செய்து கொண்டிருக்கும்போது, பவுல் நேரடியாக ஜனங்களைத் துன்புறுத்தி கைது செய்யவில்லை, மாறாக இயேசுவின் கிரியையை அழித்துப் போட, பிரசங்கத்தையும் வார்த்தைகளையும் பயன்படுத்தினான். பின்னர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின், அவன் சீஷர்களைக் கைது செய்யத் தொடங்கினான், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைந்து சென்று, அவர்களைத் துன்புறுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான். “ஒளி” அவன் மீது பிரகாசித்த பின்னரே அவன் விழித்தெழுந்து மிகுந்த வருத்தத்தை அனுபவித்தான். அவன் கீழே தள்ளப்பட்ட பிறகு அவனது நோய் ஒருபோதும் அவனை விட்டு விலகவில்லை. சில நேரங்களில் வேதனை மிக மோசமாகி விட்டதாக அவன் உணர்ந்தான், மேலும் படுக்கையிலிருந்து கூட வெளியேற முடியாமல் இருந்தான். அவன் நினைத்தான்: “என்ன நடக்கிறது? நான் உண்மையில் தள்ளப்பட்டிருக்கிறேனா?” அந்த நோய் அவனை ஒரு போதும் விட்டுவிடவில்லை, இந்த நோயின் காரணமாகவே அவன் அதிக கிரியை செய்தான். பவுலின் ஆணவம் மற்றும் பிடிவாதத்தினால் இயேசு இந்த நோயை அவன் மீது வைத்தார் என்று கூறலாம். இது பவுலின் மேலிருந்த ஒரு தண்டனையாக இருந்தது, ஆனால் தேவனுடைய கிரியை விரிவாக்கப்படும்படி, பவுலின் வரங்களை அவருடைய கிரியைகளில் பயன்படுத்துவதற்காகவும் இது செய்யப்பட்டது. உண்மையில் பவுலை இரட்சிப்பது தேவனுடைய நோக்கமல்ல, மாறாக அவனைப் பயன்படுத்துவதே ஆகும். ஆயினும், பவுலின் மனநிலை மிகவும் இறுமாப்பும் பிடிவாதமுமாயிருந்தது, அதனால் அவனில் ஒரு “முள்” வைக்கப்பட்டது. இறுதியில் பவுல் தனது கிரியையை முடித்த நேரத்தில், அதன்பின்னர் நோய் அவனுக்கு ஒரு பெரிய வேதனையாக இருக்கவில்லை, மேலும் அவனுடைய கிரியையை முடிவடைந்து கொண்டிருக்கும்போது, அவனால் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,” என்ற வார்த்தைகளைச் சொல்ல முடிந்தது, தேவனுடைய கிரியையை அவன் அறியாதிருந்தபடியால் அதைச் சொன்னான். பவுலைப் போன்று உங்களில் பலர் இருக்கிறீர்கள், ஆனால் ஓட்டத்தின் முடிவுவரை, பின்பற்றுவதற்கான தீர்மானத்தை நீங்கள் உண்மையிலேயே கொண்டிருந்தால், நீங்கள் தவறாக நடத்தப்பட மாட்டீர்கள். பவுல் கலகக்காரனாகவும், எதிர்க்கிறவனாகவும் இருந்த முறைகளை நாம் இங்கு கலந்துரையாடப் போவதில்லை. அவனுடைய நேர்மறையான மற்றும் மெச்சத்தக்கதான பகுதியை நாம் பின்பற்றுவோம். அவனுக்கு ஒரு மனச்சாட்சி இருந்தது, ஒருமுறை “ஒளியை” பெற்ற பிறகு, அவன் தன்னையே தேவனுக்காக அர்ப்பணிக்கவும், துன்பப்படவும் முடிந்தது. இதுவே அவனுடைய வலுவான பகுதியாகும். இருப்பினும், அவன் ஒரு வலுவான பகுதியைக் கொண்டிருந்ததால் அவன் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன் என்று நம்புகிறவர்கள் இருந்தால், அவன் அவசியமாகத் தண்டிக்கப்படவில்லை என்று அவர்கள் நினைத்தால், இவை உணர்வில்லாத ஜனங்களின் வார்த்தைகளாகும்.

பலர் ஜெபிக்கும் போதும், தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போதும், தேவனுக்குக் கீழ்ப்படிய தாங்கள் மனதார விரும்புவதாகக் கூறுகிறார்கள், ஆனால் அதன்பின் அந்தரங்கத்தில் ஒழுக்கக்கேடடைந்து, அதைக் குறித்து எதுவும் நினைப்பதில்லை. தேவனுடைய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன, அடுக்கடுக்காக வெளிப்படுத்துகின்றன, ஜனங்களின் அடித்தட்டு அம்பலப்படுத்தப்பட்டவுடன் மட்டுமே, அவர்கள் “சமாதானத்தைக் கண்டறிந்து” குறைவான இறுமாப்பும், பிடிவாதம் கொண்டவர்களாகிறார்கள், குறைந்தளவு தாங்கமுடியாத திமிர்பிடித்தவர்கள் ஆகின்றனர். இன்றைக்கு இருப்பதைப் போன்ற உங்கள் நிலைகளைக் கொண்டு, நீங்கள் இளைப்பாறுவதற்கு வாய்ப்பே கிடைக்காதபடி, நீங்கள் இன்னும் இரக்கமின்றி தாக்கப்பட்டு, அம்பலப்படுத்தப்பட வேண்டும், அணு அணுவாக நியாயந்தீர்க்கப்பட வேண்டும். உங்களுக்காக, கடுமையான சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு உங்களை விட்டு விடாமல் இருப்பது நல்லது, மற்றும் கண்டனம் மற்றும் சாபங்கள் உங்களிடமிருந்து தள்ளி இருக்கக்கூடாது, இது தேவனுடைய நிர்வாகக் கட்டளையின் கரம் உங்களை விட்டு ஒருபோதும் விலகாததை நீங்கள் பார்க்க அனுமதிக்கிறது. நியாயப்பிரமாணத்தின் காலத்தைப் போலவே, யேகோவா தன்னை ஒருபோதும் விட்டு விடவில்லை என்று ஆரோன் கண்டபோது (அவன் கண்டது யேகோவாவின் நிலையான வழிநடத்துதலும் பாதுகாப்பும் ஆகும்; நீங்கள் பார்க்கிற தேவனுடைய வழிநடத்துதலானது சிட்சையும், சாபங்களும், நியாயத்தீர்ப்புமாகும்), இன்று யேகோவாவின் நிர்வாகக் கட்டளையின் கரம் உங்களையும் விட்டுவிடாது. இருப்பினும் நீங்கள் ஒரு விஷயத்தைக் குறித்து இளைப்பாறலாம்: நீங்கள் எப்படி எதிர்த்தாலும், கலகம் செய்தாலும், நியாயத்தீர்ப்பை வழங்கினாலும் உங்கள் மாம்சத்திற்கு எந்தவித தீங்கும் அறவே இருக்காது. ஆனால் அளவிற்கு மீறி எதிர்த்து, கிரியையைத் தடுப்பவர்கள் இருந்தால், இது ஏற்கத்தக்கதல்ல; ஒரு வரம்பு உள்ளது. திருச்சபையின் ஜீவியத்தில் குறுக்கிடவோ அல்லது சீர்குலைக்கவோ வேண்டாம், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு செய்ய வேண்டாம். மற்றபடி, நீ விரும்பியதை நீ செய்யலாம். நீ ஜீவனைத் தொடர விரும்பாமல், உலகத்திற்குத் திரும்ப நினைத்தால், துரிதப்பட்டு, போ! தேவனுடைய கிரியையைத் தடுக்காதவரை நீ விரும்பிய எதையும் நீ செய்யலாம். இன்னும் நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது: முடிவில், இத்தகைய பிடிவாதமான பாவிகள் அனைவரும் புறம்பாக்கப்படுவார்கள். இன்று, ஒருவேளை நீ நிந்திக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் முடிவில், ஜனங்களின் ஒரு பகுதியினர் மட்டுமே சாட்சிப் பகர முடியும், மீதமுள்ள அனைவரும் ஆபத்தில் இருப்பார்கள். இந்தப் பிரவாகத்தில் நீ இருக்க விரும்பவில்லை என்றால், அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. இன்றைய ஜனங்கள் சகிப்புத்தன்மையுடன் நடத்தப்படுகிறார்கள். நாளைய சிட்சைக்கு நீ பயப்படாவிட்டால் நான் உன்னைக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் இந்தப் பிரவாகத்தில் நீ இருந்தால், நீ சாட்சிப் பகர வேண்டும், மேலும் நீ சிட்சிக்கப்பட வேண்டும். நீ அதை மறுத்துவிட்டு உலகிற்குத் திரும்ப விரும்பினால், அது ஏற்றுக் கொள்ளத்தக்கது, ஒருவரும் உன்னைத் தடுக்கிறதில்லை! ஆனால் நீ அழிவுகரமான மற்றும் தேவனுடைய கிரியையைச் சீர்குலைக்கும் கிரியையைச் செய்வாயானால், அதற்காக நீ முற்றிலும் மன்னிக்கப்பட மாட்டாய். ஜனங்கள் தண்டிக்கப்படுவதையும் மற்றும் யாருடைய குடும்பங்கள் எல்லாம் சபிக்கப்படுகிறது என்பதைக் குறித்து உன் கண்கள் பார்க்கிறதையும் உன் செவிகள் கேட்கிறதையும் பொருத்தவரை, இவை எல்லாவற்றிற்கும் வரம்புகளும், எல்லைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவர் காரியங்களை இலகுவாகச் செய்வதில்லை. நீங்கள் செய்த பாவங்களின் அடிப்படையில் உங்கள் சொந்த அநீதிக்கு ஏற்ப நீங்கள் நடத்தப்பட்டு, தீவிரமாக கையாளப்பட வேண்டுமெனில், உங்களில் யார் உயிர் வாழ முடியும்? நீங்கள் அனைவரும் பேரழிவை அனுபவிப்பீர்கள், உங்களில் ஒருவருக்குக் கூட நல்ல பலன் இருக்காது. ஆனாலும் இன்று, பலர் சகிப்புத்தன்மையுடன் நடத்தப்படுகிறார்கள். நீங்கள் நியாயத்தீர்ப்பளித்து, கலகம்பண்ணி, எதிர்த்தாலும் நீங்கள் குறுக்கிடாத வரை நான் உங்களை ஒரு புன்னகையுடன் எதிர்கொள்வேன். நீங்கள் உண்மையிலேயே ஜீவனைத் தொடர்கிறீர்களானால், நீங்கள் ஒரு சிறிய சிட்சையை அனுபவிக்க வேண்டும், மேலும் அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மேசையில் செல்ல, நீங்கள் நேசிக்கும் காரியத்திலிருந்து பிரியும் வலியை நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும்; பேதுரு சோதனைகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டது போல நீ வேதனையைத் தாங்க வேண்டும். இன்று நீ நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன் இருக்கிறாய். எதிர்காலத்தில் நீ உன்னையே “அர்ப்பணிக்கும்” போது, “தலைவெட்டும் கருவியை” எதிர்கொள்ள வேண்டும்.

கடைசி நாட்களில் இந்தக் கடைசி கட்ட கிரியையின் போது ஒருவேளை தேவன் உன் மாம்சத்தை முற்றிலுமாக அழிக்க மாட்டார் என்று நீ நம்பலாம், மேலும் நீ அவரை எதிர்த்தாலும் அவரை நியாயந்தீர்த்தாலும்கூட நீ எந்த நோயையும் அனுபவிக்க மாட்டாய் என்று கூறலாம், ஆனால் தேவனுடைய கடுமையான வார்த்தைகள் உன்மீது வரும்போது உன் கலகத்தன்மையும், எதிர்ப்பும், உன் அசிங்கமான முகங்கள் அனைத்தும் வெளிப்படும்போது, நீ மறைந்து கொள்ள முடியாது. உன்னை நீயே பீதியிலும் இழப்பிலும் இருப்பதாகக் காண்பாய். இன்று, உனக்குக் கொஞ்சம் மனசாட்சி இருக்க வேண்டும். தேவனை எதிர்க்கும் மற்றும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யும் தீயவர்களின் பாத்திரத்தை வகிக்க வேண்டாம். உன் பழைய மூதாதையரிடம் இருந்து நீ விலக வேண்டும்; இதுவே நீ கொண்டிருக்க வேண்டிய வளர்ச்சியும், நீ கொண்டிருக்க வேண்டிய மனிதத்தன்மையும் ஆகும். உன் சொந்த எதிர்கால வாய்ப்புகளை அல்லது இன்றைய இன்பங்களை ஒதுக்கி வைக்க உன்னால் எப்போதும் முடிவதில்லை. தேவன் கூறுகிறார்: “என்னைப் பின்பற்றி சத்தியத்தைத் தொடர்வதற்கு, நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் வரை, நான் நிச்சயமாக உங்களைப் பரிபூரணப்படுத்துவேன். நீங்கள் பூரணப்படுத்தப்பட்டவுடன் உங்களுக்கு ஓர் அழகான சேருமிடம் கிடைக்கும்—என்னுடன் ஆசீர்வாதங்களை அனுபவிக்க நீங்கள் என் ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்படுவீர்கள்.” ஓர் அழகான இலக்கு உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது, ஆனாலும் உங்களிடம் எதிர்பார்ப்பவைகளை ஒருபோதும் குறைக்கவியலாது. ஒரு நிபந்தனையும் உள்ளது: நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்களா அல்லது பரிபூரணமாக்கப்படுவீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல், இன்று நீங்கள் சில சிட்சைகளுக்கும் சில துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட வேண்டும். நீங்கள் அடிக்கப்பட்டு ஒழுக்கப்படுத்தப்பட வேண்டும்; நீங்கள் என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும், என் வழியைப் பின்பற்ற வேண்டும், தேவனுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும்—இதுவே மனிதர்களாகிய நீங்கள் செய்ய வேண்டும். நீ எவ்வாறு பின்தொடர்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இவ்வழியில் தெளிவாகக் கேட்க வேண்டும். நீ உண்மையிலேயே உண்மையான நுண்ணறிவுகளைக் கொண்டிருந்தால், நீ தொடர்ந்து பின்பற்றலாம். இங்கே எந்த வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் இல்லையென்று நீ நம்பினால், நீ போகலாம். இந்த வார்த்தைகள் உன்னிடம் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன, ஆனால் நீ உண்மையிலேயே போக விரும்பினால், இது நீ சிறிதளவேனும் மனசாட்சியைக் கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. நீ ஒரு பிசாசு என்பதை நிரூபிக்க உன்னுடைய இந்த நடவடிக்கையே போதுமானதாகும். உன் மாம்சத்தையும், நீ வாழ்வதையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கு விட்டுவிடுகிறாய் என்று நீ கூறினாலும், நீ இன்னும் சாத்தானுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ்கிறாய். சாத்தான் தேவன் தம்முடைய கரங்களில் இருந்தாலும்கூட, நீ இன்னும் சாத்தானுக்கு உரியவனாக இருக்கிறாய், இன்னும் தேவனால் உண்மையில் இரட்சிக்கப்படவும் வேண்டும், ஏனென்றால், நீ இன்னும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறாய். இரட்சிக்கப்படுவதற்கு நீ எவ்வாறு பின் தொடர வேண்டும்? தேர்வு உன்னுடையது, நீ செல்ல வேண்டிய பாதையை நீ தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் உன்னால்: “எனக்கு இதை விடச் சிறந்தது எதுவுமில்லை, தேவனுடைய அன்பிற்கு என் மனசாட்சியைத் திரும்பச் செலுத்துகிறேன், சிறிதளவு மனிதத்தன்மை இருக்க வேண்டும். என்னால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது, என்னுடைய தகுதியும் அவ்வளவு உயர்ந்ததல்ல; தேவனுடைய கிரியைகளின் தரிசனங்களும், அர்த்தமும் எனக்குப் புரியவில்லை. நான் வெறுமனே தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்துகிறேன், தேவன் எதைக் கேட்கிறாரோ அதைச் செய்கிறேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். தேவனுடைய ஒரு சிருஷ்டிப்பாக நான் என் கடமையைச் சரியாகச் செய்கிறேன்,” என்று கூற முடிந்தால், அப்போது நான் திருப்தியடைவேன். இது உங்களுக்குப் பொருத்தமான மிக உயர்ந்த சாட்சியாகும். இது தேவனுடைய சிருஷ்டிப்பினுடைய கடமையைச் செய்கிற ஒரு பகுதியினரிடம் தேவைப்படும் மிக உயர்ந்த தரம் ஆகும்: உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்; உன்னிடம் தேவைப்படுவது மிக அதிகமானவையல்ல. நீ உன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்வரை, இது உன்னுடைய சாட்சியாகும்.

முந்தைய: ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)

அடுத்த: பயிற்சி (7)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக