இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கான வார்த்தைகள்

நான் பூமியில் ஒரு மிகப்பெரிய அளவிலான கிரியையைச் செய்திருக்கிறேன், நான் பல வருடங்களாக மனுக்குலத்தின் நடுவே நடந்திருக்கிறேன், ஆனாலும் ஜனங்கள் என் சாயல் மற்றும் என் மனநிலையைப் பற்றி அரிதாகவே அறிந்திருக்கிறார்கள், மேலும் நான் செய்யும் கிரியையை சிலராலேயே முழுமையாக விளக்க முடியும். ஜனங்கள் பல விஷயங்கள் இல்லாமலிருக்கின்றனர், நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிய புரிதல் எப்போதும் இருப்பதில்லை, எப்போதும் அவர்களின் இருதயங்கள் ஏதோ நான் அவர்களை வேறு சூழ்நிலையில் வைத்துவிடுவேன் என்றும் அதன்பின் அவர்களைக் கவனித்துக் கொள்ளவே மாட்டேன் என்பதைப் போல எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கின்றன. இப்படி, என்னைக் குறித்த ஜனங்களின் அணுகுமுறைகள் எப்பொழுதும் மிகுந்த எச்சரிக்கையான அளவுடன் அக்கறையின்றியே இருக்கின்றன. ஏனென்றால், நான் செய்யும் கிரியையைப் புரிந்து கொள்ளாமல் ஜனங்கள் நிகழ்காலத்திற்கு வந்துள்ளனர், குறிப்பாக, நான் அவர்களிடம் பேசுகிற வார்த்தைகளால் அவர்கள் குழம்பியுள்ளனர். அவர்கள் என் வார்த்தைகளை தங்கள் கைகளில் பிடித்திருக்கிறார்கள், அவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள தங்களையே அர்ப்பணிக்க வேண்டுமா அல்லது உறுதியின்மையைத் தேர்ந்தெடுத்து அவற்றை மறந்து விடலாமா என்று அறியாமல் இருக்கின்றனர். அவற்றை அவர்கள் கடைபிடிக்க வேண்டுமா, அல்லது காத்திருந்துப் பார்க்கலாமா, அவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டுத் தைரியமாகப் பின்பற்ற வேண்டுமா அல்லது முன்பைப் போலவே உலகத்திடம் நட்பைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஜனங்களின் உள் உலகங்கள் மிகவும் சிக்கலானவை, மேலும் அவை மிகவும் தந்திரமானவையாகும். என் வார்த்தைகளை ஜனங்கள் தெளிவாகவோ அல்லது முழுமையாகவோ பார்க்க முடியாததால், அவற்றைக் கடைபிடிப்பதில் பலரும் சிரமப்படுகின்றனர், அவர்களுடைய இருதயங்களை என் முன் வைப்பதில் சிரமங்கொள்கின்றனர். உங்கள் சிரமங்களை நான் ஆழமாகப் புரிந்து கொள்கிறேன். மாம்சத்தில் வாழும்போது பல பெலவீனங்கள் தவிர்க்க முடியாதவையாகும், மேலும் பல நிஜக் காரணங்கள் உங்களுக்குச் சிரமங்களை உருவாக்குகின்றன. நீங்கள் உங்கள் குடும்பத்தாரைப் போஷிக்கிறீர்கள், உங்கள் நாட்களைக் கடினமாக உழைப்பதில் செலவழிக்கிறீர்கள், மாதங்களும் வருடங்களும் கஷ்டத்தில் கடந்து செல்கின்றன. மாம்சத்தில் வாழ்வதில் பல சிரமங்கள் உள்ளன, நான் இதை மறுக்கவில்லை, நிச்சயமாக உங்களிடத்திலான எனது தேவைகள் உங்கள் சிரமங்களுக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன. நான் செய்யும் கிரியையின் தேவைகள் அனைத்தும் உங்கள் உண்மையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஒருவேளை கடந்த காலங்களில், தங்கள் கிரியைகளில் ஜனங்கள் உங்களிடம் முன்வைத்த தேவைகள் தகாத செயல்களின் அங்கங்களுடன் கலந்திருக்கலாம், ஆனால் நான் சொல்வதிலும் செய்வதிலும் உங்களிடம் எனக்கு அதிகப்படியான தேவைகள் இருந்ததில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அனைத்துத் தேவைகளும் மக்களின் சுபாவம், மாம்சம் மற்றும் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். மக்களிடம் இருக்கும் சில நியாயமான சிந்தனை முறைகளை நான் எதிர்க்கவில்லை, மனுக்குலத்தின் இயல்பான சுபாவத்தை நான் எதிர்க்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் என்னால் அதை உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நான் நிர்ணயித்த தரநிலைகள் உண்மையிலேயே என்ன என்பதை ஜனங்கள் புரிந்து கொள்ளாத காரணத்தினால், அல்லது என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் தான், ஜனங்கள் இதுவரை என் வார்த்தைகளை சந்தேகிக்கிறார்கள், மேலும் பாதிக்கும் குறைவான மக்களே என் வார்த்தைகளை விசுவாசிக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அவிசுவாசிகள், மேலும் அதை விடப் பலரும் நான் “கதைகளைச் சொல்வதைக்” கேட்க விரும்புவோராக உள்ளனர். மேலும் இந்தக் காட்சியை ரசிக்கும் பலரும் உள்ளனர். நான் உங்களை எச்சரிக்கிறேன்: என்னை விசுவாசிப்பவர்களுக்கு என்னுடைய வார்த்தைகளில் பல ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன, மேலும் ராஜ்யத்தின் அழகிய காட்சியை ரசித்துக்கொண்டு ஆனால் அதன் வாயிலுக்கு வெளியே பூட்டப்பட்டவர்கள் ஏற்கனவே என்னால் புறம்பாக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் என்னால் வெறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் இருக்கிற வெறும் களைகள் அல்லவா? நான் போவதைக் கவனித்துக்கொண்டு அதன்பின் நான் திரும்பி வருவதை உங்களால் மகிழ்ச்சியுடன் எப்படி வரவேற்க முடியும்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யேகோவாவின் கோபமான வார்த்தைகளை நினிவே ஜனங்கள் கேட்டபின், அவர்கள் உடனடியாக இரட்டுடுத்தி சாம்பலிலிருந்து மனந்திரும்பினர். ஏனென்றால் அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்ததால் தான் அவர்கள் பயத்தினாலும் திகிலாலும் நிறைந்து, அப்படி இரட்டிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்பினார்கள். இன்றைய ஜனங்களைப் பொறுத்தவரை, நீங்கள் என் வார்த்தைகளை விசுவாசித்தாலும் அதற்கும் மேலாக, இன்றைக்கு யேகோவா மீண்டும் உங்கள் மத்தியில் வந்துள்ளார் என்று விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் யூதேயாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்த இயேசு இப்போது உங்கள் மத்தியில் இறங்கியுள்ளதை வெறுமனே உற்று நோக்குவது போல உங்கள் அணுகுமுறை அவபக்தியாய் இருக்கிறது. உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் வஞ்சகத்தை நான் ஆழமாகப் புரிந்துகொள்கிறேன்; உங்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வத்தினால் என்னைப் பின்தொடர்கிறீர்கள், வெறுமையின் காரணமாக என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். சமாதானமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான உங்கள் விருப்பமான உங்களின் மூன்றாவது ஆசை சிதறடிக்கப்பட்டபின், உங்கள் ஆர்வமும் சிதைந்துவிடுகிறது. உங்கள் ஒவ்வொருவரின் இருதயங்களுக்குள்ளும் இருக்கும் வஞ்சகத்தன்மை உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் என்னைப்பற்றி வெறுமனே ஆர்வமாக உள்ளீர்கள், ஆனால் எனக்குப் பயப்படுகிறதில்லை; நீங்கள் உங்கள் நாவுகளை கட்டுப்படுத்துவதில்லை, அதைவிட உங்கள் நடத்தையில் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதில்லை. அப்படியானால் உண்மையில், உங்களுக்கு எப்படிப்பட்ட விசுவாசம் உள்ளது? அது உண்மையானதா? உங்கள் கவலைகளைப் போக்கவும் உங்கள் சலிப்புத் தன்மையை நீக்கவும், உங்கள் வாழ்க்கையிலுள்ள மீதமிருக்கும் வெற்றிடங்களை நிரப்பவுமே என் வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்களில் யார் என் வார்த்தைகளைக் கடைபிடித்தீர்கள்? யாருக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறது? தேவன் ஜனங்களுடைய இருதயங்களின் ஆழத்தினுள் பார்க்கும் தேவன் என்று தொடர்ந்து கூக்குரலிடுகிறீர்கள், ஆனால் உங்கள் இருதயத்தில் நீங்கள் கூக்குரலிடும் தேவன் என்னுடன் எப்படி ஒத்திருக்கிறார்? நீங்கள் இப்படி கூக்குரலிடுகிறீர்கள், பின் ஏன் நீங்கள் அப்படி நடந்து கொள்கிறீர்கள்? இதுதான் நீங்கள் எனக்கு திருப்பிச் செலுத்த விரும்பும் அன்பாக இருப்பதினாலேயா? உங்கள் உதடுகளில் ஒரு அளவு அர்ப்பணிப்பு உள்ளது, ஆனால் உங்கள் பலிகள் எங்கே மற்றும் உங்கள் நல்ல செயல்கள் எங்கே? உங்கள் வார்த்தைகள் மட்டும் என் செவிகளுக்கு எட்டவில்லை என்றால், எப்படி நான் உங்களை இந்த அளவிற்கு வெறுக்க முடியும்? நீங்கள் என்னை உண்மையாக விசுவாசித்திருந்தால், நீங்கள் எப்படி இப்படிப்பட்ட துன்ப நிலைக்குள் விழுந்திருக்க முடியும்? ஏதோ நீங்கள் பாதாளத்தில் விசாரணையில் நிற்பதுபோல உங்கள் முகங்களில் மனச்சோர்வான தோற்றங்கள் உள்ளன. உங்களிடம் ஒரு துளி உற்சாகம் கூட இல்லை, உங்கள் உள்குரலைப் பற்றி நீங்கள் பெலவீனமாகப் பேசுகிறீர்கள்; நீங்கள் இன்னும் அதிகமாகக் குறைகளாலும் சாபங்களாலும் முழுவதுமாய் நிறைந்திருக்கிறீர்கள். நீண்டகாலத்திற்கு முன்பாகவே நான் செய்வதில் உள்ள விசுவாசத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் மேலும் உங்களின் உண்மையான விசுவாசம் கூட மறைந்துவிட்டது, ஆகையால் உங்களால் இறுதிவரை எப்படிச் சாத்தியமாகப் பின்பற்ற முடியும்? இது இப்படி இருப்பதால், உங்களால் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?

என் கிரியை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இன்னும் என் வார்த்தைகள் எப்போதும் உங்களுக்குள் காணாமல்போய், உங்களுக்குள்ளேயே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. என்னால் பரிபூரணமாக்கப்படும் ஆட்களைக் கண்டுபிடிப்பது கடினம், இன்று நான் உங்கள் மீதான நம்பிக்கையைக் கிட்டத்தட்ட இழந்து விட்டேன். நான் பல வருடங்களாக உங்கள் மத்தியில் தேடினேன், ஆனால் என் நம்பிக்கைக்குரிய ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினமானது. உங்களில் தொடர்ந்து கிரியை செய்ய எனக்கு நம்பிக்கையில்லாததைப் போலவும், உங்களைத் தொடர்ந்து நேசிக்க எந்த அன்பும் இல்லாததைப் போலவும் உணர்கிறேன். ஏனென்றால் பல காலத்துக்கு முன்பாகவே மிகுந்த முக்கியத்துவமற்ற, பரிதாபமான உங்கள் “சாதனைகளால்” நான் வெறுப்படைந்திருக்கிறேன்; நான் உங்களிடையே ஒருபோதும் பேசியதில்லை போலும் உங்களில் ஒருபோதும் கிரியை செய்யாததைப் போலும் தோன்றுகிறது. உங்கள் சாதனைகள் மிகவும் குமட்டலாக உள்ளன. நீங்கள் எப்போதும் உங்கள் மீது அழிவையும் அவமானத்தையும் கொண்டு வருகிறீர்கள், மேலும் உங்களுக்கு கிட்டத்தட்ட எந்த மதிப்புமே இல்லை. உங்களில் மனிதச் சாயலை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை, ஒரு மனிதனுக்குரியச் சுவடுகளைக் கூட நுகர முடியவில்லை. உங்களின் புதிதான நறுமணம் எங்கே? பல ஆண்டுகளாக நீங்கள் செலுத்திய விலைக்கிரயம் எங்கே, முடிவுகள் எங்கே? நீங்கள் இதுவரையிலும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லையா? எனது கிரியைக்கு இப்போது ஒரு புதிய துவக்கம் உண்டு, ஒரு புதிய ஆரம்பம் உண்டு. நான் பெரிய திட்டங்களை செய்து முடிக்கப் போகிறேன், நான் இன்னும் பெரிய கிரியைகளை நிறைவேற்ற விரும்புகிறேன், ஆனாலும் நீங்கள் முன்பைப் போலவே சேற்றில் உழன்று கொண்டிருக்கிறீர்கள், கடந்த காலத்தின் அருவருப்பான தண்ணீரில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்களின் உண்மையான இக்கட்டான நிலையிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள நடைமுறையில் தவறி விட்டீர்கள். ஆகையால், நீங்கள் என் வார்த்தைகளிலிருந்து இன்னும் எதையும் பெறவில்லை. இன்னும் நீங்கள் உங்கள் உண்மையான இடமான சேற்றிலிருந்தும் அருவருப்பான தண்ணீரிலிருந்தும் உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளவில்லை, உங்களுக்கு என் வார்த்தைகள் மட்டுமே தெரியும், ஆனால் உண்மையில் என்னுடைய வார்த்தைகளுடைய விடுதலையின் எல்லைக்குள் நீங்கள் நுழையவில்லை, அதனால் என் வார்த்தைகள் உங்களுக்குத் திறக்கப்படவேயில்லை. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்திரையிடப்பட்ட தீர்க்கதரிசனப் புத்தகம் போன்றே இருக்கின்றன. நான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தோன்றுகிறேன், ஆனால் நீங்கள் எப்பொழுதும் அதைப்பற்றி அறியாதிருக்கிறீர்கள். நீங்கள் என்னை அடையாளம் கூட கண்டுகொள்வதில்லை. நான் சொல்லும் வார்த்தைகளில் கிட்டத்தட்ட பாதி அளவு உங்களை நியாயந்தீர்ப்பதில் உள்ளன, மேலும் உங்களுக்குள் ஆழ்ந்த பயத்தை ஏற்படுத்த வேண்டிய விளைவில் அவை பாதி அளவை மட்டுமே அடைகின்றன. மீதமுள்ள பாதி பாகமானது வாழ்க்கையைக் குறித்தும், உங்களையே நீங்கள் நடத்த வேண்டிய விதத்தைக் குறித்தும் உங்களுக்குக் கற்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், உங்களைப் பொறுத்தவரையில் இந்த வார்த்தைகள் இருப்பில் கூட இல்லை, அல்லது நீங்கள் குழந்தைகளின் வார்த்தைகளையும், ஒரு மறைமுகமான புன்னகையை மட்டும் நீங்கள் கொடுத்து, அவற்றைக் குறித்து எந்தச் செயலையும் செய்யாத வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது போலும் தோன்றும். நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை; எப்போதுமே நீங்கள் முக்கியமாக ஆர்வத்தின் பெயராலேயே என் கிரியைகளைக் கவனித்திருக்கிறீர்கள், இதன் விளைவாக இப்போது நீங்கள் இருளில் விழுந்து ஒளியைக் காண முடியாமல் போயிற்று, அதனால் நீங்கள் இருட்டில் பரிதாபமாக அழுகிறீர்கள். உங்கள் கீழ்ப்படிதல், உங்கள் நிபந்தனையற்ற கீழ்ப்படிதலையே நான் விரும்புகிறேன், இன்னும் அதிகமாக சொல்லவேண்டுமென்றால், நான் சொல்கிற எல்லாவற்றைக் குறித்தும் நீங்கள் முற்றிலும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அலட்சியமான அணுகுமுறையைப் பின்பற்றக்கூடாது குறிப்பாக நான் சொல்லும் விஷயங்களை நீங்கள் வித்தியாசமாகக் கையாளக் கூடாது, எப்பொழுதும் உங்கள் பழக்கவழக்கம் போல என் வார்த்தைகள் மற்றும் எனது கிரியைகளைக் குறித்து அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. என் கிரியை உங்கள் நடுவில் செய்து முடிக்கப்பட்டது, மேலும் நான் என் வார்த்தைகளில் பலவற்றை உங்களுக்கு வழங்கியுள்ளேன், ஆனால் நீங்கள் என்னை இவ்வாறு நடத்தினால், நீங்கள் பெற்றுக்கொள்ளாத அல்லது கடைப்பிடிக்காத புறஜாதியார் குடும்பங்களுக்கு மட்டும் தான் என்னால் வெளிப்படுத்த முடியும். சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் என் கரங்களில் என்னால் கட்டுப்படுத்தப்படாமல் யார் இருக்கிறார்கள்? உங்களிலுள்ள பெரும்பாலானோர் “வயது முதிர்ந்து” இருக்கிறீர்கள், நான் கொண்டிருக்கும் இந்த வகையான கிரியையை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு ஆற்றல் இல்லை. நீங்கள் ஒரு ஹன்ஹாவ் பறவையைப் போன்றவர்கள்,[அ] வெறுமென முயற்சி செய்கிறீர்கள், நீங்கள் ஒருபோதும் என் வார்த்தைகளை முக்கியமானதாகக் கருதவில்லை. இளைஞர்களோ மிகவும் வீணானவர்களும் மற்றும் மனம்போன போக்கில் போகிறவர்களுமாக இருக்கின்றனர் மற்றும் எனது கிரியைக்குச் சரியான கவனத்தைச் செலுத்துவதில்லை. என் பெருவிருந்தின் சுவையானவற்றை உண்பதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை; அவர்கள் தன் கூண்டிலிருந்து துணிந்து வெகு தூரமாய்த் தொலைதூர இடத்திற்குப் பறந்துபோன ஒரு சிறிய பறவையைப் போன்றவர்கள். இவ்வகையான இளைஞர்கள் மற்றும் முதியவர்களால் எனக்கு எப்படிப் பயனுள்ளவர்களாக இருக்க முடியும்? மேம்பட்ட வயதுடையவர்கள் அவர்கள் மரித்த பின்பு அவர்களின் ஆத்துமா பரலோகத்திற்குச் செல்லும்படி, அவர்கள் கல்லறைகளுக்குப் போகும் வரையிலும் என் வார்த்தைகளை ஓய்வூதியமாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்; அவர்களைப் பொறுத்தவரை, இது போதுமானது. இப்போது இந்த முதியவர்கள் “பெரும் அபிலாஷைகளையும்” மற்றும் “அசைக்க முடியாத நம்பிக்கையையும்” எப்போதும் மனதில் மறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் என் கிரியைக்காக மிகுந்த பொறுமையைக் கொண்டிருந்தாலும், நேர்மையாகவும் விட்டுக் கொடுக்காமலும் இருக்கவும், ஒருவராலும் அல்லது எந்தக் காரியத்தாலும் இழுத்துத் தள்ளப்பட்டு அல்லது நோற்கடிக்கப்பட மறுக்கும் முதியவர்கள் கொண்டிருக்கும் அந்தக் குணத்தை கொண்டிருந்தாலும், உண்மையில், அவர்கள் தகர்க்க முடியாத கோட்டையைப் போன்றவர்கள், ஆனால் இந்த ஜனங்களின் விசுவாசமானது பிணத்தின் மூடநம்பிக்கையான வாடையால் நிரப்பப்பட்டிருக்கிறதல்லவா? அவர்களின் பாதை எங்கே? அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பாதை மிகவும் நீளமாக, மிகவும் தொலைக்கோடியில் இருக்கிறதல்லவா? அவர்களால் எப்படி என் சித்தத்தை அறிந்துகொள்ள முடியும்? அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இந்தப் பெரியவர்களில் எத்தனை பேர் குழப்பமான வழியைப் பின்பற்றாமல், உண்மையில் ஜீவனைப் பின்தொடர்கிறார்கள்? எத்தனை பேர் என் கிரியையின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்கள்? இன்று இந்த உலகில் என்னைப் பின்தொடர்ந்து, அதனால் மிக சீக்கிரத்தில் அவர்கள் பாதாளத்திற்குள் இறங்காமல் என்னால் வேறொரு உலகத்திற்குக் கொண்டுவரப்படும்படி யாருக்குத்தான் நோக்கமில்லாமல் இருக்கிறது? உங்களின் இலக்கு அவ்வளவு எளிமையான விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் இளஞ்சிங்கங்களைப் போன்றவர்கள் என்றாலும், உங்கள் இருதயங்களில் உண்மையானப் பாதையை அரிதாகவேக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இளமை என் கிரியையைக்கான உரிமையை அதிகமாக உங்களுக்குத் தருவதில்லை; மாறாக, நீங்கள் எப்போதும் உங்களைக் குறித்ததான என் வெறுப்பைத் தூண்டுகிறீர்கள். நீங்கள் இளமையாக இருந்தாலும், உங்களுக்கு உயிர்ச்சக்தி அல்லது இலட்சியம் இல்லை, மேலும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்பொழுதும் அர்ப்பணிப்பற்று இருக்கிறீர்கள்; நீங்கள் அலட்சியமாகவும் மிகுந்த கவலையுற்றிருப்பது போன்றும் இருக்கிறது. இளைஞர்களிடம் காணப்படவேண்டிய உயிர்ச்சக்தி, இலட்சியங்கள் மற்றும் நிலைப்பாடு உங்களில் முற்றிலும் காணப்பட முடியாது என்று கூறலாம். இவ்வகையாயிருக்கும் இளைஞனர்களான நீங்கள், நிலைப்பாடில்லாமல் இருக்கிறீர்கள் மேலும் சரியானதற்கும் தவறானதற்கும், நல்லவைக்கும் தீமைக்கும், அழகிற்கும் அசிங்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியும் திறன் உங்களுக்கு இல்லை. புதியதாய் இருக்கிற உங்களுடைய எந்தக் காரியங்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை. நீங்கள் ஏறக்குறைய பழைய பாணியிலானவர்கள், இவ்வகையான இளைஞர்களாகிய நீங்கள் கூட்டத்தைப் பின்தொடரவும், பகுத்தறிவின்றி இருக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் ஒருபோதும் தவறிலிருந்து சரியானதைத் தெளிவாக வேறுபடுத்த முடியாது, உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, சிறந்ததற்காகக் கடுமுயற்சி செய்ய முடியாது, மேலும் எது சரி எது தவறு, எது உண்மை எது பாசாங்குத்தனம் என்று கூட உங்களால் சொல்ல முடியாது. வயதானவர்களை விட உங்களிடத்தில் மதத்தின் கனமான மற்றும் மிகக் கடுமையான துர்நாற்றம் உள்ளது. இன்னும் அதிகமாக நீங்கள் திமிர் பிடித்தவர்களாகவும் நியயமற்றவர்களாகவும் இருக்கிறீர்கள், போட்டியிடுகிறவர்களாக இருக்கிறீர்கள், சண்டையின் மீதான உங்கள் விருப்பம் மிகவும் வலுவானது, இவ்வகையான இளைஞர்களால் எப்படி சத்தியத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரு நிலைப்பாட்டைக் கொள்ள முடியாத ஒருவரால் எப்படி சாட்சியாக இருக்க முடியும்? சரி, தவறு என்று வேறுபடுத்தும் திறன் இல்லாத ஒருவரை எப்படி இளைஞன் என்று அழைக்க முடியும்? ஒரு இளைஞனுடைய உயிர்ச்சக்தியும், வலிமையும், புத்துணர்ச்சியும், அமைதியும், உறுதியும் இல்லாத ஒருவரை என்னைப் பின்பற்றுபவன் என்று எப்படி அழைக்க முடியும்? சத்தியம் இல்லாத, நீதியின் உணர்வில்லாத, விளையாடவும் சண்டைப் போடவுமே விரும்பும் ஒருவர் எப்படி எனக்குச் சாட்சியாக இருக்கத் தகுதியானவராக இருக்க முடியும்? மற்றவர்கள் மீது வஞ்சகமும் பாரபட்சமும் நிறைந்த கண்கள் இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள் அல்ல, மேலும் இளைஞர்கள் அழிக்கக்கூடிய, அருவருப்பானச் செயல்களைச் செய்யக்கூடாது. அவர்கள் குறிக்கோள்கள், அபிலாஷைகள் மற்றும் தங்களை மேம்படுத்துவதற்கான ஆர்வமிக்க விருப்பம் இல்லாமல் இருக்கக்கூடாது; அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பற்றி அதைரியப்படக்கூடாது, மேலும் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அல்லது எதிர்காலத்தில் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது; எனக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை உணர, அவர்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற சத்தியத்தின் பாதையில் தொடர விடாமுயற்சியைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சத்தியம் இல்லாமல் இருக்கக்கூடாது, அவர்கள் பாசாங்குத்தனம் மற்றும் அநீதியை மறைத்து வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சரியான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அவர்கள் அப்படியே வீணாய்ச் சுற்றிக்கொண்டிராமல், துணிந்து தியாகங்களைச் செய்யவும், நீதிக்காக மற்றும் சத்தியத்திற்காகப் போராடவும் அவர்களுக்கு துணிச்சல் இருக்க வேண்டும். இளைஞர்கள் இருளின் வல்லமைகளினால் உண்டாகும் அடக்குமுறைக்கு அடிபணிந்து விடாமல் தாங்கள் ஜீவிப்பதன் முக்கியத்துவத்தை மறுரூபப்படுத்தும் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும். இளைஞர்கள் துன்பங்களுக்குத் தங்களை விட்டுக்கொடுக்காமல், வெளிப்படையாகவும் கபடமற்றும், தங்கள் சகோதர சகோதரிகளை மன்னிக்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். நிச்சயமாக, இவைகளே அனைவரிடத்திலுமான என் தேவைகளும், அனைவருக்குமான என் அறிவுரையும் ஆகும். ஆனால் அதைவிட, இவை அனைத்து இளைஞர்களுக்கான என் ஆறுதலான வார்த்தைகள் ஆகும். நீங்கள் என் வார்த்தைகளின்படி நடக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் பிரச்சினைகளில் பகுத்தறிவை உபயோகப்படுத்தவும், நீதியையும் சத்தியத்தையும் தேடவும் தீர்மானம் இல்லாமல் இருக்கக்கூடாது. நீங்கள் அழகான மற்றும் நல்லதான எல்லாவற்றையும் பின்தொடர வேண்டும், மேலும் அனைத்து நேர்மறையான விஷயங்களின் யதார்த்தத்தையும் நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் குறித்து பொறுப்பாக இருக்க வேண்டும், அதை நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜனங்கள் பூமிக்கு வருகிறார்கள், என்னைச் சந்திப்பது மிகவும் அரிதாக இருக்கிறது, மேலும் சத்தியத்தைத் தேடுவதற்கும் பெறுவதற்குமான வாய்ப்பு கிடைப்பதும் கூட அரிதாகவே இருக்கிறது. இந்த அழகான நேரத்தை இந்த வாழ்க்கையில் தொடர்வதற்கான சரியானப் பாதையாக நீங்கள் ஏன் மதிப்பளிக்கக் கூடாது? நீங்கள் ஏன் சத்தியம் மற்றும் நீதியைக் குறித்து எப்போதும் அக்கறையின்றி இருக்கிறீர்கள்? மக்களுடன் கவனமின்றி செயல்படும் அந்த அநீதி மற்றும் அசுத்ததிற்காக நீங்கள் ஏன் எப்போதும் உங்களையே மிதித்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கிறீர்கள்? அநியாயக்காரர் செய்யும் செயல்களில் ஈடுபடும் வயதானவர்களைப் போல நீங்கள் ஏன் செயல்படுகிறீர்கள்? பழைய விஷயங்களின் பழைய வழிகளை நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்? உங்கள் வாழ்க்கை நீதி, உண்மை, மற்றும் பரிசுத்தம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்; நீங்கள் பாதாளத்தில் விழும்படியாய், உங்கள் வாழ்க்கை இந்த இளம் வயதிலேயே நடத்தைக்கெட்டு இருக்கக்கூடாது. இது ஒரு பயங்கரமான துரதிர்ஷ்டம் என்று நீங்கள் உணரவில்லையா? இது மிகவும் அநீதியானது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

நீங்கள் அனைவரும் உங்களது முழுவதும் பரிபூரணமான கிரியையைச் செய்து அதை நீங்கள் எனக்குச் செய்கிற மிகச்சிறந்த, தனித்துவமான பலியாக, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து என் பலிபீடத்தின் மீது பலியிட வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் மற்றும் வானத்திலுள்ள மேகங்களைப் போல வீசுகிற ஒவ்வொரு தென்றல்காற்றாலும் பறந்துவிடக்கூடாது. உங்கள் வாழ்நாளில் பாதி நேரம் நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள், அவ்வாறே உங்களுக்கு இருக்க வேண்டிய இலக்கை நீங்கள் ஏன் தேடக்கூடாது? நீங்கள் வாழ்நாள் முழுவதும் மிகக் கடுமையாக உழைக்கிறீர்கள், ஆனாலும் உங்களின் பன்றி மற்றும் நாய் போன்ற பெற்றோர்கள் சத்தியத்தையும் உங்களின் தனிப்பட்ட ஜீவியத்தின் முக்கியத்துவத்தையும் கல்லறைக்குள் இழுத்துச் செல்ல அனுமதிக்கிறீர்கள். இது உனக்கெதிரான மிகப் பெரிய அநீதி என்று நீ நினைக்கவில்லையா? இப்படியாக வாழ்க்கை வாழ்வது முற்றிலும் அர்த்தமற்றது என்று நீ உணரவில்லையா? இந்த வழியில் சத்தியத்தையும் சரியான பாதையையும் தேடுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதனால் அக்கம் பக்கத்தினர் சங்கடமாகவும், முழுக்குடும்பமும் மகிழ்ச்சியற்றதாகவும் ஆகி, அது கொடியப் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். நீ இவ்வாறு வாழ்ந்தால், அது மிகவும் அர்த்தமற்ற வாழ்க்கைக்கு ஈடாகாதா? யாருடைய வாழ்க்கை உன்னுடையதை விட அதிர்ஷ்டமாக இருக்கமுடியும், யாருடைய வாழ்க்கை உன்னுடையதை விட மிகக் கேலிக்கிடமானதாகவும் இருக்க முடியும்? உனக்கான என்னுடைய மகிழ்ச்சியையும் ஆறுதலான வார்த்தைகளையும் பெறுவதற்காக நீ என்னைத் தேடவில்லையா? ஆனால் பாதி வாழ்நாள் முழுவதும் மிக அலுவலாக ஓடினப் பிறகு நான் முழுவதுமாகக் கோபமடைந்து நீ சொல்வதைச் சிறிதும் கவனிக்காமல் அல்லது உன்னைப் புகழாமல் இருக்கும் அளவிற்கு நீ என்னைக் கோபமூட்டுகிறாய், இது உன் முழு வாழ்க்கையும் வீணானது என்று அர்த்தமல்லவா? துன்பத்திலிருந்து விடுவிக்கப்பட்ட யுகங்கள் முழுவதிலுமிருந்த அந்த பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களை உன்னால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பார்க்க முடியும்? நீ என்னைப் பற்றி அலட்சியமாக இருக்கிறாய், இறுதியில் நீ ஓர் அபாயகரமானப் பேரழிவை தூண்டுகிறாய், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது பரந்த கடல் மேல் மகிழ்ச்சியானப் பயணத்தை மேற்கொண்டு அதன்பின் என்னுடைய “ஒப்படைப்பு பணிக்குக்” கீழ்படிவது நல்லதாக இருக்கும். நான் நீண்ட காலத்திற்கு முன்பே சொன்னேன், இன்று மிகவும் அலட்சியமாய் இருக்கிற நீ, இன்னும் புறப்பட விரும்பாமல் இருக்கிறாய், இறுதியில் நான் உருவாக்கிய அலைகளால் எடுத்துக்கொள்ளப்பட்டு விழுங்கப்படுவாய். உங்களால் உண்மையில் உங்களைப் பாதுகாக்க முடியுமா? உன்னுடைய தற்போதைய பின்தொடரும் முறையானது நீ பூரணப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் என்று நீ உண்மையில் நம்புகிறாயா? உன் இருதயம் மிகவும் கடினமானது இல்லையா? இவ்வகையான பின்பற்றுதல், இவ்வகையான பின்தொடர்தல், இவ்வகையான வாழ்க்கை மற்றும் இவ்வகையான நடத்தை ஆகியவற்றால் எப்படி என் பாராட்டைப் பெற முடியும்?

அடிக்குறிப்பு:

அ. ஒரு ஹன்ஹாவ் பறவையின் கதை ஈசாப்பின் எறும்பும் வெட்டுக்கிளியும் என்ற நீதிக்கதையை மிகவும் ஒத்திருக்கிறது. வானிலை வெப்பமாக இருக்கும்போது, அதன் அண்டை வீட்டுப் பறவையான மேக்பையின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கூடு கட்டுவதற்குப் பதிலாக ஹன்ஹாவ் பறவை தூங்க விரும்புகிறது. குளிர்காலம் வந்ததும், பறவை குளிரில் உறைந்து இறக்கிறது.

முந்தைய: மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

அடுத்த: இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக