அத்தியாயம் 28

நான் சீயோனிலிருந்து வந்தபோது, நான் எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன், நான் சீயோனுக்குத் திரும்பியபோது, எல்லா மனுஷராலும் நான் வரவேற்கப்பட்டேன். நான் வந்து சென்ற நேரத்தில், எனக்கு விரோதமான விஷயங்களால் என் படிகள் ஒருபோதும் தடைபடவில்லை, எனவே எனது கிரியை சீராக முன்னேறியது. இன்று, நான் அனைத்து ஜீவனுள்ள சிருஷ்டிகளுக்கிடையில் வரும்போதும், நான் மீண்டும் ஒரு முறை புறப்படுவேன் என்பதனால் தங்களது சகாயத்திற்காக நம்பியிருப்பவரை இழக்க நேரிடும் என்ற மிகுந்த பயத்தால் அனைத்தும் என்னை மவுனமாக வரவேற்கின்றன. அனைத்தும் என் வழிகாட்டலைப் பின்பற்றுகின்றன, அனைத்தும் எனது கை சுட்டிக்காட்டிய திசையைப் பார்க்கின்றன. என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பல ஜீவனுள்ள சிருஷ்டிகளைப் பரிபூரணமாக்கியுள்ளன, மேலும் கீழ்ப்படியாத அநேக புத்திரர்களையும் சிட்சித்துள்ளன. இவ்வாறு, எல்லா மனுஷரும் என் வார்த்தைகளை உற்று நோக்குகிறார்கள், என் வாயிலிருந்து வரும் சொற்களை உன்னிப்பாகக் கேட்கிறார்கள், மேலும் இந்த நல்ல வாய்ப்பை இழந்துவிடுவோம் என்று மிகவும் பயப்படுகிறார்கள். இந்தக் காரணத்திற்காகத்தான் நான் தொடர்ந்து பேசுகிறேன், இதனால் எனது கிரியை மிகவும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, மகிழ்ச்சியான சூழ்நிலைகள் பூமியில் விரைவாகத் தோன்றி, பூமியில் இருக்கும் பாழடைந்த காட்சிகளைச் சரிசெய்யும். நான் வானங்களைப் பார்க்கும்போது, அதுவே நான் மீண்டும் மனுஷகுலத்தை எதிர்கொள்ளும் தருணமாக இருக்கிறது; எல்லா தேசங்களும் உடனடியாக உற்சாகத்தால் நிரப்பப்படுகின்றன, இனியும் தூசி காற்றில் மிதப்பதில்லை, மேலும் வண்டல் மண்ணானது போர்வைகளாக நிலத்தை மூடுவதில்லை. திடீரென பிரகாசிக்கும் என் கண்கள், எல்லாத் தேசங்களின் ஜனங்களையும் என்னைப் பார்க்க வைத்து, என்னிடம் அடைக்கலம் பெறுகின்றன. இன்றைய உலக ஜனங்களிடையே—எனது வீட்டில் உள்ள அனைவரையும் சேர்த்து—என்னுள் மெய்யாகவே அடைக்கலம் அடைவது யார்? நான் செலுத்திய விலைக்கிரயத்திற்கு ஈடாக தங்களது இருதயத்தை யார் தருகிறார்கள்? என் வீட்டுக்குள் யார் சமாதானமாக வாழ்கிறார்கள்? எனக்கு முன் மெய்யாகவே தங்களை முன்வைப்பவர் யார்? நான் மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்கும்போது, அவன் உடனடியாகத் தனது “சிறிய பண்டகசாலையை” மூடுகிறான். நான் மனுஷனுக்குக் கொடுக்கும்போது, என் ஐசுவரியத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொள்ள அவன் தன் வாயை விரைவாகத் திறக்கிறான், மேலும் நான் அவனைத் அடித்துவிடுவேன் என்று மிகுந்த பயத்தினால் அவன் தன் இருதயத்தில் அடிக்கடி நடுக்கம் கொள்கிறான். இவ்வாறு மனுஷனின் வாய் பாதி திறந்தும், பாதி மூடப்பட்டும் இருக்கிறது, மேலும் நான் கொடுக்கும் ஐசுவரியத்தை அவனால் உண்மையிலேயே அனுபவிக்க இயலாது. நான் மனுஷனை எளிதில் கண்டிப்பதில்லை, ஆனாலும் அவன் எப்போதும் என் கையை இழுத்து, அவனுக்கு இரக்கம் காட்டும்படி என்னைக் கேட்கிறான்; மனுஷன் என்னிடம் மன்றாடும்போதுதான் நான் மீண்டும் அவனுக்கு “இரக்கம்” அளிக்கிறேன், மேலும் அவன் உடனடியாக வெட்கப்படும்படிக்கு என் வாயின் மிகக் கடுமையான வார்த்தைகளை அவனுக்குக் கொடுக்கிறேன், மேலும், எனது “இரக்கத்தை” நேரடியாகப் பெற இயலாததால், மற்றவர்கள் மூலம் அதனைப் பெற முயற்சி செய்கிறான். என் எல்லா வார்த்தைகளையும் அவன் முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது, மனுஷனின் வளர்ச்சி என் விருப்பங்களுக்கேற்ப இருக்கிறது, அவனுடைய வேண்டுகோள்கள் வீண் போகாமல் அல்லது பயனற்றுப் போகாமல் பலனளிக்கின்றன; நேர்மையான, பாசாங்கு செய்யாத மனுஷகுலத்தின் வேண்டுகோளை நான் ஆசீர்வதிக்கிறேன்.

நான் பல காலங்காலமாக செயல்பட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன், ஆனாலும் இன்று நான் பேசுகிற இத்தகைய வாக்கியங்களை மனுஷன் கேட்டதே இல்லை, மேலும் என் மகத்துவத்தையும் நியாயத்தீர்ப்பையும் அவன் ஒருபோதும் ருசிபார்த்ததே இல்லை. கடந்த கால உலகில் சிலர் என்னைப் பற்றிய கட்டுகதைகளைக் கேட்டிருந்தாலும், எனது ஐசுவரியத்தின் அளவை யாரும் மெய்யாகக் கண்டுபிடிக்கவேயில்லை. இன்றைய ஜனங்கள் என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்டாலும், என் வாயில் எத்தனை இரகசியங்கள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, இதனால் என் வாயை ஓர் அட்சயபாத்திரம் என்று கருதுகிறார்கள். எல்லா ஜனங்களும் என் வாயிலிருந்து எதையாவது பெற விரும்புகிறார்கள். அது அரசின் இரகசியங்களாக இருந்தாலும் சரி, அல்லது பரலோகத்தின் மறைபொருட்களாக இருந்தாலும் சரி, அல்லது ஆவிக்குரிய உலகின் வல்லமைகளாக இருந்தாலும் சரி, அல்லது மனுஷகுலத்தின் இலக்காக இருந்தாலும் சரி, எல்லா ஜனங்களும் இதுபோன்றவற்றைப் பெற விரும்புகிறார்கள். ஆகவே, நான் ஜனங்களை ஒன்றிணைத்து அவர்களிடம் “கதைகளைச்” சொன்னால், அவர்கள் உடனடியாக என் வழியைக் கேட்க அவர்களின் “நோய்ப்படுக்கையில்” இருந்து எழுகிறார்கள். மனுஷனுக்குள் அதிகப்படியான குறைபாடுகள் உள்ளன: அவனுக்கு “ஊட்டச்சத்து மருந்துகள்” மட்டுமல்ல, அதற்கும் மேலாக, அவனுக்கு “மனநல ஆதரவு” மற்றும் “ஆவிக்குரிய ஆகாரம்” போன்றவையும் தேவைப்படுகிறது. எல்லா ஜனங்களிடமும் இதுதான் குறைபாடாக இருக்கிறது; இது அனைத்து மனுஷரின் “நோய்” ஆகும். மனுஷனின் நோய்க்கு ஒரு சிகிச்சையை நான் அளிக்கிறேன், இதன்மூலம் சிறந்த விளைவுகளை அடையலாம், இதன்மூலம் அனைத்துமே ஆரோக்கியத்திற்கு மீட்டெடுக்கப்படலாம், இதனால், என் குணப்படுத்துதலின் காரணமாக, அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை நீங்கள் உண்மையிலேயே வெறுக்கிறீர்களா? நீங்கள் மெய்யாக, உண்மையிலேயே அதை வெறுக்கிறீர்களா? நான் ஏன் உங்களிடம் பல முறை கேட்கிறேன்? இந்தக் கேள்வியை நான் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்? உங்கள் இருதயங்களில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் உருவம் என்னவாக இருக்கிறது? அது உண்மையாகவே அகற்றப்பட்டுவிட்டதா? நீங்கள் உண்மையிலேயே அதனை உங்கள் தந்தையாகக் கருதவில்லையா? எனது கேள்விகளில் இருக்கும் எனது நோக்கத்தை அனைத்து ஜனங்களும் உணர வேண்டும். இது ஜனங்களின் கோபத்தைத் தூண்டுவதோ, அல்லது மனுஷரிடையே கிளர்ச்சியைத் தூண்டுவதோ, அல்லது அந்த மனுஷன் தனது சொந்த வழியைக் கண்டுபிடிப்பான் என்பதற்காகவோ அல்ல, ஆனால் எல்லா ஜனங்களும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அனுமதிப்பதற்கே ஆகும். ஆனாலும் யாரும் கவலைப்படக்கூடாது. அனைத்தும் என் வார்த்தைகளால் நிறைவேறும்; எந்த மனுஷனும் பங்கேற்க முடியாது, மேலும் நான் செய்யும் கிரியையை எந்த மனுஷனாலும் செய்ய முடியாது. எல்லா தேசங்களின் காற்றையும் சுத்தம் பண்ணி, பூமியில் உள்ள பிசாசுகளின் அனைத்துத் தடயங்களையும் அழிப்பேன். நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் எனது சிட்சிக்கும் கிரியையின் முதல் கட்டத்தைத் தொடங்குவேன். இவ்வாறு என் சிட்சை முழு பிரபஞ்சத்திலும் நடக்கிறது என்பதையும், நான் எல்லா தேசங்களையும் பார்ப்பதால், சிவப்பான பெரிய வலுசர்ப்பமும் மற்றும் அனைத்து வகையான அசுத்த ஆவிகளும் என் தண்டனையிலிருந்து தப்பிக்க பெலனற்றவையாக இருப்பதையும் காணமுடிகிறது. பூமியில் எனது கிரியை முடிந்ததும், அதாவது, நியாயத்தீர்ப்பின் சகாப்தம் முடிவுக்கு வரும்போது, நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முறையாகச் சிட்சிப்பேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கான எனது நீதிக்குரிய சிட்சையை என் ஜனங்கள் நிச்சயமாகக் காண்பார்கள், நிச்சயமாக என் நீதியின் காரணமாகத் துதியை ஏறெடுப்பார்கள், மேலும் என் நீதியின் காரணமாக என் பரிசுத்த நாமத்தை என்றென்றும் புகழ்வார்கள். ஆகவே, நீங்கள் உங்கள் கடமையை முறையாகச் செய்வீர்கள், மேலும் தேசங்கள் முழுவதிலும், என்றென்றும் எப்போதும் என்னைத் துதிப்பீர்கள்!

நியாயத்தீர்ப்பின் சகாப்தம் உச்சத்தை எட்டும்போது, நான் என் கிரியையை முடிக்க அவசரப்படமாட்டேன், ஆனால் சிட்சையின் சகாப்தத்தின் அத்தாட்சிகளை அதில் ஒருங்கிணைத்து, அந்த அத்தாட்சிகளை என் ஜனங்கள் அனைவருமே காண அனுமதிப்பேன்; இதில் அதிகமான பலன் கிடைக்கப்பெறும். இந்த அத்தாட்சியே நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைச் சிட்சிக்கும் வழிமுறையாகும், மேலும் எனது ஜனங்களை அவர்களது கண்களால் பார்க்க வைப்பேன், இதனால் அவர்கள் எனது மனநிலையை அதிகம் அறிந்து கொள்வார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சிட்சிக்கப்படும்போதுதான் என் ஜனங்கள் என்னை அனுபவிக்கும் நேரமாக இருக்கிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஜனங்களை எழுச்சி பெற வைத்து, அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வைப்பதே எனது திட்டம், மேலும் இதுவே நான் எனது ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் முறை ஆகும், எனது ஜனங்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கிறது. பிரகாசமான சந்திரன் உதிக்கையில், அமைதியான இரவு திடீரெனத் தகர்கிறது. சந்திரன் சிதைந்திருந்தாலும், மனுஷன் நல்ல உற்சாகத்தில் இருந்துகொண்டு, நிலவொளியின் கீழ் அமைதியாக அமர்ந்துகொண்டு, நிலவொளியின் அழகிய காட்சியைப் போற்றுகிறான். மனுஷனால் தன் உணர்ச்சிகளை விவரிக்க முடியாது; அவன் தனது எண்ணங்களைக் கடந்த காலத்தை நோக்கித் திருப்பி விட விரும்புவது போலவும், எதிர்காலத்தை எதிர்நோக்க விரும்புவதைப் போலவும், நிகழ்காலத்தை அனுபவிப்பதைப் போலவும் இருக்கிறது. அவனது முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிறது, மேலும் இன்பமான காற்றின் மத்தியில் மிருதுவான வாசனை ஒன்று பரவுகிறது; மென்மையான காற்று வீசத் தொடங்கும் போது, மனுஷன் வளமான நறுமணத்தைக் கண்டுபிடிக்கிறான், மேலும் அவன் அதனால் போதையேற்றப்பட்டவனைப் போல தன்னால் எழும்ப முடியாமல் இருக்கிறான். மனுஷரிடையே நான் தனிப்பட்ட முறையில் வரும் தருணம் இதுதான், மேலும் மனுஷனுக்கு வளமான நறுமணத்தின் உயரிய உணர்வு இருக்கிறது, இதனால் எல்லா மனுஷரும் இந்த நறுமணத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். நான் மனுஷனுடன் சமாதானமாக இருக்கிறேன், மனுஷன் என்னுடன் இணக்கமாக வாழ்கிறான், இனியும் அவன் என்னைப் பொறுத்தவரை மாறுபட்டவன் அல்ல, இனியும் மனுஷனின் குறைபாடுகளை நான் சுத்திகரிக்க மாட்டேன், இனியும் மனுஷனின் முகத்தில் துன்பகரமான பார்வை இருக்கப்போவதில்லை, இனியும் மரணம் மனுஷகுலம் முழுவதையும் அச்சுறுத்துவதில்லை. இன்று, நான் மனுஷனுடன் சேர்ந்து, அவனுடனேயே சிட்சையின் சகாப்தத்தில் முன்னேறுகிறேன். நான் என் கிரியையைச் செய்கிறேன், அதாவது, நான் என் தடியால் மனுஷரை அடிக்கிறேன், அது மனுஷனில் கலகம் பண்ணுகிறவன் மீது விழுகிறது. மனுஷனின் பார்வையில், என் தடிக்கு விசேஷித்த வல்லமைகள் இருப்பதாகத் தெரிகிறது: இது என் எதிரிகளாகிய அனைவர்மீதும் படர்ந்து, அவர்களை எளிதில் விட்டுவிடுவதில்லை; என்னை எதிர்க்கும் அனைவருக்கும், தடி அதன் இயல்பான செயல்பாட்டைச் செய்கிறது; என் கைகளில் இருப்பவர்கள் அனைவரும் என் நோக்கத்தின்படி தங்கள் கடமையைச் செய்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் என் விருப்பங்களை மீறுவதில்லை அல்லது அவற்றின் சாராம்சத்தை மாற்றுவதில்லை. இதன் விளைவாகத், தண்ணீர்கள் கர்ஜிக்கும், மலைகள் கவிழும், பெரிய ஆறுகள் சிதறும், மனுஷன் எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாவான், சூரியன் மங்கிப் போகும், சந்திரன் இருட்டாகும், மனுஷன் இனி நிம்மதியாக வாழ முடியாது, தேசத்தில் இனி சமாதானம் இருக்காது, வானம் இனி ஒருபோதும் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்காது, இனியும் நிலைத்திருக்காது. எல்லா விஷயங்களும் புதுப்பிக்கப்பட்டு அவற்றின் அசல் தோற்றத்தை மீட்டெடுக்கும். பூமியிலுள்ள எல்லா வீடுகளும் அழிந்துபோகும், பூமியிலுள்ள எல்லாத் தேசங்களும் சிதறுண்டு போகும்; கணவனும் மனைவியும் ஒன்றிணையும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, தாயும் மகனும் இனியும் சந்திக்கப்போவதில்லை, மீண்டும் ஒருபோதும் தந்தையும் மகளும் ஒன்றுசேரப் போவதில்லை. பூமியில் இருப்பவை அனைத்தும் என்னால் அடித்து நொறுக்கப்படும். ஜனங்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியிடுவதற்கான வாய்ப்பை நான் அவர்களுக்கு வழங்குவதில்லை, ஏனென்றால் நான் உணர்ச்சிகளற்றவனாக இருக்கிறேன், மேலும் ஜனங்களின் உணர்ச்சிகளை மிகவும் வெறுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். ஜனங்களிடையேயான உணர்ச்சிகளின் காரணமாகவே நான் ஒரு பக்கமாக தள்ளப்பட்டேன், இதனால் நான் அவர்களின் பார்வையில் “வேறொருவர்” ஆகிவிட்டேன்; ஜனங்களிடையேயான உணர்ச்சிகளின் காரணமாகவே நான் மறக்கடிக்கப்பட்டேன்; மனுஷனுடைய உணர்ச்சிகளின் காரணமாகவே அவன் அவனது “மனசாட்சியைக்” கைப்பற்றும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறான்; மனுஷனின் உணர்ச்சிகளால்தான் அவன் எப்போதும் என் சிட்சையினால் சோர்வடைகிறான்; மனுஷனின் உணர்ச்சிகளின் காரணமாகவே அவன் என்னை நியாயமற்றவர் என்றும், அநியாயக்காரர் என்றும் அழைக்கிறான், மேலும் நான் விஷயங்களைக் கையாளும்போது மனுஷனின் உணர்வுகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகிறான். பூமியில் எனக்கு உறவினர்களும் இருக்கிறார்களா? எனது முழு நிர்வாகத் திட்டத்துக்காக, என்னைப் போல, இரவு பகல் பார்க்காமல், உணவு அல்லது தூக்கம் பற்றி சிந்திக்காமல் யார் கிரியை செய்கிறார்கள்? மனுஷனை தேவனுடன் எவ்வாறு ஒப்பிட முடியும்? மனுஷன் தேவனுடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும்? சிருஷ்டிக்கும் தேவன், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனைப் போலவே எப்படி இருக்க முடியும்? பூமியில் மனுஷனுடன் இணைந்து எப்படி என்னால் வாழவும் செயல்படவும் முடியும்? என் இருதயத்தில் இருக்கும் அக்கறையை யாரால் உணர முடிகிறது? இது மனுஷனின் ஜெபமா? நான் ஒரு முறை மனுஷனுடன் சேர்ந்து அவனுடன் ஒன்றாக நடக்க ஒப்புக்கொண்டேன்—ஆம், இன்றுவரை மனுஷன் என் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்ந்துவருகிறான், ஆனால் மனுஷன் என் பராமரிப்பிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளக்கூடிய ஒரு நாள் எப்போதாவது வருமா? மனுஷன் ஒருபோதும் என் இருதயத்திற்காக அக்கறையுடன் பாரம் கொள்ளவில்லை என்றாலும், வெளிச்சம் இல்லாத தேசத்தில் யாரால் தொடர்ந்து வாழ முடியும்? என் ஆசீர்வாதங்களால் மட்டுமே மனுஷன் இன்று வரை வாழ்ந்துவருகிறான்.

ஏப்ரல் 4, 1992

முந்தைய: அத்தியாயம் 27

அடுத்த: அத்தியாயம் 29

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக