அத்தியாயம் 32

ஒளி என்றால் என்ன? கடந்த காலத்தில், நீங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையையின் மறுரூபத்தை ஒளியாகக் கருதினீர்கள். எல்லா நேரங்களிலும் உண்மையான ஒளி இருக்கிறது: அதாவது, எனக்கு அருகில் நெருங்கி வருவதன் மூலமும் என்னுடன் ஐக்கியங்கொள்வதன் மூலமும் தேவன் என்னவாக இருக்கிறார் என்பதை அறிவதே ஆகும். தேவனுடைய வார்த்தைகளில் நுண்ணறிவைக் கொண்டிருப்பது மற்றும் அவருடைய வார்த்தைகளில் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்வது—அதாவது, அவற்றைப் புசித்துப் பானம்பண்ணும் போது, தேவனுடைய வார்த்தைகளில் ஆவியை உணர்ந்து, தேவனுடைய வார்த்தைகளை உங்களுக்குள் பெறுதலாகும்; அனுபவத்தின் மூலம் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், மேலும், அவருடன் ஐக்கியங்கொள்ளும்போது தேவனுடைய வெளிச்சத்தைப் பெறுகிறீர்கள்; அனைத்தும் ஒளியாக இருக்கிறது. தியானிக்கும் போதும் ஆழ்ந்து சிந்திக்கும் போதும் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளில் எந்த நேரத்திலும் ஒளியூட்டப்படலாம் மற்றும் புதிய நுண்ணறிவைப் பெறலாம். நீ தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொண்டால், மற்றும் நீ புதிய வெளிச்சத்தை உணர்ந்தால், அப்போது நீ உன்னுடைய ஊழியத்தில் வல்லமையைப் பெற்றிருக்க மாட்டாயா? நீங்கள் ஊழியம் செய்யும் போது நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள்! அது ஏனென்றால், நீங்கள் யதார்த்தத்தைத் தொட்டிருக்கவில்லை, மற்றும் நீங்கள் உண்மையான அனுபவமோ அல்லது நுண்ணறிவோ பெற்றிருக்கவில்லை. நீ உண்மையான நுண்ணறிவைப் பெற்றிருந்தால், எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்பதை நீ அறிந்திருக்க மாட்டாயா? சில விஷயங்கள் உனக்கு ஏற்படும் போது, நீ அவற்றை விடாமுயற்சியுடன் அனுபவிக்க வேண்டும். எளிதான மற்றும் வசதியான சூழலில் கூட, உன்னால் தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில் வாழ முடியும் என்றால், அப்போது நீ ஒவ்வொரு நாளும் தேவனுடைய முகத்தைப் பார்ப்பாய். நீ தேவனுடைய முகத்தைப் பார்த்து தேவனுடன் தொடர்பு கொண்டுவிட்டால், நீ ஒளியைப் பெற்றிருக்க மாட்டாயா? நீங்கள் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதில்லை, நீங்கள் எப்போதும் வெளியில், தேடிக்கொண்டிருக்கிறீர்கள்; இதன் விளைவாக, நீங்கள் எதையும் கண்டுபிடிப்பதில்லை மற்றும் வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றம் தாமதமாகிவிட்டது.

வெளிப்புறத்தில் கவனம் செலுத்த வேண்டாம்; அதற்குப் பதிலாக, உள்ளாக, தேவனிடத்தில் நெருங்கி, போதுமான அளவு ஆழமாக ஐக்கியங்கொண்டு, தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்; அப்போது, உங்கள் ஊழியத்தில் நீங்கள் ஒரு பாதையைப் பெற்றிருக்க மாட்டீர்களா? நீங்கள் விடாமுயற்சியுடன் கவனம் செலுத்தவும் கீழ்ப்படியவும் வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் என் வார்த்தைகளின்படி மட்டுமே செய்து, நான் சுட்டிக்காட்டும் பாதைகளில் பிரவேசித்தால், அப்போது நீங்கள் ஒரு பாதையைப் பெற்றிருக்க மாட்டீர்களா? நீ யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையைக் கண்டுபிடிப்பாயானால், அப்போது தேவனுக்கு ஊழியம் செய்வதற்கான ஒரு பாதையையும் நீ பெற்றிருப்பாய். இது எளிதானது! தேவனுடைய பிரசன்னத்திற்குள் அதிகமாக வாருங்கள், தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகச் சிந்தியுங்கள், உங்களுக்கு குறைவுபட்டிருப்பதை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் புதிய நுண்ணறிவையும், புதிய ஞானத்தையும் கூட பெற்றிருப்பீர்கள் மற்றும் நீங்கள் ஒளியைப் பெற்றிருப்பீர்கள்.

முந்தைய: அத்தியாயம் 31

அடுத்த: அத்தியாயம் 33

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக