அத்தியாயம் 101

என்னுடைய நிர்வாகத்தில் தலையிடும் அல்லது என்னுடைய திட்டங்களைக் குலைக்க எண்ணும் யாரிடத்திலும் நான் கொஞ்சம் கூட தயவு காட்ட மாட்டேன். நான் சொல்லும் வார்த்தைகளில் இருந்து ஒவ்வொருவரும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் கூறுவதைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும்: எந்த வகையான பங்கை நீ ஆற்றுகிறாய்? நீ எனக்காக வாழ்கிறாயா அல்லது நீ சாத்தானுக்கு சேவகம் செய்கிறாயா? உங்கள் ஒவ்வொருவரின் செயல்கள் என்னிடம் இருந்தா அல்லது பிசாசிடம் இருந்தா முளைத்து வருகின்றன? இவற்றைப் பொறுத்த வரையில் எல்லாம் நீ தெளிவாக இருக்க வேண்டும். இதன் மூலம் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளுக்கு இடறலுண்டாக்குவதையும் என்னுடைய கோபத்தைத் தூண்டுவதையும் தவிர்க்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, ஜனங்கள் எப்போதும் என்னிடம் விசுவாசமற்றவர்களாகவும் பாசமில்லாதவர்களுமாகவே இருந்தனர்; அவர்கள் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் எனக்குத் துரோகம் செய்தார்கள். இந்தக் காரணங்களுக்காகத் தான் இந்த ஜனங்கள் இன்று என்னுடைய நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளுகிறார்கள். நான் வெறும் ஒரு மனிதனைப் போல் தோன்றினாலும், என்னால் அங்கீகரிக்கப்படாத எவரும் (இதில் இருந்து நீ என்னுடைய அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: பார்க்க நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்பதோ, நீ எவ்வளவு ரம்மியமாக இருக்கிறாய் என்பதோ அல்ல, ஆனால் உன்னை நான் முன்குறித்துத் தெரிந்தெடுத்திருக்கிறேனா) என்னால் புறம்பாக்கப்பட வேண்டும். இது முற்றிலும் உண்மை. இது ஏனென்றால் நான் வெளித்தோற்றத்தில் மனிதனாகத் தோற்றமளிக்கிறேன், ஆனால் என்னுடைய தெய்வீகத்தன்மையை உய்த்தறிய நீ என்னுடைய மனிதத்தன்மையை உற்று நோக்க வேண்டும். நான் பலமுறை சொன்ன மாதிரி, “சாதாரண மனிதத்தன்மையும் முழு தெய்வீகத்தன்மையும் முழுமையான தேவனின் பிரிக்க முடியாத இரு பகுதிகள் ஆகும்.” ஆயினும் கூட, இன்னும் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை; நீங்கள் உங்களுடைய அந்தத் தெளிவற்ற தேவனுக்கு மட்டுந்தான் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். நீங்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாத ஜனங்களாக இருக்கிறீர்கள். இருப்பினும், இத்தகைய ஜனங்கள் இன்னும் முதற்பேறான குமாரர்களாக இருக்க விரும்புகிறார்கள். எவ்வளவு வெட்கக் கேடானது! அவர்கள் அவர்களுடைய சொந்த நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவில்லை. என்னுடைய ஜனங்களாக ஊழியம் செய்தவதற்குக் கூட அவர்களுக்கு அந்தஸ்து இல்லை, ஆகவே அவர்கள் எப்படி என் முதற்பேறான குமாரர்களாகவும் என்னோடு சேர்ந்து ராஜாக்களாகவும் இருக்க முடியும்? இத்தகைய ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிவதில்லை; அவர்கள் சாத்தானின் சந்ததியார், அவர்கள் என் வீட்டில் தூண்களாக இருக்கவும், அதுமட்டும் அல்லாமல் எனக்கு முன் ஊழியம் செய்யவும் தகுதியற்றவர்கள். ஆகவே நான் அவர்களை ஒருவர் பின் ஒருவராக புறம்பாக்குவேன், மேலும் ஒருவர் பின் ஒருவராக அவர்களுடைய உண்மையான முகங்களை வெளிப்படுத்துவேன்.

என்னுடைய கிரியை தடுக்கப்படாமல், சிறிதளவு தடையும் இல்லாமல் படிப்படியாக முன்னேறுகிறது. ஏனென்றால் நான் வெற்றியை அடைந்துவிட்டேன், மேலும் ஏனென்றால் முழு பிரபஞ்சத்திற்கும் நான் இராஜாவாக ஆளுகை செய்து கொண்டு இருக்கிறேன். (பிசாசான சாத்தானை ஜெயங்கொண்ட பின்னர் நான் என்னுடைய அதிகாரத்தைப் புதிதாக மீட்டிருக்கிறேன் என்பதைத் தான் நான் இங்குக் குறிப்பிடுகிறேன்). நான் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் அனைவரையும் அடையும் போது, சீயோன் மலை மீது ஜெயக்கொடி ஏறும். அதாவது என் முதற்பேறான குமாரர்கள் தான் என் ஜெயக்கொடி, என் மகிமை, மேலும் அதைப் பற்றியே நான் பெருமை கொள்ளுகிறேன்; நான் சாத்தானை அவமானப்படுத்தியதற்கு அவர்கள் ஓர் அடையாளம், மேலும் நான் கிரியை செய்யும் ஒரு முறை அவர்களே. (நான் முன்குறித்த பிறகு சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட, ஆனால் மீண்டும் என் பக்கமாக திரும்பி வந்த, ஒரு கூட்ட ஜனங்கள் மூலம் நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை அவமானப்படுத்தி கலகத்தின் குமாரர்களை எல்லாம் அரசாட்சி செய்வேன்.) என் சர்வவல்லமை இருப்பது என் முதற்பேறான குமாரர்களிடத்திலேயே; அவர்களே, மாற்ற முடியாத, மறுக்க முடியாத, என் மாபெரும் வெற்றி. அவர்கள் மூலமாகவே நான் என் நிர்வாகத் திட்டத்தை முடிப்பேன். “உங்கள் மூலமாகவே எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் என் சிங்காசனத்தின் முன்பாகத் திரும்பி வரச் செய்வேன்” என்று கடந்த காலத்தில் நான் கூறியதற்கு இது அர்த்தமாகும். “உங்கள் தோள்களில் அதிக பாரங்கள்” என்ற வார்த்தைகளை நான் பேசிய போது இதைத் தான் நான் குறிப்பிட்டேன். இது தெளிவாகிவிட்டதா? நீங்கள் புரிந்து கொண்டீர்களா? என்னுடைய ஒட்டு மொத்த நிர்வாகத் திட்டத்தின் விளைவே முதற்பேறான குமாரர்கள்; இந்தக் காரணத்திற்காக நான் இந்தக் குழுவை ஒருபோதும் இலகுவாக நடத்தியதில்லை, மேலும் நான் அவர்களைக் கடுமையாகச் சீர்படுத்தியிருக்கிறேன் (உலகத்தில் அடைந்த துன்பங்கள், குடும்பங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்கள், பெற்றோர்களால், கணவர்களால், மனைவிகளால் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்படுதல்—மொத்தத்தில் உலகத்தால் கைவிடப்படுதலும் காலத்தால் கைவிடப்படுதலும் ஆகியவையே அந்தச் சீர்ப்படுத்தல்கள்), மேலும் இதனால் தான் இன்று எனக்கு முன்னால் வரும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றிருக்கிறாய். “மற்ற ஜனங்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த நாமத்தை நான் ஏன் ஏற்றுக்கொண்டேன்?” என்று அடிக்கடி நீங்கள் சிந்தித்த கேள்விக்கு இதுதான் பதில். இப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்!

இன்று எதுவும் கடந்த காலத்தைப் போல் இல்லை. என்னுடைய நிர்வாகத் திட்டம் புதிய முறைகளைத் தழுவிக் கொண்டுள்ளது. என்னுடைய கிரியை முன்பைவிட இன்னும் அதிக வித்தியாசமாக இருக்கிறது. என்னுடைய பேச்சுக்கள் முன்னை விட அபூர்வமானவையாக இருக்கின்றன. அதனால் நீங்கள் எனக்குத் தகுந்த முறையில் ஊழியம் செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்ப நான் வலியுறுத்தியிருக்கிறேன் (இது ஊழியம் செய்வோருக்குச் சொல்லப்படுகிது). உங்களை நீங்களே எதிர்மறையாக நடத்தாதீர்கள், ஆனால் ஓர் ஆர்வமிக்கத் தேடலைப் பராமரித்து வாருங்கள். கொஞ்சம் கிருபையைப் பெறுதல் மகிழ்ச்சிகரமானதல்லவா? உலகில் துன்பம் அடைவதைவிட இது மேலானது. நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ எனக்கு முழுமனதோடு ஊழியம் செய்யாமல் அதற்குப் பதிலாக நான் அநீதியுள்ளவராக இருப்பதாகக் குறை கூறினால், நாளை நீ பாதாளத்துக்குள்ளும் நரகத்துக்குள்ளும் இறங்குவாய். ஒருவனும் சீக்கிரமாகச் சாக விரும்புவதில்லை—இல்லையா? இன்னும் ஒரு நாள் வாழ்க்கையும் முக்கியமானது, ஆகவே நீ முழுமையாக நிர்வாகத் திட்டத்துக்கு உன்னை வழங்க வேண்டும், மேலும் அதன் பின்னர், உன்னைப் பற்றிய என் நியாயத்தீர்ப்புக்குக் காத்திரு மேலும் என்னுடைய நீதியான சிட்சை உன் மேல் நடைபெறவும் காத்திரு. நான் கூறுவது அர்த்தமற்றது என்று கருதாதே; நான் என் நீதியில் இருந்தும் என் மனநிலையில் இருந்தும் பேசுகிறேன். மேலும், நான் என்னுடைய மகிமையோடும் நீதியோடும் பேசுகிறேன். நான் நீதியுள்ளவர் இல்லை என்று ஜனங்கள் ஏன் கூறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்னைத் தெரியாது; இது அவர்களுடைய கலக மனநிலையின் ஒரு தெளிவான வெளிப்பாடு. என்னைப் பொறுத்த வரையில் உணர்ச்சி இல்லை; மாறாக நீதி, மகத்துவம், நியாயத்தீர்ப்பு, மற்றும் கோபம் மட்டுமே உள்ளன. அதிக நேரம் செல்லும் போது, அதிகமாய் என் மனநிலையை நீ பார்ப்பாய். நிகழ்காலம் ஒரு மாறும் நிலை, இதன் ஒரு சிறு பகுதியைத் தான் உங்களால் பார்க்க முடியும்; உங்களால் சில விஷயங்களின் புற வெளிப்பாடுகளை மட்டும் தான் பார்க்க முடியும். என்னுடைய முதற்பேறான குமாரர்கள் தோன்றும் போது, எல்லாவற்றையும் பார்த்து அவற்றை எல்லாம் புரிந்து கொள்ள நான் உங்களை அனுமதிப்பேன். எல்லோரும் தங்கள் இருதயங்களிலும் வார்த்தைகளிலும் நம்புவார்கள். எனக்குச் சாட்சியாக உங்களைப் பேசவும், என்றென்றும் என்னைத் துதிக்கவும் மற்றும் என்றென்றும் என்னை உயர்த்தவும் வைப்பேன். இது தவிர்க்க முடியாதது, யாராலும் மாற்ற முடியாது. அதை ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது, நம்பவும் முடியாது.

தரிசனங்களைப் பொறுத்த வரையில் முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்களுக்கு தெளிவு அதிகரித்து வருகிறது. என் மேல் இருக்கும் அவர்களுடைய அன்பு பெரிதாக வளர்கிறது. (இது காதல் அல்ல, அது சாத்தான் என்னை சோதிப்பது, மேலும் இது காணக் கூடிய ஒன்றாகும். இந்தக் காரணத்தால் தான், என் முன்னால் தங்கள் வசீகரத்தைக் காட்டுபவர்கள் உள்ளனர் என்று முன்னரே நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அத்தகைய ஜனங்கள் சாத்தானின் அடிமைகள். அவர்களுடைய பார்வையால் நான கவரப்படுவேன் என்று நம்புகிறார்கள். வெட்கக்கேடு! அவர்கள் கேடுகெட்டவர்களிலும் கீழானவர்கள்!). இருப்பினும், முதற்பேறான குமாரர்கள் அல்லாத ஜனங்கள், இந்தக் காலகட்டங்களில் நான் பேசி இருக்கிற வார்த்தைகள் மூலம், தரிசனங்களைப் பற்றி மிகவும் தெளிவற்றவர்களாகி நான் நானாக இருக்கும் ஆள்தத்துவத்தின் மீது விசுவாசத்தை இழந்து விட்டார்கள். அதன்பின்னர், அவர்கள் அக்கறையற்றவர்களாக மாறி, முடிவில் விழுந்து போகிறார்கள். இத்தகைய மக்களால் தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது. இந்தக் கால கட்டத்தில் நான் சொல்லிக் கொண்டிருப்பதின் இலக்கும் அதுவே; எல்லோரும் இதைப் பார்க்க வேண்டும் (நான் முதற்பேறான குமாரர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்), மேலும் என் பேச்சுக்கள் மற்றும் செய்கைகள் மூலம், என்னுடைய அதிசயத்தன்மையை நோக்கிப் பாருங்கள். நான் ஏன் சமாதானப் பிரபுவாக, நித்திய பிதாவாக, அதிசயமானவராக, ஆலோசனைக் கர்த்தாவாக இருக்கிறேன் என்று ஏன் கூறப்படுகிறது. என் அடையாளம், என் பேச்சுக்கள் அல்லது நான் என்ன செய்கிறேன் என்ற கண்ணோட்டத்தில் இருந்து இதை விளக்குவது அதிக மேலோட்டமானதாக இருக்கும்; அது குறிப்பிடப்படுவதற்குக் கூட தகுதியற்றது. முதற்பேறான குமாரர்களைப் பரிபூரணப்படுத்துவதற்கான என் வல்லமை, சாத்தானின் மேல் என் நியாயத்தீர்ப்பு, மற்றும் முதற்பேறான குமாரர்களுக்கு நான் அளிக்கும் எல்லையற்ற ஆசீர்வாதங்கள் ஆகியவற்றில் இருந்து சமாதானப் பிரபு என்று என்னை அழைக்கும் காரணம் தோன்றுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், என்னைச் சமாதானப் பிரபு என்று அழைக்கும் தகுதி முதற்பேறான குமாரர்களுக்கு மட்டுமே இருக்கிறது, ஏனெனில் நான் என் முதற்பேறான குமாரர்களை நேசிக்கிறேன், மற்றும் “சமாதானப் பிரபு” என்ற பட்டப்பெயர் அவர்களின் வாயில் இருந்து வர வேண்டும். அவர்களுக்கு நான் தான் சமாதானப் பிரபு. என்னுடைய குமாரர்களுக்கும், என் ஜனங்களுக்கும் நான் நித்திய பிதா என்று அறியப்படுகிறேன். என் முதற்பேறான குமாரர்களின் இருப்பின் காரணமாகவும் என்னுடன் சேர்ந்து ராஜ்யபார அதிகாரத்தைக் கொண்டு எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் (அதாவது, குமாரர்களும் ஜனங்களும்) ஆட்சிசெய்ய முடிவதாலும், அதனால் குமாரர்களும் ஜனங்களும் என்னை நித்திய பிதா என்று அழைக்க வேண்டும்—இது முதற்பேறான குமாரர்களுக்கும் மேலான தேவனையே குறிக்கிறது குமாரர்கள், ஜனங்கள் அல்லது முதற்பேறான குமாரர்கள் அல்லாதவர்களுக்கு நான் அதிசயமானவராக இருக்கிறேன். என்னுடைய அதிசயமான செயல்களின் காரணமாக, அவிசுவாசிகளால் என்னைப் பார்க்கவே முடியாது (ஏனெனில் நான் அவர்களின் கண்களை மறைத்திருக்கிறேன்), மேலும் என்னுடைய கிரியைகளின் தெளிவான பார்வை அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்களுக்கு நான் தான் அதிசயமானவர். எல்லாப் பிசாசுகளுக்கும் சாத்தானுக்கும், நான் தான் ஆலோசனைக்கர்த்தா, ஏனெனில் நான் செய்வதெல்லாம் அவர்களை அவமானப்படுத்தவே; என்னுடைய செய்கைகள் எல்லாம் எனது முதற்பேறான குமாரர்களுக்காகவே. என்னுடைய ஒவ்வொரு படிநிலையும் இலகுவாக முன்னேறுகிறது, மேலும் நான் ஒவ்வொரு படியிலும் வெற்றி அடைகிறேன். மேலும், என்னால் சாத்தானின் திட்டங்களை எல்லாம் ஊடுறுவிப் பார்க்க முடியும், அவற்றை என் ஊழியத்துக்குப் பயன்படுத்த முடியும், அவற்றை எதிர்மறையான பக்கத்தில் இருந்து என்னுடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்த ஒரு பொருளாக மாற்ற முடியும். “ஆலோசனைக் கர்த்தா” என்பதற்கு இதுவே அர்த்தம். இதை யாராலும் மாற்ற முடியாது, மேலும் யாராலும் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாது. இருந்தாலும், என்னுடைய ஆள்தத்துவத்தைப் பொறுத்த வரையில், நான்தான் சமாதானப் பிரபு மற்றும் நித்திய பிதா, மட்டுமல்லாமல் ஆலோசனைக் கர்த்தாவும் அதிசயமானவருமாக இருக்கிறேன். இதில் உண்மையில்லாதது ஒன்றும் இல்லை. இது ஒரு மறுக்க முடியாத, மாற்ற முடியாத உண்மையாகும்.

சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது; குறிப்பிட்டு நோக்க எந்த ஒப்புமையும் இல்லை. அதனால் பொறுமையாய்க் காத்திருக்கும்படி நான் உங்களைக் கோருகிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் தடுமாற்றத்தால் விட்டுவிட வேண்டாம். ஏனெனில் கடந்த காலத்தில் நீங்கள் புரிந்து வைத்திருந்தது இப்போது காலாவதியாகிவிட்டது, அது இனிமேலும் பொருந்தாது, மேலும் நிகழ்காலம் என்பது வம்சாவளிகளுக்கு இடையில் இருக்கும் மாற்றங்கள் போல ஒரு மாற்றத்தின் காலமாகும். இந்தக் காரணத்தினால், நீங்கள் உங்கள் சிந்தனையை மாற்றி உங்கள் பழைய எண்ணங்களை அகற்றக் கோருகிறேன். “பரிசுத்தமான நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளுதல்” என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். என்னுடைய வார்த்தைகளை என்னால் மட்டுமே விளக்க முடியும், நான் எதைச் செய்ய தீர்மானித்திருக்கிறேன் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும். ஆகையினால், என்னுடைய வார்த்தைதைகள் மட்டுமே அசுத்தம் இல்லாமல் இருக்கின்றன, முற்றிலுமாக நான் நினைப்பதாக இருக்கின்றன, மேலும் அதனால் அது பரிசுத்தமான நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு இருக்கிறது. மனித மனதைப் புரிந்து கொள்வது வெறும் கற்பனையே; மனிதப் புரிதல் அசுத்தமானது, என்னுடைய நோக்கங்களை அடைய முடியாது. ஆகையினால், நானே பேசுகிறேன், மற்றும் நான் தானே விளக்குகிறேன், “என் கிரியையை நானே செய்கிறேன்” என்று நான் சொல்வதன் அர்த்தம் இதுவே. இது நிர்வாகத் திட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி. எல்லா ஜனங்களும் என்னை மகிமைப்படுத்தி என்னைத் துதிக்க வேண்டும். என்னுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுவதைப் பொறுத்த வரையில், நான் அந்த வல்லமையை மனிதர்களுக்கு ஒருபோதும் கொடுக்கவில்லை, அதுமட்டும் அல்லாமல் அவர்களுக்கு அதற்கான திறமையும் இல்லவே இல்லை. பிசாசை அவமானப்படுத்தும் என்னுடைய முறைகளில் இதுவும் ஒன்று. (மனிதர்கள் என் பேச்சுக்களைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு படிநிலையிலும் என் நோக்கத்தை ஆராய முடியும் என்றால், அதன் பின் சாத்தான் அது நினைத்த போதெல்லாம ஜனங்களைப் பிடிக்க முடியும். இதன் விளைவாக அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி முதற்பேறான குமாரர்களை தெரிந்தெடுக்கும் என் நோக்கத்தை சாத்தியமற்றதாக்கி விடுவார்கள். நான் ஒவ்வொரு இரகசியத்தையும் புரிந்து கொண்டால், ஆள்தத்துவமாக இருக்கும் நான் ஒருவராலும் அளவிட முடியாதப் பேச்சுக்களைப் பேச முடியுமானால், பின்னர் நானும் சாத்தானால் பிடிக்கப்படலாம். இதனால் தான் மாம்சத்தில் இருக்கும் போது நான் இயற்கைக்கு மீறிய நிலையில் இருப்பதே இல்லை.) இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது ஆகும். ஆழமான வார்த்தைகளையும் கொள்கைகளையும் நீங்களாகவே புரிந்து கொள்ள முயல வேண்டாம்.

முந்தைய: அத்தியாயம் 100

அடுத்த: அத்தியாயம் 102

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக