அத்தியாயம் 31

என்னை உண்மையாக விரும்பும் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என்னை நேசிப்பதில் கவனம் செலுத்தினால், நான் நிச்சயமாக உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பேன். என் நோக்கங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? என் வீட்டில் உயர்ந்த நிலை மற்றும் தாழ்ந்த நிலை என்ற பாகுபாடு கிடையாது. எல்லோரும் என் குமாரர்களாய் இருக்கிறார்கள், நான் உங்கள் பிதாவும், உங்கள் தேவனுமாய் இருக்கிறேன். நான் உயர்ந்தவரும் மற்றும் தனித்துவமானவருமாய் இருக்கிறேன். நான் பிரபஞ்சத்தையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறேன்!

நீ என் வீட்டில் “தாழ்மையுடனும் பணிவுடனும் எனக்கு ஊழியம் செய்ய வேண்டும்”. இந்தச் சொற்றொடர் உன்னுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். மரத்தில் இலையாக இருக்காமல், மரத்தின் வேராக இருந்து, வாழ்வில் ஆழமாக வேரூன்ற வேண்டும். வாழ்க்கையின் உண்மையான அனுபவத்திற்குள் பிரவேசி, என் வார்த்தைகளின்படி வாழ், ஒவ்வொரு விஷயத்திலும் என்னை அதிகமாகத் தேடு, எனக்கு அருகில் வந்து என்னுடன் ஐக்கியங்கொள். எந்தவொரு வெளிப்புற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டாம், எந்தவொரு நபராலும், நிகழ்வாலும் அல்லது பொருளாலும் கட்டுப்படுத்தப்படாமல், நான் என்னவாக இருக்கிறேன் என்பதைப் பற்றி ஆவிக்குரிய ஜனங்களுடன் மட்டுமே ஐக்கியங்கொள். எனது நோக்கங்களைப் புரிந்து கொள், என் ஜீவன் உங்கள் மத்தியில் பாய்ந்து செல்லட்டும், மேலும் எனது வார்த்தைகளை வாழ்ந்துகாட்டு மற்றும் எனது கோரிக்கைகளுக்கு இசைந்துகொடு.

நான் உன்னிடம் ஒப்புவித்திருக்கிற விஷயங்களுக்கு உன் முழு பலத்தையும் அர்ப்பணி; என் இருதயத்தைத் திருப்திப்படுத்த உன்னால் முடிந்த அனைத்தையும் செய். நானே உனது வல்லமையாக இருக்கிறேன் மற்றும் நானே உனது மகிழ்ச்சியாக இருக்கிறேன்…. நானே உனது எல்லாமுமாக இருக்கிறேன். என்னை மட்டுமே பின்தொடர். உன்னுடைய இருதயத்தின் உண்மையான விருப்பங்களையும், நீ எனக்காக உன்னையே உண்மையாக அர்ப்பணிப்பதையும் நான் அறிகிறேன், ஆனால் நீ என் வீட்டில் எனக்கு விசுவாசத்தைக் காட்டுவது எப்படி மற்றும் இறுதிவரை என்னைப் பின்பற்றுவது எப்படி என்பதை நீ அறிந்திருக்க வேண்டும்.

திருச்சபை எனது இருதயமாய் இருக்கிறது, எனது திருச்சபையைக் கட்டுவதற்காக நான் கவலையுடன் வைராக்கியங்கொண்டிருக்கிறேன். உனக்கென்று சிறிதும் வைத்துக் கொள்ளாமல், உன்னையே காணிக்கையாக்குவதன் மூலமும், என் இருதயம் திருப்தியடையும்படி எனது நோக்கங்களுக்கு அக்கறை காட்டுவதன் மூலமும் நீ உன்னையே எனக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 30

அடுத்த: அத்தியாயம் 32

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த...

ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்

பரிசுத்த ஆவியானவர் மக்கள் மீது கிரியை செய்யும் போது அவர்கள் இருக்கும் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும்....

சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

சரியான திருச்சபை வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் பிரசங்கங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் ஏன் இன்னும்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக