கிரியையும் பிரவேசித்தலும் (4)

பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு ஏற்ப மனுஷனால் உண்மையிலேயே பிரவேசிக்க முடிந்தால், வசந்தகால மழைக்குப் பிறகு மூங்கில் முளைப்பது போல அவனது ஜீவிதம் விரைவாக முளைக்கும். பெரும்பான்மையான ஜனங்களின் தற்போதைய வளர்ச்சியை ஆராயும்போது, ஜனங்கள் ஜீவிதத்திற்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுப்பதில்லை, அனால் அதற்குப் பதிலாக எந்தவொரு விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று தோன்றும் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இல்லையெனில், தாங்கள் எந்தத் திசையில் செல்ல வேண்டும், யாருக்காக செல்ல வேண்டும் என்று தெரியாமல், அவர்கள் இலக்கற்றும், சீரற்ற மற்றும் கவனம் செலுத்தாத பாணியிலும் கிரியை செய்கிறார்கள். அவர்கள் “தாழ்மையுடன் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள்.” உண்மை என்னவென்றால், உங்களில் சிலருக்குக் கடைசிக் காலத்திற்கான தேவனின் நோக்கங்களைப் பற்றி எதுவும் தெரியாது. உங்களில் எவருக்கும் தேவனின் அடிச்சுவடு தெரியாது, ஆனால் அதைவிட மோசமாக, தேவனின் இறுதி சாதனை என்னவாக இருக்குமென்றும் யாருக்கும் தெரியாது. ஆயினும் எல்லோரும், முழு மனவுறுதி மற்றும் சகிப்புத்தன்மையின் மூலம், சந்தோஷமான நேரத்தை எதிர்பார்த்து அவர்களின் தசைகளை மடக்கி நீட்டி சண்டைக்குத் தயாராகிறார்கள்[1] என்பது போல மற்றவர்களின் ஒழுக்கத்திற்கும் கையாளுதலுக்கும் ஆளாகிறார்கள். மனுஷகுலத்தினரிடையே இந்த “விசித்திரமான காட்சிகள்” குறித்து நான் எந்த வர்ணனையும் வழங்கப்போவதில்லை, ஆனால் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. தற்சமயம் பெரும்பாலான ஜனங்கள் அசாதாரணத்தன்மை[2] நோக்கி வளர்ந்து வருகின்றனர், மேலும் அவர்கள் பிரவேசிப்பதற்கான படிகளில் அவர்கள் முட்டுச்சந்தை[3] நோக்கிச் செல்கின்றனர். மனுஷ உலகத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கற்பனை உலகைத்தான் மனுஷன் விரும்புகிறான் என்று பலரும் நினைக்கலாம், அதுவே சுதந்திர சாம்ராஜ்யம் என்று விசுவாசிக்கலாம், ஆனால் உண்மையில் அது அவ்வாறு இல்லை. அல்லது ஜனங்கள் ஏற்கனவே வழிதவறிவிட்டார்கள் என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் ஜனங்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் பிரவேசிக்க வேண்டியது என்ன என்பதைப் பற்றி நான் இன்னும் பேச விரும்புகிறேன். பெருந்திரளான ஜனங்களின் சிறப்புகள் மற்றும் குறைபாடுகள் இந்த பிரசங்கத்தின் முதன்மைத் தலைப்பாக இல்லை. சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என் வார்த்தைகளைச் சரியான முறையில் பெறுவீர்கள், என் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தேவன் சீன நிலப்பரப்பில் மாம்சமாகியிருக்கிறார், அல்லது ஹாங்காங் மற்றும் தைவானைச் சேர்ந்த தோழர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், “உட்பகுதியில்” மாம்சமாகியிருக்கிறார். தேவன் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தபோது, பரலோகத்திலோ அல்லது பூமியிலோ யாரும் இதை அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் தேவன் யாருக்கும் தெரியாமல் மறைவாக வருவதன் உண்மையான அர்த்தம் இதுதான். அவர் நீண்ட காலமாக மாம்சத்தில் கிரியை செய்து ஜீவித்து வருகிறார், ஆனால் இன்னும் யாரும் அதை அறிந்திருக்கவில்லை. இன்றைய நாள் வரையும் கூட யாரும் அதை உணர்வதில்லை. ஒருவேளை இது ஒரு நித்திய புதிராகவே இருக்கக் கூடும். இந்த நேரத்தில் தேவன் மாம்சத்தில் வருவது எந்தவொரு மனுஷனுக்கும் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆவியானவருடைய கிரியையின் தாக்கம் எவ்வளவு பெரியதாக மற்றும் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தேவன் எப்போதும் அமைதியாகவே இருக்கிறார், ஒருபோதும் எதையும் விட்டுவிடுவதில்லை. அவருடைய கிரியையின் இந்தக் கட்டம் பரலோக ராஜ்யத்தில் நடைபெறுவதைப் போன்றது என்று நீங்கள் சொல்லலாம். பார்க்கக் கண்கள் உள்ள அனைவருக்கும் இது தெளிவாகத் தெரிந்தாலும், யாரும் அதை அடையாளங் காண்பதில்லை. தேவன் தமது கிரியையின் இந்தக் கட்டத்தை முடிக்கும்போது, எல்லா மனுஷரும் தங்கள் வழக்கமான மனப்பான்மையிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு[4], தங்களின் நீண்ட சொப்பனத்திலிருந்து எழுந்திருப்பார்கள். “இந்த நேரத்தில் மாம்சத்திற்குள் வருவது புலிக் குகையில் விழுவது போன்றது,” என்று தேவன் ஒரு முறை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், தேவனுடைய கிரியையின் இந்தச் சுற்றில் தேவன் மாம்சத்தில் வருகிறார், அதுமட்டுமல்லாமல் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் பிறந்திருப்பதால், அவர் தற்போது பூமிக்கு வருவதன் மூலம் முன்பை விடவும் அதிகமான தீவிர ஆபத்தை அவர் எதிர்கொள்கிறார். அவர் கத்திகள், துப்பாக்கிகள், குண்டாந்தடிகள் மற்றும் தடிகளை எதிர்கொள்கிறார்; அவர் சோதனையை எதிர்கொள்கிறார்; கொலை செய்யும் நோக்கத்தால் நிரப்பப்பட்ட முகங்களை அணிந்த கூட்டங்களை அவர் எதிர்கொள்கிறார். அவர் எந்த நேரத்திலும் கொல்லப்படும் ஆபத்தில் இருக்கிறார். தேவன் தம்முடன் கடுங்கோபத்தைக் கொண்டுவந்தார். இருப்பினும், அவர் பரிபூரணத்திற்கான கிரியையைச் செய்வதற்காக வந்தார், அதாவது அவர் தமது கிரியையின் இரண்டாம் பாகத்தைச் செய்வதற்காகவே வந்தார், அதுவே மீட்பிற்கான கிரியைக்குப் பின்னர் தொடர்கிறது. தம்முடைய கிரியையின் இந்த கட்டத்தின் பொருட்டு, தேவன் மிகுந்த சிந்தனையையும் அக்கறையையும் அர்ப்பணித்திருக்கிறார், மேலும் சோதனையின் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கும், தாழ்மையுடன் தம்மை மறைத்துக்கொள்வதற்கும், ஒருபோதும் தமது அடையாளத்தைப் பகட்டாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்கும் தமது மனதில் நினைக்கக் கூடிய ஒவ்வொரு வழியையும் பயன்படுத்துகிறார். மனுஷனைச் சிலுவையிலிருந்து மீட்கும் விஷயத்தில், இயேசு மீட்பின் கிரியையை மட்டுமே செய்து கொண்டிருந்தார்; அவர் பரிபூரணப்படுத்தும் கிரியையைச் செய்யவில்லை. இவ்வாறு தேவனின் கிரியைகளில் பாதி மட்டுமே செய்யப்பட்டு வந்தது, மேலும் மீட்பிற்கான கிரியையை முடிப்பது அவருடைய முழு திட்டத்தின் பாதியாகத்தான் இருந்தது. புதிய காலம் ஆரம்பிக்கவும், பழைய காலம் நிறைவடையவும் இருந்த தருணத்தில், பிதாவாகிய தேவன் தம்முடைய கிரியையின் இரண்டாம் பாகத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். கடைசிக் காலத்தில் இந்த மாம்சமாதல் குறித்து கடந்த காலத்தில் தெளிவாக தீர்க்கதரிசனம் உரைக்கப்படவில்லை, இதன் காரணமாகவே இந்த முறை தேவன் மாம்சத்திற்கு வருவதைப் பற்றிய உயர்ந்த இரகசியத்திற்கு அடித்தளத்தை அமைத்து வந்தார். பொழுது விடியும்போது, மனுஷகுலத்தின் பெருந்திரளான ஜனங்களுக்குத் தெரியாமல், தேவன் பூமிக்கு வந்து, மாம்சத்தில் தமது ஜீவிதத்தைத் தொடங்கினார். இந்த தருணம் வருவதை ஜனங்கள் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்திருப்பார்கள்; கவனமாக விழித்திருந்த பலரும் அவருக்காகக் காத்திருந்திருக்கலாம், ஒருவேளை பலர் பரலோகத்தில் இருக்கும் தேவனிடம் மௌனமாக ஜெபித்திருந்திருக்கலாம். ஆயினும்கூட, இந்த அநேக ஜனங்களிடையே ஒருவர் கூட தேவன் ஏற்கனவே பூமிக்கு வந்துவிட்டார் என்பதை அறிந்திருக்கவில்லை. தம்முடைய கிரியையை இன்னும் சீராகச் செய்வதற்கும், அதன்மூலம் சிறந்த பலன்களை அடைவதற்கும், இன்னும் அதிகமான சோதனைகளைத் தடுப்பதற்கும் தேவன் இவ்வாறாகக் கிரியை செய்தார். மனுஷனின் வசந்தகால நித்திரை முடிவடையும்போது, தேவனின் கிரியை முடிந்து நீண்ட காலமாகியிருக்கும், பூமியில் சுற்றித் திரிந்த மற்றும் சிலகாலம் தங்கியிருந்த அவரது ஜீவிதத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து, அவர் புறப்பட்டுச் சென்றிடுவார். தேவனின் கிரியைக்கு அவர் அவராகவே செயல்படவும் பேசவும் தேவைப்படுவதாலும், மனுஷன் தலையிட வழி இல்லாததாலும், பூமிக்கு வந்து அவராகவே அவரது கிரியையைச் செய்ய தேவன் மிகுந்த துன்பங்களைத் தாங்கியிருக்கிறார். தேவனின் கிரியையை மனுஷனால் செய்ய முடியாது. இந்த காரணத்திற்காக, தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வசிக்கும் தேசத்திற்கு வந்து, தமது சிந்தனையையும் அக்கறையையும் செலவழித்து, இந்த வறிய ஜனங்களை, சாணக் குவியலில் மூழ்கியிருக்கும் இந்த ஜனங்களை மீட்க, கிருபையின் காலத்தில் இருந்ததை விட பல ஆயிரம் மடங்கு பெரிய ஆபத்துக்களை தேவன் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார். தேவனின் இருப்பைப் பற்றி யாருக்கும் தெரியாவிட்டாலும், தேவன் கவலைப்படவில்லை, ஏனென்றால் இது அவருடைய கிரியைக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது. எல்லோரும் கொடூரமானவர்களாகவும், பொல்லாதவர்களாகவும் இருப்பதால், தேவனின் இருப்பை அவர்கள் எவ்வாறு பொறுத்துக்கொள்வார்கள்? அதனால்தான், தேவன் பூமிக்கு வருவதைத் தமது மௌனமாகவே வைத்திருக்கிறார். மனுஷன் மிக மோசமான கொடுமையினுள் மூழ்கியிருந்தாலும், தேவன் அதை எதையும் மனதில் கொள்ளுவதில்லை, ஆனால் பரலோகத்தில் இருக்கும் பிதா தம்மிடம் ஒப்படைத்த பெரிய கட்டளையை நிறைவேற்றுவதற்காக அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே செய்கிறார். உங்களில் யார் தேவனின் சௌந்தரியத்தை அடையாளங் காண்பவர்? பிதாவாகிய தேவனுடைய குமாரனைக் காட்டிலும் தேவனுடைய பாரத்திற்கு அதிக அக்கறை காட்டுவது யார்? பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை யார் புரிந்துகொள்ள முடியும்? பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனுடைய ஆவியானவர் பெரும்பாலும் கலக்கத்திலேயே இருக்கிறார், பூமியிலுள்ள அவருடைய குமாரன் வருத்தத்தினால் தமது இருதயத்தை வருத்தி, பிதாவாகிய தேவனின் சித்தத்திற்காக தொடர்ந்து ஜெபிக்கிறார், பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி அறிந்தவர்கள் யாராவது உண்டா? நேசகுமாரன் பிதாவாகிய தேவனை இழந்து தவிக்கும் இருதயத்தை பற்றி அறிந்த எவரேனும் இருக்கிறாரா? பரலோகத்தில் ஒருவரும், பூமியில் ஒருவருமாகப் பிரிந்திருக்கும் இருவரும் தூரத்திலிருந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆவியில் ஒருவரையொருவர் பின்பற்றுகிறார்கள். ஓ மனுஷகுலமே! தேவனின் இருதயத்தை நீங்கள் எப்போதுதான் கருத்தில் கொள்வீர்கள்? தேவனின் நோக்கத்தை நீங்கள் எப்போதுதான் புரிந்துகொள்வீர்கள்? பிதாவும் குமாரனும் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். பிறகு எதற்காக ஒருவர் மேலே பரலோகத்திலும் மற்றொருவர் கீழே பூமியிலும் என்று பிரிந்து இருக்க வேண்டும்? குமாரன் தமது பிதாவை நேசிப்பதைப் போல பிதா தமது குமாரனை நேசிக்கிறார். பிறகு எதற்காக, பிதா தமது குமாரனுக்காக இத்தகைய ஆழமான மற்றும் வேதனையான ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும்? அவர்கள் நீண்ட காலமாகப் பிரிந்திருக்கப் போவதில்லை, ஆனாலும், பிதா எத்தனை பகலிரவுகள் வேதனையான ஏக்கத்துடன் பேராவலோடு காத்திருக்கிறார், அவர் தமது நேசகுமாரனின் விரைவான வருகைக்காக எவ்வளவு காலம் ஏக்கத்தில் இருக்கிறார் என யாருக்கு தெரியும்? அவர் கவனிக்கிறார், அவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார், அவர் காத்திருக்கிறார்; அவருடைய நேசகுமாரனின் விரைவான வருகைக்காக அவர் எதையும் செய்வதில்லை. பூமியின் எல்லைகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார் குமாரன்: அவர்கள் எப்போது மீண்டும் ஒன்றிணைவார்கள்? அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நித்தியமாக ஒன்றாக இருப்பார்கள் என்றாலும், ஆயிரக்கணக்கான பகலிரவுகள் ஒருவர் மேலே பரலோகத்திலும், மற்றொருவர் கீழே பூமியிலும் இருப்பதால் அவரால் எவ்வாறு பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியும்? பூமியில் கழியும் பல தசாப்தங்கள் பரலோகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் போல உணரப்படும். பிதாவாகிய தேவன் எப்படிக் கவலைப்படாமல் இருப்பார்? தேவன் பூமிக்கு வரும்போது, மனுஷனைப் போலவே மனுஷ உலகின் எண்ணற்ற மாறுபாடுகளையும் அவர் அனுபவிக்கிறார். தேவன் குற்றமற்றவர், ஆகவே மனுஷனைப் போலவே அவரும் எதற்காகத் துன்பங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும்? பிதாவாகிய தேவன் தமது குமாரனுக்காக இவ்வளவு அவசரமாக ஏங்குவதில் ஆச்சரியமில்லை; தேவனின் இருதயத்தை யார் புரிந்து கொள்ள முடியும்? தேவன் மனுஷனுக்கு அதிகமான ஆதாயங்களை கொடுக்கிறார்; தேவனின் இருதயத்திற்கு மனுஷனால் எவ்வாறு போதுமான அளவு திருப்பிச் செலுத்த முடியும்? ஆனாலும் மனுஷன் தேவனுக்கு மிகக் குறைவாகக் கொடுக்கிறான்; அவ்வாறாக இருப்பின் தேவன் எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்?

தேவனுடய மனநிலையின் அவசரத்தை மனுஷரில் எவரும் அரிதாகவே புரிந்துகொள்கிறார்கள், ஏனென்றால் மனுஷரின் திறமை மிகவும் தாழ்ந்ததாகவும், அவர்களின் மன ஓட்டம் மிகவும் மந்தமாகவும் இருக்கிறது, எனவே அவர்கள் அனைவரும் தேவன் என்ன செய்கிறார் என்பதைக் கவனிப்பதோ அல்லது அதன்மீது கவனம் செலுத்துவதோ இல்லை. இந்த காரணத்திற்காக, மனுஷனின் மிருகத்தனமான சுபாவம் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்பதைப்போல மனுஷனைப் பற்றி தேவன் தொடர்ந்து வருத்தத்தோடே இருக்கிறார். இதிலிருந்து தேவன் பூமிக்கு வரும் விஷயமானது மிகப் பெரிய சோதனையுடன் இணைந்திருப்பதை இன்னும் நீங்கள் தெளிவாகக் காணலாம். ஆனால் ஜனங்கள் குழுவொன்றை பரிபூரணமாக்குவதற்காக, முழு மகிமையால் நிறைந்திருக்கும் தேவன், மனுஷனிடம் எதையும் மறைக்காமல் தமது ஒவ்வொரு நோக்கத்தையும் சொன்னார். இந்த ஜனக்குழுவை பரிபூரணமாக்க அவர் உறுதியாகத் தீர்மானித்திருக்கிறார், ஆகவே, என்ன கஷ்டங்கள் அல்லது சோதனைகள் வந்தாலும், அவர் அனைத்தையும் விலக்கிப் புறக்கணிக்கிறார். அவர் தமது சொந்தக் கிரியையை மட்டுமே அமைதியாகச் செய்கிறார், ஒரு நாள் தேவன் தம்முடைய மகிமையைப் பெற்றவுடன், மனுஷன் அவரை அறிந்துகொள்வான் என்று அவர் உறுதியாக நம்புகிறார், மனுஷன் தேவனால் பரிபூரணமாக்கப்பட்டவுடன், அவன் தேவனின் இருதயத்தை முழுமையாகப் புரிந்துகொள்வான் என்று அவர் நம்புகிறார். தற்சமயம் தேவனைச் சோதிக்கும், அல்லது தேவனை தவறாகப் புரிந்துகொள்ளும், அல்லது தேவனைக் குறை கூறும் நபர்கள் இருக்கலாம்; தேவன் இவற்றில் எதையும் மனதில் வைத்துக்கொள்வதில்லை. தேவன் மகிமைக்குள் இறங்கும்போது, தேவன் செய்யும் அனைத்தும் மனுஷகுலத்தின் மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை ஜனங்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள், மேலும் தேவன் செய்கிற அனைத்தும் மனுஷகுலம் சிறப்பாக ஜீவித்திருப்பதற்காகத்தான் என்பதை அவர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள். தேவன் சோதனையைக் கொண்டுவருகிறார், மேலும் மகத்துவத்தையும் கடுங்கோபத்தையும் கொண்டுவருகிறார். தேவன் மனுஷனை விட்டு புறப்பட்டுச் செல்லும் நேரத்தில், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே தம்முடைய மகிமையைப் பெற்றிருப்பார், மேலும் அவர் மகிமையுடனும், திரும்பிச் செல்லும் மகிழ்ச்சியுடனும் நிறைவாகப் புறப்பட்டுச் செல்கிறார். பூமியில் கிரியை செய்யும் தேவன், ஜனங்கள் அவரை எப்படி நிராகரித்தாலும் அவற்றை மனதில் வைத்துக் கொள்வதில்லை. அவர் தமது கிரியையை மட்டுமே செய்கிறார். தேவனின் உலக சிருஷ்டிப்பானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் செல்கிறது. அவர் அளவிட முடியாத கிரியையைச் செய்ய பூமிக்கு வந்திருக்கிறார், மேலும் மனுஷ உலகின் நிராகரிப்பு மற்றும் அவதூறுகளை அவர் முழுமையாக அனுபவித்திருக்கிறார். தேவனின் வருகையை யாரும் வரவேற்பதில்லை; அவர் கடுமையான முகத்துடன் வரவேற்கப்படுகிறார். இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளின் கடினமான பயணத்தின் போது, மனுஷனின் நடத்தை நீண்ட காலமாக தேவனை விரைவாகக் காயப்படுத்தி வந்திருக்கிறது. அவர் இனியும் ஜனங்களின் கலகத்தில் கவனம் செலுத்துவதில்லை, அதற்குப் பதிலாக மனுஷனை மாற்றுவதற்கும் சுத்திகரிப்பதற்கும் மற்றொரு திட்டத்தை உருவாக்கியுள்ளார். மாம்சமானதிலிருந்து தேவன் சந்தித்த அவதூறு, பொல்லாங்கு, துன்புறுத்தல், உபத்திரவம், சிலுவையில் அறையப்படுதல், மனுஷனால் புறக்கணிக்கப்படுதல் மற்றும் பலவற்றை தேவன் போதுமான அளவு சுவைத்திருக்கிறார். மேலும் மனுஷ உலகின் கஷ்டங்களைப் பொறுத்தவரை, மாம்சமாகிய தேவன் இவை அனைத்தையும் முழுமையாக அனுபவித்திருக்கிறார். பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனுடைய ஆவியானவர் நீண்ட காலமாக இத்தகைய காட்சிகளைத் தாங்கமுடியாததாகக் கண்டறிந்து, தலையைத் தூக்கி கண்களை மூடிக்கொண்டு, தமது நேசகுமாரன் திரும்பிவரக் காத்திருக்கிறார். அவர் விரும்புவது என்னவென்றால், மனுஷகுலம் செவிசாய்த்து கீழ்ப்படிவார்கள் என்றும், அவருடைய மாம்சத்திற்கு முன்பாக மிகுந்த அவமானத்தை உணர்ந்து, அவருக்கு எதிராகக் கலகம் செய்வதை அவர்களால் நிறுத்த முடியும் என்றும் நம்புகிறார். அவர் விரும்புவது என்னவென்றால், தேவனின் இருப்பை மனுஷகுலத்தால் விசுவாசிக்க முடியும் என்பதுதான். அவர் நீண்ட காலமாக மனுஷனிடம் அதிகக் கோரிக்கைகளை வைப்பதை நிறுத்திவிட்டார், ஏனென்றால் தேவன் மிக அதிக விலைக்கிரயம் கொடுத்திருக்கிறார், ஆனாலும் மனுஷன் எளிதில் ஓய்வெடுக்கிறான்[5], மேலும் தேவனின் கிரியையை மனதில் கொள்ளுவதும் இல்லை.

தேவனின் கிரியையைப் பற்றி நான் இன்று சொல்லும் விஷயங்களில் “ஆதாரமற்ற அபத்தமான”[6] விஷயங்கள் இருந்தாலும், அது மனுஷனின் பிரவேசத்துடன் ஆழமான இணக்கத்தைக் கொண்டுள்ளது. நான் கிரியையைப் பற்றி சிலவற்றைப் பேசுகிறேன், பின்னர் பிரவேசம் பற்றி சிலவற்றைப் பேசுகிறேன், ஆனால் இரண்டு அம்சங்களும் சமமாக இன்றியமையாதவையாக இருக்கின்றன, மேலும் அவை ஒன்றிணைந்தால் அவை மனுஷனின் ஜீவிதத்திற்கு இன்னும் பயனளிப்பதாக இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றையொன்று பூர்த்திசெய்கின்றன[7] மேலும் இவை பெரிதும் பயனளிப்பதாகவும் இருக்கின்றன, இவை ஜனங்களை தேவனின் சித்தத்தை நன்கு புரிந்துகொள்ள அனுமதிக்கின்றன, மேலும் ஜனங்களுக்கும் தேவனுக்கும் இடையில் தொடர்பு கொள்ளவும் உதவுகின்றன. இன்றைய கிரியை பற்றிய பேச்சின் மூலம், தேவனுடனான மனுஷகுலத்தின் உறவு மேலும் மேம்பட்டிருக்கிறது, பரஸ்பர புரிதல் ஆழமடைந்திருக்கிறது, மேலும் தேவனின் பாரத்திற்கு மனுஷனால் அதிக அக்கறையையும் கவனிப்பையும் கொடுக்க முடிகிறது; தேவன் உணருவதை உணரவும், தான் தேவனால் மாற்றப்படுவோம் என்பதில் அதிக தன்னம்பிக்கையுடனும், தேவனின் அடுத்த தோற்றத்திற்காகக் காத்திருக்கவும் மனுஷன் ஆளாக்கப்படுகிறான். தேவன் இன்று மனுஷனிடம் விடுக்கும் ஒரே கோரிக்கை இதுதான்—தேவனை நேசிப்பவனின் சாயலில் ஜீவிக்க வேண்டும், இதன்மூலம் தேவனுடைய ஞானத்தின் படிகமயமாக்கலின் வெளிச்சம் அந்தகாரத்தின் காலத்தில் வெளிவரக்கூடும், இதன்மூலம் மனுஷனின் ஜீவிதம் தேவனின் கிரியையில் ஒரு பிரகாசமான பக்கத்தை விட்டுச்செல்லும், இது கிழக்கத்திய உலகில் என்றென்றும் பிரகாசித்து உலகின் கவனத்தையும் அனைவரின் பாராட்டையும் கட்டளையிடுவதாக இருக்கும். இது நிச்சயமாகத் தற்போதைய காலத்தில் தேவனை நேசப்பவர்களுக்கு இன்னும் சிறந்த பிரவேசமாக அமைகிறது.

அடிக்குறிப்புகள்:

1. “அவர்களின் தசைகளை மடக்கி நீட்டி சண்டைக்குத் தயாராகிறார்கள்” என்பது கேலிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

2. “அசாதாரணத்தன்மை” என்பது ஜனங்களின் பிரவேசம் மாறுபட்டதாக இருக்கிறது மற்றும் அவர்களின் அனுபவங்கள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

3. “முட்டுச்சந்து” என்பது ஜனங்கள் செல்லும் பாதை தேவனின் விருப்பத்திற்கு மாறாக இயங்குகிறது என்பதாகும்.

4. “தங்கள் வழக்கமான மனப்பான்மையிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு” என்பது தேவனைப் பற்றி அறிந்தவுடன், தேவனைப் பற்றிய ஜனங்களின் கருத்துகளும் பார்வைகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் குறிக்கிறது.

5. “எளிதில் ஓய்வெடுக்கிறான்” என்பது ஜனங்கள் தேவனின் கிரியையைப் பற்றி அக்கறையற்றவர்கள், அதை முக்கியமானதாகக் கருதுவதில்லை என்பதாகும்.

6. “ஆதாரமற்ற அபத்தமான” என்பது தேவன் சொல்லும் வார்த்தைகளின் அடிப்படையை ஜனங்களால் புரிந்துக்கொள்ள இயலாது என்பதையும், அவர் என்ன பேசுகிறார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் குறிக்கிறது. இந்தச் சொற்றொடர் முரண்பாடாக பயன்படுத்தப்படுகிறது.

7. “ஒன்றையொன்று பூர்த்திசெய்கின்றன” என்பது “கிரியை” மற்றும் “பிரவேசம்” ஆகிய இரண்டையும் ஐக்கியமாக்குவது தேவனைப் பற்றிய நமது அறிவுக்கு இன்னும் பலனளிக்கும் என்பதைக் குறிக்கிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (3)

அடுத்த: கிரியையும் பிரவேசித்தலும் (5)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக