பயிற்சி (3)

தேவனுடைய வார்த்தைகளை நீங்களாகவே புசித்துப் பானம்பண்ணவும், தேவனுடைய வார்த்தைகளை நீங்களாகவே அனுபவிக்கவும், மற்றவர்களின் தலைமைத்துவமின்றி இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும் நீங்கள் சுதந்திரமாக வாழக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும். வாழ்வதற்கும், உண்மையான அனுபவத்திற்குள் பிரவேசிப்பதற்கும், உண்மையான நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், நீங்கள் இன்று தேவன் பேசும் வார்த்தைகளைச் சார்ந்திருக்கக் கூடியவர்களாக வேண்டும். இப்படிச் செய்தால்தான் உங்களால் உறுதியாக நிற்க முடியும். இன்று, பலர் எதிர்கால உபத்திரவங்களையும் சோதனைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. எதிர்காலத்தில் சிலர் உபத்திரவங்களை அனுபவிப்பார்கள், சிலர் தண்டனையை அனுபவிப்பார்கள். இந்தத் தண்டனை இன்னும் கடுமையானதாக இருக்கும்; அது உண்மைகளின் வெளிப்பாடாக இருக்கும். இன்று, நீ அனுபவிப்பது, பயிற்சி செய்வது மற்றும் வெளிப்படுத்துவது அனைத்தும் எதிர்கால சோதனைகளுக்கு அடித்தளத்தை அமைக்கின்றன, குறைந்தபட்சமாவது, நீ சுதந்திரமாக வாழக் கூடியவனாக இருக்க வேண்டும். இன்று, திருச்சபையில் உள்ள பலரைப் பற்றிய நிலைமை பொதுவாகப் பின்வருமாறு இருக்கிறது: கிரியையைச் செய்யத் தலைவர்களும் பணியாட்களும் இருந்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இல்லை என்றால், அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் திருச்சபையின் கிரியையிலோ அல்லது தங்கள் சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையிலோ கவனம் செலுத்துவதில்லை, அவர்கள் சிறிதளவு பாரத்தையும் பெற்றிருப்பதில்லை—அவர்கள் ஒரு ஹன்ஹாவ் பறவையைப்[அ] போல குழப்பமடைகிறார்கள். வெளிப்படையாகக் கூறவேண்டுமானால், நான் ஜெயங்கொள்ளுதலின் கிரியையை மட்டுமே பலர் மீது செய்திருக்கிறேன், ஏனெனில் பலர் அடிப்படையில் பரிபூரணப்படுத்தப்படுவதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறிய பகுதி ஜனங்களை மட்டுமே பரிபூணப்படுத்த முடியும். இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்பும், “தேவன் செய்யும் கிரியை, ஜனங்களை ஜெயங்கொள்வதற்கு மட்டுமே என்பதால், நான் செயலற்ற முறையில் மட்டுமே பின்பற்றுவேன்” என்று நீ நினைத்தால், அத்தகைய அணுகுமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? நீ உண்மையிலேயே மனச்சாட்சி உடையவனாக இருந்தால், உனக்கு ஒரு பாரமும் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். “நான் ஜெயங்கொள்ளப்பட்டிருப்பேனா இல்லையா அல்லது பரிபூரணமாக்கப்பட்டிருப்பேனா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்தக் கட்ட சாட்சியை நான் சரியாகப் பகர வேண்டும்” என்று நீ சொல்ல வேண்டும். தேவனுடைய சிருஷ்டியாக, ஒருவர் தேவனால் முற்றிலுமாக ஜெயங்கொள்ள முடியும், இறுதியில், தேவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதன் மூலம், தேவனை நேசிக்கும் இருதயத்துடன் தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்தி, ஒருவன் தேவனைத் திருப்திப்படுத்தக் கூடியவனாகிறான். இதுவே மனுஷனின் பொறுப்பு, இது மனுஷனால் செய்யப்பட வேண்டிய கடமையும், மனுஷனால் சுமக்கப்பட வேண்டிய பாரமுமாகும், மனுஷன் இந்தக் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான், அவன் தேவனை உண்மையாக விசுவாசிக்கிறான். இன்று, திருச்சபையில் நீ செய்வதுதான், உன் பொறுப்பை நிறைவேற்றுவதா? இது நீ பாரத்தோடு இருக்கிறாயா என்பதைப் பொறுத்தது, மேலும், இது உன் சொந்த அறிவைப் பொறுத்ததாகும். இந்தக் கிரியையை அனுபவிப்பதன் மூலம், மனுஷன் ஜெயங்கொள்ளப்பட்டு உண்மையான அறிவைப் பெற்றிருந்தால், அவன் தன் சொந்த வாய்ப்புகள் அல்லது தலைவிதியைப் பொருட்படுத்தாமல் கீழ்ப்படிவதற்கான திறனைக் கொண்டவனாய் இருப்பான். இவ்வாறு, தேவனுடைய மகத்தான கிரியை முழுமையாக உணரப்படும், ஏனென்றால் ஜனங்களாகிய நீங்கள் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய திறனற்றவர்களாய் இருக்கிறீர்கள், மேலும் எந்தப் பெரிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற இயலாதவர்களாய் காணப்படுகிறீர்கள். ஆனாலும், எதிர்காலத்தில், சிலர் பரிபூரணப்படுத்தப்படுவார்கள். அவர்களின் திறன் மேம்படும், அவர்கள் தங்கள் ஆவிகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள், மேலும் அவர்களின் வாழ்க்கை வளரும்…. இன்னும் சிலர் இதை அடைய முற்றிலும் இயலாதவர்களாய் இருக்கிறார்கள், அதனால் அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது. அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்று நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எதிர்காலத்தில், சிலர் ஜெயங்கொள்ளப்படுவார்கள், சிலர் புறம்பாக்கப்படுவார்கள், சிலர் பரிபூரணமாக்கப்படுவார்கள், சிலர் பயன்படுத்தப்படுவார்கள்—அப்படியே, சிலர் உபத்திரவங்களை அனுபவிப்பார்கள், சிலர் தண்டனையை அனுபவிப்பார்கள் (இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மனுஷனால் உருவாக்கப்பட்ட துன்பங்கள் இரண்டையும்), சிலர் புறம்பாக்கப்படுவார்கள், மேலும் சிலர் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். இதில், ஒவ்வொரு குழுவும் ஒரு வகை நபர்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொருவரும் தங்கள் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எல்லா ஜனங்களும் புறம்பாக்கப்பட மாட்டார்கள், எல்லா ஜனங்களும் பரிபூரணப்படுத்தப்படவும் மாட்டார்கள். ஏனென்றால், சீன ஜனங்களுடைய திறமை மிகவும் மோசமாக உள்ளது, மேலும் அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பவுல் பெற்றிருந்ததைப் போன்ற சுய விழிப்புணர்வு கொண்டவர்களாய் இருக்கிறார்கள். பேதுருவைப் போல தேவனை நேசிக்கும் அதே உறுதிப்பாடு அல்லது யோபுக்கு இருந்த அதே வகையான விசுவாசமானது உங்களில் சிலருக்கு இருக்கிறது. தாவீது செய்ததைப் போல யேகோவாவுக்குப் பயந்து ஊழியம் செய்பவர்கள் உங்களில் எவரும் இல்லை, அவன் அதே அளவு விசுவாசமுள்ளவனாய் இருந்தான். நீங்கள் எவ்வளவு பரிதாபகரமானவர்கள்!

இன்று, பரிபூரணமாக்கப்படுவதைப் பற்றிய பேச்சு ஓர் அம்சமாக மட்டுமே இருக்கிறது. என்ன நடந்தாலும் பரவாயில்லை, நீங்கள் இந்தக் கட்ட சாட்சியை சரியாகப் பகர வேண்டும். தேவாலயத்தில் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் அதை எப்படிச் செய்வீர்கள்? நீ ஓர் ஆசாரியனாக இல்லாவிட்டால், முதற்பேறான குமாரர்கள் அல்லது தேவனுடைய குமாரர்கள் என்ற அந்தஸ்து இல்லையென்றால், உன்னால் இன்னும் விசுவாசமாக இருக்க முடியுமா? ராஜ்யத்தை விரிவுபடுத்தும் பணியில் உன்னால் இன்னும் உன்னுடைய முயற்சிகள் அனைத்தையும் செலவிட முடியுமா? நீ இன்னும் தேவனுடைய கட்டளையின் கிரியையைச் சரியாகச் செய்யக்கூடியவனாக இருப்பாயா? உன் வாழ்க்கை எவ்வளவு வளர்ந்திருந்தாலும், இன்றைய கிரியை உன்னை முழுமையாக நம்ப வைக்கும், மேலும் உன் எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி வைக்கச் செய்யும். ஜீவனைப் பின்தொடரச் செய்வதை நீ பெற்றிருந்தாலும் பெற்றிருக்காவிட்டாலும், தேவனுடைய கிரியை உன்னை முழுமையாக நம்ப வைக்கும். “நான் தேவனை விசுவாசிக்கிறேன், ஜீவனைப் பின்தொடர்வது என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை” என்று சிலர் சொல்கிறார்கள். மேலும், சிலர், “தேவன் மீதான விசுவாசத்தில் நான் முழுவதுமாகக் குழப்பமடைந்திருக்கிறேன். நான் பரிபூரணப்படுத்தப்பட முடியாது என்பதை நான் அறிவேன், அதனால் நான் தண்டிக்கப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். தண்டிக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ தயாராக இருக்கும் இது போன்ற ஜனங்களைக் கூட இன்றைய கிரியையானது தேவனால் மேற்கொள்ளப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும். சிலர் இன்னும், “நான் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை, ஆனால், இன்று, நான் தேவனுடைய அனைத்துப் பயிற்சிகளையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன், மேலும் இயல்பான மனிதத்தன்மையுடன் வாழவும், எனது திறனை மேம்படுத்தவும், மற்றும் தேவனுடைய அனைத்து ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதற்கும் தயாராக இருக்கிறேன்….” என்று கூறுகிறார்கள். இதில், அவர்களும் ஜெயங்கொள்ளப்பட்டு சாட்சி பகர்ந்துள்ளனர், இது இவர்களுக்குள் கொஞ்சம் தேவனுடைய கிரியையைக் குறித்த அறிவு இருப்பதை நிரூபிக்கிறது. இந்தக் கட்ட கிரியைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில், வெளிநாடுகளில் இன்னும் வேகமாக செய்யப்படும். இன்று, வெளிநாட்டில் உள்ளவர்களால் காத்திருக்க முடிவதில்லை, அவர்கள் அனைவரும் சீனாவுக்கு விரைந்து வருகிறார்கள்—எனவே, நீங்கள் முழுமையடைய முடியாவிட்டால், நீங்கள் வெளிநாட்டிலுள்ள ஜனங்களைத் தாங்கிப்பிடிப்பீர்கள். அந்த நேரத்தில், நீங்கள் எவ்வளவு நன்றாகப் பிரவேசித்திருக்கிறீர்கள் அல்லது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நேரம் வரும்போது எனது கிரியை முடிவடைந்து நிறைவேற்றப்படும். உங்களால் எனது கிரியை தாமதமாகாது. நான் முழு மனிதகுலத்தின் கிரியையைச் செய்கிறேன், மேலும் நான் உங்களுக்காக இனிமேலும் நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மிகவும் ஊக்கமில்லாதவர்கள், கொஞ்சமும் சுய விழிப்புணர்வு இல்லாதவர்கள்! நீங்கள் பரிபூரணமாக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல—உங்களுக்குக் கொஞ்சம் கூட எந்தத் திறமையும் இல்லை! எதிர்காலத்தில், ஜனங்கள் மிகவும் நிர்விசாரமாகவும், மெத்தனமாகவும் நடந்து கொண்டாலும், தங்கள் திறனை மேம்படுத்த முடியாமல் போனாலும், இது முழு பிரபஞ்சத்தின் கிரியையைத் தடுக்காது. தேவனுடைய கிரியை நிறைவேறும் நேரம் வரும்போது, அது நிறைவேறும், ஜனங்கள் புறம்பாக்கப்படும் நேரம் வரும்போது, அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். நிச்சயமாகவே, பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்களும், பரிபூரணமாக்கப்படுவதற்குத் தகுதியானவர்களும் பரிபூரணமாக்கப்படுவார்கள்—ஆனால், உங்களுக்கு மெய்யாகவே நம்பிக்கை இல்லை என்றால், தேவனுடைய கிரியை உங்களுக்காகக் காத்திருக்காது! இறுதியில், நீ ஜெயங்கொள்ளப்பட்டால், இதுவும் சாட்சி பகருதலாகக் கருதப்படலாம். தேவன் உங்களிடம் கேட்பதற்கு வரம்புகள் உள்ளன; மனுஷனால் எவ்வளவு உயர்வான வளர்ச்சியை அடைய முடிகிறதோ, அதுவே அவனிடம் கோரப்படுகிற சாட்சியின் உயரமாகும். இத்தகைய சாட்சி மிக உயர்ந்த வரம்புகளை எட்டும் என்றும் அது எதிரொலித்துக்கொண்டிருக்கும் என்றும் மனுஷன் கற்பனை செய்வது போல் இல்லை—சீன ஜனங்களாகிய நீங்கள் இதை அடைய எந்த வழியும் இல்லை. நான் உங்களுடன் இவ்வளவு காலமாக ஈடுபட்டிருக்கிறேன், இதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள்: எதிர்க்க வேண்டாம், கலகக்காரர்களாய் இருக்க வேண்டாம், என் முதுகுக்குப் பின்னால் தடைசெய்யும் அல்லது இடையூறு விளைவிக்கும் விஷயங்களைச் செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதைப் பற்றி நான் பலமுறை ஜனங்களை நேரடியாகக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன், ஆனால் அதுவும் போதாததாக இருக்கிறது—அவர்கள் திரும்பும் நொடிப்பொழுதில் அவர்கள் மாறுகிறார்கள், எந்தவித மன உறுத்தலும் இல்லாமல், சிலர் இரகசியமாக எதிர்க்கிறார்கள். எனக்கு இவை எதுவும் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? நீ எனக்குத் தொந்தரவு செய்ய முடியும் என்றும் அதன் விளைவாக எதுவும் நடக்காது என்றும் நினைக்கிறாயா? நீ என் கிரியையை என் முதுகுக்குப் பின்னால் வீணாக்க முயலும் போது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? உன் சிறு தந்திரங்கள் உன் குணத்திற்குத் துணையாக நிற்கும் என்று நீ நினைக்கிறாயா? நீ எப்போதும் பார்ப்பதற்குக் கீழ்ப்படிகிறவன் போன்றவன், ஆனால் இரகசியமாக துரோகி, நீ உன் இருதயத்தில் கெட்ட எண்ணங்களை மறைத்துக்கொள்கிறாய், உன்னைப் போன்ற ஜனங்களுக்கு மரணம் கூட போதுமான தண்டனை அல்ல! உன்னில் செய்யப்படுகிற பரிசுத்த ஆவியானவரின் சில சிறிய கிரியைகளானது, நீ என்மீது வைத்திருக்கும் உன் பயபக்தியின் இடத்தைப் பெற முடியும் என்று நீ நினைக்கிறாயா? பரலோகத்தை நோக்கிக் கூப்பிடுவதன் மூலம் நீ வெளிச்சத்தைப் பெற்றதாக நினைக்கிறாயா? உனக்கு வெட்கமே கிடையாது! நீ எதற்கும் உதவாதவன்! உன்னுடைய “நற்கிரியைகள்” பரலோகத்திற்கு நகர்ந்தன என்றும், அதற்குப் பதிலாக அவர் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி, உன்னை நாவன்மையுள்ளவனாக்குவதன் மூலம், ஒரு சிறிய திறமையை அளித்து, மற்றவர்களை ஏமாற்றவும் என்னை ஏமாற்றவும் உன்னை அனுமதித்தார் என்றும் நீ நினைக்கிறாயா? நீ எவ்வளவு அறிவற்றவன்! உன் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று உனக்குத் தெரியுமா? நீ யாருடைய உணவை சாப்பிட்டு வளர்ந்தாய் என்று உனக்குத் தெரியுமா? நீ எவ்வளவு மனசாட்சியற்றவன்! உங்களில் சிலர் நான்கு அல்லது ஐந்து வருடங்களாகக் கையாளப்பட்ட பிறகும் கூட மாறியிருக்கவில்லை, நீங்கள் இந்த விஷயங்களைக் குறித்துத் தெளிவாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சுபாவத்தைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும், ஒரு நாள், நீ கைவிடப்படும்போது எதிர்க்க வேண்டாம். தங்களுக்கு மேல் மற்றும் கீழ் உள்ள இருவரையும் தங்கள் ஊழியத்தில் ஏமாற்றுகிற சிலர் அதிகம் கையாளப்பட்டிருக்கின்றனர்; சிலர் பணத்தின் மீது பேராசை கொண்டவர்களாக இருப்பதால், அவர்கள் சிறிய அளவிலும் கையாளப்படுவதில்லை; சிலர், அவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தெளிவான எல்லைகளை வைத்திருக்காததால், அடிக்கடி கையாளப்பட்டுள்ளனர்; சிலர் சோம்பேறிகளாகவும், மாம்சத்தை மட்டுமே கவனத்தில் கொண்டவர்களாகவும், திருச்சபைகளுக்குச் செல்லும்போது கொள்கைகளின்படி செயல்படாததாலும், அவர்கள் நிறைய கையாளப்படுவதற்கு உட்படுத்தப்ட்டுள்ளனர்; சிலர் செல்லும் இடமெல்லாம் சாட்சி பகரத் தவறியதால், வேண்டுமென்றே, பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால், மேலும் தெரிந்தே பாவங்களைச் செய்வதால், இதைப் பற்றி பலமுறை எச்சரிக்கப்பட்டும் இருக்கின்றனர்; சிலர்கூடுகைகளின் போது வெறுமனே வார்த்தைகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே பேசுபவர்களாகவும், எல்லோரையும் விட உயர்ந்தவர்களாக நடிப்பவர்களாகவும், சத்தியத்தின் சிறிதளவு யதார்த்தமும் இல்லாதவர்களாகவும் மற்றும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராகச் சதி செய்து போட்டி போடுபவர்களாகவும் இருக்கிறார்கள்—இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வார்த்தைகளை நான் உங்களிடம் பலமுறை பேசியிருக்கிறேன், மேலும் இன்று, நான் இதைப் பற்றிப் பேசவே மாட்டேன்—நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள்! உங்கள் சொந்த முடிவுகளை எடுங்கள்! பலர் ஓரிரு வருடங்களுக்கு இந்த வழியில் கையாளுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சிலருக்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் கூட ஆகியிருக்கிறது, அதேநேரத்தில் சிலர் இதை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அனுபவித்திருக்கிறார்கள், அவர்கள் விசுவாசிகளானபோதிலிருந்து கையாளப்படுவதற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், ஆனால் இன்றுவரை அவர்களில் சிறிய மாற்றம் கூட இல்லை. நீ என்ன சொல்கிறாய், நீ பன்றிகளைப் போல் இல்லையா? தேவன் உனக்கு நியாயமற்றவராக இருக்க முடியுமா? உங்களால் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய இயலவில்லை என்றால் தேவனுடைய கிரியை முடிவடையாது என்று நினைக்காதீர்கள். உங்களால் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இயலவில்லை என்றால் தேவன் இன்னும் உங்களுக்காகக் காத்திருப்பாரா? நான் உனக்குத் தெளிவாகச் சொல்கிறேன்—இது அப்படி இல்லை. விஷயங்களைப் பற்றி இப்படி ஒரு நம்பிக்கையூட்டும் பார்வை வேண்டாம்! இன்றைய கிரியைக்கு ஒரு காலக்கெடு உள்ளது, தேவன் உன்னோடு விளையாடிக்கொண்டிருக்கவில்லை! முன்பு, ஊழியம் செய்பவர்களின் உபத்திரவத்தை அனுபவிக்க நேரிடும் போது, ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நின்று, அவரால் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்றால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய வேண்டியிருந்தது—அவர்கள் விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஊழியம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டியிருந்தது, அவர்கள் சிறிதும் கட்டுப்பாடில்லாதவர்களாக அல்லது ஆவேசக்காரர்களாக இல்லாமல் ஒவ்வொரு நாளும் தேவனைத் துதிக்க வேண்டியிருந்ததுஎன்று நினைத்தார்கள். அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே ஊழியம் செய்பவர்களாக இருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் உண்மையில் அப்படியா? அந்த சமயத்தில், பல்வேறு வகையான மனுஷர்கள் வெளிப்பட்டனர்; அவர்கள் அனைத்து விதமான நடத்தைகளையும் வெளிப்படுத்தினர். சிலர் குறைகூறினர், சிலர் கருத்துக்களைப் பரப்பினர், சிலர் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டனர், மேலும் சிலர் திருச்சபையின் பணத்தையும் விநியோகித்தனர். சகோதர சகோதரிகள் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் சதி செய்து கொண்டிருந்தனர். இது உண்மையிலேயே ஒரு பெரிய விடுதலை, ஆனால் அதில் யாரும் பின்வாங்கிப்போகவில்லை என்ற ஒரு நல்ல விஷயம் இருந்தது. இதுவே வலுவான நிலையாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் சாத்தானுக்கு முன்பாக ஒரு கட்டத்தில் சாட்சி பகர்ந்தனர், பின்னர், தேவனுடைய ஜனங்கள் என்ற அடையாளத்தைப் பெற்று இன்றுவரை அதை ஏற்படுத்தியுள்ளனர். நீ நினைப்பது போல் தேவனுடைய கிரியை மேற்கொள்ளப்படுவதில்லை, மாறாக, காலம் முடிந்ததும், நீ எந்த நிலையை அடைந்திருந்தாலும், கிரியையும் முடிவடையும். சில ஜனங்கள் இவ்வாறு கூறலாம்: “இப்படிச் செயல்படுவதன் மூலம் நீர் ஜனங்களை இரட்சிக்கவில்லை அல்லது அவர்களை நேசிக்கவில்லை—நீர் நீதியுள்ள தேவன் அல்ல.” நான் உனக்குத் தெளிவாகச் சொல்கிறேன்: இன்று எனது கிரியையின் முக்கியப் பகுதியே உன்னை ஜெயங்கொள்ளச் செய்து, உன்னை சாட்சிப் பகர வைப்பதுதான். உன்னை இரட்சிப்பது ஒரு கூடுதல் காரியம் மட்டுமே; நீ இரட்சிக்கப்பட முடியுமா இல்லையா என்பது உன் சொந்த பின்தொடர்தலைப் பொறுத்தது, என்னுடன் தொடர்புடையது அல்ல. ஆயினும் நான் உன்னை ஜெயங்கொள்ள வேண்டும்; எப்பொழுதும் என்னைக் கட்டுப்படுத்த முயலாதே—இன்று நான் கிரியை செய்து, உன்னை இரட்சிக்கிறேன், வேறு விதமாக அல்ல!

இன்று, நீங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், வரலாறு முழுவதிலும் பரிபூரணமாக்கப்படாத எந்தவொரு நபரையும் விட உயர்ந்தவனாய் இருக்கிறான். உபத்திரவங்கள் பற்றிய உங்கள் அறிவாக இருந்தாலும் சரி, தேவன் மீதான நம்பிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தேவனை விசுவாசிக்கிற எந்த ஒரு விசுவாசியையும் விட உயர்ந்ததாகும். நீங்கள் புரிந்து கொள்ளும் விஷயங்களானவை, நீங்கள் சூழல்களின் உபத்திரவங்களுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு நீங்கள் அறிந்துகொள்பவைகள், ஆனால் உங்கள் உண்மையான வளர்ச்சி அவற்றுடன் முற்றிலும் பொருந்தாததாக இருக்கிறது. நீங்கள் பயிற்சி செய்வதை விட நீங்கள் தெரிந்துவைத்திருப்பவைகள் அதிகம். தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனை நேசிக்க வேண்டும், ஆசீர்வாதங்களுக்காக அல்ல, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற மட்டுமே பாடுபட வேண்டும் என்று நீங்கள் கூறினாலும், உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவது இதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, மேலும் இது மிகவும் கறைபடிந்துள்ளது. பெரும்பாலான ஜனங்கள் சமாதானத்துக்காகவும் மற்ற நன்மைகளுக்காகவும் தேவனை விசுவாசிக்கிறார்கள். அது உன்னுடைய நன்மைக்காக இல்லாவிட்டால், நீ தேவனை விசுவாசிப்பதில்லை, மேலும் நீ தேவனுடைய கிருபையைப் பெற முடியாவிட்டால், நீ சோகத்தில் விழுந்து போகிறாய். நீ சொன்னது எப்படி உன்னுடைய உண்மையான வளர்ச்சியாகும்? குழந்தைகள் நோய்வாய்ப்படுதல், அன்புக்குரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, மோசமான பயிர் விளைச்சல், மற்றும் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுதல் போன்ற தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வுகள் வரும்போது, இந்த அடிக்கடி நிகழும், சாதாரண விஷயங்கள் கூட உனக்கு மிகவும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது, நீ பீதியில் தள்ளப்படுவாய், என்ன செய்வது என்று உனக்குத் தெரிவதில்லை—மேலும் பெரும்பாலான நேரங்களில், நீ தேவனைப் பற்றிக் குறைகூறுகிறாய். தேவனுடைய வார்த்தைகள் உன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தேவனுடைய கிரியை உன்னைப் பரியாசம் செய்வதாகவும் நீ குறைகூறுகிறாய். நீங்கள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லையா? உங்களிடையே இதுபோன்ற விஷயங்கள் அரிதாகவே நடக்கும் என்று நீ நினைக்கிறாயா? நீங்கள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் வாழ்ந்து ஒவ்வொரு நாளையும் கழிக்கிறீர்கள். தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் ஜெயத்துக்கும், தேவனுடைய சித்தத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கும் நீங்கள் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. உங்கள் உண்மையான வளர்ச்சி மிகவும் சிறியது, மிகச் சிறிய கோழிக் குஞ்சுகளை விடவும் சிறியது. உங்கள் குடும்பத் தொழிலில் பண இழப்பு ஏற்படும் போது நீங்கள் தேவனைப் பற்றிக் குறைகூறுகிறீர்கள், தேவனுடைய பாதுகாப்பு இல்லாத சூழலில் நீங்கள் இருப்பதைக் கண்டால் நீங்கள் இன்னும் தேவனைப் பற்றி குறைகூறுகிறீர்கள், உங்கள் கோழிக் குஞ்சுகளில் ஒன்று இறந்தாலும் அல்லது தொழுவத்தில் உள்ள வயதான பசு ஒன்று நோய்வாய்ப்பட்டாலும் கூட நீங்கள் குறைகூறுகிறீர்கள். உங்கள் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கும் நேரம் வந்துவிட்டது, ஆனால் உங்கள் குடும்பத்திற்கு போதுமான பணம் இல்லை என்ற போதும் நீங்கள் குறைகூறுகிறீர்கள்; நீங்கள் தொகுத்து வழங்கும் கடமையைச் செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் அதற்குத் தேவையான பணம் இல்லை, அப்போதும் நீ குறைகூறுகிறாய். நீ குறைகூறுதலால் நிரம்பி வழிகிறாய், மேலும், இதன் காரணமாக நீ சில சமயங்களில் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதில்லை, சில சமயங்களில் நீண்ட காலத்திற்கு எதிர்மறையாக மாறுகிறாய். இன்று உனக்கு நிகழும் எதுவும் உன்னுடைய வாய்ப்புகள் அல்லது தலைவிதியுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்துவதில்லை; நீ தேவனை விசுவாசிக்கவில்லை என்றாலும் இவைகள் நடக்கும், ஆனாலும் இன்று நீ அதற்கான பொறுப்பை தேவனிடத்தில் ஒப்படைத்து, தேவன் உன்னை புறம்பாக்கிவிட்டார் என்று வலியுறுத்திக் கூறுகிறாய். தேவன் மீதான உன்னுடைய விசுவாசம் எப்படிப்பட்டது? நீங்கள் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? யோபுவைப் போன்ற அதே உபத்திரவங்களை நீங்கள் அனுபவித்திருந்தால், இன்று தேவனைப் பின்பற்றும் உங்களில் யாரும் உறுதியாக நின்றிருக்க முடியாது, நீங்கள் அனைவரும் கீழே விழுந்துபோயிருப்பீர்கள். மிக எளிமையாகச் சொன்னால், உங்களுக்கும் யோபுக்கும் இடையே ஒரு வித்தியாசமான உலகம் உள்ளது. இன்று, உங்கள் சொத்துகளில் பாதி கைப்பற்றப்பட்டிருந்தால், நீங்கள் தேவன் இருப்பதை மறுக்கத் துணிந்திருப்பீர்கள்; உங்களிடமிருந்து உங்கள் குமாரனோ அல்லது குமாரத்தியோ எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால், நீங்கள் தெருக்களில் அலறிக் கொண்டே ஓடியிருந்திருப்பீர்கள்; உன்னுடைய வாழ்வாதாரத்திற்கான ஒரே வழியானது முட்டுச்சந்தை அடைந்திருந்தால், நீ முயற்சி செய்து அதை தேவனிடத்திலிருந்து எடுத்துச் சென்றிருப்பாய்; உன்னை பயமுறுத்துவதற்காக நான் ஏன் ஆரம்பத்தில் இவ்வளவு வார்த்தைகளைச் சொன்னேன் என்று நீ கேட்பாய். அத்தகைய நேரங்களில் நீங்கள் செய்யத் துணியாத எதுவுமே இருக்காது. நீங்கள் உண்மையான நுண்ணறிவு எதையும் பெற்றிருக்கவில்லை என்பதையும், உங்களுக்கு உண்மையான வளர்ச்சி இல்லை என்பதையும் இது காட்டுகிறது. எனவே, நீங்கள் அதிகம் அறிந்திருப்பதால், உங்களுக்கு இருக்கிற உபத்திரவங்களும் மிகப் பெரியவைகளாய் இருக்கின்றன, ஆனால் நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்வது, நீங்கள் அறிந்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை. வெறும் புரிதலோடும் அறிவோடும் நின்றுவிடாதீர்கள்; நீங்கள் எவ்வளவு உண்மையாகப் பயிற்சி செய்ய முடியும் என்பதையும், உங்கள் சொந்த கடின உழைப்பின் வியர்வையின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சம் மற்றும் பிரகாசம் எவ்வளவு சம்பாதிக்கப்பட்டது, மற்றும் உங்களுடைய சொந்த உறுதியை எத்தனை பயிற்சிகளில் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் நன்றாகப் பார்த்திருந்தீர்கள். நீ உன் வளர்ச்சியையும் பயிற்சியையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ யாருக்காகவும் வெறுமனே நடிக்க முயற்சிக்கக் கூடாது—இறுதியில் நீ சத்தியத்தையும் ஜீவனையும் பெற முடியுமா இல்லையா என்பது உன் சொந்த பின்தொடர்தலைப் பொறுத்ததாகும்.

அடிக்குறிப்பு:

அ. ஒரு ஹன்ஹாவ் பறவையின் கதை ஈசாப்பின் எறும்பும் வெட்டுக்கிளியும் என்ற நீதிக்கதையை மிகவும் ஒத்திருக்கிறது. வானிலை வெப்பமாக இருக்கும்போது, அதன் அண்டை வீட்டுப் பறவையான மேக்பையின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கூடு கட்டுவதற்குப் பதிலாக ஹன்ஹாவ் பறவை தூங்க விரும்புகிறது. குளிர்காலம் வந்ததும், பறவை குளிரில் உறைந்து இறக்கிறது.

முந்தைய: திரித்துவம் என்பது உண்டா?

அடுத்த: பயிற்சி (4)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக