மாம்சமாகிய தேவனுக்கும் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு
தேவனுடைய ஆவியானவர் பூமியில் கிரியை செய்யும்போது, அவர் தேடிக்கொண்டிருக்கிற ஆண்டுகள் பல உள்ளன, மேலும் யுகங்கள் முழுவதும் தேவன் தமது கிரியையைச் செய்யப் பயன்படுத்தியவர்களும் பலர் உள்ளனர். ஆனாலும், இந்தக் காலம் முழுவதும் தேவனுடைய ஆவியானவர் பொருத்தமான ஓய்விடம் இல்லாமல் இருந்திருக்கிறார், அதனால்தான் தேவன் தமது கிரியையைச் செய்ய வெவ்வேறு நபர்களை மாற்றுகிறார். மொத்தத்தில், அவருடைய கிரியையானது ஜனங்கள் மூலமாகத்தான் செய்யப்படுகிறது. அதாவது, இத்தனை ஆண்டுகளாக, தேவனுடைய கிரியை ஒருபோதும் நின்றுபோனதில்லை, ஆனால் அது இன்றுவரை ஜனங்களிடம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தேவன் பல வார்த்தைகளைப் பேசியிருக்கின்றபோதிலும் மற்றும் மிகவும் அதிகப்படியான கிரியைகளைச் செய்திருக்கின்றபோதிலும், மனிதன் இன்னும் தேவனை அறியாதிருக்கிறான். தேவன் ஒருபோதும் மனிதனிடம் தோன்றியதில்லை மற்றும் அவருக்குத் தொட்டுணரத்தக்க உருவம் இல்லை என்பவையே இதற்குக் காரணமாகும். ஆகையால், நடைமுறைத் தேவனின் நடைமுறை முக்கியத்துவத்தை எல்லா மனிதர்களையும் அறிந்துகொள்ளச் செய்யும் இந்தக் கிரியையை தேவன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த முடிவை எட்ட, தேவன் தமது ஆவியானவரை மனிதகுலத்திற்கு வெளிப்படையாக வெளிப்படுத்தி, அவர்கள் நடுவே தமது கிரியையைச் செய்ய வேண்டும். அதாவது, தேவனுடைய ஆவியானவர் சரீர உருவத்தை எடுத்து, மாம்சத்தையும் எலும்பையும் தரித்துக்கொண்டும், ஜனங்கள் நடுவே கண்ணுக்குத் தெரியும்படியாக நடந்துகொண்டும், அவர்களுடன் அவர்களுடைய வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்துகொண்டும், சில நேரங்களில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டும், சில நேரங்களில் தம்மை மறைத்துக்கொண்டும் இருந்தால் மட்டுமே, அவரைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு ஜனங்களால் வர முடியும். தேவன் மாம்சத்தில் மட்டுமே இருந்திருந்தால், அவரால் தமது கிரியையை முழுமையாக முடித்திருக்க முடியாது. மாம்சத்தில் செய்ய வேண்டிய ஊழியத்தை நிறைவேற்றி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாம்சத்தில் கிரியை செய்த பிறகு, அவர் சாதாரண மனிதத்தன்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிரியை செய்து, தாம் முடிக்க வேண்டிய எல்லா கிரியைகளையும் முடித்த பிறகு இயேசு செய்ததுபோலவே, தேவன் மாம்சத்தை விட்டுப் புறப்பட்டு, மாம்சத்தின் சாயலில் ஆவிக்குரிய உலகில் கிரியை செய்வார். “பாதை … (5)” என்பதிலுள்ள இந்தப் பத்தி உங்களுக்கு நினைவிருக்கலாம்: “என் பிதா என்னிடம் சொன்னதை நினைவுகூருகிறேன், ‘பூமியில், உன் பிதாவின் சித்தத்தைச் செய்யவும் அவருடைய கட்டளையை நிறைவேற்றவும் மட்டுமே நாடு. வேறு எதுவும் கவலையுறச் செய்ய வேண்டாம்.’” இந்தப் பத்தியில் நீ காண்பது என்ன? தேவன் பூமிக்கு வரும்போது, அவர் தமது கிரியையைத் தெய்வீகத்தன்மைக்குள் மட்டுமே செய்கிறார், இதைத்தான் பரலோக ஆவியானவர் மாம்சமாகிய தேவனிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வரும்போது, அவர் தமது வார்த்தைகளை வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு கண்ணோட்டங்களிலும் எடுத்துரைக்க, அவர் தேசம் முழுவதும் பேசுகிறார். அவர் தமது குறிக்கோள்களாகவும், செயல்படும் கொள்கையாகவும் முக்கியமாக மனிதனுக்குத் தேவையானதை வழங்குகிறார் மற்றும் மனிதனுக்குப் போதிக்கிறார், மேலும் தனிப்பட்ட உறவுகள் அல்லது ஜனங்களுடைய வாழ்க்கை விவரங்கள் போன்றவற்றில் அவர் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆவியானவருக்காக பேசுவதே அவருடைய பிரதான ஊழியமாகும். அதாவது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் தொட்டுணரும்படியாகத் தோன்றும்போது, அவர் மனிதனுக்கான ஜீவனை வழங்கி, சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். அவர் மனிதனுடைய கிரியையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை, அதாவது அவர் மனிதகுலத்தின் கிரியையில் பங்கேற்பதில்லை. மனிதர்களால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. தேவன் மனிதனுடைய கிரியையில் பங்கேற்பதில்லை. தேவன் தமது கிரியையைச் செய்ய இந்த பூமிக்கு வந்த இத்தனை ஆண்டுகளில், அவர் அதை எப்போதும் ஜனங்கள் மூலமாகவே செய்திருக்கிறார். இருப்பினும், இந்த ஜனங்களை மாம்சமான தேவனாகக் கருத முடியாது, தேவனால் பயன்படுத்தப்படுபவர்களாக மட்டுமே கருத முடியும். இதற்கிடையில், இன்றைய தேவனால் தெய்வீகக் கண்ணோட்டத்தில் நேரடியாகப் பேசி, ஆவியானவரின் சத்தத்தை வெளிப்படுத்தவும், ஆவியானவரின் சார்பாகக் கிரியை செய்யவும் முடியும். அதேபோல், யுகங்கள் முழுவதுமாக தேவன் பயன்படுத்திய எல்லோருமே மாம்ச சரீரத்திற்குள் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவரின் நிகழ்வுகளாகவே இருக்கின்றனர், அப்படியானால் அவர்களை ஏன் தேவன் என்று அழைக்க முடியாது? ஆனால் இன்றைய தேவனும் மாம்சத்தில் நேரடியாகக் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவராக இருக்கிறார், மேலும் இயேசுவும் மாம்சத்தில் கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர்கள் இருவருமே தேவன் என்று அழைக்கப்படுகின்றனர். அப்படியானால் வேறுபாடு என்ன? யுகங்கள் முழுவதுமாக தேவன் பயன்படுத்திய நபர்கள் எல்லோருமே சாதாரணமாகச் சிந்திக்கும் பகுத்தறியும் திறன்படைத்தவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே மனித நடத்தை குறித்த கொள்கைகளைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண மனித கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் சாதாரண ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அசாதாரண திறமையையும், இயல்பான புத்திசாலித்தனத்தையும் பெற்றிருக்கின்றனர். இந்த நபர்கள் மீது கிரியை செய்வதில், தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறார், இந்தத் தாலந்துகள் தேவன் அவர்களுக்கு வழங்கிய வரங்களாகும். தேவனுடைய ஊழியத்தில் அவர்களுடைய பெலன்களைப் பயன்படுத்தி தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய தாலந்துகளை உபயோகிக்கிறார். ஆனாலும், தேவனுடைய சாராம்சமானது கருத்துகள் அல்லது எண்ணங்கள் இல்லாமலும், மனித நோக்கங்கள் கலக்காமலும், சாதாரண மனிதர்கள் கொண்டிருப்பவை இல்லாமலும் இருக்கிறது. அதாவது, அவர் மனித நடத்தை குறித்தக் கொள்கைகளை அறிந்திருக்கவுமில்லை. இவ்வாறுதான் இன்றைய தேவன் பூமிக்கு வருகிறார். அவருடைய கிரியையும் அவருடைய வார்த்தைகளும் மனித நோக்கங்களோ மனித எண்ணங்களோ கலக்காதவையாக இருக்கின்றன, ஆனால் அவை ஆவியானவரின் நோக்கங்களின் நேரடி வெளிப்பாடாக இருக்கின்றன, அவர் தேவனுடைய சார்பாக நேரடியாகக் கிரியை செய்கிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஆவியானவர் நேரடியாகப் பேசுகிறார், அதாவது, தெய்வீகத்தன்மையானது மனிதனின் நோக்கங்களில் சிறிதளவுகூட கலக்காமல் நேரடியாகக் கிரியை செய்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மாம்சமாகிய தேவன் தெய்வீகத்தன்மையை நேரடியாக வெளிப்படுத்துகிறார், மனித எண்ணங்களோ கருத்துக்களோ இல்லாமல் இருக்கிறார், மேலும் அவரிடம் மனித நடத்தைகளின் கொள்கைளைப் பற்றிய புரிதல் எதுவும் இல்லை. தெய்வீகத்தன்மை மட்டுமே கிரியையில் ஈடுபட்டிருந்தால் (அதாவது தேவன் மட்டுமே கிரியை செய்கிறார் என்றால்), தேவனுடைய கிரியை பூமியில் செய்யப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. ஆகவே, தேவன் பூமிக்கு வரும்போது, தெய்வீகத்தன்மையில் தேவன் செய்யும் கிரியையுடன் இணைந்து மனிதகுலத்திற்குள் கிரியை செய்ய அவர் பயன்படுத்தும் சிறு எண்ணிக்கையிலான நபர்களை அவர் கொண்டிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவர் தமது தெய்வீகக் கிரியையை நிலைநிறுத்த மனித கிரியையைப் பயன்படுத்துகிறார். இல்லையென்றால், மனிதன் நேரடியாக தெய்வீகக் கிரியையில் ஈடுபட வழி இருந்திருக்காது. இவ்வாறுதான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கிரியை செய்தனர். உலகில் இயேசுவின் காலக் கட்டத்தில், அவர் பழைய நியாயப்பிரமாணங்களை ஒழித்து புதிதானக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவர் பல வார்த்தைகளையும் பேசினார். இந்தக் கிரியைகள் எல்லாம் தெய்வீகத்தன்மையில் செய்யப்பட்டன. பேதுரு, பவுல், யோவான் போன்ற மற்றவர்கள் எல்லோரும் இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் அடுத்தடுத்த கிரியைகளைத் தொடங்கினர். அதாவது, தேவன் அந்த யுகத்தில் தமது கிரியையைத் தொடங்கினார், கிருபையின் காலத்தின் தொடக்கத்தில் தொடங்கினார். அதாவது, அவர் பழைய யுகத்தை ஒழித்து, ஒரு புதிய யுகத்தைத் தொடங்கினார். மேலும், “தேவன் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்” என்ற வார்த்தைகளையும் நிறைவேற்றினார். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மனிதனானவன் தெய்வீகக் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மனித கிரியையைச் செய்ய வேண்டும். இயேசு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி, பூமியில் தனது கிரியையை முடித்ததும், அவர் மனிதனை விட்டுச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகு, கிரியை செய்த எல்லா ஜனங்களும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படியே செய்தார்கள் மற்றும் அவர் பேசிய சத்தியங்களின்படியே நடந்தனர். இந்த ஜனங்கள் எல்லோரும் இயேசுவுக்காகக் கிரியை செய்தனர். இயேசு மட்டுமே கிரியை செய்திருந்தால், அவர் எத்தனை வார்த்தைகள் பேசியிருந்தாலும், அவருடைய வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஜனங்களுக்கு எந்த வழியும் இருந்திருக்காது. ஏனென்றால், அவர் தெய்வீகத்தில் கிரியை செய்தார், தெய்வீக வார்த்தைகளை மட்டுமே அவரால் பேச முடிந்தது, சாதாரண ஜனங்கள் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அவரால் காரியங்களை விவரிக்க முடியவில்லை. ஆகையால், அவருக்குப் பின் வந்த அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அவருடைய கிரியையை முடிக்க வேண்டியதாயிற்று. தெய்வீகக் கிரியையை முடிப்பதற்காக பேசவும் கிரியை செய்யவும் மாம்சமாகிய தேவனின் மாம்சத்தைப் பயன்படுத்தி, அதன்பின் அவருடைய கிரியையை நிறைவேற்ற தேவனுடைய சொந்த இருதயத்தைப் பின்பற்றுகிற ஒரு சில அல்லது அநேகமாக அதிக நபர்களைப் பயன்படுத்தினார், மாம்சமாகிய தேவன் தமது கிரியை செய்யும் விதத்தின் கொள்கை இதுதான். அதாவது, மனிதகுலத்திற்கு மேய்ச்சலைக் கொடுக்கும் மற்றும் தண்ணீரைப் பாய்ச்சும் கிரியையைச் செய்வதற்கு தேவன் தமது இருதயத்திற்கு ஏற்ற நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கலாம்.
தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் தெய்வீகக் கிரியையை மட்டுமே செய்து, அவருடன் இணைந்து கிரியை செய்ய அவரது இருதயத்திற்கு ஏற்ற ஒருவரும் இல்லை என்றால், மனிதனால் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவோ தேவனுடன் இணைந்து செயல்படவோ முடியாது. தேவன் இந்தக் கிரியையைச் செய்து முடிக்கவும், திருச்சபைகளைக் கண்காணிக்கவும், மேய்க்கவும் அவருடைய இருதயத்திற்கு ஏற்ற சாதாரண நபர்களைப் பயன்படுத்த வேண்டும், இதனால் மனிதனின் அறிவாற்றல் செயல்முறைகளின் அளவு, அவனது மூளை ஆகியவை கற்பனை செய்யும் திறனுடையவையாக இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தேவன் தமது தெய்வீகத்திற்குள் செய்யும் கிரியையை “மொழிபெயர்க்க” அவருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான நபர்களைப் பயன்படுத்துகிறார், இதன்மூலம் தெய்வீகப் பாஷையை மனிதப் பாஷையாக மாற்ற முடியும், மேலும் இதன்மூலம் ஜனங்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். தேவன் அவ்வாறு செய்திருக்காவிட்டால், தேவனுடைய தெய்வீகப் பாஷையை ஒருவரும் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள்பொதுவாகவே சிறிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினராக இருக்கின்றனர், மேலும் மனிதனின் புரிந்துகொள்ளும் திறன் பலவீனமாகவே இருக்கிறது. அதனால்தான், மாம்சமாகிய தேவனின் மாம்சத்தில் கிரியை செய்யும் போது மட்டுமே தேவன் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கிறார். தெய்வீகக் கிரியை மட்டுமே இருந்திருந்தால், மனிதனுக்கு தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது தேவனுடன் செயல்படவோ வழி எதுவும் இருந்திருக்காது, ஏனென்றால் மனிதனுக்கு தேவனுடைய பாஷைப் புரிவதில்லை. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற, அவருடைய வார்த்தைகளைத் தெளிவுபடுத்தும் பிரதிநிதிகள் மூலமாக மட்டுமே மனிதனால் இந்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும், மனிதகுலத்திற்குள் இதுபோன்றவர்கள் மட்டுமே கிரியை செய்தால், அதனால் மனிதனின் சாதாரண வாழ்க்கையை மட்டுமே பராமரிக்க முடியும், மனிதனின் மனநிலையை அதனால் மாற்ற முடியாது. தேவனுடைய கிரியையால் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் கொண்டிருக்க முடியவில்லை. அதே பழைய பாடல்களும், அதே பழைய பயனற்ற கூற்றுகளும் மட்டுமே இருந்தன. மாம்சமாகிய தேவனுடைய பிரதிநிதி மூலமாக மட்டுமே, மாம்சமாகிய அவருடைய காலத்தில் அவர் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்கிறார் மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறார், அதன் பிறகு ஜனங்கள் அவருடைய வார்த்தைகளின்படியே கிரியை செய்கின்றனர், அனுபவம் பெறுகின்றனர், இவ்வாறு மட்டுமே அவர்களுடைய வாழ்க்கை மனநிலை மாற முடியும், இவ்வாறு மட்டுமே அவர்களால் காலத்துடன் ஓட முடியும். தெய்வீகத்தன்மையில் கிரியை செய்கிறவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அதே நேரத்தில் மனிதத்தன்மையில் கிரியை செய்கிறவர்கள் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களாக இருக்கின்றனர். அதாவது, மாம்சமாகிய தேவன் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களிடமிருந்து முக்கியமாக வேறுபட்டவராக இருக்கிறார். மாம்சமாகிய தேவன் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, அதே நேரத்தில் தேவனால் பயன்படுத்தப்படும் நபர்களால் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு காலத்தின் துவக்கத்திலும், மனிதனைப் புதிய துவக்கத்திற்குள் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் தனிப்பட்ட முறையில் பேசி, புதிய யுகத்தைத் தொடங்குகிறார். அவர் பேசி முடித்ததும், தேவனுடைய தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது என்பதை இது குறிக்கிறது. அதன் பிறகு, ஜனங்கள் எல்லோரும் தங்கள் ஜீவனின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க தேவனால் பயன்படுத்தப்படுபவர்களின் வழியைப் பின்பற்றுகின்றனர். மேலும், இந்தக் கட்டத்தில்தான் தேவன் மனிதனை புதிய யுகத்திற்குள் கொண்டு வந்து, மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிக்கும் தருணமான ஒரு புதிய தொடக்கப் புள்ளியை ஜனங்களிடம் கொடுக்கிறார்.
தேவன் தமது சாதாரண மனிதத்தன்மையைப் பரிபூரணப்படுத்துவதற்காகவோ, சாதாரண மனிதத்தன்மையின் கிரியையைச் செய்வதற்காகவோ பூமிக்கு வருவதில்லை. அவர் சாதாரண மனிதத்தன்மையில் தெய்வீகக் கிரியையைச் செய்வதற்காக மட்டுமே வருகிறார். தேவன் பேசும் சாதாரண மனிதத்தன்மை என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போன்றது அல்ல. மனிதன் “சாதாரண மனிதத்தன்மையை” ஒரு மனைவி அல்லது ஒரு கணவன், மற்றும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரைக் கொண்டிருப்பதாக வரையறுக்கிறான், இது ஒரு சாதாரண மனிதன் என்பதற்குச் சான்றாகும். ஆனால், தேவன் இதை இவ்வாறு பார்ப்பதில்லை. அவர் சாதாரண மனிதத்தன்மையைச் சாதாரண மனித எண்ணங்களாக, சாதாரண மனித ஜீவிதங்களாக மற்றும் சாதாரண நபர்களாகப் பிறப்பதாகப் பார்க்கிறார். ஆனால் சாதாரணத்தன்மை குறித்து மனிதன் பேசும் விதத்தில் அவருடைய சாதாரணத்தன்மையில் ஒரு மனைவி, அல்லது ஒரு கணவன், மற்றும் குழந்தைகள் ஆகியோரைக் கொண்டிருப்பது அடங்காது. அதாவது, மனிதனைப் பொறுத்தவரை, தேவன் பேசும் சாதாரண மனிதத்தன்மையை மனிதத்தன்மை இல்லாதது, கிட்டத்தட்ட உணர்ச்சி இல்லாதது மற்றும் மாம்ச தேவைகள் இல்லாதது என்று மனிதன் கருதுகிறான், அதாவது ஒரு சாதாரண மனிதனின் வெளிப்புறத்தை மட்டுமே கொண்டு, ஒரு சாதாரண நபரின் தோற்றத்தைப் பெற்று, ஆனால் உண்மையில் ஒரு சாதாரண மனிதன் கொண்டிருக்க வேண்டிய அனைத்தையும் முழுமையாகக் கொண்டிராத இயேசுவைப் போல இருப்பதாகக் கருதுகிறான். இதிலிருந்து மாம்சமாகிய தேவனுடைய சாராம்சமானது சாதாரண மனிதத்தன்மையை முழுவதுமாக உள்ளடக்காமல், சாதாரண மனித வாழ்க்கையின் வழக்கமான செயல்பாடுகளை ஆதரிப்பதற்காகவும், சாதாரண மனிதனின் பகுத்தறியும் சக்திகளை நிலைநிறுத்துவதற்காகவும் ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய காரியங்களின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். ஆனால் இந்தக் காரியங்களுக்கும் சாதாரண மனிதத்தன்மையாக மனிதன் கருதுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவைதான் மாம்சமாகிய தேவன் கொண்டிருக்க வேண்டியவையாகும். இருப்பினும், மாம்சமாகிய தேவன் ஒரு மனைவி, மகன்கள் மற்றும் மகள்கள், ஒரு குடும்பம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூற முடியும் என்று சொல்கிறவர்களும் இருக்கின்றனர். இந்த விஷயங்கள் இல்லாமல், அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் நான் உன்னிடம் கேட்கிறேன், “தேவனுக்கு ஒரு மனைவி உண்டா? தேவனுக்கு ஒரு கணவர் இருப்பது சாத்தியமா? தேவனால் குழந்தைகளைப் பெற முடியுமா?” இவை பொய்யானவை அல்லவா? ஆனாலும்கூட, மாம்சமாகிய தேவனால் பாறைகளுக்கு இடையிலான பிளவுகளிலிருந்து தோன்றவோ அல்லது வானத்திலிருந்து கீழே விழவோ முடியாது. அவரால் ஒரு சாதாரண மனிதக் குடும்பத்தில் மட்டுமே பிறக்க முடியும். அதனால்தான் அவருக்குப் பெற்றோரும் சகோதரிகளும் இருக்கின்றனர். இவைதான் மாம்சமாகிய தேவனுடைய சாதாரண மனிதத்தன்மை கொண்டிருக்க வேண்டியவையாகும். இதுதான் இயேசுவின் நிலையாக இருந்தது. இயேசுவுக்கு ஒரு தந்தை, தாய், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர், இவையெல்லாம் இயல்பானவையாக இருந்தன. ஆனால் அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகன்களும் மகள்களும் இருந்திருந்தால், மாம்சமாகிய தேவன் கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்பிய சாதாரண மனிதத்தன்மையாக அவருடையது இருந்திருக்காது. இதுதான் நிலைமையாக இருந்திருந்தால், அவரால் தெய்வீகத்தன்மையின் சார்பாக கிரியை செய்திருக்க முடிந்திருக்காது. இதற்கு சரியான காரணம் என்னவென்றால், அவர் ஒரு மனைவியையோ குழந்தைகளையோ கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் சாதாரண நபருக்குப் பிறந்திருந்தாலும், அவரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிந்தது. இதை மேலும் தெளிவுபடுத்த, ஒரு சாதாரண நபர் என்று தேவன் கருதுபவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நபராக இருக்கிறார். அத்தகைய நபர் மட்டுமே தெய்வீகக் கிரியையைச் செய்வதற்கு தகுதியுடையவராக இருக்கிறார். மறுபுறம், ஒரு நபருக்கு ஒரு மனைவி, குழந்தைகள் அல்லது ஒரு கணவன் இருந்தால், அந்த நபரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடியாது. ஏனென்றால், மனிதர்களுக்குத் தேவைப்படும் சாதாரண மனிதத்தன்மையை மட்டுமே அவர்கள் கொண்டிருப்பார்கள், ஆனால் தேவனுக்குத் தேவைப்படும் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவனால் கருதப்படுவதும், ஜனங்களால் புரிந்துகொள்ளப்படுவதும் பெரும்பாலும் மாறுபட்டவையாகவும், இணக்கமில்லாதவையாகவும் இருக்கின்றன. தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில், ஜனங்களின் கருத்துக்களிலிருந்து அதிகம் மாறுபடுகின்றன மற்றும் பெரிதும் வேறுபடுகின்றன. தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் தெய்வீகத்தன்மையே முற்றிலும் பிரதான பங்கு வகிக்கிறது, மனிதத்தன்மை ஒரு துணைப் பங்கையே வகிக்கிறது என்று ஒருவர் கூறலாம். தேவன் பூமிக்கு தமது கிரியையைச் செய்ய வருவதால், மனிதனை அதில் கை வைக்க அனுமதிப்பதைக் காட்டிலும் அவரே தமது கிரியையைச் செய்ய மாம்சத்தில் (முழுமையற்ற, சாதாரண மனிதனாக) அவதரிக்கிறார். மனிதகுலத்தை ஒரு புதிய யுகத்திற்குள் வைக்கவும், மனிதகுலத்திடம் அவருடைய கிரியையின் அடுத்தக் கட்டத்தைப் பற்றி சொல்லவும், அவருடைய வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ள பாதைக்கு ஏற்ப நடக்குமாறு ஜனங்களைக் கேட்டுக்கொள்ளவும் அவர் இந்த மாம்சமாகிய அவதரிப்பைப் பயன்படுத்துகிறார். இவ்வாறுதான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முடிவடைகிறது. அவர் மனிதகுலத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லப் போகிறார், இனிமேலும் சாதாரண மனிதத்தன்மையுள்ள மாம்சத்தில் இருக்கப்போவதில்லை, மாறாக அவருடைய கிரியையின் மற்றொரு பகுதியைத் தொடர மனிதரிடமிருந்து விலகியிருக்கப்போகிறார். அதன்பின், தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஜனங்களைப் பயன்படுத்தி, அவர்களுடைய மனிதத்தன்மையிலே இந்த ஜனக்கூட்டத்திற்கு நடுவே பூமியில் தமது கிரியையைத் தொடர்கிறார்.
மாம்சமாகிய தேவனால் மனிதனுடன் என்றென்றும் இருக்க முடியாது, ஏனென்றால் தேவன் செய்ய வேண்டிய கிரியைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவரால் மாம்சத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியாது. அவர் மாம்சத்தின் சாயலில் அந்தக் கிரியையைச் செய்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய அவர் மாம்சத்தைத் துறக்க வேண்டியதிருக்கிறது. தேவன் பூமிக்கு வரும்போது, அவர் மரித்து மனிதகுலத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு சாதாரண நபர் அடைய வேண்டிய உருவத்தை அவர் அடையும் வரை அவர் காத்திருப்பதில்லை. அவருடைய மாம்சம் எத்தனை வயதுடையதாக இருந்தாலும், அவருடைய கிரியை முடிந்ததும், அவர் மனிதனை விட்டுச் சென்றுவிடுகிறார். அவருக்கு வயது என்பது போன்ற எந்தக் காரியமும் கிடையாது. மனித ஆயுட்காலத்துக்கு ஏற்ப அவர் தமது நாட்களை எண்ணுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் தமது கிரியையின் படிகளுக்கு ஏற்ப மாம்சத்தில் தமது வாழ்க்கையை முடிக்கிறார். மாம்சத்திற்குள் வருவதில் தேவனுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வயது இருக்க வேண்டும், வயது வந்தவராக வளர வேண்டும், முதுமையடைய வேண்டும், அந்த சரீரம் மரிக்கும்போது மட்டுமே வெளியேற வேண்டும் என்று கருதுபவர்கள் இருக்கலாம். இது மனிதனின் கற்பனையாகும். தேவன் இவ்வாறு கிரியை செய்வதில்லை. அவர் தாம் செய்யவேண்டிய கிரியையைச் செய்வதற்காக மட்டுமே மாம்சத்திற்குள் வருகிறார், சாதாரண மனிதனின் செயல்பாடுகளான பெற்றோருக்குப் பிறந்து, வளர்ந்து, ஒரு குடும்பத்தை உருவாக்கி, ஒரு தொழிலைத் தொடங்கி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது அல்லது வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பது போன்ற ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதற்கு அல்ல. தேவன் பூமிக்கு வரும்போது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தைத் தரித்துக்கொண்டு, மாம்சத்திற்குள் வருவதாக இது இருக்கிறது, ஆனால் தேவன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதில்லை. அவர் தனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்ற வருகிறார். அதன் பிறகு அவர் மனிதகுலத்தை விட்டுச் சென்றுவிடுவார். அவர் மாம்சத்திற்குள் வரும்போது, தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தின் சாதாரண மனிதத்தன்மையை பரிபூரணமாக்குவதில்லை. மாறாக, தேவன் முன்குறித்த நேரத்தில், தெய்வீகத்தன்மை நேரடியாக கிரியை செய்கிறது. அதன்பின், அவர் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து, தமது ஊழியத்தை முழுவதுமாக முடித்தப் பிறகு, இந்தக் கட்டத்தில் தேவனுடைய ஆவியானவரின் கிரியை செய்யப்படுகிறது. அவருடைய மாம்ச சரீரம் அதன் நீண்ட ஆயுட்காலத்தில் வாழ்ந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், மாம்சமாகிய தேவனுடைய வாழ்க்கையும் அந்த நேரத்தில் முடிவடைகிறது, அதாவது, மாம்ச சரீரமானது வாழ்வின் எந்தக் கட்டத்தை அடைந்தாலும், அது பூமியில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், எல்லாமே ஆவியானவரின் கிரியை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. சாதாரண மனிதத்தன்மையில் இருக்க வேண்டும் என்று மனிதன் கருதுவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இயேசுவை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மாம்சத்தில் ஜீவித்தார். ஒரு மனித சரீரத்தின் ஆயுட்காலத்தின் அடிப்படையில், அவர் அந்த வயதில் மரித்திருக்கக்கூடாது, அவர் விட்டுச் சென்றிருக்கக்கூடாது. ஆனால் இது குறித்து தேவனுடைய ஆவியானவருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருடைய கிரியை முடிந்ததும், அந்த நேரத்தில் அவரது சரீரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆவியானவருடன் மறைந்து சென்றது. இதுதான் தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும் கொள்கையாகும். ஆகையால், உறுதியாகக் கூறுவதென்றால், மாம்சமாகிய தேவனுடைய மனிதத்தன்மையானது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அவர் மீண்டும் கிரியை செய்வதற்காகவே பூமிக்கு வருகிறார், சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ்வதற்காக அல்ல. அவர் முதலில் ஒரு சாதாரண மனித வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு, அதன்பின் கிரியை செய்ய ஆரம்பிப்பதில்லை. மாறாக, அவர் ஒரு சாதாரண மனித குடும்பத்தில் பிறந்ததனால், அவரால் தெய்வீகக் கிரியையைச் செய்ய முடிகிறது, இந்தக் கிரியையானது மனிதனின் நோக்கங்களால் களங்கப்படாததாகவும், மாம்சமல்லாததாகவும் இருக்கிறது, இது நிச்சயமாக சமூகத்தின் வழிகளைக் கடைப்பிடிப்பதில்லை அல்லது மனிதனின் எண்ணங்கள் அல்லது கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை, மேலும் இது வாழ்வதற்கான மனிதனின் தத்துவங்களையும் கொண்டிருப்பதில்லை. இதுதான் மாம்சமாகிய தேவன் செய்ய விரும்பும் கிரியையாகும். மேலும், இதுதான் அவர் மாம்சமாகியதன் நடைமுறை முக்கியத்துவமும் ஆகும். பிற அற்பமான செயல்முறைகளுக்கு உள்ளாகாமல், மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்யவே தேவன் பிரதானமாக மாம்சத்திற்குள் வருகிறார். ஒரு சாதாரண மனிதனின் அனுபவங்களைப் பொறுத்தவரை, அவர் அவற்றைக் கொண்டிருப்பதில்லை. மாம்சமாகிய தேவனுடைய மாம்சம் செய்ய வேண்டிய கிரியையில் சாதாரண மனித அனுபவங்கள் அடங்குவதில்லை. ஆகையால், தேவன் மாம்சத்தில் தாம் நிறைவேற்ற வேண்டிய கிரியையை நிறைவேற்றுவதற்காகவே மாம்சத்திற்குள் வருகிறார். மற்றவற்றுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பல அற்பமான செயல்முறைகளுக்கு உள்ளாவதில்லை. அவருடைய கிரியை முடிந்ததும், அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் முடிவடைகிறது. இந்தக் கட்டத்தை முடிப்பது என்றால் அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியை முடிந்துவிட்டது, அவருடைய மாம்சத்தின் ஊழியம் முழுமையடைந்துவிட்டது என்று அர்த்தமாகும். ஆனால் அவரால் முடிவின்றி தொடர்ந்து மாம்சத்தில் கிரியை செய்ய முடியாது. அவர் மாம்சத்திற்கு வெளியே உள்ள மற்றொரு இடத்திற்குக் கிரியை செய்யச் செல்ல வேண்டும். இவ்வாறு மட்டுமே அவருடைய கிரியையை முழுமையாகச் செய்து, அதிகப் பலனை அடைய முடியும். தேவன் தமது மூலமுதலானத் திட்டத்தின் படியே கிரியை செய்கிறார். அவர் என்ன கிரியை செய்ய வேண்டும், எந்தக் கிரியையைச் செய்து முடித்திருக்கிறார் என்பது அவருக்கு தமது உள்ளங்கையைப் போலத் தெளிவாகத் தெரியும். தேவன் ஒவ்வொரு நபரையும் தாம் ஏற்கனவே முன்குறித்த பாதையில் நடக்க வழிநடத்துகிறார். ஒருவரும் இதிலிருந்து தப்ப முடியாது. தேவனுடைய ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். ஒருவேளை, பிற்காலக் கிரியையில், மனிதனை வழிநடத்த தேவன் மாம்சத்தில் பேசாமல், ஆவியானவர் தொட்டுணரக்கூடிய உருவத்தில் மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவார். அப்போதுதான் மனிதனால் தேவனைத் தொடவும், தேவனைக் காணவும், மேலும் நடைமுறைத் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு தேவனுக்கு தேவைப்படும் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும். இதுதான் தேவன் நிறைவேற்ற விரும்பும் மற்றும் அவர் நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிட்ட கிரியை ஆகும். இதன் மூலம், நீங்கள் செல்ல வேண்டிய பாதையை நீங்கள் எல்லோரும் காண வேண்டும்!