அத்தியாயம் 22
மனுஷன் வெளிச்சத்தின் மத்தியில் வாழ்கிறான், ஆனாலும் வெளிச்சத்தின் விலைமதிப்பற்ற தன்மையை அவன் அறியவில்லை. வெளிச்சத்தின் பொருள் பற்றியும், அதன் மூலத்தைப் பற்றியும், மேலும், அது யாருடையது என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை. நான் மனுஷனிடையே வெளிச்சத்தை வழங்கும்போது, மனுஷனிடையேயான நிலைமைகளை உடனடியாக ஆராய்கிறேன்: வெளிச்சத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் மாறிக்கொண்டேயும் வளர்ந்தும், இருளை விட்டு நீங்கியும் விட்டார்கள். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் நான் பார்க்கிறேன், மலைகள் மூடுபனியில் மூழ்கியுள்ளன என்பதையும், தண்ணீர் குளிரில் உறைந்திருப்பதையும் பார்க்கிறேன், வெளிச்சம் வருவதால் ஏதோ விலைமதிப்பற்ற ஒன்றைக் கண்டுபிடிக்கப்போகிறோம் என்றெண்ணி ஜனங்கள் கிழக்கு நோக்கிப் பார்க்கிறார்கள்—ஆனாலும் மனுஷன் மூடுபனிக்குள் ஒரு தெளிவான திசையை அறிய இயலாமல் இருக்கிறான். முழு உலகமும் மூடுபனி என்ற போர்வையால் மூடியிருப்பதால், மேகங்களின் ஊடே நான் பார்க்கும்போது, என் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஒரு மனுஷன் கூட இல்லை. மனுஷன் பூமியில் எதையோ தேடுகிறான்; அவன் தேடுவது போலத் தோன்றுகிறது; அவன் என் வருகைக்காகக் காத்திருக்க விரும்புது போல தோன்றுகிறது, ஆனால் அவனுக்கு எனது நாள் பற்றி தெரியவில்லை, மேலும் கிழக்கில் தெரியும் வெளிச்சத்தின் மங்கிய ஒளியை மட்டுமே அடிக்கடி பார்க்க முடிகிறது. எல்லா ஜனங்களிடையேயும், என் சொந்த இருதயத்தோடு உண்மையாக ஒத்துப்போகிறவர்களை நான் தேடுகிறேன். நான் எல்லா ஜனங்களிடையேயும் நடக்கிறேன், எல்லா ஜனங்களிடையேயும் வாழ்கிறேன், ஆனால் பூமியில் மனுஷன் பாதுகாப்பாக இருக்கிறான், ஆகவே, என் சொந்த இருதயத்தோடு உண்மையாக ஒத்துப்போகிறவன் யாரும் இல்லை. என் சித்தத்தை எவ்வாறு கவனிப்பது என்று ஜனங்களுக்குத் தெரியவில்லை, அவர்களால் என் செயல்களைப் பார்க்க முடியவில்லை, மேலும் அவர்களால் வெளிச்சத்திற்குள் செல்ல முடியவில்லை, வெளிச்சத்தால் பிரகாசிக்க முடியவில்லை. மனுஷன் என் வார்த்தைகளை எப்போதும் பொக்கிஷமாகக் கருதினாலும், சாத்தானின் வஞ்சகத் திட்டங்களை அவனால் பார்க்க முடியவில்லை; மனுஷனின் வளச்சி மிகச் குறைவாக இருப்பதால், அவனது இருதயம் விரும்பியபடி அவனால் செயல்பட முடியவில்லை. மனுஷன் என்னை ஒருபோதும் நேர்மையாக நேசித்ததில்லை. நான் அவனை உயர்த்தும்போது, அவன் தன்னைத் தகுதியற்றவன் என்று உணர்கிறான், ஆனால் இது என்னைத் திருப்திப்படுத்த அவனை முயற்சி செய்ய வைக்காது. நான் அவனுக்குக் கொடுத்த “நிலையை” அவன் கையில் வைத்துக் கொண்டு அதை ஆராய்ந்து பார்க்கிறான்; என் அருமையை அவனால் உணரமுடியவில்லை, அதற்குப் பதிலாக தனது நிலையின் ஆசீர்வாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இது மனுஷனின் குறைபாடு அல்லவா? மலைகள் நகரும்போது, உன் நிலைக்காக ஒரு மாற்றுப்பாதையை அவற்றால் உருவாக்க முடியுமா? தண்ணீர் பாயும் போது, அவை மனுஷனின் நிலைக்கு முன் நிற்க முடியுமா? மனுஷனின் நிலையால் வானங்களையும் பூமியையும் தலைகீழாக்க முடியுமா? ஒருகாலத்தில் நான் மனுஷனிடம் அநேக முறை இரக்கமுள்ளவனாக இருந்தேன், ஆனால் அதை யாரும் மதிக்கவில்லை, பொக்கிஷமாகப் பார்க்கவில்லை. அவர்கள் அதை ஒரு கதையாகக் கேட்டார்கள், அல்லது அதை ஒரு புதினமாகப் படித்தார்கள். என் வார்த்தைகள் உண்மையில் மனுஷனின் இருதயத்தைத் தொடவில்லையா? எனது சொற்கள் உண்மையில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லையா? என் இருப்பை யாரும் நம்பவில்லை என்பதாக இருக்குமா? மனுஷன் தன்னை நேசிப்பதில்லை; அதற்குப் பதிலாக, அவன் என்னைத் தாக்கச் சாத்தானுடன் ஒன்றுபடுகிறான், மேலும் எனக்கு ஊழியம் செய்யச் சாத்தானை ஒரு “சொத்தாகப்” பயன்படுத்துகிறான். நான் சாத்தானின் எல்லா வஞ்சகத் திட்டங்களிலும் ஊடுருவி, பூமியின் ஜனங்கள் சாத்தானின் வஞ்சனைகளை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பேன், அதனால் அதன் இருப்பால் அவர்கள் என்னை எதிர்க்காமல் இருப்பர்.
ராஜ்யத்தில், நான்தான் ராஜா—ஆனால் என்னை அதன் ராஜாவாகக் கருதுவதற்குப் பதிலாக, மனுஷன் என்னை “வானத்திலிருந்து இறங்கிவந்த இரட்சகர்” என்று கருதுகிறான். இதன் விளைவாக, நான் அவனுக்கு தருமம் கொடுக்க வேண்டும் என்று ஏங்குகிறான், ஆனால் என்னைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. பிச்சைக்காரர்களைப் போல அநேகர் எனக்கு முன்பாக மன்றாடினர்; அநேர் தங்கள் “சாக்குகளை” என்னிடம் திறந்துகாட்டி, தப்பிப்பிழைக்க அவர்களுக்கு உணவு கொடுக்கும்படி என்னிடம் வேண்டிக்கொண்டார்கள்; அநேகர் பசியுள்ள ஓநாய்களைப் போலப் பேராசை நிறைந்த கண்களால் என்னைப் பார்க்கிறார்கள், என்னை அப்படியே விழுங்கி தங்கள் வயிற்றை நிரப்ப விரும்புகிறார்கள்; அநேர் தங்கள் மீறுதல்களால் மௌனமாகத் தலை குனிந்து வெட்கப்படுகிறார்கள், என் கருணைக்காக ஜெபிக்கிறார்கள், அல்லது என் சிட்சையை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். நான் என் சொற்களை வெளிப்படுத்தும்போது, மனுஷனின் பல்வேறு முட்டாள்தனங்கள் போலித்தனமாகத் தோன்றுகின்றன, மேலும் அவனது உண்மையான உருவம் வெளிச்சத்தில் வெளிப்படுகிறது; பிரகாசிக்கும் வெளிச்சத்தில், மனுஷனால் தன்னை மன்னிக்க இயலவில்லை. இவ்வாறு, அவன் தலைகுனிந்து தன் பாவங்களை ஒப்புக்கொள்ள என் முன் விரைகிறான். மனுஷனின் “நேர்மை” காரணமாக, நான் அவனை ஒரு முறை இரட்சிப்பு எனும் ரதத்தின் மேலே இழுக்கிறேன், எனவே அவன் எனக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறான், மேலும் அவன் என்னை அன்புடன் நோக்குகிறான். ஆனாலும் அவன் என்னுள் தஞ்சமடைய உண்மையிலேயே விரும்பவில்லை, அவனுடைய இருதயத்தை எனக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. அவன் வெறுமனே என்னைப் பற்றி பெருமை பேசுகிறான், ஆனாலும் அவன் என்னை உண்மையாக நேசிப்பதில்லை, ஏனென்றால் அவன் அவனது மனதை என்னிடம் திருப்பவில்லை; அவனுடைய சரீரம் எனக்கு முன்பாக இருக்கிறது, ஆனாலும் அவனுடைய இருதயம் எனக்குப் பின்னால் இருக்கிறது. விதிகளைப் பற்றிய மனிதனுடைய புரிதல் மிகவும் மோசமாக இருப்பதாலும், எனக்கு முன் வருவதில் அவனுக்கு அக்கறை இல்லாததாலும், நான் அவனுக்குத் தகுந்த ஆதரவை வழங்குகிறேன், இதனால் அவன் தனது பிடிவாதமான அறியாமையின் மத்தியில் இருந்து என்னை நோக்கித் திரும்புவான். இது நான் மனுஷனுக்கு அளிக்கும் இரக்கமும், அவனைக் காப்பாற்ற நான் பாடுபடும் முறையும் ஆகும்.
பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் என் நாளின் வருகையை கொண்டாடுகிறார்கள், தேவதூதர்கள் என் எல்லா ஜனங்களிடையேயும் நடக்கிறார்கள். சாத்தான் பிரச்சனையை ஏற்படுத்தும்போது, தேவதூதர்கள், வானத்தில் அவர்கள் செய்யும் ஊழியத்தின் காரணமாக, எப்போதும் என் ஜனங்களுக்கு உதவுகிறார்கள். மனுஷ பலவீனம் காரணமாக அவர்கள் பிசாசால் ஏமாற்றப்படுவதில்லை, ஆனால் அந்தகார வல்லமைகளின் தாக்குதலால், மூடுபனி ஊடே மனுஷனின் வாழ்க்கையை அனுபவிக்க மேலும் முயற்சி செய்கிறார்கள். என் ஜனங்கள் அனைவரும் என் நாமத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள், ஒருபோதும் என்னை வெளிப்படையாக எதிர்க்க யாரும் எழுந்திருப்பதில்லை. தேவதூதர்களின் உழைப்பால், மனுஷன் என் நாமத்தை ஏற்றுக்கொள்கிறான், அனைவரும் என் கிரியையின் ஓட்டத்தின் மத்தியில் இருக்கிறார்கள். உலகம் வீழ்ச்சியடைகிறது! பாபிலோன் முடங்கி உள்ளது! ஓ, மத உலகமே! பூமியில் இருக்கும் என் அதிகாரத்தால் அதை எவ்வாறு அழிக்க முடியாமல் போகும்? எனக்குக் கீழ்ப்படியாமல் என்னை எதிர்க்கத் துணிந்தவர் யார்? எழுத்தாளர்களா? ஒவ்வொரு மத அதிகாரியுமா? பூமியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமா? தேவதூதர்களா? என் சரீரத்தின் பரிபூரணத்தையும் முழுமையையும் யார் கொண்டாடவில்லை? எல்லா ஜனங்களிடையேயும், யார் என் புகழை நிறுத்தாமல் பாடுவதில்லை, யார் மகிழ்ச்சியாக இல்லை? நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகையில் வாழ்கிறேன், ஆனாலும் இது என்னைப் பயமுறுத்தி நடுங்கவைக்கவோ அல்லது ஓடவைக்கவோ செய்யாது, ஏனென்றால் அதன் ஜனங்கள் அனைவரும் ஏற்கனவே அதை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். வலுசர்ப்பத்தின் பொருட்டு அதன் முன் ஒருபோதும் அதன் “கடமையைச்” செய்யவில்லை; அதற்குப் பதிலாக, தங்களுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன, ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்கின்றன. பூமியில் உள்ள நாடுகள் எவ்வாறு அழியாமல்போகும்? பூமியில் உள்ள நாடுகள் எப்படி வீழாமல்போகும்? என் ஜனங்கள் எப்படி உற்சாகப்படாமல் இருப்பர்? அவர்களால் எப்படி மகிழ்ச்சியுடன் பாடாமல் இருக்கமுடியும்? இது மனுஷனின் கிரியையா? இதை மனுஷனின் கைகள் செய்கின்றனவா? நான் மனுஷனுக்கு அவனது இருப்பின் மூலத்தைக் கொடுத்தேன், அவனுக்குப் பொருட்களை வழங்கினேன், ஆனாலும் அவன் தனது தற்போதையச் சூழ்நிலைகளில் அதிருப்தி அடைந்து என் ராஜ்யத்தில் நுழையக் கேட்கிறான். ஆனால், தன்னுடைய தன்னலமற்ற பக்தியை வழங்க விருப்பமில்லாமல், அதற்கான விலையைச் செலுத்தாமல், அவன் எப்படி என் ராஜ்யத்தில் இவ்வளவு எளிதில் நுழைய முடியும்? மனுஷனிடமிருந்து எதையும் பெறுவதற்குப் பதிலாக, பூமியில் என் ராஜ்யம் மகிமையால் நிரப்பப்படும்படி நான் அவனிடம் கோரிக்கைகளை வைக்கிறேன். தற்போதைய காலத்திற்கு மனுஷன் என்னை வழிநடத்தியுள்ளான், அவன் இந்த நிலையில்தான் இருக்கிறான், மேலும் என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் மத்தியில் அவன் வாழ்கிறான். அவ்வாறு இல்லையென்றால், பூமியிலுள்ள ஜனங்களில் யார் தங்கள் வாய்ப்புகளை அறிவார்கள்? என் சித்தத்தை யார் புரிந்துகொள்வார்கள்? மனுஷனிடம் வைக்கும் கோரிக்கைகளில் எனது ஏற்பாடுகளைச் சேர்க்கிறேன்; இது இயற்கையின் விதிகளுக்கு ஏற்ப இல்லையா?
நேற்று, நீங்கள் காற்று மற்றும் மழையின் மத்தியில் வாழ்ந்தீர்கள்; இன்று, நீங்கள் என் ராஜ்யத்தில் நுழைந்து அதன் ஜனங்களாகிவிட்டீர்கள்; நாளை, நீங்கள் என் ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள். இதுபோன்ற விஷயங்களை யார் கற்பனை செய்தார்கள்? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் காற்று மற்றும் மழையின் மத்தியில் முன்னேறுகிறேன், மனுஷர்களிடையே ஒவ்வொரு ஆண்டாகக் கழித்துவிட்டு, சரியான நேரத்தில் இன்றைய தினத்திற்கு வந்துள்ளேன். இவை எனது நிர்வாகத் திட்டத்தின் சரியான நடவடிக்கைகள் இல்லையா? எனது திட்டத்தில் யாராவது எதையாவது சேர்த்துள்ளனரா? எனது திட்டத்தின் நடவடிக்கைகளில் இருந்து யாரால் விலக முடியும்? நான் பல கோடி ஜனங்களின் இருதயங்களில் வாழ்கிறேன், பல கோடி ஜனங்களிடையே நான் ராஜா, பல கோடி ஜனங்களால் நான் நிராகரிக்கப்பட்டு அவதூறுக்கு ஆளாகியுள்ளேன். என் உருவம் உண்மையிலேயே மனுஷனின் இருதயத்திற்குள் இல்லை. மனுஷன் என் மகிமையின் முகத்தை என் வார்த்தைகளின் மூலம் மங்கலாகவே உணர்கிறான், ஆனால் அவன் எண்ணங்களின் குறுக்கீட்டால், அவன் தன் சொந்த உணர்வுகளை நம்புவதில்லை; அவனது இருதயத்தில் நான் தெளிவற்றவராக மட்டுமே இருக்கிறேன், ஆனால் அது நீண்ட காலம் அப்படி இருக்காது. ஆகவே, அவன் என்னை நேசிப்பதும் இவ்வாறுதான்: ஒவ்வொரு மனுஷனும் தனது சொந்த மனநிலையின்படி என்னை நேசிப்பதைப் போல, அவனது அன்பு மங்கலான நிலவொளியின் கீழ் கண்களை மூடித் திறப்பது போல, எனக்கு முன்பு அவனது அன்பு பொருத்தமாகத் தோன்றுகிறது. இன்று, என் அன்பினால் மட்டுமே மனுஷன் எஞ்சியிருக்கிறான், உயிர்வாழும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறான். அவ்வாறு இல்லையென்றால், மனுஷர்களில் யார், அவர்களின் மெலிந்த உடலின் விளைவாக, லேசரால் வெட்டப்பட மாட்டார்கள்? மனுஷன் இன்னும் தன்னையே அறியவில்லை. அவன் எனக்கு முன்பாகத் தன்னை பெருமையாகக் காட்டுகிறான், என் முதுகுக்குப் பின்னால் தற்பெருமை பேசுகிறான், ஆனால் யாரும் எனக்கு முன் என்னை எதிர்க்கத் துணியவில்லை. இருப்பினும், நான் பேசும் எதிர்ப்பின் அர்த்தம் மனுஷனுக்குத் தெரியாது; அதற்குப் பதிலாக, அவன் என்னை முட்டாளாக்க முயற்சிக்கிறான், தொடர்ந்து தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்கிறான்—இதில், அவன் என்னை வெளிப்படையாக எதிர்க்கவில்லையா? மனுஷனின் பலவீனத்தை நான் பொறுத்துக்கொள்கிறேன், ஆனால் அவனது சொந்தத் தயாரிப்பை எதிர்ப்பதில் நான் சிறிதும் மென்மையாக இருக்க மாட்டேன். அதன் அர்த்தம் அவனுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த அர்த்தத்திற்கு ஏற்ப செயல்பட அவன் விரும்பவில்லை, என்னை ஏமாற்றி தனது விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுகிறான். நான் எப்போதுமே என் வார்த்தைகளில் என் மனநிலையைத் தெளிவுபடுத்துகிறேன், ஆனாலும் மனுஷன் தோற்க சமரசம் செய்யவில்லை—அதே நேரத்தில், அவன் தன் மனநிலையை வெளிப்படுத்துகிறான். என் நியாயத்தீர்ப்பின் மத்தியில், மனுஷன் முற்றிலும் உறுதியாக இருப்பான், என் சிட்சையின் மத்தியில், அவன் இறுதியாக என் சாயலில் வாழ்ந்து, பூமியில் என் வெளிப்பாடாக மாறுவான்!
மார்ச் 22, 1992