சகல ஜனங்களே, களிப்படையுங்கள்!

என் வெளிச்சத்தில், ஜனங்கள் மீண்டும் ஒளியைப் பார்க்கிறார்கள். என் வார்த்தையில், ஜனங்கள் தாங்கள் அனுபவிக்கும் விஷயங்களைக் கண்டுகொள்கிறார்கள். நான் கிழக்கிலிருந்து வந்திருக்கிறேன், நான் கிழக்கைச் சேர்ந்தவன். என் மகிமை பிரகாசிக்கும்போது, சகல தேசங்களும் ஒளிர்கின்றன, அனைத்தும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன, ஒன்று கூட இருளில் மிஞ்சியிருப்பதில்லை. ராஜ்யத்தில், தேவனின் ஜனங்கள் தேவனோடு ஜீவிக்கும் ஜீவிதம் அளவிட முடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜனங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவிதங்களில் நீரானது மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, மலைகள் ஜனங்களுடன் இணைந்து என் மிகுதியைக் கண்டு ரசிக்கின்றன. எல்லா மனுஷரும் என் ராஜ்யத்தில் பாடுபட்டு, கடினமாக உழைக்கிறார்கள், தங்கள் விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். ராஜ்யத்தில், இனி கிளர்ச்சி இருப்பதில்லை, எதிர்ப்பும் இருப்பதில்லை; வானங்களும் பூமியும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கின்றன, ஜீவிதத்தின் இனிமையான வாழ்த்துக்கள் மூலம் மனுஷனும் நானும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு, ஆழமான உணர்வுகளுக்குள் நெருங்கி வருகிறோம்…. இந்த நேரத்தில், நான் பரலோகத்தில் என் ஜீவிதத்தை முறையாகத் தொடங்குகிறேன். சாத்தானின் தொந்தரவு இனி இல்லை, மேலும் ஜனங்களும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும், நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் என் மகிமைக்குள் வாழ்கிறார்கள், ஜனங்களிடையே வாழும் ஜனங்களாக அல்ல, தேவனுடன் வாழும் ஜனங்களாக ஒப்பற்ற வகையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மனுஷகுலம் முழுவதும் சாத்தானின் சீர்கேட்டைக் கடந்து, ஜீவிதத்தின் கசப்புத் தன்மையையும் இனிமையையும் வண்டல் வரை அருந்தியிருக்கிறார்கள். இப்போது, என் வெளிச்சத்தில் வாழ்ந்துகொண்டு, எவ்வாறு ஒருவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது? இந்த அழகான தருணத்தை எப்படி ஒருவனால் லேசாகக் கைவிட்டு அதை நழுவ விட முடியும்? ஆம் ஜனங்களே! உங்கள் இருதயங்களில் பாடலைப் பாடுங்கள், எனக்காக மகிழ்ச்சியுடன் நடனமாடுங்கள்! உங்கள் நேர்மையான இருதயங்களை உயர்த்தி, அவற்றை எனக்குக் காணிக்கையாகக் கொடுங்கள்! உங்கள் முரசுகளைக் கொட்டி, எனக்காக மகிழ்ச்சியுடன் அவற்றை வாசியுங்கள்! பிரபஞ்சம் முழுமைக்கும் நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன்! ஜனங்களுக்கு என் மகிமையான முகத்தை வெளிப்படுத்துகிறேன்! நான் உரத்த குரலில் கூப்பிடுவேன்! நான் பிரபஞ்சத்தையும் தாண்டுவேன்! ஏற்கெனவே நான் ஜனங்கள் மத்தியில் ஆட்சி செய்கிறேன்! ஜனங்களாலே நான் உயர்த்தப்பட்டேன்! நான் மேலே நீல வானத்தில் நகர்கிறேன், ஜனங்கள் என்னுடன் நடந்து செல்கிறார்கள். நான் ஜனங்களிடையே நடக்கிறேன், என் ஜனங்கள் என்னைச் சூழ்ந்து கொள்கிறார்கள்! ஜனங்களின் இருதயங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன, அவர்களது பாடல்கள் பிரபஞ்சத்தை உலுக்கி, வானத்தை அதிரச்செய்கின்றன! பிரபஞ்சம் இனியும் மூடுபனிக்குள் மறைந்திருக்காது; மண் இருக்காது, கழிவுநீர் சேகரிப்பும் இருக்காது. பிரபஞ்சத்தின் பரிசுத்த ஜனங்களே! எனது கண்காணிப்பின் கீழ் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுகிறீர்கள். நீங்கள் அசுத்தத்தால் மூடப்பட்ட மனுஷர் அல்ல, ஆனால் பச்சை மாணிக்கக் கல் போல தூய்மையான பரிசுத்தவான்கள், நீங்கள் அனைவருமே என் அன்புக்குரியவர்கள், நீங்கள் அனைவருமே என் மகிழ்ச்சிக்குரியவர்கள்! சகலமும் மீண்டும் உயிர்த்தெழுகின்றன! பரிசுத்தவான்கள் அனைவரும் பரலோகத்தில் எனக்கு ஊழியம் செய்யத் திரும்பி வந்திருக்கிறார்கள், என் அன்பான அரவணைப்பிற்குள் நுழைந்திருக்கிறார்கள், அவர்கள் இனியும் அழப்போவதில்லை, கவலைப்படப்போவதில்லை, அவர்கள் தங்களை என்னிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள், என் வீட்டிற்குத் திரும்பி வருகிறார்கள், தங்கள் தாயகத்தில் அவர்கள் என்னை முடிவில்லாமல் நேசிப்பார்கள்! எல்லா நித்தியத்திலும் இது ஒருபோதும் மாறாது! துக்கம் எங்கே! கண்ணீர் எங்கே! மாம்சம் எங்கே! பூமி ஒழிந்துபோகிறது, ஆனால் வானம் என்றென்றும் இருக்கிறது. நான் சகல ஜனங்களுக்கும் தோன்றுகிறேன், சகல ஜனங்களும் என்னைப் புகழ்கிறார்கள். இந்த ஜீவிதம், இந்த அழகு, ஆதியில் இருந்து அந்தம் வரை மாறப்போவதில்லை. இதுதான் ராஜ்யத்தின் ஜீவிதம்.

முந்தைய: அத்தியாயம் 25

அடுத்த: அத்தியாயம் 26

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக