அத்தியாயம் 11

நான் உன் தேவனா? நான் உன் ராஜாவா? உனக்குள் ராஜாவாக ஆட்சி செய்ய நீ உண்மையிலேயே என்னை அனுமதித்தாயா? நீ உன்னைப் பற்றி முழுமையாகச் சிந்திக்க வேண்டும்: புதிய ஒளி வந்தபோது, அதைப் பின்தொடராமல் நிறுத்தும் அளவுக்குக் கூடச் சென்று, நீ அதை ஆராய்ச்சி செய்து நிராகரிக்கவில்லையா? இதற்காக, நீ நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, உன் அழிவில் விழுவாய்; நீ நியாயந்தீர்க்கப்பட்டு, இருப்புக்கோலால் அடிக்கப்படுவாய், மேலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ உணரமாட்டாய். நீ விரைவில், அழுதபடியே என் முன் முழங்கால்களை மடக்கி வழிபடுவாய், சத்தமாக அழுவாய். நான் உங்களிடம் எப்போதும் கூறியிருக்கிறேன் மற்றும் நான் எப்போதும் உங்களிடம் பேசியிருக்கிறேன்; உங்களிடமிருந்து என் வார்த்தைகளை நான் ஒருபோதும் மறைத்ததில்லை. நினைவுபடுத்திப் பாருங்கள்: நான் எப்போதாவது உங்களிடம் எதையாவது சொல்லத் தவறியிருக்கிறோனா? இருப்பினும், தவறான வழியில் விஷயங்களைச் செய்வதில் சிலர் விடாப்பிடியாக இருக்கிறார்கள். சூரியனை மறைக்கும் அளவிலான சந்தேகங்களைக் கொண்ட மனத் தெளிவின்மையில் அவர்கள் தொலைந்து போகிறார்கள், மேலும், அவர்கள் ஒருபோதும் ஒளியைப் பார்க்க மாட்டார்கள். இது அவர்களின் “சுய” உணர்வு மிக வலுவானதாகவும், அவர்களின் சொந்தக் கருத்துகள் மிகப் பெரியவையாகவும் இருப்பதன் காரணமாக அல்லவா? எப்போதிருந்து நீ என் மீது அக்கறை கொண்டிருக்கிறாய்? எப்போதிருந்து உன் இருதயத்தில் எனக்கு நீ இடமளித்திருக்கிறாய்? நீ தோல்வியுற்ற போது, நீ உன்னைத் திறமையற்றவனாகக் கண்டறிந்தபோது, மற்றும் உனக்கு வேறு வழியே இல்லை என்கின்ற போது தான் நீ என்னிடம் ஜெபித்தாய். அப்படியென்றால்: ஏன் காரியங்களை இப்போது நீயே சொந்தமாகச் செய்யக்கூடாது? நீங்கள் மனிதர்கள்! உன்னை உன் பழைய இயல்பு தான் பாழாக்கியது!

ஜனங்களில் சிலரால் பாதையைக் கண்டறிய முடிவதில்லை, மேலும், அவர்களால் புதிய ஒளியைப் பின்தொடர முடிவதில்லை. அவர்கள் முன்னர் கண்ட விஷயங்களைப் பற்றி மட்டும் தான் ஐக்கியம் கொள்கிறார்கள்; அவர்களிடம் புதிதாக எதுவும் இல்லை. அது ஏன்? நீ உனக்குள்ளேயே வாழ்ந்து, என்னைப் பிரவேசிக்க விடாமல் கதவை அடைத்தாய். பரிசுத்த ஆவியானவரின் கிரியை முறைகள் மாறுவதைக் கண்டு, தவறாக இருப்பது குறித்து நீ எப்போதும் உன் இருதயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறாய். தேவன் மீதான உன் பயபக்தி எங்கே? தேவனின் பிரசன்னத்தின் அமைதியில் நீ அதைத் தேடினாயா? “பரிசுத்த ஆவியானவர் அப்படித் தான் கிரியை செய்கிறாரா?” என்று நீ வியப்படைகிறாய். ஜனங்களில் சிலர் கண்டவை பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஆகும், இருப்பினும், அவர்கள் அதைப் பற்றிக் கூற சில விஷயங்களைக் கொண்டுள்ளனர்; மற்றவர்கள் அது தேவனின் வார்த்தை என்று ஒப்புக் கொள்கின்றனர், ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கருத்துகள் எழுகின்றன, மேலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இருக்கின்றனர், மற்றும் விலைக்கிரயத்தைக் கொடுத்து, அவரது பிரசன்னத்தில் ஊக்கத்துடன் இருக்க விரும்பவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பிரகாசிப்பித்திருக்கிறார், ஐக்கியப்படவோ அல்லது தேடவோ அவர்கள் என் முன்னால் வரமாட்டார்கள். மாறாக, அவர்களின் ஆசைகளை அவர்கள் பின்தொடர்ந்து, அவர்கள் விரும்பியவை எதையும் செய்கிறார்கள். இது எவ்வகை நோக்கமாக இருக்கிறது?

முந்தைய: அத்தியாயம் 10

அடுத்த: அத்தியாயம் 12

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக