தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்

தேவனுக்குச் சாட்சி கொடுக்கவும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு வெட்கமுண்டாக்கவும், ஒருவர் ஒரு கொள்கையை கொண்டிருப்பதோடு ஒரு குறிப்பிட்ட நிலைமையை எட்டியிருக்கவும் வேண்டும்: ஒருவர் தம் இருதயத்தில் தேவன்மேல் அன்புகூர்வதோடு, அவரது வார்த்தைகளுக்குள் பிரவேசிக்கவும் வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்கவில்லையென்றால், சாத்தானுக்கு வெட்கமுண்டாக்குவதற்கு உனக்கு எந்த வழியும் இருக்காது. உன் வாழ்வில் ஏற்படும் வளர்ச்சியின் மூலமாக சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைப் புறக்கணித்து அதற்கு அதிக இலச்சையுண்டாக்க முடியும்; இதுமட்டுமே உண்மையில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு வெட்கமுண்டாக்கும். தேவனுடைய வார்த்தைகளை எவ்வளவு அதிகமாய்ச் செயலில் வெளிப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாய் தேவன்மேல் நீ கொண்டிருக்கும் அன்பும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின்மீது கொண்டிருக்கும் அருவருப்பும் நிரூபணமாகும்; எவ்வளவு அதிகமாய் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறாயோ, அவ்வளவு அதிகமாய் சத்தியத்தின்மேல் நீ கொண்டிருக்கும் வாஞ்சையும் நிரூபணமாகும். தேவனுடைய வார்த்தைகளை வாஞ்சிக்காத மக்கள் ஜீவனற்றவர்கள். சமயம் சார்ந்த இதுபோன்ற மக்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு புறம்பானவர்கள். உண்மையாய் தேவனை விசுவாசிக்கும் மக்கள் அவரது வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணுவதன் மூலமாக அவற்றைக் குறித்து அதிக ஆழமான அறிவைக் கொண்டிருப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளை நீ வாஞ்சிக்காவிட்டால் உன்னால் அவரது வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண இயலாது. தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த அறிவு உனக்கு இல்லாதிருந்தால், உன்னால் தேவனுக்குச் சாட்சி பகரவோ, அவரைத் திருப்திப்படுத்தவோ இயலாது.

தேவனை விசுவாசிக்கிற விஷயத்தில் ஒருவர் எப்படி அவரை அறிந்துகொள்ள வேண்டும்? தேவனுடைய வார்த்தைகள் மற்றும் அவரது இன்றைய கிரியைகளின் அடிப்படையில் ஒருவர் தேவனை அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விலகலோ அல்லது தவறான நம்பிக்கையோ இல்லாமல் தேவனுடைய கிரியைகளை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். இதுதான் தேவனை அறிந்து கொள்ளுகிறதன் அஸ்திபாரம் ஆகும். தேவனுடைய வார்த்தைகளை குறித்த சுத்தமான புரிந்துகொள்ளுதல் குறைவாய்க் காணப்படும் பல்வேறுவிதமான அனைத்துத் தவறான உபதேசங்களும் சமயம் சார்ந்த நோக்கம் கொண்டவையாகும்; அவை மாறுபட்டதும் தவறான புரிந்துகொள்ளுதலுமாகும். தேவனுடைய வார்த்தைகளை எடுத்து அவற்றைக் கடந்தகாலத்தில் புரிந்துகொண்டு, தேவனுடைய இன்றைய வார்த்தைகளை அவற்றுக்கு எதிராய் மதிப்பிடுவதே மதவாதிகளின் சிறந்த திறமையாகும். இன்றைய தேவனை சேவிக்கும்போது, கடந்த காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தினால் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நீங்கள் பற்றிக்கொண்டால் அது இடையூறு விளைவிக்கக்கூடியதாகவும், உங்கள் நடைமுறைகள் பழமையாகிப் போனதாகவும் வெற்று சமய சடங்காச்சாரமாகவும் மட்டுமே இருக்கும். தேவனை சேவிப்பவர்கள் ஏனைய தராதரங்களோடு வெளிப்புறமாகத் தாழ்மையாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் என்று நீ நம்பினால், அவ்வகையான அறிவை இக்காலத்தில் நடைமுறைப்படுத்தினால், அவ்வறிவு சமய நோக்கம் கொண்டதாகும்; அச்செயல்பாடு மாய்மாலமாகிவிடும். “சமயம் சார்ந்த நம்பிக்கை” என்னும் பதம் (முன்பு தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளின் புரிதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சம் உள்பட) பழமையாகிப்போன மற்றும் வழக்கத்தில் இல்லாத காரியங்களைக் குறிக்கும். இக்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தினால் அவை தேவனின் செயல்பாட்டுக்கு இடையூறாக அமையும்; மனுஷனுக்கு ஒரு நன்மையையும் கொண்டு வராது. சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்கள் தம்மிடமிருந்து அகற்றாவிட்டால், அது அவர்கள் தேவனை சேவிப்பதற்குப் பெரிய தடையாக மாறும். சமயம் சார்ந்த நம்பிக்கையுள்ள மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் முன்னேறிச் செல்ல எந்த வழியும் இல்லை; அவர்கள் ஒன்று, இரண்டு என அடி சறுக்குவார்கள். ஏனென்றால் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மனுஷனை அசாதாரண சுயநீதி கொண்டவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் மாற்றுகின்றன. தேவன் தாம் முன்பு கூறியவற்றை, செய்தவற்றைக் குறித்த பழைய நினைவுகளில் திளைப்பவரல்லர்; மாறாக, ஏதாவது ஒன்று பழையதாகிவிட்டால் அதை அவர் நீக்கிப்போடுகிறார். உண்மையில் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லையா? தேவன் முற்காலத்தில் கூறிய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருந்தால், இது நீ தேவனின் கிரியைகளை அறிந்திருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறதா? இன்று பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், கடந்த கால வெளிச்சத்தைப் பற்றிக் கொண்டிருப்பதால், நீ தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாய் என்று நிரூபிக்க இயலுமா? இன்னும்கூட சமயம் சார்ந்த நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட இயலவில்லையா? அப்படியாயின் நீ தேவனை எதிர்க்கும் ஒருவனாக மாறுவாய்.

சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்களால் விட்டுவிடக்கூடுமாயின் அவர்கள் தேவனின் இன்றைய கிரியைகளையும் வார்த்தைகளையும் மதிப்பிடுவதில் தங்கள் மனதை ஈடுபடுத்தாமல் நேரடியாகக் கீழ்ப்படிவார்கள். தேவனின் இன்றைய கிரியை கடந்த காலத்தைப் போலன்றி வெளிப்பட்டாலும், உன்னால் கடந்த கால பார்வைகளை விட்டுவிட்டு தேவனின் இன்றைய கிரியைக்கு நேரடியாகக் கீழ்ப்படிய முடியும். தேவன் கடந்த காலத்தில் எப்படி செயல்பட்டார் என்பதைக் கருதாமல், தேவனின் இன்றைய கிரியைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் திறன் உனக்கு இருந்தால், நீ அவற்றின் நம்பிக்கைகளை விட்டுவிடுபவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிபவனாகவும், தேவனின் வார்த்தைகளுக்கும் அவரது கிரியைகளுக்கும் கீழ்ப்படியக்கூடியவனாகவும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவனாகவும் இருப்பாய். இதில் நீ தேவனுக்கு உண்மையாய் கீழ்ப்படிகிறவனாக இருப்பாய். தேவனின் கிரியையைப் பரிசோதிக்காமல் அல்லது ஆராய்ந்து பார்க்காமல், தேவன் தமது முந்தைய கிரியையை மறந்துவிட்டதுபோல நீயும் அதை மறந்திருப்பாய். நிகழ்காலம் நிகழ்காலம்தான்; கடந்த காலம் கடந்தகாலம்தான். முன்பு தாம் செய்தவற்றை தேவன் இன்று புறம்பே தள்ளி வைத்துவிட்டதால், நீ அதில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படிப்பட்டவரே தேவனுக்கு முழுவதுமாக கீழ்ப்படிகிறவராக, தங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைளை முற்றிலும் விட்டுவிடுகிறவராக இருக்கிறார்.

தேவனின் கிரியையில் எப்போதும் புதிய முன்னேற்றங்கள் இருப்பதால், புதிய கிரியை வரும்போது, பழையதாகி வழக்கத்தில் இல்லாமல் போகிற கிரியை உண்டு. பழையதும் புதியதுமான இந்த வெவ்வேறு வகையான கிரியைகள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன, ஒவ்வொரு நடவடிக்கையும் கடைசி நடவடிக்கையிலிருந்து தொடர்கிறது. புதிய கிரியை வருவதால் பழையவை நீக்கப்படவேண்டியது கட்டாயம். எடுத்துக்காட்டாக, மனுஷனின் பல்லாண்டு அனுபவம் மற்றும் போதகத்தோடு இணைந்த நீண்டகால பழக்கவழக்கங்கள், சொல்வழக்குகள் மனுஷனின் மனதில் எல்லாவிதமான கருத்துக்களையும் ஏற்படுத்தி இருக்கும். பழங்காலம் முதல் பல ஆண்டுகளாகப் பரவி வரும் பாரம்பரியக் கோட்பாடுகள் மனுஷனின் மனதில் இதுபோன்ற நம்பிக்கைகளை ஏற்புடையதாக உருவாக்கி வரும் நிலையில், தேவன் இன்னும் தமது உண்மையான முகத்தை, உள்ளார்ந்த தன்மையை மனுஷனுக்கு முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டும். காலப்போக்கில் தேவன்மேல் மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மீது இதுபோன்ற பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கம், தேவ ஜனங்களில் எல்லாவிதமான நம்பிக்கை சார்ந்த புரிதல்கள் உருவாக தொடர்ந்து காரணமாகிறது; தேவனை சேவிக்கும் சமயரீதியான பல மக்கள் அவரது எதிரிகளாக மாறிவிட இது வழிவகுக்கிறது என்று சொல்லலாம். ஆகவே, மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்த்தும், அவ்வளவு அதிகமாய் அவருக்கு எதிரிகளாகவும் இருக்கின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் பழமையாய்ப் போகாது; அது எப்போதும் புதியதாய் இருக்கும்; ஒருபோதும் சித்தாந்தங்களை உருவாக்காது; மாறாக, தொடர்ந்து மாறி, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இம்முறையில் செயல்படுவது தேவனின் இயல்பான மனநிலையின் ஒரு வெளிப்படுதலாகும். இது தேவனின் கிரியையின். இயல்பான கொள்கையாகவும், தேவன் தமது ஆளுகையை நிறைவேற்றும் வழிகளில் ஒன்றாகவும் உள்ளது. தேவன் இவ்வழியில் செயல்படாவிட்டால் மனுஷன் மாறாமல் அல்லது தேவனைக் குறித்து அறிந்துகொள்ள இயலாமல் போகும்; சாத்தான் தோற்கடிக்கப்படமாட்டான். இப்படியாக அவரது கிரியையில், மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, ஆனால் இது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடக்கிறது. எப்படியாயினும் தேவனில் மனுஷன் நம்பிக்கை வைக்கும் முறையானது சற்று வேறுபட்டது. அவன் பழைய, பழக்கமான சித்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றிக் கொள்கிறான்; அவை எந்த அளவுக்குப் பழமையாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை அவன் மனதுக்குப் பிடித்தமானவையாய் உள்ளன. மதியீனமான, கல்லைப் போல் இறுகிய மனுஷ மனதினால் தேவனுடைய ஆராய்ந்துமுடியாத புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? ஒருபோதும் பழையவராகிப் போகாமல் எப்போதும் புதிதாய் இருக்கின்ற தேவனை மனுஷன் விரும்பவில்லை; நீண்ட பல்லும் வெள்ளை முடியும் கொண்டு ஓரிடத்தில் இருக்கிற பழைய தேவனையே அவன் விரும்புகிறான். இப்படி தேவனும் மனுஷனும் தங்களுக்கென்று சொந்த விருப்பங்களை கொண்டிருப்பதால், மனுஷன் தேவனுக்கு விரோதியாகிறான். ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் தேவன் புதிய கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறார்; இன்றும்கூட பல முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பின்னர் அவை தீர்வுக்கு அப்பாற்பட்டவையாகி விடுகின்றன. மனுஷனுடைய பிடிவாதம் அல்லது எந்த மனுஷனாலும் மாற்றக்கூடாத தேவனின் ஆளுகை ஆணைகளின் காரணமாக அப்படி இருக்கக்கூடும். ஆனாலும் தம் பக்கம் யாருமில்லாததுபோல தேவன் தமது பூர்த்தியாகாத இரட்சிப்பின் பணிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, அந்த குருமாரும் குருத்துவ பெண்களும் இன்னும் செல்லரித்துப் போன பழைய புஸ்தகங்கள் மற்றும் காகிதங்களை பற்றிக்கொண்டுள்ளனர். இந்த முரண்பாடுகள் தேவனுக்கும் மனுஷனுக்குமிடையே விரோதத்தை உண்டு பண்ணினாலும், அவை சரிசெய்யப்படக்கூடாதவையாயிருந்தாலும், அவை இருந்தாலும் இல்லாததுபோல தேவன் அவற்றின்மேல் கவனம் செலுத்தமாட்டார். எப்படியாயினும் மனுஷன் தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய எண்ணங்களை விட்டுவிடாமல் இருக்கிறான். மனுஷன் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருந்தாலும், தேவனது பாதங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன; சூழ்நிலைக்கேற்ப தம் நிலைப்பாட்டை அவர் எப்போதும் மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பது விளக்கம் தேவைப்படாத உதாரணமாகும். முடிவில் போராட்டமே இல்லாமல் மனுஷன் தோற்கடிக்கப்படுவான். தம்மால் தோற்கடிக்கப்பட்ட அத்தனை எதிரிகளுக்கும் தேவன் பெரிய பகைவராகவும், தோற்கடிக்கப்பட்ட மற்றும் தோற்கடிக்கப்படாத மனுக்குலத்திற்கான வீரராகவும் திகழ்வார். தேவனோடு போட்டியிட்டு யாரால் ஜெயம்பெற இயலும்? தேவனுடைய கிரியை தொடங்கும்போதுதான் மனுஷனுடைய கருத்துகள் பிறப்பதால், அவை தேவனிடமிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. எப்படியாயினும் தேவன் இதற்காக மனுஷனை மன்னிப்பதில்லை; மாறாக, தமது கிரியைக்குப் புறம்பான தமது கிரியை தொடங்கும்போது, “தேவனுக்காக” என்று தொகுப்பு தொகுப்பாய் மனுஷன் உருவாக்கும் தயாரிப்புகளுக்காக அவர் மனுஷனை மெச்சுவதில்லை. அதற்குப் பதிலாக, மனுஷனுடைய நம்பிக்கைகளை குறித்தும் பழைமையானதும் சமயரீதியானதுமான நம்பிக்கையைக் குறித்தும் அவர் மிகவும் வெறுப்படைந்திருக்கிறார், மேலும் அவர் இக்கருத்துக்கள் எப்போது முதன்முதலாக தோன்றின என்ற காலத்தை ஒப்புக்கொள்ள மனமில்லாதிருக்கிறார். மனுஷனுடைய இப்படியான நம்பிக்கைகள் தேவனிடத்திருந்தல்ல, சாத்தானிடமிருந்தும் மனுஷ சிந்தனைகளிலிருந்தும் மனதிலிருந்தும் தோன்றி மனுஷனால் பரப்பப்படுவதால் இக்கருத்துகள் தமது கிரியையினால் தோன்றியவை என்பதை அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். தமது கிரியை பழையதாகவும் செத்துப்போனதாகவும் அல்ல, புதிதாயும் ஜீவனுள்ளதாயும் இருக்கவேண்டுமென்பதே எப்போதும் தேவனின் நோக்கம். அவை காலத்திற்கேற்ப மனுஷனால் பின்பற்றப்படவேண்டியவையாயினும், அவை மாற்றப்படக்கூடாததும் அழியாதவையுமல்ல. ஏனென்றால் அவர் மனுஷனை ஜீவித்திருக்கவும் புதிதாயிருக்கவும் செய்யும் தேவனாக இருக்கிறார், மாறாக, சாத்தானோ மனுஷன் சாகவும் பழையவனாகிப் போகவும் காரணமாகிறான். உங்களால் இதை இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லையா? தேவனைக் குறித்து உனக்குக் கருத்துகள் இருந்தாலும், உன் மனம் மூடியிருப்பதினால் அவற்றை விட்டொழிக்க இயலவில்லை. தேவனுடைய கிரியைகளில் மிகவும் குறைவான அறிவு இருப்பதாலோ, அவரது கிரியைகள் மனுஷ விருப்பங்களிலிருந்து வேறுபட்டு இருப்பதாலோ தேவன் தமது கடமைகளில் எப்போதும் அலட்சியமாக இருப்பதாலோ அல்ல. தேவன் காரியங்களை உனக்கு கடினமாக்கி வைத்திருப்பதால் அல்ல, நீ கீழ்ப்படியாதவனாக இருப்பதனாலும், சிருஷ்டியின் தன்மை உன்னிடம் சிறிதும் காணப்படாததனாலும், உன் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லை. இவை எல்லாவற்றையும் நீயே வருவித்துக் கொண்டாய்; தேவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லா பாடுகளும் தொல்லைகளும் மனுஷனாலேயே உருவாக்கப்படுகின்றன. தேவனுடைய எண்ணங்கள் எப்போதும் நன்மையானவையாய் இருக்கின்றன. நீ கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள தாம் காரணமாவதையல்ல, காலம் செல்லச் செல்ல நீ மாற்றம் பெற்று புதுப்பிக்கப்படவேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உனக்கு எது நன்மையானதென்று இன்னும் அறிந்திடாமல், எப்போதும் ஆராய்ந்து கொண்டு அல்லது பரிசோதித்துக் கொண்டு இருக்கிறாய். தேவன் உனக்குக் காரியங்களை கடினமாக்கவில்லை; உனக்குக் கீழ்ப்படியாமை பெரிதாயிருப்பதோடு தேவன்மேல் உனக்கு எந்தப் பயமுமில்லை. மிகச்சிறிய சிருஷ்டிப்பு ஒன்று, முன்பு தேவனால் கொடுக்கப்பட்ட பழையவற்றை எடுத்துக்கொண்டு, திரும்ப தேவனை தாக்குவதற்கு அதை பயன்படுத்தினால் அது மனுஷனின் கீழ்ப்படியாமைதானே? தேவன் முன்பு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு மனுஷர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை; அவர்கள் அந்த அழுகிய கருத்துக்களைக் குறித்து எதுவும் சொல்ல விரும்பாததனால், எந்தப் பெறுமதியும் இல்லாத, துர்நாற்றம் வீசுகிற, அழுகிய, அலங்கார வார்த்தைகளைப் பகட்டாக காண்பிக்கத் தகுதியில்லாதவர்கள். அவர்கள் இன்னும் அதிகத் தகுதியற்றவர்கள்தானே?

உண்மையாக தேவனைச் சேவிப்பவர்கள், தேவனின் இருதயத்திற்கு ஏற்றவர்களாகவும், தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதியானவர்களாகவும் மற்றும் தங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கையை விட்டுவிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். செயல்திறம் மிக்கவர்களாக இருப்பதற்கு தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க விரும்பினீர்களானால், நீங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கையை விட்டுவிட வேண்டும். நீங்கள் தேவனைச் சேவிக்க விரும்பினால், சமயம் சார்ந்த நம்பிக்கையை முதலாவது விட்டுவிடுவதும், எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். தேவனைச் சேவிப்பவரிடம் இது காணப்படவேண்டும். இந்த அறிவு உன்னிடம் இல்லையென்றால், நீ சேவிக்க ஆரம்பித்ததுமே இடையூறையும் தொல்லையையும் உண்டாக்குவாய்; உன்கருத்துகளைப் பற்றிக்கொண்டிருந்தால், அப்போது தேவன் உன்னை வீழ்த்த வேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடும். பின்னர் உன்னால் ஒருபோதும் எழுந்திருக்கமுடியாது. உதாரணமாகத் தற்காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: இன்றைய உரைகளும் செயல்பாடுகளும் வேதாகமத்தோடும் முன்பு தேவனால் செய்யப்பட்ட கிரியைகளோடும் பொருந்துவதாகக் காணப்படவில்லை. உனக்குக் கீழ்ப்படிய மனதில்லாதிருந்தால், நீ எந்நேரத்திலும் விழுந்துபோகக்கூடும். தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி சேவிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், முதலாவது சமயம் சார்ந்த நம்பிக்கையை விட்டுவிடுவதோடு உங்கள் சொந்தப் பார்வையைச் சரி செய்யவேண்டும். கூறப்பட இருக்கின்றவற்றில் பெரும்பகுதி கடந்தகாலத்தில் சொல்லப்பட்டவற்றுக்கு இணக்கமாக காணப்படாது; கீழ்ப்படிவதற்கான விருப்பம் இல்லையென்றால், உனக்கு முன்னே காணப்படும் பாதையில் உன்னால் நடப்பதற்கு இயலாது. தேவன் கிரியை செய்யும் வழிமுறைகளில் ஒன்று உனக்குள் வேர் கொண்டால் நீ அதை ஒருபோதும் விட்டுவிடாதிருப்பாய்; இந்த வழிமுறையே உனது சமயம் சார்ந்த நம்பிக்கையாக மாறும். தேவன் உனக்குள் வேர்கொண்டிருந்தால், நீ சத்தியத்தைப் பெற்றிருக்கிறாய். தேவனின் சத்தியமும் வார்த்தையும் உனது வாழ்க்கையானால், தேவனைக் குறித்து எந்தக் கருத்தும் உனக்கு இருக்காது. தேவனைக் குறித்து உண்மையான அறிவைக் கொண்டுள்ள எவரும் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கமாட்டார்; எந்தச் சித்தாந்தத்திலும் நிலைகொண்டிருக்கமாட்டார்.

விழிப்புடன் காணப்பட உன்னிடம் நீயே இந்தக் கேள்விகளைக் கேட்டுப்பார்:

1. உனக்குள் இருக்கும் அறிவு நீ தேவனை சேவிப்பதற்கு இடையூறாய் உள்ளதா?

2. உனது தினசரி வாழ்வில் எத்தனை சமய சடங்குகள் காணப்படுகின்றன? பக்தியாக தோற்றமளித்தால் உனது வாழ்வு வளர்ச்சி பெற்றுள்ளது; முதிர்ச்சியடைந்துள்ளது என்று பொருள்படுமா?

3. தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணும்போது உனது சமயம் சார்ந்த நம்பிக்கைகளை விட்டுவிட முடிகிறதா?

4. நீ ஜெபிக்கும்போது, உன்னால் சமயச் சடங்கை விட்டுவிட முடிகிறதா?

5. நீ தேவனால் பயன்படுத்தப்படுவதற்குத் தகுதியானவனா?

6. தேவனைக் குறித்த உனது அறிவில் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் எவ்வளவு உள்ளன?

முந்தைய: விசுவாசத்தில் ஒருவர் யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல

அடுத்த: தேவன் மீதான உண்மையான அன்பு தானாகத் தோன்றுவது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக