அத்தியாயம் 10

திருச்சபைக் கட்டுமானக் காலத்தின்போது, தேவன் ராஜ்யத்தைக் கட்டுவதைக் குறிப்பிடவில்லை. அவர் அதைக் கொண்டு வந்தபோதும், அக்கால மொழியிலேயே அவ்வாறு செய்தார். ராஜ்யத்தின் காலம் வந்தவுடன், திருச்சபையைக் கட்டும் காலத்தின் சில முறைமைகள் மற்றும் கருத்துக்களை தேவன் ஒரே அடியாக அகற்றிவிட்டார், மேலும் அவற்றைப் பற்றி ஒரு வார்த்தை கூட மறுபடியும் பேசவில்லை. இதுவே துல்லியமாக, ஒருபோதும் பழைமையானவராக இல்லாமல், எப்போதும் புதியவராக இருக்கிறவராகிய “தேவன் தாமே” என்பதன் அடிப்படை அர்த்தமாகும். அதோடு கூட, கடந்த காலத்தில் செய்யப்பட்டிருக்கும் காரியங்கள், கடந்த காலத்தின் ஒரு பகுதியாகும், எனவே தேவன் அத்தகைய கடந்த கால நிகழ்வுகளை கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் நடந்ததாக வகைப்படுத்துகிறார், அதே சமயம், இன்றைய நாள் கிறிஸ்துவுக்குப் பிந்தைய காலம் என்று அறியப்படுகிறது. இதிலிருந்து திருச்சபையைக் கட்டுவது ராஜ்யத்தைக் கட்டுவதற்கு ஒரு முன்னோடியாக இருந்தது என்பதைக் காணலாம்; அது தேவன் தமது ராஜ்யபாரத்தின் வல்லமையை ராஜ்யத்தில் பயன்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்தது. திருச்சபையைக் கட்டுவது இன்றைய நிழற்படம்; பூமியின் மீதான தேவனுடைய கிரியை முதலில் ராஜ்யத்தைக் கட்டும் இந்தப் பகுதியில்தான் கவனம் செலுத்துகிறது. அவர் திருச்சபையைக் கட்டி முடிப்பதற்கு முன்பு, அவர் ஏற்கனவே செய்து முடிக்க வேண்டிய அனைத்து கிரியைகளுக்குமான ஆயத்தங்களைச் செய்திருந்தார், காலம் வந்தபோது, அவர் முறையாகத் தமது கிரியையைத் தொடங்கினார். ஆகவேதான், “ராஜ்யத்தின் காலம், கடந்த காலங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது கவலையல்ல; மாறாக, எனது கிரியையைத் தனித்தே செய்ய நான் பூமியில் இறங்கினேன், இது மனுஷரால் மனதில் எண்ணங்கொள்ளவோ அல்லது செய்து முடிக்கவோ முடியாத ஒன்று” என்று தேவன் சொன்னார். உண்மையில், இந்தக் கிரியை தேவனால் தனிப்பட்ட முறையில் செய்து முடிக்கப்பட வேண்டும்—எந்த மனுஷனுக்கும் இத்தகைய கிரியையைச் செய்ய திறமை இல்லை; அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. தேவனையல்லாமல், மனுஷர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய கிரியையை யாரால் செய்து முடிக்க முடியும்? முழு மனிதகுலமும் குற்றுயிராய் விடப்படும் வரைக்கும் “துன்புறுத்த” வேறு யாருக்குத் திறன் உண்டு? மனுஷர்களால் அத்தகைய கிரியையை ஏற்பாடு செய்ய முடியுமா? “எனது கிரியையைத் தனித்தே செய்ய நான் பூமியில் இறங்கினேன்” என்று அவர் ஏன் கூறுகிறார்? தேவனுடைய ஆவியானவர் உண்மையில் எல்லா இடங்களிலிருந்தும் மறைந்துபோயிருக்க முடியுமா? “எனது கிரியையைத் தனித்தே செய்ய நான் பூமியில் இறங்கினேன்” என்ற வரி, தேவனுடைய ஆவியானவர் கிரியை செய்ய மாம்சத்தில் மனுவுருவானார் என்ற உண்மையையும், தேவனுடைய ஆவியானவர் மனிதகுலத்தின் மூலம் மிகத்தெளிவாக கிரியை செய்கிறார் என்ற உண்மையையும் சுட்டிக்காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் தம்முடைய கிரியையைச் செய்வதன் மூலம், தேவனாகிய தம்மையே, அநேக ஜனங்கள் தங்களது வெளியரங்கமான கண்களால் பார்க்க அவர் அனுமதிக்கிறார்; அவர்கள் தங்கள் சொந்த ஆவியில் அவரைக் கவனமாகத் தேடுவதற்குத் தேவையில்லை. மேலும், அவர் எல்லா மனுஷர்களையும், ஆவியானவரின் கிரியைகளைத் தங்கள் சொந்தக் கண்களால் பார்க்கும்படி அனுமதித்து, மனுஷனுடைய மாம்சத்திற்கும் தேவனுடைய மாம்சத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருப்பதை அவர்களுக்குக் காட்டுகிறார். அதே நேரத்தில், பிரபஞ்ச உலகம் உள்ள இடம் முழுவதிலும், தேவனுடைய ஆவியானவர் கிரியை செய்கிறார். பிரகாசிப்பிக்கப்பட்ட தேவனுடைய ஜனங்கள் அனைவரும், தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொண்டு, தேவ ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்க்கிறார்கள், அதன் மூலம், மனுவுருவான தேவனை இன்னும் அதிகமாக அறிந்துகொள்கிறார்கள். அதைப்போலவே, தேவனுடைய தெய்வீகத்தன்மை நேரடியாக கிரியை செய்யும்போது மட்டுமே—அதாவது, தேவனுடைய ஆவியானவர் சிறிதும் தடை இல்லாமல் செயல்படும் போது மட்டுமே—மனிதகுலத்தால் நடைமுறை தேவனை அறிந்துகொள்ள முடிகிறது. இதுவே ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதின் சாராம்சமாகும்.

தேவன் எத்தனை முறை மாம்சத்தில் மனுவுருவாகியிருக்கிறார்? அநேக முறையாக இருக்க முடியுமா? “நான் ஒருமுறை மனுஷரின் உலகில் இறங்கி, அவர்களின் துன்பங்களை அனுபவித்துக் கவனித்தேன், ஆனால் என் அவதரிப்பின் நோக்கத்தை நிறைவேற்றாமல் அவ்வாறு செய்தேன்” என்று தேவன் பலமுறை குறிப்பிட்டது ஏன்? தேவன் பலமுறை மனுவுருவாகியிருந்து, ஆனால் ஒருமுறை கூட மனிதகுலத்தால் அறியப்படாதிருக்கிறாரா? இந்தக் கூற்றின் அர்த்தம் அதுவல்ல. முதன்முறையாக தேவன் மனுவுருவானபோது, அவருடைய நோக்கம் உண்மையில் மனுஷர்கள் அவரை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, அவர் தமது கிரியையைச் செய்துவிட்டு, பின்னர் யாரும் கவனிக்காதபடிக்கு அல்லது அவரை அறிய வாய்ப்புக் கூட இல்லாமல் போகும்படிக்கு மறைந்துவிட்டார். ஜனங்கள் தம்மை முழுமையாக அறிந்துகொள்ள அவர் அனுமதிக்கவும் இல்லை, மனுவுருவாதலின் முக்கியத்துவத்தை அவர் முழுமையாகப் பெற்றிருக்கவும் இல்லை; எனவே, அவர் முழுமையாக மனுவுருவானார் என்று கூற முடியாது. முதல் மனுவுருவாதலில், தேவன் அந்தக் கிரியையைச் செய்து முடிக்கப் பாவ சுபாவம் இல்லாத ஒரு மாம்சீக சரீரத்தைப் பயன்படுத்தினார்; அது முடிந்த பிறகு, மேலும் அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. காலங்காலமாக தேவனால் பயன்படுத்தப்பட்டுவருகிற மனுஷர்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற நிகழ்வுகள் “மனுவுருவாதல்” என்று அழைக்கப்படுவதற்குக் கூடத் தகுதியில்லாதவையாகும். ஒரு இயல்பான மனிதத்தன்மையின் மறைவின் கீழ் உள்ளவரும் மற்றும் உள்ளாக ஒரு முழுமையான தெய்வீகத்தன்மையைக் கொண்டவரும், மற்றும் மனிதகுலம் தம்மை அறிய அனுமதிக்கும் நோக்கம் கொண்டிருப்பவருமாகிய, நடைமுறை தேவனை மட்டுமே “மனுவுருவானவர்” என்று முழுமையாக அழைக்க முடியும். இந்த உலகத்திற்கு தேவனுடைய முதல் வருகையின் முக்கியத்துவம், இன்று மனுவுருவாதல் என்று அழைக்கப்படுவதன் முக்கியத்துவத்தின் ஓர் அம்சமாகும்—ஆனால் இந்த வருகையானது எந்தவிதத்திலும், இப்போது மனுவுருவாதல் என்று அழைக்கப்படுவதன் முழு அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் தேவன், “என் அவதரிப்பின் முக்கியத்துவத்தை நிறைவேற்றாமல்” என்று சொன்னார். மனுஷர்களின் துன்பங்களை அனுபவிப்பதும் அவதானிப்பதும், தேவனுடைய வார்த்தைகள் சொல்வது போல், தேவனுடைய ஆவியானவரையும் இரண்டு மனுவுருவாதலையும் குறிக்கிறது. இதனால்தான், “ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவுடன், என் மாம்ச அவதரிப்பு முறைப்படி என் ஊழியத்தைச் செய்யத் தொடங்கியது; அதாவது, ராஜ்யத்தின் ராஜா முறையாகத் தனது இறையாண்மையின் வல்லமையைத் துவங்கினார்” என்று தேவன் கூறினார். திருச்சபையின் கட்டுமானம் தேவனுடைய நாமத்திற்கு ஒரு சாட்சியாக இருந்தபோதிலும், கிரியை இன்னும் முறையாகத் தொடங்கியிருந்ததில்லை; இன்றுதான் ராஜ்யம் கட்டப்படுவதாகக் கூற முடியும். முன்பு செய்ததெல்லாம் வெறும் முன்னறிவிப்பு செயல்தான்; அது உண்மையான விஷயம் இல்லை. ராஜ்யம் தொடங்கிவிட்டது என்று கூறப்பட்டாலும், அதற்குள் எந்தக் கிரியையும் இன்னும் செய்யப்படவில்லை. இன்றுதான், இப்போது தேவனுடைய தெய்வீகத்தன்மைக்குள் கிரியை செய்யப்படுகிறது மற்றும் தேவன் தமது கிரியையை முறையாகத் தொடங்கியிருக்கிறார், இறுதியாக மனுஷர்கள் ராஜ்யத்தில் பிரவேசித்திருக்கிறார்கள். எனவே, “மனுஷ உலகிற்கு இறங்கிவந்த ராஜ்யம்—வெறுமனே ஒரு நேரடி வெளிப்பாடாக இல்லாமல்—மெய்யான யதார்த்தத்தில் ஒன்றாகும்; இது ‘நடைமுறைப்படுத்தலின் யதார்த்தம்’ என்பதன் அர்த்தத்தின் ஓர் அம்சமாகும்” என்ற இந்தப் பகுதி மேற்கூறிய விளக்கத்தின் பொருத்தமான சுருக்கமாகும். இந்த விளக்கத்தை வழங்கிய பிறகு, ஜனங்களை தொடர்ந்து அலுவலாக இருக்கும் நிலையில் விட்டுவிட்டு, தேவன் மனிதகுலத்தின் பொதுவான நிலையை வகைப்படுத்துகிறார். “உலகம் முழுவதும், எல்லோரும் என் இரக்கத்திலும் கிருபைக்குள்ளேயும் தான் ஜீவித்திருக்கிறார்கள், ஆனால் எல்லா மனுஷரும் என் நியாயத்தீர்ப்பின் கீழ்தான் இருக்கிறார்கள், அதேபோல் என் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்” மனுஷனின் வாழ்க்கை தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டபடி, சில கொள்கைகள் மற்றும் விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது, அவை பின்வருமாறு: மகிழ்ச்சியின் சமயங்கள், விரக்தியின் தருணங்கள், மற்றும், இன்னும் அதிகமாக, கஷ்டங்களின் மூலம் புடமிடப்படுதலை சகித்துக்கொள்ள வேண்டிய நேரங்கள் ஆகியவை காணப்படும். இவ்வாறு, யாரும் முழுவதும் மகிழ்ச்சியாகவோ அல்லது முழுவதும் துன்பத்திலோ வாழ்வதில்லை; ஒவ்வொரு வாழ்க்கையும் அதன் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும். மனிதகுலம் முழுவதிலும், தேவனுடைய இரக்கமும் தயவும் வெளிப்படுவது மட்டுமல்லாமல், அவருடைய நியாயத்தீர்ப்பும் அவருடைய முழு மனநிலையும் வெளிப்படுகிறது. எல்லா மனுஷர்களும் தேவனுடைய உபத்திரவங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம், இல்லையா? இந்தப் பரந்து விரிந்த உலகம் முழுவதிலும், மனுஷர்கள் அனைவரும் தங்களுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்கள் எத்தகைய பங்காற்றுகிறார்கள் என்பதைக் குறித்த நிச்சயமற்றவர்களாய் இருக்கிறார்கள், மேலும் சிலர் தலைவிதியின் பொருட்டு தங்கள் வாழ்க்கையைச் சேதப்படுத்துகிறார்கள் அல்லது இழந்து போகிறார்கள். இந்த விதிக்கு யோபுவும் விதிவிலக்கானவன் அல்ல: அவனும் தேவனுடைய உபத்திரவங்களைச் சகித்திருந்தாலும், அவன் அதிலிருந்து வெளிவரும்படி, தனக்கென ஒரு வழியைத் தேடினான். தேவனுடைய உபத்திரவங்களில் யாராலும் ஒருபோதும் உறுதியாக நிற்க முடியவில்லை. மனுஷனுடைய பேராசை மற்றும் சுபாவத்தின் நிமித்தமாக, ஒருவரும் தங்கள் தற்போதைய நிலையில் முழுமையாக திருப்தி அடைந்திருக்கவில்லை, மேலும் உபத்திரவங்கள் மூலம் யாரும் உறுதியாக நிற்கவில்லை; தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் அனைவரும் நொறுங்கிப் போகிறார்கள். தேவன் மனிதகுலத்திடம் கடுமையாக இருப்பாரானால், அவர் இன்னும் ஜனங்களின் இத்தகைய துல்லியமான கோரிக்கைகளை வைத்திருப்பாரானால், அப்போது அது: “மனுஷ இனம் முழுவதும் என் எரியும் விழிகளின் கீழ் கவிழும்” என்று அவர் கூறியது போலவே இருக்கும்.

ராஜ்யத்தின் கட்டுமானம் முறையாகத் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை என்ற போதிலும், ராஜ்யத்திற்கான வணக்கம் இன்னும் முறையாக ஒலிக்கவில்லை; இப்போது அது நிகழவிருக்கும் ஒன்றின் ஒரு தீர்க்கதரிசனமாகத்தான் இருக்கிறது. ஜனங்கள் அனைவரும் முழுமையடைந்து, பூமியிலுள்ள எல்லா தேசங்களும் கிறிஸ்துவின் ராஜ்யமாக மாறும் போது, அது ஏழு இடிமுழக்கங்களும் முழங்கும் நேரமாக இருக்கும். தற்போதைய நாள் அந்த நிலையை நோக்கிய ஒரு முன்னேற்றமாகும்; அந்த நாளை நோக்கிக் குற்றச்சாட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவே தேவனுடைய திட்டம், விரைவில் அது நிறைவேறும். இருப்பினும், தேவன் தாம் சொல்லியிருக்கிற அனைத்தையும் ஏற்கனவே நிறைவேற்றியிருக்கிறார். எனவே, பூமியின் தேசங்கள் மணலின் மீது கட்டப்பட்ட அரண்மனைகள் என்பது தெளிவாகிறது, அவை உயரமான அலை நெருங்கும்போது நடுங்குகின்றன: கடைசி நாள் நெருங்கிவிட்டது, மேலும் சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது தேவனுடைய வார்த்தையின் கீழ் கவிழ்ந்துவிடும். அவருடைய திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய, பரலோகத்தின் தூதர்கள் பூமியில் இறங்கி, தேவனைத் திருப்திப்படுத்தத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். மனுவுருவான தேவன் தாமே சத்துருவுக்கு எதிராக யுத்தம் செய்ய யுத்தகளத்தில் இறங்கியுள்ளார். மாம்சமாதல் தோன்றும் இடமெல்லாம் சத்துரு அடியோடு அழிக்கப்படும் ஓர் இடமாக இருக்கிறது. நிர்மூலமாக்கப்படுவதில் சீனாவே முதலாவதாக இருக்கும்; அது தேவனுடைய கரத்தால் பாழாக்கப்படும். தேவன் நிச்சயமாக அதற்கு இரக்கம் காட்டமாட்டார். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் முன்னேற்றத்தின் சரிவுக்கான ஆதாரத்தை ஜனங்களின் தொடர்ச்சியான முதிர்ச்சியடைதலில் காணலாம்; இது எல்லோருக்கும் வெளிப்படையானதும் காணக்கூடியதுமாய் இருக்கிறது. ஜனங்களின் முதிர்ச்சி சத்துருவினுடைய அழிவின் அடையாளமாகும். “போட்டி” என்பதன் அர்த்தம் என்ன என்பதற்கான ஒரு சிறிய விளக்கம்தான் இது. இவ்வாறு, மனுஷர்களின் இருதயங்களில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அசுத்தமான கருத்துக்களால் உருவாக்கப்பட்ட அந்தஸ்தைக் களைந்துவிடும்படிக்கு தமக்கு அழகான சாட்சிகளை அளிக்குமாறு தேவன் பல சந்தர்ப்பங்களில் ஜனங்களுக்கு நினைவூட்டியிருக்கிறார். ஜனங்களின் விசுவாசத்தை உயிர்ப்பிக்க தேவன் இத்தகைய நினைவூட்டல்களைப் பயன்படுத்துகிறார், அப்படிச் செய்வதன் மூலம், தம்முடைய கிரியையில் சாதனைகளை அடைகிறார். அது ஏனென்றால், “மனுஷரால் சரியாகச் செய்யக் கூடிய விஷயம்தான் என்ன? அதை என்னால் செய்ய முடியும் அல்லவா?” என்று தேவன் சொல்லியிருக்கிறார். எல்லா மனுஷர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்; அவர்கள் திறமையற்றவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எளிதில் சோர்வடைந்து ஏமாற்றமடைந்துவிடுகிறார்கள். இதனால்தான், அவர்களால் தேவனை அறிய முடிவதில்லை. தேவன் மனிதகுலத்தின் விசுவாசத்தை மட்டும் புதுப்பிக்கவில்லை; அவர் மறைமுகமாகவும் தொடர்ச்சியாகவும் ஜனங்களை பெலத்தினால் இடைக்கட்டுகிறார்.

அடுத்து, தேவன் முழு பிரபஞ்சத்துடனும் பேசத் தொடங்கினார். தேவன் சீனாவில் தமது புதிய கிரியையை ஆரம்பித்தது மட்டுமல்லாமல், பிரபஞ்சம் முழுவதும், அவர் இன்றைய நாட்களின் புதிய கிரியையைச் செய்யத் தொடங்கியுள்ளார். கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவன் உலகம் முழுவதிலும் தம்முடைய கிரியைகள் அனைத்தையும் வெளிப்படுத்த விரும்புவதால், அவரைக் காட்டிக் கொடுத்த அனைத்து மனுஷர்களும் தங்களை அர்ப்பணிக்க, மீண்டும் அவரது சிங்காசனத்திற்கு முன்பாக வருவார்கள், தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவருடைய இரக்கத்தையும் தயவையும் இன்னும் கொண்டிருக்கும். உலகம் முழுவதிலும் உள்ள நடப்பு நிகழ்வுகளை தேவன் மனுஷர்களுக்கு பீதியை உண்டாக்குவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்துகிறார், மேலும் தேவனைத் தேடும்படிக்கு அவர்களைத் தூண்டுகிறார், இதனால் அவர்கள் அவருக்கு முன்பாக இருக்கும்படி மீண்டும் ஓடிவர முடியும். எனவேதான், “இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இது மனுஷருக்கான இரட்சிப்பின் செயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் நான் அவர்களுக்கு அதை கொடுப்பதும் ஒரு வகையான அன்புதான்” என்று தேவன் கூறுகிறார். இங்கே தேவன் மனிதகுலத்தின் உண்மையான சுபாவத்தை ஊடுருவக்கூடிய, இணையற்ற, மற்றும் முயற்சியற்ற துல்லியத்துடன் வெளிப்படுத்துகிறார். இது ஜனங்களை முற்றிலும் அவமானமடைந்து, வெட்கத்தால் தங்களது முகத்தை மறைத்துக்கொள்ளச் செய்கிறது. தேவன் பேசுகிற ஒவ்வொரு முறையும், அவர் எப்படியாவது மனிதகுலத்தின் வெட்கக்கேடான செயல்பாட்டின் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டுகிறார், அதனால் ஜனங்கள் சவுகரியமாக இருக்கும்போது, அவர்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ள மறக்க மாட்டார்கள் மேலும், தங்களைத் தாங்களே அறிந்துகொள்வது பழைய வேலை என்று நினைக்கவும் மாட்டார்கள். மனுஷனுடைய சுபாவத்திற்கு ஏற்ப, தேவன் அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டுவதை ஒரு கணம் கூட நிறுத்திவிட்டால், அவர்கள் சீர்குலைந்து, அகந்தையுள்ளவர்களாய் மாற நேரிடும். அதனால்தான் இன்று, தேவன், “மனுஷர்—நான் அவர்களுக்கு வழங்கிய மகுடங்களைப் பொக்கிஷமாகக் கருதுவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள், அவர்களில் அநேகர், ‘சேவை செய்பவர்’ என்ற மகுடத்தின் காரணமாக, அவர்களின் இருதயங்களில் மனக்கசப்பைப் போஷிக்கிறார்கள், மற்றும் அநேகர், ‘என் ஜனங்கள்,’ என்ற மகுடத்தின் காரணமாக அவர்களுடைய இருதயங்களில் எனக்கான அன்பை வளர்த்துக் கொள்கிறார்கள். என்னை முட்டாளாக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; என் கண்கள் அனைத்தையும் பார்க்கின்றன!” என்று மீண்டும் கூறுகிறார். மனுஷர்கள் இந்த அறிக்கையை வாசித்தவுடன், அவர்கள் உடனடியாகச் சங்கடமாக உணர்கிறார்கள். தங்கள் கடந்தகால செயல்கள் மிகவும் முதிர்ச்சியடையாதவை என்பதையும்—தேவனைப் புண்படுத்தும் விதமான அசுத்தமான செயல் என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் சமீபத்தில் தேவனைத் திருப்திப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்கள் அதிகமாக விருப்பமுள்ளவர்களாக இருந்தபோதிலும், அதைச் செய்வதற்கான வல்லமை அவர்களுக்கு இல்லாதிருந்தது, மேலும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தார்கள். அறியாமலேயே, அவர்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தால் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் சவுகரியமான பிறகு இந்த வார்த்தைகளைப் வாசிப்பதன் பலன் இதுதான்.

ஒருபுறம், சாத்தானை மோசமான பைத்தியக்காரன் என்று தேவன் கூறுகிறார், மறுபுறம் பெரும்பாலான மனுஷர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட பழைய சுபாவமானது மாறியிருக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இதிலிருந்து, சாத்தானின் செயல்கள் மனிதகுலத்தின் மூலம் வெளிப்படுகிறது என்பது தெளிவாகிறது. ஆகவே, மனுஷர்கள் சாத்தானால் விழுங்கப்படாமலிருக்கும்படியாக, அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாய் இருக்க வேண்டாம் என்று தேவன் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டுகிறார். சில மனுஷர்கள் கலகம் செய்வார்கள் என்று இது தீர்க்கதரிசனமாக உரைப்பது மட்டுமல்லாமல், மேலும், இது கடந்த காலத்தை விரைவாக ஒதுக்கிவிட்டு நிகழ்காலத்தைத் தேட வேண்டும் என்று அனைத்து ஜனங்களையும் எச்சரிக்கும் ஓர் எச்சரிக்கை மணியாகும். யாரும் பிசாசுகளால் ஆட்கொள்ளப்படுவதையோ அல்லது பொல்லாத ஆவிகளால் ஜெயங்கொள்ளப்படுவதையோ விரும்புவதில்லை, எனவே தேவனுடைய வார்த்தைகள் இன்னும் அதிகமாக அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அறிவுரையாகவும் இருக்கின்றன. இருப்பினும், பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய ஒவ்வொரு கடைசி வார்த்தைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, எதிர்ப்பக்கத்தில் அளவுக்கதிகமாக நகரும்போது, தேவன் அதற்குப் பதிலாக “தங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் பல இரகசியங்களை நான் வெளிப்படுத்த வேண்டும் என அநேக ஜனங்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், பரலோகத்தின் அனைத்து இரகசியங்களையும் நீ புரிந்து கொண்டாலும், அந்த அறிவைக் கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்? அது என் மீதான உன் அன்பை அதிகரிக்குமா? என் மீதான உன் அன்பைத் தூண்டுமா?” என்று பதில் கூறுகிறார். இதிலிருந்து, மனுஷர்கள் தேவனை அறியவும் மற்றும் தேவனை நேசிக்கவும் தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை, மாறாக, தங்கள் “சிறிய பண்டகசாலையை” சேமிப்புகளை அதிகரிக்க பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே, மனித இனத்தின் எல்லை மீறலை விவரிக்க தேவன் “தங்கள் கண்களுக்கு விருந்தளிக்க” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார், இது தேவன் மீதான மனுஷர்களின் அன்பு இன்னும் முற்றிலும் தூய்மையாக இல்லை என்பதைப் பிரதிபலிக்கிறது. தேவன் மறைபொருட்களை வெளிப்படுத்தவில்லை என்றால், மனுஷர்கள் அவருடைய வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள், மாறாக அவற்றின் மீது ஒரு மேலோட்டமான பார்வையை மட்டுமே கொண்டிருப்பார்கள், குதிரையின் மீது சவாரி செய்யும் போது பூக்களை ரசிப்பது போல் மேலோட்டமாகப் பார்ப்பார்கள். தேவனுடைய கூற்றுகளை உண்மையாக சிந்திக்கவோ அல்லது ஆழ்ந்து யோசிக்கவோ அவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பெரும்பாலான ஜனங்கள் அவருடைய வார்த்தையை உண்மையாக நேசிப்பதில்லை. அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் அவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் நிர்விசாரமாக அவற்றைக் கடந்து செல்கிறார்கள். தேவன் கடந்த காலங்களில் பேசியதை விட இப்போது ஏன் வித்தியாசமாக பேசுகிறார்? அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஏன் புரிந்துகொள்ள முடியாதவைகளாய் இருக்கின்றன? “நான் இவ்வளவு எளிதாக அவர்களை அவ்வாறு முடிசூட்ட மாட்டேன்” என்பதில் உள்ள “முடிசூட்ட” என்ற வார்த்தை, “பசும்பொன்னால் தயாரிக்கப்பட்ட என் வார்த்தைகளைப் பெற யாராவது இருக்கிறார்களா?” என்பதில் உள்ள “பசும்பொன்” என்ற வார்த்தை, அவரது முந்தைய குறிப்பான, “சாத்தானால் எந்த செயல்படுத்துதலுக்கும் உட்படாமல்” என்பதில் உள்ள “செயல்படுத்துதல்” என்ற வார்த்தை, மற்றும் இதைப் போன்ற மற்றச் சொற்றொடர்கள் இதற்கான சில உதாரணங்களாகும். தேவன் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று மனுஷர்களுக்குப் புரிவதில்லை; அவர் ஏன் இவ்வளவு கேலியாகவும், நகைச்சுவையாகவும், ஆத்திரமூட்டும் விதமாகவும் பேசுகிறார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவையே தேவனுடைய பேச்சினுடைய நோக்கத்தின் துல்லியமான வெளிப்பாடுகளாகும். ஆதிகாலம் முதற்கொண்டே, மனுஷர்கள் எப்போதும் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாகவே இருந்து வருகின்றனர், மேலும் அவருடைய வார்த்தைகள் உண்மையில் மிகவும் மோசமானதாகவும் கடுமையானதாகவும் இருப்பது போல் தோன்றியிருக்கிறது. சிறிதளவு நகைச்சுவைத் தன்மைகளைச் சேர்ப்பதன் மூலமும்—அங்கும் இங்கும் சில பரியாசங்களைச் சேர்ப்பதன் மூலமும்—அவர் தமது வார்த்தையால் மனநிலையை இலகுவாக்க முடிகிறது மற்றும் மனுஷர்கள் தங்கள் தசைகளை ஓரளவு தளர்த்திக்கொள்ள அனுமதிக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம், தேவனுடைய வார்த்தையைப் பற்றிச் சிந்திக்க ஒவ்வொரு மனுஷனையும் கட்டாயப்படுத்தி, அவரால் இன்னும் பெரிய பலனை அடைய முடிகிறது.

முந்தைய: பிற்சேர்க்கை: அத்தியாயம் 1

அடுத்த: அத்தியாயம் 11

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக