இஸ்ரவேலர்கள் செய்ததைப் போல ஊழியம் செய்

இந்நாட்களில், பிறரோடு ஒருங்கிணைந்து செயல்படும்போது எந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பலரும் எப்போதும் கவனம் செலுத்துவதில்லை. பிறரோடு ஒருங்கிணைந்து செயல்படும்போது உங்களில் பலர் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதை நான் கண்டுபிடித்திருக்கிறேன்; உங்களில் பலர் உங்கள் சொந்தக் கருத்துக்களிலேயே விடாப்பிடியாக இருக்கிறீர்கள். சபையில் கிரியை செய்யும்போது நீ உனது கருத்தைச் சொல்லுகிறாய் மேலும் இன்னொருவர் அவர் கருத்தைச் சொல்லுகிறார், இவை இரண்டுக்கும் இடையில் சம்பந்தமே இருப்பதில்லை; நீ உண்மையில் ஒத்துழைப்பதே இல்லை. ஜீவனை ஒரு சிறிய வகையிலாவது தேடாமல், நீங்கள் எல்லோரும் உங்கள் சொந்த உள்ளுணர்வுகளைத் தெரிவிப்பதில் அல்லது உங்களுக்குள் இருக்கும் “பாரங்களை” வெளியேற்றுவதில் மட்டுமே மிகவும் கவனம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். வேறு யார் சொல்வதையும் செய்வதையும் கருத்தில் கொள்ளாமல் நீ உன் பாதையிலேயே நடக்க வேண்டும் என்று எப்போதும் நம்பி உன் கிரியையை ஏனோதானோவென்று மட்டுமே செய்வதாகத் தோன்றுகிறாய்; பிறருடைய சூழல்கள் எப்படி இருந்தாலும் சரி, நீ பரிசுத்த ஆவியானவர் வழிகாட்டுவது போலவே ஐக்கியம் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாய். உன்னால் மற்றவர்களின் பலத்தைக் கண்டறிய முடியவில்லை, மேலும் உன்னை நீயே ஆராயும் திறன் உனக்கில்லை. விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுவதும் கூட மிகவும் வேறுபட்டதாகவும் தவறானதாகவும் இருக்கிறது. இப்போதும் கூட நீங்கள் பழைய வியாதிக்குள் திரும்பியது போல், மிக அதிகமான சுயநீதியை வெளிக்காட்டுகிறீர்கள் என்று சொல்லலாம். முழுமையான வெளிப்படைத்தன்மையை அடையும் வகையில் நீங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளுவதில்லை. உதாரணமாக, ஒருசில சபைகளின் கிரியைகளிளிலிருந்து என்ன வகையான பலனை அடைந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றி அல்லது உன்னுடைய உள்ளார்ந்த நிலைகளின் சமீபத்திய நிலை என்ன என்பது பற்றி, இன்னும் பலவற்றைப் பற்றியது; நீங்கள் இத்தகைய விஷயங்களைப் பற்றி தொடர்பு கொள்ளுவதே இல்லை. உங்கள் சொந்தக் கருத்துக்களை விட்டுவிடுதல் அல்லது உங்களை நீங்களே கைவிடுதல் போன்ற நடைமுறைகளில் உங்களுக்கு முற்றிலுமாக ஈடுபாடு இல்லை. தங்கள் சகோதர சகோதரிகளை எதிர்மறையாக மாறாமல் எப்படி வைத்திருப்பது மற்றும் அவர்களைத் தீவிரமாக பின்பற்றும் படி எவ்வாறு ஆக்குவது என்பவைகளைப் பற்றி மட்டுமே தலைவர்களும் ஊழியக்காரர்களும் யோசிக்கிறார்கள். இருப்பினும், நீங்கள் அனைவரும் தீவிரமாகப் பின்பற்றுவது மட்டுமே போதுமானது என்று நினைக்கிறீர்கள், மேலும் அடிப்படையில், உங்களை அறிவது மற்றும் உங்களை நீங்களே கைவிடுவது என்பதற்கு என்ன அர்த்தம் என்ற புரிதல் உங்களுக்கு இல்லை. அதைவிட, மற்றவர்களோடு ஒருங்கிணைந்து ஊழியம் செய்வதன் அர்த்தம் என்ன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளுவதில்லை. தேவனது அன்பிற்காக அவருக்கு திரும்பச் செலுத்தும் விருப்பம் உங்களுக்கு இருப்பபதைப் பற்றியும், பேதுருவைப் போல ஜீவிக்கும் விருப்பம் உங்களுக்கு இருப்பதைப் பற்றியும் மட்டுமே நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விஷயங்ககளைத் தவிர, நீங்கள் வேறொன்றையும் நினைப்பதில்லை. மற்ற ஜனங்கள் என்ன செய்தாலும் சரி, நீ கண்மூடித்தனமாக அடங்கியிருக்க மாட்டாய் என்றும், மற்ற ஜனங்கள் எப்படியாக இருந்தாலும், நீயாகவே தேவனால் பரிபூரணமாக்கப்படுவதைத் தேடுவாய் என்றும், அது போதுமானது என்றும் கூட நீ கூறுவாய். இருப்பினும், உண்மை என்னவென்றால், உனது சித்தம் எந்த வகையிலும் எதார்த்தத்தில் ஒரு திடமான வெளிப்பாட்டை அடையவில்லை. இவை எல்லாம் தற்போது நீங்கள் காண்பிக்கும் நடத்தையின் வகை அல்லவா? உங்கள் உள்நோக்குகளை நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியாகப் பற்றிகொண்டு பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதிக முன்னேற்றம் இல்லாமலேயே நீங்கள் இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஊழியம் செய்திருப்பதை நான் பார்க்கிறேன்; குறிப்பாக, இணக்கத்தோடு ஒருங்கிணைந்து கிரியை செய்வது என்ற இந்தப் பாடத்தில், நீங்கள் முற்றிலுமாக எதையும் அடையவில்லை! சபைகளுக்குள் செல்லும் போது நீங்கள் உங்கள் வழியில் தொடர்புகொள்ளுகிறீர்கள், மற்றவர்கள் அவர்கள் வழியில் தொடர்புகொள்ளுகிறார்கள். இணக்கமான ஒருங்கிணைவு அரிதாகவே ஏற்படுபடுகிறது, மேலும் உங்களுக்குக் கீழ் இருக்கும் பின்பற்றுபவர்களின் விஷயத்தில் இது இன்னும் அதிக அளவில் உண்மையாக இருக்கிறது. வேறு வகையில் கூறுவது என்றால், தேவனுக்கு ஊழியம் செய்வது என்றால் என்ன, அல்லது ஒருவர் எப்படி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று உங்கள் மத்தியில் மிக அபூர்வமாகவே யாராவது ஒருவர் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் குழப்பமடைந்து, இந்த வகையான பாடங்களை அற்பமான விஷயங்களாகக் கையாளுகிறீர்கள். சத்தியத்தின் இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்தத் தவறுவதோடு, அறிந்தே தவறு செய்யும் பலரும் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஊழியம் செய்தவர்கள் கூட சண்டையிட்டு ஒருவருக்கொருவர் எதிராகத் திட்டமிடுகிறார்கள் மற்றும் பொறாமையோடும் போட்டி உணர்வோடும் இருக்கிறார்கள்; அவரவருக்காகவே எல்லோரும் என்பதோடு அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பதே இல்லை. இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுடைய உண்மையான வளர்ச்சியைக் குறிக்கிறதல்லவா? அனுதினமும் ஊழியஞ்செய்யும் ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் ஒவ்வொரு நாளும் தேவாலயத்தில் தேவனுக்கு நேரடியாக ஊழியம் செய்த இஸ்ரவேலர்களைப் போலானவர்கள். தேவனுக்கு ஊழியம் செய்யும் ஜனங்களாகிய நீங்கள் எவ்வாறு ஒருங்கிணைவது அல்லது எவ்வாறு ஊழியம் செய்வது என்பது பற்றிய எண்ணம் இல்லாமல் இருப்பது எப்படி?

அப்போது, இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் யேகோவாவுக்கு நேரடியாக ஊழியம் செய்தார்கள், மேலும் அவர்களுக்கு ஆசாரியர்கள் என்ற அடையாளம் இருந்தது. (நிச்சயமாக, ஒவ்வொருவரும் ஓர் ஆசாரியனாக இருக்கவில்லை; ஆலயத்தில் சேவை செய்த ஒரு சிலருக்கு அந்த அடையாளம் இருந்தது.) யேகோவாவால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கிரீடத்தை அவர்கள் அணிவார்கள் (அதாவது இந்த கிரீடங்களை அவர்கள் யேகோவாவின் எதிர்பார்ப்புகளுக்குஏற்ப செய்தார்கள்; யேகோவாவே நேரடியாக அவர்களுக்குக் கிரீடங்களை கொடுக்கவில்லை). யேகோவாவால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆசாரியர்களுக்குரிய அங்கிகளை அவர்கள் அணிவார்கள் மற்றும் ஆலயத்தில், வெறுங்காலோடு, காலையில் இருந்து மாலை வரை நேரடியாக அவருக்கு ஊழியம் செய்வார்கள். யேகோவாவுக்கு அவர்கள் செய்த ஊழியம் ஒழுங்குமுறை அற்றதாக இல்லவே இல்லை, குருட்டுத்தனமாக அங்குமிங்கும் ஓடுவது என்பது அதில் அடங்கியிருக்கவில்லை; மாறாக, அவருக்கு நேரடியாக ஊழியம் செய்யும் ஒருவராலும் மீற முடியாத விதிகளின்படி எல்லாம் செய்யப்பட்டது. அவர்கள் எல்லோரும் இந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்; இல்லாவிட்டால், அவர்கள் ஆலயத்துக்குள் நுழைவது தடைசெய்யப்படும். அவர்களில் யாராவது ஆலய விதிகளை மீறினால்—அதாவது, யாராவது யேகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால்—அந்த நபர் அவர் வழங்கிய நியாயப்பிரமாணங்களின்படி நடத்தப்பட வேண்டும், மேலும் ஒருவரும் இதை எதிர்க்கவோ மீறினவரைப் பாதுகாக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனுக்கு ஊழியம் செய்திருந்தாலும், அனைவருமே இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் காரணத்தினால், பல ஆசாரியர்கள் ஆசாரிய அங்கி அணிந்து இந்த முறையில் யேகோவாவுக்குத் தொடர்ந்து ஊழியம் செய்துவந்தார்கள். அவர் அவர்களை விசேஷமாக நடத்தவில்லை என்றபோதிலும் வருடம் முழுவதும் அவர்கள் ஊழியம் செய்தனர். பலிபீடத்தின் முன்பாகவும்ம் ஆலயத்திலும் அவர்கள் தங்கள் முழு ஆயுள்காலத்தையும் கூட செலவழிப்பார்கள். இது அவர்களுடைய விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்புக்கான ஒரு வெளிப்பாடு. யேகோவா அவர்களுக்கு இத்தகைய ஆசீர்வாதத்தை வழங்கினார் என்பதில் ஆச்சரியம் இல்லை; அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக அவர்கள் தயை பெற்று யேகோவாவின் கிரியைகள் எல்லாவற்றையும் கண்டார்கள். யேகோவா இஸ்ரவேலில் தாம் தெரிந்துகொண்ட ஜனங்களின் மத்தியில் கிரியை செய்த அக்காலத்தில், அவர் முற்றிலும் கடுமையான கட்டளைகளை அவர்களின் மேல் விதித்தார். அவர்கள் யாவரும் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருந்தார்கள் மேலும் அவர்கள் நியாயப்பிரமாணங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டார்கள்; இந்த நியாயப்பிரமாணங்கள் யேகோவாவிடம் பயபக்தியுள்ளவர்களாய் இருக்கும் அவர்களுடைய திறனைப் பாதுகாக்க உதவியது. இவை அனைத்தும் யேகோவாவின் நிர்வாகக் கட்டளைகள். ஆசாரியர்களில் யாராவது ஒருவன் ஓய்வுநாளை ஆசரிக்காவிட்டால் அல்லது யேகோவாவின் கட்டளைகளை மீறினால், மேலும் அவர்கள் பொது ஜனங்களால் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் உடனடியாகப் பலிபீடத்துக்கு முன்பாகக் கொண்டுபோகப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படுவான். அந்தச் சடலங்களும் ஆலயத்தின் உள்ளேயோ அல்லது சுற்றிலுமோ வைக்க அனுமதியில்லை; யேகோவா அதை அனுமதிக்கவில்லை. அப்படி செய்யும் ஒருவன் “பரிசுத்தக் குலைச்சலான பலிகளை” செலுத்துபவனாக கருதப்பட்டு, ஒரு பெரிய குழிக்குள் தள்ளப்பட்டு கொலைசெய்யப்படுவான். நிச்சயமாக அத்தகைய ஜனங்கள் தங்கள் ஜீவனை இழப்பார்கள்; ஒருவரும் தப்பமுடியாது. “பரிசுத்தக் குலைச்சலான அக்கினியை” செலுத்தியவர்களும்கூட இருந்தனர்; வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், யேகோவாவால் ஒதுக்கப்பட்ட நாட்களில் பலிசெலுத்தாத ஜனங்கள், பலிபீடத்தில் இருக்க அனுமதிக்கப்படாத அவர்களுடையை பலி பொருட்களோடு சேர்த்து அவரது அக்கினியால் சுட்டெரிக்கப்படுவார்கள். ஆசாரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகள் வருமாறு: அவர்கள் ஆலயத்துக்குள் அல்லது வெளிப்பிரகாரத்தில்கூட, முதலில் தங்கள் பாதங்களைக் கழுவாமல் நுழைய அனுமதிக்கப்படவில்லை; அவர்களது ஆசாரிய அங்கிகளை அணியாமல் அவர்கள் ஆலயத்துக்குள் நுழைய முடியாது; அவர்கள் தங்கள் ஆசாரியக் கிரீடங்களை அணியாமல் ஆலயத்துக்குள் நுழைய முடியாது; ஒரு பிணத்தால் தீட்டுப்பட்டிருந்தால் அவர்கள் ஆலயத்துக்குள் நுழைய முடியாது; ஒரு துன்மார்க்கனுடைய கையைத் தொட்ட பின்னர் முதலில் தங்கள் சொந்தக் கைகளைக் கழுவாமல் அவர்களால் ஆலயத்துக்குள் நுழைய முடியாது; மேலும் ஒரு பெண்ணால் தீட்டுப்பட்டிருந்தால் அவர்களால் ஆலயத்துக்குள் நுழையவும் முடியாது (மூன்று மாதங்களு, எப்போதும் அல்ல), அவர்கள் யேகோவாவின் முகத்தைப் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை. காலம் நிறைவேறிய பின்—அதாவது மூன்று மாதங்களுக்குப் பின்தான் அவர்கள் சுத்தமான ஆசாரியரின் அங்கியை அணிய அனுமதிக்கப்பட்டார்கள்—அதன்பின் யேகோவாவின் முகத்தைப் பார்க்க ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன்பாக அவர்கள் ஏழு நாட்களுக்கு வெளிப்பிரகாரத்தில் மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும். யேகோவாவின் ஆலயம் தீட்டுப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் எந்த ஓர் ஆசாரியர்களின் வஸ்திரங்களையும் ஆலயத்துக்குள் மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டனரே தவிர ஒருபோதும் வெளியே அணிய அனுமதிக்கப்படவில்லை. ஆசாரியர்களாகிய அனைவரும் யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மீறும் குற்றவாளிகளைப் பொது ஜனங்கள் கொலை செய்யும்படி அவரது பலிபீடத்துக்கு முன் கொண்டுவரவேண்டும்; அல்லது அந்தக் குற்றத்தைப் பார்த்த ஆசாரியனின் மேல் அக்கினி விழுந்து பட்சிக்கும். இவ்வாறு, அவர்கள் தவறாமல் யேகோவாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள், ஏனெனில் அவருடைய நியாயப்பிரமாணங்கள் அவர்களின் மேல் மிகக் கடுமையாக இருந்தன, மேலும் அவரது நிர்வாகக் கட்டளைகளை சாதாரணமாக மீறுவதற்கு ஒருபோதும் நிச்சயமாகத் துணிய மாட்டார்கள். இஸ்ரவேலர்கள் யேகோவாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் அவருடைய அக்கினியைப் பார்த்திருந்தார்கள் மற்றும் அவர்கள் ஜனங்களை சிட்சித்த அவரது கரங்களையும் கண்டிருந்தார்கள், அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆரம்பத்தில் அத்தகைய பயபக்தியையும் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்கள் பெற்றது யேகோவாவின் அக்கினியை மட்டுமல்ல, அவருடைய பராமரிப்பு, அவரது பாதுகாப்பு, மற்றும் அவரது ஆசிர்வாதங்களையும்தான். அவர்களது விசுவாசம் எப்படி இருந்தது என்றால், அவர்கள் தங்கள் கிரியைகளில் எல்லாம் யேகோவாவின் வர்த்தைகளைப் பின்பற்றினார்கள், மேலும் யாரும் கீழ்ப்படியாமல் இல்லை. ஏதாவது கீழ்ப்படியாமை நேர்ந்தால், மற்றவர்கள் யேகோவாவின் வார்த்தைகளைப் பின்பற்றி, யேகோவாவுக்கு விரோதமாக இருக்கும் யாரொருவனையும் கொலைசெய்வார்களே தவிர, அந்த நபரை அவரிடம் இருந்து மறைக்கவே மாட்டார்கள். ஓய்வுநாளை ஆசரிக்காதவர்கள், ஒழுக்கக்கேட்டுக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், யேகோவாவின் காணிக்கைகளைத் திருடியவர்கள் ஆகியோர் குறிப்பிட்ட கடுமையுடன் தண்டிக்கப்பட்டார்கள். ஓய்வுநாளை ஆசரிக்காதவர்கள் அவர்களால் (பொது ஜனங்களால்) கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள், அல்லது விதிவிலக்கின்றி சாகும்வரை சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். வேசித்தனம் செய்தவர்கள்—கவர்ச்சியான பெண்ணைக் கண்டு காமமுற்றவர்கள் அல்லது பொல்லாத பெண்களைக் கண்டு சிற்றின்பச் சிந்தனைக்குள்ளானவர்கள் அல்லது இளம் பெண்களைப் பார்த்து காம உணர்வு அடைந்தவர்கள் கூட—ஆகிய அனைவரும் கொலைசெய்யப்படுவார்கள். ஏதாவது ஓர் இளம்பெண் ஒரு மறைப்போ அல்லது முக்காடோ அணியாமல் தவறான தொடர்புக்கு ஒரு ஆணைத் தூண்டினால் அந்தப் பெண் கொலைசெய்யப்படுவாள். அந்த ஆண் ஓர் ஆசாரியனாக இருந்து (ஆலயத்தில் ஊழியம் செய்தவன்) இந்த வகையான நியாயப்பிரமாணங்களை மீறினால், அவன் சிலுவையில் அறையப்படுவான் அல்லது தூக்கிலிடப்படுவான். அத்தகைய ஒரு நபரும் ஜீவிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், மேலும் யேகோவாவின் முன்னர் ஒருவர்கூட தயை பெற மாட்டார்கள். இத்தகைய மனிதனின் சொந்தக்காரர்கள் அவனது இறப்புக்குப் பின் மூன்று ஆண்டுகளுக்கு பலிபீடத்தின் முன் யேகோவாவுக்குப் பலிகளை செலுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், பொது ஜனங்களுக்கு யேகோவாவால் வழங்கப்பட்ட பலிகளைப் பகிர்ந்துகொள்ளவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்தக் காலம் முடிந்ததும் ஒரு முறைமட்டும் யேகோவாவின் பலிபீடத்தின் முன் உயர்தரமான மாடு அல்லது ஆட்டை அவர்களால் வைக்க முடியும். வேறு ஏதாவது மீறுதல்கள் நடந்தால் அவர்கள் யேகோவாவின் முன் அவருடைய கிருபைக்காகக் கெஞ்சி விண்ணப்பம் செய்து மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும். யேகோவாவின் நியாயப்பிரமாணங்கள் மிகக் கடுமையாகவும் மிகக் கண்டிப்பாகவும் இருந்ததால் மட்டும் அவர்கள் அவரைத் தொழுதுகொள்ளவில்லை; அவரது கிருபையின் காரணமாகவும் அவர்கள் அவர்பால் விசுவாசமாக இருந்ததாலும் அவர்கள் அப்படிச் செய்தார்கள். அவ்வாறாக, இந்நாள் வரை, அதே போல அவர்களது ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் யேகோவாவின் முன் தங்கள் விண்ணப்பங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. இக்காலத்தில், இஸ்ரவேல் மக்கள் இன்னும் அவரது பராமரிப்பையும் பாதுகாப்பையும் பெறுகிறார்கள், மேலும் அவர் அவர்கள் நடுவில் இன்னும் கிருபையாக இருக்கிறார், அவர்களோடு எப்போதும் தங்கி இருக்கிறார். யேகோவாவிடம் எப்படி பயபக்தியோடு இருப்பது, எப்படி அவருக்கு ஊழியம் செய்வது என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரியும், மேலும் அவரது பராமரிப்பையும் பாதுகாப்பையும் பெற என்ன செய்யவேண்டும் என்பதும் அவர்கள் யாவருக்கும் தெரியும்; இதனால்தான் அவர்கள் எல்லோரும் தங்கள் இருதயத்தில் அவரிடம் பயபக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஊழியம் அனைத்திலும் வெற்றியின் இரகசியத்துக்குக் காரணம் பயபக்தியைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆகவே, நீங்கள் எல்லோரும் இக்காலத்தில் எதைப் போல் இருக்கிறீர்கள்? உங்களிடம் இஸ்ரவேல் ஜனங்களின் ஒப்புமை ஏதாவது இருக்கிறதா? இக்காலத்தில் ஊழியம் செய்வது என்பது ஒரு பெரும் ஆவிக்குரிய பிரபலத்தைப் பின்பற்றுவது போல் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? உனக்குக் கொஞ்சமும் விசுவாசமும் பயபக்தியும் இல்லை. உங்களுக்குக் கணிசமான கிருபை கிடைக்கிறது, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு நேரடியாக ஊழியம் செய்வதால் இஸ்ரவேலரின் ஆசாரியர்ககளுக்குச் சரிசமமாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஆலயத்துக்குள் நுழையாவிட்டாலும், நீங்கள் பெறுவதும் நீங்கள் பார்ப்பதும் ஆலயத்தில் யேகோவாவுக்கு ஊழியம் செய்த ஆசாரியர்கள் பெற்றதிலும் மிகவும் அதிகமாக உள்ளது. இருப்பினும், அவர்கள் செய்ததைவிட பல மடங்கு அதிகமாக நீங்கள் கலகம் செய்து எதிர்க்கிறீர்கள். உங்கள் பயபக்தி மிகச் சிறியது, மேலும் அதன் விளைவாக, உங்களுக்கு மிகக்குறைவான கிருபை கிடைக்கிறது. நீங்கள் மிகக் குறைவாக அர்ப்பணித்தாலும், அந்த இஸ்ரவேலருக்குக் கிடைத்ததை விட உங்களுக்கு மிக அதிகமாகக் கிடைத்துள்ளது. இவற்றில் எல்லாம் நீங்கள் தயாளத்துடன் நடத்தப்படவில்லையா? இஸ்ரவேலில் கிரியை நடத்தப்பட்டபோது, ஜனங்கள் யேகோவாவை விருப்பத்துக்கேற்ப நியாயந்தீர்க்கத் துணியவில்லை. என்றாலும், உங்களைப் பற்றி என்ன? உங்களை ஜெயங்கொள்ளுவதற்காக நான் தற்போது செய்துவரும் கிரியைக்காக அல்லாமல் இருந்தால், என்னுடைய பெயருக்கு மிகவும் மூர்க்கத்தனமாக அவமானத்தைக் கொண்டுவந்திருக்கும் உங்களை நான் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும்? நீங்கள் ஜீவிக்கும் காலம் நியாயப்பிரமாணத்தின் காலமாக இருந்திருந்தால், உங்கள் வார்த்தைகளையும் கிரியைகளையும் வைத்துப் பார்க்கும்போது, உங்களில் ஒருவர் கூட உயிரோடு இருந்திருக்க முடியாது. உங்கள் பயபக்தி மிகமிகச் சிறியது! உங்களுக்கு அதிக தயை அளிக்கவில்லை என்று நீங்கள் தொடர்ந்து என் மேல் குற்றம் சொல்லி வருகிறீர்கள், மேலும் நான் உங்களுக்குப் போதுமான அளவு ஆசீர்வாத வார்த்தைகளை வழங்கவில்லை, மேலும் உங்களுக்காக என்னிடம் சாபங்களே இருப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள். என்னிடம் இவ்வளவு குறைந்த அளவு பயபக்தியுடன் இருக்கும்போது என் ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் ஊழியத்தின் மோசமான நிலையின் காரணமாக நான் தொடர்ந்து உங்களைச் சபித்து உங்கள் மேல் நியாயத்தீர்ப்பை அளிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? உங்களுக்குத் தவறிழைக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எல்லாம் உணர்கிறீர்களா? கலகப்புத்தியுடன் கீழ்ப்படிய மறுக்கும் ஒரு குழுவான ஜனங்களுக்கு எப்படி நான் என் ஆசீர்வாதங்களை வழங்க முடியும்? என் பெயருக்கு அவமரியாதையைக் கொண்டுவரும் ஜனங்களுக்கு என்னால் எப்படி சாதாரணமாக என் கிருபையை வழங்க முடியும்? நீங்கள் ஏற்கனவே மிக அதிகமான இரக்கத்தோடு நடத்தப்பட்டிருக்கிறீர்கள். இன்று நீங்கள் இருப்பது போல் இஸ்ரவேலர்கள் இருந்திருந்தால் நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே அழித்தொழித்திருப்பேன். இருப்பினும், நான் உங்களை தயையுடன் நடத்துகிறேன். இது தயை இல்லையா? இதைவிட அதிகமான ஆசீர்வாதங்களை விரும்புகிறீர்களா? தன்னிடம் பயபக்தியாய் இருப்பவர்களையே யேகோவா ஆசீர்வதிக்கிறார். கலகம் செய்பவர்களை அவர் சிட்சிக்கிறார், அவர்களில் ஒருவரைக் கூட அவர் மன்னிப்பதில்லை. எப்படி ஊழியம் செய்வது என்று தெரியாத, உங்கள் இருதயங்கள் முழுவதுமாக திரும்புவதற்கு சிட்சையும் நியாயத்தீர்ப்பும் அதிகம் தேவைப்படாத இன்றைய ஜனங்களா நீங்கள்? இத்தகைய சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உங்களுக்கு வழங்கப்படும் சிறந்த வகையான ஆசீர்வாதங்கள் இல்லையா? அவைகள் உங்களுக்கான சிறந்த பாதுகாப்பில்லையா? அவை இல்லாவிட்டால், உங்களில் யாரொருவராவது யேகோவாவின் எரியும் நெருப்பைச் சகிக்க முடியுமா? நீங்களும் இஸ்ரவேலர்களைப் போன்று உண்மையாக ஊழியம் செய்ய முடிந்திருந்தால், உங்கள் நிரந்தரத் தோழர்களைப் போன்றே கிருபையைப் பெற்றிருக்கலாம் அல்லவா? உங்களுக்கும் அடிக்கடி மகிழ்ச்சியும் போதுமான தயையும் கிடைத்திருக்கும் அல்லவா? நீங்கள் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியுமா?

இன்று உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால்—ஒன்றிணைந்து நல்லிணக்கத்தோடு கிரியை செய்வதுதான்—இஸ்ரவேலர்களிடம் இருந்து யேகோவா எதிர்பார்த்த ஊழியம் போன்றதுதான்: இல்லாவிட்டால், ஊழியம் செய்வதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், நீங்கள் தேவனுக்கு நேரடியாக ஊழியம் செய்பவர்களாகையால், மிகக் குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் ஊழியத்தில் விசுவாசமாகவும் கீழ்ப்படியக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும், மேலும் நடைமுறைக்கு உகந்த வகையில் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் திறனுடையவர்களாகவும் இருக்க வேண்டும். சபைகளில் உங்களோடு ஊழியம் செய்யும், குறிப்பாக உங்களுக்குக் கீழுள்ள சகோதர சகோதரிகளில் யாராவது ஒருவர் உங்களோடு விஷயங்களைக் கையாளத் துணிவார்களா? உங்கள் முகத்துக்கு நேரே யாராவது ஒருவர் உங்கள் தவறுகளைக் கூறத் துணிவார்களா? நீங்கள் ஒவ்வொருவருக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறீர்கள்; நீங்கள் ராஜாக்களைப் போல அரசாளுகிறீர்கள்! இந்தவகையான நடைமுறைக்கு ஏற்ற பாடங்களைப் படிக்கவோ அல்லது அதற்குள் பிரவேசிப்பதோ கூட இல்லை, இருந்தாலும் தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றி இன்னும் பேசுகிறாய்! தற்போது பல சபைகளை வழிநடத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறாய், நீயாகவே விட்டுக்கொடுக்காமல் இருப்பதோடு, உன்னுடைய சொந்தக் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை இன்னும் பற்றிப்பிடித்துகொண்டு, இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறுகிறாய், “இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஏனெனில் நாம் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடாது என்று தேவன் கூறியிருக்கிறார், மேலும் இப்போதெல்லாம் குருட்டுத்தனமாகக் கீழ்ப்படியக் கூடாது.” ஆகையால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த எண்ணங்களின்படி தொடர்கிறீர்கள், மேலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிவதில்லை. உங்கள் ஊழியம் தடைபட்டு நிற்கிறது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருக்கிறீர்கள், இருந்தாலும் நீங்கள் கூறுகிறீர்கள், “நான் பார்க்கிறபடி, என்னுடைய வழி ஏறக்குறைய சரியானது. எப்படி இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் இருக்கிறது: நீ உன்னுடையதைப் பற்றி பேசு, மேலும் நான் என்னுடையதைப் பற்றி பேசுவேன்; நீ உன்னுடைய தரிசனத்தைப் பற்றி ஐக்கியப்படு, மேலும் நான் என்னுடைய பிரவேசத்தைப் பற்றி பேசுவேன்.” கையாளப்பட வேண்டிய பல விஷயங்களுக்கு நீங்கள் ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை, அல்லது வெறுமனே நீங்கள் எதையாவது செய்து கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்துக்களையே வெளியிட்டுக்கொண்டு மற்றும் உங்கள் அந்தஸ்து, புகழ் அல்லது முகத்தைப் புத்திசாலித்தனமாகக் காப்பாற்றிக் கொள்ளுகிறீர்கள். உங்களில் ஒருவரும் உங்களைத் தாழ்த்திக்கொள்ள விரும்புவதில்லை மேலும் ஜீவிதம் வேகமாக முன்னேறிச் செல்ல ஏதுவாக ஒரு தரப்பார் கூட விட்டுக்கொடுத்து ஒருவருக்கொருவர் குறைபாடுகளையும் நிவிர்த்தி செய்ய முன்முயற்சி எடுப்பதில்லை. நீங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, சத்தியத்தைத் தேடக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் கூறலாம், “சத்தியத்தின் இந்த அம்சம் பற்றி எனக்குத் தெளிவான புரிதல் இல்லை. அதில் உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது?” அல்லது, நீ கூறலாம், “இந்த அம்சத்தைப் பொறுத்த வரையில் என்னை விட உனக்குக் கூடுதல் அனுபவம் உள்ளது; உன்னால் எனக்கு தயவுசெய்து கொஞ்சம் வழிகாட்டுதல் தர முடியுமா?” அதைக் கையாளுவதில் இது ஒரு சிறந்த முறையாக இருக்குமல்லவா? நீங்கள் ஏராளமான பிரசங்கங்களைக் கேட்டுவிட்டீர்கள், மேலும் ஊழியம் செய்வதில் கொஞ்சம் அனுபவமும் உள்ளது. நீங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்ளாவிட்டால், ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யாமல், சபைகளில் ஊழியம் செய்யும்போது ஒருவருக்கொருவர் குறைபாட்டை நிவிர்த்தி செய்யாமல் இருந்தால், நீங்கள் எந்த ஒரு பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்ளுவீர்கள்? நீங்கள் எதையாவது ஒன்றை எதிர்கொள்ளும்போது, உங்கள் ஜீவிதங்கள் நன்மை அடையும் வண்ணம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளுங்கள். மேலும், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர், எந்த வகையான விஷயம் பற்றியும் கவனமாக நீங்கள் ஐக்கியப்பட வேண்டும். இப்படிச் செய்வதனால் மட்டுமே வெறுமனே ஏனோதானோவென்று செயல்படாமல் நீங்கள் சபைக்காகப் பொறுப்பேற்கிறீர்கள். எல்லா சபைகளுக்கும் சென்ற பின்னர், நீங்கள் ஒன்று கூடி நீங்கள் கண்டறிந்த எல்லா சிக்கல்கள் மற்றும் உங்கள் கிரியையில் நீங்கள் எதிர்கொண்ட எந்த ஒரு பிரச்சினைகள் பற்றியும் ஐக்கியம் கொள்ள வேண்டும், அதன் பின்னர் நீங்கள் பெற்ற பிரகாசம் மற்றும் வெளிச்சத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டும்—இது ஊழியத்தின் இன்றியமையாத நடைமுறையாகும். தேவனுடைய கிரியையையின் நோக்கத்திற்காகவும் சபையின் நன்மைக்காகவும், அதனால் உங்கள் சகோதர சகோதரிகளை முன்னோக்கி ஊக்குவிக்கவும் நீங்கள் ஒத்திசைவான கூட்டுறவை அடைய வேண்டும். தேவனுடைய சித்தத்தில் கவனம் செலுத்துவதற்காக, ஒவ்வொருவரும் அடுத்தவரைச் சீர்படுத்தி, ஒரு சிறந்த கிரியையின் பலனை அடைந்து, நீ ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவே உண்மையான ஒத்துழைப்பு, மேலும் இதில் ஈடுபடுபவர்கள் மட்டுமேஉண்மையான பிரவேசத்தை அடைவார்கள். ஒத்துழைக்கும் போது, நீ பேசும் சில வார்த்தைகள் பொருத்தம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது பரவாயில்லை. அதைப் பற்றி பின்னர் ஐக்கியம் கொள்ளுங்கள், மேலும் அதைப்பற்றி தெளிவான புரிதலை அடையுங்கள்; அதைப் புறக்கணிக்க வேண்டாம். இப்படிப்பட்ட ஐக்கியத்துக்குப் பின்னர், நீ உன் சகோதர சகோதரிகளின் குறைபாட்டை நிவிர்த்தி செய்யலாம். இப்படி உன் கிரியையில் எப்போதும் இல்லாத வகையில் ஆழமாகச் செல்லும் போது மட்டுமே நீ சிறந்த பலனை அடையமுடியும். தேவனுக்கு ஊழியம் செய்பவராக இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், வெறுமனே உங்கள் நலன்களை மட்டுமேகருத்தில் கொள்ளாமல், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சபையின் நலன்களைப் பாதுகாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சிறுமைப்படுத்தி, தனித்தனியாகச் செயலாற்றுவது ஏற்கமுடியாதது. அப்படி நடந்துகொள்ளும் ஜனங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆவர். இத்தகைய ஜனங்களுக்கு மோசமான மனநிலை இருக்கும்; அவர்களிடம் சிறிதளவு மனிதத்தன்மையும் இருக்காது. அவர்கள் நூறு சதவீதம் சாத்தான்! அவர்கள் மிருகங்கள்! இப்போது கூட, அப்படிப்பட்ட விஷயங்கள் உங்கள் மத்தியில் இன்னும் நடக்கின்றன! ஐக்கியத்தின் போது வேண்டும் என்றே காரணங்களைத் தேடி, அற்பமான விஷயங்களைப் பற்றி விவாதம் செய்யும் போது முகம் சிவக்கக் கோபம்கொண்டு, ஒருவரும் தங்களை ஒதுக்கி வைக்க விரும்பாமல், ஒவ்வொருவரும் தங்கள் அக சிந்தனைகளை மற்றவரிடம் இருந்து மறைத்துகொண்டு, அடுத்தத் தரப்பைத் தீவிரமாகக் கண்காணித்து எப்பொழுதும் கவனமாக இருக்கிறீர்கள். இந்த வகையான மனநிலை தேவனுடைய ஊழியத்துக்குப் பொருத்தமானதா? இத்தகைய உனது கிரியை உனது சகோதர சகோதரிகளுக்கு எதையாவது வழங்க முடியுமா? ஜனங்களை உன்னால் சரியான ஜீவித முறைக்குள் வழிநடத்த முடியாததுடன் நீ உன் சகோதர சகோதரிகளுக்குள் உண்மையில் சீர்கேடான மனநிலையைப் புகுத்துகிறாய். நீ மற்றவர்களைக் காயப்படுத்துகிறாய் இல்லையா? உன் மனசாட்சி மோசமாக இருக்கிறது, மற்றும் அது முற்றிலுமாக அழுகிப்போய்விட்டது! உன்னால் எதார்த்தத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை, சத்தியத்தையும் உன்னால் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும், மற்றவர்களுக்கு உன் பிசாசின் இயல்பை வெட்கமின்றி வெளிப்படுத்திக் காட்டுகிறாய். உனக்கு வெட்கமே இல்லை! இந்தச் சகோதர சகோதரிகள் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனாலும்நீ அவர்களை நரகத்துக்குக் கொண்டு செல்கிறாய். மனசாட்சி அழுகிப்போன ஒருவன் அல்லவா நீ? உனக்கு முற்றிலும் வெட்கம் என்பதே இல்லை.

முந்தைய: பயிற்சி (8)

அடுத்த: தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக